Jump to content

நினைவெல்லாம் நீயே..


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவெல்லாம் நீயே..

Fotoalbum.jpg
 

1996ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நேரம்,
வழமைக்கு மாறான நாய்களின் ஊளையும், புலன்களுக்குப் புலப்படாத இயந்திரங்களின் இரைச்சலும் கலவரத்தையே எமக்குள் உருவாக்கி விட்டிருந்தது.  பரீட்சை எழுதும் மனநிலையில் நாம் யாரும் இருக்கவில்லை.
ஆம்,வடமராட்சியில் இலங்கை ராணுவம் நுழைந்த நாள் அன்று. பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்களின் வாழ்வெலாம் திறந்தவெளிச் சிறைகளுக்குள் அடைபடப்போகிறது என்பதைக் கட்டியம் கூறிய நாள்.  தினம் தினம் நடக்கும் சுற்றிவளைப்புகளும், தேடுதல் வேட்டைகளும், இராணுவ ஊர்திகளின் அணிவகுப்பும் இயல்வாழ்க்கையை முற்றிலும் சிதைத்திருந்தது.
அப்படியான ஒரு நாளில் அறிமுகமானவர் தான் ராஜு அண்ணா.

மாமி வீட்டுக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த எனக்கு அங்கு முன் பின் தெரியாத மூன்று பேரின் அசுமாத்தம் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலைத் தூண்டி விட்டது. குளித்துவிட்டு துவாயால் "மேலை" மூடிக்கொண்டு மாமி வீட்டுக்குள் எட்டிப்பார்க்கும் போது தான் குசினுக்குள் வைத்திருந்த மூன்று ரீ-56 ரக துப்பாக்கிகள்  எட்டிப்பார்த்தன. இயக்கமாகத்தான் இருக்கும் என்று நினைத்த எனக்கு அதை உறுதிப்படுத்தும் முகமாக வீட்டில் இருந்து வந்த கண்ணன் அண்ணா, எப்படியடா இருக்கிறாய்? நல்ல வளர்ந்திட்டாய் என்றார்.

கண்ணன் அண்ணா எம் இன்னொரு மாமியின் மகன் நான் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதே இயக்கத்தில் இணைந்து விட்டார். ஆனாலும் மாமி வீட்டில் தொங்கும் அவரின் படம் ஞாபகத்தில் இருந்ததால் ஆளை உடனேயே அடையாளம் காண வசதியாக இருந்தது. உள்ளே அழைத்தவர் மற்ற இருவரையும் அறிமுகப்படுத்தினார். ராஜு மாஸ்டர்,கிளியன் அண்ணா இவர்கள் தான் மற்ற இருவரும். அன்றிலிருந்து அவர்களுக்காய் தூது செல்லும் சிட்டு நான். ஆமிக்காரன் வருவதாய் இருந்தாலும் சரி, சாப்பாடு கொண்டு போய்க் குடுப்பதாய் இருந்தாலும் சரி, புளிய மரத்தில் ஏறி அன்டெனா கட்டுவதாய் இருந்தாலும் சரி அது என் வேலை போலவே செய்தேன். அதற்கு என் வயதும்,தோற்றமும் ஒரு காரணம். சின்னப்பொடியன் என்று யாரும் சந்தேகிக்கப்போவதும் இல்லை. அதே போல சாப்பாடு கொண்டு போகும் போது யார் கேட்டாலும் தோட்டத்தில் வேலை செய்யும் அப்பாவிற்கு என்று சொல்லித் தப்புவது வழக்கமாயிருந்தது. அதே போலத்தான் மெயின் ரோட்டில் அண்ணா கடை வைத்திருந்ததால் அவ்னுக்கு தேத்தண்ணி குடுப்பதும், கடையில் கடலை அவித்து விற்றதால் முடிந்ததும் அம்மா அவித்து,வதக்கித் தர அதையும் குடுக்க போவதால் பள்ளிக்கூடம் முடிந்து வந்தால் இது தான் வேலையே, அதனால் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு என்பது இவற்றுக்கு வாய்ப்பாகிப் போனது.

இப்படித்தான் ஒருசனிக்கிழமை கடையைப் பாரடா என்றுவிட்டு அண்ணா சலூனுக்குப் போன நேரம், ராஜு அண்ணா வந்தார். "கொண்ணான்ரை சைக்கிளை தாடா ஒரு அலுவலாப் போட்டுவாறேன் என்றவருக்கு" சைக்கிள் இல்லை என்று கடைக்கு முன்னால் நிறுத்தி விட்டு சீவலுகுப் போன "கட்டையன்"ரை சைக்கிளை எடுத்துக் குடுத்து விட்டேன். வேலை முடித்து வந்தவன் சைக்கிளைக் காணாமல் தேட, நான் நடந்தவற்றைச் சொல்ல அவனின் பதகளிப்பும், நான் குடும்பஸ்தன் என்னை ஆமிக்காரன் கொல்லப்போறான் என்று பயந்ததும் சுவாரசியத்தின் உச்சம். அவனும் இயக்கத்தின் மீது உயிரையே வைதிருந்தான். பனை உச்சியில் இருக்கும் போது கூட ஆமியின் நடமாட்டத்தைக் கண்டால் இறங்கி ஓடிவந்து உடனே தெரிவித்து விடுவான் ஆனால் ஒரு தடவை ஆமியிடம் பச்சை மட்டை முறிய முறிய அடிவாங்கியதால் பயமும் அதிகம்.  அவனது பேச்சும்,நடையும் கூடக் காமடி தான். ஒருவாறு அவனைச் சமாளித்து அனுப்பியது பெரும்பாடு..

சில மணி நேர தாமதத்தின் பின் விரைந்து வந்த ராணுவத்தின் சுற்றி வளைப்பும், வீதியில் போவோர் வருவோரை எல்லாம் அவன் காட்டு மிராண்டித் தனமாய் தாக்கியதும் தான் தெரியும். அண்மையில் இருந்த ராணுவக்காவலரணில் இருந்த ஆமிக்காரன் ஒருவனை ராஜு மாஸ்டர் சுட்ட விடையம். ஒன்றா இரண்டா  இப்படிப் பல அம் மூவரின் கூட்டு முயற்சியில் நடந்த தாக்குதல்களாகக் கூறலாம். குறித்த சில பிரதேசங்களையே கலக்கியவர்கள் அவர்கள். 

இப்படித்தான் ஒரு அதிகாலைப் பொழுது என்றைக்குமே இல்லாதவாறு இராணுவத்தின் சுற்றிவளைப்பும் , வாகனங்களின் இரைச்சலும் ஏதோவொரு அமானுஸ்யத்தை உணர்த்தியது, என்றைக்குமில்லாதவாறு மனதில் ஒரு அமைதியின்மை, அதிகாலையிலேயே மாமி என்னை அழைத்தது எதையோ சொல்லாமல் சொல்லியது. அன்று அவர்கள் மூவரின் கண்களிலுமே ஒரு மாற்றம். எங்கை வரைக்கும் ஆமிக்காரன் நிற்கிறான் என்று பார்த்துக்கொண்டு வா என்றார் ராஜு மாஸ்டர். தெருவுக்குப் போனதுமே ஆமி மறித்து இப்ப  எங்கை போகிறாய் என்றான். "கக்கூஸ் இருக்க காணிக்குப் போகிறேன்" என்றதும் விட்டுவிட்டான். என்றைக்குமே காணாத இராணுவத்தின் பிரசன்னம் இயக்கத்தின் நடமாட்டம் குறித்து யாரோ வடிவாகக் காட்டிக் குடுத்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தியது. வந்து எல்லாவற்றையும் சொன்னதும் நீ பத்திரமா வீட்டை போ என்று விட்டார்.

சில மணித்துளிகளுக்குள்ளே வீடுகளுக்குள் நுழைந்த ராணுவம் அண்ணா, அக்கா, அப்பா எல்லாரையும் அருகில் இருந்த கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். நானும்,அம்மாவும் தான் வீட்டில்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டை எம் இதயத்தையே துளைப்பது போல் இருந்தது. யாருக்கு என்ன நடந்திருக்குமோ என்று மனம் பதைக்க ஊரில் உள்ள கடவுளை எல்லாம் ஒருத்தர் விடாமல் பிரார்த்த்தித்துக் கொண்டிருந்தது என் பிஞ்சு நெஞ்சு. அந்தச் சண்டையில் எம் பிரியத்துகுரிய ராஜு மாஸ்டர் வீரச்சாவடைய,  கண்ணன் அண்ணாவும், கிளியன் அண்ணாவும் தப்பியிருந்தார்கள்.

துப்பாக்கிச் சத்தங்கள் ஓய்ந்து வெளியில் வந்து பார்க்கும் போது அருகில் இருந்த சிறு பற்றைக் காட்டுக்குள் இருந்து அவரின் உடலை தறதறவென இழுத்துச் சென்றது கொலைவெறி ராணுவம். நாய்களும் இரை கிடைத்த சந்தோசத்தில் இரத்ததையும், சிதறிய தசைத் துண்டங்களையும்  புசித்திருந்தது, அப்படித்தான் இருந்திருக்கும் அந்தக் காட்டிக்கொடுத்த நாய்களுக்கும். அழக் கூட உரிமையில்லாத அந்த நொடிகளில் தான் மாமி என்னை அணைத்தவாறே சொன்னார். "ராஜு மாஸ்டருக்கு அல்சர் இருந்ததாகவும் கடந்த இரவு கூட சாப்பிடும் போது வாயிலிருந்து நுரை நுரையாக சத்தி எடுத்ததாகவும், தான் அதிக காலம் உயிர் வாழ மாட்டேன் என்று தெரிந்திருந்து தான் அந்தச் சண்டையின் போது தான் உயிர்துறப்பதாகவும், மற்ற இருவரும் தப்ப்பிச் செல்ல திட்டம் வகுத்து விட்டே அருகில் இருந்த பற்றைக்குள் நகர்ந்ததும் திசை திருப்பும் தாக்குதலாக முதல் வேட்டை அவரே தீர்த்ததும் பின்னர் அவரை சுற்றி வளைத்த மூன்று இராணுவத்தைக் கொன்று நான்கு பேரைப் படுகாயப்படுத்தி விட்டு இரு வீரர்களைக் காப்பாற்றிய நிம்மதியோடு தமிழீழம் என்ற நோக்கிற்காய், தாயக மக்களின் மீட்சிகாய் தன் இன்னுயிரை ஈகம் செய்தார்."
 

1.jpg

கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே அன்றிரவு அவர் வீரச்சாவடைந்த பற்றைக்குள் இருந்த கள்ளிச் செடியில் அவர் பெயரை எழுதிவிட்டு, சிட்டி விளக்கு ஒன்றையும் கொழுத்தி விட்டு வருகிறோம், அவர் நினைவுகளைச் சுமந்துகொண்டு..!

******
ஜீவா
20.10.2013

 

திருத்தம் செய்த காரணம் எழுத்துப் பிழை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் ஜீவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள் ஜீவா.

 

இதில் கண்ணன் அண்ணாவும் எங்கள் ஊரில் நடந்த காட்டிக் கொடுப்பில் வீரச்சாவடைந்தார்.

கிளியன் அண்ணா காதலித்து கல்யாணம் பண்ணி ஒரு ஆண் குழந்தையுடன் இருந்தார், ஏ9 பாதை திறந்தபின் இயக்கத்தில் இருந்து விலகி (???) சேரன் வாணிபத்தில் பாரவூர்தி சாரதியாக இருந்தார்.

பின்னால் அவர்குறித்த தகவல்கள் ஏதும் தெரியாது.

 

நன்றி அக்கா, வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தத்தினால் வரைந்த வரலாறுகள் !

 

கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத காட்டிக் கொடுப்புக்கள் !

 

இவ்வளவு இழப்புக்களின் பின்னரும், ஆரம்பப் புள்ளிக்கே வந்து நிற்பது தான், மனத்தை நெருடுகின்றது!

 

தொடர்ந்தும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஜீவா!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தம்பி

 

 

புலிகளின் ஒவ்வொரு தியாகத்தாலுமே அவர்கள் மக்களிடம நீங்காத இடம் பிடித்தார்கள்

இந்த வரலாறுகள் பதியப்படணும்.............

Link to comment
Share on other sites

ஈழவிடுதலை வரலாற்றில் புலிகளின் தியாகம் கொடை இவற்றிலிருந்தே உலகம் தமிழரை உணர்ந்தது. எத்தனை துயரம் எத்தனை இழப்பு எல்லாவற்றையும் தாங்கிய கனவு ஒருநாள் எவ்வித சுயநலமும் இல்லாது போனவர்களின் எண்ணம் யாவையும் நிறைவேற்ற ஒவ்வொரு தமிழரின் கடமையும்.

 

தவறுகள் இல்லாத விடுதலையமைப்பு உலகில் எங்கும் இல்லை. ஆனால் புலிகளின் வீழ்ச்சியின் பின்னால் சில தவறுகளே அந்த மாபெரும் இயக்கத்தின் முழுமையும் என வரலாறு படைக்கும் ஈனர்கள் கண்ணில் இத்தகைய தியாகங்கள் தெரியாது போவது கூட வரலாற்று வஞ்சனையே.

நன்றிகள் ஜீவா.

Link to comment
Share on other sites

ஈழவிடுதலை வரலாற்றில் புலிகளின் தியாகம் கொடை இவற்றிலிருந்தே உலகம் தமிழரை உணர்ந்தது. எத்தனை துயரம் எத்தனை இழப்பு எல்லாவற்றையும் தாங்கிய கனவு ஒருநாள் எவ்வித சுயநலமும் இல்லாது போனவர்களின் எண்ணம் யாவையும் நிறைவேற்ற ஒவ்வொரு தமிழரின் கடமையும்.

 

தவறுகள் இல்லாத விடுதலையமைப்பு உலகில் எங்கும் இல்லை. ஆனால் புலிகளின் வீழ்ச்சியின் பின்னால் சில தவறுகளே அந்த மாபெரும் இயக்கத்தின் முழுமையும் என வரலாறு படைக்கும் ஈனர்கள் கண்ணில் இத்தகைய தியாகங்கள் தெரியாது போவது கூட வரலாற்று வஞ்சனையே.

நன்றிகள் ஜீவா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் ஜீவா....எத்தனை இழப்புக்கள் ...மாகாணசபை அவர்களின் தியாகத்தால் கிடைத்த ஒரு சிறு துறும்பு....பலப்படுத்துவோம்...

Link to comment
Share on other sites

கதை இயல்பான ஓட்டத்தில் ஓடி இறுதியில் மனதில் கள்ளி முள்ளைப் போல் ஆழ இழுத்துக் கோடுகிழித்தது . ராஜு மாஸ்டரைப் போல பல்லாயிரக் கணக்கான இளையவர்களின் தியாகத்தால் உருவான ஓர் இலட்சியம் பல விலைகளைக் கொடுத்துவிட்டு வெறும் " மௌனிகின்றோம் " என்ற பதிலாலும்  அதே கள்ளி முள்ளைப் போல் எனக்கு வலியை ஏற்படுத்தியதும் உண்மை  . கதைக்குப் பாராட்டுக்கள் ஜீவா :) :) .

Link to comment
Share on other sites

பகிர்விற்கு நன்றிகள் ஜீவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றி ஜீவா

 

நன்றி நந்தன் அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ஜீவா.

Link to comment
Share on other sites

மிக அருமையான நினைவுப்பகிர்வு ஜீவா!

இப்படியான தியாகங்கள் ஒன்றல்ல நூறல்ல பல்லாயிரக்கணக்காக நடந்தேறியிருக்கின்றன எம் தேசத்துக்காக!

ஈடிணையற்ற இந்த உன்னத தியாகங்கள் ஒருநாளும் வீண்போகாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு எப்பொழுதும் இருக்கின்றது.

 

மிக்க நன்றி ஜீவா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.