Jump to content

எல்லாளன் நடவடிக்கை - காவியமான கரும்புலிக​ளின் வீரவணக்க நாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.09.10.2007என் அன்பான மக்களுக்கு,

சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன்.

தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்பும்தான் மிகவும் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்க வேணும். உங்கட பங்களிப்பிலதான் எங்கட மண்ணை மீட்க முடியும்.

அதனால் தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப் போறம். அவைக்கு தமிழன் படுகிற அவலத்தை புரிய வைக்கப் போறம். நிச்சயம் அவைக்கு உணர்த்தியே தீருவம். தமிழர் படையில முப்படையும் வளர்ந்து நிற்குது. இனி நீங்கள்தான் சிங்களவனுக்கு எதிராக எழுந்து நிற்க வேணும்.

எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில அழிக்கத் தெரியும் என அடிச்சுக் காட்டியிருக்கிறம். இதே மாதிரி தொடர்ந்து அடிப்பம் அடிச்சுக் கொண்டே இருப்பம் என அடிச்சுச் செல்லுங்கோ சிங்கள வெறியர்களுக்கு.

வழிகாட்டத் தலைவர் இருக்கிறார். நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்.

anurathapuram%204.jpg

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

தலைவர் கவனம்.

தலைவர் எங்கட வழிகாட்டி.

தலைவர்தான் எங்கட அப்பா.

தலைவர்தான் எங்கட அம்மா.

அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான ‘எல்லாளன் நடவடிக்கை” அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரசோ அல்லது சிங்களப் படைத்தரப்போ மீளமுடியாமல் இருக்கின்றது.

தேசியத் தலைவரினால் மிகவும் சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு துல்லியமான முறையிலே குறுகிய நேரத்தினுள் சிறப்பு கரும்புலி அணியினரால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல் நடவடிக்கை விடுதலைப் புலிகளின் தாக்குதல் தந்திரோபாயங்களையும் அவர்களது போரிடும் ஆற்றலையும் வல்லமையையும் மீண்டும் ஒரு தடவை சிங்கள அரசிற்கும் உலகத்திற்கும் நிரூபித்துள்ளதாக பல்வேறு படைத்துறை ஆய்வாளர்களும் அனைத்துலகச் செய்தி நிறுவனங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் வசப்படுத்திய அந்த நிமிடங்கள்…

anurathapuram%202.jpg

அனுராதபுரம் வான், படைத்தளத்திற்குள் திங்கள் அதிகாலை மூன்று மணியளவில் 21 பேர்களைக் கொண்ட ஆண்கள், பெண்கள் உள்ளடங்கிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் சிறப்புப் படையணியினர் ஊடுருவினர்.

ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகளையும் இயந்திர துப்பாக்கிகளையும் பயன்படுத்தி காவலரண்களிலும் வான், தளத்தினுள்ளும் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படையினரின் மீது தாக்குதல்களை நடத்தி வான் படைத்தளத்தினை தமது கட்டுப்பாட்டின்கீழ் வந்தனர். அதன்பின்னர் புலிகளின் அணியினர், இளங்கோவுடன் ஒரு பகுதியாகவும் வீமனுடன் ஒரு பகுதியாகவும் இரு குழுக்களாகப் பிரிந்து வான் படைத்தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த வானூர்திகளை அழிப்பதிலும் ரேடார் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்ட நிலைகளை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

anurathapuram%207.jpg

ஒரு மணித்தியால நேர இடைவெளிக்குள் மூன்று கிலோ மீற்றர் நீளத்தையும் இரண்டரைக் கிலோ மீற்றர் அகலத்தையும் கொண்ட அனுராதபுரம் பாரிய விமானப்படைத்தளத்தினை கரும்புலிகள் அணியினர் வெற்றிகரமாக தாக்கி தமது முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் வான்படையினரின் இரண்டு வானூர்திகள், அனுராதபுரம் வான்படைத்தளத்தினுள் உள்நுழைந்து இரண்டு குண்டுகளை வீசி அப்படைத்தளத்திற்கு மேலும் பாரிய சேதங்களை ஏற்படுத்தின.

அந்த வான்தளத்தினை திங்கள் முற்பகல் 11.00 மணிவரை தமது கட்டுப்பாட்டிற்குள் கரும்புலிகள் அணியினர் வைத்திருந்ததுடன் அனுராதபுரம் வான்படை தளத்துள் தரித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து வானூர்திகளையும் தாக்கியழித்தனர்.

அந்த வான்படை தளத்துக்கு உதவி புரிவதற்காக வவுனியாவில் இருந்த அனுப்பப்பட்ட பெல்-212 உலங்குவானூர்தியானது மகிந்தலைப் பகுதியில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். அதில் பயணம் செய்த நான்கு வான்படையினர் உலங்குவானூர்தியுடன் வீழ்ந்து உடல் சிதறிப் பலியாயினர்.

இந்த தாக்குதல்களின் போது சிறிலங்கா வான்படையின் எட்டு வானூர்திகள் அழிக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளிவந்தாலும் தற்போது கிடைக்கும் நம்பகமான தகவல்களின் படி 18 வரையிலான வானூர்திகள் அப்படைத்தளத்தின் மீதான தாக்குதலின் போது அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் செனிவிரட்ன கடந்த 24 ஆம் நாள் புதன்கிழமை ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதாவது 660 கோடி ரூபா பெறுமதி வாய்ந்த 18 வானூர்திகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதாவது

எம்.ஐ-24 உலங்குவானூர்திகள்- 02

எம்.ஐ-17 உலங்கு வானூர்தி – 01

பெல்-212 – 01

பீச் கிராப்ட்- 01,

மு-8 பயிற்சி வானூர்தி – 01

Pவு-6 பயிற்சி வானூர்தி – 03

ஆளில்லா வேவு வானூர்தி – 03

செஸ்னா வானூர்தி – 06

ஆகியன இத்தாக்குதலின் போது புலிகளினால் அழிக்கப்பட்டதாக தெரிவித்த செனிவிரட்ன இது தவிர மேலும் மூன்று வானூர்தி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் வெளியிடப்படும் என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்தார்.

இத்தாக்குதல்களின் போது சிறிலங்காப் படையினர் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் 20-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் சிறிலங்கா அரச தரப்பினர் செய்திகளை வெளியிட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் விங் கொமாண்டர் அமிலா மொகொட்டி, ஸ்குவார்டன் லீடர் ருவான் விஜயரட்ன மற்றும் இரண்டு பிளையிங் ஒபிசர்கள், நான்கு கோப்பரல்கள், இரண்டு லான்ஸ் கோப்பரல்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

விடியும் வரை விழித்திருந்த அனுராதபுரம் மக்கள்

அனுராதபுர நகரமானது அதிகாலை 03:20 மணியில் இருந்தே குண்டு சப்தங்களாலும் துப்பாக்கி வேட்டொலிகளினாலும் அதிர்ந்துகொண்டிருந்தது. அந்நகர மக்கள் இச்சத்தங்களினால் நித்திரையில் இருந்து திடுக்கிட்டு எழுந்ததுடன் பயப்பீதி காரணமாக பின்னிரவு முழுவதும் விழித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் மிகவும் இரைச்சலுடன் தாழப்பறந்து குண்டுவீசியதை தாம் கண்டதாக பல மக்கள் செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்திருந்தனர். மேலும் முகாம் பகுதியில் பாரிய நெருப்புக்கோளங்களையும் தீச்சுவாலைகளையும் கண்டதாக முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர்.

அனுராதபுர வான்படைத்தள தாக்குதலின் முக்கியத்துவம்

சிறிலங்கா அரசும் சிங்கள படைத்துறையும் விடுதலைப் புலிகளை போரில் வென்று வருவதாகவும் விரைவில் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் வன்னி பிராந்தியத்தினையும் சிங்களப்படைகள் கைப்பற்றும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிக்கைகளை வெளியிட்டு தென்னிலங்கையிலே வாழுகின்ற சிங்கள மக்களையும் மற்றும் அனைத்துலக சமூகத்தினையும் ஏமாற்றிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில்தான் இத்தாக்குதல் நடவடிக்கை புலிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

anurathapuram%206.jpg

இத்தாக்குதலின் மூலம் பல செய்திகளை விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் உணர்த்த முயன்றிருக்கின்றார்கள்.

- இலங்கைத்தீவின் அரசியல் மற்றும் படைத்துறை தொடர்பான விடயங்களை தீர்மானிப்பதில் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்துகின்ற பாரிய சக்தியாக தொடர்ந்தும் விளங்குகின்றார்கள் என்பது முதலாவது.

- சிறிலங்கா அரசின் பாதுகாப்பு கட்டமைப்புக்களுக்கெல்லாம்; தண்ணி காட்டியபடி தென்னிலங்கையின் எப்பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தம்மால் வெற்றிகரமாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது இரண்டாவது.

- சிங்களப் படைத்துறையின் வடபோரரங்கு தாக்குதல் நடவடிக்கைக்கான பிரதான பின்தள மையமாக அனுராதபுரம் படைத்தளம் விளங்குவதால் அங்கு மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதல் மூலம் சிங்களப் படைத்தரப்பின் எதிர்கால மூலோபாய நடவடிக்கைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியமை மூன்றாவது.

- சிங்களப் படையினர் தமிழீழத்திலே அகலக்கால் வைப்பதனால் தமிழீழத்தில் மட்டுமல்லாது தென்னிலங்கையில் காணப்படுகின்ற சிங்கள படை முகாம்கள் எல்லாமே புலிகளினால் இலகுவாக தாக்கியழிக்கப்படும் என்ற செய்தியை தெரிவித்துள்ளமை நான்காவது.

- விடுதலைப் புலிகளின் தரைப்படையுடன் வான்படையும் இணைந்து நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற மரபுவழி போரியல் ஆற்றலை வெளிப்படுத்தியமை ஐந்தாவது.

- இந்த வெற்றிகரமான தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தாயகம், மற்றும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங்களிலே வெற்றிக்களிப்பினையும் உற்சாகத்தினையும் ஏற்படுத்தியமை ஆறாவது.

இளங்கோவனின் இறுதிக் குரல்….

anurathapuram%201.jpg

விடுதலைப் புலிகளினால் முற்றுமுழுதான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அனுராதபுரம் வான்படைத் தளத்தை மீளக் கைப்பற்றுவதற்காக பலமுறை சிறிலங்கா அரச படைகளானது முயற்சித்தபோதும் கரும்புலிகளின் மூர்க்கத்தனமான எதிர்த்தாக்குதல் காரணமாக அது சாத்தியமாகவில்லை.

வான்படைத் தளத்தின் கள நிலைமைகளைத் தெளிவாக வன்னியின் கட்டளைப்பீடத்திற்கு தொடர்ச்சியாக தெரிவித்துக்கொண்டிருந்த கரும்புலிகள் அணியின் தலைவர் லெப். கேணல் இளங்கோ, மூன்றாவது முறையாகவும் காயமடைகின்றார். அந்நிலையில் தனக்கு கீழ் செயற்பட்ட கரும்புலி வீரர்களுக்குரிய கட்டளைகளைச் சரிவர வழங்கி, தலைவன் நினைவைச் செயலில் முடித்த அந்த வீரன் கட்டளைப் பீடத்திற்கு தனது இறுதி வரிகளை கூறுகின்றான்.

‘தலைவர் நினைச்சதை நாங்கள் செய்து முடிச்சிட்டம். நீங்களும் தலைவரின் திட்டத்தை சரியாகச் செய்யுங்கோ. தலைவர்தான் கவனம். அவர கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளுங்கோ. நான் மூண்டாவது தரமும் காயம் பட்டிட்டன். நான் தொடர்பைத் துண்டிக்கிறன்…..” என்ற வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகின்றது.

இந்த கரும்புலிகளின் உயரிய அர்ப்பணிப்பு, தற்கொடை, தமிழ் மக்களின் மீதும் தேசியத் தலைவரின் மீதும் அவர்கள் வைத்திருந்த பாசம், அன்பு எல்லாமே போற்றுதற்குரியது.

அந்த வீரர்களின் உயரிய விருப்பமான தமிழீழம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு நாம் எல்லோரும் தலைவரின் பின்னால் அணிதிரண்டு சிங்கள படைகளுக்கு எதிராகப் போராடி சுதந்திர தமிழீழத்தினை விரைவில் அமைக்கவேண்டும். இதுவே இந்த மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈந்த அந்த கரும்புலி மாவீரர்களின் தியாகங்களுக்கும் அர்ப்பணிப்புக்களுக்கும் நாம் செய்யும் மரியாதையாக அமையும்.

-புரட்சி (தாயகம்)

anurathapuram%203.jpg

 

http://www.sankathi24.com/news/34722/64//d,fullart.aspx

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
Link to comment
Share on other sites

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்.தமிழர் வீரத்தை பறைசாற்றும் இத்தாக்குதல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இவர்கள்?
இவர்கள் ஏன் சாகவேணும்?
ஏன்? ஏன்?

 

இவர்கள் உயிராயுதம்
எடுத்துக் களமாடுகையில்
நாமெல்லாம்
ஸ்கோர் பார்த்துக்கொண்டிருந்தோம்.!
அனைவருமே ஆட்டமிழந்து
வெளியேறினர்!
பாவம் இவர்களைச்
சுமந்த உதரங்கள்!
அவை இன்னும்
ஆட்டமிழக்கவில்லை
இயலாமை எனும் செருக்களத்தில்!
நாங்களும் தான் மாறவில்லை
காத்திருக்கோம்
அடுத்த இன்னிங்ஸ்
தொடங்கும் வரை!

 

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!

  • Like 1
Link to comment
Share on other sites

தலைவர் கவனம்.
தலைவர் எங்கட வழிகாட்டி.
தலைவர்தான் எங்கட அப்பா.
தலைவர்தான் எங்கட அம்மா.
அவருக்கு ஒன்றும் நடந்திடக் கூடாது.

இ.இளங்கோ.

 

 

வெட்கி தலைகுனித்து நிக்கிறோம் இளங்கோ அண்ணா செய்வது அறியாது

வீரவணக்கங்கள் . :(

  • Like 1
Link to comment
Share on other sites

எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்

அக்டோபர் 21, 2013 | வீரவணக்க நாள்.   

Esai-1-600x337.jpg

|| எல்லாளன் நடவடிக்கை கரும்புலி மறவர்களின் வீரவணக்க நாள்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்தி தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி நாள் 22.10.2007 ஆகும்.

விடுதலைப் போராட்ட வரலாற்றின் அனுராதபுர வான்படைத்தளத் தாக்குதலில் காவியமான 21 கரும்புலி மறவர்களின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள்  இன்று.

தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும்.

எல்லாளன் ….! எல்லாளன் …..! எல்லாளன் …..!

தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

Esai-2-600x337.jpg

|| வான்படைத் தளத்தினை சூட்டேரித்த தேசத்தின் புயல்களின் நீளும் நினைவுகள்….

இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் -  தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

 

http://thesakkaatu.com/doc10935.html

 

 

” எல்லாளன் பெயர் சொல்லி “

ஏப்ரல் 16, 2013 | பாடல்கள்.   

Ellaalan-Peyar-Solli.jpg

இறுவெட்டு :  எல்லாளன் பெயர் சொல்லி

    

பாடலாசிரியர்கள் : ” உணர்சிக் கவிஞர் ” காசி ஆனந்தன் , புரட்சி , புதுவை இரத்தினதுரை , செந்தோழன் , கு .  வீரா , அம்புலி

இசை : தமிழக இசைக் கலைஞர்கள்

       

பாடியவர்கள் :      எஸ் . பி . பாலசுப்ரமணியம் , திப்பு , மஞ்சு , முகேஷ் , கல்யாணி , மனோ , தீபன் சக்கரவர்த்தி , சத்தியன் , கிருஷ்ணராஜ் , தியானந்திரு , தினேஷ்

வெளியீடு : தமிழீழ விடுதலைப்புலிகள் – தமிழீழம்  .

குறிப்பு : எல்லாளன் திரைப்பட பாடல் ” தாயக மண்ணே ” பாடலும் இணைக்கபட்டுள்ளன

 

முகவுரை

அள்ளித்தின்று

யுத்தத்தாயே

ஆட்டுக்குட்டி

அட சின்ன ராசா

அனுராதபுரத்தில் உயிர்

அனுராதபுரத்திலே

மின்னலே பூ

வானத்தில் ஏறி

சிங்கள வான் படை

நெருப்பு மூண்டு

தாயக மண்ணே

 

http://thesakkaatu.com/doc6241.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களமாடி வீழ்ந்த வேங்கைகளுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.