-
Tell a friend
-
Topics
-
Posts
-
தமிழினப்படுகொலைக்கு நீதி – சாத்வீகப் போராளி அம்பிகையின் போராட்டத்திற்கு வலுக்கும் ஆதரவு… 47 Views மாபெரும் இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ள சிறீலங்கா அரசிற்கு மேலும் கால அவகாசம் வழங்குவதை உலக நாடுகள் நிறுத்துவதோடு, சிறீலங்காவை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது என்ற ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக் குராலாய் பசித்திருந்து, நீதிக்காய் போராடும் அம்பிகையின் அறப்போர் ஒன்பதாவது நாளை எட்டி நிற்கின்றது. அம்பிகையின் உடல் நிலை மோசம் அடைந்து வரும் நிலையில், புலம்பெயர் தேசங்கள் மற்றும் தமிழர் தாயக பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டங்களில் அரசியல் தலைவர்கள், அமைப்புக்கள், பொது மக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், புலம் பெயர் தேசங்களில் வாகனப்பேரணிகள் மற்றும் அம்பிகையின் போராட்ட இடத்திற்கு மக்கள் திரளாகச் சென்று அப்போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கி வருகின்றனர். அதே போல் மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்தும், அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சர்வதேசத்தை நோக்கி, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு உள்ளக ரீதியாக எந்தவித நீதியும் கிடைக்கப்போவதில்லை எனவும் சர்வதேச நீதிமன்றில் சிறீலங்காவை நிறுத்தி தமக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பங்குகொண்டுள்ளவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நல்லூர் – நல்லை ஆதீனம் அருகில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பலரும் தமது ஆதரவினை தெரிவித்து, இணைந்து கொண்டுள்ளனர். 1-இந்தப் போராட்டத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக சிறீலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிராக இனவழிப்பு என்பவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும். 2-தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. https://www.ilakku.org/?p=43963
-
By உடையார் · பதியப்பட்டது
பிரித்தானியாவில் குடிசன மதிப்பீடு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை 18 Views பத்து வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் குடிசன மதிப்பீட்டில் பங்கு கொண்டு தமிழ் மக்களின் இன ரீதியான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் காலத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை பிரித்தானியா அரசு உணர்ந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த கணக்கெடுப்பு எதிர்வரும் மே மாதம் நிறைவடையவுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள மக்களின் விபரங்கள் எடுக்கப்படுவதுண்டு. இந்த நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் குடிசன மதிப்பீடு தொடர்பான விண்ணப்ப படிவங்களில் தமிழ் (Tamil) என்ற சரியான சொற்களை பின்வரும் மூன்று இடங்களில் நிரப்புவதன் மூலம் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களின் சரியான தொகையை அறியமுடியும் என்பதுடன் ஊடகம், அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் தமிழ் மக்களின் முக்கியத்துவத்தை நாம் உணர்த்த முடியும். இதன் மூலம் தமிழ் இனத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். விபரங்களை கீழே நீங்கள் பார்க்கலாம். https://www.ilakku.org/?p=43978 -
By உடையார் · பதியப்பட்டது
முஸ்லிம் மக்களின் மத நூல்களுக்கு சிறீலங்காவில் தடை An ancient hand scripted Quran 38 Views அனைத்துலக சமூகத்தின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக கொரோனா நோயினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பது என சிறீலங்கா அரசு எடுத்த முடிவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதும், தற்போது முஸ்லிம் மக்களின் மத நூல்களை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசு தடைகளை விதிக்கவுள்ளதாக சிறீலங்காவில் ஜனநாயகத்தினை ஏற்படுத்துவதற்கான ஊடகவியலாளர் அமைப்பு தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளி என இனங்காணப்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண கடந்த வெள்ளிக்கிழமை (5) கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் மக்கள் தமது மத நூல்ளை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ilakku.org/?p=43982 -
அனைத்து உலக பெண்கள் தினமான நாளை மார்ச் 8 திகதி தொடக்கம், Tim Hortons வருடம் தோறும் நடத்தும் role up the win போட்டியும் ஆரம்பமாகிறது.😀🤭 அனைத்துலக பெண்களுக்கும் மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.💐🌻
-
By உடையார் · பதியப்பட்டது
மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி 29 Views ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின் மூலம் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கும், போக்குக்கும் பாதுகாப்பும், ஊக்கமும் அளிப்பித்தனர். இதன் பின்னரே சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்கோ, அமைப்புகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ எவ்வித அச்சமுமின்றி ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு’ என்னும் 21ஆம் நூற்றாண்டின் கிட்லரிசத்தை நடைமுறைப்படுத்தியது. தமிழீழத் தேசியப் போராட்டம் என்பது பயங்கரவாதமல்ல – பிரிவினைவாதமுமல்ல. 22.05.1972 முதல் நாடற்ற தேச இனமாக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், தங்களின் பிரிக்கப்பட முடியாத பிறப்பு உரிமைகளான தாயக, தேசிய, தன்னாட்சி உரிமைகளின் அடிப்படையில்18.05. 2009 வரை 37 ஆண்டுகள் இலங்கைத் தீவில் அரசுக்குள் அரசு என்ற அடிப்படையில் தங்களுக்கான நடைமுறை அரசை அமைத்து, தங்களுக்கு இருந்து வந்த சிறீலங்காவின் இனங்காணக் கூடிய அச்சத்தை எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், வாழ்வையும், உடமைகளையும் தங்களின் சொந்த மண்ணில் பாதுகாத்த உலகின் தொன்மையும், தொடர்ச்சியுமான குடிகளான ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம். இந்த மக்கள் போராட்டம் உலக நாடுகளின் அங்கீகாரத்தை பெறும் நிலைக்கு தன்னை வடிவமைத்த நேரத்திலேயே அதனை அனுமதித்தால் உலகின் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களின் விடுதலை முயற்சிகள் வேக எழுச்சி பெறும் என ஒடுக்கப்பட்டு வரும் உலக மக்கள் அனைவரதும் விடுதலைக்கு மேலான மரண அடியாகவே சிறீலங்காவின் பாசிச வெற்றியை உலக வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் ஊக்குவித்தன. எந்த வல்லாண்மைகளும், மேலாண்மைகளும் சிறீலங்காவுக்கு ஈழத்தமிழ் மக்கள் போராட்டத்தை மௌனிக்க வைக்க உதவினவோ அவையே இன்றும், ஈழத்தமிழர்களின் நீதிக்கான அனைத்துலக மன்றத்தின் குரலை மௌனிக்கச் செய்வதன் மூலம் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஈழத்தமிழர்களின் மேல் நடாத்தப்பெற்ற இனஅழிப்புக்கான உண்மைகள் உலகின் முன் தெளிவாக்கப்பட்ட நிலையிலும், அவர்கள் தங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளாதவாறு நீதியைக் கருக்கலைப்புச் செய்கின்றன. மேலும் இம்முறை அனைத்துலக மன்றத்தின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைமையே சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்த நிலையிலும், அந்த மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையில் உள்ள அனைத்துலக நீதியை நடைமுறைப்படுத்தக் கூடிய சட்டவலுவை உண்டாக்கும் சொல்லாட்சிகளை அகற்றி அல்லது மென்மைப்படுத்தி, வாக்கெடுப்புக்கு முன்வைக்கும் தீர்மானங்களை எழுதிக்கொண்டதன் மூலம், அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் மனச்சாட்சியுள்ள அலுவலர்களின் நேர்மையான உழைப்பின் மூலமான ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரலையும் மௌனிக்கச் செய்துள்ளன. இந்நிலையில் இதனால் ஊக்கமும், வேகமும் பெறும் சிறீலங்கா சட்டத்தின் ஆட்சி என்னும் மக்களாட்சியின் வேரையே பிடுங்கி எறியும் தனது செயலை வேகப்படுத்தும் என்பது வெளிப்படையான உண்மை. இதனையே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்களின் சனநாயக அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்களை ஆறு ஏழு காவல் நிலையங்களைச் சேர்ந்த நகரகாவலர்களின் கூட்டான விசாரணைக்கு உட்படுத்தி அச்சப்படுத்தும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையக அமர்வுகள் நடைபெறும் பொழுதே உலக முறைமைகளுக்கோ, சட்டங்களுக்கோ எவ்வித அச்சமுமின்றிச் செய்வதன் மூலம் சிறீலங்கா உறுதிப்படுத்தி நிற்கிறது. இவ்வாறு சிறீலங்காவின் நடைமுறை அரசியல் எதார்த்தம் உள்ள நிலையில் அவர்கள் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நிலைமாற்று நீதியையோ, வலிந்து காணாமால் ஆக்கப்பட்டோருடைய கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கான நீதியையோ, புனர்வாழ்வையோ அளிப்பதற்கான கால அவகாசம் என்பது மக்கள் போராட்டங்களை களைக்கச் செய்து மௌனிக்க வைக்கும் உத்தியாகவே உள்ளது. இவ்விடத்தில் உலக நாடுகளுக்கும், அமைப்புக்களுக்கும் ஈழத்தமிழர்களின் இனஅழிப்பை விளக்கி அவர்களுக்கான நீதியை கிடைக்க வைக்க முயற்சிக்கிறோம் என்னும் ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அமைப்புக்களும் கூட தாங்கள் இந்நாடுகளின் ஊதுகுழல்களாக நின்றால் தான் தமக்கும் இந்நாடுகளுக்கும் இடையிலான உறவாடல் இருக்கும் என்ற நினைப்பில் செயற்படுகின்றனர். இணைந்து பணியாற்றி இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் சகோதரத்துவ ஈழத்தமிழ் அமைப்புக்களுடனும் பகைமையும், வெறுப்பும் கொண்டு இணைந்து பணிசெய்ய மறுக்கின்றனர். இதுவே 12 ஆண்டுகளாகச் சிறீலங்காவுக்கு எதிராக உலக ஆதரவை நிலைப்படுத்துவதில் உள்ள ஈழத்தமிழினம் சார்ந்த சிக்கலாக உள்ளது. ஈழத்தமிழர் உரிமைகளைப் பெறுவது என்பது அரசியல் அல்ல. விட்டுக் கொடுப்பு இல்லாத உரிமைப்போராட்டம். மௌனிக்க வைத்தல் என்னும் உத்திக்கு எதிரான சனநாயகப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டிய போராட்டம். ஈழத்தமிழர்களின் உரிமைகள் இனஅழிப்புக்களால், இனத்துடைப்புக்களால், பண்பாட்டு இனஅழிப்புக்களால் இன்றும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு அவர்களின் இனத்துவ, மொழித்துவ, தாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்படுகின்றன என்பதை வெளிப்படுத்தி, அதனை மீட்டெடுக்கும் போரட்டம். நாமும் இந்தப் போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்கிறோம் எனக் கருதும் ஒவ்வொரு வரும் விளைவுகளை விரைவாகப் பெற சகோதரத்துவத்துடன் இணைந்து ஒரே அணியில் செயற்பட வேண்டிய போராட்டம். இதற்கான நடைமுறைகளிலேயே மௌனிக்க வைத்தல் என்ற உத்தியை உடைத்து, ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளநிலைப்படுத்தப்படல் என்பதன் வேகம் தங்கியுள்ளது. https://www.ilakku.org/?p=43986
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.