Jump to content

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -28)


Recommended Posts

இக்கதையின் முன்னைய பகுதிகளை வாசிக்க...

 

விற்றுத் தீர்ந்த காதல் கதை (Part 01-02-03-04-05-06-07 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 08-09-10-11-12 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 17-18-19-20 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 21 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part - 22 )

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-23)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம்-24)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -25)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -26)

விற்றுத் தீர்ந்த காதல் கதை (பாகம் -27)

                                 

 

 

வனுடைய கையில் UK வீசா அலுவலகத்தால் கொடுக்கப்பட்ட ஆவண உறை இருந்தது. அந்த மூடிய உறைக்குள்தான் வீசா கிடைத்திருக்கின்றதா இல்லையா? என்ற அவனதும் அஞ்சலியினதும் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முடிவும் அடங்கியிருந்தது. ஒருவித படபடப்போடு அதைத் திறந்தவனுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மிகப் பெரும் ஏமாற்றமே காத்திருந்தது.

 

சில அநாவசியக் காரணங்களை வீசா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களாகக் கூறி அதை மூன்று பக்கத்தாள்களில் விளக்கமாகக் குறிப்பிட்டிருந்தனர். 'அஞ்சலியுடன் கூடிய விரைவில் சேரப்போகிறோம்' என்ற கனவில் இருந்தவனுக்கு.... 'அது இப்போதைக்கு இல்லை' என்பது... மிகப்பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் கொடுத்திருந்தது.

 

இவன் தன்னை நினைத்து கவலைப்பட்டதைவிட... அஞ்சலி இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்வாளா? என்று நினைத்து இன்னும் கலங்கினான். மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கும் அவளுக்கு... எப்படி இதைத் தெரியப்படுத்துவது என்று தயங்கினான். ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்...! அஞ்சலிக்கு போன் பண்ணி... நடந்தவற்றை  தெளிவாக விபரித்தான்.

 

31.jpg

 

அவளுக்கும் அது மிகுந்த  கவலையையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருந்தது. அன்று அவள் அழுதிருக்க வேண்டும்...! ஆனாலும் அதை அவள் தனக்குள் மறைத்துக்கொண்டு....

 

 

"கவலைப்படாதடா....! இன்னும் 28 நாளுக்குள்ள அப்பீல் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறாங்கள்தானே... எல்லாத்தையும் சரியா ஒழுங்குபடுத்திப்போட்டு திருப்பி அப்பீல் பண்ணுவம். அப்பீல் பண்ணினால் நிச்சயம் வீசா கிடைக்கும். ஒண்டுக்கும் யோசிக்காதடா.... " மிகவும் கனிவான குரலில் அஞ்சலி கூறிய அந்த ஆறுதல் வார்த்தைகள் அப்போதைக்கு அவனுக்கு ஆறுதல் தருவதாகவே இருந்தன.

 

அதன் பின்னர்,  அப்பீல் செய்வதற்கான ஆயத்தங்களில் அஞ்சலியும் அவனும் மும்முரமானார்கள். இறுதியாக ஒருவாறு... இன்னும் பல உறுதிப்படுத்தல் ஆவணங்களையும், சென்றமுறை விடுபட்ட விடயங்கள்  எல்லாவற்றையும் இணைத்து  28 நாட்களுக்குள் வீஸா நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அப்பீல் பண்ணியிருந்தான். அப்பீல்களுக்கான முடிவு அறிவிக்கும் நாட்களை திட்டவட்டமாகக் குறிப்பிட்டுக் கூற மாட்டார்கள் என்பதனால், அதற்கான பதில் எப்பொழுது வருமென்று ஆவலோடு காத்திருக்க வேண்டியிருந்தது.

 

ஆனால் 'காலம்' என்பது அவன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி விளையாடக் காத்திருக்கின்றது என்பதனை அவன் உணர்ந்துகொள்ள இன்னும் சில காலம் சென்றதென்பது அவனது துரதிஷ்டமே!

2010 ஆம் ஆண்டும் அவர்களது காதலை இனிதாகத்தான் வரவேற்றது. ஆனாலும், அதுவும் அவர்கள் இருவரும் சேர்வதற்கான அந்த நல்லநேரத்தை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.

 

அவர்களின் வீசா அப்பீலுக்கான முடிவைச் சொல்லாமல் இழுத்தடித்துக்கொண்டே வந்தார்கள். இரு உள்ளங்களின் உண்மையான காதலையும், பிரிவால் அவர்கள் படும் வலியினையும் கரிசனையோடு பார்க்கும் மனிதநேயத்தை அவர்களும் தொலைத்து விட்டிருந்திருக்கலாம். இவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலையையும், பிரிவின் வேதனைகளையும் அவர்கள் உணர்ந்துகொள்ளவும் வாய்ப்பில்லைத்தான். காத்திருப்புக்களுடன் நாட்கள் அப்படியே நகர்கின்றன.

வழமையான தொடர்பாடல்களோடும் , மனதில் கனிவான காதலோடும் பிரிந்து வாடும் உள்ளங்கள் இரண்டும் எப்படியாவது சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடே.... 2010 ஆம் ஆண்டையும் கடந்து 2011ஆம் ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கிறது அவர்களின் காதல். அவர்கள் காதலிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட 8 வருடங்கள்.... பதிவுத் திருமணமானபின் இருவரும் பிரிந்து வேறுவேறு நாடுகளுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டிருந்தன.

 

 

இந்த 2011 ஆம் ஆண்டுதான் அவர்களின் காதலில் பல மாறுதல்களைக் கொண்டு வரும் பலமிக முக்கியமான சம்பவங்களை ஆரம்பித்து வைப்பதாக அமைந்தது.

 

இத்தனை வருடங்கள் பிரிந்திருந்தாலும் அவர்கள் இருவரினதும் காதல் நினைவுகள் என்பது என்றும் பசுமையான இனிய நினைவுகளாகவே இருவருக்குள்ளும் இருந்தன. இருவரும் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பழைய நினைவுகளை அடிக்கடி மீட்டிக்கொள்வார்கள்.

 

'காதல் ஒரு தாய் என்றால்... நினைவுகள் என்பது அதன் குழந்தைகள் போல'. எப்பொழுதும் பிரிக்கமுடியாத உறவு காதலுக்கும் நினைவுகளுக்கும் உண்டென்பதை காதலித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர். காதல் அப்படித்தான்!!!

நினைவுகளிலிருந்து நிஜத்துக்கு மீளவேண்டிய சந்தர்ப்பங்களும் அடிக்கடி வரும். அப்படியொரு சந்தர்ப்பத்தை அவனுக்கு திடீரென உருவாக்கியிருந்தாள் அஞ்சலி.  

2011 பெப்ரவரி ... காதலர்தினத்தின் பின்னரான ஒருநாள்... மாலைநேரம், அவசரமாகத் தனக்குக் கோல் பண்ணும்படி அவனது கைத்தொலைபேசிக்கு ஒரு SMS அனுப்பியிருந்தாள். இவனுக்கு ஏன் எதுக்கென்று தெரியவில்லை. அவளுக்கு போன் பண்ணினான்.

kajal_agarwal_cute_stills_2.jpg

போனை எடுத்தவள்.... "வேலை எல்லாம் முடிஞ்சுதா?" என்று வினவ, "இன்னும் இல்லை... பரவாயில்லை.. சொல்லுமா...! ஏன் அவசரமாய்க் கோல் பண்ணச் சொன்னாய்... என்ன விஷயம்மா?" என்று, என்ன அவசரம் என்றறியும் ஆர்வத்தோடு கேட்டான்.

 

"ரொம்ப முக்கியமான விஷயமடா... அம்மாட்ட எங்கட லவ் மாற்ரறை சொல்லிப்போட்டன்..."என்று அவள் சொன்னதும் இவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் படிப்பு எல்லாம் முடியத்தான் சொல்லுவதாக இருந்தவள். வாற யூன் மாசம்தான் ஃபைனல் எக்ஸாம் முடியுது. அதற்குள் இவள் ஏன் அவசரப்பட்டுச் சொன்னாள்?இதனால் ஏதாவது பிரச்சினை வந்தால் அவளது படிப்பும் குழம்புமே...! என்றெல்லாம் பலவிதமான எண்ணங்கள் ஒரு சில வினாடிகளுக்குள்  மூளையில் ஓடி மறைய,

அப்ப நாங்கள் எழுத்து எழுதினதையும் சொல்லீட்டியா அஞ்சு? என அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே கேட்டான்.

 

"இல்லடா... அதை எனக்கு சொல்ல முடியேல.... அதை எப்பிடிச் சொல்லுறது எண்டும் தெரியேல. லவ்வைச் சொன்னதுக்கே என்ன  றியாக்‌ஷன்? என்று முழுசாத் தெரியேல. அதுக்குள்ள இதையெங்க சொல்லுறது???

 என்ர ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சதும்.... எனக்கு மாப்பிள்ளை பாக்கப்போறதா அம்மா கதையைத் தொடங்கினவ... அதுதான் சொல்லவேண்டியதாப் போச்சு.

 

இப்பவே சொல்லாட்டில்... அவையள் மாப்பிள்ளையெல்லாம் பார்த்து, அதுக்குப் பிறகு வேண்டாம் என்று சொன்னால்... எல்லாருக்கும் கஷ்டம்தானே. அதுதான், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று நினைச்சுச் சொல்லிட்டன். அம்மாவிட்ட உங்களைப்பற்றியும் எல்லாம் சொல்லிட்டன். அவ தனக்கு விருப்பமா இல்லையா என்று ஓண்டுமே சொல்லேலடா. அப்பாவோட கதைச்சிட்டு ஆறுதலா போன் பண்ணுறன் எண்டு சொல்லியிருக்கிறா. அப்பாவுக்கு பிறஷர் வேற... அவர் கொஞ்சம் நல்ல மூட்டில இருக்கைக்குள்ளதான் கதைக்கிறதா சொன்னவ."

 

"பார்ப்பம்.... என்ன நடக்குது என்று?" எனத் தன் தாயாரோடு கதைத்ததையெல்லாம் அவனுக்கு விளங்கப்படுத்திவிட்டு இறுதியில் ஒரு கேள்விக்குறியோடு முடித்தாள்.

 

அவள் கேள்விக்குறியோடு முடித்தவிடயங்கள்... இவனுக்குள் பலவேறு கேள்விகளை எழுப்பியிருந்தன. இனிமேல் அவளது பெற்றோரது  முடிவும் செயலும் எப்படி இருக்கும்? என்ற பெருங்கேள்வி இவனுக்குள் எழுந்தது.

 

ஏனெனில், அவளுடைய தந்தையைப்பற்றி இவன் நன்கு அறிவான். அவ்வளவு இலகுவில் தங்களின் காதலுக்கு அவர் சம்மதிக்கமாட்டார் என்பதையும் இவன் நன்கே அறிந்திருந்தான்.

ஆனாலும் தன் மனதிற்குள் எழுந்த சந்தேகத்தினை அஞ்சலியிடம் காட்டிக்கொள்ளாமல்,

 

"ம்ம்ம்ம்ம்.... பார்ப்பம்! எல்லாம் நல்லபடி நடக்கும். யோசிக்காதம்மா! என அவளின் ஆறுதலுக்காகச் சொன்னவன்... அதோடு நிற்காமல் தன் மனதில் இருக்கும் உறுத்தலை சட்டென்று கேட்டேவிட்டான்.

"அஞ்சு...... ஒருவேளை உங்கட அப்பா அம்மா எங்கட காதலுக்கு சம்மதிக்கேல என்றால் என்ன செய்வாய்?" என அவன் கேட்கவும்,

 

"எப்பிடியும்...ஓகே சொல்லுவினம் எண்ட நம்பிக்கை எனக்கு இருக்கு... அப்பிடி இல்லாட்டியும் கடைசிவரைக்கும் போராடுவன்டா...! எனக்குக் கலியாணம் எண்டு ஒண்டு நடந்தா... அது உன்னோடதான்! உயிரே போனாலும் வேற ஒருத்தன கட்டமாட்டன். தங்கட மகள் கலியாணம் கட்டவேணும் எண்டதுக்காகவாவது அவையள் ஓகே சொல்லித்தானே ஆகோணும். அதோட நாங்கள் எழுத்தும் எழுதீட்டம். அவையள் வேற ஒராளுக்கு கட்டாயப்படுத்திக்கூட கட்டிக்குடுக்க ஏலாது. அவையள் ஓகே சொல்லும்வரைக்கும்... இப்பிடியே லவ் பண்ணிக்கொண்டே இருப்பம். லவ் பண்ணுறதும் நல்லாத்தானே இருக்கும்..." என்று ஒரு சீரியஸான விடயத்தை விளையாட்டுத்தனமாகச் சொல்லிவிட்டு குழந்தைபோல் சிரித்தாள் அஞ்சு!

 

Kajal%20Agarwal%20Latest%20Cute%20Sweet%

 

 

தன் காதல்மேலும் அஞ்சலி மீதும் அவன் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஈடிணையே இல்லை.

என்னதான் எதிர்ப்பு வந்தாலும் அஞ்சலி தன் காதலில் உறுதியாக இருப்பாள் என்று முழுமையாக நம்பினான். காதலிக்க ஆரம்பித்த நாள்முதல் இந்த நிமிடம் வரைக்கும் அவனும் அஞ்சலியும் அவர்களின் காதலும் என எல்லாமே அப்படித்தான் இருந்தது.

ஆனால், காலம் இவன் காதலோடு விளையாடும் காலம் அவனை நெருங்கிக்கொண்டிருந்தது...!

தொடரும்...

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மாற்றங்கள் என்பதனை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் . மாற்றங்கள் எமக்கு சாதமாக வரும்பொழுது மனம் சந்தோசமாய் துள்ளிக்குதிக்கின்றது  . பாதகமாக வரும்பொழுது மனம் பலவாறாக அலை பாய்கின்றது . உங்கள் கதையும் அதற்கு கிட்ட நெருங்குகின்றது என்றே எண்ணுகின்றேன் . இந்தக் குரல் போக வேண்டிய இடத்திற்குப் போனால் உங்கள் கதையின் வலி தெரியும் . தொடருங்கள் .
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் ... நானும் உங்கள் கதை வாசிக்கும் ஆர்வத்தில் யாழுக்கு வந்து ஒருமாதிரித் தேறிட்டன். நீங்கள் கதையை இன்னும் முடிக்கேல்லை. விரைவில் எழுதி முடியுங்கோ. அப்பத்தான் எங்கட பிரசர் குறையும்.

Link to comment
Share on other sites

  • 1 month later...

மாற்றங்கள் என்பதனை நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் . மாற்றங்கள் எமக்கு சாதமாக வரும்பொழுது மனம் சந்தோசமாய் துள்ளிக்குதிக்கின்றது  . பாதகமாக வரும்பொழுது மனம் பலவாறாக அலை பாய்கின்றது . உங்கள் கதையும் அதற்கு கிட்ட நெருங்குகின்றது என்றே எண்ணுகின்றேன் . இந்தக் குரல் போக வேண்டிய இடத்திற்குப் போனால் உங்கள் கதையின் வலி தெரியும் . தொடருங்கள் .

 

 

நேரப்பிரச்சினையால் கிரமமாக தொடர முடியவில்லை. விரைவில் தொடர்கின்றேன்.

மாற்றங்கள் நிறைய மாற்றங்களைக் கொடுக்கக்கூடியது. அவை தொடர்ந்து தொடர்கின்றன....!

கதை முக்கியமான கட்டத்தினை நெருங்குகின்றது.....  விரைவில் தொடர்கின்றேன்.

மிக்க நன்றி கோ..... மற்றும் அலைமகள் அக்கா,சுமே  அக்கா! :)

 

ம் ... நானும் உங்கள் கதை வாசிக்கும் ஆர்வத்தில் யாழுக்கு வந்து ஒருமாதிரித் தேறிட்டன். நீங்கள் கதையை இன்னும் முடிக்கேல்லை. விரைவில் எழுதி முடியுங்கோ. அப்பத்தான் எங்கட பிரசர் குறையும்.

 

சுமே அக்காவை யாழுக்குள் கொணர்ந்த பெருமை இக்கதையினையே சாரும். அந்தவகையிலும்  இக்கதையை எழுதியதில் எனக்கு ஒரு திருப்தி. யாழுக்கு ஒரு துடிப்பான எழுத்தாயினியை இக்கதை கொடுத்திருக்கிறது.

 

மிக்க நன்றி அக்கா... நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக தொடர்ந்து எழுதி முடிக்கின்றேன் ! :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.