Jump to content

களம் பற்றிய கருத்துக்கள்


தாத்தாவை மீண்டும் கருத்துகளத்திற்கு அனுமதிக்கலாமா ?  

12 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

இந்த welcome to என்பது ஒரு பிரச்சினையான சொல்

இதைப்போல் பல சொற்கள் இங்குள்ளது

இவை எல்லாம் தனிச்சொற்கள் இந்த தனிச்சொற்கள் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வசனம் அமைக்கின்றன. ஆனால் இவை ஆங்கில இலக்கணமுறையில் வசனம் அமைக்கின்றன.

நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் கூட, நான் யாழ் இணையம் என்று எந்தச்சந்தர்ப்பதிலும் எழுதவில்லை. இந்த forum ஐ நிறுவும் போது இந்த forum இன் பெயரைக்குறிப்பிடவேண்டும். அந்த சொல்லையே இங்கு weடcome to க்கு பின் இணைக்கின்றது.

அதே போல் welcome to க்கு பின் வேறு சொல்லும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப வரலாம் எனவே இரண்டு சொல்லுக்கும் பொருந்துவது போல் மொழிபெயர்க்க வேண்டும்.

உதாரணமாக இன்னொரு சொல்

search என்ற ஆங்கிலச்சொல் வினைச்சொல்லாகவும் வரும் பெயர்ச்சொல்லாகவும் வரும். எனவே குறிப்பிட்ட இந்தச்சொல்லையே இரண்டு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தும்

ஆனால்

தமிழில் பெயர்ச்சொல்லாக தேடி என்றும்

வினைச்சொல்லாக தேடுக என்றும் வரும். எனவே இப்படியான சந்தர்பங்களில் புதிய கட்டளைகளை எமக்கேற்றவாறு நாம் தான் ஆக்க வேண்டும். இது நேரத்தை தின்னும் வேலை என்பதால் எனது forum இல் template இல் அதற்கான மாற்றத்தை செய்துள்ளேன்.

இதனால்த்தான் உடனேயே ஒரேயடியாக எல்லாச்சொற்களையும் மொழி பெயர்க்கமுடியவில்லை.

நான் மொழிபெயர்த்த சொற்கள் அனைத்தும் இப்படி சோதித்து பார்ர்த்துதான் எழுதினேன். ஆனாலும் சில இடங்களில் பொருந்தாமலும் இருக்கலாம்.

அதனால்த்தான் உங்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டும் படி கேட்டிருந்தேன். தொடர்ந்தும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

யாழ் இணையம் அழகு தமிழில் மிகசிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றத

Link to comment
Share on other sites

தமிழ் எழுத்துக்கள் அதிக இடத்தை பிடிப்பதால் இப்படி நேரிடலாம் என்று நினைக்கிறேன்.

இதற்கு யாழ்களம் template இல் மாற்றம் செய்யலாம். ஆனால் அது வேறு தவறுகளைக்கொண்டு வரலாம்.

அதே போல் நீங்கள் உங்கள் கணணியிலும் சில மாற்றங்களை செய்யலாம்.

*சிறிய எழுத்தை தெரிவு செய்யலாம். அல்லது

*monitor இன் pixel ஐ கூட்டலாம்.

நீங்கள் கூறியதை சரியாக நான் விளங்கிக்கொண்டுள்ளேன் என்றால் நான் கூறுவது பயன் தரலாம்.

Link to comment
Share on other sites

நான் கூறியதை நீங்கள் சரியாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.

மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன...!

தங்கள் விளக்கங்களுக்கும நன்றிகள்...

Link to comment
Share on other sites

யாழ் கருத்துக்களத்துக்கு LOGIN செய்து உள்ளே வர எனக்கு ஒரு தனிப்பட்ட செய்தி வந்திருக்கிறது என்று காட்டுகிறது. உள்ளே போனால் ஒன்றையும் காணவில்லை.

அதோடு எனது பெயர் LOGOUT பண்ணி நிற்பது போல காட்டுகிறது. வேறு பக்கத்துக்குள் போக LOGIN பண்ணி நிற்பது போல காட்டுகிறது. என்ன ஆச்சு?

Link to comment
Share on other sites

உங்களுடைய யுhசர் நேமையும் பாஸ்வேட்டையும் தாங்கோ நாங்கள் பாவிக்கிறம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
இந்த தாத்தாவின் மீது ஏன் எந்த சந்தர்ப்பத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அது எப்போது நீக்கப்படும் என்று யாராவது சொல்ல முடியுமா?
Link to comment
Share on other sites

இதை வாசித்தவுடன் கள நிர்வாகம் உடன் பதில் அளிக்க மாட்டார்களா... என்ன BBc..?

Link to comment
Share on other sites

அதைத்தான் நானும் எதிர்பார்க்கின்றேன்,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனென்றுதான் எனக்கும் புரியவில்லை.கடைசியாக அவர்கூறிய கருத்துகளைப்பார்த்தால் புரிந்துவிடுமே

Link to comment
Share on other sites

தாத்தாவுக்கு தடையா? தாத்ஸ் சொன்னாரே இனிமேல் இன்ரநெட் இலவசமா கிடைக்காது என்று. ஒருவேளை அதுதான் வரவில்லையோ?

Link to comment
Share on other sites

ஏனென்றுதான் எனக்கும் புரியவில்லை.கடைசியாக அவர்கூறிய கருத்துகளைப்பார்த்தால் புரிந்துவிடுமே

கடைசியாக எழுதிய கருத்து எது என்று தெரியவில்லை. யாழ் நிர்வாகம் தடை பற்றி கருத்து சொன்னால் நல்லது.

Link to comment
Share on other sites

தடையை எடுத்தாலும் தாத்தா வரமாட்டார். யாராவது இலவச இணைப்பு எடுக்க ஐடியா குடுத்தா வருவார்.

தடையை இல்லை என்றால் தாத்ஸ் வருவார் என்றே நான் நினைக்கின்றேன்,

வசி, பிரித்தானிய பொது நூலகம் இலவச இணைய சேவையை வழங்குகின்றது தானே?

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாக கள நிபந்தனைகளை மீறியமையால் தடை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி முற்கூட்டியே எச்சரிக்கை அவர் செய்தும் அதைப் பொருட்படுத்தவில்லை :lol: குறிப்பாக பிரதேசவாதக் கருத்துக்களும், புலிகளைச் கொச்சைப்படுத்தி பொய்யான தகவல்களை தொடர்ச்சியாக இங்கு எழுதியமையால் தடை வழங்கப்பட்டள்ளது. தடை நீக்கம் பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை.

Link to comment
Share on other sites

விளக்கத்திற்கு நன்றி மோகன்,

சேதுவுக்கு கொடுத்தது போல் தாத்தாவுக்கும் தடையை நீக்கலாம் என்று நினைக்கின்றேன், இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

தொடர்ச்சியாக கள நிபந்தனைகளை மீறியமையால் தடை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி முற்கூட்டியே எச்சரிக்கை அவர் செய்தும் அதைப் பொருட்படுத்தவில்லை :D குறிப்பாக பிரதேசவாதக் கருத்துக்களும், புலிகளைச் கொச்சைப்படுத்தி பொய்யான தகவல்களை தொடர்ச்சியாக இங்கு எழுதியமையால் தடை வழங்கப்பட்டள்ளது. தடை நீக்கம் பற்றி இன்னமும் தீர்மானிக்கவில்லை.

எதிர்பார்த்ததுதான்.... :lol:

ஆனால் இது வெறும் யாழின் கண்துடைப்பு.... என எண்ணலாம்... பொறுத்திருந்து பாருங்கள். :lol: :idea:

தாத்தாவின் கருத்துக்கள் இங்கு கனருக்கு தேவையாய் உள்ளது அதில் யாழும் ஒன்றென்றால் அது மிகையாகாது... :wink: :idea: நான் அவருக்கும் அவரின் தனிகருத்துக்களுக்கும் எதிரி அல்ல... ஆனால் பொது சுதந்திரத்தில் தனிமனிதருக்கு கருத்தெல்லைகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்தில் தாத்தா தடை செய்யப்படமுன்னர் கடைசியாக முரண்பட்டுக் கொண்டது என்னுடனாகத் தான் இருக்கும்

அந்த வகையில் திரும்பவும் தாத்தாவை களத்துள் அனுமதியுங்கள் என்று நான் கோரிக்கைவிடுப்பது முறையல்ல ஆதலால் வாளாவிருந்தேன்.தாத்தாவுக்கு தனது கருத்துகளைச் சொல்வதற்கு சகலவிதமான உரிமைகளும் உண்டு அவர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அதே போன்று நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் எழுதலாம் என்பதை அவர் மறந்துவிட்டார் .

ஏதோ தான் சொல்லுவதுதான் உண்மை மற்றவர்கள் எல்லோரும் பொய் பித்தலாட்டக்காரர் என்றவகையில் அவர் கூறியதை கேட்கமுடியாமல்தான் யாழ் களத்தை விட்டு வேறோர் இடத்தில் பகிரங்கமாக விவாதிக்கத் தயாரா என அழைத்தேன் வழமை போலவே சமாளித்தது மட்டுமன்றி அவதூறு பரப்பினார்.

ஆகவே தாத்தா தடை செய்யப்படுவதற்கு நானும் ஒரு காரணம் என அவர் நினைத்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்

மீண்டும் தாத்தாவை விடுவதோ விடாததோ எது முடிவாக இருந்தாலும் நான் பதிலளிக்கக் காத்திருக்கின்றேன்

Link to comment
Share on other sites

உண்மைதான் ஈழவன். உந்தாள் இல்லாமல் எங்களுக்கு வெறும் வாயை மெல்லவேண்டி இருக்கு :lol:

கத்தியைக் கூராக்க வேண்டுமென்றால் ஒரு கரடுமுரடான கல்லுத் தேவை. இங்க தாத்தா கல்லு...... தாயகப்பற்று கத்தி. கல்லு எண்ட விசயம் இன்னொண்டை வச்சும் உறுதியாகுது. அதென்னெண்டால் அவருக்கு என்ன சொன்னாலும் மண்டையில ஏறாது.

Link to comment
Share on other sites

மன்னிக்கவேணும் நண்பர்கள் களத்தில் எதோ கோளாறு காரணமாக ஒரு கருத்தை தட்டி அனுப்பியதும் error என்று வந்‌தது. பலமுறை back button பாவித்து மீண்டும் மீண்டும் அனுப்ப முயன்றபோதும் இவ்வாறே வந்‌தது. சிறிது நேரத்தில் பார்த்தால் என்கருத்து பலமுறை களத்தில் தோன்றி விட்டது.

மோகன் கோளாறை சரி செய்வீர்களா? duplicate ஆகிய கருத்துக்களை நீக்கினால் நன்றாக இருக்கும்

Link to comment
Share on other sites

தாத்தாவை மீண்டும் கருத்துகளத்திற்கு அனுமதிக்கலாமா என்ன தலைப்பில் ஒரு கருத்து கணிப்பை நடத்தலாம் என்று நான் நினைக்கின்றேன்.

தாத்தாவை மீண்டும் அனுமதிப்பது குறித்து உங்கள் கருத்துகளையும் வாக்குகளையும் தெரியப்படுத்துங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.