Jump to content

ஈழத்துத் திரைப்படப் பாடல்களும் குறிப்புகளும்


Recommended Posts

‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள்.

டொக்டர் தயாரித்த படம்
 

திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்.

அந்த டொக்டர்தான் எஸ்.ஆர். வேதநாயகம். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘தென்றலும் புயலும்’.

இந்த டொக்டருக்குத் திருகோணமலையிலுள்ள ஒரு வங்கி மனேச்சர் கூட்டாளி. வங்கி மனேஜருக்கு ஓரளவு நடிகர் முத்துராமனின் முகச்சாயல். அதனால், இவருக்கும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை டொக்டர் நிறைவேற்றினார். பி.எஸ்.சி. பட்டதாரியான அந்த பேங் மனேஜரின் பெயர்தான் சிவபாதவிருதையர்.

திருகோணமலையில் மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்து வந்தவர் அமரசிங்கம். அவரும் இப்படத்தில் நடிப்பதற்காகச் சேர்ந்து கொண்டார். கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய சாம்பசிவமும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

திருகோணமலை, மூதூர் ஆகிய பகுதிகளில் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்தான் ‘தென்றலும் புயலும்’ இதன் கதையையே திரைப்படத்துக்கு ஏற்ற திரைக்கதையாக அமைந்த வசனம் எழுதினார் டொக்டர் வேதநாயகம்.

டொக்டர் வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் அனைவரும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள்.

இவர்கள் தங்கள் படத்தை இயக்கக்கூடிய நல்ல இயக்குநரைத் தேடினர். மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் புகழ்பெற்று விளங்கினார். 50 சிங்களத் திரைப்படங்களுக்கும் ஐந்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து முடித்திருந்தார். அவர்தான் எம்.ஏ. கபூர். அவரை இப்படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குநர் ஆக்கினார்கள்.

பி.எஸ். நாகலிங்கம் என்ற இளைஞர் நீண்ட நாட்களாகவே இலங்கைத் திரைப்பட உலகில் பல்வேறு துறைகளில் கடமையாற்றி வந்தார். அவரே இப்படத்துக்கு உதவி இயக்குநராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் மேடை நாடகங்களிலும் சில சிங்களப் படங்களிலும் நடித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் ‘புதியகாற்று’ மூலம் அறிமுகமாகி நல்ல பெயர் பெற்றிருந்தார். திடகாத்திரமான உடலும் திரைக்கேற்ற முகவெட்டும் கொண்ட இவ்விளைஞர்தான் டீன்குமார். இவருக்கும் இப்படத்தில் நல்ல பாத்திரம் வழங்கப்பட்டது.

டொக்டர் வேதநாயகம் நடிகைகளைத் தேடினார். அப்பொழுது கொழும்பில் சந்திரகலாவும் ஹெலன் குமாரியும் பிரபல நடிகைகளாக விளங்கினார்கள். தாய்ப்பாத்திரத்துக்கு செல்வம் பெர்னாண்டோ பொருத்தமானவர். இவர்கள் மூவரும் இப்படத்துக்கு ஒப்பந்தமானார்கள்.

இவர்களுடன் கே.ஏ.ஜவாஹர், எஸ்.என்.தனரெத்தினம், கந்தசாமி, ஜோபுநஸீர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

‘நிர்மலா’ என்ற படத்துக்கு இசை அமைத்ததன்மூலம் திருகோணமலை இசைக்கழகத்தைச் சேர்ந்த ரீ.பத்மநாதன் நல்லபெயர் வாங்கியிருந்தார். அவரே தென்றலும் புயலும் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கும் இசை அமைத்தார். கவிஞர் சண்முகப்பிரியா இயற்றிய இப்பாடல்களை முத்தழகு, பேர்டின் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினர். படத்தொகுப்பு அலிமான், கலை – சத்தியன்.

படப்பிடிப்பு திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயம், கடற்கரை, மூதூர்ப்பகுதி போன்ற இடங்களில் நடைபெற்றது.

ராஜேஸ்வரி பிலிம்ஸ், ‘தென்றலும் புயலும்’ திரைப்படம் 12.4.1978இல் இலங்கையில் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது.

1978ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி பரிசு இப்படத்தில் நடித்த செல்வம் பெர்னாண்டோவுக்குக் கிடைத்தது.

இப்படியான ஒரு கலைமுயற்சியில் ஈடுபட்ட டொக்டர் வேதநாயகம் 29-07-93இல் காலமானார். அவர் மறைந்தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவரது பெயர் என்று மறையாது.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

பாடல்: இயற்கைமகள் எழுதும் கவிதையிலே..!

 

http://www.youtube.com/watch?v=TbEVduFzO1I

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply

மிக அருமையான இணைப்பு. இணைப்பிற்கு நன்றி சோழியன். நூலகத்தில் உள்ள இந்த இதழை வாசிக்க வேண்டும். உங்களிடம் ஈழத்துத் திரைப் படப் பாடல்கள் / செய்திகள் இருந்தால் தயவு செய்து இணையுங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73102

 

http://www.yarl.com/forum3/?showtopic=97235

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78115

 

 

 

 

 

Link to comment
Share on other sites

மிக அருமையான இணைப்பு. இணைப்பிற்கு நன்றி சோழியன். நூலகத்தில் உள்ள இந்த இதழை வாசிக்க வேண்டும். உங்களிடம் ஈழத்துத் திரைப் படப் பாடல்கள் / செய்திகள் இருந்தால் தயவு செய்து இணையுங்கள்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73102

 

http://www.yarl.com/forum3/?showtopic=97235

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78115

 

நன்றி தப்பிலி. இணையத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஈழத்துத் திரைப்படப் பாடல்களை தொடர்ந்து இணைக்க முயற்சிக்கிறேன். 

 

பச்சை குத்தி ஊக்கம் அளிக்கும் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!  :D

Link to comment
Share on other sites

‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து….  துணை தேடி வந்தது ஒரு பறவை!!

பாடியவர்: கலாவதி சின்னச்சாமி

வரிகள்: சண்முகப்பிரியா

இசை: திருமலை பத்மநாதன்

 

http://www.youtube.com/watch?v=q6fpxEnuLZE

Link to comment
Share on other sites

‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து….  அரும்பான ஆசை நெஞ்சில்!!

பாடியவர்: V.முத்தழகு

வரிகள்: சண்முகப்பிரியா

இசை: திருமலை பத்மநாதன்

 

http://www.youtube.com/watch?v=hZOToWLRQ8g

Link to comment
Share on other sites

தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து….  சந்திரவதனத்தில் இந்திர நீலப்பூ!!

பாடியவர்: V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி

வரிகள்: சண்முகப்பிரியா

இசை: திருமலை பத்மநாதன்

 

http://www.youtube.com/watch?v=Ads3prqQrB4

Link to comment
Share on other sites

‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து….  அவள்தான் என்னுயிர்க் காதலி!!

பாடியவர்: பேர்டின் லோபஸ்

வரிகள்: சண்முகப்பிரியா

இசை: திருமலை பத்மநாதன்

 

http://www.youtube.com/watch?v=N6JXtviYv-U

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், சோழியன்!

 

அத்தனை பாடல்களையும் கேட்டேன்!

 

ம்ம்ம்....எங்கேயோ போயிருக்க வேண்டியது, ஈழத்துத் திரைப்படப்பயணம்!  :o

 

நேரமிருந்தால், குத்துவிளக்கு, பொன்மணி போன்ற படங்களின் வரலாறுகளையும் பாடல்களையும் கிடைத்தால் இணைத்து விடுங்கள்!

 

நாளைய தலைமுறைக்கு ஒரு ஆவணப்பதிவாக இந்தப் பதிவு அமையட்டும்!

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றிகள், சோழியன்!

 

அத்தனை பாடல்களையும் கேட்டேன்!

 

ம்ம்ம்....எங்கேயோ போயிருக்க வேண்டியது, ஈழத்துத் திரைப்படப்பயணம்!  :o

 

நேரமிருந்தால், குத்துவிளக்கு, பொன்மணி போன்ற படங்களின் வரலாறுகளையும் பாடல்களையும் கிடைத்தால் இணைத்து விடுங்கள்!

 

நாளைய தலைமுறைக்கு ஒரு ஆவணப்பதிவாக இந்தப் பதிவு அமையட்டும்!

 

நன்றி புங்கையூரான்! குத்துவிளக்கு பாடல்களாக கிடைக்கவில்லை… ஆனால் முழுத் திரைப்படமாகக் கிடைத்துள்ளது. பொறுமை இருந்தால் ஆறுதலாகப் பாருங்கள். இன்று வழக்கில் இருந்து அருகிவிட்ட பல யாழ்ப்பான பேச்சுத் தமிழ் சொற்களை இரைமீட்டி மகிழ முடியும்.

 

குத்துவிளக்கும் குறிப்புகளும் கீழே தொடரும்.

Link to comment
Share on other sites

‘குத்துவிளக்கு’ மண்மணம் வீசிய திரைப்படம்
யாழ்ப்பாண நகரின் நவீன நாகரீகத்தை எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு கட்டடங்கள் அங்கு உயர்ந்து நின்றன. ஆறு மாடிகள் கொண்ட வீரசிங்கம் மண்டபம், நவீன சந்தைக் கட்டடம், விளையாட்டரங்கம், தந்தை செல்வா நினைத்தூபி என்பன அவற்றில் சிலவாகும். இத்தனை கட்டடங்களையும் நிர்மாணித்தவர் கட்டக் கலைஞரும் கலை அபிமானியுமான வீ.எஸ். துரைராஜா அவர்களாவர். இவர் நிர்மாணித்த அழகுக்கட்டடங்கள் யாழ்நகரில் மட்டுமன்றி இலங்கையின் அனைத்து நகரங்களிலும் நிமிர்ந்து நிற்கின்றன. 

கட்டடக்கலை, பல்கலைகளுக்கும் தாய்க்கலை என்பார்கள். சித்திரம் சிற்பம் போன்ற பழங்கலைகளுடன் சினிமா என்ற நவீனகலையும் அதனுள் அடங்கும். எனவே, திரைப்படக்கலையிலும் திரு. வீ.எஸ். துரைராஜா ஈடுபாடு கொண்டவராக விளங்கியதில் ஆச்சரியமில்லை.

திரு. துரைராஜாவை நான் ரூபவாஹினியில் பேட்டி கண்டபோது, அவர் சொன்னார். “இலங்கைத் தமிழருக்குத் தனித்துவம் இருக்கிறது. அவர்களின் பேச்சுவழக்கு, பழக்கவழக்கங்கள் வாழ்க்கைமுறைகள் போன்றவை தனித்துவமானவை. இந்த இலங்கைத் தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக் கலைஞர்களைக் கொண்டே இங்கு ஒரு தமிழ்ப்படம் உருவாக்கக்கூடாதா என்று எண்ணினேன்.

இலங்கைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்பவல்லுனர்கள் போன்றோரை ஒன்றிணைந்து ஒரு உன்னதமான தமிழ்ப்படத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணம் என் உள்ளத்தில் நீண்ட நாட்களாகவே நிலை கொண்டிருந்தது. அந்த எண்ணத்தின் உருவம்தான் இந்தக் “குத்து விளக்கு” என்று கூறினார் திரு. வி.எஸ். துரைராஜா.

யாழ்ப்பாண மண்ணுக்குரிய ஒரு கதைக் கருவைக் கொண்ட மூலக்கதையை எழுதிவிட்டார். திரைக்கதை வசனம் எழுதும் ஒருவரையும் இயக்குநர் ஒருவரையும் அவர் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

அது 1971ஆம் ஆண்டு காலப்பகுதி. அப்போது இலங்கையரான பாலுமகேந்திரா இந்தியாவில் திரைப்படம் சம்பந்தமாகப் படித்துவிட்டு இலங்கை வந்தார். அவருடன் தொடர்பு கொண்ட குத்துவிளக்கை இயக்கும் படி கேட்டபொழுது மலையாளப்படமொன்றை இயக்கவேண்டி ஏற்பட்டதால் இந்தியா சென்றுவிட்டார்.

திரைக்கதை வசனங்களை எழுதுவதற்காக சினிமாவில் அனுபவம் பெற்ற எழுத்தாளர் ஈழத்து ரெத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சென்னை யுபீட்டர்ஸ் ஸ்ரூடியோவில் உதவி இயக்குநராகக் கடமையாற்றியவர். பாடல்கள் இயற்றுவதில் திறமை காட்டினார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் குருவாகக்கொண்டு பல பாடல்களை இயற்றினார். ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்ற படத்தில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று இவர் இயற்றிய பாடல் புகழ்பெற்று விளங்கியது. குத்து விளக்கு திரைப்படத்துக்கான பாடல்களையும் இவரே எழுதினார்.

அன்று திரைப்படத்துறையில் பிரபலம் பெற்று விளங்கிய டபிள்யு.எஸ்.மகேந்திரன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அச்சுவேலியைச் சேர்ந்த நமசிவாயம் என்னும் இளைஞன் சிறுவயது முதலே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்தான். ‘பாராவழலு’ என்ற சிங்களப் படத்தில் நடித்தபோது தனது பெயரினை, ‘ஜெயகாந்’ என்று மாற்றிக்கொண்டான். ‘குத்து விளக்கு’க் கதையில் விவசாயக் குடும்பத்தின் மூத்த மகன் ‘சோமு’ முக்கியப் பாத்திரமாகும். அந்தச் சோமு என்ற பாத்திரம் ஜெயகாந்துக்கு வழங்கப்பட்டது.

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பரதநாட்டியத்தில் புகழ்பெற்று விளங்கியவர் செல்வி லீலா நாராயணன். அவர் முகபாவங்களை அழகாகக் காட்டுவார் என்பதால் கதாநாயகியாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இளைஞர் ஆனந்தன் பல மேடை நாடகங்களில் நடித்து அனுபவப்பட்டவர். இவர் கதக்களி நடனத்திலும் தேர்ச்சிபெற்றவர். இவர் கதாநாயகியின் காதலனாகத் தோன்றினார்.

திருமலையில் பிறந்த பி. இந்திராதேவி நாடகத்திலும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர். ‘வெண்சங்கு’ திரைப்படத்தில் நடித்து அனுபவப்பட்டவர். இவருக்குக் கதாநாயகனின் தாயாரான நாகம்மா பாத்திரம் வழங்கப்பட்டது.

எம்.எஸ். இரத்தினம், பேரம்பலம், திருநாவுக்கரசு, நாகேந்திரன், நடராஜன், பரமானந்தன், ஸ்ரீசங்கர் போன்றோர் மேடைநாடக அனுபவ முள்ளவர்கள். இவர்கள் இப்படத்தின் மற்ற நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

யோகா தில்லைநாதன், சாந்திலேகா, தேவிகா, பேபி பத்மா போன்றோர் நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னாளில் ‘மரீக்கார்’ என்று புகழ்பெற்ற எஸ். ராம்தாஸ் முதன் முதலில் நடித்தபடம் ‘குத்துவிளக்குத்தான்’.

1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ‘குத்துவிளக்கு’ ஆரம்பவிழா நடைபெற்றது. கொழும்பு வீ.எஸ்.ரீ. கட்டடத்தின் மேல் மாடியில் வீ.எஸ்.ரீ. பிலிம்ஸ் ஸ்தாபனத்தாரின் ஸ்ரூடியோவில் விழா ஆரம்பமாகியது. பிரபல தென்னிந்திய நட்சத்திரம் சௌகார் ஜானகி கமறாவை முடுக்கி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்ப்பாணப் பகுதிக்கோயில் குளங்களிலும், வயல் வெளிகளிலும், கொழும்பு, கண்டி, மாங்குளம் போன்ற பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்புகள் இடம்பெற்றன.

நல்லூர் முருகன் கோயில், செல்வச் சந்நிதி முருகன் கோயில் ஆகியவற்றின் திருவிழாக் காட்சிகளும் சேர்க்கப்பட்டன.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யலாம். ஆனால், திரைப்பட இயக்குநர்களையோ, எழுத்தாளர், பாடலாசிரியர்களையோ, தொழில்நுட்பக்கலைஞர்களையோ இறக்குமதிசெய்யமுடியாது. அவர்களது சேவைகளை எமது திரைப்படங்கள் பெறமுடியாது. அந்த அளவுக்கு இவைகளை இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்தது. இதன் விளைவால் ‘குத்துவிளக்கு’ நூற்றுக்கு நூறு வீதம் இலங்கைத் தயாரிப்பாக விளங்கியது.

குத்துவிளக்கு திரைப்படத்துக்காக மண்ணின் மணத்தை விளக்கும் பாடல் ஒன்றுக்கான கருவை திரு. துரைராஜா நினைத்து வைத்திருந்தார். இவரது கருத்தை வைத்து ஈழத்து ரெத்தினம் அழகான பாடல் ஒன்றை எழுதினார். இப்பாடல் பலராலும் பாராட்டப்பட்டது.

ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா

கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அழுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா

ஈழத்து கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன்மடியிலமம்மா-யாழுக்கு நூல்வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா

பாட்டிற்கு பொருள்சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா

புத்தகமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா

பாடல் வரிகளிடையே பெரியார்கள். கோயில்கள், நதிகள் போன்ற பெயர்கள் வந்தன. அதைப்போலவே படத்தில் அவற்றின் உருவங்கள் தோன்றின. மண்ணின் மணத்தைச் சொல்லி தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் இந்தப்பாடலின் ஆரம்பத்தில் ‘ஈழம்’ என்ற சொல் இருப்பதால், வானொலியில் ஒலிபரப்பத் தடைவிதிக்கப்பட்டது.

இசை அமைப்பை ஆர். முத்துசாமி ஏற்றுக்கொண்டார். சங்கீதபூசணம் குலசீலநாதன், மீனா மகாதேவன் ஆகியோர் பாடினர். “ஆதிசிவன் பெற்ற” என்ற பாடலை இசை அமைப்பாளரே பாடினார்.

‘கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாட்டியத்தில் அனுபவம் பெற்றவர்கள். ஆனால், இப்படத்தில் ஒரு நாட்டியந்தானும் இடம்பெறவில்லையே’ ஏன் என்று திரு. துரைராஜாவிடம் கேட்டேன்.

‘இப்படத்தைக் கலைஅம்சங்களுடன் சத்தியஜித்ரேயின் பாணியில், தரமான படைப்பாக்குவதே எனது நோக்கமாக இருந்தது. அதனால், அநாவசியமான நடனங்களையும், தெருச்சண்டைகளையும் புகுத்திப் படத்தின் தரத்தைக் குறைக்க விரும்பவில்லை’ என்று பதில் சொன்னார் தயாரிப்பாளர்.

நல்ல விளம்பரத்தின்பின் ‘குத்துவிளக்கு’ 24.02.1972இல் திரைக்கு வந்தது. மத்திய கொழும்பு (செல்லமஹால்), தென்கொழும்பு (ஈரோஸ்), யாழ்ப்பாணம் (புதிய வின்ஸர்), திருகோணமலை (நெல்சன்), மட்டக்களப்பு (இம்பீரியஸ்), பதுளை(கிங்ஸ்) ஆகிய ஆறு இடங்களில் திரையிடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் புதிய வின்சர் தியேட்டரில் ‘குத்துவிளக்கு’ படத்தின் வெளியீட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல்நாள் படம் பார்க்க வந்திருந்த ‘ஏகாம்பரம்’ என்ற விவசாயியே குத்துவிளக்கேற்றி முதற்படக் காட்சியை ஆரம்பித்து வைத்தார். இந்த ஏற்பாட்டைத் தயாரிப்பாளர் செய்திருந்தார். ‘இந்த விழாவை ஆரம்பிப்பதற்கு நகர மேயர் அல்லது அமைச்சர்கள் போன்றோரை ஏன் அழைக்கவில்லை’ என்று தயாரிப்பாளரிடம் கேட்டபோது.

‘இத்திரைப்படத்தின் கதை ஒரு விவசாயியின் கதையாகும். எனவே, இத்திரைப்பட விழாவின் ஆரம்பத்தை ஒரு விவசாயியின் மூலம் ஆரம்பித்து வைக்க விரும்பினேன்’ என்று கூறினார்.

1975ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில் வர்த்தகப் பிரிவில் ‘குத்துவிளக்கும்’ திரையிடப்பட்டது. இப்படம் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் பல பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்நீச்சல்போட்டு தனித்து நின்று ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்தவர் என்ற ரீதியில் திரு.வீ.எஸ். துரைராஜா அவர்களின் பெயரும் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடவேண்டிய பெயராகும்.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

http://www.youtube.com/watch?v=1rEyMXWIFtg

Link to comment
Share on other sites

நன்றி இணைப்பிற்கு சோழியன் அண்ணா

 

இணைந்திருங்கள்! நன்றி!!  :D

Link to comment
Share on other sites

‘அநுராகம்’
ஒரு கதை, இரண்டு மொழிகள்

1978ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்க 4 ½ லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. இப்படிப் போட்ட முதலையும் மீண்டும் பெறுவதற்கு அப்படம் 10 லட்சம் ரூபாவை வசூலாகப் பெறவேண்டும். ஆனால், அதுவரை திரைக்கு வந்த இலங்கைத் தமிழ்ப் படங்களில், ‘கோமாளிகள்’, ‘நான் உங்கள் தோழன்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே 8 லட்சம் ரூபாவை வசூலாகப் பெற்றன. அதனால், தயாரிப்பாளர்கள் தமிழ்ப்படம் தயாரிக்கப் பின் வாங்கினார்கள்.

இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய ஒரு வழியைச் சொன்னார் ஒரு தமிழ் நடிகர். ஒரே நேரத்தில் ஒரே கதை: ஒரே தொழில் நுட்பக்கலைஞர்கள் ஆனாலும் நடிகர்களும் பாடகர்களும் வேறு வேறு, அதாவது ஒரே கதையை தமிழிலும் சிங்களத்திலும் படங்களாகத் தயாரிக்கும்போது, தமிழ்ப்படத்தின் செலவில் 2 லட்சம் ரூபா அளவு குறைகிறது. அப்படியே தமிழ்ப்படம் தோல்வி அடைந்தாலும், சிங்களப்பட வசூல் அந்தத் தமிழ்ப்பட, நஷ்டத்தை ஈடுசெய்யும்.

இந்த மாற்று வழியைசல் சொன்ன தமிழ் நடிகர் தான், மலையகத்தில் கொஸ்லந்தையில் நாராயணசாமி, அமிர்தம்மாள் தம்பதிகளின் இரண்டாவது மகன் ‘சமுதாயம்’ திரைப்படத்தின் கதாநாயகன், பின்னாளில் குணச்சித்திர வேடங்களில் தோன்றிய அமரர் எஸ்.என்.தனரெத்தினம்.

இந்த மாற்று வழியைப் பிரபல சிங்களப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஒரு சிங்களவர் ஏற்றுக்கொண்டார். அவர்தான் பிரபல இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் தம்பியான யசபாலித்த நாணயக்காரா.

இந்த மாற்று வழியில் யசபாலித்த ஒரு தமிழ்ப்படத்தையும் ஒரு சிங்களப் படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிக்கத் தொடங்கினார்.

சிங்களப் படத்தின் பெயர் ‘கீதிகா’ தமிழ்ப்படத்தின் பெயர் ‘அநுராகம்’ தமிழ்ப்படத்தின் கதாநாயகன் என். சிவராம்’ கதாநாயகி சந்திரகலா.

சிங்களப் படத்தின் கதாநாயகன் விஜயகுமாரணதுங்க, கதாநாயகி மாலினி பொன்சேகா.

தமிழ்ப்படத்துக்கான கதை வசனத்தையும் உதவி இயக்குநர் பொறுப்பையும் பி.எஸ். நாகலிங்கம் ஏற்றுக்கொண்டார்.

ஜே. யோகராஜா ஒளிப்பதிவு செய்த மூன்றாவது தமிழ்ப்படம் இது. மற்றும் நடிகர்களாக எஸ்.என். தனரெத்தினம், எஸ். விஸ்வனாதராஜா, செல்வம் பெர்னாண்டோ, டொன்பொஸ்கோ ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். இரண்டுமொழிகளிலும் அனோஜா, லிலியன், பி.எஸ். பெரேரா, ரஷி ஆகியோரும் நடித்தனர்.

இப்படத்துக்கு, சரத் தசனாயக்க இசை அமைத்தார். ‘ஈழத்து ரெத்தினம்’ இயற்றிய பாடல்களை முத்தழகுவும் கலாவதியும் பாடினார்கள். ஒலிப்பதிவு-ஈ.டி. சென்யோன்ஸ், ஒப்பனை-பெனாட், படத்தொகுப்பு-துரை பவானந்தன், தயாரிப்பு நிர்வாகம் கே. குமார்.

படம் 19 நாட்களுக்குள் தயாரிக்கப்பட்டுவிட்டது. அநுராகம் 1978ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட 6வது தமிழ்ப்படமாகும். 27.10.1978இல் தீபாவளி வெளியீடாக இப்படம் ஆறு ஊர்களில் வெளியிடப்பட்டது.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

உன்னை வரைந்தேனே உள்ளமதிலே!!

பாடியவர்: V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி

வரிகள்: ஈழத்து இரத்தினம்

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=em7to9GoLNs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஈழம்" என்ற சொல்லையே..... கேட்க விரும்பாதாவர்கள்,
ஈழத்து திரைப்படப் பாடலில், ஆர்வம் காட்டுவது....
சிந்திக்கத் தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

‘அநுராகம்’ திரைப்படத்தில் இருந்து…. எண்ணங்களாலே இறைவன்தானே!!

பாடியவர்: V.முத்தழகு

வரிகள்: ஈழத்து இரத்தினம்

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=8a6a9qAwCzk

Link to comment
Share on other sites

‘அநுராகம்’ திரைப்படத்தில் இருந்து…. அன்பில் மலர்ந்த சொந்தம்!!

பாடியவர்: கலாவதி சின்னச்சாமி

வரிகள்: ஈழத்து இரத்தினம்

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=LW9HJJFfgpY

Link to comment
Share on other sites

‘அநுராகம்’ திரைப்படத்தில் இருந்து…. உலகமே என்விழியில் புதுமையாய் ஆனதோ?

பாடியவர்: கலாவதி சின்னச்சாமி

வரிகள்: ஈழத்து இரத்தினம்

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=4NpsrXhJGpY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்றலும் புயலும் ..முதல் அனுராகம் வரை படித்தும் பாடல்களை கேட்டும் மகிழ்ந்தேன்

தொடருங்கள் ,,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

 

ஏமாளிகள் கதை சுருக்கத்திர்க்கு காத்திருக்கின்றேன் ,பாடல்களுக்காகவும்

 

 

நன்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

‘அநுராகம்’ திரைப்படத்தில் இருந்து…. எண்ணங்களாலே இறைவன்தானே!!

பாடியவர்: V.முத்தழகு

வரிகள்: ஈழத்து இரத்தினம்

இசை: சரத் தசாநாயக்க

 

http://www.youtube.com/watch?v=8a6a9qAwCzk

 

 

நல்ல பாட்டு. பாடகரின் குரல் எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது.

Link to comment
Share on other sites

தென்றலும் புயலும் ..முதல் அனுராகம் வரை படித்தும் பாடல்களை கேட்டும் மகிழ்ந்தேன்

தொடருங்கள் ,,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்

 

ஏமாளிகள் கதை சுருக்கத்திர்க்கு காத்திருக்கின்றேன் ,பாடல்களுக்காகவும்

 

 

நன்றி

 

நன்றி. இணைந்திருங்கள். தங்களின் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறும்.  :D

Link to comment
Share on other sites

நல்ல பாட்டு. பாடகரின் குரல் எனக்கு நன்றாகப் பிடித்திருக்கிறது.

 

ஆம்.. 70களில் இலங்கையின் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஈழத்து மெல்லிசைப் பாடல்களிலும் முன்னணியில் திகழ்ந்தவர்கள் V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி ஆகியோர் ஆவார்கள். 

Link to comment
Share on other sites

‘கோமாளிகள்’
 

வானொலி நாடகம் திரைப்படமாக மாறியது
1974ஆம் ஆண்டு பொரளை டி.எஸ். சேனனாயக்கா வித்தியாலய மண்டபத்தில் அரைமணிநேர நகைச்சுவை நாடகமொன்றை மேடை ஏற்றினார் ஓர் இளைஞர். அதனைத் தொடர்ந்து பல வானொலி நாடகங்களை எழுதி நடித்தார், மேடை ஏற்றினார்.

இந்தக் கலைஞரிடம், மக்கள் வங்கியின் வானொலி விளம்பரத்துக்காக நாடகம் ஒன்றை எழுதித் தரும்படி கேட்டார் சில்லையூர் செல்வராஜன்.

இந்த இளைஞர் அரைமணிநேர மேடை நாடகமாக எழுதிய அந்த நாடகத்தை 90 வாரங்கள் ஒலிபரப்பக் கூடியதாக நீட்டி எழுதிக் கொடுத்தார். அப்படிப் பிரபலமாக 90 வாரங்கள் ஒலிபரப்பான நாடகத்தின் பெயர் தான் கோமாளிகள் கும்மாளம். இந்த நாடகத்தைச் சிறப்புற எழுதி பிரதான பாத்திரத்தில் நடித்த அந்த இளைஞர்தான் எஸ். ராமதாஸ்.

கலை அபிமானமுள்ள ஒரு முஸ்லிம் வர்த்தகரும் அவரது நண்பர் ஏபிரகாமும் இந்த ‘கோமாளிகள் கும்மாளம்’ நாடகத்தை வாராவாரம் வானொலியில் கேட்டு வந்தார்கள். இந்த நாடகத்தைத் திரைப்படமாக உருவாக்கலாமா? என்ற எண்ணம் அந்த வர்த்தகரிடம் உருவாகியது. அவர் அந்த எண்ணத்தை நண்பர் ஏபிரகாமிடம் சொல்ல, ஏபிரகாம் ராம்தாஸிடம் கேட்க அவர் ஓம் என்று சொல்ல படத் தயாரிப்பு ஆரம்பமாகியது. படத்தைத் தயாரிக்க விரும்பிய அந்த வர்த்தகரின் பெயர்தான் எம். முஹமட்.

ராம்தாஸ் படத்தின் பிரதான பாத்திரமான மரிக்காராக நடிப்பதுடன் கதை வசனம், உதவி டைரக்ஷன் போன்ற பல பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார்.

எஸ். ராமநாதன் அப்பொழுது சிங்களத் திரை உலகில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கினார். புதியகாற்று திரைப்படத்தைப் பக்குவமாக நெறியாண்ட வெற்றிக்களிப்பில் இருந்தார். அவரே இப்படத்தின் நெறியாளராகவும் படத்தொகுப்பாளராகவும் தெரிவுசெய்ப்பட்டார்.

ஊர்காவற்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் பலகாலம் அனுபவம் பெற்றிருந்தார். ‘தமயந்தி’ என்ற சிங்களப் படத்தின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இவரையே கோமாளிகள் படத்தின் ஒளிப்பதிவாளராகத் தெரிவு செய்தார்கள். அவர்தான் ஜே.ஜே. யோகராஜா, எஸ். ராம்தாஸ், மரிக்கார் என்ற பிரதான பாத்திரத்தில் நடித்தார். ‘புரோக்கர் கந்தையா’ என்ற நாடகத்தில் புரோக்கர் கந்தையாவாக நடித்தவர் ரீ. ராஜகோபால், இவர் இப்படத்தில் அப்புக்குட்டி என்ற பாத்திரத்தை ஏற்றார். சுமதி என்ற நாடகத்தில் பிறின்ஸிபல் சாமிநாதனாக நடித்துப் புகழ்பெற்றவர் எஸ். செல்வசேகரன். இவருக்கு இப்படத்தில் ‘உபாலி’ என்ற பாத்திரம் வழங்கப்பட்டது.

இலங்கை வானொலியில் பிரபலமான அறிவிப்பாளராக விளங்குபவர்தான் பி.எச். அப்துல் ஹமீத். இவர் இப்படத்தில் ஐயராக நடித்தார்.

பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராஜனுக்கு நீண்ட காலமாகவே திரைப்படத்துறையுடன் நெருங்கிய தொடர்புண்டு. ‘தணியாத தாகம்’ திரைப்படச் சுவடியை எழுதியவர். பல விவரணத் திரைப்படங்களை உருவாக்கியவர். ‘கமம்’, ‘தங்கமே தங்கம்’, ‘பாதைதெரியும் பார்’ என்பவை அவற்றுட் சில. ‘கமம்’ புதுடில்லி பேர்லின் திரைப்பட விழாக்களில் சான்றிதழ்களைப் பெற்றது.

திருமதி. கமலினி செல்வராஜன் இலக்கியத் துறையில் ஈடுபாடுள்ளவர். கலைத்துறையில் புகழ்பெற்றவர். இந்தக் கலைத் தம்பதிகள் இப்படத்தில் காதல் ஜோடியாக நடித்தார்கள்.

வானொலி நடிகைகளில் முதன்மையானவர் சுப்புலட்சுமி காசிநாதன். இவர் இப்படத்தில் செல்லமணியாகப் பாத்திரமேற்றார். பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற ஆனந்தராணி, ஐயரின் மனைவியாக நடித்தார். தோட்டக்காரி படத்தில் கதாநாயகிக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் செல்வம் பெர்னாண்டோ. இவர் கோமாளிகள் படத்தில் கதாநாயகியின் தாயாக நடித்தார்.

பல நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்ற கே.ஏ. ஜவாஹர் புதியகாற்று படத்தில் முதன் முதலில் வில்லனாக அறிமுகமானார். இவர் கோமாளிகள் படத்தில் தணிகாசலம் பாத்திரத்தை ஏற்றார்.

கணீர் என்ற குரலுடைய சந்திரசேகரனுக்கு இதுதான் முதற்படம். முஸ்தபா வில்லனாகத் தோன்றினார். இவர்களுடன் செல்வராணி, ரவிமகேந்திரா, எஸ். ஏபிரகாம், முபாரக் போன்றோர் நடிகர்களாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான இசைக் கோஷ்டியின் தலைவர்தான் கண்ணன். கொழும்பில் பிரபல்யமான திறீஸ்டார்ஸ், சுபர்ஸ்ரார் குழுவினரின் சுப்பர் அன்ஸ்டார் கலைஞர்தான் நேசன் தியாகராஜா.

இந்தக் கண்ணனும் நேசமும் இணைந்து இப்படத்துக்கு இசை அமைத்தார்கள். சில்லையூர் செல்வராஜன், சாது, பாவுஸல் அமீர் ஆகியோர் பாடல்களை இயற்றினர். அமரர் மொஹிதீன் பெக் இப்படத்திலேயே முதன் முதலாகத் தமிழ் சினிமாப் பாட்டுப் பாடினார். முத்தழகு, கலாவதி, சுஜாதா, எஸ். ராம்தாஸ் ஆகியோரும் பாடல்களைப் பாடினார்கள்.

ஒலிப்பதிவை சாரங்கராஜா, பென்ஸ் ஆகியோர் செய்தார்கள்.

கோமாளிகள் படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வத்தளை சுஜீவா ஹோட்டலில் படமாக்கப்பட்டன.

அமர்ஜோதி மூவீஸின், ‘கோமாளிகள்’ 45 நாட்களில் தயாரித்து முடிக்கப்பட்டது. தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் புதிய தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் வசதி செய்துகொடுத்தது. கோமாளிகள் 22-10-1976இல் ஆறு இடங்களில் முதன் முதலாகத் திரையிடப்பட்டது.

ஒரு பணக்காரருக்குப் பெரிய மாளிகை ஒன்று இருக்கிறது. அதில் சிங்களம், தமிழ், முஸ்லீம் எனப் பல இனத்தவர் வாடகைக்கு இருக்கின்றனர். இவர்கள் அம்மாளிகை தமக்குச் சொந்தமாக வேண்டுமெனப் பணக்காரருடன் வெகு அன்பாக நடந்துகொள்கிறார்கள். இவற்றை நகைச்சுவையுடன் விளக்குவதே இப்படத்தின் கதையாகும்.

 

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

 

‘கோமாளிகள்’ திரைப்படத்தில் இருந்து….  அடி என்னடி சித்தீபி..!!

பாடியவர்: எஸ்.ராமதாஸ்

 

இசை: கண்ணன், நேசம்

 

ஆசையில் விழுந்த மனிதன் இங்கே.. (இரண்டு பாடல்களும் ஒரே காணொளியில் உள்ளன.)

பாடியவர்: மொஹிதீன் பெக்

இசை: கண்ணன், நேசம்

 

https://www.youtube.com/watch?v=AaFKgHk39wU

Link to comment
Share on other sites

'அனுராகம்'  நல்ல தரமான படம். இனிமையான பாடல்கள் அத்துடன் சிறிராமீன் நடிப்பும் நன்றாக இருந்தது.

 

சிறிமாவின் ஆட்சிக் காலத்தில் உள்ளூர் பொருட்களின் தயாரிப்பு அதிகரித்தது மாத்திரம் அல்லாமல் உள்ளூர் கலைகளும் வளர்ச்சி கண்டன. ஈழத்து தமிழ்த் திரைப் படம் திரையிடப்படும் காலங்களில், புதிய தென் இந்திய தமிழ் திரைப் படங்களை வெளியிட மாட்டார்கள்.  ஈழத்து சினிமாவை திரையிட்ட சினிமா அரங்கத்திற்கு அடுத்ததாக வசூலில் அதிகமாக ஓடும் ஒரு தென் இந்திய சினிமாவை திரையிடக் கொடுப்பார்கள்.

 

மனோ கணேசனின் தந்தையார் வி பி கணேசனின் 'புதிய காற்று' வர்த்தக ரீதியாக ஓரளவு வெற்றி  அளித்து ஈழத்துத் திரைக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது. நான் உங்கள் தோழன், கோமாளிகள், வாடைக் க்காற்று, அனுராகம் ஆகிய திரைப் படங்கள் ஓரளவு வர்த்தக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள் என நினைக்கிறேன்.     

Link to comment
Share on other sites

கோமாளிகள்,,பற்றிய தகவல்களுக்கு நன்றி... :icon_mrgreen:

 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும். இணைந்திருங்கள்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.