• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிழலி

சனல் 4 வெளியிட்ட 'இசைப்பிரியா உயிருடன் கைதாகும்' காணொளி

Recommended Posts

இன்று மதியம் சனல் 4 வெளியிட்ட இசைப்பிரியா வை உயிருடன் கைது செய்யும் காட்சிகளைக் கொண்ட காணொளி.

 

 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் மனதுக்குக் கஷ்ட்டமாக இருக்கும் ஒரு சாட்சியத்தை இங்கே இணைத்திருக்கிறீர்கள் நிழலி. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சாட்சியங்களுக்குமேல் சாட்சியங்கள் வந்துகொண்டிருக்கின்றன ஆனால் எவருமே எதையுமே செய்யப்போவதில்லை. எங்களின் ரத்தங்களோடும், பிணக்குவியகளூடும் தங்களது அரசியலைச் செய்யத்தான் எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது. 

 

இசைப்ப்பிரியாவின் இந்த அகோர முடிவிற்கு நானும் ஒரு விதத்தில் பங்காளியானதையிட்டு மிகவும் வருந்துகிறேன்.

 

தங்கையே என்னை மன்னித்துவிடு. எல்லாம் தெரிந்திருந்தும் எம்மால் உன்னைக் காப்பற்ற முடியவில்லையே. நாங்கள் இருக்கிறோம் என்று நம்பியல்லவா அந்த அரக்கர்களிடம் மடிந்துபோனாய் ?? என்னை மன்னித்துவிடு !

Share this post


Link to post
Share on other sites

இசைப்பிரியா மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட
ஈழத்தமிழர்களின் நிலைக்கு சிங்களம் என்ற இனவெறி
பொறுப்புக் கூறும் நாள் வரும்
 

Share this post


Link to post
Share on other sites

இசைப்பிரியா மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட

ஈழத்தமிழர்களின் நிலைக்கு சிங்களம் என்ற இனவெறி

பொறுப்புக் கூறும் நாள் வரும்

 

நிட்சயமாக வராது..... நமது தற்போதைய அரசியல் தலைவர்கள் (தலைவர்கள் என்று சொல்லும் போது எனது நா குசுகின்றது) இருக்கும் வரை

Share this post


Link to post
Share on other sites

கொடுமை...

Share this post


Link to post
Share on other sites

தெரிந்து கொள்ள் முயன்ற போது வீடியோவை இணைத்தற்கு நன்றி நிழலி.

 

இறந்தாலும் யானை ஆயிரம் பொன். இந்த போராளிகளின் இறந்த ஆவி கூட இலங்கை அரகர்களை நிம்மதியாக் தூங்க விடாது.

 

இன்று வீடியோ அதிகார பூர்வமில்லாத முறையில் வெளிவிடப்பட்டிருக்கு. அரசு இதை இன்றே மறுப்பதா அல்லது ஞாயிற்றுக்கிழமை மறுப்பதா என்று இன்றிரவு சூழ்சியில் இறங்கியிருக்கும். 

 

ஊடகவியலாரின் மின்னல் அஞ்சல்களை உளவு  பார்த்து இன்று பகல் யக்குலின் பார்க்கை இலங்கை நாடு கடத்த இருந்தது. இந்த மாதிரி கலோம் மக்ரே திருப்பி படிப்பிப்பார் என்றதை எள்ளவும் கனவு கண்டிருக்காது. 

 

காச்சு சாராயம் முடிஞ்சு போனால் பகிஸ்தானில் இருந்து கடத்தி வந்ததை அடிக்கட்டும். 

Share this post


Link to post
Share on other sites

என்ன ஒரு கோரம்.. இப்படி ஒரு முடிவு கிட்டும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்..

Share this post


Link to post
Share on other sites
தங்கையே என்னால் தாங்க முடியவில்லை , அந்த கொடூரர்களின் கைகளில் நீ மாட்டிய கணம் முதல் இறக்கும் வரை பட்ட வேதனைகளை .
 
இறைவா நீ இருப்பது உண்மையா . 
 
என் தங்கையே உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் .
 
அண்ணா  இந்த கொடுமைகளுக்கு எப்ப தண்டனை கொடுப்பிர்கள் ?

Share this post


Link to post
Share on other sites

 

 

உயிரோடு பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட இசைப்பிரியா – சனல் 4 வெளியிட்ட புதிய போர்க்குற்ற ஆதாரம்

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்ட, தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான, இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.isai-priya.jpg

போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்காப் படையினரால் இசைப்பிரியா கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அவர் சிறிலங்காப் படையினரால் உயிரோடு பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் காணொலி ஆதாரத்தை சனல் 4 நேற்று வெளியிட்டுள்ளது.

கடற்கரை ஒன்றில், மேலாடையின்றி நீருக்குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை, சிறிலங்காப் படையினர், வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.

ஆறு சிறிலங்காப் படையினர் அவரைப் பிடித்து வருவதும், அப்போது அவர்கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறுவதும், அதற்கு அவர் ஐயோ அது நானில்லை என்று அழுவதும் காட்சியில் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் இசைப்பிரியா சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலையிலும், துணி அகற்றப்பட்ட நிலையிலும், இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொமன்வெல்த் மாநாட்டை நடத்த சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வரும் நிலையில், இந்த புதிய போர்க்குற்ற ஆதாரம் வெளியாகியுள்ளது.

http://www.eelamview.com/2013/10/31/isaipiriya-killed/

 

Share this post


Link to post
Share on other sites

இசையச் சிதைத்தவர்களோ அன்றேல் அதற்கு உத்தரவிட்டவர்களோ இல்லையே சிங்களத் தலைமையோ கேவலங்கெட்டவர்கள் இல்லை. அவர்களது கரங்களைக் கைகுலுக்குகிறார்களே அவர்கள்தான் கேவலம்கெட்டவர்கள். விக்கு சம்பந்தன் சுமந்திரன் உட்பட.

Share this post


Link to post
Share on other sites

எம் மண்ணை நேசித்த சகோதரியே... அந்த மண்ணிலேயே, உயிரை விட்டு விட்டாயே.....
போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படும் வரை... ஒவ்வொரு தமிழ் அமைப்புகளும், தமது செயற்பாடுகளை... தீவிரப் படுத்த வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

முள்ளிவாய்க்காலில் முடிந்து போனவர்களே! ராட்சதர்கள் உங்களைக் குத்திக் குதறி அழித்துவிட்டார்கள். மறுபடியும் உங்களை அவர்களால் அழிக்க முடியாது. ஆனால் நாங்கள் அழிகிறோம். உங்களை எண்ணும் போதெல்லாம், உங்கள் அவலங்களைப் பார்க்கும் போதெல்லாம் அழிகிறோம். எங்கள் சாவுவரை இது தொடரும். சித்திரவதைப்படுபவன் அந்தச் சித்திரவதையைச் செய்பவனிடம் இருந்து இடைக்கிடை நீரும் ஆகாரமும் பெறுவதுபோல் நாங்களும் ஏதோ பெற்று வாழ்கிறோம். உங்கள் தியாகங்கள் வீண்போகாது என்ற நம்பிக்கை ஒன்றே எங்கள் வாழ்கையை நகர்த்துகிறது. உங்கள் அனைவரின் ஆத்மாக்களும் சாந்தி அடையட்டும்.

Share this post


Link to post
Share on other sites

என்னத்தை சொல்ல....

 

இவ்வளவு நடந்தும் அடுத்தவன் கண்டுகொள்ளவில்லையே என்பதை விட எங்கட இனமே கண்டுகொள்ளாமல் இருப்பதை என்னவென்று சொல்வது... :unsure: 

 

ஆரம்பம் படத்துக்கு ரிக்கற் புக் பண்ணுறதில நாங்க ஒரே பிசி...

கந்தசட்டி விரதத்தால வேலை முடிஞ்சு கோயிலுக்கு ஓடுறதில பிசி...

தீபாவளி கொண்டாட்டத்துக்கு தயாராகிறதில பிசியோ பிசி...

குத்தாட்ட நடனப்போட்டியளில பயங்கர பிசி...

 

இப்படியொரு வீடியோவை போட்டா மட்டும் எங்களுக்கு சூடு சொறனை வந்திடுமா என்ன? லட்சக்கணக்கில கொல்லப்பட்ட போது வராதது இப்ப எங்கயிருந்தய்யா வரப்போகுது?

 

இசைப்பிரியா உயிர் பிரியும்வரை இருந்த அந்த சில நிமிடங்களிற்காக மட்டுமே வருந்துகின்றேன். உடலை விட்டு உயிர் பிரிந்து இன்று அவள் தான் நேசித்தவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பாள். உயிருடன் இருந்திருந்தால் எம் இனம் தினமும் அவளை கொன்றிருக்கும். சொறணைகெட்ட இனம்!  :( 

 

Share this post


Link to post
Share on other sites

இந்த அரக்கர்களுடன் இப்படி இணக்க அரசியல் செய்வது?????இன்னும் இந்த உலகம் சிறிலங்காவை இனப்படுகொலைநாடு என்று அறிவிக்காது மௌம் சாதிப்பது ஏன்.தங்கையே உனக்கு என் வீரவணக்கம்!!!!!!!!

Share this post


Link to post
Share on other sites

இவர் ஒரு கரும்புலியாகி இருந்தால்... அதனை தமக்கு ஒவ்வாத போர் வடிவம் அல்லது தம்மால் எதிர்கொள்ளச் சிரமமான போர் வடிவம் என்று பயங்கரவாதம் ஆக்குவோர்.. இன்று இந்தச் சகோதரியின் மரணத்திற்கு படுகொலைக்கு அளிக்கும் முக்கியத்துவம் என்பது மெளனம். இந்தக் கேடு கெட்ட அதிகாரமும் வல்லாதிக்க திமிரும் கொண்ட மனித உலகத்தையே பூண்டோடு அழிக்கனும். அப்ப தான் இந்த உலகில் மனிதம் வாழ முடியும். :(:rolleyes:

Share this post


Link to post
Share on other sites

இராணுவத்தினரிடம் உயிருடன் பிடிபடுவது மிகவும் கொடுமை. பார்க்கும் போது இதயம் வலிக்கிறது. :( இவர் மற்றும் இவர் போல் கொல்லப்பட்ட ஏனைய உயிர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். இனி ஒரு காலத்தில் நீதி கிடைத்தால் கூட அந்த நேரம் இவர்கள் பட்ட வலி தீராது. :(

Share this post


Link to post
Share on other sites

கூத்தாடிகளையும், தெரு பொறுக்கிகளையும் தலைவனாக ஏற்று கொள்ளும் இந்த கேவலம் கெட்ட இனத்தில் பிறந்து விட்டோமடி
என் தாயே... 

மன்னித்து விடு...

Share this post


Link to post
Share on other sites

அதிர்ச்சியாக இருக்கிறது!

Share this post


Link to post
Share on other sites

இதையும் பார்த்து கொண்டு ஒன்பது கோடி தமிழரும் மானம் கேட்டு ,தலை குனிந்து நடை பிணமாக திரிகிறோம் .இந்த முள்ளிய வாய்க்கள் இன படுகொலை பேரவலம் தமிழ் இனத்தால் மறக்க படாத ஒன்று .இதற்க்கு மருந்து கிடையாது .ஒரே ஒரு மருந்து இந்த பேரவலத்தை உருவாக்கிய எதிரி சிங்கவலனுக்கே முள்ளிய வாய்க்கள் பேரவலத்தை உருவாக்கவது .அப்பதான் எங்கள் வீரர்களின் ஆத்மா சந்தியடையும் 

Share this post


Link to post
Share on other sites

தங்கையே என்னை மன்னித்துவிடு

 

தங்கையே என்னால் வேதனைகளை தாங்க  முடியவில்லை 

Share this post


Link to post
Share on other sites

பொய்களும், புனைகதைகளும்,

பூத்துக்குலுங்கும் உலகமிது!

 

கண்ணன் முதற்கொண்டு,

காந்தியின் தேசம் வரை,

அம்மணமாகிப் போய்,

உன் காலடியில் கிடக்கின்றன!

 

மரணத்தின் பின்னும் கூட,

வாழ்கின்ற தேவதையே!

 

நந்திக்கடலோரம் நீ,

சிந்திய கண்ணீர்த் துளிகளே,

சிங்களத்தின் விதியை எழுதட்டும்! :icon_mrgreen:

 

Share this post


Link to post
Share on other sites

 

எத்தனை போர்க்குற்ற ஆதாரங்கள் வெளிவிட்டாலும் ஓரிரு நாள் ஊடகங்கள் முதல் சமூக வலைத்தளங்கள் வரை பேசு பொருளாய் இருப்பதோடு சரி..! பக்தர்கள்,பூசாரிகள், மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வரை சித்தாந்தங்களைச் செப்புவதும், வகுப்பெடுப்பதுமாய் ....

தொடர்கதை தான்......!!!

#யாரைச்_சொல்லி_நோவேன்??

CCeqS_QdeCm.pngfeeling sad.

Share this post


Link to post
Share on other sites

செங்கொடி சொல்லிருப்பது போல எங்களில் பலர் மாரடித்து முடிய தீபாவ்ழி, கந்தசட்டி, பவிசுக்கு இரண்டு மூன்று மாவீரர் தினம் என்று போய்த்தான் முடிப்பார்கள். ஆனால் மக்ரே போன்றவர்கள் இவற்றை எளிதில் போக விடப்போவத்திலை. மாவீரர்களின் குருதி இவர்களில்தான் ஓடுகிறது

 

மாவீரர்களின் ஆவிகளை தன்னும் அழைத்து வந்து தொடங்கிய கருமம் முடிப்பார்கள் போலிருக்கு. ஜெயசுக்குரு போர் மாதிரியே விட்டுக்கொடுக்கதாயாராக இல்லாமல் வெற்றி வரும் வரை சர்வதேசங்களின் மனங்களை மாற்றுவதுதான் என்று முடிவாக இருக்கிறார்கள். பொது நலவாயத்தை இனி திருப்ப முடியாவிட்டாலும் அவர்கள் இப்போதே ஐ.நா அமர்வுகளை சேர்த்தும் சிந்திக்கிறார்கள் போலிருக்கு.

 

இலங்கை நேற்று யக்குலின் பார்க்கை கைது செய்து நாடுகடத்தியது. அவர் உதவிக்கு பலநாட்டு ஊடகவியலாருக்கு உதவிக்கு அழைப்பு விடுத்தார். பலர் பல வகைகளில் இலங்கையை கவனித்திருப்பார்கள். மக்ரே இசைபிரியா என்ற ஊடகவியலாருக்கு இலங்கையில் நடந்தவற்றை வெளியிட்டிருக்கிறார். 

 

2009 ஆண்டுக்கு பிறகு இராஜதந்திர போரை கையில் எடுத்த பின்னர் அதை எத்தனை தமிழ் கோமாளிகள் இடையில் விட்டுவிட்டு ஓடினாலும், ஒழுங்கான பிரச்சாரம் மூலம் சர்வதேசத்தை ஒத்துக்கொள்ள வைப்பதில் மக்ரே இசைபிரியா போன பாதையில் போய் வெற்றி பெற்றே தீருவார். கதிர்காமர் தமிழருக்காக விரித்த வலையில் தமிழர் விழ முதல் தானே தான் விழுந்தார். இன்று அந்த வலையை, சம்பந்தர், விக்கினேஸ்வரன், இமானுவல் அடிகளார், உருத்திரா இவர்களில் யாருக்கு தன்னும் அறுத்து தமிழரை காப்பாற்ற முடியுமோ தெரியாது. ஆனால் மக்ரே தனது பாதையில் கணிசமான முன்னேற்றம் கண்டுவிட்டார். 

 

அவரின் இந்த கடமைகள் இசை பிரியாவின், மாவீரர்களின் ஆத்தமாக்களை சாந்தி அடைய வைக்கும். 

 

மக்ரே! மிக மிக நன்றி, நீர் தமிழருக்கு நடந்தவற்றை வெளியே கொண்டுவந்து நீதி கேட்பதில் முன்னால் வைத்த காலை பின்னால் வைக்காமல், ஒருமனதாக  இதுவரையில் ஆற்றியிருக்கும் சேவைக்கு .! 

 

 

Share this post


Link to post
Share on other sites
எம் தலைவா எங்கள் கைகளை கட்டி விட்டு எங்கே போனாய் எதையெல்லாம் தடுக்க ஆயுதம் எந்தினம் அவைகள் எல்லாம் இப்போ கண்முன் நடக்கு விடையளிக்க வரவேண்டும் எம் தலைவனே .!angry உணருகிறார்.

 

Share this post


Link to post
Share on other sites

காலையில் ஒரு சோகக்காட்சி

ஏற்கனவே முடிவு அறிந்தது தான்

ஆனாலும் வலிக்கிறது

 

பகை பற்றி  உனக்குத்தெரியும்

அதை செய்தியாய்

பாடலாய்

நாடகமாய்

எமக்குச்சொன்னவள் நீ

 

ஒரு துளி  நம்பிக்கை

எம்மைப்போல் உனக்கும்

உலகம் இரங்கும் என்று..

 

கனவான்கள் எல்லோரும்

கமெராவைத்திறந்து வைத்து

கண்ணை மூடுவார் என்பது

மனிதனால் கணிக்கமுடியாத

பொருளியல் நகர்வு.....

 

முள்ளி  வாய்க்காலில்

தப்பியவர் சொல்வது

நாமும் இறந்திருக்கலாம்

உண்மைதான்

நீயும் இறந்திருக்கலாம்

நானும்  இறந்திருக்கலாம்...

உங்ளை  இழந்து

நாளும் இறப்பதைவிட. :(  :(  :(

 

Share this post


Link to post
Share on other sites