Jump to content

இந்துசமய/ சைவசமய வாத்தியார் தேவை!


Recommended Posts

எங்களுக்கு இந்துசமய/ சைவசமய வாத்தியார் ஒருவர் யாழில் தேவைப்படுக்கிறது. நல்ல சமய அறிவு உள்ளவாராய் இருக்க வேண்டும்!  :D தகுதியள்ளவர்கள் தயவு செய்து அறியத் தாருங்கள். 

 

இப்படியான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

 

செங்கொடி

Posted Today, 01:28 AM

 

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது? 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கந்தசஸ்டி விரதம்" இல்லை "கந்தசட்டி விரதம்".சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

Link to comment
Share on other sites

"கந்தசஸ்டி விரதம்" இல்லை "கந்தசட்டி விரதம்".சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

தமிழகத்தில் சஷ்டி என்றுதான் சொல்வார்கள்.. சூலமங்கலம் சகோதரிகள் பாடும்போது அவ்வாறுதான் பாடுவார்கள் என நினைக்கிறேன்..

 

அலையக்கா.. என்ரை சமய அறிவு எப்பிடி? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 

சஷ்டி (சட்டி) எனும் வடமொழிச் சொல் (முழுநிலவு) பௌர்ணமி நாள் அல்லது அமாவாசை நாளிலிருந்து ஆறாவது நாள் (திதி) ஆகும். இது முருகனுக்குரிய சிறப்பு நாளாகும்.

 

skanda-sashti-kavacham-murugan.jpg

Link to comment
Share on other sites

ஆரியமும், பிராமணமும் தமிழர்மேல் கொண்டிருந்த பிடியை என்றோ விட்டுவிட்டார்கள். ஆனால் தமிழர்களே இன்றும் அவர்களை விட்டுவிடாமல் குரங்குப்பிடியாக பிடித்து வைத்துள்ளனர். பிறந்த குழந்தை முதன்முதலாக சிறுநீர் கழிப்பதையே பெரு விழாவாக்கிக் களிப்பதற்கும், அதற்காகப் பிராமணரையும் அழைத்து மந்திரம் ஓதுவதற்கும் புலம்பெயர் நாட்டில் சிலர் தயாராகி வருகின்றனர். :o இதற்குள் சமய வாத்திமாரும் வந்துவிட்டால்....ஆகா! கொண்டாட்டங்கள் தூள்பறக்கும். :D 

 

Link to comment
Share on other sites

எனது அறிவுக்கு எட்டியவரையில் ஆதியிலே இயற்கையை வழிபட்டார்கள். உருவமில்லாத வழிபாடாற்றியவர்கள் சைவர்கள் ஆனார்கள்.

 

13ஆம் நூற்றாண்டுடன் சோழ சாம்ராஜ்ஜம் சிதைந்தது. தமிழனின் தனி தன்மைகளான கலை கலாச்சாரங்கள், வழிபாடுகள், வாழ்க்கை முறைகள் யாவுமே மாற்றினத்துக்கு அடிமையாகி, அவர்கள் கூறுவதே உண்மையாகி, ஆராய்ந்து உய்த்தறியும் தன்மைகளும் மங்கி, அடிமை வாழ்வே உன்னத வாழ்வென நம்பி, அடுத்தவன் வாழ்வியலுடன் எமது தனித்தன்மைகளை ஒப்பிட்டு, எமது தனித்தன்மைகளுக்கான காரணங்களைக் கண்டறியா அறிவீனம் மெத்தி, அதனால் அவற்றை மூடமென ஒதுக்கி, எதுவும் அற்ற அரைகுறை வாழ்வினுள் அமிழ்ந்தியுள்ளவன்தான் இன்றைய தமிழன்.

 

அந்த வகையில் இன்றைய தமிழனின் கலை மொழி சமயம் யாவும் கலப்படமே!  :D இவற்றையும் மூடம் என ஒதுக்கினால்… இன்று அரைகுறை அடையாளத்துடன் வாழும் தமிழன் அதுவும் இல்லாமல் அடையாளமில்லாதவனாக வாழும் நிலை உருவானாலும் ஆச்சரியமில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்களுக்கு இந்துசமய/ சைவசமய வாத்தியார் ஒருவர் யாழில் தேவைப்படுக்கிறது. நல்ல சமய அறிவு உள்ளவாராய் இருக்க வேண்டும்!  :D தகுதியள்ளவர்கள் தயவு செய்து அறியத் தாருங்கள். 

 

இப்படியான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

 

செங்கொடி

Posted Today, 01:28 AM

 

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது? 
 

 

 

நானும் ஏதோ சீரியஸ் ஆனா விஷயம் எண்டு வந்தால், அலைமகள் , தமாசு .....? ஆ ...

Link to comment
Share on other sites

 

செங்கொடி

Posted Today, 01:28 AM

 

அப்படி என்றால் கந்தசஷ்டி தமிழர்களின் விழா இல்லையா? தமிழர்களின் விழா என்றால் வடமொழி எழுத்து எப்படி உள்ளே வந்தது? 
 

 

ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதற்காக கந்தப்பெருமான் ஆறு நாட்கள் சூரப்பதுமனோடு போர் புரிந்தார். போர்நடந்த ஆறு நாள் நிகழ்வுகளையும் ஆரியம் சட்டிக்குள் போட்டுத் தமிழர் தலையில் கவுட்டுவிட்டது. அந்தச் சட்டிக்குத்தான் கந்த சஷ்டி என போலியாகப் பெயர் சூட்டித் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். சேரவேண்டிய எழுத்திற்குப்பதிலாக வேறு எழுத்துச் சேர்ந்த ஒரே பொருளைக் கூறி நிற்பதைப் போலி என அழைப்பர். :o  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே பேசி பேசி எல்லோரும் பாறனை சாப்பாட்டுக்கு ஆப்பு வைக்க போறியல் பாருங்கோ

சாப்பாடு மட்டுமா
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.