Jump to content

மாலைப்பொழுதும்..வண்ணாத்திப்பூச்சிகளும்..கவிதைகள் நிறைந்த தேனீரும்...சில நினைவுகளும்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது உங்கள் கவிதைகள். தொகுத்து நூலாக்குங்கள் சுபேஸ்.

நன்றி அக்கா.. கவிதகளை நூலாக்கும் எந்த திட்டமும் இல்லாமல்தான் இருந்தேன்.. ஆனால் எங்குமே வெளிவராத என் சிறுகதைகளை நூலாக்கும் திட்டமிருந்தது.. ஆனால் என் கவிதைகளை வன்னிமண்ணிண் கவிதைத்தோழன் ஒருவன் தானே நூலுருவாக்கி வெளியிடுகிறான் அக்கா.. அடையாளம் ஏதுமற்றவன் சிறுகதை எழுதி வெளியிட்டால் எவன் வாசிப்பான்..? இந்தக்கவிதை நூல் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் என்ற அடையாளத்தையாவது தரட்டும்.. :)

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வசந்தத்தை சொன்ன பறவை..

------

 

10428008_10152624610134891_3669290440201

வெயில் மடிந்த இப்பின்னிரவில்
உயிர் பிடிக்கிறது
உன் மேலான பிரியத்தின் ஊதாச்செடி...

 

இரவின் வாசற்படிகளில்
இறங்கிவருகிறது நினைவு
ஒளிந்துகொள்ள ஏதுமற்ற
நிர்வாணத்தில் நான்...
இந்த இரவின் மௌனத்திலும்
வெளியே இலை துடிக்கும் ஓசையிலும்
இன்னமும் அருந்தி முடிக்காத 
மேசை மேலிருக்கும் தேநீரிலுமாய் 
சிதறுகின்றன உன் ஞாபகங்கள்....

 

கோடை தின்ற ஈர உரையாடலின் 
மீதம் கசியும் துளிகளிலிருந்து
வேர் பிடிக்கிறாய் நீ..
முன்னொருபொழுது ஒட்டிகொண்ட‌
உன் மஞ்சல்ப்புன்னகையுடன்
நினைவுத் துண்டுகள் தங்கி விட்ட 
நிலமெங்கும் 
சிதறிப் பூக்கிறது உன் வாசனை....

 

நினைவின் துடுப்பசைத்து
ஓட்டமெடுக்கும் மனக்கால்கள் 
வரைந்துபோகின்றன
ஒருபொழுது நமக்கிடையே
பிரியங்களாய் பூத்திருந்த பெருங்காதலை...

 

கால நதியில்
மிதக்கும் சோடி இறகுகளாய்
காதலை நிலமெங்கும்
விதைத்தபடி
பூத்திருக்கும் மலர்களுடனும்
வண்ணாத்திப்பூச்சிகளுடனும்
நெடுந்தூரம் நடந்தோம்
தெருவோர‌ மரங்கள் எல்லாம்
நம் பேரன்பின் கதகதகதப்பில் லயித்துக்கிடந்தன.....

 

இரவு எழுதும் கவிதையும்
பகல் எழுதும் புன்னகையுமாய்
நிரம்பி இருந்தாய்
நீயென் வெற்றிடம்களில்....

 

பின்னொரு நாள் 
உன் விழிகளில்
காதலின் கடைசிக்கணம்
முடிவுறுவதைக் கண்டபோது
காத்திருப்பின் மேடையில்
என்னை அமர்த்திவிட்டு
பிரிவுசொல்லி 
ஞாபகங்களை விட்டுச் சென்றாய்

 

இருளின் வாசம் அவிழ
நினைவுகளைப் புதைக்கமுடியாக் காட்டில்
நீயற்ற பயணத்தின் நெடுவழியில் 
தனித்து நான்..

 

இப்பொழுதெல்லாம்

திரும்பவே முடியாத நேசத்தின் தூரத்திற்கு 
தொலைந்த நம் நாட்களாய்
பரணில் கிடக்கும் ஞாபத்தாள்களில்
கசங்கிக் கிடக்கும் தனிமையாய்
கடைசி வார்த்தையிலிருந்து தொடங்கிய
காத்திருப்பின் வடுக்களாய்
கைவிடப்படும் தனிமைப் பொழுதுகளோடு
வழிகிற காலமாய்
நாற்புறமும் எனை வெற்றிடமாக்கி
முடிகிறாய் நீ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10409111_10152624914839891_4423026282579

எந்த நதியை நான் குடித்தேன்..

எந்தக் கடலை நீ அருந்தினாய்..

வாழ்வு முடியாமல் நீண்டதே ஓர் கனவொன்றில்..

ஆயிரம் சூரியன்கள் உதித்த அவ்விரவில்தான் உன் பால் முகத்தை நான் முழுதும் பார்த்தேன்..

என் இரவெல்லாம் அன்று தீர்ந்தன..

நதியொன்றில் நான் கரைந்து கடலொன்றில் மிதந்தேன்..

என் கரையெங்கும் நீயிருந்தாய்..

கொஞ்சம் கவிதைகள் கைகள் நிறையக் கூட இருந்தன..

அள்ளிப்பருகிய கடல் சிந்திய துளிகளில்

நான் பருகி எஞ்சிய உன் முத்தம் வழிந்தது..

ஒருகோப்பை வைனும்

உன் ஒரு துளி புன்னகையும்

என் வாழ்வை நிரப்புமென்று

என் வழிகள் எங்கிலும் நான் அறிந்திராப் புதினம் நிகழ்த்தினாய்..

கால்கள் தொடாத நிலமொன்றை

ஒரு கனவைப்போல நான் பார்த்தேன்..

நீயிருந்தாய் நானிருந்தேன்..

எஞ்சிய யாவும் ஒரு மாயம்போல் தெரிந்தகாட்டில்

உன் காதல் நிறைந்து தழும்பிய கோப்பை என் கைகளில்..

காலமது எங்கோ கரைந்து போனது காற்றில்..

அண்ணார்ந்து பார்த்தேன்

ஓடிக்கொண்டிருந்தன மேகங்கள்..

ஒழுகி வழிந்துகொண்டிருந்தன காலங்கள்..

குனிந்தபோது அத்தனை வேகமாய்

உருகிபோய்விட்டிருந்தன எல்லாப்பனியும்..

நீயில்லை.. முன்பொருகாலம் நாம் குடித்த நேசிப்பின் கடல் இல்லை..

காலியாகிக்கிடக்கிறது உன் முத்தங்களை நிறைத்து

என் கைகளில் வழிந்த கோப்பை...

ஊசியிலை மரங்களின் இலைகள் எல்லாம் இப்போ உதிர்ந்துவிட்டன..

அவற்றின் புன்னகையை பறித்த

துயர்ச்சாம்பல் படிந்த காலத்தைக் கூடவே நானும் கடக்கிறேன்..

பாசி பிடித்துக்கிடக்கிறது உன் கைகளில் வழிந்த

காதலை ஏந்திய வீதிகள்..

வெறுப்பின் பாடலை உரைத்துப் பூத்த மலரில்

உனைப் பார்த்து நானறியேன்..

யாதொன்றின் துயராயும் உனைப்பார்த்து நானறியேன்..

பின் யார் நம் காதலைப் பறித்தது..

நாமருந்திய தேனீரில் கசப்பின் விதைகளை யாரிட்டார்..

வாழ்வை ஒரு இசையைப்போல,

காலங்களை எதிரொலிக்கும் ஓவியத்தைப்போல,

ஊசியிலை மரமொன்றின் துயரறியாப் புன்னகையைப்போல

பருகிக்கொண்டிருக்கையில்

எம் தேனீரில் கசப்பின் விதைகளைப்போட்டவர் யாரோ..

உன் வேரின் அடியில் இருந்து என் காதலைப்பாடிய குயில்

எங்கோ தொலைந்துவிட்டது..

பூக்களில் சிரித்த உன் காதல் உதிர்ந்துவிட்டது..

வானம் மறைத்து நிறைத்த உன் அன்பு வற்றிவிட்டது..

என் நதியின் கரைகளில் இப்போ நீயில்லை,

என் படகின் துடுப்பில் இப்போ உன் விசை இல்லை..

வழ்வு ஒரு சமுத்திரமாய் என் நதியைக் கலக்கையில்

மெதுமெதுவாய் மூழ்கத்தொடங்குகிறேன்..

உன்னைப்போலவே இனியிரு கைகள் வந்தணைத்தால்

நானும் தன் கரைகளில் விட்டுச்செல்லக்கூடும்

என் தடங்களை என்கிறது இரக்கமில்லாக் கடல்..

கரைகளில் உனை ஒழித்துக்

கண்ணீரை நிரப்பிய விதியைச் சபிக்கின்றன

கடலிடையில் போராடும் என் துயர்க்குமிழிகள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10431443_10152628067684891_5913901547961

வாழ்வின் பெருமழையே..

என் முற்றத்தில்

என்றைக்குமாய் என் காதலைச் சொரியப் பொழியும் மழையே...

இவ்வாழ்வின் பசுந்தரையை பார்த்தேயிராத மனிதரையும் நனைக்கும் மழையே,

கரைந்தும் கதறியும் நனைந்தும் சிதறியும் துளிகளாய் உருமாறியும் உயிரோடு உயிர் பேசுவோம் வா மழையே..

என் கரையெல்லாம் நிறைத்து நிறைந்திருக்கும் ஆதிக்காதல் சுமக்கும் வானமும் சாகுமோ சொல் மழையே..

அவளற்ற பொழுதுகளில் நீ பெய்த துளிகளில் நான் நனைந்தே அறியேன் என்று

முன்பொரு நாள் உன்தோழியாய் இருந்த என் தோழியின் காதல் அறியுமோ சொல் மழையே..

வாழ்வை ஒரு கவிதையாய் கடக்கும் மனிதர்களைப்பாட வந்த மழையே,

உன் கானமெல்லாம் கசிந்துருகுகிறது பூமி..

அப்பாடலில் என் கூரை நனைந்து அன்றொரு நாள்

நீ நனைத்த என் காதல் ஊரும்போதெல்லாம் உடுத்தியிருக்கும் துயர ஆடைகள் நனைந்தழுகின்றன..

யாரறிவார் உன் துளியுள் கலந்து கரைந்த என் துயரை யாரறிவார்..

என்னையும் அவளையும் நனைத்த உன் பழைய மழை கரைந்து மறைந்து ஏதோ ஒர் பெருங்கடலில் இன்று மிதக்கக்கூடுமோ என் நினைவுகளைப்போல..

நம் மோனத்தில் கலந்து கசிந்து காற்றாய் மிதந்த அந்த வானத்தை இன்று தொலைத்துவிட்டோம்..

யாரும் கேட்டுணராப்பாடலை நீயும் அவளும் நானும் நிலவும் ரசித்திருக்கப்

பூத்திருந்த மலரொன்றின் புன்னகை மெல்ல இறங்கி அவள் கரங்களில் தவழ்ந்து என் தலை தடவிய நொடியில்

சிலிர்த்த இரவும் பூங்காவின் இருக்கையும்

இன்றும் ஏந்தியிருக்கக்கூடும் அப்பூவின் புன்னகையை..

என்னையும் உன்னையும் அவளையும் தழுவிப்

பின் வெட்கத்தில்

வானத்தில் துணையின்றி அலைந்துகொண்டிருந்த

ஒற்றை வெண்மேகத்தையும் சுமந்துகொண்டு

நழுவி ஓடிய தென்றல் இன்று அவள் குழந்தையை தழுவிக்கொண்டிருக்கக்கூடும்..

யாரறிவார் அந்த ஒற்றைமேகம் இன்று என் தோழில் கனப்பதை..

யாரறிவார் அப்பழைய பூங்காவின் இருக்கையில் என் தனிமையை..

கோடை ஒன்றில் மழையை பொழிந்த அந்தக் காதல் எங்கென்று நீயறிவாயா..

என் சோலை முழுதும் வேர்களை நனைத்த நேசிப்பின் நதி ஊற்று எங்கென்று நீயறிவாயா..

என் தோப்பில் இன்று குயில்கள் இல்லை..

கூவி அழைக்கக் குரல்களும் இல்லை..

காதல் வற்றிய நதி செத்துக் கோடை பாய்கிறது அதன் தடமெங்கும்..

மழையே..வாசம் கொண்டு வந்து முன்பொருநாள் பூத்திருந்த என் வசந்தத்தில் நனைத்து நனைத்து நனைந்த மழையே..

என் தேகம் எங்கும் நுழைந்து

ஆன்மாவின் அருகிருந்து

காதலைப்பொழிந்த அப்பழைய வசந்தத்தைக்

கண்டால்

இக்கவிதையை பொழிந்துவிடு என் பிரிய மழையே..

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்
11705134_10153082850899891_6208496674032
வீடுகள் உறங்கிய தெருக்களின் இருக்கைகளில் மீதமாய்
இருக்கிறது காதலர்கள் விட்டுச்சென்ற முத்தங்கள்
இரவின் இசையை காதலுடன் மீட்டுகின்றன
மரங்கள்
வானத்தைக் காட்டிலும் பரிசுத்த நிர்வாணமாய் இருக்கிறது இந்த இரவு
என் கனவை தொட்டுணரும் பட்டாம் பூச்சியே
உன்னைக்கனவுற்றபடி அசையாத இரவின் போதையில் மிதக்கிறேன்

உன் கனவுகளின் வண்ணங்களிலும் தோய்ந்துகிடப்பது
பாதி ஒளிந்துள்ள நிலவைப்போல
பரிதவிப்பது
வசந்தமாய்ப் பூப்பது 
வாழ்வின் கணங்களை ரசிப்பது
பின் அதனுள் உருகிக்கிடப்பது
காதல் அல்லவா.

 

ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம் 
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்
என் தூக்கங்களுக்கெல்லாம் உன் பாடலை தலயணையாக்குகிறாய்
துயரறியா வீட்டில் பரவும் நேசம் நான்
காதல் நிரம்பிய காற்றை தழுவும் ரோஜாச்செடி நீ..

 

பறவைகளின் குரலிசைப்பொழிவில்தான்

உனக்கான என் பாடலும் ஒளிந்திருக்கிறது
தேடிக்கண்டடையும் தீராத்தாகத்தோடு நீ வருகிறாய்
இறகிலும் இலேசான உன் விழிகளின் வருடலினால்
எனை பரசவத்திற்குள் நகர்த்துகிறாய்
இனி யுகத்துக்குமாய் நான் தனிமையுறமாட்டேன்..

 

ஓ..என் தோழியே..
நேசிப்பதென்பதும்
நேசிக்கப்படுவதென்பதும்
காதல் ததும்பும் ஓர் கவிதையைப்போல
எத்துணை இனிமையானது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//ஓய்வற்ற வாழ்வென்பது சலிப்புற்று
நீண்டுகிடக்கும் நெடு வானம் 
அதை நீந்திக் கடந்திட ஓடும் ஒற்றை மேகம் நான்
வாழ்வை நிறுத்திவைத்து நனைக்கவரும் மழைமேகம் நீ
என் பெருமூச்சின் தீப்பிழம்பை
கண்ணாடியில் படியும் சுவாசத்தைப்போல
நீ மூடி அணைக்கிறாய்//

சிறப்பான வரிகள். தொடருங்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.