யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
theeya

கண்ணிவெடிப் பூமியிலே - பாட முடிந்தால் பாடுங்கள்

Recommended Posts

kannivedi_620x581.jpg

 

 

 

பல்லவி

ஆள்காட்டி ஆள்காட்டியே அன்புள்ள ஆள்காட்டியே

தூது செல்ல மாட்டாயோ சேதி சொல்ல மாட்டாயோ

 

அனுபல்லவி

அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என்

ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்…

வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம்

வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என்

பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே…

                                                                       (ஆள்காட்டி ஆள்காட்டியே…)

 

சரணம்

கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் கெந்தித் தொட்டு ஆடி அங்கே

தொட்டுத் தொட்டுப் பேசி முன்னே காதல் செய்து மகிழ்ந்திருந்தோம்

சுற்றிவர முள்வேலி அதன் நடுவே சிறு குடிசை

சிறு குடிசை தாண்டி நானும் தேடுகிறேன் காதலியை

கண்தொலைவில் அவளுருவம் அசைவதெல்லாம் தெரிந்தாலும்

கைப்பிடிக்க முடியலையே கண்ணிவெடிப் பூமியிலே…

 

                                                                       (ஆள்காட்டி ஆள்காட்டியே…)

 

சரணம்

மிதிவெடியைப் பொறி வெடியைத் தூது விட முடியலையே

சீறிவந்து உயிர் குடிக்கும் ஆட்லறியாய் பலர் கூட்டம்

பல் குழல் பீரங்கிபோல் படபடென்று பேசுமவள்

பாவியாகி நிற்கின்றாள் பார்த்த மனம் துடிக்குதையா

பாவியாகி நிற்கின்றாள் பார்த்த மனம் துடிக்குதையா

                                                                               (ஆள்காட்டி ஆள்காட்டியே…)

 

பாடல் வரிகள் - தியா 
படம் - யோகி 
 
இது பனிப்பூக்கள் இதழின் இந்த நொவம்பர் மாத வெளியீடில் வந்த எனது படைப்பு  http://www.panippookkal.com/ithazh
Edited by theeya
  • Like 6

Share this post


Link to post
Share on other sites

கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் கெந்தித் தொட்டு ஆடி அங்கே

தொட்டுத் தொட்டுப் பேசி முன்னே காதல் செய்து மகிழ்ந்திருந்தோம்

சுற்றிவர முள்வேலி அதன் நடுவே சிறு குடிசை

சிறு குடிசை தாண்டி நானும் தேடுகிறேன் காதலியை

கண்தொலைவில் அவளுருவம் அசைவதெல்லாம் தெரிந்தாலும்

கைப்பிடிக்க முடியலையே கண்ணிவெடிப் பூமியிலே… /// எல்லோரும் பலவிதமான முறைகளால்   தூது சொல்ல விடுவார்கள் . .ஆனால் நீங்களோ ஆள்காட்டியை   தூதுக்கு விடிருக்கின்றீர்கள் . ஆள்காட்டியின் வேலை நீங்கள் அறியாதது இல்லை . ஆனாலும் ஆள்காட்டி நன்றாகத்தான் தூது சொல்கின்றது . படைப்புக்குப் பாராட்டுக்கள் தியா :) :) .

 

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுகள் தீயா... இதனை வாசிக்கும் போதே அதற்குரிய இசையையும் மனம் தானாகத் தேடிக் கண்டு கொண்டு பாடலாக படிக்கின்றது.

Share this post


Link to post
Share on other sites

வரிகள் இயல்பாக வெளிவந்திருக்கின்றன பாராட்டுகள் தியா.

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் தீயா. பழைய உறவு மீண்டும் வந்துள்ளாரா ???

Share this post


Link to post
Share on other sites

பாடல் நன்றாக வந்திருக்கின்றது!

 

இதற்கு யாரவது இசையமைத்துப் பாட, ஒரு முறை கேட்கவேண்டும் போல உள்ளது! :D

Share this post


Link to post
Share on other sites

இயல்பான வரிகள்.... அருமை!

பாடல் வரிகளை முணுமுணுக்கும்பொழுதே ஒரு ராகம் தாளம் தானாகவே உருவாவதைப்போல உணர வைக்கின்றது.

தமிழ்சூரியன் அண்ணாவுக்கு நேரங்கிடைக்கும்பொழுது இப்பாடலுக்கும் இசையமைத்தால் நன்றாக இருக்கும். :rolleyes:

மிக்க நன்றி தீயா! :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


  • Topics

  • Posts

    • தேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் !  இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது. இந்த வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை ஜூன் 30ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறியது. இந்த வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியது. துவக்கத்தில் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில நாட்களில் அறிக்கையின் பல அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள் கேள்விகளை எழுப்பினார்கள். கல்வி ஆர்வலர்கள் கூறுவது என்ன? இந்த அறிக்கை கூட்டாட்சித் தத்துவதிற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு - ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்தில் உள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர். "பள்ளிக்கல்வி என்பது மத்திய - மாநில அரசுகளின் ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும்போது, மாநில நலன்களுக்கு எதிரான அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த வரைவு இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்" "1976ஆம் ஆண்டுவரை பள்ளிக் கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவருக்கும் அளித்த பெருமையைப் பெற்றது. 1964ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி முழுமையும் கட்டணமில்லாமல் ஆக்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரும் முழுத் தகுதி பெற்றவர்களாக திகழ்ந்தனர். இதற்கு முக்கியக் காரணம், கல்வி மாநிலப் பட்டியலில் இருந்ததுதான்" "1976ல் ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டாலும் பெரிதாக மத்திய அரசின் தலையீடு இருந்ததில்லை. ஆனால், இப்போது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும் பள்ளிக் கல்வியை மத்தியப் பட்டியலில் உள்ள ஒரு அம்சத்தைப்போலவே மத்திய அரசு கருதுகிறது. அந்த அம்சத்திற்கு வலுவூட்டும் வகையில்தான் இந்த புதிய கல்விக் கொள்கை வரைவு அமைந்திருக்கிறது" என கட்டுரை ஒன்றில் இந்த வரைவு அறிக்கை குறித்து சுட்டிக்காட்டினார் கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன். இந்தியாவில் இதற்கு முன்பாக இரு தேசிய கல்வி கொள்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு கல்வியை மேம்படுத்த பல்கலைக்கழக கல்வி ஆணையம், மேல்நிலைக் கல்வி ஆணையம் உள்பட பல்வேறு ஆணையங்களை மத்திய அரசு அமைத்தது. அதேபோல, தேசிய கல்விக் கொள்கையை வகுக்க தௌலத் சிங் கோத்தாரி தலைமையில் ஒர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 1968ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வெளியிட்டார். 14 வயது வரை கட்டாயக் கல்வி, ஆங்கிலம், இந்தி, பிராந்திய மொழி உள்ளிட்ட மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவது, சமஸ்திருதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவை இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருந்தன. வருவாயில் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கவும் இந்த ஆணையம் பரிந்துரைத்தது. https://www.bbc.com/tamil/india-49023010            
    • போக்குவரத்து   இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து ......!   🌻
    • அதுவே என் கருத்தும் ஆனாலும் புதிய தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் காட்டும் அரசியல் வாதிகள்  அப்பாவி மக்களை பற்றி ஒரு துளியாவது சிந்திக்கவும்  வேண்டும்