Jump to content

முற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

murriyal_kuttriyal_620x374-300x180.jpgகோடைகால வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியில் போன நான் மிகவும் களைப்புடன் வீட்டுக்குத் திரும்பியிருந்தேன்.

 

“ஐயோ சரியான களைப்பாய்இருக்குது ஒரு காபி கிடைக்குமா அம்மா?”

 

தான் செய்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள்.

 

கையில் வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் ஆசையில் உறிஞ்சினேன்.

 

“ஆ”  என்று அலறியப்படி காபீயை அப்படியே மேசையில் வைத்து விட்டு

 

“என்னம்மா காபி கேட்டால் இப்படியா தருவாய்” என்று ஒரு செல்லக் கோபத்துடன் பார்த்தேன்.

 

ஒரு காபி குடிப்பதில் தொடங்குகிறது எங்கள் குற்றியலுகர முயற்சி. இங்கு “உறிஞ்சுதல் ” என்று சொல்லும் போது

 

உதடு குவிகிறது. குழந்தைகளை ஆசையுடன் கட்டியணைத்து முத்தமிடும் போது “உம்மா ” என்று உதடு குவித்து

 

ஒலி எழுப்புகிறோம். இவை அனைத்தும் “உகரம்” முழுமையாக ஒலிப்பதற்குரிய இடங்கள். இந்த இடங்களில் “உ”

 

தனது மாத்திரையில் (எழுத்து ஒலிக்கும் கால அளவில்) குறைந்து ஒலிப்பது இல்லை. இவ்வாறு “உ”

 

முழுமையாக ஒலிப்பதை “முற்றியலுகரம்” என்பர்.

 

 

“உகரம்” தனது மாத்திரையில் குறைந்து ஒலித்தால் அதனைக் குற்றியலுகரம் என்பர். அவ்வாறு “உ” தனது

 

ஒலியளவில் குறைந்து ஒலிக்கும் இடங்கள் பற்றி இனிப் பார்ப்போம். வல்லின மெய் எழுத்துக்களான க்,ச்,ட்,த்,ப்,ற்

 

ஆறும் சொல்லின் இறுதியில்  ”உ” வுடன் இணைந்து வரும்போது வரும் “உ” தனது மாத்திரையில் குறைந்து

 

ஒலிப்பதைக் “குற்றியலுகரம்” என்பர்.

 

எமது கலாசாரப் படி பெண்கள் திருமணத்துக்கு முன்னர் தமது பெயரின் கடைசியில் தந்தையின் பெயரையும்

 

திருமணத்தின் பின்னர் கணவனின் பெயரையும் இணைப்பது வழக்கம் அது போலத்தான் குற்றியலுகரங்களும்

 

குற்றியலிகரங்களும் பிறப்பெடுக்கின்றன. “உங்கப்பன்” என்பவரின் ஆறு பெண்களும்  க்,ச்,ட்,த்,ப்,ற்  என்ற ஆறு

 

வல்லின மெய்களை தமது பெயரின் கடைசி எழுத்துக்களாகக் கொண்டவர்கள் “சிலுக்” என்பது மூத்தவளின் பெயர்

 

அதன்படி “சிலுக்” உடன் தகப்பனின் முதல் எழுத்தைச் சேர்க்கும் போது சிலுக்+உ=சிலுக்கு என வரும்.

 

இங்கு கடைசியில் வல்லினமாகிய “க்” உடன் தொடர்ந்து வரும் “உ” தனது மாத்திரையில் குறைந்து ஒலிக்கும்.

 

இவ்வாறே “மஞ்ச்+உ= மஞ்சு என அமைவதையும் காணலாம். இதே போன்று

 

க்+உ=கு

 

ச்+உ=சு

 

ட்+உ= து

 

த்+உ=து

 

ப்+உ=பு

 

ற்+உ=று

 

என கடைசியில் வரும் உகரங்கள் வல்லினத்துடன் சேர்ந்து வரும்போது ஒலியளவில் குறைந்து ஒலிக்கும்.

 

“பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு

 

உன் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்.”

 

என்ற சினிமாப் பாடல் அடியைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.

 

“பத்து” என்பதில் “து” என்ற கடைசி எழுத்துக்கு முன் “த்” வந்தது. இதனால் இதை வன்றொடர் குற்றியலுகரம்

 

என்பர்.

 

“ஒன்று” “என்று” “நெஞ்சு” ஆகிய மூன்று சொற்களிலும் கடைசிக்கு முதல் எழுத்துகள் முறையே “ன்” “ஞ்” “ன்” என

 

வந்தன. இதனால் இதை மென்றொடர் குற்றியலுகரம் என்பர்.

 

“சொல்லு” என்பதில் கடைசி எழுத்துக்கு முன் “ல்” வந்தது. ஆனால் கடைசி எழுத்து. “லு” என உதடு குவியும் இடை

 

எழுத்துடன் கூடி வந்ததால் அது முற்றியலுகரம் ஆனது.

 

முன்னரே சொன்னதுப் போல திருமணத்துக்குப் பின்னர் கணவனின் பெயரைத் தம் பெயரின் பின்னே இணைப்பது

 

எம்மூர்ப் பெண்களின் வழக்கம். அதன்படி க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறு எழுத்துக்களையும் ஆறு பெண்களின் கடைசி

 

எழுத்துக்களாக வைத்துக் கொள்வோம். கணவனின் பெயர் இன்னமும் தெரியவில்லை.ஆதலால் “யாரோ

 

ஒருவன்” என்று வைத்துக் கொள்வோம். அந்த “யாரோ ஒருவன்” என்பதன் முதல் எழுத்து “யா” ,  க்,ச்,ட்,த்,ப்,ற்

 

ஆகிய எழுத்துகளுடன் புணரும் போது இடையில் “இ” என்ற ஒரு ஒலி பிறக்கிறது. அது தன் மாத்திரையில்

 

குறைந்து ஒலித்தால் அதனைக் “குற்றியலிகரம்” என்பர்.

முதலில் நாம் பார்த்த “சிலுக்கு” என்ற சொல்லையே மீண்டும் உதாரணமாகப் பார்ப்போம்.

 

சிலுக்கு+யாரோ ஒருவன் = சிலுக்+க்+உ+யாரோ ஒருவன்

 

இங்கு “யாரோ ஒருவன்” சிலுக்குடன் புணரும்போது தகப்பனுக்கு அங்கு வேலை இல்லை அதனால் “உ” வை நீக்கி

 

விடலாம்.

 

சிலுக்கு+யாரோ ஒருவன் = சிலுக்+க்+இ+யாரோ ஒருவன்

 

=சிலுக்கி யாரோ ஒருவன்

 

என மாறி அமையும். இங்கு “சிலுக்கு” வுக்கும் யாரோ ஒருவனுக்கும் இடையில் புதிதாக ஒரு “இ” பிறப்பதைக்

 

காணலாம். இவ்வாறு புதிதாகப் பிறக்கும் “இ” தனது மாத்திரையில் குறுகி ஒலிக்கும் இதனைக் “குற்றியலிகரம்”

 

என்பர். அதேபோல;

                                           நாடு + யாது = நாட்+ இ + யாது = நாடியாது

 

                                           வரகு+ யாது = வரக் + இ + யாது = வரகியாது

 

                        மஞ்சு + யார் = மஞ்ச் + இ +யார் = மஞ்சியார்  என மாறி அமைவதனைக் காணுங்கள்.

 

என்ன நண்பர்களே முற்றியலுகரம், குற்றியலுகரம், குற்றியலிகரம் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடு

 

புரிந்ததா? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் இன்னொரு சந்தர்ப்பத்தில் இலக்கணம் பற்றி இன்னும் நிறையப்

 

பேசலாம்.

 
கட்டுரை - தியா 
 
படம் - யோகி 
 
இது பனிப்பூக்கள் இதழின் இந்த நொவம்பர் மாத வெளியீடில் வந்த எனது படைப்பு. http://www.panippookkal.com/ithazh
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையுடன் கூடிய விளக்கமான பதிவு :D
இணைப்பிற்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாத்தியார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.