Jump to content

யாருக்குச் சொல்லி அழ?: புலிகளின் தியாகத்தின் மேல் ஏறி நின்று "தேசியத் தலைவரின் வாரிசு தானே என" ? புரட்சி செய்யக் கிளம்பியிருக்கும் சீமான்.?


Recommended Posts

seeman_2012%20n.jpg

மேதகு பிரபாகரன் வழியா? அரசியல் புரோக்கர் ................. வழியா?

  • "அரசே என்ன இது? 

    உங்கள் உடல் மூடப்பட்டு முகம் மட்டும் தெரிகிறது. அந்த மல்யுத்த வீரனுடைய முகம் மூடப்பட்டு உடல் மூடப்படாமல் இருக்கிறது. ஒன்றும் புரியவில்லையே" 

    "அட மங்குனி அமைச்சரே! 

    உன் மூளைக்கு இதெல்லாம் புரியாது. இப்போது நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்குப் பின் வரும் தலைமுறைக்குத் தெரியவா போகிறது? இப்படி நோஞ்சானாக ஒரு மன்னன் இருந்தான் என்பதைவிட பராக்கிரமசாலியாக, மாபெரும் வீரனாக இருந்தான் என்று வரலாறு சொல்ல வேண்டும். வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!" 

    இம்சை அரசன் திரைப்படத்தில் வரும் இந்தக் காட்சி போல இருக்கிறது 'நாம் தமிழர்' சீமானின் பேச்சும் போக்கும். 

    2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பிறகு தொடங்கிய ஓர் அரசியல் கட்சிதான் 'நாம் தமிழர்'. திரைப்படங்களில் ஒரே பாடலில் பண்ணையாருக்கு எதிராக மக்களைத் திரட்டும் கதாநாயகன் போல செந்தமிழன் சீமான் அவர்கள் தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார்.seeman_2012.jpgதமிழீழத்தை மீட்பதற்காக விடுதலைப் புலிகள் நடத்திய மாபெரும் போர் தற்போதைக்கு முடிவுற்ற சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியையும் (பிற்பாடுதான் கொடியில் சிறிது மாற்றம் செய்தனர்) தமிழர் பெருந்தலைவர் சி.பா. ஆதித்தனார் ஆரம்பித்த 'நாம் தமிழர்' இயக்கப் பெயரையும் 'எடுத்து'க்கொண்டு தமிழக அரசியலில் புரட்சி செய்யக் கிளம்பி இருக்கிறார் அண்ணன் சீமான் அவர்கள் (சொந்த புத்தி எதுவுமில்லை என்கிற விவாதத்திற்கெல்லாம் போக வேண்டாம்).மேதகு பிரபாகரன் அவர்களின் பெயரையும் விடுதலைப் புலிகளின் பெயரையும் மேடைகளில் அவர் சொல்லும்போது எழும் கைத்தட்டல்களையும், சேரும் கூட்டத்தையும் நாம் தமிழர் கட்சி தவறாக மதிப்பீடு செய்துகொண்டது என்பது அக்கட்சியின் அடுத்தடுத்த செயல்பாடுகளில் அம்பலமாகிக் கொண்டேயிருக்கிறது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியின் துரோகத்தை எதிர்த்து அதிமுகவுக்கு வாக்கு கேட்டு மேடைதோறும் முழங்கினார் சீமான். கே.ஏ.செங்கோட்டையன், ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களைவிட வார்த்தைக்கு வார்த்தை 'அம்மா' என்று உச்சரித்தார். 'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்றார். 'ஈழத்தாய்' என்று ஜெயலலிதாவை வாயாரப் புகழ்ந்தார். 'அம்மா'வைப் புகழ்வது அண்ணன் சீமானின் உரிமை; அதற்குள் நாம் போகவில்லை. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 'அம்மா' அரியணை ஏறிய பின் தமிழீழப் பிரச்சனையில் 'ஈழத் தாய்' போல் செயல்பட்டாரா? இலை மலர்ந்தது! ஈழம் மலர்ந்ததா? என்ற கேள்வியைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. 

    பழ.நெடுமாறன் அவர்களுக்கு கருணாநிதி மீது இருப்பது போன்ற பகை சீமானுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயலலிதா மீது இருப்பது போன்ற விசுவாசம் சீமானுக்கு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மக்கள் விரோதப் போக்குக்கு எதிராக ஒரு போராட்டம்கூட இதுவரை சீமான் நடத்தாதற்குக் காரணம் என்ன? பால் விலை, மின் கட்டணம், பேருந்து கட்டண உயர்வின்போது கூட தமிழக அரசைக் கண்டித்து தமது இடது கையைத் தூக்கிப் போராட்டம் நடத்தவில்லையே! பரமக்குடியில் தலித்துகள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தோ அல்லது விழுப்புரம் மாவட்டத்தில் இருளர் பெண்களை ஜெயலலிதா அரசின் போலீசு பாலியல் வன்முறை செய்த கொடுமையையோ கண்டித்து போராட்டம் நடத்தவில்லை. 

    இந்த லட்சணத்தில்தான் "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று - மாற்று அரசியல் புரட்சி" 

    "நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல - புரட்சிவாதிகள்" 

    - என்கிற பிரகடனத்தை செய்திருக்கிறார்கள். 

    நாம் தமிழர் கட்சியின் ஆவணத்தைப் படிக்கும்போதே தலை சுற்றுகிறது. தேமுதிகவின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கட்சியின் கொள்கையைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்திக் பேசுவதைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். ஆனால் 'நாம் தமிழர் கட்சி'யின் ஆவணத்தைத்தான் நாம் புரிந்துகொள்ள முடியவில்லை. 

    முதலில், "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று" என்று சொல்வதுதான் புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக, திமுக, தேமுதிக போன்ற கட்சிகளைப் போலத்தான் பேனர்கள் வைக்கிறார்கள், சுவரொட்டி ஒட்டுகிறார்கள், மாநாடு போடுகிறார்கள், கொடி பிடிக்கிறார்கள், 'வாழ்க சீமான்' முழக்கமிடுகிறார்கள். ஆவணத்தின் நடத்தை விதிகள்கூட புதிதாகவோ அல்லது முற்போக்கானதாகவோ இல்லை. அப்புறம் எங்கிருந்து வந்தது மாற்று அரசியல் புரட்சி? 

    "நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர் - புரட்சிவாதிகள்" என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன் ஏதோ தமிழ்த் தேச அரசை அமைக்கப் படை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றப் போகிறார்களோ என்று பார்த்தால்... 

    "கட்சி பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும் என்று கட்சி உறுதிஅளிக்கிறது" (பிரிவு 5 - பக்கம் 102) 

    இதுதான் புரட்சிவாதிகளுக்கான இலக்கணமாம். 

    'புரட்சி வரப்போகிறது. புரட்சி வருகிறது' என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக உண்டியல் குலுக்கிக்கொண்டே சில தோழர்கள் சொல்வார்கள். அந்தப் புரட்சி இதுதானோ என்ன எழவோ தெரியவில்லை. 

    அட இதுகூட போகட்டும். தமிழ்நாட்டில் நிலவும் முரண்பாடுகள் என வரிசைப்படுத்துகிறார்கள். தமிழ்த் தேசிய இனத்திற்கும் இந்திய தேசிய இனத்திற்குமான முரண்பாடு, தமிழ்த்தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்கும் முரண்பாடு... என்று பத்து வகை முரண்பாடுகளை வரிசைப்படுத்துகிறார்கள். 

    இந்திய தேசிய இனம், திராவிட தேசிய இனம் என்று உண்டா என்பதை விளக்க வேண்டும். தேசிய இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்ன என்பதுகூடத் தெரியாமல் ஆவணம் வரிசைப்படுத்துகிறது. 

    சரி இதுகூடப் போகட்டும். "மேல்சாதி - கீழ்ச்சாதி, தீண்டாமைக்குள்ளானோர் - தீண்டாமை புரிவோர் இடையே முரண்பாடு" 

    "ஆணாளுமை- பெண்ணடிமை முரண்பாடு" - பக்கங்கள் 39, 40) 

    இந்த முரண்பாடுகள் மேற்கட்டுமான முரண்பாடுகளாம். 'ஆட்டுக்கும் நாலு காலு; மாட்டுக்கும் நாலு காலுன்னு பெரிய பெரிய தத்துவமெல்லாம் சொல்றீங்களே' என்று நடிகர் ஜனகராஜைப் பார்த்துச் சொல்வதைப்போல்தான் இருக்கிறது இந்த மேற்கட்டுமானம் கண்டுபிடிப்பு. 

    தீண்டாமை, காணாமை, அண்டாமை என்கிற சமூகக் கொடுநெறி இருந்ததை நாம் தமிழர்கள் அறிவார்களா? நாடார் சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட காணாமைக்கு எதிராகத்தான் குமரி மாவட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எதிர்த்து அய்யா வைகுண்டர் போராடினார் என்கிற வரலாறு நாம் தமிழர்களுக்குத் தெரியுமா? தொட்டால் தீட்டு என்கிற சமூகக் கொடுமை எப்படியெல்லாம் வடிவம் மாறி இப்போதும் தொடர்வதை நாம் தமிழர்கள் உணர்வார்களா? 

    நெல்லை மாவட்டம் குறிஞ்சான்குளத்தில் கோவில் வழிபாட்டு உரிமை கோரியதால் 5 தலித்துகள் கதறக் கதற கழுத்தறுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். 

    கடலூர் மாவட்டம் புளியங்குடியில் 3 தலித்துகள் தூங்கிக் கொண்டிருக்கும்போது கழுத்தறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். மதுரை மாவட்டம் மேலவளவில் தேர்தலில் நிற்க முயன்றதற்காக பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த 7 தலித்துகளை வெட்டிக் கொன்றார்கள். மாவீரன் இமானுவேல் சேகரன் சமூக உரிமை கோரியதற்காகக் கொல்லப்பட்டார். எப்போதெல்லாம் தலித்துகள் தலைநிமிர முயல்கிறார்களோ அப்போதெல்லாம் பெரும் வன்முறை தலித்துகள் மீது திணிக்கப்பட்டது. தேனி, போடி கலவரமாகட்டும் மற்ற தென்மாவட்டங்களில் நடைபெற்ற கலவரமாகட்டும் எல்லாமே இப்படித்தான் வெடித்தன. 

    இதுவெல்லாம் மேற்கட்டுமானமாம். 

    "இந்திய தேசியத்திற்கு அடிப்படை இந்துத்துவம். இந்துத்துவத்திற்கு அடிப்படை சாதியம். சாதியம்தான் இந்துத்துவத்தையும் இந்திய தேசியத்தையும் காப்பாற்றுகிறது" 

    புரட்சியாளர் அம்பேத்கர் மிக ஆழமாக ஆய்வு செய்து சாதி ஒழிப்புக்கான களத்தைத் தேர்வு செய்து களமாடினார். தந்தை பெரியார் அதற்காகத்தான் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்துத்துவ எதிர்ப்புக் கொள்கைகளையும் முன்வைத்து சாகும் வரை போராடினார். வடக்கே ஜோதிராவ் பூலே முதல் தெற்கே அய்யா வைகுண்டர் வரை வாழ்நாள் முழுக்க சாதி ஒழிப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். 

    சாதிவெறியில் சேரிக் குடிசைகள் தீக்கிரையாயின. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது. பொதுப்பாதையில் நடக்க முடியாது. கோவிலுக்குள் நுழைய முடியாது. பொது நீரோட்டத்தில் கலக்க முடியாது. சேரித் தமிழர்களின் வலியும் வேதனையும் 'நாம் தமிழர்' என்று சொல்லுபவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதால்தான் பன்னெடுங்காலமாக தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் 'சாதியம்' மேற்கட்டுமானம் என்று சொல்ல முடிகிறது. 

    சிவகங்கை மாவட்டத்தில் இன்னமும் 'நாடு கட்டமைப்பு' என்கிற சாதியக் கட்டமைப்பு இருப்பதை அம்மாவட்டத்தில் பிறந்த அண்ணன் சீமான் அறிவாரா என்பது தெரியவில்லை. கரியமாணிக்கம் அம்பலமும் அவருக்குப் பின் வந்த அவரது மகன் ராமசாமி அம்பலமும் சிவகங்கை மாவட்டத்தையே தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கொடுமையை 'நாம் தமிழர்'கள் அறிவார்களா? அங்கு தலித்துகளின் நிலை என்ன என்பதற்கு கண்டதேவி கோவிலே சாட்சி. இன்னமும் வடம்பிடிக்கவே முடியாத கொடுமையைச் செய்வதும் தமிழர்கள்தான். இதைத்தான் 'மேற்கட்டுமானம்' என்று சொல்கிறார்கள் போலும். 

    இந்தியக் கட்டமைப்பு குறித்தும் இந்துத்துவ பாசிசம் குறித்தும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையான சாதியம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பல தொகுப்புகள் உள்ளன. அவற்றை எல்லாம் தயவுகூர்ந்து 'நாம் தமிழர்கள்' படிப்பதுதான் அறிவுடைமை. குறைந்தபட்சம் பாவலர் தணிகைச்செல்வன் அவர்களின் தேசியமும் மார்க்சியமும் என்கிற நூலையாவது வாசிப்பது நல்லது. 

    இந்துத்துவத்தை உடைத்தால்தான் சாதியத்தை வேரறுக்க முடியும் என்பதை ஆய்வு செய்த பின்புதான் புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறினார். இந்துத்துவம் சக மனிதர்களை இழிவுபடுத்துகிறது; மனிதர்களாக அங்கீகரிக்க மறுக்கிறது என்பதால்தான் தமிழகத்திலும் கிறித்தவர்களாக, இசுலாமியர்களாக மதம் மாறினார்கள். கிறித்தவம் வந்த பிறகுதான் தலித்துகள் படிக்கவே ஆரம்பித்தார்கள். நல்ல உடை உடுத்த ஆரம்பித்தார்கள். நல்ல உணவு உண்ண ஆரம்பித்தார்கள். அதற்கு முன்பு வரை தலித்துகள் படிப்பதே மனுதர்மத்திற்கு எதிரானது என்ற நிலை இருந்தது. அந்த மனுதர்மத்தின் சட்ட வடிவம்தான் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம். 

    இப்படியாக இந்துத்துவ பாசிச அடக்குமுறைக்கு எதிராகத்தான் தமிழகத்தில் தலித்துகள் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்னணி தெரியாமல் கிறித்தவ முரண்பாடு, இசுலாமிய முரண்பாடு என்று உளறுவதெல்லாம் இந்துத்துவத்திற்கு, மனுதர்மத்திற்கு, பார்ப்பனியத்திற்கு சாமரம் வீசுவதாகத்தான் அமையும். வரலாற்று அறிஞர்களும் சமூக அறிஞர்களும் இன்னும் சமூகத்தைச் சீர்திருத்த வந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் இந்துத்துவத்தையும் அதற்கு அடிப்படையாக இருக்கிற சாதியத்தையும் வேரறுக்க வேண்டும் என்று பரப்புரை செய்துவிட்ட‌ பிறகு, அந்த இந்துத்துவ பாசிசம் குறித்து 'நாம் தமிழர்கள்' வாய் திறக்காததை திட்டமிட்ட சதியாகவே கருத முடிகிறது. கிறித்தவர்களும் இசுலாமியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்பதை ஒருபோதும் ராமகோபாலன்களும் அத்வானிகளும் மோடிகளும் ஏற்றுக்கொண்டதில்லை. இவர்கள் வழியில் சீமான்களும் ஏற்கவில்லை என்பதைத்தான் நாம் தமிழர் ஆவணம் பிரகடனப்படுத்துகிறது. குஜராத்தில் மோடி செய்த சிறுபான்மை இன அழித்தொழிப்பை இங்குள்ள 'சோ' கும்பலும் இந்துத்துவக் கும்பலும் 'புரட்சி' என்று சொல்வதைப் போலத்தான் நாம் தமிழரின் 'புரட்சிவாதிகள்' அறிவிப்பா? 

    இந்த ஆவணத்தின் உச்சக்கட்ட காமெடியாக அமைந்திருப்பது சமுதாய வழிகாட்டிகள், போற்றுதலுக்குரிய பெருமக்கள் (பக்கம் 43, 44) என்கிற பகுதிதான். 

    மனுதர்மத்தைக் கட்டிக் காக்கவும், இந்துத்துவத்தைக் கட்டிக்கா க்கவும், சாதியத்தைக் கட்டிக் காக்கவும் வாழ்நாள் முழுக்க செயல்பட்ட முத்துராமலிங்கத் தேவர், 'நாங்கள் இந்துக்கள் இல்லை' என்று கலகம் செய்த தலித்துகளுக்கெதிராக அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். இத்தகைய அடக்குமுறைக்கெதிராகக் களமாடியவர்தான் மாவீரன் இமானுவேல் சேகரன். 

    இன்றைக்கே சாதியம் தலித்துகள் வாயில் மலம் திணிக்கிறது என்றால் 1960களில் சாதியம் எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இப்படித்தான் மாவீரன் இமானுவேல் சேகரன் சாதிய அடக்குமுறைக்கெதிராகக் களமிறங்கினார். இதைப் பொறுக்க முடியாமல்தான் இமானுவேல் சேகரன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையின் முதல் குற்றவாளி முத்துராமலிங்கத் தேவர்தான். (அரசியல் - சமூகப் பின்புலத்தால் பின்னர் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டார்.) தலித்துகள் இன்றளவும் அக்கொடூரத்தை மறக்கவில்லை. ஆனால் 'நாம் தமிழர்'கள் படுகொலையானவரையும் போற்றுவார்களாம்; கொலைகாரனையும் போற்றுவார்களாம். இதுதான் நாம் தமிழர்களின் புரட்சியா? 

    ஒருமுறை அண்ணன் சுபவீ, தோழர் தியாகு ஆகியோர் முல்லைப் பெரியாறு நீர்ச்சிக்கல் குறித்து உசிலம்பட்டி வழியாக நடைபயணம் சென்றார்கள். வழியில் செக்கானூரணியில் நடைபயண விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் தமிழ் தமிழர் இயக்கத் தோழர்கள். "பொதுக்கூட்ட மேடைக்குப் போகும்முன் தேவர் அய்யா சிலைக்கு மாலை போட்டுவிட்டுத்தான் போக வேண்டும். இது இந்த ஊர் வழக்கம்" என்று ஊர் பெருசுகள் சொன்னார்கள். ஆனால் அண்ணன் சுபவீயும் தோழர் தியாகுவும் சிலைக்கு மாலை போட மறுத்து பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்துவிட்டுத் திரும்பினார்கள். பின்னர் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சுபவீ அவர்களும், தியாகு அவர்களும் பேசும்போது, "முத்துராமலிங்கத் தேவர் ஓர் ஆதிக்கத்தின் குறியீடு. ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். ஆகவே அந்த சிலைக்கு மாலை அணிவிக்க விரும்பவில்லை" என்று கூறினார்கள். சமூகத்தைத் தலைகீழாக மாற்ற விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் இந்தத் துணிச்சலாவது இருக்க வேண்டும். கொலைகாரனுக்கும் வீரவணக்கம்; கொலையுண்ட மாவீரனுக்கும் வீரவணக்கம் என்பது ஏமாற்று வேலையல்லாமல் வேறென்ன? 

    அடுத்தபடியாக, செயற்பாட்டுக் கொள்கைகள் என்கிற தலைப்பில் சொல்லப்பட்டுள்ள 11வது செயற்பாட்டைப் பாருங்கள். "சாதிய, சமய மேலாளுமையை ஒழிப்போம். சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம். பிறப்புவழி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உதவிகளையும் தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் பெயரளவில் திட்டமிட்டுச் செய்வோம். சாதி, சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். தமிழர் திருமண மண்டபங்கள், தமிழர் சுடுகாடு, தமிழர் இடுகாடு அமைப்போம்". 

    இப்படி, மொத்தம் 36 செயற்பாட்டுப் பணிகளைச் செய்யப்போவதாக அறிவித்திருப்பதில் இந்த 11வது செயற்பாட்டுக் கொள்கையை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியை 'நாம் தமிழர்கள்' எப்படிப் புரிந்திருக்கிறார்கள் என்பது புரியும். 

    சாதிய, சமய மேலாளுமையை ஒழிப்பார்களாம். சாதியும் சமயமும் இருக்க ஆளுமையை மட்டும் ஒழிப்பார்களாம். எப்படி என்றுதான் புரியவில்லை. நாமோ, "வீடு நாறுகிறது. வீட்டிலிருக்கிற மலத்தை, (சாதி-சமயம்) அப்புறப்படுத்த வேண்டும் என்கிறோம். 'நாம் தமிழர்'களோ ஆளுமை செய்கிற அந்த நாற்றத்தை மட்டும் ஒழிக்கப் போகிறார்களாம். 

    பிறப்புவழி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உதவிகளையும் தொழில் தொடங்குவதற்கான உதவிகளையும் செய்வதாக அறிவித்துள்ளார்கள். அது என்ன பிறப்பு வழி ஒடுக்கப்பட்டவர்கள் என்று தெரியவில்லை. செருப்புத் தைக்கும் சக்கலியருக்கும் பிணம் எரிக்கும் வெட்டியானுக்கும் சவரம் செய்யும் நாவிதனுக்கும், துணி வெளுக்கும் வண்ணாருக்கும் கல்விக்கான உதவி செய்து மீண்டும் இதே தொழிலைச் செய்ய உதவி செய்யப் போகிறார்களா? இவர்கள்தான் பிறப்புவழி ஒடுக்கப்பட்டவர்கள் என்று 'நாம் தமிழர்' அடையாளம் காட்டுகிறதா? இதுதான் அந்த அடையாளம் என்றால் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்கும் 'நாம் தமிழரின்' இச்செயற்பாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அத்தோடு இல்லாமல் தமிழர் சுடுகாடு, தமிழர் இடுகாடுகளை அமைப்பார்களாம். இன்னமும் நாமக்கல் மாவட்டம் மொஞ்சனூரில் தலித்துகளின் பிணத்தை எடுத்துப் போகப் போராட வேண்டியிருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இந்தக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் 'நாம் தமிழர்கள்' கவலைப்படாமல் தமிழர் சுடுகாடு அமைக்கப் பாடுபடுவார்களாம். தமிழர்களிலேயே எந்தத் தமிழன்? என்ன சாதி? சாதியில் என்ன பிரிவு? பிரிவில் என்ன வகையறா? என்றெல்லாம் தமிழன் கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறான். இதனை ஒழிக்க முன்வராமல் தமிழர் சுடுகாடாம், தமிழர் இடுகாடாம். 23ஆம் புலிகேசி மன்னன் சாதிச் சண்டை போடுமிடம் என்று அமைத்ததுபோலத்தான் நாம் தமிழரின் இந்தச் செயற்பாடு. 

    முதலில் 'நாம் தமிழர்' என்று முழங்குபவர்களுக்கு தமிழகச் சூழலில் தமிழர்களுக்கு எது முதன்மையான பிரச்சனை? தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பது எது என்கிற வரலாற்று, சமூக, அரசியல் அறிவு அவசியம். பன்னெடுங்காலமாக கூறுபோடுவது சாதியும் மதமும்தான். இவைதான் தமிழரின் வீழ்ச்சிக்கு மூலம். ஊர் என்றும் சேரி என்றும் இரண்டு குடியிருப்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இதைவிட வேறு என்ன அவமானம் இருக்கிறது? தமிழர்களே ஊர்த்தெரு தமிழர்களாகவும், சேரித்தெரு தமிழர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். சக மனிதன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்படும் நிலைகண்டு கொதிக்காதவன் என்ன புரட்சி பேசி என்ன ஆகப்போகிறது? 

    விரட்டி விரட்டிக் கொல்லப்படுகிறார்கள்; சேரிப் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள்; சேரிகள் தீக்கிரையாக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாய் சொந்தக்காரர்களின் வீடுகளில் சென்று தங்குகிறார்கள்; நாயைப் போல் காவல்துறையால் நடுத்தெருவில் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்... சாதியின் பெயரால் தலித்துகள் மீது இத்தகைய அடக்குமுறைகள் திணிக்கப்படுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் விடுதலைத் தாகம் மட்டும் இன்னும் குறையவில்லை. 

    அனைத்து வகை ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற தலித்துகள் இன்னமும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சிங்களவனின் ஒடுக்குமுறைக்கெதிரான தமிழனின் விடுதலைப் போராட்டமும், சாதிவெறித் தமிழர்களுக்கெதிரான சேரித் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான். அங்கு சிங்களவன் தமிழனை சுட்டுக் கொல்கிறான். இங்கு தமிழனே இன்னொரு தமிழனை வெட்டிக் கொல்கிறான். பெயர்தான் மாற்றம்; ஆதிக்கம் ஒன்றுதான். விடுதலைப் போராட்டம் என்பதை சொந்த மண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும். தலித்துகள் அனைத்து வகை ஒடுக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற்றால்தான் தமிழர் விடுதலை சாத்தியமாகும். பிற மனிதனின் இழிவை, ஒடுக்குமுறையை ஒழிக்காமல் தமிழீழத்திற்காகப் போராடுவோம் என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலைதான். இது 'நாம் தமிழர்'களுக்கு மட்டுமல்ல; தமிழ்த் தேசியவாதிகள் அனைவருக்கும் பொருந்தும். 

    முதலில் சாதி, மதம் குறித்த வரலாற்றைப் படிக்க வேண்டும். அப்புறம் அது புரிய வேண்டும். அப்புறம்தான் புரட்சி செய்ய மக்களைத் திரட்ட வேண்டும். அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய் என்றார். 'நாம் தமிழர்கள்' முதலில் கற்க வேண்டும். அப்புறம்தான் மற்றவை. 

    மீண்டும் வடிவேலு காமெடியோடவே இவ்விவாதத்தை முடிப்போம் - 

    "அய்யோ... இப்பவே கண்ணைக் கட்டுதே...!"

-தமிழகத்திலிருந்து  வன்னிஅரசு  -

மாநில செய்தித்தொடர்பாளர் 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

 

Link to comment
Share on other sites

இங்கு வன்னியரசு  சீமான் இரண்டுமே  மட்டைகள்தான் இருவருமே சமாதான காலத்தில் வன்னிக்கு போய் படம் எடுத்து வந்து படம் காட்டுபவர்கள்.வன்னியரசு ஒரு  மெல்லைமாரி என்றால் சீமான் ஒரு முடிச்சவிக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வன்னியரசு  சீமான் இரண்டுமே  மட்டைகள்தான் இருவருமே சமாதான காலத்தில் வன்னிக்கு போய் படம் எடுத்து வந்து படம் காட்டுபவர்கள்.வன்னியரசு ஒரு  மெல்லைமாரி என்றால் சீமான் ஒரு முடிச்சவிக்கி

 

அவர்கள் படம் எடுப்பதற்கு என்றாலும் வன்னிக்கு போனவர்கள்.
நாங்கள் ........????
Link to comment
Share on other sites

சத்தியராசுவும் ஈழ அகதிகளுக்கு உதவிக்கொண்டிருக்கிறார். அவரும் ஈழ அகதிகளை வைத்து முல்லைமாரித்தனம் பண்ணுவதாகவே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

யார் எவ்வளவு ஊளையிட்டாலும் அதையெல்லாம் புறக்கணித்து விட்டு 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் சீமான் அண்ணாவுக்கு ஆதரவு வழங்குங்கள். :D

 

பி.கு: நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவள் அல்ல என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். :icon_idea:

Link to comment
Share on other sites

எங்களுக்கு தெரியாமல் போயிட்டு அழிக்கபடுவம் என்று அல்லது ஒரு படமாவது எடுத்து வைத்து இருந்தா இப்ப உதவி இருக்கும் நோகாமல் வாழ :D :D

 

என்ன துளசி சொல்லுறியள் நீங்கதான் கொ..ப ..செ..என்று சொல்லினம் . :rolleyes:

Link to comment
Share on other sites

எங்களுக்கு தெரியாமல் போயிட்டு அழிக்கபடுவம் என்று அல்லது ஒரு படமாவது எடுத்து வைத்து இருந்தா இப்ப உதவி இருக்கும் நோகாமல் வாழ :D :D

 

என்ன துளசி சொல்லுறியள் நீங்கதான் கொ..ப ..செ..என்று சொல்லினம் . :rolleyes:

 

சீமான் அண்ணா அங்கு நோகாமல் வாழவில்லை. மக்களை திரட்டி போராடிக்கொண்டிருக்கிறார். :)

கொ.ப.செ க்கு பொருத்தமான ஆள் பையன் அண்ணா தான். :D:)

Link to comment
Share on other sites

சீமான் அண்ணா அங்கு நோகாமல் வாழவில்லை. மக்களை திரட்டி போராடிக்கொண்டிருக்கிறார். :)

கொ.ப.செ க்கு பொருத்தமான ஆள் பையன் அண்ணா தான். :D:)

 

40 லட்சம் ரூபா ஏசி வாகனம் ..சுற்றி பத்து காவலர் ..360 பகையில் எங்கும் சூட்டிக் கமரா போற இடம் எல்லாம் ஒரு சினிமா பிள்டாப்பு இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேணும் வாழ கொடுத்து வைத்த மனிதன் .

 

நம்ம  அண்ணன் காட்டிலும் பாம்பு புற்றிலும் நுளம்பு கடியிலும் தூக்கத்தை தொலைத்து கட்டி எழுப்பிய போராட்டம் எவனோ ஒருவன் அவர் தியாகத்தில் குளிர் காயுறான் :( :(

Link to comment
Share on other sites

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்தும், அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறித்தி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள்/மறியல்கள்/ஆர்பாட்டங்கள்/முற்றுகைகளின் தொகுப்பு:-

--------------------------------------------------------------------------

10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக ரயில் மறியல்/கைது.

10/11/2013 அன்று .நீலமலை நாம் தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகை/கைது.

10/11/2013 அன்று திருப்பூரில் தொடர் வண்டி மறியல்/கைது.

09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்/கொடும்பாவி எரிப்பு/கைது.

09/11/2013 அன்று திருவள்ளூர் கி.மாவட்டம் சார்பாக மாதவரத்தில் பட்டினிப்போராட்டம்.

07/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி வால்பாறை சார்பில் ஆர்ப்பாட்டம்.

08/11/13 அன்று பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

07/11/2013 அன்று திருநெல்வேலி மே.மா சார்பாக சங்கரன் கோவில் ரயில் மறியல் போராட்டம்/கைது.

07/11/2013 அன்று திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக பெருங்குடியில் ஆர்பாட்டம்/கைது.

07/11/2013 அன்று மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியல் போராட்டம்/கைது.

06/11/2013 அன்று கோவையில் தொடர்வண்டியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் யானைமலையின் உச்சியில் போராட்டம்.

05/11/2013 அன்று நீலமலையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகைப் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.

05/11/2013 அன்று புதுச்சேரியில் அண்ணன் சீமான் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம்.

04/11/2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக போராட்டம்.

01/11/2013 அன்று சிவகங்கையில் சாகும் வரை பட்டினி போராட்டம் தொடக்கம்.

01/11/2013 அன்று வேலூர் மாவட்டம் சார்பாக தபால் நிலைய பூட்டு போடும் போராட்டம்/கைது.

29/10/2013 அன்று ஆற்காடு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/கைது.

29/10/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நடைபயணம்.

27/10/2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

26/10/2013 அன்று விழுப்புரத்தில் உண்ணாநிலை போராட்டம்

25/10/2013 அன்று சென்னை திருவான்மியூரில் பெருந்திரள் கண்டன பொதுக்கூட்டம்..

22/10/2013 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்மத்திய அரசு அலுவல முற்றுகை போராட்டம்/கைது.

21/10/2013 அன்று மதுரை மாவட்டம் சார்பில் பாஸ்போர்ட் அழுவலகம் முற்றுகை/கைது.

20/10/2013 அன்று கூடலூரில் நீலமலை மாவட்டம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம்.

20/10/2013 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம்..

19/10/2013 அன்று நெல்லை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

18/10/2013 அன்று திருப்பூர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பு.

17/10/2013 அன்று கும்பகோணத்தில் தெருமுனை பிரச்சாரம்..

16/10/2013 அன்று கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலக முற்றுகை/கைது.

15/10/2013 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

15/10/2013 அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பட்டினி போராட்டம்.

08/10/2013 அன்று கோவையில் மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்.

# போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி..

 

1461703_661997953839817_925601209_n.jpg

 

(facebook)

Link to comment
Share on other sites

40 லட்சம் ரூபா ஏசி வாகனம் ..சுற்றி பத்து காவலர் ..360 பகையில் எங்கும் சூட்டிக் கமரா போற இடம் எல்லாம் ஒரு சினிமா பிள்டாப்பு இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேணும் வாழ கொடுத்து வைத்த மனிதன் .

நம்ம அண்ணன் காட்டிலும் பாம்பு புற்றிலும் நுளம்பு கடியிலும் தூக்கத்தை தொலைத்து கட்டி எழுப்பிய போராட்டம் எவனோ ஒருவன் அவர் தியாகத்தில் குளிர் காயுறான் :( :(

அன்று பிரெஞ்சுப் புரட்சியின் மூலம் மக்கள் அரச பரம்பரையை விரட்டினார்கள்.. உயிர் துறந்தார்கள்.. சம்பந்தமில்லாத நீங்கள் இப்ப அறுவடை செய்கிறீங்களே.. நியாயமா? :(:D

Link to comment
Share on other sites

அன்று பிரெஞ்சுப் புரட்சியின் மூலம் மக்கள் அரச பரம்பரையை விரட்டினார்கள்.. உயிர் துறந்தார்கள்.. சம்பந்தமில்லாத நீங்கள் இப்ப அறுவடை செய்கிறீங்களே.. நியாயமா? :(:D

 

கோப்பை கழுவுரம் அதுக்கும்  வரி கட்டுறம் சும்மா இருக்க அவனும் விடவில்லை நாங்களும் அப்படி இல்லை இசை . :D :D

 

 

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்தும், அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறித்தி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள்/மறியல்கள்/ஆர்பாட்டங்கள்/முற்றுகைகளின் தொகுப்பு:-

--------------------------------------------------------------------------

10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக ரயில் மறியல்/கைது.

10/11/2013 அன்று .நீலமலை நாம் தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகை/கைது.

10/11/2013 அன்று திருப்பூரில் தொடர் வண்டி மறியல்/கைது.

09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்/கொடும்பாவி எரிப்பு/கைது.

09/11/2013 அன்று திருவள்ளூர் கி.மாவட்டம் சார்பாக மாதவரத்தில் பட்டினிப்போராட்டம்.

07/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி வால்பாறை சார்பில் ஆர்ப்பாட்டம்.

08/11/13 அன்று பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம்.

07/11/2013 அன்று திருநெல்வேலி மே.மா சார்பாக சங்கரன் கோவில் ரயில் மறியல் போராட்டம்/கைது.

07/11/2013 அன்று திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக பெருங்குடியில் ஆர்பாட்டம்/கைது.

07/11/2013 அன்று மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியல் போராட்டம்/கைது.

06/11/2013 அன்று கோவையில் தொடர்வண்டியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் யானைமலையின் உச்சியில் போராட்டம்.

05/11/2013 அன்று நீலமலையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகைப் போராட்டம்/கைது.

05/11/2013 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம்.

05/11/2013 அன்று புதுச்சேரியில் அண்ணன் சீமான் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம்.

04/11/2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக போராட்டம்.

01/11/2013 அன்று சிவகங்கையில் சாகும் வரை பட்டினி போராட்டம் தொடக்கம்.

01/11/2013 அன்று வேலூர் மாவட்டம் சார்பாக தபால் நிலைய பூட்டு போடும் போராட்டம்/கைது.

29/10/2013 அன்று ஆற்காடு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/கைது.

29/10/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நடைபயணம்.

27/10/2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

26/10/2013 அன்று விழுப்புரத்தில் உண்ணாநிலை போராட்டம்

25/10/2013 அன்று சென்னை திருவான்மியூரில் பெருந்திரள் கண்டன பொதுக்கூட்டம்..

22/10/2013 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்மத்திய அரசு அலுவல முற்றுகை போராட்டம்/கைது.

21/10/2013 அன்று மதுரை மாவட்டம் சார்பில் பாஸ்போர்ட் அழுவலகம் முற்றுகை/கைது.

20/10/2013 அன்று கூடலூரில் நீலமலை மாவட்டம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம்.

20/10/2013 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம்..

19/10/2013 அன்று நெல்லை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம்.

18/10/2013 அன்று திருப்பூர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பு.

17/10/2013 அன்று கும்பகோணத்தில் தெருமுனை பிரச்சாரம்..

16/10/2013 அன்று கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலக முற்றுகை/கைது.

15/10/2013 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

15/10/2013 அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பட்டினி போராட்டம்.

08/10/2013 அன்று கோவையில் மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம்.

# போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி..

 

1461703_661997953839817_925601209_n.jpg

 

(facebook)

 

இப்படி கருணாநிதி தமிழுக்கு செய்ததை பட்டியல் இடுங்க யாழ் கானது துளசி .

வைகோ செய்ததை பட்டியல் இடுங்க

பட்டியல்  அல்ல முக்கியம் ...!

Link to comment
Share on other sites

சீமான் காய்ச்சல் இப்பிடி பலமாகிக்கொண்டே வருது ..................... :icon_mrgreen:  :lol:

Link to comment
Share on other sites

இப்படி கருணாநிதி தமிழுக்கு செய்ததை பட்டியல் இடுங்க யாழ் கானது துளசி .

வைகோ செய்ததை பட்டியல் இடுங்க

பட்டியல்  அல்ல முக்கியம் ...!

 

நான் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைக்கிறேன் என்பதற்காக வைகோ ஐயாவுக்கு எதிர் கிடையாது. என் கண்ணில் படும் அவர் போராட்ட செய்திகளையும் யாழில் இணைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். :)

 

சீமான் அண்ணா சும்மா இருப்பதாக நீங்கள் கூறியதற்காக இந்த திரியில் நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தை இணைத்தேன்.

 

கருணாநிதி தமிழுக்கு என்ன செய்தார் என்பது எனக்கு தேவையில்லாதது. <_< தமிழர்களுக்கு என்ன செய்தார் என்பது தான் எனக்கு தேவையானது. <_<

 

அவர் முதல்வர் என்ற பதவியை வைத்துக்கொண்டு செய்ய தவறியதையும், மற்றவர்களது போராட்டத்தை முடக்கியதையும், ஊடகங்கள் ஈழப்படுகொலை செய்தியை பிரசுரிக்காதவாறு முட்டுக்கட்டை போட்டதையும் தமிழினம் மன்னிக்காது. <_<

 

Link to comment
Share on other sites

நான் சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக கதைக்கிறேன் என்பதற்காக வைகோ ஐயாவுக்கு எதிர் கிடையாது. என் கண்ணில் படும் அவர் போராட்ட செய்திகளையும் யாழில் இணைத்துக்கொண்டு தான் இருக்கிறேன். :)

 

சீமான் அண்ணா சும்மா இருப்பதாக நீங்கள் கூறியதற்காக இந்த திரியில் நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தை இணைத்தேன்.

 

கருணாநிதி தமிழுக்கு என்ன செய்தார் என்பது எனக்கு தேவையில்லாதது. <_< தமிழர்களுக்கு என்ன செய்தார் என்பது தான் எனக்கு தேவையானது. <_<

 

அவர் முதல்வர் என்ற பதவியை வைத்துக்கொண்டு செய்ய தவறியதையும், மற்றவர்களது போராட்டத்தை முடக்கியதையும், ஊடகங்கள் ஈழப்படுகொலை செய்தியை பிரசுரிக்காதவாறு முட்டுக்கட்டை போட்டதையும் தமிழினம் மன்னிக்காது. <_<

 

 

பதவியை வைத்து ஒன்னும் பண்ண முடியாது எவரா இருந்தாலும் இறையான்மை முக்கியம்

கூட கதைச்சா ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநருக்கு அதிகாரம் போகும் இந்திய சட்டம் அப்படி அதை விளங்கி கொள்ளுங்க முதல் .

Link to comment
Share on other sites

பதவியை வைத்து ஒன்னும் பண்ண முடியாது எவரா இருந்தாலும் இறையான்மை முக்கியம்

கூட கதைச்சா ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநருக்கு அதிகாரம் போகும் இந்திய சட்டம் அப்படி அதை விளங்கி கொள்ளுங்க முதல் .

 

அதை பற்றி நீங்கள் எதற்கு கவலைப்படுகிறீர்கள்? :D கருணாநிதி, ஜெயலலிதா க்கு பதிலாக ஒருதடவை சீமான் அண்ணா வருவதால் ஒரு நட்டமும் இல்லை. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆற்றிய உரை

 

http://www.youtube.com/watch?v=qPeJwbymELQ#t=743

 

 

 

 

.முல்லைத்தீவை பிரதிநிதித்துவப்படுத்தும் வட மாகாண சபை உறுப்பினர் 

அவர்களைவிட

எவரும் அந்த மக்களின் மனநிலையை  சொல்லமுடியாது

இவர்

தம்பி  சீமான் என்கிறார்

அவருக்கே முதலாவது மரியாதையும்  (சபைத்தலைவரை தவிர்த்து) தருகிறார்

ஏன்???

Link to comment
Share on other sites

கோப்பை கழுவுரம் அதுக்கும்  வரி கட்டுறம் சும்மா இருக்க அவனும் விடவில்லை நாங்களும் அப்படி இல்லை இசை . :D :D

 

உழைக்கும் உங்கள் கரங்களை முதற்கண் வணங்கிக்கொண்டு.. :D

 

உங்கள் நியாயம் சீமானுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.. சீமானும் தொண்டை கிழியக் கத்தித்தான் இன்று உள்ள நிலைமையில் உள்ளார்.. அதில் எந்த இழிவும் இல்லையே.. :D அவர் எதை நம்புகிறாரோ, அதை மக்களும் நம்பினால் அவர் முன்னுக்கு வருவார்.. இல்லாவிட்டால் மறுபடியும் படம் எடுக்கப் போவார்.. :D

Link to comment
Share on other sites

2016 இல் சீமான் பத்து தொகுதிகள் வென்றாலே பெரிய விடயம் .

 

2016 இல் கடினம். ஆனால் முயற்சி செய்யட்டும். :rolleyes: இதில் வெல்லாவிட்டால் 2021 இல் முடியும் என்ற நிலை வரலாம். :rolleyes: ஆனால் காலம் போய்க்கொண்டிருக்கும். :(

 

Link to comment
Share on other sites

40 லட்சம் ரூபா ஏசி வாகனம் ..சுற்றி பத்து காவலர் ..360 பகையில் எங்கும் சூட்டிக் கமரா போற இடம் எல்லாம் ஒரு சினிமா பிள்டாப்பு இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேணும் வாழ கொடுத்து வைத்த மனிதன் .

 

நம்ம  அண்ணன் காட்டிலும் பாம்பு புற்றிலும் நுளம்பு கடியிலும் தூக்கத்தை தொலைத்து கட்டி எழுப்பிய போராட்டம் எவனோ ஒருவன் அவர் தியாகத்தில் குளிர் காயுறான் :( :(

 

 

கோப்பை கழுவுரம் அதுக்கும்  வரி கட்டுறம் சும்மா இருக்க அவனும் விடவில்லை நாங்களும் அப்படி இல்லை இசை . :D :D

 

 

 

இப்படி கருணாநிதி தமிழுக்கு செய்ததை பட்டியல் இடுங்க யாழ் கானது துளசி .

வைகோ செய்ததை பட்டியல் இடுங்க

பட்டியல்  அல்ல முக்கியம் ...!

 

உழைத்த காசில் வரிகட்டி இறக்கிய காரை பற்றி எழுதும் நீங்கள், கருணாநிதி குடும்பம் 2G  கேசில் அடித்தகொள்ளையில் வரிக்காட்டாமல் இறக்கிய சுகுசு காரை ஸ்ரலினிடமிருந்து CPI பறித்து கொண்டு போய் அவரையும் உள்ளே வைத்திருந்ததையும் பற்றி எழுதலாமே. இப்போ கார் எங்கே? ஸ்ரனின் சுகமாக இருக்கிறாரா?. 

Link to comment
Share on other sites

சுபா முத்துக்குமாரன் கொலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன ?

அதுக்கான தீர்வை இன்றுவரை சீமான் கேட்காத மர்மம் என்ன ?

 

நாம் தமிழர் கட்சியை உருவாக்கி வளர்த்து விட்டவன் சுபா முத்துக்குமாரன் குளத்தூர் மணி மறுக்கவே சீமானை தலைவரா போட்டு அதன் ஒருன்,இணைப்பை செய்தவன் சுபா இருக்கும் வரை தன்னால் தனித்து முடிவு எடுக்க முடியாது என்று தெரிந்த சீமான், அவனின் கொலைக்கு உடைந்தையா இருந்தாரா ?

 

முதலில் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் சீமானை பற்றி பேசலாம் சீமான் இன்னொரு ஜெகத் கஸ்ப்பார் காலம் உங்களுக்கு விடை அளிக்கும் என நம்புகிறேன் .

Link to comment
Share on other sites

தி,மு.க, அ.தி.மு.க வுகள் "under 9" படங்கள் மட்டும் பார்க்கிற அப்பாவிகள். கொலை, பாலியல் கொடூரங்களை சொற்களில் தன்னும் கேள்விப்படாத குழந்தைகள். 

 

இவர்களின் ஆட்சியில் நடப்பதை பற்றி ஒரு தமிழ் நாட்டு நண்பர் சொன்னார், " உள்ளே அடிதடி வேறு, பதவிப் போட்டிகளுக்கு தங்களுக்குள் ஒருவர் ஒருவர் போட்டு தள்ளுவது வேறு,  ஆனல் சொத்து சேர்ப்பில் பொது மக்களை கூட போட தயங்க மாட்டார்கள், அழகிரி போன்ற்வர்களுக்கு எதிராக வழக்கு எடுப்பத்தே தலை போகும் விடையம். இவர்கள் நல்ல இடத்தில் ஒரு கணியை கண்டால் நேராக போய் விலை கேட்பார்கள், விலை சொல்லி காணியை கொடுத்து முடிக்காதவ்ர் அதன் பின்னர் எங்கு என்பதை சொல்ல முடியாது" என்று சொல்வார். இந்த வழக்குகள் இன்னமும் இரு கட்சியையும் விட்டு போகவில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, M.G.R. இவர்களின் சரித்திரத்தில் இல்லாததா சீமானின் சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்கு? 

 

கங்கிரஸ் இந்திரா காந்தி வரும் வரைக்கும் இப்படியான திருகுதாள கட்சியாக இருக்கவில்லை. காந்திக்கு சத்திய சோதனை படிப்பிக்கத்தக்க பிரதமராகத்தான் சாஸ்த்திரி இருந்தார். முதல் முதல் பெரிய அரச கொள்ளை ரஜீவ்காந்தியில்தான் ஆரம்பமானது. இன்று திராவிட கட்சிகளையும், காங்கிரசையும் தமிழ் நாட்டால் துரத்த ஒரு வழி கண்டுபிடிக்காவிட்டால், மாநிலம் வருமானத்தில் வந்து பிடித்தாலும். மானத்தில் கீழேதான் போகும்.

 

 

Link to comment
Share on other sites

சுபா முத்துக்குமாரன் கொலை செய்யப்பட்டதன் நோக்கம் என்ன ?

அதுக்கான தீர்வை இன்றுவரை சீமான் கேட்காத மர்மம் என்ன ?

 

நாம் தமிழர் கட்சியை உருவாக்கி வளர்த்து விட்டவன் சுபா முத்துக்குமாரன் குளத்தூர் மணி மறுக்கவே சீமானை தலைவரா போட்டு அதன் ஒருன்,இணைப்பை செய்தவன் சுபா இருக்கும் வரை தன்னால் தனித்து முடிவு எடுக்க முடியாது என்று தெரிந்த சீமான், அவனின் கொலைக்கு உடைந்தையா இருந்தாரா ?

 

முதலில் வரலாறை தெரிந்து கொள்ளுங்கள் பின்னர் சீமானை பற்றி பேசலாம் சீமான் இன்னொரு ஜெகத் கஸ்ப்பார் காலம் உங்களுக்கு விடை அளிக்கும் என நம்புகிறேன் .

 

யார் இந்த முத்துக்குமார்; எதற்காக இந்த படுகொலை, கொலையாளிகள் யார்..?

Posted by எல்லாளன்ஈழம்கருணாநிதிசீமான்நாம் தமிழர் இயக்கம்8:36 AM

 

 

muthukumar2.jpg

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் உயிருக்கு குறி வைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நக்கீரன் தான் சொன்னது. அதன் பிறகு சீமான் பாதுகாப்பாக இருப்பதாக நக்கீரன் பேட்டியிலும் சொல்லி இருந்தார்.

ஆனால் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வேரோடு அழிப்போம் என்றும் பேசி வருகிறார். இந்த நிலையில் தான் சீமானின் கூட்டங்களை ஒருங்கிணைப்பு செய்து வரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான புதுக்கோட்டை சுபா. முத்துக்குமார் பிப்ரவரி 15 ம் தேதி புதுக்கோட்டை இதய பகுதியான அண்ணாசிலை அருகே சுழல் கேமரா கண்காணிப்பு, போலிஸ் பாதுகாப்பு, பொது மக்கள் நடமாட்டத்தையும் கடந்து மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

20 நாட்கள் கடந்தும் துப்பு கிடைக்கவில்லை என்று புதுக்கோட்டை போலிஸ் சொல்லி வாய்தா வாங்கிக் கொண்டு தேடுவது போல தேடுகிறது. மார்ச் 20 ம் தேதிக்குள் கொலையாளிகளை பிடிப்போம் என்று சொல்லும் போலிசுக்கு நாம் தமிழர் சீமான் பகிரங்க போராட்ட அறிவிப்பையும் விட்டுள்ளார். 20 ம் தேதிக்கு பிறகு கோட்டை முற்றுகை முதல் மாநிலமே நடுங்கும் விளைவுகளை போலிஸ் சந்திக்கும் என்பது தான் அந்த அறிவிப்பு.

யார் இந்த முத்துக்குமார், எதற்காக இந்த படுகொலை, யார் செய்தார்கள்..?

திண்டுக்கல் மாவட்டம் பழநியை சொந்த ஊராக கொண்ட முத்துக்குமார் 18 வயதில் விடுதலைப்பபுலிகள் இயக்க தொடர்பு ஏற்பட்டு அங்கிருந்து இயக்க பயிற்சிக்கு இலங்கை சென்று 4 ஆண்டுகள் பயிற்சி முடித்து புதுக்கோட்டைக்கு வந்து பாவாணன் வீட்டில் தங்கி கொண்டு கோட்டைபட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மணமேல்குடி ஆகிய கடற் தளங்களில் இருந்து பெட்ரோல் , டீசல் , ரத்தம் , உணவு , மருந்து போன்ற பொருட்களை கடல் மார்க்கமாக கடத்தி விடுதலைபுலிகளுக்கு கொடுத்து வந்தார்.

muthukumaar3.jpg

1994 ஆகஸ்ட் 15 வேலூர் கோட்டை முகாமில் தங்கி இருந்த 80 விடுதலைப்புலிகளை தப்பவைக்க சென்னை சிறையிலிருந்த ரோமியோவுக்கு இயக்கம் உத்தரவிட்டது.

ரோமியோ திட்டம் வகுத்து கொடுக்க 90 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி முடிக்கும் போது சில இடங்களில் சுரங்கம் இடிந்ததால் 48 புலிகள் மட்டும் தப்பினார்கள். இதில் சிலர் நீச்சல் தெரியாமல் அகலியில் சிக்கிக்கொள்ள 28 பேரை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தார் முத்துக்குமார்.

1995 ல் சென்னை மத்திய சிறையில் இருந்த ரோமியோ உள்பட 9 புலிகள் தப்பிக்க இயக்கத்தின் உத்தரவு கிடைக்க 9 பேரும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ரோமியோ உள்பட 5 பேர்களை பாதுகாப்பாக கொண்டு வரும் பொருப்பு முத்துகுமாருக்கும் 4 பேர்களை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் பொருப்பு சென்னை நபர் ஒருவருக்கும் ஒப்படைக்கப்பட்டது. முத்துக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்ட 5 பேரையும் பாதுகாப்பாக ஈழம் கொண்டு சேர்த்தார். இவர் கொண்டு சேர்த்த ரோமியோ தான் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மெய்காப்பாளரா இருந்தார்.

ஆனால் சென்னை நபரிடம் ஒப்படைக்கப்பட்ட 4 பேரில் தப்பிக்கும் போது 2 பேர்கள் பிடிபட்டனர். நிலத்திலும், நீரிலும் ஓடும் எஞ்சினை கண்டுபிடித்த குட்டி என்பவர் மட்டும் குதிக்கும் போது கால் ஒடிந்தது. மீண்டும் போலிசிடம் சிக்கிவிடக்கூடாது என்று குட்டி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் ஏரியில் குதித்து இறந்தார்.

muthuku%20maar1.jpg

இதனால் அந்த சென்னை நபர் மீது உளவாளி என்ற சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு இயக்க வேலைகள் எதுவும் அந்த சென்னை நபரிடம் கொடுக்கப்பட வில்லை. இதனால் அப்போதிருந்தே முத்துக்குமார் மீது தீராப் பகை கொண்டார் அந்த சென்னை நபர். இருவருக்கும் நேருக்கு நேர் கருத்து மோதல் ஏற்பட்டு ஒருகட்டத்தில் போட்டு தள்ளிடுவேன் என்று இருவரும் பேசிக் கொண்டனர்.

யார் முந்திக் கொண்டு யாரை போடுவது என்ற அளவில் பகை முற்றியது. துண்டு பிரசுரத்தில் இப்போது சொல்லப்பட்டிருக்கும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் அந்த சென்னை நபர் தான் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்தார்.

1996 ல் மணமேல்குடியில் முதல் கடத்தல் வழக்கு பதிவாகி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தடா வழக்கு பதிவாகிறது. இந்த வழக்கில் சிறையில் இருக்கும் போது தான் கூடயிருந்த தமிழ்நாடு விடுதலைப்படை நல்லரசன் தொடர்பு ஏற்பட்டு அந்த இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார்.

இந்த நிலையில் தான் திருவாரூர் நபர்களின் நட்பும் கிடைத்தது. ஆனால் இந்த நபர்களுடன் அந்த சென்னை நபர் கூட்டாளிகள் என்பதுடன் ஒரே இயக்கத்தில் சேர்ந்து செயல்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளியே வந்த முத்துகுமார் தன்னிடம் இருந்த 10 க்கும் மேற்பட்ட கிரனட் என்கிற கை எறிகுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லி திருவாரூர் நபரிடம் கொடுத்திருந்தார். அதன் பிறகு வீரப்பனிடம் காட்டுக்கு செல்லும் போது அந்த கிரனட் குண்டுகளை முத்துகுமார் கேட்க அந்த குண்டுகள் அவரிடம் இல்லை.

அந்த குண்டுகளை ஒரு முஸ்லிம் தீவிரவாத அமைப்பிடம் கொடுத்துவிட்டார் திருவாரூர் நபர். இந்த குண்டுகள் தான் கோவை குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் முரளி சென்ற ஜீப் மீது திருச்சியில் வைத்து வீசப்பட்டது. இதனால் இருவருக்கும் பகை ஏற்பட்டது.

ஜாதி, மதம் இல்லை என்று சொல்லும் இயக்கத்தில் இருக்கும் திருவாரூர் நபர் எப்படி தன் மத தீவிரவாதிகளுக்கு குண்டுகளை விற்றார் என்று பிரச்சணையை இயக்க தலைமை வரை கொண்டு போனதால் திருவாரூர் நபரை அவர் சார்ந்திருந்த இயக்கம் கேள்வி கேட்டது. இந்த நேரத்தில் சென்னை நபரும், திருவாரூர் நபரும் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை விட்டு வெளியேறினார்கள். இதனால் முத்துக்குமாருக்கான பகை ஒன்று இரண்டானது.

தமிழ்நாடு விடுதலைப்படையில் இணைந்து செயல்பட்ட போது அணைக்கரை மாறன் குரூப், சுப. இளவரசன் குரூப் என்று இரண்டாக உடைந்தது. முத்துக்குமார் மாறன் குரூப்பில் இருந்தார். இளவரசன் குரூப்பில் இருந்த வல்லம் அறிவழகன் கொலையில் மாறன் கும்பல் கைதானது. அப்போது முத்துகுமார் சிறையில் இருந்தார்.

ஆனால் அறிவழகனை போட மூலையாக செயல் பட்டது முத்துகுமார் தான் என்று அந்த குரூப் நினைத்தது. இதனால் பல முறை முத்துக்குமாரை போட முயற்சியும் செய்தது இளவரசன் குரூப். இந்த இளவரசன் குரூப்பும் அந்த சென்னை நபர், திருவாரூர் நபர் ஆகியோரும் இணைந்து முத்துகுமாரை பொது எதிரியாக பார்க்க தொடங்கினார்கள்.

1999 முதல் 2006 வரை சிறை வாழ்க்கை. இந்த காலக்கட்டத்தில் திருச்சி சிறையில் மணல்மேடு சங்கர் ஆட்களும் உள்ளே இருக்க முத்துக்குமார் ஆட்களுடன் மோதல் உருவாகி பெரிய சண்டை நடந்தது.

தலித் கைதிகள் முக்குலத்தோர் கைதிகள் என்று பிரிந்தனர். இதை பயன்படுத்தி முத்துகுமாரை உள்ளேயே முடிக்க திட்டமிட்டது அந்த மூவர் கூட்டனி. இதற்கு மணல்மேடு சங்கர் ஆட்களை பயன்படுத்த நினைத்தார்கள். அப்போது அந்த சிறையில் இருந்த சங்கரின் ஆளான கபிரியேலுக்கு ஒரு கடிதம் வருகிறது.

அந்த கடிதத்தில் பூனைக்கு மருந்து கொடுத்து விட்டோமே இன்னும் கொடுக்களையா? என்று கேட்கப்பட்டிருந்தது. அந்த கடிதம் முத்துகுமார் ஆட்களின் கையில் சிக்கியதால் கபிரியேலை “கவனித்து” கேட்க அப்போது தான் தன் அறையில் இருந்து ஒரு பேனா மூடியை எடுத்து கொடுத்தான் கபிரியேல் அதில் சயனைட் இருந்தது. முத்துகுமார் சாப்பாட்டில் இந்த சயனைட் கலக்க சொல்லி கொடுத்தாங்க சமையல்காரனை சரிபண்ண பேசிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள இந்த கடிதம் வந்து மாட்டி விட்டது என்றான். அதன் பிறகு தான் கபிரியேல் சிறை மாற்றப்பட்டான்.

இந்த நேரத்தில் தான் திருவாரூர் நபரின் ஆட்கள் முத்துக்குமாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளை பேப்பர் சேகரித்து இப்போது வெளியாகியுள்ளது போல கையால் எழுதி சிறை முழுக்க படிக்க பரவ விட்டனர். இப்படியாக இந்த முத்துக்குமாரை பல்வேறு குரூப்புகளும் டார்கெட் வைத்து செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் சீமானின் நாம் தமிழர் கட்சி ஈழத்தமிழர்களை அழித்த காங்கிரஸ் எதிர்ப்பு என்ற கொள்கையுடன் களமிறங்க அதில் தன்னையும் இணைத்து கொண்டு தீவிரமாக கட்சி பணி செய்தார். சுப. இளவரசன் குரூப்பில் இருந்து முத்துகுமாரை எதிர்த்த சிலரும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொருப்புக்கு வந்தனர். பொருப்புக்கு வந்தவர்கள் பழைய பகைமையுடன் தான் பார்த்தனர்.

போன மாதம் சென்னையில் ஒரு திருமணத்திற்கு போன முத்துக்குமார் கட்சி பிரமுகரிடம் தங்க இடம் கேட்டார். அந்த கட்சி பிரமுகர் தன் வீட்டின் மாடியில் தங்கி கொள்ளுங்கள் என்று தங்க வைத்தார். அதிகாலையில் முத்துகுமார் எழுந்து போய்விட்டார்.

முத்துகுமாருக்கு துணைக்கு வந்தவர் கீழ் அறையில் உள்ளவர்கள் யார் என்று எட்டி பார்த்து அதிர்ச்சி ஆனார் கீழ் அறையில் இருந்தவர்கள் சுப.இளவரசன் ஆட்கள். அதே பயத்துடன் முத்துகுமாரை இங்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் துணைக்கு வந்தவர். அதே போல டெல்டா மாவட்டத்தில் சீமான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் 4 பேர் இளவரசன் ஆட்கள் சுற்றி வந்துள்ளனர்.

இந்த துண்டுபிரசுரம் வெளியான நாளில் இருந்து சோர்வாக காணப்பட்டவர் இதை அந்த சென்னை நபர் தான் எழுதியிருக்கான் துணைக்கு வடகாடு ஆள் யாரோ இருந்திருக்கான் அவன் யார் என்று கண்டுபிடிக்கனும் என்று சொன்னவர். வடகாடு காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டு மனு ரசீதும் வாங்கியுள்ளனர்.

துண்டுபிரசுரம் வெளியான நாளில் அந்த முக்கிய கட்சி பிரமுகர் மட்டும் தனியாக புதுக்கோட்டைக்கு வந்துள்ளார். எதிர்பாராமல் முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அமைதியாக பேசிக் கொண்டிருந்தவரிடம் கூட்டனி பற்றி நான், சீமான், எம்.என், ஆகியோர் தனியாக சந்திக்க வேண்டியுள்ளது. எப்ப, எங்கே சந்திக்கிறது என்று உடனே சொல்லுங்கள் காலம் கடத்த வேண்டாம் என்று முத்துக்குமார் சொல்ல நாளை இடம், நேரம் குறிச்சுகிட்டு சொல்றேன் என்று சொல்லிவிட்டு போனவர் செவ்வாய் கிழமை அந்த பிரமுகர் ப்ரியாக இருந்தும் கூட முத்துகுமாரிடம் மட்டும் கடைசிவரை பேசவில்லை. அ.தி.மு.க பக்கம் போக கூடாது என்று தடுத்தவர்களில் இந்த பிரமுகரும் ஒருவர்.

இந்த நேரத்தில் தான் மாலையில் வழக்கறிஞர்களுக்கு ஓட்டு கேட்டு வழக்கறிஞர்கள் கார்த்தி, ரஜினி ஆகியோர் முத்துகுமாரை சந்தித்து கை கொடுத்தனர். இவர்கள் கூட 10 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர்.

மேலே நாம் சொன்ன எல்லா குரூப்புகளுமே முத்துகுமாரை போட வேண்டும் என்று அழைந்தவர்கள் தான். இதில் பலரின் துணையோடு திருவாரூர் நபரின் டீம் தான் போட வந்தது என்பது தெரியவருகிறது.

இந்த நிலையில் சீமான் கூட இருக்கும் அந்த பிரமுகர் எல்லாரும் என்னை சந்தேகப்படுறாங்க ஆனா இதுல எனக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி வருகிறார்.

தோழர்கள் சொல்வது என்ன?

முத்துக்குமாரின் கூட இருந்த தோழர்கள் இந்த துண்டு பிரசுரம் திசை திருப்பும் விதமாக எச்சரிக்கை கடிதமாகத் தான் போட்டிருக்காங்க. இந்த பிரசுரத்தை இயக்க தொடர்பு உள்ளவன் தான் எழுதியிருக்கான். இதில் மத்திய உளவுப்பிரிவின் பங்கும் இருக்கலாம். தொடக்கத்தில் இயக்கத்தில் இருந்த போது போலிஸ் கண்ணுல மண்ணை தூவிட்டு தான் இயக்கத்துக்கு தேவையான பொருள், ஆட்களை கொண்டு போனார். அப்பறம் தமிழர் விடுதலைப்படையில இருந்து சிறப்பா செயல் பட்டார். காட்டுக்கு போனார். எல்லாத்துக்கும் வழக்கு போட்டாங்க. எல்லா வழக்குகளையும் உடைச்சு வெளியே வந்தார். கொஞ்ச நாள் சும்மா இருந்தார்.

இறுதிகட்ட போர் நடக்கும் போது முழுமையா ஈழத்துக்கு மருந்து கொண்டு போய் கொடுத்ததும் முத்துக்குமார் தான். ஒருமுறை மட்டும் கார் விபத்தாகி பொருள் அனுப்ப தாமதமாகிடுச்சு. இருந்தும் கடைசிவரை மருந்து அனுப்பினார். கடைசியில் இயக்கம் பின்னடைவு ஏற்பட்டதும் ரொம்ப கவலைப்பட்டார்.

இப்ப நாம் தமிழர் கட்சில இணைந்து செயல்பட தொடங்கிட்டார். நிறைய இளைஞர்களை கட்சியில சேர்த்து வந்தார். மீண்டும் முத்துக்குமார் வளர்ந்தால் நமக்கு தொல்லை தான் என்று நினைச்சு தான் எப்பவோ மருந்து கடத்தினதுக்கு போன வருடம் வழக்கு போட்டாங்க. இனி மேலும் வழக்கு போட்டு முடக்க முடியாதுன்னு தெரிந்து கொண்டு தான் அவங்களுக்கு வேண்டிய இயக்க ஆட்களை வச்சு போட சொல்லி செஞ்சும் முடிச்சுட்டாங்க மத்திய உளவு பிரிவினர் என்றும் வெளியில் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் மிரட்டல் கடிதங்கள் வந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. முத்துக்குமார் கொலைக்கு மட்டுமல்ல புதுக்கோட்டையில் நடக்கும் எந்த கொலைக்கும் இன்னும் சரியான பதில் கிடைக்க வில்லை தான்.

பெட்டி செய்தி:

ஒரு மாதம் முன்பு ஜெகதாப்பட்டிணம் மீனவர் பாண்டி சிங்கள கடற்படையால் சுட்டு கொல்லப்பட்ட மறுநாள் இறங்கல் கூட்டத்தில் முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்த போது அவரை மட்டுமே ஒரு கருப்பான உருவம் தனது செல்போனில் படம் எடுத்திருக்கிறது. அவர்கள் அதை கவணிக்கவில்லை.

ஆனால் அந்த உருவத்தை வேறு ஒருவர் கவனித்து போட்டோ எடுத்ததும் பதறிக் கொண்டு ஓடியது அந்த உருவம். பாண்டி புதைக்கப்பட்ட பிறகு நீங்கள் யார் என்று அந்த கருப்பு உருவத்தை பார்த்து கேட்க நான் ஐ.பி சென்னை.

முத்துக்குமாரை சும்மா படம் எடுத்தேன் என்று சொல்லி தப்பி இருக்கிறார். அந்த நபர் ஐ.பி தானா? என்பது தெரியாது. ஆனால் முத்துகுமார் ஒரு மாதம் முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

- செம்பருத்தி.

http://tamilthesiyam.blogspot.ca/2011/03/blog-post_847.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தனது தலைவர் பதவியை தட்டி பறித்துவிடுவார் 
மாத்தையா என்று தலைவர் பிரபாகரன் மாத்தையாவை சுட்ட கதைகளை 
ஏற்கனவே மக்கள் படித்துவிட்டார்கள்.
 
இதைவிட பாட்டி வடை சுட்ட கதையை இணைச்சிருக்கலாம்.
குழந்தைகளுக்கு என்றாலும் வாசித்து காட்டியிருக்கலாம்.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.