Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

75523_697418463602384_278416327_n2-300x2

2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது.

கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது.

"முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது.

இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து விட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என பழ. நெடுமாறன் அறிவிப்பு." என்ற தகவலைத் தருகிறார் நெடுமாறன் அவர்களின் புதல்வியான பூங்குழலி இவர்கள் முற்றத்தினுள்ளேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/home

Link to post
Share on other sites
 • Replies 284
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

ஏதோ சீமானை நம்பிக்கொண்டு வாய் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருக்கு உங்கட பதிவு.. எனக்குத்தெரிந்து யாரும் இங்கு அப்படி இல்லை.. தேனீ வந்து குடிச்சிட்டுப் போகுதே என்று பூ நினைத்தால் அந்த மரத்துக்

 • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களுக்கு.... அதிர்ச்சியான செய்தி. :o   
சிங்களவனுக்கு எந்த விதத்திலும்.... தமிழக காவல்துறை சளைத்தது அல்ல என்பது... மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
மிகவும் கவலையானதும், கண்டிக்கப் பட வேண்டிய நிகழ்வு இது.
தமிழனை அழிக்க... வேற்று இனத்தவன் தேவையில்லை. நம்மவர்களே... போதும். :(  

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு!... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.

 

இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

 

தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.

 

13-nedumaran-unveils-mullivaikkal-memori

 

விழாவில் பேசிய பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆகியோர் நினைவு முற்றத்தை அகற்ற நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள்.

 

இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

-தற்ஸ் தமிழ்-

 

தமிழகத்தில்.... பல‌ அரசியல் வாதிகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான... காணிகளைத் தானே... ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா...

உலகத் தமிழனுக்கு பொதுவான இடத்தை, இடித்து.... உங்கள் கரங்களில்.... கரியை பூசிக் கொண்டுள்ளீர்களே.... உங்களுக்கே... இது நியாயமாகப் படுகின்றதா. :huh: 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

13-nedumaran300-jpg.jpg
 
நினைவு முற்றம் இடிப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு தொடரும் பழ.நெடுமாறன்!

 

சென்னை:தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

 

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''இலங்கையில் நடந்த போரின்போது, உயிரிழந்த

தமிழர்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

 

ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

 
-தற்ஸ் தமிழ்-
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57

IdippukkuMun.jpgமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும்

நீரூற்று வரை வந்து அதையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். “சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்” என பழ. நெடுமாறன் அறிவிப்பு.

Idippu1.jpg

Idippu2.jpg

Idippu3.jpg

Idippu4.jpg

Idippu5.jpg

Idippu6.jpg

Idippu7.jpg

Idippu8.jpg

 

http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=614%3A2013-11-13-03-41-04&catid=28%3Aspecialnews&Itemid=2


13-nedumaran300-jpg.jpg
 
நினைவு முற்றம் இடிப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு தொடரும் பழ.நெடுமாறன்!

 

சென்னை:தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

 

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''இலங்கையில் நடந்த போரின்போது, உயிரிழந்த

தமிழர்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

 

ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

 
-தற்ஸ் தமிழ்-

75523_697418463602384_278416327_n2-300x2

2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது.

கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது.

"முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது.

இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து விட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என பழ. நெடுமாறன் அறிவிப்பு." என்ற தகவலைத் தருகிறார் நெடுமாறன் அவர்களின் புதல்வியான பூங்குழலி இவர்கள் முற்றத்தினுள்ளேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/home


முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு!... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது.

 

இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.

 

தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது.

 

13-nedumaran-unveils-mullivaikkal-memori

 

விழாவில் பேசிய பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆகியோர் நினைவு முற்றத்தை அகற்ற நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள்.

 

இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

-தற்ஸ் தமிழ்-

 

தமிழகத்தில்.... பல‌ அரசியல் வாதிகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான... காணிகளைத் தானே... ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா...

உலகத் தமிழனுக்கு பொதுவான இடத்தை, இடித்து.... உங்கள் கரங்களில்.... கரியை பூசிக் கொண்டுள்ளீர்களே.... உங்களுக்கே... இது நியாயமாகப் படுகின்றதா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 • கருத்துக்கள உறவுகள்

திரு. நெடுமாறன் ஐயா கைது செய்யப்பட்டுள்ளார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு

 

img1131113010_1_1.jpg
FILE

இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது.

தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்கு முன்பே 6 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார்.

ஆனாலும் திட்டமிட்டபடி திறப்பு விழா நிகழ்ச்சி 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படைத்துறையினர், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1311/13/1131113010_1.htm

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
 • ramadoss.jpg

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் நினைவாகவும், போரில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் தஞ்சாவூரை அடுத்த விளாரில்  அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை தமிழக அரசு இடித்துத் தள்ளியிருக்கிறது. தமிழக அரசின் இந்த செயல் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்பதால் அது இடிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது முற்றத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள  நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக அனுமதி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

நடப்பாண்டிற்கு அனுமதியை புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்ததும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்திருக்கிறது. உலகத் தமிழர் பேரமைப்பால் அமைக்கப்பட்ட பூங்காவும் சிதைக்கப் பட்டிருக்கிறது. சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான முதன்மை வாயிலை கம்பி வேலி அமைத்துத் தடுத்திருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் எப்படி முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்களோ, அதேபோல் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது.

நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதால் தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்கள் பல்வேறு தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அவற்றையெல்லாம் அகற்றுவதில் அவசரம் காட்டாத தமிழக அரசு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை மட்டும் அதிகாலையில், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதும் கண்டனத்திற்குரியது. தமிழர்களுக்கான நினைவுச் சின்னங்கள் எதுவுமே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற முதல்வரது எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். கடந்த ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றிய முதலமைச்சர், இப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை அகற்றியிருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை  இராஜபக்சே அழிப்பதைப் போலவே, தமிழகத்தில் ஜெயலலிதா செய்து வருகிறார். தமிழர்களின் எதிரிகள் யார், யார்? என்பதை இப்போதாவது தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

http://dinamani.com/latest_news/2013/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/article1888476.ece

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையாக உள்ளது. :(

 

தமிழக மக்கள் ஜெயலலிதாவின் உண்மையான முகத்தை புரிந்துகொள்ள வேண்டும். 2016 இல் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் முதல்வர் பதவியை பெற்றுக்கொள்ள முடியாத வகையில் தூக்கி எறிய வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் உடனடித் தேவை:

தமக்கெனப் போராடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பு

நேற்றிரவு (நவம்பர் 12, 2013) “தமிழர் உணர்வுகளை மதிக்காத” மத்திய அரசுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம். இன்று காலை (நவம்பர் 13, 2013) தமிழர்கள் உணர்வுகளை காலில் போட்டு மிதித்தழித்து, முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச் சுவர்களை, பூங்காவை அத்துமீறி இடித்துத்தள்ளி காட்டு தர்பார். ஜெயலலிதா தமிழக முதல்வராகவும், இந்தியப் பிரதமராகவும் இரட்டை வேடத்தில் நடிக்கும் “அம்மான்னா சும்மாவா?” படத்தின் அடுத்தடுத்த பரபரப்புக் காட்சிகள் இவை. சினிமாப் படம் பார்த்தே சீரழிந்துபோன தமிழர்களே, இந்த பாசிஸ்டு படத்தையும் பாருங்கள். கைக்கொட்டிச் சிரியுங்கள், உங்கள் தலைவிதியை நினைத்து.

ஈழத் தமிழரின் தாயகத்திலும் சரி, இங்குள்ள தமிழரின் தமிழகத்திலும் சரி, தமிழர் நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். பச்சைத் துரோகிகளும், பாசிஸ்டுகளும் நமது அரசியலை, எதிர்காலத்தை தீர்மானிக்கிறவரை நாம் அடிமைகளாகத்தான் இருப்போம். தமிழ் மக்கள் உயிருக்கும் மதிப்பில்லை. அவர்கள் உயிர் ஈந்ததை நினைவில் நிறுத்தும் நினைவுச் சின்னத்துக்கும் மதிப்பில்லை.

தமிழின எதிர்ப்பு அரசியல் நம்மைச் சுற்றி சக்தியோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. சானல் 4 வெளியிட்ட குழந்தை பாலச்சந்திரன் படுகொலைக் காணொளி, தங்கை இசைப்பிரியா படுகொலைக் காணொளி போன்றவை நம்மையெல்லாம் குலைநடுங்கச் செய்திருக்கின்றன. நவம்பர் 4, 2013 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட மாணவர் சுடர்ப் பயணங்கள் தமிழகமெங்கும் முறியடிக்கப்பட்டு, அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், அடித்து நொறுக்கப்பட்டனர். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது, இனப்படுகொலைக் குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவுக்கு அந்த மரியாதையை கொடுக்கக்கூடாது, இந்தியா அந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று ஒட்டு மொத்த தமிழகமே போராடிக்கொண்டிருக்கிறது. இதற்காகக் குரல் கொடுத்த தோழர் கொளத்தூர் மணி பொய் வழக்கு ஒன்றில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் போகமாட்டாராம்; ஆனால் அவரது வெளியுறவுத் துறை அமைச்சர் போவாராம்; தான் ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற விளக்கக் கடிதம் ஒன்றை கொழும்பு ஆட்சியாளர்களுக்கு அனுப்பிவிட்டாராம்.

இப்படியாக நாடகமாடி, நயவஞ்சகமாக செயல்பட்டு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழர்களை ஏமாற்றி விடலாம் என்று தமிழகத்தின் பெரிய கட்சிகளும், அவற்றின் கள்ள உறவுகளும் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கொள்கையும் உணர்வும் கொண்ட தமிழகக் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் தமக்குள் பிணங்கிக்கொண்டு, பிரிந்துகிடப்பது நமது வருங்காலமும் பிரகாசமாக இல்லை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. ஒருவித கவலையும், பயமும் ஆட்கொள்ளுகின்றன.

இந்த நிலையில் தமிழகத்தின் உடனடித் தேவை, தமக்கெனப் போராடும் தமிழ் மக்கள் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதுதான். தேர்தல் அரசியலில் பங்கேற்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் அய்யா வைகோ அவர்களும், பா.ம.க. நிறுவனர் அய்யா மரு. இராமதாசு அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர். திருமாவளவன் அவர்களும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களும், நாம் தமிழர் கட்சியின் தலைவர் தோழர். சீமான் அவர்களும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன் அவர்களும், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் தோழர். மரு. கிருஷ்ணசாமி அவர்களும், எஸ்‌டி‌பி‌ஐ கட்சியின் தமிழகத் தலைவர் தோழர் தெஹ்லான் பாகவி அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி (ம. லெ) மக்கள் விடுதலை தோழர் மீ. த. பாண்டியன் அவர்களும், சி.பி.ஐ (எம்.எல்.) விடுதலை தோழர் பாலசுந்தரம் அவர்களும், தமிழர் களம் தலைவர் தோழர் அரிமாவளவன் அவர்களும், தமிழக முன்னேற்றக் கழகம் தலைவர் தோழர் ஜாண் பாண்டியன் அவர்களும், தமிழக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தோழர் ஷரீஃப் அவர்களும், தமிழக அரசியல் களத்தில் அற்புதமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் முற்போக்குக் கொள்கைகள் கொண்ட ஏனைய அரசியல் கட்சிகளும் உடனடியாகக் கூடிப்பேசியாக வேண்டும்.

தேர்தல் அரசியலில் கலந்து கொள்ளாத தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்களும், தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ. மணியரசன் அவர்களும், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு. இராமகிருஷ்ணன் அவர்களும், ஆதித் தமிழர் பேரவை தலைவர் அய்யா அதியமான் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் தோழர் இஸ்மாயில் அவர்களும், தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத் தோழர்கள் அப்துல் சமது போன்றோரும் இந்த ஒருங்கிணைப்புப் பணியில் உதவ முன்வர வேண்டும். பல்வேறு சமூக இயக்கங்களும், மகளிர், மாணவ அமைப்புக்களும், அவற்றில் மும்முரமாய் நின்று பணிபுரியும் இளைஞர்களும் இந்தக் கூட்டு முயற்சிக்கு அழைக்கப்பட வேண்டும். தோழர்கள் கிறிஸ்டி சாமி, ஷீலு, திருமுருகன், அருண் ஷோரி, செந்தில், பரிமளா, கயல், திவ்யா, அகராதி என்று ஆயிரம் பேரின் பெயர்களை இங்கே அடுக்க முடியும். வலது சாரிகளாக, பிற்போக்கு சக்திகளாக, சந்தர்ப்பவாதிகளாக, பிழைப்புவாதிகளாக இல்லாத பட்சத்தில், அனைவரும் விருப்பு வெறுப்பின்றி இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு நாங்கள் அழைக்கப்படவில்லையே என்ற ஆதங்கம் சிலருக்கு இருக்கலாம். இங்கே விடப்படும் அழைப்பு தமிழ் மக்களின் அழைப்பு என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக சாதி அரசியலை கையிலெடுப்பவர்களோடு நாங்கள் எப்படி அணிசேர முடியும் என்று சிலர் அங்கலாய்க்கலாம். இந்த சாதிப் பிரிவுகளைத் தாண்டி கைகோர்த்து நின்றவர்கள்தானே நீங்கள். மனமுண்டானால் மார்க்கமுண்டு; இன்னும் அப்படிச் செய்ய முடியும். எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களோடு எப்படிச் சேருவது என்று சிலர் விசனப்படலாம். பொது வாழ்க்கையில் பிரிவதும், கூடுவதும் இயல்புதானே? கணவனும்-மனைவியும், பெற்றோரும்-பிள்ளைகளும், சகோதர-சகோதரிகளுமே பிரியும்போது, பேசாதிருக்கும்போது, அரசியல் கொள்கைகளுக்காக நிற்கும் நாம் பிணங்குவது இயற்கைதானே? இந்தக் கூட்டமைப்புக்கு யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழலாம். இது குறித்து உங்களுக்குள் ஓர் இணக்கம் எழவில்லையென்றால், ஒரு தமிழ்ப் பாட்டியை தலைவராக்குவோம். கூட்டத்தில் யார் கடைசியாகப் பேசுவது என்றப் பிரச்சினை எழலாம்; இதுவும் ஒரு தலைபோகும் பிரச்சினை அல்ல. பிளவுகள், பிரிவினைகள் பற்றி பேதலிக்காமல், இணக்கங்கள், இணைக்கும் பாலங்கள் பற்றிப் பேசுவோமே? வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதுபோல, மனம் விட்டுப் பேசினால், வழி பிறக்கும் என்பது உறுதி.

இது தமிழ் மக்களின் வெற்று வேண்டுகோள் அல்ல, வெறும் விருப்பமும் அல்ல; கட்டளை, அன்புக் கட்டளை. காட்டாற்றுத் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் எங்களைக் காப்பாற்றுங்கள் எனும் அலறல், அழுகை, அபயக்குரல். தில்லி ஏகாதிபத்தியமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஒரு புறம் நெருக்க; சீன ஏகாதிபத்தியமும், சிங்களப் பேரினவாதமும் இன்னொரு புறம் அடிக்க; அண்டை மாநிலங்கள் தண்ணீர்கூட தரமாட்டோம் என மறுக்க; உலகின் ஆபத்தானத் திட்டங்கள் எல்லாம் தமிழ் மண்ணில் செழிக்க; தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ரோமாபுரி தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது நீரோ பொறுப்பின்றி செயல்பட்டது போல, தமிழர்களை காக்க வந்த இயக்கங்களும், தலைவர்களும் வாளாவிருக்கலாமா? அனைவரும் ஒன்றுகூடிப் பேசி, பொது அடிப்படை செயல்திட்டம் (Common Minimum Programme) ஒன்றை உடனடியாக உருவாக்கியாக வேண்டும். தமிழகத்தின் பெரிய கட்சிகளை தமிழ் மக்களாகிய நாங்கள் நம்பவில்லை. மாற்று இல்லாததாலும், எங்கள் கோபத்தை தெரிவிக்க வேறு வழியில்லாததாலும், பச்சைத் துரோகிகளையும், பாசிஸ்டுகளையும் மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

விளப்பில்சால எனுமிடத்தில் திருவனந்தபுர நகரக் கழிவுகளை எல்லாம் கொட்டும் திட்டத்திற்கு எதிராக அந்தப் பஞ்சாயத்து மக்கள் தொடர்ந்து 1,000 நாட்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரமாவது நாள் போராட்டத்துக்கு இடிந்தகரைப் போராட்ட பெண் தலைவர்களை அழைத்தார்கள். “தயவு செய்து எந்தக் கட்சியையும் தாக்கிப் பேசிவிடாதீர்கள்; ஏனென்றால் அனைத்துக் கட்சிகளுமே எங்களூக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்று அறிவுரைத்துச் சென்றார்கள் விழாக் குழுவினர். இந்த அரசியல் ஒற்றுமையாலும், பலத்தாலும்தான் கேரளம் “கடவுளின் சொந்த தேசமாக “ (God's Own Country) விளங்கிக் கொண்டிருக்கிறது. கூடங்குளம், கல்பாக்கம், தேவாரம் நியூட்ரினோ, மதுரை அணுக்கழிவு ஆய்வு மையம் போன்ற குப்பைகளெல்லாம் தமிழகத்துக்கு வருகின்றன.

கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் கடந்த வருடம் உறுதியளித்தது. எரிமலையே எதிர்பாராது வெடித்ததுபோல கர்நாடக மக்கள் உடனடியாக வெகுண்டெழுந்தனர். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வேறு எங்குமே வைக்க முடியாது என்று கர்ஜித்தார். கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் காங்கிரசுக்காரரான வீரப்ப மொய்லி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தார். கர்நாடக அ.தி.மு.க. ரத்தத்தின் ரத்தங்கள்கூட தெருக்களிலே இறங்கிப் போராடினர். வெறும் மூன்றுநாட்களில் கோலார் திட்டம் குப்பையிலேப் போடப்பட்டது. காரணம் கர்நாடக அரசியல் கட்சிகள் எல்லாம் கர்நாடக மக்களுக்காகப் பாடுபடுகின்றனர்.

ஆனால் இங்கே தமிழகத்தில்? பா.ஜ.க., காங்கிரசுக்காரர்கள் தேசபக்தியில் திளைத்து தமிழரைக் காட்டிக் கொடுக்கின்றனர். கூடங்குளம் அணுஉலையை எதிர்க்கும் மக்களான மீனவர்களும், விவசாயிகளும், தலித் மக்களும் தேசத் துரோகிகளானோம். ஆனால் அணுக் கழிவை ஏற்றுக் கொள்ளாத ஷெட்டர்கள், மொய்லிகள், ர.ர.க்கள் எல்லாம் தேச பக்தர்கள் ஆனார்கள். தி.மு.க. உ.பி.க்களும், அ.தி.மு.க. ர.ர.க்களும் “தமிழ், தமிழன், தமிழினம்” என்று பசப்பு மொழிப் பேசியே பச்சைத் துரோகம் செய்கின்றனர். அமெரிக்க, பிரான்சு நாட்டு அணுஉலை இந்தியாவில் வேண்டாம் என்கிற சி.பி.ஐ., சி.பி.எம். காம்ரேடுகள் ரஷ்ய அணுஉலைமேல் காமம் கொண்டு நிற்கின்றனர். ஆனால் அதே ரஷ்ய அணுஉலைகூட கேரளாவில் வரக்கூடாது என்பதிலும் குறியாய் இருக்கின்றனர்.

கேரளத்து மீனவர் இருவர் இத்தாலி நாட்டு மாலுமிகளால் கொல்லப்பட்டபோது, ஒரு குடும்பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 600 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதிகமானோர் முடமாக்கப்பட்டிருக்கிறார்கள். அதைவிட அதிகமானோர் சிறைச்சாலைகளிலே முடக்கப்பட்டிருக்கிறார்கள். இழவுக்காகப் பிறந்தவர்களுக்கு ஏது இழப்பீடு? இடிந்தகரைப் போராட்டத்திலே தமிழகப் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட மணப்பாடு அந்தோணி ஜான் உயிருக்கான விலை வெறும் ஐந்து லட்சம் ரூபாய். இடிந்தகரையில் கடலோரப் பாதுகாப்புப் படை விமானத்தால் தாக்கிக் கொல்லப்பட்ட சகாயம் பிரான்சிஸ் குடும்பத்துக்கு அந்த மரியாதைகூடக் கிடையாது. வருவாய் ஏதுமின்றி வறுமையில் தவிக்கும் நான்கு பச்சைக் குழந்தைகளுக்கும், கல்வியறிவில்லாத அவர்களின் தாய்க்கும், எந்த உதவியும் செய்யவில்லை அருமைமிகு சும்மாவின் அரசு. அரசை எதிர்ப்பவனுக்கு, கேள்வி கேட்பவனுக்கு, அவனது குடும்பத்துக்கு உதவியாவது, ஒன்றாவது எனும் மமதைதான் ஆட்டம் போடுகிறது.

கேரள, கர்நாடக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களுக்காக வாதிட்டு சாதிக்கின்றனர். தமிழகத்திலோ, சக்திமிக்க அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கடிதம் எழுதிக் கொண்டும், கதை சொல்லிக் கொண்டும் நம் காதுகளில் பூ சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ஏனையோர் ஒன்றுகூடாமலிருப்பதற்கு ஓராயிரம் வாதங்களை வைத்துக் கொண்டு, வழிகளைத் தேடிக்கொண்டு, முன்னவர்களுக்கு முடிந்த வகையிலெல்லாம் உதவிகள் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்றமிழ் மக்களுக்கு இயன்றதையெல்லாம் இங்கே, இப்போதே செய்ய விழையும் தலைவர்கள், இயக்கங்கள் உடனடியாகக் கூடிப் பேசுங்கள், உதவுங்கள். நாதியற்று நடுத்தெருவில் நிற்கும் தமிழினத்திற்கு கைகொடுக்க இந்த நேரத்திலும் நீங்கள் ஒன்றுபட்டு செயல்பட முடியவில்லை என்றால், முயலவில்லை என்றால், நீங்களும் ஒரு பச்சைத் துரோகி அல்லது பாசிஸ்டு என்று தமிழ் மக்களாகிய நாங்கள் முடிவு கட்டுவோம்.

அன்புத் தமிழர்களே, ஒருவேளை, நம் தலைவர்கள் இந்த இறுதிக்கட்டத்திலும் நம்மைக் கைவிட்டால், “அடிமையாக வாழ்வது எப்படி?” என்று ஒரு கையேட்டைத் தயாரித்து, வீரம், மானம் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, கையேட்டின்படி நடந்து, கைகட்டி, தலைவணங்கி, குனிந்து, வளைந்து ஈன வாழ்க்கை வாழும் வழிகளைப் பாருங்கள். வணக்கம்.

சுப. உதயகுமாரன்

இடிந்தகரை

நவம்பர் 13, 2013

 

(facebook)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1000628_577136215675555_326181096_n.jpg

 

1462963_577136245675552_430934931_n.jpg

 

1461448_577136255675551_360648822_n.jpg

 

1471811_577136212342222_1370276414_n.jpg

 

(facebook)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தஞ்சை-முள்ளிவாய்க்கால் முற்றம்,காவல்துறையால் இடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.

இனத்துரோகி சோனியா,கருணாநிதி துரோக வரிசையில் பாசிச ஜெயலலிதாவையும் வரலாறு மன்னிக்காது.உங்கள் கோட்டையும் தூள்தூளாக்கப்படும்... எம்இனத்துரோகிகள் அனைவரையும் கருவருப்போம்,யாராகினும்.

இது எம் தலைவர் பிரபாகரன் மேல் சத்தியம்.

 

Joe Britto

(facebook)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இடிக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ. நெடுமாறன் அறிவிப்பு

 

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து அதையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர்.

 

“சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்” என பழ. நெடுமாறன் அறிவிப்பு.

 

http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=614%3A2013-11-13-03-41-04&catid=28%3Aspecialnews&Itemid=2

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது

 

1392011_679037455464544_311827905_n.jpg

 

(facebook)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

537355_369200473216306_295083806_n.jpg

 

(facebook)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் கல்லறைகளை இடித்து அழித்த சிங்கள ஆட்சியாளர்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தை இடித்து அழித்த ஜெயலலிதாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.நேற்று ஒரு கண்துடைப்புத் தீர்மானம் இன்று நினவுமுற்றம் இடிப்பு.இது உலகத்தமிழர்கள் அனைவரதும் இதயத்தை இடித்ததற்குச் சமம்.இதற்கு தக்க பதிலடியை தமிழ்மக்கள் ஜெயலலிதாவுக்குப் புகட்டுவார்கள்!!!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் அன்னை என்ன செய்யிறார் ???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவர் இடிக்கப்பட்டது
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2013 - 08:49 ஜிஎம்டி
131113084737_mullivaikkalmullivaikalmull

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-- சுற்றுச்சுவர் இடிப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இன்று புதன் அதிகாலை மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையே நிகழ்ந்த மோதலின் பின்னணியில் நினைவுச் சின்னத்தை அமைத்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் பெரும் இயந்திரங்களை வைத்து சுற்றுச் சுவரைத் தகர்த்தனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் மூண்டது, முற்றத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் ஆர்வலர்கள் குவிந்தனர். சுவர் தகர்க்கப்பட்ட பின் அங்கே நிறுவப்பட்ட, இது அரசுக்குச் சொந்தமான இடம் என்று கூறும், இரு அறிவிப்பு பலகைகளை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் அங்கே அமைத்த கம்பிவேலியையும் அவர்கள் பிய்த்தெறிந்தனர்.

அந்நிலையில் போலீசாருக்கும் ஆர்வலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஓரிருவர் காயமடைந்தனர்.

பின்னர் நெடுமாறன் உட்பட இருபது பேர் தஞ்சையில் ஒரு மண்டபத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது இன்றைய நிகழ்வுகள் குறித்து எதுவும் பேச இயலாது, ஆனால் மாலைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை தெளிவாகிவிடும் என்று நம்மிடம் கூறினார்.

நெடுமாறன் தரப்பினர் உரிய அனுமதி பெற்றபிறகே முற்ற வளாகம் அமைக்கப்பட்டது. ஏதோ உள்நோக்கங்களுக்காக இவ்வாறு அரசு நடந்துகொள்கிறது, இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் முற்றத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஜெயலலிதா அரசியலில் நுழைந்தபோது அவருக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டவர் நடராஜன். ஆனால் பின்னர் இருவருக்குமிடையே பெரும் பிணக்கு உருவானது, நடராஜனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கைகளெல்லாம் வெளியிட்டார் ஜெயலலிதா.

முள்ளிவாய்க்கால் முற்றம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியது, உயர்நீதிமன்ற ஆணையைப் பெற்றே கடந்த வாரம்தான் அதனைத் திறக்க முடிந்தது.

இப் பின்னணியிலேயே இன்றைய நிகழ்வுகள் என்கின்றனர் நோக்கர்கள்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/11/131113_mullivaykkal.shtml

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் ஜெ.வைப் பார்த்து தமிழர்கள் காரித் துப்புவார்கள்- வைகோ ஆவேசம்

 

சென்னை: முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டுள்ள ஜெயலலிதாவின் செயலுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. அவரைப் பார்த்து உலகத் தமிழர்கள் காரித் துப்புவார்கள். முள்ளிவாய்க்கால் முற்றம் என்ன அவரது போயஸ் தோட்ட வீடு என்று நினைத்துக் கொண்டாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாகப் பேசியுள்ளார்.
 
இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற விழா கடந்த 10-ம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று காலை 500க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
 
இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறி வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினரால் பொக்லைன் இய்ந்திரம் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைக்கண்டித்து தர்ணா போராட்டம் செய்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு வந்த வைகோவை போலீசார் தடுத்தனர். ஆனால் ஆவேசமாக தடையை மீறி முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே சென்று அங்குள்ள மாவீரர் மண்டபத்தில் அமர்ந்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார் வைகோ. முதல்வர் ஜெயலலிதாவை அவர் கடுமையாக சாடினார். அவர் கூறுகையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பது தொடர்பாக பழ.நெடுமாறன், முதல்வர் ஜெயலலிதாவை தொடர்ந்து தொடர்பு கொண்டார். ஆனால் பதிலேதுமில்லை. அடுத்த அவர் தா. பாண்டியன் மூலமாக பேசி வந்தார். அப்போதும் சரியான பதிலில்லை. இதையடுத்து கடந்த 8ம் தேதி நினைவு முற்றம் திறக்கப்பட்டது.
 
இந்நிலையில் அந்த முற்றத்தை இடித்து தள்ள ஆணையிட்டுள்ளார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயலலிதாவின் இந்த செயல் பச்சை அயோக்கியத்தனமானது. கண் துடைப்பு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு பிரபாகரன் படத்தை வைக்கக்கூடாது என்று வழக்குகள் போடுகிறார். ஆனால், லட்சோப லட்சம் மக்களின் நெஞ்சத்தில் இருக்கும் பிரபாகரனை நீக்க முடியாது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! இது போயஸ் கார்டன் சொத்தோ, ஜெயலலிதாவின் சொத்தோ கிடையாது. கேள்வி கேட்க ஆள் இல்லை என்று இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். இதைப் பார்த்து உலகத்தமிழர்கள் காரித்துப்புவார்கள். ஈழ ஆதரவாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்கிறது. எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் அவை எல்லாம் எங்கள் கால் தூசுக்குச் சமம். முள்ளிவாய்க்கால் முற்றம் எங்கள் சொத்து. நாங்கள் உள்ளே போவோம். அதை தடுக்க முடியாது. ஜெயலலிதாவின் இந்தச் செயல்களூக்கு பாவமன்னிப்பே கிடையாது என்றார் ஆவேசத்துடன். சமீபகாலத்தில் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வைகோ பேசுவது இதுவே முதல் முறை.
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீமான் அன்னை என்ன செய்யிறார் ???

 

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். <_< சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்தியை கொண்டு வந்து இங்கு இணையுங்கள். எல்லாம் மற்றவர்கள் செய்ய வேணும். நீங்கள் கேள்வி மட்டும் கேட்பீர்கள். <_<

 

முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்படுவதை விட சீமான் அண்ணாக்கு எதிராக கருத்து எழுதுவது தான் முக்கியம். <_<

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீமான் அன்னை என்ன செய்யிறார் ???

முள்ளிவாய்க்கால் முற்றதை முழுவதும் இடிக்க முயற்சி வைகோ உட்பட உணர்வாளர்கள் முற்றத்தில் குவிந்தனர்..சிமான் சிறுது நேரத்தில் முற்றுத்தை அடைகிறார்...

https://www.facebook.com/kondal.samy.12

எமது இன்றைய நிலையை இந்தப் புகைப்படம் அழகாக சித்தரிக்கின்றது. :(

 

561977_555002257914203_525089042_n.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் முற்றதை முழுவதும் இடிக்க முயற்சி வைகோ உட்பட உணர்வாளர்கள் முற்றத்தில் குவிந்தனர்..சிமான் சிறுது நேரத்தில் முற்றுத்தை அடைகிறார்...

https://www.facebook.com/kondal.samy.12

 

இப்ப என்ன பதில் எண்டால்...    சீமான் தேவையே இல்லாமல் தமிழ் மக்களுக்காக நாடகம் போடுகிறார்...   நெடுஞ்சாலைக்கு சொந்தமான நிலத்தை  வல்வளைப்பு செய்தமையாலேயே  சுவர் இடிக்கப்பட்டது.... சீமான் தனது வளர்ச்சிக்காக அரசியல் செய்கிறார்...  

 

வராவிட்டால் ஏன் வரவில்லை...??   வந்தால் அரசியல் செய்கிறார்...!   இதுதான் எங்களின் பதில்...   முடிஞ்சால் மோதிப்பாருங்கள்.... 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Thirumurugan Gandhi:

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் கண்ணீரோடும், அதிர்ச்சியோடும், கோபத்தோடும் சிற்பங்களைப் பார்த்து , “ இப்படியெல்லாம் செஞ்சாங்களா?. ஏன் இது எதுவுமே நமக்கு தெரியல.. “ என்று பொறுமிச் சென்ற பொதுமக்களைப் பார்த்து முழுதாய் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. “இத இடிக்கப் போறாங்களாங்க”ன்னு தனது கண்வரிடம் பேசியவரிடம்,” இடிச்சா விட்டுருவோமா, அருவாளோட வந்துரவேண்டியதுதா” என்ற பேச்சுக்களை ஞாயிறு கேட்டு அடைந்த ஆச்சிரியங்கள் அகலுமுன்னர் அய்யோக்கியர்கள் கைவைத்ததை கேள்விப்பட்டு அதிர்ச்சியாயிருக்கிறது. ( நாளை நடக்கவிருக்கும் இனப்படுகொலைக்கான கருத்தரங்கிற்காக தில்லி வ்ரும்பொழுது கேட்டதால் உடன் பதியமுடியவில்லை)

முள்ளிவாய்க்கால் முற்றம் நெடுஞ்சாலைக்கு இடைஞ்சல் என்றால், திருப்பெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இடையூறு செய்யும் ராஜீவ் நினைவிடத்தினை முதலில் இடி.

ஜெயலலிதாவின் வீட்டில் இர்ந்து முக்கால் கி.மீ தொலைவில் நகரின் மையப்படுகுதியில் ஜெமினி பாலத்தருகே மாநகராட்சி நிலத்தினை ஆக்கிரமித்து கட்டிய தி-பார்க் ஹோட்டலின் கட்டிடத்தினை இடித்து காட்டு.

அயோக்கியர்களே, பண்ணுவதோ மூன்றாம்தர அயோக்கிய ஆட்சி. சுயமரியாதையை இழந்த மானங்கெட்ட மந்திரிகள் கூட்டம். (இதில் மீசைக்கொன்னும் குறைச்சல் இருக்காது). எத்தனைக்காலம் அயோக்கியத்தனமும், பொறுக்கித்தனமும் செய்வீங்க.
உங்களது அக்கிரமிக செயல்பாடுகளை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொதுமக்களே தட்டிக்கேட்க தயாராகி விட்டார்கள். நாங்கள் வலிமை பெறுகிறோம்.

முளையிலேயே கிள்ளியெறிய கருணாநிதி கும்பல் நினைக்கும். கட்டிமுடிச்ச பிறகு ஜெயலலிதா கும்பல் அடக்குமுறையை காட்டும். இரண்டும் ஒன்னுதான் எங்களுக்கு. உங்கள் இருவரையும் தூக்கி எறிவதுதான் எமது முக்கியப்பணி என்று அடிக்கடி எமக்கு சொல்கிறீர்கள்.

அன்பான தமிழர்களே, இயக்கங்களே, கட்சிகளே ஒன்றுபட்டு இந்த இரண்டு கொள்ளைக் கூட்ட கும்பல்களை விரட்டுவது வரலாற்றுக்கடமை.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் மீதான பாசத்தினை விட்டு வெளியே வாருங்கள். இவர்களுடனான கூட்டணியை விட்டு வெளியேறுங்கள். மக்களை நம்புங்கள். ஒன்றாய் தேர்தல் களம் காணுங்கள். இதற்கு மேலும் பொறுப்பதற்கில்லை... மேலுள்ள இந்தக் கட்சிகளை ஒழிக்க முன்வாருங்கள். இது முதல்பணி. இந்தியாவின் செறுக்கை நம் செருப்பால் அடித்து அம்பலப்படுத்துவோம். இது நமது முக்கியப்பணி.

கட்சி, சாதி, மதம் மீறி ஒன்று திரள்க. மனித குல விரோதிகளை விரட்டுவோம்.

 


(facebook:- Thirumurugan Gandhi சார்பாக அவர் கருத்தை பதிவு செய்தவர் Kondal Samy)
 
 

 

இடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைகோ...

 

1471950_602961433097140_839100715_n.jpg

 

(facebook)


தமிழர்களே இதுவரை நம் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுற்றுபுறத்தை தான் இடித்து தள்ளியிருக்கிறது இந்த ஏவல்துறை அடுத்து மொத்தமும் இடிக்க துடிக்கிறது ஜெயா ஏவல்துறை.

அதற்குள்ளாக நாம் விரைந்து களத்தில் இறங்காவிட்டால் மொத்தமும் காலியாகும்.

முற்றுத்திலிருக்கும் அய்யா.வைகோ இந்த சமயத்தில் கைதாகாமல் அடுத்த என்ன செய்யவேண்டும் என்று வழிநடத்த வேண்டும்.

 

Kondal Samy

(facebook)

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.