Jump to content

அழகிய காலம் அழியா நினைவு :(


Recommended Posts

கைகட்டி கதை கேட்டு உங்கள்

புன்சிரிப்பின் மர்மம் தெரியாது ..நாம்

திகைத்து நின்ற காலம் மறக்குமா

ஆள் கூப்பிடுது வரட்டாம் என்றால் ...

 

பல யோசனை வரும் நடக்கபோகுது

எல்லாம் சரியா திரும்ப திரும்ப

நாலுதரம் சரிபார்த்து பதட்டமா

வந்து நின்றால் நீங்களே சொல்லும் ...

 

கதை வெட்டையில் மாடு நிக்கு .

போய் அடிச்சுட்டு வாங்கோடா

இரவுக்கு கொத்து சாப்பிடுவம் போங்கோ

நான் பின்னாடி வாரேன் வாகனத்தில் ..

 

பயிற்ச்சியில் கவனமும் கடும் போக்கும்

பாசத்தில் தோள்தட்டி தலை கோதி தட்டி

கொடுத்து ஊக்கம் அளித்து கதை கேட்டு

கேட்பதை செய்து கொடுத்து நிப்பியள் ....

 

நிங்கள் வரிப்புலியுடன் மிடுக்கா நடக்கும்

அழகே தனி எதிரிக்கி உங்களை கண்டால்

பிடிக்கும் கிலி ஏழு பேரிச்சம்பழம் தந்தது

எங்கடா ஆறு கொட்டைதான் இருக்கு ...

 

பதில் வராது எப்படியும் மழுப்ப வேணும்

இல்லைன்னே ஆறில்தான் கொட்டை இருக்கு

ஒண்டில இருக்க வில்லை சொத்தை அது

சரி விடு வேவுக்கு தடையம் மிக முக்கியம் ..

 

காட்டில் பேரிச்சம்பழ கொட்டை எப்படி

என்று எதிரி யோசிச்சா உனக்குத்தான் அடி

விழும் நீ வந்துபோனது அவனுக்கு தெரியும்

வேவு புலி என்றால் நடக்கும்போது புல்லு ..

மிதிபடாமல் நட ...

 

பிரிக்கேடியர் ஜெயம் ஈழ போராட்ட

வரலாற்றில் ஒரு பெரும் அரண்

மிக பலமான தூண் பிரதான மைல்கல்

உறுதி என்றால் ஜெயம் என்று அண்ணை

சொல்லும்படி உயர்த்த மனிதன் நீங்கள் .

air11.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு போராளியும் ஒரு வரலாறு. நன்றி அஞ்சரன்.

Link to comment
Share on other sites

உண்மை அண்ணா நன்றி வரவுக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

பிரிக்கேடியர் ஜெயம் ஈழ போராட்ட

வரலாற்றில் ஒரு பெரும் அரண்

மிக பலமான தூண் பிரதான மைல்கல்

உறுதி என்றால் ஜெயம் என்று அண்ணை

சொல்லும்படி உயர்த்த மனிதன் நீங்கள் .

air11.jpg

 

தளபதி ஜெயமண்ணா எத்தனையோ இடைஞ்சல்கள் தடைபோட்டும் தளராமல் தலைவனை நம்பிய வீரன். இறுதி வரை தலைவனின் வழியையும் தமிழீழ விடியலையும் நேசித்து வாழ்ந்து முடிந்த வரலாற்று நாயகன். இவரது தியாகம் போராட்ட வாழ்வு இன்னும் சரியான முறையில் பதிவு செய்யப்படவில்லை. இவருடன் வாழ்ந்தவர்கள் அவற்றை வெளிக்கொணர்வது காலத்தின் கடமை.

கவிதைக்கு நன்றிகள் அஞ்சரன்.

 

Link to comment
Share on other sites

உண்மை அக்கா .நன்றி வரவுக்கும் கருத்துக்கும் .

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.