• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Manivasahan

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!

Recommended Posts

அன்புக்குரிய நிழலி, 

நீங்கள் தசாப்தங்களாக களநிலமைகளை அறிந்துகொள்ளாத நிலையில் களநிலைபற்றி நீங்கள் விரும்பியவற்றை மட்டுமே வாசிக்கிற நிலையில்  பேசும் அதிதீவிர தேசியவாதம்பற்றி சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

அதிதீவிரவாதிகளும் எதிரிகளும் எதிர் நிலையில் இருந்து ஒன்றையே சொல்வார்கள் எதிர் எதிர் திசையில் இருந்தாலும் வரலாற்றை ஒரே திசையில் தள்ளுவார்கள் என்து தத்துவம். என்னைப்பற்றி எதிரி சார்ப்பு சிங்களபத்திரீகை எதை எழுதுகிறதோ அதைத்தான் நீங்களும் எழுதுகிறீர்கள். அதிதீவிரவாதிகள் எதிரி விரும்புவதையே செய்து அழிவைத்தேடிக்கொள்வார்கள் என்பதை லெனின்  அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்திருக்கிறார்

"Left-Wing" Communism: An Infantile Disorder இடது (அதிதீவிர) பொதூடமைவாதம் ஒரு சிறுபிள்ளை நோய்  என்கிறகட்டுரையை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அதி  தீவிரவாத தமிழ்தேசிய வாதிகள் கட்டாயம் வாசிக்கவேண்டும். மக்களோடு தொடர்பில்லாத புரட்சிக்காரர்களும் தேசிய வாதிகளும் அதிதீவிர தேசியவாதம் என்கிற கற்பனைவாத சிறுபிள்ளை நோய்க்கு ஆளாகும் ஆபத்துள்ளது. மக்களோடு தொடர்புபடுகிறது தவிர்க்க முடியாத தருணங்களில் ஆபத்தை மேற்கொண்டும் மக்களை சந்திப்பது அவசியமானதுதான்லிதனையே நான் செய்தேன். மக்களோடு தொடர்பில்லாத புலம் பெயர் வாழ்வில் தரவுகள் கள ஆய்வுசாராத கொள்கைசார்ந்த கற்பனைகளாகிவிடுகின்றது. இதனை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்.

அதிதீவிரவாதியும் எதிரியும் எதிர் நிலையில்க் செயல்பட்டாலும் ஒன்றையே செய்வார்கள் என்கிற தத்துவத்துக்கு சரியான உதாரணம் சென்ற கடந்த திருமலை நாடாளுமன்றடத் தேர்தலாகும். தமிழரிடம் இருந்து திருமலையைப் பறிப்பதே எதிரியின் பிரதான குறிக்கோளாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆயிரம் திருமலைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சூழலில் இது எதிரிகளுக்குச் சாத்தியமான இலக்குத்தான். மக்களோடு தொடர்பில்லாத அதிதீவிரவாதிகளின் ஆதரவோடு திரு கஜேந்திரகுமார் திருகோணமலையில் சம்பந்தரை தோற்க்கடிக்க வேட்பாளரை நிறுத்தினார்கள். மகிந்த ராசபக்சவின் ஒரே கனவு சம்பந்தரை தோற்க்கடிப்பதும் திருகோணமலையை தமிழரிடமிருந்து கைப்பற்றுவதும்தான். அதிஸ்ட்டவசமாக சம்பந்தர் தப்பிப் பிழைத்துவிட்டார். அதனால் சர்வதேச நாடுகள் 1 தமிழர் பிரச்சினை வடமாகாணப் பிரச்சினை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆபத்தும் 2 போரினால் பாதிக்கப்பட்ட தமிழரை அணுகும் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. ஆனால் திருமலையினல் தமிழருக்கிருந்த  இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒன்றாக்கியதுதான் அதி தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் சிறுபிள்ளைக் கோளாறுள்ள அதிதீவிர வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தான் நம் முன்னோர் சிறுபிள்ளை வேளான்மை விழைந்தும் வீடுவந்து சேராது என்பார்கள். 

நான் தப்பியதற்க்கு முகீய காரனங்கள். 1.என் கைது சம்பவம் இடம்பெற்ற பொழுதே வன்னிவிழான்குளத்தில் இருந்து சுந்தரலிங்கம் கனபதிப்பிள்ளைக்கு (நோர்வே) தகவல்பெகிடைத்ததும் அவர் குளோபல் தமிழ் இணைய நடராசா குருபரனுக்கு உடன் தகவல்தந்ததும், குருபரன் இதயசந்திரன் போன்றவர்கள் அதே கணமே என்கைதை உலகளாவிய செய்தியாக்கியதும். 2. முஸ்லிம் மக்களின் உறுதியான ஆதரவு. தோழர்கள் ரவ் கக்கீமும் பசீர் சேகுதாவித்தும்  அரசுக்கு கொடுத்த அழுத்தம். 3.தோழன் எரிக் சோல்கைம் இலங்கை அரசை மிரட்டும் தோரணையில் என் விடயத்த்யைக் கையாண்டதும் நோர்வீஜிய ஐரோப்பிய அரசுகளை செயல்பட வைத்ததும்.

எனக்காக குரல்கொடுத்த தமிழக புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.

நான் சிறைப் படுத்தப்படுவதை எதிர்பார்த்திருந்து அது நடக்காமல் நான் நாடுகடத்தப் படுவது உறுதியானபின் என் விடுதலைக்காக சிலர் குரல்கொடுத்தார்கள். தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார்.  நிழலிபோன்றவர்கள் கோபபடுவதைத் தவிர்த்து மகிந்த ஆதரவுச் சிங்களப் பத்திரிகைகள் எழுதுவதுபோல எழுதுவதைத் தவிர்த்து  சிந்திக்கவேண்டும் என பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites

தமிழ் தேசிய முகம் உள்ளவர் தேனியில் இருப்பதாகச் சொல்வதே பெரிய சுத்துமாத்து. தேனி யாருடைய ஊடகம் என்று தெரியாமல் கதைக்கின்றீர்களா? அல்லது அதற்கு வெள்ளையடிக்க முயல்கின்றீர்களா? சிங்களத்தை அண்டிப்பிளைப்பவர்களைத் தமிழ்த்தேசியவாதிகள் என சுத்த வேண்டாம் ஐயா

Share this post

Link to post
Share on other sites

தூயவனுக்கு என்னாயிற்று?

நான் எழுதியது இதுதான் '''தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார்.''. முகம் காட்டும் என்கிற சொல்லுக்கு  முகமுள்ளவர் என்கிற கருத்தில்லை.

துளசி, நான் என்னைத் தேடிவந்த அரசியல் பதவிகளை எல்லாம் வாழ்நாள் முழுக்க தூக்கி எறிந்தவன்.உயிருடன் திரும்பி வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையென தெரிகிறது. 

நான் கொல்லப்பட்டிருந்தால் சிலர் ஒரு பெக் விஸ்க்கி அடித்துவிட்டு என்னை தியாகி ஆக்கி இருப்பார்கள். இப்ப திட்டுகிறார்கள்.  என்ன செய்வது? குளோபல் தமிழ் செய்தியும்  முஸ்லிம் மக்களும் எரிக் சொல்கைமும் இப்படி எனது விடுதலைக்கு உழைப்பார்கள் என்று எனக்கே தெரியாது. நான் சாகாமல் திரும்பிவந்தமைக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் .

Share this post

Link to post
Share on other sites

ஜெ.. திவயினவில் முழுப் பக்கத்தில் உங்கள் பற்றி ஒரு கட்டுரை வந்தது. புலம்பெயர்ந்தவர்களும் தமிழகமும் அனுப்பிய புலி என்கிற மாதிரித் தலைப்பு இருந்தது - தீபசெல்வன்

இது எப்படி இருக்கு நிழலி ? இது எப்படி இருக்கு துளசி?, இது எப்படி இருக்கு தூயவன்? தியவினவை பாராட்டுங்கள். ஏனெனில் நீங்களும் தியவின காரனும் எதிர் எதிர் நிலையில் நின்றுகொண்டு என்னையே குறிவைக்கிறீங்க. நான் கொல்லப்படவில்லை என்பதுதான் இருசாராருக்கும் கவலையாய் இருக்கு.

வணக்கம் தோழர்

உங்களுடைய  கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதியதில்லை

காரணம்

உங்களின் முன்னால்

எந்தவகையில் பார்த்தாலும் நானொரு துரும்பு.

ஆனால்

இந்த திரியில்

தாயகம் சார்ந்து  உயிரும் உதிரமும்  சதையும் கலந்த

தமிழரின் போராட்ட நலன் கருதி எழுதுவதாயின்.......

இந்த பயணம்

கைது

அதனூடான  தங்களது நடவடிக்கைகள்

அறிக்கைகள்

பேட்டி

தற்போதைய  எழுத்துக்கள்..........

இவற்றினூடாக  என்னிடமிருந்து நீங்கள் அதிக தூரம் விலகிச்சென்றுள்ளீர்கள்.

அதை மட்டுமே தங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்

நீங்கள் ஒரு சமுத்திரம்

எனது ஆதங்கத்தின் தார்ப்பரியத்தை புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

நண்பா, எனக்காக முஸ்லிம்களும் எரிக்சொல்கைமும் களத்தில் இறங்குவார்கள் என நினைக்கவில்லை. உயிர் காப்பாற்றப்பட்டது தப்பானால் அது அவர்கள் செய்த தப்புத்தான்,

நான் மீண்டும் 2014ல் மீன்பிடிப் படகில் செல்லக்கூடும். அப்போது நான் கொல்லப்பட்டால் உங்கள் இடைவெளி அகன்றுவிடுமல்லவா? அதுவரை காத்திருப்போம்

Share this post

Link to post
Share on other sites

துளசி, நான் என்னைத் தேடிவந்த அரசியல் பதவிகளை எல்லாம் வாழ்நாள் முழுக்க தூக்கி எறிந்தவன்.உயிருடன் திரும்பி வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையென தெரிகிறது. 

நான் கொல்லப்பட்டிருந்தால் சிலர் ஒரு பெக் விஸ்க்கி அடித்துவிட்டு என்னை தியாகி ஆக்கி இருப்பார்கள். இப்ப திட்டுகிறார்கள்.  என்ன செய்வது? குளோபல் தமிழ் செய்தியும்  முஸ்லிம் மக்களும் எரிக் சொல்கைமும் இப்படி எனது விடுதலைக்கு உழைப்பார்கள் என்று எனக்கே தெரியாது. நான் சாகாமல் திரும்பிவந்தமைக்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் .

நீங்கள் இறந்திருக்க வேண்டும் என நான் எங்காவது கருத்து கூறியுள்ளேனா?

நான் தனியே கருத்து கூறியது விடுதலையின் பின்னராவது நீங்கள் எமது மக்களின் பிரச்சினை பற்றி கதைத்திருக்க வேண்டும், உங்களை கைது செய்த அரசாங்கம் பற்றி உலகத்துக்கு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும் என்பதே. ஆனால் நீங்கள் உங்கள் நண்பர்களை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் அரசாங்கம் பற்றி நல்லறிக்கை கொடுக்கிறீர்கள். அதை தான் தவறு என கூறுகிறேன். அது நீங்கள் இறக்கவில்லையே என நான் கவலைப்படுவது போல் உங்களுக்கு தெரிந்தால் புரிந்துணர்வு விடையத்தில் நீங்கள் படு சுட்டி எனவே கொள்கிறேன்.

இந்த திரியில் நீங்கள் எழுதிய அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள் மூலம் உங்களை பெரிய ஹீரோ போல் காட்ட முற்படுகிறீர்கள்.

Callum Macrae, Frances Harrison போன்றவர்கள் உங்களை கைது செய்த செய்தியை twitter இல் பதிந்திருந்தார்கள். இலங்கையில் தற்பொழுதும் கைதுகள், கடத்தல்கள் தொடர்கிறது என்ற ஒரு செய்திக்காகவே அதை பகிர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு நீங்கள் விடுதலையின் பின்னர் சொல்ல வரும் செய்தி என்ன? அடக்குமுறைகள், மக்களின் பிரச்சனைகளை பற்றி பேச வேண்டிய நேரத்தில் நீங்கள் உங்களை ஹீரோவாக்கி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.அதே போல் இலங்கை அரசு பற்றி நற்சான்றிதழ் கொடுக்கிறீர்கள்.

சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தாத ஒரு சந்தர்ப்பவாதியாகவே உங்களை நான் பார்க்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites

துளசி.

எது நான் அரசுக்கு வளங்கிய நற் சான்று? சான்றை வெட்டி ஒட்டுங்கள்? எங்கே நான் கீரோபோல காட்டுகிறேன்? அவதூறு பேசாமல். சான்றை வெட்டி ஒட்டுங்கள்.

என் நண்பர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்து என் சாவை கொண்டாட முடியவில்லையே என  அங்கலாய்க்கவில்லை. அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நான் தேடிய தகவல்களை தந்தவர்கள். வீரம்பேசி நான் கீரோவாகி அவர்களை மாட்டிவிடுவதில்லை. அவர்கள் உயிர்ப்பாதுகாப்புத்தான் எனக்கு விடுதலை செயல்பாடு. 

உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள் பதிலளிக்கிறேன். தனக்கு வரும்போதுதான் வலிதெரியும் என்பார்கள். என் உறவுகள் இன்னும் வலியில் இருந்து மீழவில்லை.மனச்சாட்சியுடன் யோசியுங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கும் அது புரியும்

Share this post

Link to post
Share on other sites

கடைசியாக எழுதிய வசனத்தில் உங்களை நான் எங்கே குறி வைத்தேன். அதில் தெனிக்கான வெள்ளையடித்தல் பற்றியே எழுதியிருந்தேன். இதில் எனிப் பதில் எழுதுதல் வேலை வெட்டியற்ற நிலை என நினைக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites

துளசி.

எது நான் அரசுக்கு வளங்கிய நற் சான்று? சான்றை வெட்டி ஒட்டுங்கள்? எங்கே நான் கீரோபோல காட்டுகிறேன்? அவதூறு பேசாமல். சான்றை வெட்டி ஒட்டுங்கள்.

என் நண்பர்கள் வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்து என் சாவை கொண்டாட முடியவில்லையே என  அங்கலாய்க்கவில்லை. அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நான் தேடிய தகவல்களை தந்தவர்கள். வீரம்பேசி நான் கீரோவாகி அவர்களை மாட்டிவிடுவதில்லை. அவர்கள் உயிர்ப்பாதுகாப்புத்தான் எனக்கு விடுதலை செயல்பாடு. 

உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் முன்வையுங்கள் பதிலளிக்கிறேன். தனக்கு வரும்போதுதான் வலிதெரியும் என்பார்கள். என் உறவுகள் இன்னும் வலியில் இருந்து மீழவில்லை.மனச்சாட்சியுடன் யோசியுங்கள். என்றாவது ஒருநாள் உங்களுக்கும் அது புரியும்

நீங்கள் இந்த திரியில் எழுதியிருப்பவை அனைத்தையும் திரும்ப வாசியுங்கள். உங்களுக்கு சுட்டிக்காட்டுவதாக இருந்தால் உங்கள் அனைத்து கருத்துகளையும் நான் திரும்ப பதிந்துகொண்டிருக்க வேண்டும்.

அதே போல் மற்றவர்கள் எழுதியவற்றையும் வாசியுங்கள். திரும்ப திரும்ப ஒன்றையே எழுதிக்கொண்டிருக்க முடியாது.

Share this post

Link to post
Share on other sites

தூயவன், மனச்சாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள், இது எனக்கு உயிர்வதை.

(சிங்களத்தை அண்டிப்பிளைப்பவர்களைத் தமிழ்த்தேசியவாதிகள் என சுத்த வேண்டாம் ஐயா) இது குறிவைப்பில்லையா?

நான் எங்கே தேசியவாதிகள் என்றேன் எங்கே சுத்தினேன்? தமிழ் தேசிய முகம் உள்ளவர் தேனியில் இருப்பதாக எங்கே சொன்னேன்.  

தமிழ் தேசிய முகம் காட்டும் என்கிற நான் எழுத அதை  தமிழ் தேசிய முகமுள்ளவர் எனதிரித்து என்னை அரசை அண்டிப்பிழைப்பவர்களை தேசியவாதியென சுத்துகிறவனாக

 நீங்கள் எழுதியது தப்பா சரியா? தப்பெனில் மனச்சாட்ச்சி இருந்தால் மன்னிப்புக் கேழுங்கள். சரி எனில் வாதம் வேண்டாம் என்னை மனித்தாதாக ஒரு வார்த்தை எழுதுங்கள்.

Share this post

Link to post
Share on other sites

நண்பா, எனக்காக முஸ்லிம்களும் எரிக்சொல்கைமும் களத்தில் இறங்குவார்கள் என நினைக்கவில்லை. உயிர் காப்பாற்றப்பட்டது தப்பானால் அது அவர்கள் செய்த தப்புத்தான்,

நான் மீண்டும் 2014ல் மீன்பிடிப் படகில் செல்லக்கூடும். அப்போது நான் கொல்லப்பட்டால் உங்கள் இடைவெளி அகன்றுவிடுமல்லவா? அதுவரை காத்திருப்போம்

தோழரே

எந்த வசனம் தங்களிடமிருந்து  வந்துவிடக்கூடாது என இதுவரை  இத்திரியிலிருந்து  விலகியிருந்தேனோ

அது வந்துவிட்டது.

இன்றைய  மனநிலையில்

எழுதாதிருப்போம்.

மன்னியுங்கள்

இன்றைய தங்களது நிலையில்

தங்களை  எனது வரிகள் குத்தியிருந்தால்..............

Share this post

Link to post
Share on other sites

//. தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார். //நீங்கள் சொன்னது தான். கருத்து இலக்கம் #226 கடைசிப் பந்தி:

Share this post

Link to post
Share on other sites

இப்ப கோபமில்லை தூயவன்,

தமிழ் தேசிய முகம்காட்டும் ஒருவர் என்பது தமிழ்தேசியவாதிபோல வேடம்போடும் ஒருவர் என்றுபொருள். தமிழ் தேசியவாதி என்று பொருளில்லை. நீங்கள் அர்த்தம் புரியாமல் கோபப்பட்டிருந்தால்  எழுதியிருந்தால் பிரச்சினை இல்லை. விட்டுவிடுவோம்.

ஆனால் துளசி நிழலிபோன்ற சிலரின் எழுத்துக்கள் பனையில் இருந்து விழுந்தவனை மாடு ஏறி மிரித்ததுபோல இருக்கு. .எனக்கு இது உயிர்வதை.

Share this post

Link to post
Share on other sites

உங்களை கைது செய்வார்கள், உங்கள் நண்பர்கள் காப்பாற்றுவார்கள், நீங்கள் விடுதலையாவீர்கள் :) என நினைத்தால் தயவு செய்து இனிமேலும் இலங்கைக்கு செல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் கைது செய்யப்பட்டால் ஒரு தமிழர் கைது செய்யப்பட்டார் எனவே உலகம் பார்க்கும். நீங்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டாலும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற தோற்றத்தையே உருவாக்கும். (விடுதலையின் பின்னர் தகுந்த காரணங்களை உலகின் முன் நீங்கள் வைக்காத நிலையில்)

நீங்களும் உங்கள் நண்பர்களும் நல்ல பாதுகாப்பாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் இவ்வாறான செயற்பாடுகளால் அங்கு உண்மையில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படாதவர்களும் அனுபவித்த, அனுபவிக்கும், அனுபவிக்கப்போகும் சித்திரவதைகள் உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படும். :rolleyes:
 
ஒரு சிலரை காப்பாற்றுகிறேன் என கூறி நீங்கள் உண்மையில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற தமிழ் மக்களை மறந்து விடுகிறீர்கள். அவர்களுக்கு தீமை விளைவிக்கும் செயற்பாடுகளையே மேற்கொள்கிறீர்கள்.

இப்பொழுதும் கூட திரும்ப இலங்கைக்கு செல்வீர்கள் என கூறுகிறீர்கள். நீங்கள் போனாலென்ன வந்தாலென்ன மீடியாக்களுக்கு தெரிவிக்காமலேயே உங்களை காப்பாற்றக்கூடிய நண்பர்களுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அறிவித்து விட்டு போய் வாருங்கள். ஏனென்றால் உங்கள் ஒருவரை தான் தமிழர் என உலகம் கணக்கு போட்டுவிடக்கூடாது. :)

தேவையான நேரத்தில் குரல் கொடுக்காத நீங்கள் எல்லாம் இணக்க அரசியல் செய்து எந்த காலத்திலும் பிரயோசனம் கிடைக்காது. ஒருவேளை உங்களுக்காக ஹக்கீம் குரல் கொடுப்பது தான் உங்களை பொறுத்தவரை இணக்க அரசியலோ தெரியவில்லை. :)

Share this post

Link to post
Share on other sites
இந்த திரி எதை நோக்கி போகிறது .................. :(
 
பண்பாளர், நாகரீகம் தெரிந்தோர் ,மனித மாண்புகளை அறிந்தோர் ,உளவியல் தெரிந்தோர் ,நல்வர்கள் ,அன்பானவர்கள் ,அரவனைப்பவர்கள் ...........................தேடலின் பக்கங்கள் நீள்கிறது ...............
 
இங்காவது யாராவது இருப்பார்களா என்ற ஏக்கம் மட்டுமே .................நன்றிகள் . :)

Share this post

Link to post
Share on other sites

அன்புக்குரிய நிழலி, 

நீங்கள் தசாப்தங்களாக களநிலமைகளை அறிந்துகொள்ளாத நிலையில் களநிலைபற்றி நீங்கள் விரும்பியவற்றை மட்டுமே வாசிக்கிற நிலையில்  பேசும் அதிதீவிர தேசியவாதம்பற்றி சற்று சிந்திக்க வேண்டுகிறேன்.

அதிதீவிரவாதிகளும் எதிரிகளும் எதிர் நிலையில் இருந்து ஒன்றையே சொல்வார்கள் எதிர் எதிர் திசையில் இருந்தாலும் வரலாற்றை ஒரே திசையில் தள்ளுவார்கள் என்து தத்துவம். என்னைப்பற்றி எதிரி சார்ப்பு சிங்களபத்திரீகை எதை எழுதுகிறதோ அதைத்தான் நீங்களும் எழுதுகிறீர்கள். அதிதீவிரவாதிகள் எதிரி விரும்புவதையே செய்து அழிவைத்தேடிக்கொள்வார்கள் என்பதை லெனின்  அழுத்தம் திருத்தமாக பதிவுசெய்திருக்கிறார்

"Left-Wing" Communism: An Infantile Disorder இடது (அதிதீவிர) பொதூடமைவாதம் ஒரு சிறுபிள்ளை நோய்  என்கிறகட்டுரையை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அதி  தீவிரவாத தமிழ்தேசிய வாதிகள் கட்டாயம் வாசிக்கவேண்டும். மக்களோடு தொடர்பில்லாத புரட்சிக்காரர்களும் தேசிய வாதிகளும் அதிதீவிர தேசியவாதம் என்கிற கற்பனைவாத சிறுபிள்ளை நோய்க்கு ஆளாகும் ஆபத்துள்ளது. மக்களோடு தொடர்புபடுகிறது தவிர்க்க முடியாத தருணங்களில் ஆபத்தை மேற்கொண்டும் மக்களை சந்திப்பது அவசியமானதுதான்லிதனையே நான் செய்தேன். மக்களோடு தொடர்பில்லாத புலம் பெயர் வாழ்வில் தரவுகள் கள ஆய்வுசாராத கொள்கைசார்ந்த கற்பனைகளாகிவிடுகின்றது. இதனை நான் அனுபவரீதியாக உணர்ந்துள்ளேன்.

அதிதீவிரவாதியும் எதிரியும் எதிர் நிலையில்க் செயல்பட்டாலும் ஒன்றையே செய்வார்கள் என்கிற தத்துவத்துக்கு சரியான உதாரணம் சென்ற கடந்த திருமலை நாடாளுமன்றடத் தேர்தலாகும். தமிழரிடம் இருந்து திருமலையைப் பறிப்பதே எதிரியின் பிரதான குறிக்கோளாக இருந்தது. ஏறக்குறைய 50 ஆயிரம் திருமலைத் தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் சூழலில் இது எதிரிகளுக்குச் சாத்தியமான இலக்குத்தான். மக்களோடு தொடர்பில்லாத அதிதீவிரவாதிகளின் ஆதரவோடு திரு கஜேந்திரகுமார் திருகோணமலையில் சம்பந்தரை தோற்க்கடிக்க வேட்பாளரை நிறுத்தினார்கள். மகிந்த ராசபக்சவின் ஒரே கனவு சம்பந்தரை தோற்க்கடிப்பதும் திருகோணமலையை தமிழரிடமிருந்து கைப்பற்றுவதும்தான். அதிஸ்ட்டவசமாக சம்பந்தர் தப்பிப் பிழைத்துவிட்டார். அதனால் சர்வதேச நாடுகள் 1 தமிழர் பிரச்சினை வடமாகாணப் பிரச்சினை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆபத்தும் 2 போரினால் பாதிக்கப்பட்ட தமிழரை அணுகும் ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. ஆனால் திருமலையினல் தமிழருக்கிருந்த  இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஒன்றாக்கியதுதான் அதி தீவிர தமிழ் தேசியவாதிகளின் பங்களிப்பாக இருந்தது. ஆனாலும் தமிழர்கள் சிறுபிள்ளைக் கோளாறுள்ள அதிதீவிர வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தான் நம் முன்னோர் சிறுபிள்ளை வேளான்மை விழைந்தும் வீடுவந்து சேராது என்பார்கள். 

நான் தப்பியதற்க்கு முகீய காரனங்கள். 1.என் கைது சம்பவம் இடம்பெற்ற பொழுதே வன்னிவிழான்குளத்தில் இருந்து சுந்தரலிங்கம் கனபதிப்பிள்ளைக்கு (நோர்வே) தகவல்பெகிடைத்ததும் அவர் குளோபல் தமிழ் இணைய நடராசா குருபரனுக்கு உடன் தகவல்தந்ததும், குருபரன் இதயசந்திரன் போன்றவர்கள் அதே கணமே என்கைதை உலகளாவிய செய்தியாக்கியதும். 2. முஸ்லிம் மக்களின் உறுதியான ஆதரவு. தோழர்கள் ரவ் கக்கீமும் பசீர் சேகுதாவித்தும்  அரசுக்கு கொடுத்த அழுத்தம். 3.தோழன் எரிக் சோல்கைம் இலங்கை அரசை மிரட்டும் தோரணையில் என் விடயத்த்யைக் கையாண்டதும் நோர்வீஜிய ஐரோப்பிய அரசுகளை செயல்பட வைத்ததும்.

எனக்காக குரல்கொடுத்த தமிழக புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.

நான் சிறைப் படுத்தப்படுவதை எதிர்பார்த்திருந்து அது நடக்காமல் நான் நாடுகடத்தப் படுவது உறுதியானபின் என் விடுதலைக்காக சிலர் குரல்கொடுத்தார்கள். தமிழ் தேசிய வாத முகம் காட்டும் என் நண்பர் ஒருவர் தேனியில் சிங்கள் இனவாத பத்திரிகையாளரின் அதே நோக்கத்தோடு என்னை இகழ்ந்து கட்டுரை எழுதினார்.  நிழலிபோன்றவர்கள் கோபபடுவதைத் தவிர்த்து மகிந்த ஆதரவுச் சிங்களப் பத்திரிகைகள் எழுதுவதுபோல எழுதுவதைத் தவிர்த்து  சிந்திக்கவேண்டும் என பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.

அன்பான ஜெயபாலன் அண்ணா,

உங்கள் விரிவான பதிலுக்கு மிகவும் நன்றி.

நான் உங்களுக்கு எழுதிய விடயங்கள் உங்களுக்கு புரிகின்ற விதமாக எழுதவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது.  இப்பொழுது சுருக்கமாக சொல்ல முயல்கின்றேன்.

நீங்கள் கைது செய்யப்பட்டு விட்டதாக உங்கள் முகநூலில் வந்த தகவலைக் கண்டதில் இருந்து விடுதலையாகிய செய்தி வரும் வரைக்கும் உங்கள் விடுதலையை மிகவும் விரும்பிய உறவுகளில் நானும் இருந்தேன்.  எந்த விதமாகினும் விடுதலையாக வேண்டும் என்பதே எனது எண்ணமுமாக இருந்தது. அதே நேரத்தில், உங்கள் விடுதலையை விரும்பிய காரணத்துக்காக  முதல் அறிக்கை என்று நீங்கள் வெளியிட்டு இருக்கும் அறிக்கையை நான் ஆதரிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உங்கள் முதல் அறிக்கையினை கண்டித்து விமர்சிப்பதால் மட்டுமே நான் அதி தீவிர தமிழ் தேசியத்தினை வலியுறுத்துகின்றவராக நீங்கள் நிறுவ  முயல்வது தவறு. என் எழுத்துகள் என்றுமே அதி தீவிர தமிழ் தேசியத்தை வலியுறுத்துவன அல்ல. அத்துடன் புலம்பெயர்ந்த  ஒருவர் தாயகத்துக்கு செல்வதை ஒரு தவறான விடயமாக பார்க்கும் சிந்தனையும் என்னிடம் இல்லை. என்னைக் கேட்டால் தாயகத்திற்கு ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழரும் தன் பிள்ளைகளுடன் சென்று காட்டி அந்த மண்ணுடனான நேரடி பரிச்சயத்தினை பேண வேண்டும் என்பதையே வலியுறுத்துவேன் (இதன் அர்த்தம் சுற்றலாவாக செல்வது அல்ல). எனவே நீங்கள் தாயகம் சென்றதோ அல்லது மீண்டும் அங்கு செல்ல நினைப்பதோ தவறு என்று ஒரு இடத்திலும் குறிப்பிட வில்லை, அப்படி எண்ணவும் இல்லை.

நீங்கள் அங்கு சென்று கைதாகியதும் விடுதலையானதும் ஒரு சாதாரண நிகழ்வாக கொள்ள முடியவில்லை. சிங்களம் தன் மேலதிகாரத்தினை வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்றுச் செல்கின்றவர்கள் மீதும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பிரயோகிக்கும் என்பதை மீண்டும் உலகுக்கு காட்டும் ஒரு செயல். கைதில் இருந்து விடுவிப்பு வரை நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்திலும், ஒவ்வொரு கிளைச் சம்பவங்களிலும் எந்த நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் பேரினவாத அம்சம் நிறைந்து கிடக்கின்றது.

ஆனால் உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை வெளிக்காட்டுகின்றதா? மீண்டும் இதனை அழுத்திக் கேட்கின்றேன், உங்கள் முதல் அறிக்கை இந்த பேரினவாத அம்சங்களை அதன் அதே தீவிரத் தன்மையுடன் வெளிக்காட்டுகின்றதா?

இல்லை என்று தான் நான் சொல்வேன். பேரினவாதத்தின் தீவிரத்தினை காட்டமல் விட்டது மட்டுமன்றி, அதனை நீர்த்துப் போகின்ற செயலைத்தான் உங்கள் அறிக்கை செய்கின்றது என்பதே என் முடிவு. முக்கியமாக அரச மேல்மட்டம் (உங்கள் அறிக்கையில் கோத்தா) நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பது போன்றும் அதன் கீழ் மட்டம் (உங்கள் அறிக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள்) தான் பேரினவாதத்தின் தீவிரத்துடன் இருப்பது போன்றும்  உங்கள் அறிக்கையின் அரசியல் பேசவில்லையா?

இதைத்தான் நான் கடுமையாக விமர்சிக்க முயல்கின்றேன்.  ஜெயபாலன் என்ற தனிமனிதனுடன் எனக்கு எந்தவிதமான விரோதமும் இல்லை, 'உவன் எங்கள் சொத்து' என்று வாஞ்சையுடன் அழைக்கும் வண்ணம் தான் ஜெயபாலன் என்ற மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் நுட்பமான கவிஞன் இருக்கின்றான். அவனை எப்பவும் ஆராதிப்பேன். அவன் கவிதைகளை உரத்துப் படித்துக் காட்டி என் பிள்ளைகளுக்கும் கவிதாவுணர்வை கொண்டு வரப் பார்பேன். அந்தக் கவிஞனுடனும், ஜெயபாலன் என்ற தனிமனிதனுடனும் எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவன் அரசியலில் கண்டிப்பாக கோபம் இருக்கின்றது. அந்த அரசியலை வெளிக்காட்டிக் கொண்டு இருக்கும் 'முதல் அறிக்கையில் கோபம் இருக்கின்றது.  அதை கண்டிப்பாக தொடர்ந்து எதிர்பேன். அது தொடர்பாக தொடர்ந்து விவாதிக்கவும் விரும்புவேன்

நன்றி

நிழலி

(மற்றது, குருபரன் குளோபல்செய்தித் தளத்தில் செய்தி போடும் முன் முகநூல் தகவலை வைத்து யாழில் உங்கள் கைதை செய்தியாக மணிவாசகன்  போட்டு இந்தத் திரியை ஆரம்பித்து இருந்தார். ஆகவே உங்கள் கைதை செய்தியாக முதலில் உலகுக்கு கொண்டு வந்தது உங்கள் முகநூலும் எங்கள் யாழும் தான் )

Share this post

Link to post
Share on other sites

செயபாலன் , நிழலியும் துளசியும் மட்டும் அல்ல உங்களை நன்கு  அறிந்தவர்கள், பொது வெளியில் எழுதுபவர்கள் எல்லோருடமும் உங்களைப் பற்றிய பார்வை இவ்வாறே உள்ளது.

உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன். ஆகவே உங்களின் தனிப்பட்ட பிரச்சினையை, தமிழர்களைத் துன்பப்படுத்தும் செயற்பாடாக மாற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். துன்பப்பட்ட துன்பப் படும் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய பேருபகாராம், கவிதை எழுதுவது படத்தில் நடிப்பது என்னும் துறைகளில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள்.இது உங்களுக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது. எனது யோசனையை சீர்தூக்கி நடப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

நன்றி.

Share this post

Link to post
Share on other sites

'பொயட்' மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி.

ஆனால் அவர் கவிதை, திரையுலகம் மற்றும் இலக்கியம் மட்டோடு நின்றுவிடுவதே தமிழர்களுக்கு நல்லது என்று தோன்றுகிறது.

Share this post

Link to post
Share on other sites

ஆன்புக்குரிய நிழலி,

இது சிலருக்கு பூனை எலி விழையாட்டாக இருக்கு. ஆனால் எனக்கோ உயிர் மானபிரச்சினை. பிரச்சினை. பொத்தாம் பொதுவாக பேசாமல் உங்கள் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை என் அறிக்கையில் இருந்து வெட்டி ஒட்டுங்கள்.

நிழலி, நான் அறிக்கை என எழுதாமல் முதல் அறிக்கை என்று எழுதியதன் பொருளென்ன? என் தோழர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தியபின் 2, அறிக்கை எழுதுவேன் என சொன்னதுகூட உங்களுக்கு புரியவில்லையா?

நிழலி, ஜெயபாலன் ஏன் தயங்கவேண்டும் களத்தில் அவருக்கு  தகவல்கள் தந்தவர்கள் அதன்பின்னர் புலம் பெயர்ந்திருப்பார்கள்தானே. தயங்க வேன்டியதில்லை  என நினைதீர்களா?. ஆனால் அவர்கள் இன்னும் புலம்பெயராமல் ஊரில் இலங்கை சர்வாதிகாரத்தின் பிடிக்குள் இருக்கிறார்கள். அதனால்தான் என் அறிக்கையை பிரித்து ,முதல் அறிக்கையை மட்டும் வெளியிட்டேன்.                                                                                                                                                                                                                                            

தயவு செய்து உங்கள் பக்கம் தவறிருந்தால் மனச்சாட்சியுடன் தவறை என்று ஒத்துக்கொள்ளுங்கள். தவறில்லையெனில் தொடர்ந்தும் அப்படியே எழுதுங்கள். நான் உயிரோடிருப்பது முஸ்லிம் மக்களதும் எரிக் சோல்கைமினதும் ஆதரவால் நிகழ்ந்தது. அது என் தவறல்ல என்பதையாவது நம்புங்கள் நிழலி.

தன்நெஞ்சறிவது பொய்யற்க்க பொய்த்தபின்

தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

Share this post

Link to post
Share on other sites

ஏன் அவர்கள் விட்டார்கள் என இப்போது தான் தெரிகின்றது... எங்களாலேயே முடியவில்லை....

Share this post

Link to post
Share on other sites

ஏன் அவர்கள் விட்டார்கள் என இப்போது தான் தெரிகின்றது... எங்களாலேயே முடியவில்லை....

அடப்பாவி............. :lol:

Share this post

Link to post
Share on other sites

உங்களை பல்துறை விற்பன்னர் என்று நீங்களே நினைத்துக் கொள்வது ஒரு உளவியற் பிரச்சைனையாகவே நான் கருதுகிறேன்.- நாரதர்

நாரதர் நான் எங்கே பல்துறை விற்பனன் என்று சொன்னேன? ஆதாரத்தை வெட்டி ஒட்டுங்கள். இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே.

வீடுவந்து 72 மணிதியாலங்கள்தான் ஆகிறது அதற்குள்ளேயே ஏன் இப்படி?

நாரதர் இராசவன்னியன் உங்கள் ஆலோசனைக்கு நன்றி,

நீங்கள் களத்தில் வாழும் பல்லாய்ரக்கணக்கான முஸ்லிம் தமிழ் உறவுகளை கேட்டுப்பாருங்கள்.  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விரும்பும் கோரும் எனது ஆய்வுப் பணிகளிலும் தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கான  பணிகளிலும் நான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. இலங்கை அரசு தமிழரையும் முஸ்லிம்களையும் சேர்த்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க நான் முயல்வதாக குற்றம் சாட்டுகிறது. சிங்களப் பத்திரிகைகளும் அதனையே சொல்கின்றன. நீங்கள் இப்படி சொல்கிறீங்க. 

அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை

Share this post

Link to post
Share on other sites

நண்பார் விசுக்கு,

தூயவன் தெரிந்து சொன்னாரா தெரியாமல் சொன்னாரா என்பது தெரியவில்லை. ஆனால் என்னை விசாரித்தவர்கள் சொன்னதையே  தூயவனும் சொல்கிறார்..

Share this post

Link to post
Share on other sites

இப்படி மற்றவர் நினைப்பதை சொல்லமுடியும் என நினைப்பது ஒரு உளவியல் பிரச்சினையல்லவா நண்பரே.

நீங்கள் உயிருடன் வந்தது எனக்கு பிடிக்கவில்லை என முன்னர் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவும் இல்லை, சொல்லியிருக்கவும் இல்லை.

உங்களுக்கு உளவியல் பிரச்சினை உள்ளது என எடுத்துக்கொள்ளலாமா? :(:D:icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.