Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

தமிழையும் தமிழர் போராட்டத்தையும் வைத்து, வளர்ந்தவர்கள் ஏராளம்.

 

புலிகள் மிகவும் பலம் பெற்று இருந்த பொழுது அவர்களின் ஆலோசகராக இருந்த கவிஞர்களும் ஆய்வாளர்களும் தாராளம்.

 

தலைவர் வந்தால், போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை தருவோம் என்று, சுருட்டியவர்கள்  இன்னுமொரு பக்கம்.

 

இது எல்லாம் தாண்டித்தான் விடுதலை.

Link to comment
Share on other sites

 • Replies 264
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

1073256_571196122934921_992491809_o.jpg

 

 

 

புது கவிதை  புகழ் கவிஞர்  விரைவில் விடுதலையாவார் என்று நம்புவோம் ...

 

. (இளைஞனாக பல்கலைகழக மாணவ சங்க தலைவராக இருந்த பொழுது இந்த புகைபடம்)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட பின்பு, கூட்டமைப்பினருடன் காலம் தள்ளுவது இலங்கைக்கு மிகவும் இலகுவாக உள்ளது! இந்தியாவின் நிலையம் இது தான்!

 

எனவே, கூட்டமைப்புக்கு எதிராகப் புதியதொரு தலைமை உருவாவதை, இலங்கை ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது! குறிப்பாக ஜெயபாலன் போன்றவர்களுக்கு, முஸ்லிம்கள், சில சிங்களவர்களின் 'பின்புல ஆதரவு' பின்னணியில் உள்ளது! அத்துடன் இனப்பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தக்கூடிய பின்புலமும் இவரிடம் உள்ளது!

 

அனந்தியுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட படம் வெளியானதும், தமிழ்த் தலைமைகளும், இந்திய அவதானிகளும், சிங்களத் தலைமையும் விழித்துக்கொண்டன என்பதே உண்மையாகும்! ஜெயபாலன், நீண்ட காலங்கள் புலத்தில் வாழ்ந்திருந்தாலும், பேராசிரியர் நுஹ்மான், போன்றவர்களுடனும், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுடனும், மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் உருவான அரசியல் வாதிகளுடனும், பல புத்தி ஜீவிகளுடனும் தொடர்புகளைப் பேணியே வருகின்றார்! 

 

ஜெயபாலனுடன் ஒரு பிடிவாதக் குணம் எப்போதும், இவருடன் இணைந்தே பிறந்தது போல உண்டு! இப்போது கூட சிங்களப் புலனாய்வாளர்களுடன் 'சண்டை' பிடித்துக்கொண்டிருப்பார் என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்!

 

எம்மைப்போல அன்றி, இலங்கை அரசு மிக நீண்ட தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகின்றது ஏன்பதைய இந்தக் கைது வெளிக்காட்டி நிற்கின்றது!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாராலும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசுக்கு சவால்விடத்தக்க அரசியலை முன்னெடுக்க முடியாது. அதற்கான எந்த ஆயத்தங்களோ.. திட்டங்களோ.. தொலைநோக்குகளோ இவர்களிடம் இல்லை. இவர்கள் பற்றிய ஒரு கற்பிதத்தை வழங்குவதை காட்டிலும் யதார்த்தமான இவர்களை திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனங்காட்டுவது போல இனங்காட்டிச் செல்வதே மக்களுக்குச் சிறந்தது. எதிர்காலத்திற்குச் சிறந்தது..! அதுவே புதிய தலைமுறைக்கு புதிய வழிக்கான வழிகாட்டுதலாக அமையும். :icon_idea:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யாராலும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசுக்கு சவால்விடத்தக்க அரசியலை முன்னெடுக்க முடியாது. அதற்கான எந்த ஆயத்தங்களோ.. திட்டங்களோ.. தொலைநோக்குகளோ இவர்களிடம் இல்லை. இவர்கள் பற்றிய ஒரு கற்பிதத்தை வழங்குவதை காட்டிலும் யதார்த்தமான இவர்களை திருமுருகன் காந்தி போன்றவர்கள் இனங்காட்டுவது போல இனங்காட்டிச் செல்வதே மக்களுக்குச் சிறந்தது. எதிர்காலத்திற்குச் சிறந்தது..! அதுவே புதிய தலைமுறைக்கு புதிய வழிக்கான வழிகாட்டுதலாக அமையும். :icon_idea:

 

நன்றி, நெடுக்ஸ்.. அழகாய் சொன்னீர்கள். :)

Link to comment
Share on other sites

மாங்குளத்தில் திக் திக் கடைசி நிமிடங்கள் என்று நக்கீரன் எழுதும் ஒரு இரண்டுநாள் பொறுங்கோ :( :(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலி அழியும் போது... பார்த்துக் கொண்டிருந்த...
சன் ரீவீக்கும், நக்கீரனுக்கும் அதிக வித்தியாசமில்லை.
அதை.. விட, சனல் - 4 ரோசக்காரன். _________

 

 

நியானி: நீக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவருடைய பிள்ளை

அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள்
அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது
சிதைமேட்டில் அழிக்க முடியாத
உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது
உடைத்தெறியப்படுவதும்
சிதைத்து புதைக்கப்படுவதும்
யாரோ ஒருவருடைய பிள்ளையை.

நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்?
எதிலும் நிரப்ப முடியாத
எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள்
உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா?
அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா?
பெற்றவர்கள் யாரோ எல்லாம்
இருதயத்திற்குள் அடித்தழுது
புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன.

யாரோ ஒருவருடைய பிள்ளை
ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது
நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில்
உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கிறார்கள்
புகை எழும்புகிறது
விளக்குகள் எரிகின்றன
எருக்கலை வேர்களைச் சுற்றி
யாரோ கூடியிருந்து பேசுகிறார்கள்.

முன்பொரு காலத்தில் இந்தச் சனங்கள் பிள்ளைகளை
பெற்று ஏதோ ஒன்றுக்காக அனுப்பியிருக்கிறார்கள்
எல்லாவற்றுக்காகவும் உதைத்து இடிக்கப்படும்
ஒவ்வொரு கல்லறையிலும்
நீள உறங்கிக் கொண்டிருந்த
யாரோ ஒருவருடைய பிள்ளை உறக்கமற்றலைகிறது.

தீபச்செல்வன் 

@2011

Link to comment
Share on other sites

தமிழையும் தமிழர் போராட்டத்தையும் வைத்து, வளர்ந்தவர்கள் ஏராளம்.

 

புலிகள் மிகவும் பலம் பெற்று இருந்த பொழுது அவர்களின் ஆலோசகராக இருந்த கவிஞர்களும் ஆய்வாளர்களும் தாராளம்.

 

தலைவர் வந்தால், போராட்டத்திற்கு சேர்த்த பணத்தை தருவோம் என்று, சுருட்டியவர்கள்  இன்னுமொரு பக்கம்.

 

இது எல்லாம் தாண்டித்தான் விடுதலை.

 

ஒரு இனத்தினல்  எல்லாம் இருக்கதான் செய்யும். குளத்தில இறங்கி மீன் பிடிக்கிறவன் தான் கெட்டிக்காரன், கரையில இருந்து 

தண்ணீரைப்பார்த்து  கொட்டாவி விட்டால் என்ன மாதிரி

Link to comment
Share on other sites

ஒரு இனத்தினல்  எல்லாம் இருக்கதான் செய்யும். குளத்தில இறங்கி மீன் பிடிக்கிறவன் தான் கெட்டிக்காரன், கரையில இருந்து 

தண்ணீரைப்பார்த்து  கொட்டாவி விட்டால் என்ன மாதிரி

 

கொட்டாவி விட்டது ஊரில இருக்கிற போராளிகளும், தமிழ்ச் சனமும்.  

அது நீண்ட காலத்திற்கு பலிக்காது.

Link to comment
Share on other sites

கொட்டாவி விட்டது ஊரில இருக்கிற போராளிகளும், தமிழ்ச் சனமும்.  

அது நீண்ட காலத்திற்கு பலிக்காது.

 

இல்லை  யார் அறிந்தோம் இப்படி எல்லாம வரும் என்று. குளத்தில இறங்கினவனுக்கும்  தெரியாது, கரையில இருந்தவனுக்கும் தெரியாது.

 

எதோ, எதோ நடந்து  விட்டது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐயா பொயட் அவர்கள் கவிஞர் மட்டுமல்ல கள உறவு மட்டும் அல்ல

ஈழத்தின் பால் கொண்ட அக்கறையால் கூட்டமைப்பின் இணக்க அரசியலுக்கு ஊக்கம் கொடுத்து வருபவர்.
இவரது கைது இவரால் எப்போதோ எதிர்பார்க்கப்பட்டது.

பலமுறைகளத்திலும் கூறியுள்ளார்.சிங்களம் கைது செய்யும்போது அது புலியா பூனையா எனப்பார்ப்பதில்லை.

தமிழனாக இருப்பதே அவர்களுக்கு முக்கியம். இந்தியா கொமன்வெல்த் நாடுகளின் மகா நாட்டில்

கலந்து கொள்ளவில்லை என்பதன் தாக்கமாகக் கூட இருக்கலாம்.
கூட்டமைப்பின் விசுவாசியான பொயட் அவர்களை விசாரணையின்றி உடன் விடுதலை செய்யும்படி

கூட்டமைப்பு மகிந்தவிற்கு சுமந்திரன் ஊடாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

கவிஞர் அவர்களே விடுதலையடைந்து தனது சொந்த இருப்பிடம் சேர்ந்தபின் தனக்கு நடந்த சம்பவம் பற்றி விபரிக்கவேண்டும்.

வெளிநாட்டு தமிழர் பலர் கைது பிரச்சனைகள் ஒன்றும் இல்லாமல் சிறீ லங்கா சென்று வருகின்றார்கள். கவிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அவராகத்தேடிக்கொண்ட கைதா அல்லது சிறீ லங்கா அரசின் திட்டமிட்ட கைதா என்பது கேள்விக்குறி.

சிறீ லங்கா நாட்டுக்கு சென்று வருவது இன்றும் உயிராபத்தான பயணம். போர் நான்கு வருடங்களின்முன் நிறைவுக்கு வந்தாலும் மக்களின் சுதந்திரமான நடமாட்டம், அடிப்படை உரிமைகள் கிடைப்பதற்குரிய காலம் இப்போது கனியவில்லை என்பது தெரிகின்றது.

த.வி.புவின் ஆயுதரீதியான தொல்லைகள் சிறீ லங்கா அரசிற்கு இப்போது இல்லை. இந்தவாய்ப்பை சிறீ லங்கா அரசு சரியாகப்பயன்படுத்தி நாட்டு மக்களிற்கு (உள்நாடு/வெளிநாடு) நம்பிக்கை கிடைக்கும்வகையில் செயற்பட்டால் நன்மைகள் உண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தில்மாவீரர் வாரத்தில் எவரது சமாதிக்கு அன்ஞ்சலி செய்தாலும் இதுதான் கதி. பாவம் வ.ஐ.ச தனது தாயின்சமதிக்கு வணக்கம் செஇயச்சென்ராரம்.

Link to comment
Share on other sites

எமது போராட்டம் தொடர்பான கொள்கை,கருத்து ரீதியாக கவிஞருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... நான் மதிக்கும் ஒரு மனிதர்.

அவர் ஒரு தமிழர் என்பதனால்தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிங்களத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதுவும் குறிப்பாக இந்த நவம்பர் மாதப்பகுதியில் அவர் இலங்கை சென்றது... சிங்களத்தின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

 

எங்களின் சக கள உறவு, ஒரு நல்ல படைப்பாளி, கவிஞர் விடுதலை பெற்று வரவேண்டும்.

அவருக்கு எதுவும் ஆகாமல் விடுதலையாகி வெளிவரும் வல்லமை இருக்கென நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்காலங்களில் சிங்களம் கண்ணுக்குள் எண்ணை ஊற்றி அவதானமாக இருக்கும் காலம்.

Link to comment
Share on other sites

கவிஜர் எமது கள உறவு விடுதலை செய்யப்படவேண்டும். புலம் பெயர் தமிழர் மீதான அரசின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

Link to comment
Share on other sites

இலங்கை சென்ற தமிழ் நடிகர் திடீர் கைது: ஒற்றுமையை சீர்குலைத்ததாக புகார்!

 

கொழும்பு: தாயார் சமாதிக்கு அஞ்சலி செலுத்த இலங்கை சென்ற தமிழ் நடிகரும், கவிஞருமான ஜெயபாலனை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

இலங்கை மாங்குளத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன்,  இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக புலம் பெயர்ந்து சென்னையில் வசித்து வருகிறார். ஆடுகளம், பாண்டிய நாடு உள்பட சில படங்களில் அவர் நடித்துள்ளார்.

கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலனின் தாயார் சமாதி இலங்கை மாங்குளம் பகுதியில் உள்ளது. தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக அவர் நேற்று இலங்கை சென்றார். மாங்குளம் சென்ற அவர் தன் தாயார் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். பிறகு உறவினர் ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று கொண்டிருந்தார்.

நேற்று மாலை 5 மணி அளவில் கவிஞர் ஜெயபாலனை இலங்கை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அப்போது, விசா விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.

கவிஞர் ஜெயபாலன் சுற்றுலா விசாவில் இலங்கை சென்றிருந்தார். எந்த அடிப்படையில் அவர் விசா விதிகளை மீறினார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதை இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோகன் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையே கவிஞர் ஜெயபாலன் கைது விஷயத்தில் சிங்கள உயர் அதிகாரிகள் மிகவும் காழ்ப்புணர்ச்சியுடன் அடாவடித்தனமாக நடந்து கொள்வது தெரிய வந்துள்ளது. நேற்றிரவு கவிஞர் ஜெயபாலனை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் காவல்துறை ஒப்படைத்தனர்.

அதன் பிறகு ஜெயபாலனை சிங்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து வவுனியாவுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இலங்கையில் தமிழர் – சிங்களர் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாக சிங்கள உயர் அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
 

 

வவுனியாவில் இருந்து ஜெயபாலனை கொழும்பு கொண்டு செல்ல சிங்களர்கள் முயன்று வருகிறார்கள். அவரை ரகசிய இடத்தில் காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அவரை சிங்களர்கள் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி சித்ரவதை செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=21585

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Colombo arrests visiting Tamil poet, bans gatherings ahead of Heroes Day

[TamilNet, Saturday, 23 November 2013, 13:53 GMT]

The operatives of the occupying Sri Lankan military on Friday arrested VIS Jayapalan, a well-known Eezham Tamil poet and an award-winning actor in Indian Tamil cinema, while the Norwegian passport holder was visiting the island on a tourist visa. The arrest took place in abduction-style. By arresting Jayapalan, Colombo was sending a message to Eezham Tamil diaspora that Tamils visiting the island should not address any meeting or gathering. Colombo's TID operatives could claim any meeting as a ‘gathering causing communal unrest,’ academic circles in Jaffna said. In the meantime, the SL Police in Ki'linochchi, on Friday told 40 people it detained that all gatherings and meetings have been banned until further notice in the district.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36842

Link to comment
Share on other sites

Callum Macrae ‏@Callum_Macrae 1h
Protest arrest & detention in SL of Tamil poet and writer VIS Jayapalan.@PresRajapaksa Where is @commonwealthsec princioles of free speech?

 

(twitter)

Link to comment
Share on other sites

பலர் கூறியது போல, அவர் விசாரணை முடிந்ததும் வெளியில் வந்து விடுவார்.  ஆகவே, நாம் கவலைப்படத் தேவையில்லை.  அவரது கலையுலகத் திரையுலக நண்பர்கள் அறிக்கைகள் ஏதும் விட்டதாகத் தெரியவில்லை.  

Link to comment
Share on other sites

கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டா

 

கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிஞர் ஜெயபாலன் பொறலைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரிடம் இருந்து இலங்கை நேரம் மாலை கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு பிரஜைகளைத் தடுத்து வைக்கும் சிறைச்சாலை ஒன்றும் பொறலையில்  உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா? அல்லது  பொறலை பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளாரா என்பதனை அவர்  தெளிவாக கூறவில்லை.

இலங்கையில் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டால் பின் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நீதி மன்ற நடவடிக்கைகள் அலுவலக நடவடிக்கைகள் நடைபெறாது என்பதனால் திங்கட் கிழமையே நீதிமன்றில் ஆஜர்பபடுத்தி அவரை விடுதலை செய்ய முடியும். இது சதாரண நடைமுறை ஆகும்.

இந்த நடைமுறையை மீறி விசேடமாக கவனம் செலுத்தி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது ஜனாதிபதியின் விசேட பணிப்பில் நீதவான் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று நீதித் துறையின் அனுமதியுடன் விடுவிக்க முடியும். எனினும்  சட்டத்துறை, நீதித்துறை, நிர்வாகத் துறை யாவுமே மகிந்த சகோதரர்களின் பிடியில் இருப்பதனால் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் கரிசனை எடுத்தாலும் உடனடி விடுதலை சாத்தியமற்றது.

அந்த வகையில் நாளை மறுதினம் திங்கட் கிழமையே இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், புலனாய்வுத்துறையினரின் தீர்மானத்திற்கு அமைவாக நீதித் துறை ஊடாக விடுவிக்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

அவ்வாறு இல்லாமல் உல்லாசப் பிரயானத்திற்கான விசாவில் சென்று விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றம் மூலம் தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களும் இருப்பதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் நோர்வே தூதரக அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக தமது நாட்டுப் பிரஜை தடுத்து வைக்கப்பட்டு இருப்பதற்கான காரணத்தை வினவி ராஜதந்திர மட்டத்தில் விடுதலைக்கான முயற்சிகளை எடுக்கலாம் எனவும் தெரியவருகிறது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99359/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் வெளியில் வருவார் .வரும்போது இவ்வளவு காலமும் அவர் பிடித்து வைத்திருந்த கொள்கைகளிலும் மாற்றம் வரும் என்று நம்புவோம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தோழர் சுகமாக வீடு திரும்பவேண்டுகின்றேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அவசரகாலச் சட்டம்: எதிர்காலத்தின் கொடுபலன்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவசரகால நிலையை ஜனாதிபதி மீண்டும் நடைமுறைப்படுத்தி, ‘இலங்கையை வழமை’க்குக் கொண்டு வந்துள்ளார். வன்முறை, அரசின் அடக்குமுறை, அரசசார்பற்ற நபர்களின் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளை, அவசரகால சட்டமும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் இலங்கை குறித்த அனுபவத்தில் முன்னிற்கின்றன.   இலங்கையின் கொடூரமான நடவடிக்கைகள், வன்முறைச் சுழற்சியை மேம்படுத்தி, ஜனநாயக சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பை அழிக்க வழிவகுத்தன. தீவின் வடக்கு, தெற்கில் உள்ள அரச அதிகாரிகளால், கட்டுப்பாடற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தியதானது, ஏராளமான மரணங்கள், காணாமல்போதல்கள் போன்றவற்றுக்கும் அரசு மீதான பெருகிவரும் ஏமாற்றம், பாதிக்கப்பட்ட சமூகங்களின் தொடர்ச்சியான பின்னடைவுக்கு வழிவகுத்தது.  அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துவது, அரசியலமைப்பு உரிமைகளை சீர்குலைத்துள்ளது என்பது நிதர்சனமாகது. பெரும்பாலும் பயங்கரவாத சூழலை நிலைநிறுத்துகிற போது, சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை இல்லாது போகிறது.  இந்த அதிகாரங்கள், பாதுகாப்புதுறைசார் உறுப்பினர்களிடையே அடக்குமுறைக்கான கட்டற்ற பயன்பாட்டுக்கும், தண்டனை இன்மைக்குமான கலாசாரத்தை வளர்க்க உதவியுள்ளன.  1958இல் இலங்கை அரசாங்கம் முதன்முதலில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய காலத்திலிருந்தே, அவசரகால அதிகாரங்கள் என்ற போர்வையின் கீழ், சர்வாதிகார அதிகாரத்தை பல ஆண்டுகளாக இலங்கை அனுபவித்தது.  இலங்கை மிக நீண்ட காலமாக, அவசரகால ஆட்சியின் பிடியில் உள்ளது. 1983ஆம் ஆண்டு முதல், இடையில் சில குறுகிய இடைவெளிகளுடன், அண்மைய நாள் வரை அனைத்து ஆண்டுகளிலும் நீடித்தது. இதன் வரலாற்று வளர்ச்சியை நோக்குவதாயின், இந்த அவசரகால அதிகாரங்களைத் தூண்டுவதற்கு  மூன்று காரணிகள் காரணமாக இருக்கின்றன.  முதலாவதாக, இடதுசாரிக் கட்சிகளால் உந்தப்பட்ட தொழிற்சங்கங்கள்; 1940களின் பிற்பகுதியிலிருந்து 1960கள் வரை, உயிர்ப்புடன் இருந்தன. தொழிலாளர் உரிமைகளுக்காக இவை நடத்திய போராட்டங்களைக் கையாள்வதற்கு, இலங்கை அரசாங்கங்களால் இயலவில்லை. எனவே, அரசாங்கத்தை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றத் தூண்டியது. இது, அவசரகால விதியை சட்டபூர்வமாக்கியது.  அரசாங்கத்தின் கண்ணோட்டத்தில், உணவு விநியோகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு சேவைகள் போன்ற பொதுச் சேவைகள், நாட்டில் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாதவை; மற்றும், அவற்றைப் பாதுகாப்பது அவசரகாலச்சட்டம்; இதன்மூலம், சிவில் உரிமைகளை மீறுவது நியாயமானது.  1968ஆம் ஆண்டளவில், பல அரசாங்கத் துறைகள் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை இது எளிதாக்கியது.  இருப்பினும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அவசரகாலவிதி ஜூலை 1971 வரை செயற்படுத்தப்படவில்லை. காலப்போக்கில், இன - தேசியவாதம், அரசியல் செயற்பாடுகள் போன்றவை, தொழிற்சங்க நடவடிக்கையை முறியடித்து, அவசரகால அதிகாரங்களை செயற்படுத்துவதற்கு முக்கிய காரணங்களாகின.  இரண்டாவதாக, ஜே.வி.பியால் தூண்டப்பட்ட பொது வன்முறையைக் கட்டுப்படுத்த, ஆரம்பத்தில் அவசரகாலச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அரசாங்கத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஜே.வி.பி, தனது முதல் ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கியது. நான்கு மாத அமைதியின்மையின் போது, ஐக்கிய முன்னணி அரசாங்கம் அவசரகால சட்ட ஆட்சியைப் பயன்படுத்தியதன் மூலம் பதிலளித்தது. கிளர்ச்சியாளர்களை, விரைவாகவும் சித்திரவதை மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக காணாமல் போகச் செய்தல் போன்ற வழிமுறைகள் மூலமாக அடக்குவதற்கு இச்சட்டம் உதவியது.  1987 முதல் 1990 வரை, ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியானது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் தொடங்கியது. இதனால், அவசரகாலச் சட்டம் தென் பிராந்தியத்திலும் பரவியது. மீண்டும், ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில், தன்னிச்சையான கைதுகள், தடுப்புகள், மரணதண்டனைகள் ஆகியவற்றின் மூலம் ஜே.வி.பியை நசுக்க முடிந்தது. தமிழ் மக்களுக்கு எதிரான, பாரபட்சமான அரசாங்கக் கொள்கைகள், சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே நிலவிய பதற்றம் காரணமாகவும் அடிக்கடி எழும் கலவரங்கள் என்பன, அவசரகாலச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மூன்றாவது மற்றும் பொதுவான காரணங்களாக அமைகின்றன.  உதாரணமாக, 1956ஆம் ஆண்டின் அரச மொழிச் சட்டத்தை (சிங்களம் மட்டும் சட்டமூலம்) இயற்றுவதற்கு எதிராக, தமிழரசுக் கட்சியால் நடத்திய அமைதியான எதிர்ப்பு, சிங்களக் குண்டர்களால் வன்முறையைச் சந்தித்தது.      1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு, இலங்கையை ஒற்றையாட்சி நாடாக அறிவித்ததன் மூலம், சிங்கள மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தியது. இது, தமிழ் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு ஊக்கமளித்தது. 1977 அளவில், தமிழ் பிரிவினைவாத இயக்கம் உருவான நேரம் முழுவதும், இடைவிடாத வன்முறைகள் ஏற்பட்டன. அதற்கு அரசாங்கம் அவசரகால விதியை நாடியது. இந்தக் கொடூரமான நடவடிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் கீழ், 1979ஆம் ஆண்டு, 1979ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) (PTA) மூலம் மேலும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன. ஒரு தற்காலிக நடவடிக்கையாக இயற்றப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம், ஐக்கிய இலங்கைக்கான அச்சுறுத்தல்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் இருந்தது.  பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 6-9 பிரிவுகள், அவசரகாலச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கைது செய்தல், தடுத்து வைத்தல், சொத்துகளைப் பறிமுதல் செய்தல் போன்ற அதிகப்படியான பொலிஸாரின் அதிகாரங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த வரலாற்றுப் பின்புலத்திலேயே, இப்போது ஜனாதிபதி மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ள அவசரகாலச் சட்டத்தை நோக்க வேண்டியுள்ளது. பெருந்தொற்றுக்குப் பின்னர், உலகளாவிய ரீதியில் ஜனநாயகத்தின் பின்னடைவை நாம் கண்டிருக்கிறோம். அதன் சில முக்கிய அறிகுறிகளில், இரண்டு மிகப் பிரதானமாவை; இலங்கைக்கும் பொருந்துபவை!  முதலாவது, அரசாங்கத்தின் நிறைவேற்றுப் பிரிவு, ஜனாதிபதி அரசியல் நிறைவேற்று அதிகாரம், நிர்வாக மற்றும் பாதுகாப்பு இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. அது, புதிய அரச அதிகார மையமாகி, பாராளுமன்றத்தையும் அமைச்சரவையையும் கூட பின்னணிக்கு தள்ளுகிறது.  இரண்டாவதாக, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் சட்டபூர்வத்தன்மை மற்றும் நியாயத்துடன் கூடிய கண்காணிப்பு, அனைத்து குடிமக்கள் மீதும் ஒரு பரந்த அரசு கண்காணிப்பு வலையை வீசுவதன் மூலம், தொடர்புத் தடமறிதலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கியது. இது குறிப்பாகத் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக என்ற போர்வையில், அரசியல் உரிமைகளைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.  இலங்கை நிறைவேற்று அதிகாரத்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனவால் ‘நிறைவேற்று’ ஜனாதிபதி முறை உருவாக்கப்பட்ட போது, அது அனைத்து அதிகாரங்களும் கொண்ட அலுவலகத்தை உருவாக்கியது. நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டமன்ற அதிகாரம் இரண்டையும் ஜனாதிபதி மையப்படுத்திய அதேவேளையில், பாராளுமன்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய மட்டுப்பாடுகளும் சமநிலையாக்கங்களும் அகற்றப்பட்டன. நீதித்துறையும் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவரான ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிலும் செல்வாக்கிலும் கொண்டுவரப்பட்டது. 2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில், இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்ததன் மூலம், இந்த அரசியலமைப்பு இன்னும் இலங்கையில் இயங்குகிறது.   இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயகத்திலிருந்து, புதிய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய மாற்றம் பெருந்தொற்றுக்கு 2020ஆம் ஆண்டு  செப்டெம்பரில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தினூடு உறுதியான வடிவத்தை எடுத்தது.  இங்கு, 20ஆவது திருத்தத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன:  (அ) மட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையாக்கங்கள்  ஏதுமின்றி, பாராளுமன்றம், நீதித்துறை அல்லது பிற பொறுப்புக்கூறல் நிறுவனங்களில் இருந்து சுயாதீனமாக குடியரசுத் தலைவர் பதவியை அரச அதிகாரத்தின் மத்திய நிறுவனமாக மாற்றுதல்;  (ஆ) பாராளுமன்றத்தை பெயரளவு சட்டமியற்றும் அமைப்பாக மாற்றி, அதை ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் செயற்பட வைத்தல்.  பலவீனமான ஜனநாயகத்தில் இருந்து, நிறைவேற்று தலைமையிலான சர்வாதிகார அரசியல் ஒழுங்கிற்கு விரைவான மாற்றமாக அது இருந்தது.  நிறைவேற்று அதிகாரத்துவத்தின் இந்த அரசியல் மாதிரியானது, தற்போதுள்ள பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை அரசாங்கத்தின் கட்டமைப்போடு இணைந்திருத்தாலும் அரசியல் நிறுவனங்களின் படிநிலையில், அமைச்சரவைக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரம் குறைந்துவிடும். இது வளர்ந்து வரும் அரச-சமூக உறவுகளின் தன்மையை நிச்சயமாக மறுவரையறை செய்யும். இதன் படிநிலை வளர்ச்சியையே, இலங்கையில் நாம் காண்கிறோம்.    https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அவசரகாலச்-சட்டம்-எதிர்காலத்தின்-கொடுபலன்கள்/91-305180
  • @தமிழ் சிறி ஐயா, மூன்று கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்! கீழே உள்ள பதிவைப் பாருங்கள்!    
  • ரஞ்சித் உங்கள் நேரத்திற்கும், மொழி பெயர்ப்புக்கும் மிக்க நன்றி. திருகோணமலையில் 1901´ம் ஆண்டு இருந்த தமிழரின் சனத்தொகை விகிதத்திற்கும், தற்போது (2022) உள்ள நிலைமையையும் நினைக்க கவலையாக உள்ளது. இது... மெதுவாக... புதிய விகாரைகள் அமைப்பதன் மூலம்  தமிழரின் இருப்பு... மற்றைய மாவட்டங்களுக்கும்  பரவிக் கொண்டுள்ளது. இதனை... ஒரு பெரிய விடயமாக, தமிழ் அரசியல் கட்சிகள்  சர்வதேசத்திடம் கொண்டு செல்லாதது.. மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகின்றது. 
  • ஈழப்பிரியன்... சென்ற முறை போட்டியில்...  @ரதி, @ராசவன்னியன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லைப்  போல் தெரிகின்றது. 👇   ஓம்  பையா... எப்படியும், 20 பேரை கலந்து கொள்ள வைக்க வேண்டும். 🙂
  • யேஸ் யூவ‌ர் ஆனார்  த‌மிழ்சிய‌ண்ணா ச‌ரியாக‌ சொல்லி உள்ளார்  என‌து க‌ணிப்பு 20உற‌வுக‌ள் த‌ன்னும் போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவின‌ம் 🙏🙏🙏
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.