-
Tell a friend
-
Topics
-
Posts
-
நடராஜன் ரிட்டர்ன்ஸ்: 'அடங்காத காளையாக' வெளுத்த சஞ்சு சாம்சனை வீழ்த்தினார் பட மூலாதாரம்,BCCI 2 ஏப்ரல் 2023, 12:06 GMT புதுப்பிக்கப்பட்டது 15 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரின் மூன்றாவது நாளான இன்று மொத்தம் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முதல் போட்டியில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக உள்ளார். ராஜஸ்தான் தரப்பில் ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் ஓவரிலேயே பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட்ட ஜைஸ்வால் தனது அணிக்கான முதல் பவுண்டரியை அடித்தார். புவனேஸ்வரும் பட்லரின் ஆட்டத்தைப் பரிசோதிக்கும் வகையில் பந்துவீசினார். ஆனால், இரண்டாவது ஓவரை ஃபஸல்ஹக் ஃபரூக்கி வீசியபோது, அவர் வீசிய பந்துகளைப் பறக்கவிட்டுக் கொண்டேயிருந்த ஜைஸ்வாலும் பட்லரும் அந்த ஒரு ஓவரில் மட்டும் 14 ரன்களை சேர்த்தனர். முதல் இரண்டு ஓவர்களில் மட்டுமே 20 ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரன் கணக்கை இருவரும் அதிரடியாகத் தொடக்கி வைத்தனர். தொடர்ச்சியாக பட்லரும் ஜைஸ்வாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவர் பிளே முடிவில் 85 ரன்களை குவித்தனர். ஃபரூக்கி, புவனேஸ்வர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் பந்துவீச்சில் முதல் நான்கு ஓவர்களில் 56 ரன்களை இருவரும் இணைந்து குவித்திருந்தனர். 5-வது ஓவரை வீச வந்த நடராஜனுக்கு முந்தைய மூன்று பேருக்கு கொடுத்ததைவிட கூடுதலான அதிர்ச்சியைக் கொடுத்தார் ஜாஸ் பட்லர். நடராஜன் தான் வீசிய ஒரே ஓவரில் 17 ரன்களைக் கொடுத்திருந்தார். பட்லர் 5வது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை அடித்து நடராஜன் வீசிய பந்துகளை துவம்சம் செய்தார். ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஜாஸ் பட்லர் 22 பந்துகளில் அரை சதம் அடித்துக் கலக்கினார். ஜாஸ் பட்லர், யஷஸ்வி ஜைஸ்வால் இருவரது கூட்டணி 85 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், பவர் பிளே இறுதியில் ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை, பலமான விக்கெட்டை ஃபரூக்கி வீழ்த்தி ஹைதராபாத் அணிக்குச் சிறிய ஆசுவாசத்தை வழங்கினார். ஜாஸ் பட்லர் ஃபரூக்கி பந்தில் அவுட்டாகி வெளியானதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்கினார். ஆனால், அவரும் அதிரடியை தொடர்ந்தார். களமிறங்கியதில் இருந்தே விளாசத் தொடங்கினார். 10 ஓவர் முடிவில் அவர் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சர்களை அடித்து 13 பந்துகளில் 28 ரன்களை எடுத்திருந்தார். யஷஸ்வி ஜைஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, 8 பவுண்டரிகளை அடித்திருந்தார். 11வது ஓவர் முடிவில் அவர் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஒரு மொத்த போட்டியின் ஹைலைட்ஸை 10 ஓவர்களில் பார்த்தைப் போல், அதற்குள்ளாகவே ஹைதராபாத் வீரர்கள் 17 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசியிருந்தார்கள். ஜைஸ்வாலை தடுக்க முடியும் என்பதைப் போல் களத்தில் நிலைமை இருக்கவில்லை. இன்னொருபக்கம் சஞ்சுவும் விளாசுவதை நிறுத்துவதைப் போல் தெரியவில்லை. அவர் உம்ரான் பந்துவீச்சில் ஒரு பந்தைத் தூக்கி அடிக்கவே, பந்து வேலியைத் தாண்டிச் சென்றது. பத்தாவது ஓவர் முடிவில் ராஜஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை எடுத்திருந்தது. பட மூலாதாரம்,IPL/TWITTER நடராஜன், ஃபரூக்கி, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் என்று பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ராஜஸ்தானின் ரன் மழையை நிறுத்த பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனாலும் அதற்குப் பலன் கிடைப்பதைப் போல் தெரியவில்லை. ஜாஸ் பட்லரை போலவே ஜைஸ்வாலும் அரை சதத்தைப் பூர்த்தி செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே கேட்ச் அவுட்டானார். ஜைஸ்வால் 37 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அவுட்டானார். ஃபரூக்கி தனது நீண்ட நேர போராட்டத்திற்குப் பலனாக இரண்டாவது விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். ஆனால், அவரை உம்ரான் மாலிக் இரண்டே ரன்களோடு திருப்பி அனுப்பி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டினார். அடுத்ததாக ரியான் பராக் களமிறங்கினார். ஆனாலும் மிக முக்கிய விக்கெட்டான சஞ்சு சாம்சன் தொடர்ந்து வெளுத்துக்கொண்டே இருந்தார். 14வது ஓவரில் அசுரத் தனமான சிக்ஸ் ஒன்றை விளாசினார். 15 ஓவர் இறுதியில் ராஜஸ்தான் மூன்று விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களை எடுத்திருந்தது. அடுத்தபடியாக 16வது ஓவரை வீச வந்த ரஷீத்தை பிரமாண்டமான சிக்ஸ் ஒன்றோடு சஞ்சு சாம்சன் வரவேற்றார். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாஸ் பட்லரும் யஷஸ்வி ஜைஸ்வாலும் சேர்ந்து இடி இடித்ததைப் போல் ஆடிவிட்டுச் சென்றனர். அவர்கள் கொடுத்துச் சென்ற ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டு செல்கிறார் சஞ்சு சாம்சன். ரன்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருந்த எதிரணியைத் தடுக்க யார்க்கர் நடராஜன் உள்ளே நுழைந்தார். அவர் வந்தவுடனேயே ஒரு விக்கெட்டை எடுத்தார். ரியான் பராக் அவரது பந்தை எதிர்கொண்டபோது, ஃபரூக்கி அதை கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதற்கு முந்தைய ஓவரில் ஒரு கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட ஃபரூக்கி, 17வது ஓவரில் நடராஜ் வீசி, பராக் அடித்த பந்தை அழகாக கேட்ச் பிடித்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். ஆனால், 28 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் அடித்த சஞ்சு சாம்சன், 17வது ஓவரில் தொடர்ந்து யாராலும் அடக்காத முடியாத காளையாக ஆடிக் கொண்டிருந்தார். அந்தக் காளையை நான் அடக்குகிறேன் என்பதுபோல் பந்துவீசிய நடராஜன், வைட் யார்க்கராக வீசினார். அதை சிக்சரை குறிவைத்து சஞ்சு பறக்க விடவே, பவுண்டரி எல்லையின் நுனியில் நின்று கச்சிதமாக கேட்ச் பிடித்தார் அபிஷேக் ஷர்மா. ராஜஸ்தான் அணியின் ரன் ரேட், பவர் பிளேவின்போது 14.17 ரன் ரேட் இருந்தது. அதற்கு அடுத்ததாகவும் 7-15 ஓவர்களில் 8.33, 16-20 ஓவர்களில் 8.21 என்ற அளவில் வீரர்கள் சிறப்பாகக் கொண்டு சென்றனர். ராஜஸ்தான் வைத்த இலக்கு 16வது ஓவர் இறுதியில் ராஜஸ்தான் 3 விக்கெட் இழப்பில் 170 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், கடைசி மூன்று ஓவர்களில் புவனேஸ்வர் குமார், நடராஜன் இருவரும் ரன்களைக் குறைக்க முயன்றார்கள். 20 ஓவர் முடிவில் களத்தில் அஸ்வின், ஹெட்மியர் இருவரும் அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/cld133kgn35o
-
இன்று நடந்த விளையாட்டில் காவ் செஞ்சரி அடிச்சார் தமிழ் சிறி அண்ணா நியுசிலாந் அக்குலாந் மைதானம் சின்ன மைதானம்.............20ஓவர் சம நிலையில் முடிவது 50விளையாட்டில் இருக்கா அல்லது இரண்டு தடவை...........இன்று நடந்த விளையாட்டும் சம நிலையில் முடிந்து சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி........................
-
By nedukkalapoovan · Posted
தாங்கள் இந்தக் காலத்தில் வாழாதிருந்திக்கலாம்.. அல்லது பயந்து ஓடிஒளிந்திருக்கலாம். அதனால் அந்தக் காலத்தின் தன்மை புரியவில்லை. கவிதை கடந்த கால நிஜம்.. காணாமல் போன.. ஏக்கங்களை விதைக்கிறதையே புரியமுடியவில்லை.. தங்களால். -
By goshan_che · Posted
@satan உங்கள் தன்னிலை விளக்கத்துக்கு நாம் எல்லாரும் வெயிட்டிங்🤣 -
By தமிழ் சிறி · Posted
அமெரிக்கா செய்ததையே.... ரஷ்யாவும் செய்யப் போகுது. 🤣
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.