• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

Manivasahan

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!

Recommended Posts

நடு வீதியில் படுதித்திருப்பது முன்பு சரியாக இருந்திருக்கலாம். தற்போது நடை பெறுவது அரக்கர் ஆட்சி. ஆயுத முனைக்கு முன்பு எதுவுமே செல்லா காசுதான். ஜெயபாலன் சினிமா நெறையவே பார்க்கிறார் சிங்கம் சூர்யா நெனைப்பில் நெஞ்சை நிமிர்த்தி சுடு பார்ப்பம் எண்டு கனவில் கத்‌தி இருப்பாரோ......காணாமல் போன உறவுகளையே கொச்சைப்படுத்திவிட்டார்....

Share this post

Link to post
Share on other sites

யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  . 

Share this post

Link to post
Share on other sites

பொறுப்போடுதான் பேசுகின்றீர்கள்..... இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் பொறுப்போடு ஈழ தமிழர்களிற்கு எக்காலமும் விடிவே கிடைக்க கூடாது என்ற அதி உன்னத பொறுப்போடு.....

Share this post

Link to post
Share on other sites

யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  .

வணக்கம்... கண்டதில் மகிழ்ச்சி.....!!!

உங்களின் உரையில் இருந்து ஒண்று மட்டும் எனக்கு புரிகிறது.... நீங்கள் மீண்டும் இலங்கை போக போகிறீர்கள் என்பதுதான் அது...

அப்போது நீங்கள் மீண்டும் கைது செய்யபட மாட்டீர்கள்... செய்யப்படாமல் இருக்க ஆவன செய்து கொண்டு இருப்பீர்கள்... !!!

உங்களுக்கு தமிழ் வெளிநாட்டு ஊடகங்கள் பெருமளவில் ஆதரவை தந்தன... அது ஜெயபாலன் எனும் தனிமனிதனுக்காக அல்ல... இலங்கை அரசின் அடக்கு முறையில் சிக்கிய ஒருவருக்கு... இதை நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்...

அந்த அடக்கு முறையை மழுப்பும் போக்கானது உங்களுக்கான ஆதரவை மீளாய்வு செய்யும் நிலைக்கே எல்லாரையும் கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொள்ள உங்களால் முடியும் எண்று நம்புகிறேன்...

அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ...

Share this post

Link to post
Share on other sites

தயா, நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுதுகிறீங்க. நீங்கள் யாழ்கள ஆதரவு பற்றி பேசுகிறீங்கள் போலும். அதுபற்றிக்கூட நீங்க எல்லோருக்குமாக பேசமுடியாதே. . நீங்கள் நான் எழுதுகிறவற்றை புரிந்துகொள்ள முனையவில்லை. எரிக்சொல்கைமில் இருந்து கக்கீம் வரைக்கும் சிங்கள கலைஞர்களில் இருந்து தமிழக கலைஞர்கள் வரைக்கும் எனக்காக குரல்கொடுத்தவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நான்  நினைக்கவில்லை.

உங்களை திருப்திப் படுத்துவது என் நோக்கமல்ல. நான் நஎன்னை சந்திதவர்கள் என் தோழ தோழியர்கள் பாதுகாப்பு பற்றி உறுதிப் படுத்திய பின்னர்தான் மேலதிக விபரங்களை எழுதமுடியும். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான யாழ்கள வாசககள் இதனைப் புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.

Share this post

Link to post
Share on other sites

கவிஞர் முற்காலத்தில் மனதில் தோன்றுவதைப் பேசும் அல்லது செய்யும் கலகக்காரனாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று ...

தன்னைச் சந்தித்த தோழர்களைக் காப்பாற்றும் நோக்கத்தினால் தனது கோபத்தை அடக்கும் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டுவிட்டார். தன்னைக் கைது செய்த காட்டுமிராண்டித் தலைவர்களை சுட்டிக் காட்டாமல் மௌனம் காக்கிறார். எல்லாம் தோழர்களின் நன்மைக்காக.. இதுதான் ராசதந்திரம் என்பது. ராசதந்திரக்காரர்கள் தேவையின் நிமிர்த்தமாக மட்டுமே கலகம் செய்வார்கள். எழும் கோபங்களை அடக்கக்கூடியவர்கள்.. :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

தயா, நீங்கள் உங்கள் தனிப்பட்ட கருத்தை எழுதுகிறீங்க. நீங்கள் யாழ்கள ஆதரவு பற்றி பேசுகிறீங்கள் போலும். அதுபற்றிக்கூட நீங்க எல்லோருக்குமாக பேசமுடியாதே. . நீங்கள் நான் எழுதுகிறவற்றை புரிந்துகொள்ள முனையவில்லை. எரிக்சொல்கைமில் இருந்து கக்கீம் வரைக்கும் சிங்கள கலைஞர்களில் இருந்து தமிழக கலைஞர்கள் வரைக்கும் எனக்காக குரல்கொடுத்தவர்கள் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என நான்  நினைக்கவில்லை.

உங்களை திருப்திப் படுத்துவது என் நோக்கமல்ல. நான் நஎன்னை சந்திதவர்கள் என் தோழ தோழியர்கள் பாதுகாப்பு பற்றி உறுதிப் படுத்திய பின்னர்தான் மேலதிக விபரங்களை எழுதமுடியும். ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான யாழ்கள வாசககள் இதனைப் புரிந்து கொள்ளுவார்கள் என நம்புகிறேன்.

தோழர் ஜெயபாலன் நீங்கள் மீண்டு வந்ததில் மிக்க மகிழச்சி.உங்களுக்கு இருந்த ஊடக வெளிச்சம் தான் நீங்கள் மீண்டு வர காரணமாயிருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.தமிழ் சிங்கள ஒற்றுமை பற்றி பேசிய லலித் குகன் ஆகியோர் இன்னமும் காணாமல்தான் போயிருக்கிறார்கள்.அதே போல விடுதலைப்புலிகளுக்கு உதவியது அவர்கள் பற்றிய தகவலை தெரிவிக்க மறுத்தது முதலான இன்னோரன்ன காரணங்களுக்கான நூற்றுக்கணக்கான அப்பாவிகள் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். தன்னுயை கணனியில் கார்த்திகை பூ வைத்திருந்ததற்காக வடமராட்சி கிழக்கிலே ஒரு இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இன்றைக்கு ஆயிரக்க்கான போராளிகள் காணாமல் போயிருக்கிறார்கள்.ஒரு அரசம் அதன் சகலவிதமான படைகளும் அடக்குமுறை கருவிகள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் சிறீலங்காவின் பௌத்த சிங்கள பேரினவாத அரசபடைகள் இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் செய்த கொடூரமான படைகள் எனபதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஒரு அடக்கு முறை அரசுக்கும் அதன் படைகளுக்கும் எதிரான போராட்டங்கள் தான் அவற்றால் பாதிக்கப்பட்ட முரண்பட்ட சக்திகளை ஒன்றுபட வைக்கும்.
அது வரை பல்வேறு முரண்பட்ட சமூகங்களின் ஒற்றுமை என்பது பிழைப்பு வாதிகளின் வெற்றுக் கோசமாகவே இருக்கும்

Share this post

Link to post
Share on other sites

நவம், நான் இலங்கைக்கு சென்று அங்கேயே அடக்குமுறைக்கு எதிராக பேசியவன் என்பதைமட்டும் ஏனோ மறந்துவிடுகிறீர்கள்.  எனக்கு 

Share this post

Link to post
Share on other sites

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

Share this post

Link to post
Share on other sites

ஐயாவின் பணி, பற்றிப் புகழ்ந்து 200,300 பக்கங்கள் இத்தலைப்பு போக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன்

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

ஆமாம். இவர்கள் உலகத்துக்குத் தானே எல்லாவற்றையும் தாரை வார்த்தவர்கள்... எல்லாவற்றையும் என்றால்....... எல்லாவற்றையும் தான்

Share this post

Link to post
Share on other sites

அர்ஜுணன், ஒருதுறையில் இருக்கும் அதிஸ்ட்டமான வாழ்வு எனக்கு வாய்க்கவில்லை.

பலதுறையில் இருப்பதாலான என் ஞாபக மறதி எல்லோருக்கும் தெரியும்.

சிந்திக்கும்வேழையில் சிலசமயம் பக்கதில் நடப்பதே புலனாவதில்லை.

சந்தித்தவேழையில் உங்களை அடையாளம்காண மறந்திருந்தால் மன்னிக்கவும்

Share this post

Link to post
Share on other sites

பொயட் விடுதலையானது சந்தோஷமான செய்தி! 

(இத் திரி 11 பக்கங்களுக்கு வந்து விட்டது. இதில் 99% பக்கங்கள் இன்னும் வாசிக்கேலை . அதோடு எனக்கு பொயற்றைப் பற்றி கருத்தெழுமளவுக்குத் தெரியாது. ஆகவே ஒன்றும் எழுதமுடியவில்லை)

Share this post

Link to post
Share on other sites

உலக புகழ்பெற்ற ஊடகவியலாளர் callum macrae ற்கே அங்கு பாதுகாப்பில்லை. உள்ளூர் புகழ்பெற்ற உங்களிற்கு இருக்கும் என்று எப்படி ஜயா நம்பினீர்கள்? 

உங்களுடைய அம்மாவிற்கு நீங்கள் வணக்கம் செலுத்த வேண்டி சென்றது எதிர்மாறான விளைவுகளை உருவாக்கிவிட்டது என்றே நினைக்கின்றேன். இந்த முறை உங்கள் அம்மாவின் சமாதி இருந்த இடத்தை ஒரு குத்துமதிப்பாக தான் கண்டுகொண்டீர்கள். அடுத்த முறை உங்கள் பண்ணை வீடே குத்துமதிப்பாக கண்டுபிடிக்கும் அளவிற்கு சிங்களவன் ஆக்கிவிடுவான் என்றே நினைக்கின்றேன். 

தமிழனும் முஸ்லீமும் சேர்ந்தாலும் அவர்கள் வாழ்வதற்கு ஒரு நாடு வேண்டும். அது சிறீலங்காவில் சாத்தியமில்லை.  

Share this post

Link to post
Share on other sites

செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன்.

நான் எவ்வழியிலாவது விரைவில் மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன். அம்மாவின் சமாதிக்கும் மலர் அஞ்சலி செய்வேன்..

என்னை வராதே என்று சொல்ல ராஜப்கச்ச யார்?

என் அம்மா இறந்தபோது நான் எழுதிய கவிதை.

வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன் 
திரு உடலில் முத்தமிட....

சிங்கமும் நரிகளும் பதுங்கும்
நீர்ச்சுனையின் வழியில் 
உயிர்வற்றும் மானாக 
அஞ்சினேன் அம்மா
அரக்கர்களின் மண்மிதிக்க
சென்னைச் சுவர்ப் பாலையிலே 
துடிக்கும் பல்லி வாலானேன்

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங்கனிகளைத் தின்றதே
ஈழத்தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக்கரை ஒன்றில் 
அதன் பீயாய் விழுந்தேனே 
என் கனிகளைச் சுமந்தபடி

இறால் பண்ணை நஞ்சில் 
நெய்தல் சிதைந்தழியும் 
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை

கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக் 
காலத்தில் எழுதுகிறேன்... 

Share this post

Link to post
Share on other sites

செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். அம்மாவின் சமாதியை பார்க்காமல் உயிர்வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போகிறேன் என்கிற கருத்தை முகநூலில் பதிவுசெய்துவிட்டே சென்றேன்.16 வயசில் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதில் இருந்தே பல தடவைக்குமேல் கொலை முயற்சிகளில் இருந்து தப்பியிருக்கிறேன்.1972 ஏப்பிரல் 2ம்திகதி இரவு அதிஸ்ட்டவசமாக ஒரு அமரிக்க தத்துவஞானி என்வீட்டுக்கு வந்திருந்ததால் பொலிஸ் என்கவுண்டரில் இருந்து தப்பினேன். எனினும் எல்லாத் தடவையும் அதிஸ்ட்டம் என் பக்கத்தில் இருக்காது என்பதையும் அறிவேன்.

நான் எவ்வழியிலாவது மீண்டும் இலங்கைதீவுக்குச் செல்வேன்.

ஜயா உங்கள் அம்மாவின் சமாதியை பார்த்தாகிவிட்டது. பின்னர் எதற்கு இன்னுமொரு முறை அங்கே செல்ல விரும்புகிறீர்கள்? 

உங்களைப்போன்றவர்களே சிறீலங்காவை புறக்கணிக்கணிப்பு என்பதை அலட்சியப்படுத்தினால் ஒரு சராசரி தமிழன் என்ன செய்வான்? Amnesty International போன்ற அமைப்புக்கள் இலங்கையின் சுற்றுலாத்துறையை புறக்கணிக்கும் இந்த நேரத்தில் நீங்கள் செய்வது பொறுப்புள்ள காரியமா? 

சற்று சிந்தித்துப்பாருங்கள் நீங்கள் அங்கே சென்று வருகின்ற ஒவ்வொரு முறையும் அங்கிருந்து அகதியாக வருபவர்களிற்கு திருப்பி அனுப்பும் சந்தர்ப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். உங்கள் அம்மாவின் சமாதிக்கு நீங்கள் செல்ல நினைத்ததை ஓரளவு ஏற்றுக்கொண்டாலும் நீங்கள் மீண்டும் அங்கே செல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

நீங்கள் அங்கே சென்று மீண்டும் இப்படியொரு நிலை வந்தால் மறுபடியும் உங்களிற்கு உதவ முன்வரும் உங்களின் தோழர்களிற்கு தான் ஆபத்து அதிகம். அதை பற்றியும் சிந்தியுங்கள். இம்முறை உங்களிற்கு உதவியவர்களின் பெயர்களை வெளியிடவே தயங்குகின்றீர்கள். உங்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட சிங்களத்திற்கு அது யார் என்பது தெரிந்திருக்கும் தானே. அவர்களை எப்படியும் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிபார்கள் என நினைக்கின்றேன். அவர்களை நீங்கள் இன்னொரு முறை இதே பிரச்சனைக்குள் மாட்டிவிடாமல் இருப்பதற்கு நீங்கள் சிறீலங்காவை புறக்கணிப்பதே சிறந்தது. 

இனி உங்களின் விருப்பம் ஜயா...

Share this post

Link to post
Share on other sites

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

புலிகள் ஒரு போதும் விமர்சனத்துக்கு பயப்படவில்லை. தன்னந்தனியே அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் இருந்து ஒட்டுக்குழுக்களின் வசைபாடல், மேற்கு நாடுகளின் பயங்காவாதம் வரை துணிந்தே முகம் கொடுத்தார்கள். உங்களை போன்றோர் புலிகளை விமர்சிப்பதை குடிசை கைதொழிலாக :icon_mrgreen: நடாத்திக்கொண்டு இருப்பதை யாவரும் அறிவர்.புலிகள் பிழை விடவில்லை என்று யாரும் சொல்லவில்லை.அவர்களே பல தடவை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
 
புலிகளினால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என உங்களை போல் நடித்த பலரை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.புலிகளீன் பிரசன்னம் இல்லாமல் போய் 5 வருடங்கள் ஆகிறது.இன்னும் புலிகளை விமர்சிப்பதை தவிர  தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாகை செய்தீர்கள் என்றால் அது சுழியம் தான், ஆகவே வளரப் பாருங்கள்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

பொயட் விடுதலையானது சந்தோஷமான செய்தி! 

(இத் திரி 11 பக்கங்களுக்கு வந்து விட்டது. இதில் 99% பக்கங்கள் இன்னும் வாசிக்கேலை . அதோடு எனக்கு பொயற்றைப் பற்றி கருத்தெழுமளவுக்குத் தெரியாது. ஆகவே ஒன்றும் எழுதமுடியவில்லை)

தப்பு செய்தீட்டீங்களே... அலை.

முதலாம் பக்கத்திலை... இருந்து, வாசியுங்க நல்ல தமாசாய்... இருக்கும்.

இது, எப்ப‌டியும்... நூறு ப‌க்க‌த்தை தாண்டி ஓடும். விட்டுட்டால்... எல்லாத்தையும் வாசிக்க க‌ஸ்ர‌மாயிருக்கும். :D

புலிகள் ஒரு போதும் விமர்சனத்துக்கு பயப்படவில்லை. தன்னந்தனியே அரசின் பொய்ப்பிரச்சாரத்தில் இருந்து ஒட்டுக்குழுக்களின் வசைபாடல், மேற்கு நாடுகளின் பயங்காவாதம் வரை துணிந்தே முகம் கொடுத்தார்கள். உங்களை போன்றோர் புலிகளை விமர்சிப்பதை குடிசை கைதொழிலாக :icon_mrgreen: நடாத்திக்கொண்டு இருப்பதை யாவரும் அறிவர்.புலிகள் பிழை விடவில்லை என்று யாரும் சொல்லவில்லை.அவர்களே பல தடவை ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
 
புலிகளினால் தான் ஒன்றும் செய்ய முடியவில்லை என உங்களை போல் நடித்த பலரை மக்கள் இனம் கண்டுள்ளார்கள்.புலிகளீன் பிரசன்னம் இல்லாமல் போய் 5 வருடங்கள் ஆகிறது.இன்னும் புலிகளை விமர்சிப்பதை தவிர  தமிழ் மக்களுக்கு ஏதாவது உருப்படியாகை செய்தீர்கள் என்றால் அது சுழியம் தான், ஆகவே வளரப் பாருங்கள்.  :icon_mrgreen:  :icon_mrgreen:

ஆகா... நல்லதொரு தமிழ் வார்த்தையை...நுணாவிலானிடமிருந்து கற்றுக் கொண்டேன். :D  :D  :lol:  :icon_idea:   

Share this post

Link to post
Share on other sites

செங்கொடி, நான் பாதுகாப்பு இருக்காது என்று தெரிந்து  எல்லாவற்றையும் எதிர்பார்த்து முகம்கொடுக்கவும் தயாராகத்தான் இலங்கை சென்றேன். 

கவிஞரே பின்வந்த கேள்விகளுக்கு பதிலளித்த நீங்கள்

நிழலி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறந்ததேனோ .?

நிழலியின் பாதுகாப்பு பிரச்சனையோ ..?

அல்லது உங்களின் இரண்டாம் அறிக்கைக்கான தயார்ப்படுத்தலோ ..?

அம்மாவின் சமாதி என்ற ஒற்றை வசனத்தை வைத்து

கருணாநிதியை மிஞ்சிவிட்டீர்கள் ஐய்யா உங்கள் கலக அரசியலில். 

மறுபடியும் இலங்கை செல்லும் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் ஐய்யா..

யாழ்களத்தை ஒரு மூன்று நாள் மூடிவைக்க ..

Share this post

Link to post
Share on other sites

"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..."

புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது :icon_mrgreen: ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை ..

உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,

அதெண்ணால் உண்மைதான்... !!! பாட்டிகளுக்கு போய் தண்ணியை போட்டு விட்டு உளறுவதுதானே இப்ப எல்லாம் விமர்சனம்... !

இலங்கையிலை தனக்கு சுதந்திரம் இருக்காது எண்டு போக முன்னம் தெரிந்திருக்காத கவிஞர் நீங்களும் தான் முற்றும் தெரிந்தவர்கள் எண்டு சொன்னால் நம்பவா முடியும்...???

Share this post

Link to post
Share on other sites

கள உறவு 'Poet' ஐ மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி.

தக்கன பிழைக்கும்.    

Share this post

Link to post
Share on other sites

:)

சந்திப்போம் பேசுவோம்

Share this post

Link to post
Share on other sites

சிங்கத்தின் கோட்டைக்குள் சென்று உறுமி விட்டு வந்த இரும்புமனிதன் வாழ்க! ஜெயவே வா...

Share this post

Link to post
Share on other sites

யாழ்க்கள நண்பர்களுக்கு நன்றி. நான் என் அனுபவங்களையும் வடகிழக்கு மாகாணத்தின் சமூக பொருளாதார அரசியல் நிலைபற்றி ஆராய்ந்த விடயங்களையும் புத்தகமாக எழுத வேண்டியுள்ளது அதனால் இனி  அடிக்கடி யாழ்க்களம் வாய்ப்பிருக்காது.  

நான் நிலமையை தெரிந்துகொண்டே இலங்கை சென்றேன். புறப்படுவதற்க்கு 16 மணித்தியாலயங்களுக்குமுன்னம் மனைவிக்கு சொன்னபோது வாய்த் தர்க்கம் ஏற்ப்பட்டது.இதற்க்குமுன் பதினாறு பதினேழுதடவை கொலைமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது யாரும்வரவில்லை நான்தான் தப்பி வந்தேன் எனக்கு புத்தி சொல்லாதே என மனைவியைக் கடிந்துகொண்டேன். என் மனைவி சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவள். எனக்கு மரண ஆபத்துள்ள காலம் என நண்பன் ஆய்வறிஞன் ரகுபதி வேறு கூறியிருந்தான். என் மனைவியின் துயரத்தை நான் புரிந்துகொண்டேன்.

நான் எடுத்த இடர்  risk நியாயமானதுதான். இப்போ வடகிழக்கு மாகாணம் பற்றிய என் சிந்தனைகளுக்கு மிக மிக அவசியமான தரவுகள் பல எனக்கு கிடைதுள்ளது.ஒரு ஆய்வாளனாக தரவுகள் இல்லாமல் உயிர் வாழ்ந்து என்னத்தை சாதித்துவிடப்போகிறேன்? சாத்தியப் படும்போது தரவுகளுக்காக மீண்டும் போகவே செய்வேன். 

பயணத்தின்முன் எனது முகநூலில் பின்வருமாறு எழுதினேன்.

'' இந்த வாரம் அம்மாவின் சமாதியில் என் கண்ணீர் மலர்வளையம் சாத்தி நம் அம்மாக்களின் வாழ்வை காவியமாக எழுத ஆரம்பிப்பேன். இதை தவிர்த்திருந்து வேறு என்ன பெரிய சாதனை செய்து விடப்போகிறேன்.''

என்னுடனான கடைசி சந்திப்பை தமிழக நண்பன் Don Ashok   

பின்வருமாறு  பதிவு செய்திருக்கிறான்.

”திடீரென இலங்கை போகும் ஆசை ஏற்பட்டுள்ளது. என்ன விதியோ தெரியவில்லை”. 

''இதுதான் நண்பர் கவிஞர் Jaya Palan தன் தாயின் நினைவு நாளை முன்னிட்டு அவர் சமாதியில் அஞ்சலி செலுத்த இலங்கை செல்வதற்கு முன் என்னிடம் சொன்னது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களின் முடிவுகளை நண்பர்களோ, காவல் துறையோ, சிங்கள அரசோ மாற்றிவிட முடியாது. அவர் கவிதைகள் சொல்வதைப் போல அவர் எதற்கும் கட்டுப்படாத, எதற்குள்ளும் அடைக்கப்பட முடியாத ஒருநாடோடிப் பறவை.''

அம்மாவின் சமாதி அமைந்துள்ள  எங்கள் பண்ணை நிலத்தை இலங்கை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேறு அரசியல் பிரபலங்கள் அபகரிக்க திட்டமுள்ளதும் இங்கு குறிப்பிடப் படவேண்டிய கிழைக் கதை.

எனது முகநூல் அடையாளக் குறி Jaya Palan.  என் தோழ தோழியர்களுக்காக அங்கு தகவல் புதிப்பிப்பேன்.

யாழ்க்களத்தில் என் நோவுக்கு ஒத்தட வார்த்தைகளை எழுதியவர்களுக்கு என் நன்றிகள். தாக்கியவர்கள்மீது கோபமில்லை.

நன்றி.  

Share this post

Link to post
Share on other sites

தாக்கியவர்கள்மீது கோபமில்லை.

நன்றி.  

தாக்கியவர்கள் அல்ல... கேள்வி கேட்டவர்கள் மீதுதான் கோவம்.

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,

மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.

எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும் அப்பால் உங்கள் கவிதைகள் எப்படி என்றுமே இனிமையாக இருக்கின்றதோ அதே போன்றே உங்கள் விடுதலையும் இனிமையான ஒரு விடயமாகவே எனக்கு என்றும் இருக்கும்.

ஆயினும் வந்து சேர்ந்த சோர்வு ஆறும் முன் நீங்கள் வெளியிட்ட முதல் அறிக்கையில் இருக்கும்  உங்கள் அரசியல், அடக்கு முறைகளை - அது புலிகளின் அடக்கு முறைகளாக இருந்தாலும் சரி, இலங்கை பேரினவாதத்தின் அடக்கு முறையாக இருந்தாலும் சரி எதிர்க்கும் எவருக்கும் - உங்கள் அரசியலை ஆழமாக உணர்ந்தவர்களுக்கு அது பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காவிடினும்  கூட - சிறிய அதிர்ச்சியையேனும் தரக்கூடிய ஒரு அறிக்கையாகவே பார்க்கப்படும் / பார்க்கப்படுகின்றது.

உங்கள் கைதின் மூலம் சிங்கள அரசு தெளிவான பல செய்திகளை உலகுக்கு உணர்த்தி இருக்கின்றது.  அவற்றில் முக்கியமானவை, புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து, அந்தந்த நாடுகளின் குடியுரிமை பெற்ற தமிழராகவோ அல்லது சிங்கள பேரினவாதத்தினை கேள்வி கேட்பவராகவோ இருந்தால் அவர்களை தாம் நினைச்ச மாதிரி கடத்தவும், கைது செய்யவும், காணாமல் போக்கவும் முடியும் என்பதும்,  அவ்வாறு அரசியல் / இலக்கியம் செய்ய வரும் எவரும் தம் நிகழ்ச்சி நிரலை ஏற்றுக் கொண்டவராக மட்டும் இருக்க வேண்டும் என்பதுவும், இவற்றினை எல்லாவற்றையும் விட  அங்கு முதலீடு செய்ய முனையும் தமிழர்களின் இருப்பையும் ஒரு நிமிடத்தில் இல்லாமலாக்க முடியும் என்பனவும் ஆகும்.

ஆனால் பலரால் உணரப்பட்ட இந்த செய்திகளின் எந்தவொரு சாராம்சத்தினையும் உங்கள் முதல் அறிக்கை கொண்டு இருக்கவில்லை. அத்துடன், இன்று இலங்கை அரசு பற்றிய  சரியான பிம்பம் உலகெங்கும் உறுதியாக உணரப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, உங்கள் கைது பற்றியும் அதன் பின் விடுதலை செய்யப்படும் வரைக்கும் நடந்த விடயங்கள்  என நீங்கள் வெளியே வந்து சுதந்திரமாக வெளியிட்ட இந்த அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கும் விடயங்களும் அந்த பிம்பத்தினை வெகு சாமர்த்தியமாக உடைக்கும் காரியமாகவே படுகின்றது.

உங்களை கைது செய்த TID பிரிவினரில் இருந்து, பசீர் சேகுதாவுத்தின் சொல்லைக் கேட்டு விடுதலை செய்யச் சொன்ன அச்சாப் பிள்ளை கோத்தா வரைக்கும் சிங்கள் மேலாதிக்கம் ஒரு நெகிழ்வான தன்மையைக் காட்டி இருக்கு என்று காட்டி விட்டு அந்த மேலாதிக்கத்தின் எதேச்சாதிகாரத்துக்கு ஒற்றைப் பிரதிநிதியாக ஒரு சிங்கள பொலிஸ் கான்ஸ்டபிளை மட்டும் காட்டி நிற்கும் உங்கள் சாமர்த்தியம் திட்டமிடப்படாமல் அறிக்கையில் வந்துள்ளதாக நான் நம்பவில்லை. ஒவ்வொரு சொல்லும் மிகவும் கனவமாக கையாளப்பட்டுத் தான் இந்த அறிக்கையை தயாரித்து இருக்கின்றீர்கள் என்பது தெளிவாக புலனாகின்றது.

உங்கள் கடத்தலே ஒரு நாடகம் என்றோ ஜெயபாலன் இலங்கை அரசுடன் இணைந்து நடிக்கின்றார் என்றோ நான் இங்கு எழுத முனையவில்லை. 90 களில் வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் உங்களை சந்திக்கும் போது எந்தளவுக்கு நீங்கள் இலங்கை அரசின் ஆள் இல்லை என்று நம்பினேனோ அதே அளவுக்கு இன்றும் உங்களை நம்புகின்றேன். . ஆனால் கடத்தப்பட்டு பின் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகி வந்த பின்னும் பலரை பகைக்க மனம் இன்றி அவர்களை நோகாமல் அரசியல் செய்யும் உங்கள் தந்திர / சாமர்த்தியமான அரசியலைத் தான் நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். சாமர்த்திய அரசியல் செய்கின்றோம் என்று உங்களையும் மற்றவர்களையும் ஏமாற்ற முனையும் சாகசத்தினைத் தான் கேள்வி கேட்கின்றேன். மற்றவர்களின் கடுமையான கேள்விகளை நலித்துப் போகச் செய்யும் வாசகங்களை அறிக்கையில் கொண்டு வந்த உங்கள் இலக்கிய 'நேர்மை' பற்றியே வினவுகின்றேன்.

என் கேள்விகளிலும் வினாக்களிலும் தவறுகள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்தும் வரைக்கும் காத்து இருக்கின்றேன்.

அது வரைக்கும்  நல்ல கவிதைகளை எழுதத் தெரிந்த, பலமுள்ளவர்களை கடுமையாக பகைக்கின் அரசியல் செய்ய முடியாது,  என்று நம்புகின்ற புகழ்ச்சியை மிகவும் விரும்பும் ஒரு வெறும் கலகக்காரனாகவே உங்களை உணர்ந்து கொள்கின்றேன்.

நன்றி

நான் இறுதியில் உங்களை பற்றி எழுதியது நூற்றுக்கு நூறு விகிதம் சரி என்பதை நிறுவி விட்டீர்கள்.

ஒரு நுட்பமான கவிஞன் அரசியல் வாதியாக மாறும் போது, அந்த நுட்பங்களை எவ்வளவு சாமர்த்தியமாக பயன்படுத்தி பிழைப்புவாதியாக மாறுவான் என்பதை உங்கள் வாழ்வு எங்களுக்கு காட்டுகின்றது.

நன்றி வணக்கம்

Share this post

Link to post
Share on other sites

பேய்நிழல் அண்ணா,

ஜெயபாலன் ஐயாவை வைத்து கவிஞர்கள் அனைவரும் அவ்வாறே என முடிவுக்கு வந்து விடாதீர்கள். :D

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.