• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Vatha

புறநானூற்றின் புதுத்தொடரே.... நீ வாழிய பல்னூற்றாண்டு...!

Recommended Posts

இல்லாது இருப்பவன்
இருந்தும் இல்லாதவன்
வரிகொண்டவன்

வரிப்புலிகண்டவன்

முழுத்தமிழர்க்கும் முகவரிதந்

தவர்மனங்களில் முடிசூடினன்

இயற்கையின் நண்பன்
இமாலய சாதனையின் தொண்டன்

 

தமிழன்னையின்  தவப்புதல்வா...

தாயகத்துத் தங்கமகனே

புறநானூற்றின் புதுத் தொடரே...
உனக்கின்று இன்னோரகவையாம்...

காலத்தின் கட்டளையே கரிகாலா...

உனக்கும் அகவையேதுமுண்டோ?

நீ வாழி..
நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

Share this post


Link to post
Share on other sites

---

தமிழன்னையின்  தவப்புதல்வா...

தாயகத்துத் தங்கமகனே

புறநானூற்றின் புதுத் தொடரே...

உனக்கின்று இன்னோரகவையாம்...

காலத்தின் கட்டளையே கரிகாலா...

உனக்கும் அகவையேதுமுண்டோ?

நீ வாழி..

நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

 

அழகிய கவிதைக்கு நன்றி, வதா.

Share this post


Link to post
Share on other sites

அழகிய கவிதைக்கு நன்றி, வதா.

 

நன்றி தமிழ் சிறி உங்கள் பதில்க் கருதீடுக்கு. அத்துடன் இதைக் கவிதையென குறிப்பிட்டதற்கு இன்னொரு நன்றி, எனெனில் இதைக் கவிதையாக நினைத்து எழுதவில்லை. இது உண்மையிலேயே கவிதையெனின் இதுவே என் "முதற் கவிப் பிரசவம்/பிரசுரம்", எனில் அந்நன்றி யாழுக்கும், முதலில் அங்கீகரித்த உங்களுக்குமே உரித்தாகும். :)

 

(அப்ப எனக்கும் கவிதை எழுதவருமோ?) :rolleyes:

நன்றி, வதா

 

நன்றி தேவரே... :)

Share this post


Link to post
Share on other sites

புறநானூற்றின் புதுத் தொடரே...

உனக்கின்று இன்னோரகவையாம்...

காலத்தின் கட்டளையே கரிகாலா...

உனக்கும் அகவையேதுமுண்டோ?

 

 

நாலு வரிகளுக்குள் காலத்தைப் புதைத்திருக்கின்றீர்கள் வேதா!

 

நன்றிகள்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நாலு வரிகளுக்குள் காலத்தைப் புதைத்திருக்கின்றீர்கள் வேதா!

 

நன்றிகள்!

 

பின்னூட்டத்திற்கு அன்புகலந்த நன்றிகள்...புங்கையூரன் :)

 

Share this post


Link to post
Share on other sites

தமிழன்னையின்  தவப்புதல்வா...

தாயகத்துத் தங்கமகனே

புறநானூற்றின் புதுத் தொடரே...

உனக்கின்று இன்னோரகவையாம்...

காலத்தின் கட்டளையே கரிகாலா...

உனக்கும் அகவையேதுமுண்டோ?

நீ வாழி..

நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

 

அருமையான  வரிகள்

நன்றி  கவிக்கும் நேரத்திற்கும்...

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 

தமிழன்னையின்  தவப்புதல்வா...

தாயகத்துத் தங்கமகனே

புறநானூற்றின் புதுத் தொடரே...

உனக்கின்று இன்னோரகவையாம்...

காலத்தின் கட்டளையே கரிகாலா...

உனக்கும் அகவையேதுமுண்டோ?

நீ வாழி..

நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

 

அருமையான  வரிகள்

நன்றி  கவிக்கும் நேரத்திற்கும்...

 

 

நன்றி விசுகு.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் என்.கே. அஷோக்பரன்   / 2020 மார்ச் 31 உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது ‘கொவிட்-19’ எனும் கொள்ளை நோய்.    ‘இன்றுளார் நாளையில்லை’ எனும் நிலையாமையை, முழு உலகமுமே கண்முன்னே கண்டுகொண்டிருக்கும் இந்த நிலையின் காரணகர்த்தா, கொரோனா எனும் வைரஸ் ஆகும். சுவாச நோயைத் தரும் கொரோனா வைரஸ், உலகைப் பதறவைப்பது, இது முதன்முறையல்ல.    2003இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘சார்ஸ்’ நோயை ஏற்படுத்தி, ஆசியாவையும் உலகத்தையும் பதறவைத்தது.    2012இல் ஒரு வகையான கொரோனா வைரஸ் பரவி, ‘மேர்ஸ்’ நோயை ஏற்படுத்தி, மத்திய கிழக்கையும் உலகையும் பதறவைத்தது.    தற்போது 2020இல், ஒரு வகையான கொரோனா வைரஸ், சீனாவின் வூஹானில் தொடங்கி, உலகெங்கும் பரவி, மனிதனின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.   இந்த நிமிடத்தில், இலங்கையும் இந்தியாவும் உலகின் பல்வேறு நாடுகளும், தம்முடைய மக்களை, வீட்டுக்குள்ளேயே தடுத்து வைத்திருக்கிறார்கள்; ஊரடங்கி, உலகமே முடங்கிப் போய் இருக்கிறது.    சீனாவின் வூஹானில் தொடங்கிய நோய், அங்கு அடங்கி விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஆனால், அது பரவிய இத்தாலி,ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள், சீனாவை விட அதிகமாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, ஏனைய நாடுகளிலும் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, பரிசோதனைகள் நடத்தப்பட நடத்தப்பட, நாளாந்தம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.    தினமும் கேள்விப்படும், தொற்று ஏற்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரிப்பும், ‘கொவிட்-19’ பலிகொண்ட உயிர்களின் எண்ணிக்கையும், உலகத்தை ஒருபுறம் பதறவைத்தாலும், மறுபுறத்தில், திடீரென முடக்கப்பட்டுள்ள மக்களின் அன்றாட வாழ்க்கைச்சுழல், உலகெங்கும் வாழும் மக்களை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.    குறிப்பாக, பொருளாதார வசதி, சுகாதார வசதி வாய்ப்புகள் குறைந்த பெரும்பான்மையான மக்கள், இந்தத் திடீர் முடக்கத்தால், மீளமுடியாத பாதாளப் படுகுழிக்குள் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது.   சில தினங்களுக்கு முன்னர், டெல்லியிலிருந்து பெருந்தொகையான மக்கள், கால்நடையாக வௌியேறிச் சென்ற காட்சியின் படங்கள், மனதில் ஆற்றொனா வலியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.  உலக வரலாற்றில், பெருந்தொகையான மக்கள், ஓரிடத்திலிருந்து வௌியேறிய சம்பவங்கள் அனைத்துமே, பெருந்துயரான சம்பவங்களாகவே இருந்துள்ளன.  “எல்லோரும் வீட்டுக்குள் இருங்கள்” என்று நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல், அரசாங்க இயந்திரம் வரை, மக்களை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதில், இவர்களைத் தவறும் சொல்ல முடியாது. கொள்ளை நோய் தொற்றாது தடுக்க, மனித நடமாட்டத்தையும் மனிதர்கள் பெருமளவில் புழங்குவதையும் தடுப்பது, மிக அடிப்படையான நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஆனால், உணவின்றி மனிதன் எப்படி வாழ்வான்? இன்றைய பொருளாதார, சமூகக் கட்டமைப்பின் கீழ், பணமின்றி உணவு எப்படிக் கிடைக்கும்? தொழிலின்றி எப்படிப் பணம் கிடைக்கும்? பணமும் பொருளும், உணவும் உள்ளவர்கள், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதில் உடனடியான பெருஞ்சவால்கள் எதுவுமில்லை.  அடுத்த வேளை, உணவுக்கான அரிசியை வாங்குவதற்கு, இன்று வேலை செய்தால்தான் பணம் கிடைக்கும் என, அன்றாட உழைப்பில் வாழும் மனிதனால், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா?  பணம், பொருள் உள்ளவர்கள் கூட, எத்தனை நாள்தான் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க முடியும்? இவை, வெறும் அடிப்படையான பிரச்சினைகள் தான். இதிலிருந்து, ஒரு சங்கிலித் தொடராக, பெரும் வலைப்பின்னலாக, இந்தக் கட்டாய முடக்கம், மனித இயக்கத்தை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது.  பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கிறது. பொருளாதார ஸ்தம்பிதம் என்பது, பறந்து கொண்டிருக்கும் விமானமொன்றின் இயந்திரம் நிறுத்தப்பட்டதைப் போலாகும். ஒரு குறுகிய காலத்துக்குக் காற்றில், அது மிதந்த படி கீழே வரும். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பின்னர், அது மிக வேகமாகக் கீழ்நோக்கி விரைந்து, தரையில் முட்டி மோதி வெடித்துவிடும்.  கொரோனா வைரஸின் தற்போதைய அச்சுறுத்தலுக்கும், பொருளாதார முடக்கத்தால், விரைவில் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிக்கும் நடுவில், உலகம் சிக்கிக்கொண்டிருக்கிறது.  உலகெங்கும், இலட்சக்கணக்கில் உயிர்களைக் காவுகொண்ட பற்பல கொள்ளை நோய்களை, வரலாற்றுக் காலம் முதல், உலகம் சந்தித்திருக்கிறது. அந்தக் கொள்ளை நோய்கள் ஏற்படுத்திய இழப்புகளிலிருந்து, மனிதன் மீண்டு வந்திருக்கிறான். அதுதான், மனித வரலாற்றின் வெற்றி.  ஆனால், இதுபோன்ற உலகளாவிய ரீதியிலான, பாரிய கொள்ளை நோய் பாதிப்பு, நிச்சயமாக உலக இயக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திச் செல்லும். கிட்டத்தட்ட உலகம், செயலற்று இருக்கும் நிலைக்குச் சென்று வருவதைப்போலாகும். ஓர் இயந்திரம், செயலற்றிருக்கும் நிலைக்குச் சென்று வரும் போது, அது விட்ட இடத்திலிருந்து இயங்கத் தொடங்கும். ஆனால், உலகமும் மனிதர்களும், அப்படி விட்ட இடத்திலிருந்து தொடங்க முடியாது. நான்கு வாரங்கள் முடங்கிப் போன நாடு, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர, அந்த இடத்தை அடையவே சில பல வருடங்கள் ஆகலாம். பொருளாதாரம், ஆரோக்கியம், சமூகப் பின்னடைவைச் சரிசெய்வது, இன்றைய உலகுக்குப் பெரும் சவாலாக இருக்கப் போகிறது.  அதனால், கொரோனா வைரஸ் உலகுக்குப் பெரும் சவாலாக மட்டுமின்றி, உலகின் போக்கை மாற்றி அமைக்கப்போகும் திருப்புமுனையாகவும் இருக்கப் போகிறது.   அரசியலும் அதிகாரமும்   கொரோனா வைரஸின் தாக்கமும் பரவுகையும் அமெரிக்காவில் கடுமையாக அதிகரித்துக் கொண்டிருப்பதை, அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அமெரிக்காவின் மருத்துவக் காப்புறுதி மய்ய சுகாதாரக் கட்டமைப்பு, சுகாதார சேவைகள் அனைவரையும் சென்றடைவதை எப்போதும் சவாலாக வைத்திருந்தது.  மருத்துவக் காப்புறுதி இல்லாதவர்கள், சாதாரணமாகவே சிறு நோய் அறிகுறிகளுக்காக மருத்துவமனைக்குச் செல்வதில்லை. இந்தச் சுகாதாரம்சார் கலாசாரக் கட்டமைப்பு, கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக, கொரோனா வைரஸின் பரவுகை, மிகப்பாரியளவில் அமெரிக்காவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கைக் கடுமையாக அமல்ப்படுத்தும் போது, அமெரிக்கா வீட்டுக்குள் இருக்குமாறும், சமூக ஊடாட்டங்களைக் குறைக்குமாறும் அறிவுறுத்தல் மட்டுமே வழங்கியிருக்கிறது.  அமெரிக்காவின் நிலை இவ்வாறு இருக்க, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக மாறியிருக்கிறது. ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் கடுமையாகச் சவாலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஈரானின் நிலைமையும் மோசமானதாக இருக்கிறது.  சீனாவிலிருந்து பரவியதாக அறியக்கிடைக்கும் இந்தக் கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து, சீனா பெருமளவு மீண்டு விட்ட நிலையில், மேற்கு மீண்டும் ஓர் இருண்ட யுகத்துக்குள்  சிக்கிக்கொண்டுள்ள நிலையே ஏற்பட்டுள்ளது.  இந்தச் சூழல், சர்வதேச அரசியல் இயங்கியலில், கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் எனச், சில எதிர்வுகூறல்களை, கேட்கக்கூடியதாக இருக்கிறது.  மேற்குலகுடனான, சீனாவின் அதிகாரப் போட்டி என்பது, வௌிப்படையாகத் தெரியாததொன்றல்ல. கடந்த இரண்டு தசாப்தங்களாக, அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கு நாடுகள், தங்கள் உற்பத்திக் கட்டமைப்பை, பொருளாதாரக் காரணங்களுக்காக சீனா நோக்கி நகர்த்தியிருந்தன. இது, சீனாவின் பொருளாதாரப் பலத்தை, கணிசமாகப் பெருக்கியதுடன், இந்த நாடுகளும், அவற்றின் பொருளாதாரமும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய சூழலையும் ஏற்படுத்தி இருந்தன.  யுத்தம், நேரடித் தலையீடுகள் மூலம் அதிகாரத்தையும் செல்வாக்கையும் ஏற்படுத்தும் அணுகுமுறை சீனாவிடம் இல்லை. சீனா, பொருளாதார ரீதியாகவே நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்த விளைகிறது.  பொருளாதாரத்தில் தன்னிறைவடைந்த நாடுகளை, தனது உற்பத்திகளில் தங்கியிருக்கச் செய்கிறது; பொருளாதாரத்தில் பின்னடைந்த நாடுகளைத் தனது கடன்களிலும் முதலீட்டிலும் தங்கியிருக்கச் செய்கிறது.  ஆகவே, இந்த வகையில் உலகில் தவிர்க்க முடியாத சக்தியாகச் சீனா, தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுகை கூட, சீனாவுக்கு இலாபகரமானதாகவே மாறியிருக்கிறது.  கொரோனா வைரஸ் நோய்ப் பரிசோதனைக்கான கருவிகளிலிருந்து, முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வரை, சீனா உற்பத்தி செய்து, மேற்குலகுக்கு அவற்றை விற்பனை செய்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு, இலவசமாக அவற்றை வழங்கியும் உடனடியாகக் கடன்களை வழங்கியும் தனது செல்வாக்கை, அந்த நாடுகளில் அதிகரித்தும் வருகிறது. கொரோனா வைரஸை, மேற்குலக நாடுகள் முறையாக எதிர்கொள்ளத் தவறும் போது, பொருளாதார ரீதியாக, மேற்குலக நாடுகள் கடுமையான பின்னடைவைச் சந்திக்கும் அதேவேளை, சீனாவின் பொருளாதார பலமும் சர்வதேச ரீதியிலான செல்வாக்கும் கணிசமாக அதிகரிக்கும். இது, 21ஆம் நூற்றாண்டின் முக்கிய திருப்பமாக அமையலாம்.   பொருளாதாரமும் ஆரோக்கியமும்   முடங்கி இருக்கும் பல நாடுகளின், பொருளாதாரம் மீள இயங்கத் தொடங்கும் போது, பொருளாதார ரீதியில் பின்தங்கி இருந்தவர்களின் நிலைமை, கணிசமாக மோசமடைந்திருக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் பெரும்பிரச்சினையாக உருவெடுக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அன்றாட உழைப்பை நம்பி வாழும் மக்களின் நிலைமை, இன்னும் மோசமாகும்.  அமெரிக்கா போன்ற, திறந்த சந்தைப் பொருளாதாரக் கொள்கையுடைய நாடுகளே, மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுத்துள்ள நிலையில், இலங்கை போன்ற நாடுகளில் நிவாரணங்களின் தேவை மிக அதிகமாகும்.  சேவை மய்யப் பொருளாதாரமாக உருவாகிக் கொண்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம், மீட்சியடையப் பல ஆண்டுகள் தேவைப்படலாம். அதுவரை காலமும் மக்களுக்கு முறையான நிவாரணமும் பாதுகாப்பும் வழங்க வேண்டிய தேவை, அரசுகளுக்கு இருக்கிறது.  இந்த விடயத்திலிருந்து அரசுகள் தவறும் போது, அது பாரதுரமான சமூக, பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகவே தடுமாறும் பொருளாதாரத்தையும் அதைச் சில ஆண்டுகளுக்கு சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பும் சவாலும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்படப்போகிறது.   மறுபுறத்தில், கொரோனா வைரஸை, அந்த நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியப் பிரச்சினையாக மட்டும் மட்டுப்படுத்தி அணுகிவிட முடியாது. பல வாரங்களாக, இயல்பு வாழ்க்கையிலிருந்து விலகி, பெருமளவான மக்கள் கூட்டம், வீட்டுச்சிறைக்குள் அடைபட்டு இருக்கிறார்கள். இதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உள ஆரோக்கியப் பிரச்சினைகள், மிகப்பாரதுரமானவை.  மேற்குலகம் இன்றளவில் கூட, உள ஆரோக்கியம் பற்றிப் பெருமளவு விழிப்புணர்வையும் உள ஆரோக்கியத் தேவைக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில், உள ஆரோக்கியம் என்பது, இன்னமும் பேசப்படாத பொருளாகவும் ‘பைத்தியங்களுக்கு’ மட்டுமானதும் என்ற அபத்தமான பொது மனநிலையைக் கொண்டதாகவுமே காணப்படுவது துரதிர்ஷ்டவசமானதே. இது, உள ஆரோக்கியப் பிரச்சினைகளை, இலங்கை போன்ற நாடுகள் எதிர்கொள்வதை, மிகக் கடினமாக்கப் போகிறது.   நீண்டகாலத்தின் பின்னர், இனம், மதம், மொழி, நாடு கடந்து, மனிதர்கள் அனைவரினதும் இருப்புக்கு ஒரு பொதுவான சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா வைரஸ் மனிதனை இந்தப் புவியிலிருந்து இல்லாதொழிக்கப் போவதில்லை; அது நிச்சயம்!  வரலாற்றில் தான் சந்தித்த அனைத்துக் கொள்ளை நோய்களையும், மனிதன் எவ்வாறு வெற்றி கொண்டானோ, அதைப் போலவே கொரோனா வைரஸையும் வெற்றி கொள்வான். ஆனால், இந்தச் சில மாதங்கள், கொரோனா வைரஸ் தந்த தாக்கம், மனித வாழ்வைத் தனி மனித அளவிலும், நாடுகள் ரீதியாகவும் உலக அளவிலும் அடுத்த ஒரு தசாப்த காலத்துக்கேனும் பாதிக்கப்போகிறது.  பறக்கும் கார்களைப் பற்றிய கனவைக் கொண்ட மனிதனை, அடிப்படையான உணவு,  சுகாதார வசதிகள் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கச் செய்திருக்கிறது கொரோனா வைரஸ். இயற்கை பற்றிய பிரக்ஞையும், பரவலாக உயிரூட்டம் கொண்டுள்ளது. ஒன்று மட்டும் உண்மை! கொரோனாவுக்கு முந்திய உலகம் போல, கொரோனாவுக்குப் பிந்திய உலகம் இருக்கப் போவதில்லை.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-வைரஸ்-பெருந்தொற்றும்-உலகப்-பதற்றமும்/91-247716
    • கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு எம். காசிநாதன்   / 2020 மார்ச் 31  நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது.   மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன.    முத‌ற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது.    பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற்றியது. ‘உயிர்ப் பயம்’ மக்களை வீட்டுக்குள் இருக்க வைத்தது என்றாலும், பிரதமரின் வெறும் வேண்டுகோளுக்கே வீட்டுக்குள் அமர்ந்து, வெற்றி கரமாக ஒத்துழைத்தது வரலாறாக மாறியிருக்கிறது.    இதுவரை, இந்தியாவில் இருந்த பிரதமர்கள் விடுத்த வேண்டுகோளை, இவ்வளவு கட்டுப்பாட்டுடன் இந்திய மக்கள் நிறைவேற்றி இருக்கிறார்களா என்று கேட்டால், அதில் முதலிடத்தில் இருப்பது மோடியின் ‘சுய ஊரடங்கு’ வேண்டுகோள்தான்.    மக்களின் இந்த ஒத்துழைப்பை விமர்சிக்க, அரசியல்வாதிகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக, ஒரு சிலரின் மீறல்களை எடுத்துக் கொண்டார்களே தவிர, ஒட்டு மொத்த இந்தியாவும் பிரதமர் மோடியின் பின்னால் நின்றது. டிசெம்பர் மாதத்திலேயே, சீனாவில் கொரோனா வைரஸ் வந்து விட்டது. ஜனவரி மாதத்தில் அது, இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் மூன்று பேரைத்தாக்கி விட்டது. அப்படி இருக்கும்போது, ஏன் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு, மார்ச் 22 ஆம் திகதி வரை காத்திருந்தார்கள் என்ற கேள்வி, அரசியல் வட்டாரத்தில் எழுப்பப்பட்டது.    இருந்தபோதிலும், இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில், ‘மிக முன்பாகவே’ கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தால், மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பது இன்னமும் கூட, விடை தெரியாத கேள்விதான். இவ்வளவு நெருக்கடிகளுக்குப் பிறகு, விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையே வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இந்தியர்கள், முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை. விமான நிலையத்தில் சோதனைக்கே மறுத்தவர்கள் ஏராளம். அதில், சிரேஷ்ட அதிகாரிகளின் பிள்ளைகள் கூட, கொரோனா சோதனைக்கு மறுத்த செய்திகள் வெளிவந்தன.    ஆகவே, முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை முன் கூட்டியே நிறைவு செய்திருக்க வேண்டும் என்பதெல்லாம் எளிமையான கேள்விகளாக இருக்கிறதே தவிர, ஆட்சியில் இருப்பவர்கள் அது மாதிரி முடிவுகளை எடுக்கும் முன்பு, பல்வேறு பரிசீலனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது.    ஏனென்றால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அவசரமாக அறிவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு ஊறு விளைவித்து விட்டது என்ற பழியை, ஏற்கெனவே மத்தியில் உள்ள பா.ஜ.க அரசாங்கம் சுமந்து கொண்டிருக்கின்ற நிலையில், கொரோனா வைரஸிலும் அப்படியொரு பழியை எடுத்துக் கொள்ள அரசாங்கம் தயங்கியிருக்கலாம்.    ஆனால், கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பில், இப்போது ஏப்ரல் 14 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், இந்தியாவின் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.   ‘தனிமைப்படுத்துதல்’ என்ற ஒன்றே இந்த நோயின் பரவலைத் தடுக்கும் என்பதால், ‘சமூகத் தொற்று’ கட்டத்தை அடையாத இந்தியா, இது போன்ற ஊரடங்கு மூலம் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும் என்று பிரதமரும் மற்ற மாநில முதலமைச்சர்களும் முடிவு செய்தது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சரியான பாதையிலேயே செல்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளன.   ஊரடங்கு பிறப்பித்த கையோடு 1.70 இலட்சம் கோடி, நிவாரண நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். அதில், ஊரடங்குச் சட்டத்தை சமாளிப்பதற்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள், இல்லத்தரசிகள், ஏழை எளியவர்கள் ஆகியோருக்கு நிதியுதவி அறிவித்திருக்கிறார்.   இன்னொரு பக்கம், இந்திய ரிசர்வ் வங்கி, ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும்போது, வருமான இழப்பு ஏற்படும் என்பதால், வங்கிக் கடன் தவணைகளை மூன்று மாதம் கட்டத் தேவையில்லை என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது. 24 மணி நேரமும் அத்தியாவசியப் பொருள்கள், அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.   மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வீடியோ கலந்துரையாடல்கள் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.    ஆகவே, ஒரு புறம் ‘சுகாதாரப் பேரிடர்’; இன்னொரு பக்கம், ‘பொருளாதாரப் பேரிடர்’. இந்த இரண்டையும் சம அளவில் கையாண்டு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் வேகமாகச் செயற்பட்டு வருகிறது.    இந்தக் கட்டுப்பாட்டின் பலன் தற்போது தெரியத் தொடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தொற்றின் எண்ணிக்கை, மள மளவென என்று உயராமல், மிகவும் மெல்லவே நகருகிறது. 21 நாள் ஊரடங்கு முடிவில் உலக நாடுகளோ, உலக சுகாதார நிறுவனமோ எதிர்பார்த்த பாதிப்பு ஏதும் இந்தியாவில் நடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகின்றன.   மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க, மாநில முதலமைச்சர்கள் மிகவும் உத்வேகத்துடன் செயற்படுகிறார்கள் என்பதே கள நிலைவரம்.  கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன், நாட்டில் உள்ள மற்ற முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன்னோடியாகக் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். நோய்க்கு உள்ளானோரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதில், கேரள அரசாங்கம் மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறது.   அதேபோல், பாதிப்படைந்துள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கைதூக்கி விடுவதற்கும் உரிய சலுகைகளை அறிவித்து, மத்திய அரசாங்கத்திடம் மட்டும், புதிதாக 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டிருக்கிறார்.    ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நான்கு மாதச் சம்பளத்தை முன்கூட்டியே கொடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.    கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காலை ஆறு மணிக்கெல்லாம் மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, கொரோனா வைரஸ் தடுப்பு அறிவுரைகளைக் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தி வருகிறார்.    ‘தனிமைப்படுத்தலைப் பொருட்படுத்தாமல் வெளியே வந்தால், கண்டதும் சுட உத்தரவிடுவேன்’ என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்து, மக்களை ஒருமுகப்படுத்தி, கொரோனா வைரஸின் ‘சமூகத் தொற்றை’த் தடுக்க முனைகிறார்.   சமயல் பொருள்களை, வீட்டுக்கே கொண்டு சேர்த்து, மக்கள் வீட்டிலேயே இருப்பதை உறுதி செய்கிறார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். தனிமைப்படுத்துதலை முதலில் அமல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக அதிகம் பாதிப்புக்குள்ளான மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே செயல்படுகிறார்.    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘அனைத்து அரிசி ‘ரேசன்’ அட்டை தாரர்களுக்கும் 1,000 ரூபாய்’,‘அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய்’, ‘நடை வியாபாரிகளுக்கு 2,000 ரூபாய்’ என்று நிதியுதவித் திட்டத்தை அறிவித்துச் செயல்படுகிறார்.  ஆகவே, பிரதமரின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், பா.ஜ.க முதலமைச்சர்ளும் எதிர்க்கட்சிகளின் முதலமைச்சர்களும் ஒத்துழைப்புக் கொடுத்து, கொரோனா வைரஸ் தடுப்பில் மும்முரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.   தங்கது பங்குக்கு எதிர்க்கட்சிகளும் போதிய ஒத்துழைப்பை அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்றன. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை, ஈடுகட்ட நிதியுதவி, நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று நாட்டில் முதலில் குரல் கொடுத்தவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆவார். இதை, காங்கிரஸ் தலைவர்கள் பின் தொடர்ந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.  அதேபோல், தமிழக அரசாங்கத்தின் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை எடுத்த எடுப்பில், “வரவேற்கிறேன்” என்று அறிவித்து, “தமிழகச் சட்டமன்றத்தை ஒத்தி வையுங்கள்” என்று குரல் கொடுத்தவரும் ஸ்டாலின் தான். ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த ஒத்துவைப்பு எதிர்க்கட்சிகளிடமிருந்தும் ஆளுகின்ற முதலமைச்சருக்கு கிடைத்துள்ளது என்பது, இந்தப் பேரிடரின் மிகப்பெரிய அனுபவம். காங்கிரஸ் கட்சியின் சார்பில் கூட, முதலில் பிரதமர் மோடியைக் குறை கூறியவர்கள், பிறகு, “உங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருகிறோம்” என்று கூறியதைக் காண முடிந்தது.  குறிப்பாக, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமருக்குக் கடிதம் எழுதி, அந்த ஆதரவை நல்கினார். நிவாரணத் திட்டங்களையும் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  கொம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ராஜ்ய சபை எம்.பி சீத்தாராம் எச்சூரி, “45 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்களின் கதி என்னவாகும்” என்று கேள்வி எழுப்பினார். அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையில் தான், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் ‘1.70 இலட்சம் கோடி’ நிவாரண அறிவிப்பு வெளியானது. பிரதமர் முதல் முதலமைச்சர் வரை, ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை, அனைவரும் ஒரே முகமாக நின்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையில், இந்திய மக்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவ ஊழியர்கள் பணி போற்றத்தக்கது. ஊரடங்குச் சட்டத்தை மீறும் ஒரு சிலரைக் கூடப் பிடித்து வைத்து, நூதன தண்டனைகளை வழங்கிப் பொலிஸார் ஊரடங்குச் சட்டதைதைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறார்கள். தனிமைப்படுத்துதல், சமூக விலக்கு என்ற மக்களின் மகத்தான ஒத்துழைப்பு மூலம், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை, இந்தியா தனிமைப்படுத்தி விடும் என்ற நம்பிக்கை, 21 நாள் ஊரடங்குச் சட்டத்தின் மூலம் அதிகரித்திருக்கிறது.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொரோனா-வைரஸைத்-தடுக்க-இந்திய-மக்களின்-ஒத்துழைப்பு/91-247714
    • இந்த‌ வ‌ருட‌ம் ஒரு இட‌மும் போகாம‌ குடும்ப‌த்தோட‌ இருக்கிற‌து தான் ந‌ல்ல‌ம் / உல‌க‌த்தை எப்ப‌வும் சுத்தி பார்க்க‌லாம் தாயே , நோய்வாய் ப‌ட்டு உயிர் போனா மீண்டும் வ‌ராது / குடும்ப‌த்தோடு ம‌கிழ்வாய் இருங்கோ , நாடுக‌ளை பிற‌க்கு சுத்தி பார்க்க‌லாம்  😁