Jump to content

மாவீரர் நாள் 2013


Recommended Posts

ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் இனத்தின் வீரத்தை வரலாற்றில் பதிந்த நாள்

விடுதலைக்கு உயிர் கொடுத்து உரமாகிப்போன உத்தமர்களின் நாள்

அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக அலையென எழுந்த ஆத்மாத்த வீரர்களின் நினைவு நாள்

தாயக மண்ணை தாயாக கருதி அவள் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள்

தமிழர் தலைநிமிர்ந்து வாழ தங்களை ஆகுதி ஆக்கிய எங்கள் மறவர்களின் நாள்

தாயக மண்ணில் மீண்டும் பெரும் விருட்சமாக எழுந்திட விதையாகிப்போன எங்கள் கண்மணிகளின் நாள்

வரிப்புலியாகி விடுதலை வேண்டி வீரத்தின் சாதனைகளை தலைவன் வழியில் நிலைநாட்டிய வீரப்புதல்வர்களின் நாள்

உங்களிற்காக குனிந்த எம் தலைகள் மீண்டும் தாயக பயணம் நோக்கி நிமிர்கின்றன


தாயக விடுதலைக்கு எங்களால் முடிந்த வரை உழைப்போம் என்று உங்கள் மீது உறுதி கூறுகின்றோம்

Edited by நிழலி
Link to comment
Share on other sites

எம் மாவீரர் கனவு நிச்சயம் நிறைவேறும்.  என் இறுதி மூச்சுவரை உங்கள் நினைவுகள் என்னை விட்டு அகலாது.  என் இறுதி மூச்சுவரை தமிழீழத்திற்காக உழைப்பேன் என உங்கள் மீது மீண்டும் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் மாவீரர் கனவு நிச்சயம் நிறைவேறும். என் இறுதி மூச்சுவரை உங்கள் நினைவுகள் என்னை விட்டு அகலாது. என் இறுதி மூச்சுவரை தமிழீழத்திற்காக உழைப்பேன் என உங்கள் மீது மீண்டும் உறுதி எடுத்துக் கொள்கிறேன். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


மாவீரர் நாள் 2014

 

2013 என மாற்றிவிடுங்கள் சுண்டல்.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.