Jump to content

இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் சிறிலங்கா அரசிற்கு - முதல்வர் விக்னேஸ்வரன்


Recommended Posts

CM1.jpgஇன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது தொடர்பாக வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்: 

இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த ஸ்தூபி இருக்கும் சதுக்கத்தில் மரம் நாட்டும் விழா நடத்த எமது வேளாண்மை அமைச்சு உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு என் தலைமைத்துவத்தின் கீழ் அதை நடத்தத் தீர்மானித்திருந்தது. 

திடீரென்று பொலிசார் தமக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த ஒரு விழாவினையும் வடமாகாண மக்கள் இம் மாதம் 26, 27ந் திகதிகளில் நடாத்தப்படாது என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்திற்குத் தாம் பொலிஸ் பாதுகாப்புத் தந்தால் தம்மிடம் கேள்விகள் கேட்டு தாம் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எனக்கு அவர்கள் அறிவித்தார்கள். என் மீது மதிப்புக் காட்டுவதால் அந்த அப்பாவிப் பொலிஸார் தண்டனைக்குள்ளாவது எனக்குச் சரியென்று படவில்லை. 

எனினும் இந்த நிகழ்வு எமக்குச் சில பாடங்களைப்; புகட்டுகின்றன. ஒன்று இராணுவ பலத்தை வடமாகாணத்தில் போர் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியுந் தொடர்ந்து வைத்திருப்பதும் இப்பேர்ப்பட்ட ஆணைகளை அரசாங்கம் பிறப்பிப்பதும் அரசாங்கத்தின் பயத்தைப் பிரதி பலிக்கின்றது. அதாவது அழிக்கப்பட்ட எமது இளைஞர்களின் ஆத்மாக்கள் கூட எமது அரசாங்கத்திற்குப் பீதியை ஏற்படுத்துகின்றன என்று தெரிகிறது. இல்லையென்றால் நாங்கள் வன்முறையின்றி நல்லெண்ணத்துடன் நடாத்தும் மரம் நாட்டு விழாவைக்கூடத் தடை செய்யும் அளவுக்கு அரசாங்கம் கரிசனை எடுக்கின்றது என்றால் அவர்கள் எந்தளவுக்கு எமது இளைஞர்கள் மீது கரவான மட்டற்ற மரியாதை வைத்துள்ளார்கள் என்று புரிகிறது. இறந்தவர்கள் பேசமாட்டார்கள் என்பது முதுமொழி. இலங்கையில் இறந்தவர்கள் பேசிவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது அரசாங்கத்திற்கு. 

எமது மரம் நாட்டு விழா நவெம்பர் 27ந் திகதி நடைபெறுவதால் அது எம் இறந்தவர்களை எமது மக்களுக்கு நினைவுறுத்தி விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பது புலப்படுகிறது. எந்த ஒரு மனிதன் இறந்தால்க் கூட அவனின் கிட்டிய சொந்தங்கள் அவனின் ஆத்மா சாந்தி அடைய வருடா வருடம் நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். இது இந்துக்கள், பௌத்தர்கள் ஏன் மற்றைய மதத்தாருக்குக் கூடப் பொருந்தும். 

எல்லாளன் இறந்தவுடன் அவன் ஞாபகார்த்தமாக துட்டகைமுனு ஒரு நினைவு மண்டபம் அமைத்து போவோர் வருவோர் இறந்த அந்த மகா மனிதனுக்கு மரியாதை காட்டவேண்டும் என்றும் அந்த இடத்தில் தமது வணக்கத்தைத் தெரிவித்துப் போக வேண்டும் என்று ஆணையிட்டான். நான் சிறுவனாக அனுராதபுரத்தில் குடியிருந்த போது எங்கள் வதிவிடத்திற்கு அண்மையில் சிற்றம்பலம் டாக்கீஸ் என்ற படமாளிகை அமைந்திருந்த இடத்தில் இருந்து கொஞ்சத் தூரத்தில்த் தான் எல்லாளன் நினைவிடம் (எலாள சொகன) இருந்தது. 1946 – 1947ம் ஆண்டுகளில் துவிச்சக்கர வண்டிகளில் அவ்வழியே சென்றவர்கள் அந்த நினைவிடத்தில் தரித்து நின்று தொப்பியைக் கழற்றி வணக்கம் தெரிவித்து விட்டு திரும்பவும் ஏறிச் சென்றதை நான் கண்கூடாகக் கண்டுள்ளேன். ஆனால் அந்த எலாள சொகன இப்பொழுது அழிக்கப் பட்டுள்ளது. அப்பேர்ப்பட்ட துட்டகைமுனுவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்பவர்கள் இன்று இறந்தவர் நினைவாக மரம் நாட்டுவதைக் கூடத் தடைசெய்கின்றார்கள் என்றால் எந்த அளவுக்கு எமது நாட்டு மக்கள் கலாச்சார, சமயப் பின்னடைவு அடைந்துள்ளார்கள் என்பது விளங்கும். 

இது பற்றி பொலிசார் அறிவித்ததும் திரு ஐங்கரநேசனை அழைத்து இது பற்றிப் பேசி சட்டத்திற்குப் புறம்பாக நாம் நடந்துகொள்ளத் தேவையில்லை. என்றாலும் இறந்த எமது மக்களின் நினைவாக ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் விளக்குகளைக் கொழுத்தி ஒரு மரத்தையேனும் நாட்ட வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அறிவுறுத்தினேன். 

இப்பேர்ப்பட்ட ஆணைகள் எமது உறவுகளின் நினைவை மீண்டும் வலியுறுத்தவே உதவுவன. அழிக்க முடியாது. இயற்கையோடு ஒன்றிய கலாச்சாரம் எமது தமிழர் கலாச்சாரம். கார்த்திகைப் பூக்கள் வருடத்திற்கு ஒரு முறை மகிழ்வுடன் கார்த்திகையில்பூக்கும். அதே காலகட்டத்தில் தான் எமது இறந்தவர்களை நினைவுறுத்தும் அந்தச் சோக நாட்களும் கார்த்திகையில் வருகின்றன. நாம் ஒவ்வொருவரும் அரசாங்கத்தின் கெடுபிடியின் மத்தியில் இறந்து போன எமது சொந்த பந்தங்களை மனதில் நினைத்து விளக்கேற்றி சமாதான முறையில் இன்று அவர்கள் நினைவாக வீட்டுக்கொரு மரம் நடுவோமாக! சமாதானம், சட்டம் ஆகியன கருதி தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டுள்ளது என்று இத்தால் வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் 
முதலமைச்சர் 
வடமாகாணசபை

http://www.puthinappalakai.com/view.php?20131126109514

Link to comment
Share on other sites

இந்த விவகாரத்தையும் தடைவுத்தரவையும் ஏன் பிரசாரப்படுத்த கூடாது?

 

இதுவும் உரிமையை மீறும் செயல். 

 

தமிழர்கள் வாழ்வில் இது ஒரு புனித மாதம், இதை தடுப்பதும் தடைபோடுவதும் வடிகட்டிய அடக்குமுறை.

 

தமிழர்கள் போரின் மூலம் விடுதலை செய்யப்பட்டதாக சிங்களம் பிரச்சாரம் செய்து பாத்திரத்தை நிருப்புகிறது.

 

இது விடுதலையா அல்லது அடிமைபடுத்தலா?

Link to comment
Share on other sites

தடைகளை உடைத்தெறிந்து மாவீரர் நாளில் மரம் நாட்டுகை news
மாவீரர் நினைவாக மரம் நாட்டும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு வட மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இன்றைய தினம் கார்த்திகை 27. மாவீரர் நாள் கடந்த காலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

எனினும் தற்போது எமது மண்ணின் விடியலுக்காக உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

எனினும் இராணுவம், பொலிஸார், புலனாய்வாளர்களது அச்சுறுத்தல்களையும் தாண்டி இன்றைய தினம் மாவீரர் நினைவாக மரம் நாட்டப்பட்டுள்ளது.

எனினும் இன்று காலை தந்தை செல்வா சதுக்கத்தில் மரம் நாட்டும் வைபவம் ஏற்பாடாகி இருந்த நிலையில் வடக்கில் நேற்றும் இன்றும் எந்தவிதமான நிகழ்வுகளும் நடாத்தப்பட கூடாது என ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனையடுத்து அந்த நிகழ்வு கைவிடப்பட்டது.

எனினும் எமது வீடுகளிலோ அல்லது எமது காணிகளிலோ மரம் நாட்டுவதற்கு எவராலும் தடை விதிக்க முடியாது. ஆனால் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும்  தாண்டி மாவீரர் நினைவாக மரம் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் , வடமாகாண சபை உறுப்பினர்களான கஜதீபன், ஆனல்ட் மற்றும் பலரும்  மரங்களை நாட்டி வைத்தனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=296582473427775820#sthash.6xU7k1WP.dpuf

 

 

DSCF5215.jpg

 

DSCF5223.jpg

 

DSCF5229.jpg

 

DSCF5239.jpg

 

DSCF5244.jpg

 

DSCF5248.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்து  போட்டு புலிகளைச் சாட்ட இப்ப புலிகளும் இல்லை. பிரபலம் காரணமாக விக்கியருக்குத் தீங்கு விளைவிக்கவும் சிங்களவனுக்குப் பயம். ஆனால் இதெல்லாம் வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் தமது பாதுகாப்பில் அசட்டையாக இருக்கக் காரணங்களாகி விடக் கூடாது. அனைவரும், குறிப்பாக ஐங்கரன் வாத்தி போன்ற மக்களோடு சாதாரணமாகப் பழகித் திரியும் உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.