• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

அஞ்சரன்

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Recommended Posts

எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் .

 

கேட்ட பகிடி .!

ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் .

 

அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் .

 

அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று கையை காட்ட நம்மளுக்கு யோசனை நண்பன் தப்ப போறான் எப்படி மாட்டி விடுறது மொழி வேற தெரியாது  எதோ தெரிஞ்ச மொழியில சொல்லுவம் என்று உடலை பல கோணத்தில் அசைத்து சொன்னார் பாருங்கோ ஆளு .

 

குப்பன் குப்பற சிலிப்பிக் .(பிரஞ்சு ...தமிழ் ..ஆங்கிலம்)

 

தமிழன் :icon_idea:

 

 

 

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர் தனது 33 ஆம் வயதில் மரண தறுவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்...

1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்.

2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்....

3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய வேண்டும்..

இப்படி 3 வேண்டுகோள்களையும் விடுத்துவிட்டு அதற்கான காரணங்களையும் கூறினான்.

1) எவ்வளவுதான் சிறந்த மருத்துவம் பார்த்தாலும் உயிர் போவதை எப்போதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

2) இம்மண்ணுலகில் வாழும் போது எவ்வளவு சம்பாதித்தாலும்அது இம்மண்ணுலகில் தான் இருக்கும் கூட வராது.

3) மாவீரன் அலெக்சாண்டர் எவ்வளவுதான் நாடுகளையும்,பொருளையும் சம்பாதித்தாலும் செத்த பின்பு வெறும் கையுடன்தான் போகின்றான் என மக்கள் அறியவேண்டும்....

படித்தது...

Share this post


Link to post
Share on other sites

எனது தேடலில் சிக்கிய அறிந்த சிலவற்றை இங்கு பகிர நினைக்கிறேன் நிர்வாகமும் உறவுகளும் வழிவிடனும் .

 

கேட்ட பகிடி .!

ஐரோப்பாவில் தஞ்சம் கேட்டு வந்த இரண்டு பேர் பிரான்சில் வீசா மறுக்கப்பட வேறு நாட்டுக்கு போக முடிவு எடுத்து இருவரும் இரவு ரயிலில் ஜெர்மன் நோக்கி கிளம்பி போயிட்டு இருந்தினமாம் .

 

அப்பொழுது வீசா பார்ப்பதுக்கு போலிஸ் ரயிலில் ஏறிச்சு இதை கண்ட இருவரும் ஒருவர் சொன்னார் நான் இருக்கைக்கு அடியில் படுத்து கிடக்கிறன் நீ இப்படி இருந்தபடி நித்திரை மாதிரி நடி போலிஸ் போனபிறகு எழும்பி இருப்பம் மச்சி என்று சொல்லி செயலில் இறங்கினர் .

 

அருகில் வந்த போலிஸ் இருக்கையில் இருந்தவரிடம் விஸா கேட்டான் அவர் தன்னிடம் இல்லை என்று கைகை விரித்து காட்டினார் உடனம் போலிஸ் எழும்பி வா என்று கையை காட்ட நம்மளுக்கு யோசனை நண்பன் தப்ப போறான் எப்படி மாட்டி விடுறது மொழி வேற தெரியாது  எதோ தெரிஞ்ச மொழியில சொல்லுவம் என்று உடலை பல கோணத்தில் அசைத்து சொன்னார் பாருங்கோ ஆளு .

 

குப்பன் குப்பற சிலிப்பிக் .(பிரஞ்சு ...தமிழ் ..ஆங்கிலம்)

 

தமிழன் :icon_idea:

 

நானும் இன்னும் இரண்டு புண்ணியவான்களும் டென்மார்க் போடர் பாயேக்கை உதேமாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது.......உள்ளதை சொல்ல வெளிக்கிட்டால் இண்டுமுழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம்........எண்டாலும் விடாமுயற்சியாய் லண்டனுக்கு வேலிபாய்ஞ்சு போய் இரண்டு பெற்றோல் செற்றுக்கு  மூனாவாய் இருக்கிற புண்ணியவானை என்ரை வாழ்க்கையிலை மறக்கேலாது...மற்றவன் கனடாவிலை.......தான் இஞ்சினியர் எண்டுறான்.....உள்ள பொய்பிரட்டுக்கள் இனி ஆருக்குத்தெரியும்..... :(

Share this post


Link to post
Share on other sites

நானும் இன்னும் இரண்டு புண்ணியவான்களும் டென்மார்க் போடர் பாயேக்கை உதேமாதிரி ஒரு சம்பவம் எனக்கும் நடந்தது.......உள்ளதை சொல்ல வெளிக்கிட்டால் இண்டுமுழுக்க சொல்லிக்கொண்டிருக்கலாம்........எண்டாலும் விடாமுயற்சியாய் லண்டனுக்கு வேலிபாய்ஞ்சு போய் இரண்டு பெற்றோல் செற்றுக்கு மூனாவாய் இருக்கிற புண்ணியவானை என்ரை வாழ்க்கையிலை மறக்கேலாது...மற்றவன் கனடாவிலை.......தான் இஞ்சினியர் எண்டுறான்.....உள்ள பொய்பிரட்டுக்கள் இனி ஆருக்குத்தெரியும்..... :(

அண்ணை கவலைப்படாதீங்க நீங்களும் இப்ப டாக்குத்தர் தானே

Share this post


Link to post
Share on other sites

அண்ணை கவலைப்படாதீங்க நீங்களும் இப்ப டாக்குத்தர் தானே

 

இந்த வைய்யாபுரியள் எங்கை இருந்தடாப்பா டக்கெண்டு வாறாங்கள்????

Share this post


Link to post
Share on other sites

இந்த வைய்யாபுரியள் எங்கை இருந்தடாப்பா டக்கெண்டு வாறாங்கள்????

 

இதே வேலையா அலைவாங்க போல அண்ணே :D

 

Share this post


Link to post
Share on other sites

உலகத்தில உள்ளவன் மூளை எல்லாம் விற்ப்பனைக்கு வந்தது ஒரு பொதுவான சந்தையில் பெரிய வல்லரசுகள் என்று சொல்லும் நாடுகள் எல்லாம் நல்ல மூளை வாங்க போட்டி போட்டு கொண்டு வந்து பார்த்தவர்களுக்கு ஒரு இனத்தின் மூளை மட்டும் அப்படியே நல்ல பள பளவென இருந்தது ஆச்சரியப்பட்டு போட்டி போட்டு வாங்கும் நிலைக்கு வந்து கடைசியா ஏலம் விடும் அளவுக்கு போயிட்டு அதை பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம் என்னடா இது இவர்களின் மூளைக்கு இவ்வளவு கிராக்கி என்று என்னதான் அப்படி விஷேசம் இருக்கு என்று அனைவரும் ஆவலுடன் காத்து இருந்தனர் அமெரிக்கன் சொன்னான் ஒரு வார்த்தையில் 'எதை பற்றியும் சிந்திக்காத மூளை ' அதுதான் இவ்வளவு அழகா மொழுகா இருக்கு மற்றவன் கண்டுபிடித்தா அதுக்கு அழகா தமிழில் பெயர் மட்டும் வைப்பம் நாங்களா எதுவும் செய்ய மாட்டம் அப்படி ஒருவன் முயற்சி செய்தா அவனை நக்கல் ..கிண்டல் ..கேலிபண்ணி இல்லாமல் ஆக்குவம் அதுதான் தமிழரின் மூளை அப்படியே இருக்கு வாடாமல் .

 

ஆதங்கப்பட்டு நண்பன் சொன்ன கதை ..!

Share this post


Link to post
Share on other sites

காதல் .!

 

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பா .

நேற்று ஒரு உரையாடல் இருவருக்கு இடையில் .
உங்க மகளின் போக்கு சரியில்லை
உங்க மகன் வேற சீக்கிரட் எல்லாம் பிடிக்கிறான் ...
உங்க வீட்டுக்காரர் குடிச்சுட்டு ரோட்டில் நிண்டாரு..
உங்க சின்ன பொடியன் எப்பபாரு பந்தோட திரியுது ..

இவ்வளவத்தையும் கேட்டுட்டு அந்தம்மா சொல்லிச்சு ஒரு பதில் ஐரோப்பில இது எல்லாம் 'நோமல் '

இந்த 'நோமலை 'கண்டுபிடிச்சவன் மட்டும் எங்க கையில கிடைச்சான் சங்குதான் .

Share this post


Link to post
Share on other sites

கலியாணத்துக்கு முன் :அண்ணன் .தம்பி ..மாமன் ..மச்சான் என்று உறவா இருக்குறாங்க .

கலியாணத்துக்கு பின் :மனுஷியின் அண்ணன் ..தம்பி ..மாமன் ..மச்சான் ..சகலன் என்று மாறி போயிடுறாங்க.

நம்ம உறவுகளையே புரிஞ்சிக்க முடில . :(
:(

Share this post


Link to post
Share on other sites

கலியாணத்துக்கு முன் :அண்ணன் .தம்பி ..மாமன் ..மச்சான் என்று உறவா இருக்குறாங்க .

கலியாணத்துக்கு பின் :மனுஷியின் அண்ணன் ..தம்பி ..மாமன் ..மச்சான் ..சகலன் என்று மாறி போயிடுறாங்க.

நம்ம உறவுகளையே புரிஞ்சிக்க முடில . :( :(

 

நீங்களுமா ?????????

 

Share this post


Link to post
Share on other sites

நீங்களுமா ?????????

 

 

ஏன் அக்கா ஏன் :D :D

Share this post


Link to post
Share on other sites

 படித்தது .

பெண் அப்பா நான் லவ் பண்ணறேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்...

அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?...

பெண் : FACE BOOK மூலமா நண்பர்கள்
ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும் டேட்டிங்
கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட் பண்ணறோம்...
நாங்க லவ் I ஷேர் பண்ணினது SKYPE ல,
அப்புறும் VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் ...
அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் ...

அப்பா : நிஜமாவா!!!! அப்பறம் என்ன TWITTER
மூலமா கல்யாணம் பண்ணிக்கோங்க...
ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல குழந்தைகளை வாங்கிக்கோங்க...
G MAIL மூலமா அவனுக்கு அனுப்பு...
எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு.... அவ்வுளவுதான்....

பெண் : !!!!!

 

Share this post


Link to post
Share on other sites

2025  இப்படித்தான் இருக்கும்!!  :lol:

Share this post


Link to post
Share on other sites

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு..!

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.
...
* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா..!

Share this post


Link to post
Share on other sites

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு..!

* 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா.

...

* நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா.

* லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது.

* மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

* மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது.

* மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது.

* வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது.

* விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது.

* உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா..!

 

அரபுவசந்தம் எண்டு சொல்லி இப்ப எல்லாத்தையும் சாம்பாராக்கிப்போட்டு இருக்கிறாங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அரபுவசந்தம் எண்டு சொல்லி இப்ப எல்லாத்தையும் சாம்பாராக்கிப்போட்டு இருக்கிறாங்கள்.

 

உண்மை அண்ணே சேர்த்து காட்டி கொடுத்தவை இப்ப அழுகினாம் சோற்றுக்கு இல்லாமல் உப்பு இல்லாட்டிதான் தெரியும் அதன் அருமை .

Share this post


Link to post
Share on other sites

மிருகங்கள் பாடல் படித்தது .

 

ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

 
குயில் : பாட்டும் நானே.. ... பாவமும்... ... நானே... .
 
கங்காரு : தாயில்லாமல் நானில்லை....தானே எவரும் பிறந்ததில்லை...
 
சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா.....
 
நெருப்பு கோழி : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .
 
கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கர கோ.... ...
 
மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...
 
முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா... ...
 
புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....
 
மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு... .....
 
யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா.. . குண்டு கத்திரிக்கா.... ..
 
காகம் : கா....கா ...கா. ...
 
காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...
 
நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..
 
நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்கமாட்ட... ...... .
 
மான் : புலி உருமுது உருமுது...... .....
 
எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு : "வரான் பாரு வேட்டைகாரன்.

Share this post


Link to post
Share on other sites

அஞ்சரன் குறள் 1

 

எவ் புக்கில் இருந்தாறக்கும் ஊய்வுண்டாம் ஊய்வில்லை
பேஸ்புக்கில் இருந்த மற்கு.!

Share this post


Link to post
Share on other sites

காதலிக்கும் போது :ஹாய் ,ஸுவிட் எப்டி சுகம்

கலியாணத்துக்கு பின் :ஹல்லோ எங்க வாய் பார்த்து கொண்டு நிக்கிறிங்க போன் அடிப்பது தெரியாமல் .

வரும்போது பிள்ளைக்கு பாலும் ..
நாளைக்கு சமையலுக்கு கறியும் ..
வெங்காயம் பார்த்து எடுங்க ..
மல்லி ,சீரகம் ,கடுகு ,மிளகு ..
மறக்காமல் லெமன் பைப் பிஸ்கட் ..
ஓகே வேளைக்கு வாங்கோ என்ன ...

 

இம்புட்டுதான் வாழ்க்கை .

Share this post


Link to post
Share on other sites

காதலிக்கும் போது :ஹாய் ,ஸுவிட் எப்டி சுகம்

கலியாணத்துக்கு பின் :ஹல்லோ எங்க வாய் பார்த்து கொண்டு நிக்கிறிங்க போன் அடிப்பது தெரியாமல் .

வரும்போது பிள்ளைக்கு பாலும் ..

நாளைக்கு சமையலுக்கு கறியும் ..

வெங்காயம் பார்த்து எடுங்க ..

மல்லி ,சீரகம் ,கடுகு ,மிளகு ..

மறக்காமல் லெமன் பைப் பிஸ்கட் ..

ஓகே வேளைக்கு வாங்கோ என்ன ...

 

இம்புட்டுதான் வாழ்க்கை .

அதிலயும் ஒன்று ரெண்டை மறந்திட்டுப்போய் அல்லது மாறி வாங்கிட்டுப்போய் முழிக்கிற முழி இருக்கே  சொல்லிவேலையில்லை  :o  :(

Share this post


Link to post
Share on other sites

படித்ததில் பிடித்து .!

 

ஹலோ சூரியன் எஃப்.எம்

 

ஒழுங்கா சொல்லுங்க.ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?

 

சூரியன் எஃப்.எம் தாங்க.

 

அப்படியா? நான் சூரியன் ஐ.பி.எஸ் ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?

 

கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.

 

ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?

 

சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.

 

அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?

 

வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?

 

நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.

 

முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?

 

மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.

 

ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.

 

மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.

 

சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.

 

புறாக் கூடு போல முப்பது ரூமு..

 

ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?

 

நான் தாங்க பாடினேன்.ஏன். நல்லாயில்லையா?

 

ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.

 

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.

 

இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.

 

என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.

 

அப்படியில்ல சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.

 

அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?

 

ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,

 

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

 

சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?

 

நான் ரெடி.

 

உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?

 

மந்திரா

 

மந்திரா பேடியா?

 

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க.பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது

 

சார். இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல யார புடிக்கும்?

 

கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?

 

சார். ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?

 

என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.

 

ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?

 

அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?

 

பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.

 

ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)

 

யாரு சார் அது பக்கத்துல?

 

ஆறு.

 

அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.

 

அதான் ஆறு.

 

ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?

 

ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.

 

அடுத்த ரவுண்ட் ஜி.கே

 

B.K தெரியும். அது என்ன G.K.?

 

சார். ஜெனரல் நாலெட்ஜ்.

 

அப்படி ஒரு சரக்கா?

 

டொக்.

 

ஏழுவின் நிலையை லேட்டாக புரிந்தக் கொண்ட அவர் லைனை கட் செய்கிறார்

Share this post


Link to post
Share on other sites

படித்தது .

 

எவ்வளோ பண்றோம்… இத பண்ண மாட்டோமா…’ என்று தமிழகத்தின் விடிவெள்ளி சொன்ன பொன்மொழி, வாழ்க்கை வாழ்வதற்கான ஒரு உன்னத தத்துவம். எப்படி? இந்த தன்னம்பிக்கை கொடுக்கும் கதையை படிங்க…

 

பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள்.. ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்த படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

 

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்..

 

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

 

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

 

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

 

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

 

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

 

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

 

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து…”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

 

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

 

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

 

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்… டிக் டிக்… டிக் டிக்…

 

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா… ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

 

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

 

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

தூத்துக்குடி பக்கம். நீங்க?…………”

Share this post


Link to post
Share on other sites

படித்தது .

 

ரொம்ப நல்லவனாக இருக்க. நினைக்காதே...

உன்னை நடிகன் என்று சொல்லிவிடுவார்கள்...

அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே...

அடிமையாக்கி விடுவார்கள்..

அதிகப் பொறுமையுடன் நடக்காதே..
...
பொறுக்கியாக மாறும் வரை விடமாட்டார்கள்...

எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என நினைக்காதே....

பொறாமையால் உன்னை காணாமல் ஆக்கி விடுவார்கள்...

எல்லோரையும் நம்பி விடாதே..
ஏமாற்றுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்...

கோபப்படாமலேயே இருந்து விடாதே...
கோமாளியாக்கி விடுவார்கள்.

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஜஸ்டின் மொட் என்பவரால் தாய்லாந்தின் தலாங் மாகாணத்தில் பிடிக்கப்பட்ட இந்தப் படம் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பல விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

1524964_10153697198555019_1322404815_n.j

Share this post


Link to post
Share on other sites