Sign in to follow this  
அஞ்சரன்

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Recommended Posts

மானாட மயில்லாட ..!

 

ஆயி மச்சா... எப்புடி இருக்கி....
நா நல்லா இருக்கி....
டான்ஸ் நல்லா இருக்கி..
பால் இருக்கி.. பலம் இருக்கி..."

ஹலோ... ஹலோ.... இது தமிழ்தாங்க... வேற எதோ மொழில எழுதிருக்கேன்னு நெனச்சி page ah close பண்ணிட்டு வேலைய பாக்க ஆரம்பிச்சிடாதீங்க... என்னடா இவன் இருக்கி.. வருக்கின்னு ஆரம்பிச்சிட்டானேன்னு பாக்குரீங்களா? தமிழ்தான் எங்கள் மூச்சி.. தமிழ்தான் எங்கள் பேச்சி...தமிழ்தான் எங்கள் வாட்ச்சின்னு சொல்லிக்கிட்டு இருக்க ஒரு டிவில வர்ர ஒரு நிகழ்ச்சியோட judge பேசுறதுதாங்க இதெல்லாம்...

அட இதுல மறைக்கிரதுக்கு என்ன இருக்கு.... கலைஞர் டிவில ஞாயித்துகிழமை ஆனா சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சி நைட்டு 12 மணி வரைக்கும் ஒரு program போடுவாயிங்களே... அதுல நம்ம நமீதாக்கா பேசுற தமிழ்தான் இதெல்லாம். எந்த Programoda பேருலயும் ஆங்கிலமே வரக்கூடாதுன்னு "பட வரிசை பத்து.. சீர் வரிசை பதினஞ்சி "ன்னு எல்லாம் பேரு வச்சிருக்காங்க.. பேரு மட்டும் வச்சா போதுமா... கொஞம் தமிழ் பேச தெரிஞ்ச ஜட்ஜுங்கள போட்டுருந்தா இன்னும் கொஞ்சம் matching ah இருந்துருக்கும்.


இந்த நிகழ்ச்சில judge ஆகனும்னா ரெண்டு முக்கியமான rules இருக்கு.. ஒன்னு அவங்களோட எடை 125 கிலோவ விட அதிகமா இருக்கனும். ஏன்னு கேக்குரீங்களா... செட்டுல எதாவது பள்ளம் மேடு இருந்தா ஜட்ஜ அங்க ஆட விட்டு சரி பண்ணிக்குவாங்க). இன்னொன்னு அவங்களுக்கு டமில் கொஞ்ஜம் கொஞ்ஜம் தான் தெரியனும்..ஏன்னா அப்பதான் program ஹைடெக்கா இருக்கும்

இந்த நிகழ்ச்சிய பொறுத்த வரைக்கும் ரொம்ப பாவப்பட்ட ஜீவன் யாருன்னா அது camera man தான்.. ஏன்னா அந்த மூணு ஜட்ஜயும் அவரால ஒண்ணா screen la காமிக்கவே முடியாது... குஷ்பூவ காமிச்சா நமீதா மறைஞ்சிடும்... நமீதாவ காமிச்சா குஷ்பூ மறைஞ்சிடும்.. ஏன்னா நம்ம வீட்டுல எல்லாம் இருக்குறது என்னவோ 21 இஞ்ச் டிவி தான். இதுங்கல்லாம் 70mm screen லயே பாதிதான் தெரியுங்க..

இதுகூட பரவால்ல... திடீர்னு என்னிக்காவது ஒரு நாள் "special performance" ன்னு ஒண்ணு போட்டு... "எலே மாஸ்டர் வர்றாருலே...எலே மாஸ்டர் வர்றாருலேம்பாயிங்க"... யாருடா அதுன்னு பாத்தா..... நெல்லு கொட்டி வைக்கிற குருது மாதிரி எதோ ஓன்னு வந்து ஆடிக்கிட்டிருக்கும்.. யார்டா இந்த syntax டேங்குன்னு பாத்தா.. டான்ஸ் மாஸ்டர் கலா....இதுக்குதான் இந்த build up ah...
அட தண்ணி வைங்கப்பா..


ஆனா இந்த program la ஜட்ஜ் எல்லாம் ரொம்ப.. strictu... strictu... strictu... (echo) ஒழுங்கா ஆடுனாதான் six marks. ஒழுங்கா ஆடல...அவங்களுக்கு ஆறு மார்க் தான்.

Excellent, Mind blowing, Fantastic, Super... இந்த வார்த்தைங்கள எல்லாம் அத கண்டுபுடிச்சவங்கல விட இவுங்கதான் அதிகமா use பண்றாயிங்க..ஓரு program ah அரை மணி நேரம் போடலாம்... ஒரு மணி நேரம் போடலாம்... மூணு மணி நேரம் இத போடுராயிங்கய்யா... show முடியிரதுக்குகொஞ்சம் முன்னாடி

" இந்த ஷோவுல இந்த வாரம் eliminate ஆக போறது யார்னு தெரியுமா?.. Keep Guessing.. அதுக்கு முன்னாடி ஒரு shortcommercial break" ன்னு சொல்லிட்டு ஒரு 20 நிமிஷம் விளம்பரத்துக்கு அப்பறம் வருவாயிங்க..

"என்ன எல்லாரும் ரொம்ப ஆவ்லா இருக்கீங்களா?"

கிழிச்சாங்க... சொல்லி தொலைங்கடா.. அப்பதான் வீட்டுல டிவிய off பண்ணுவாங்க... தூக்கம் வருது...

"அத நம்ம judges டயே கேப்போம்..சொல்லுங்க judges.. யார் யாரு இந்த வாரம் eliminate ஆக போராங்க?"

உடனே அவுங்க "எங்களுக்கே அத சொல்ல கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு.. but வேற வழி இல்ல." ன்னு இது மாதிரி எக்க சக்க build up அஹ குடுப்பாயிங்க.. Contestants எல்லாம் ரொம்ப டென்ஷனா இருப்பாங்க.... கடைசியா

" இந்த வாரம் எல்லாரும் சூப்பரா ஆடுனதுனால யாருமே eliminate ஆகல" ன்னு ஒரு அறுமையான தீர்ப்ப சொல்லி முடிச்சிடுவாயிங்க.. அட திரும்பவும் மொதல்ல இருந்தா...

"அப்பாடா நல்ல வேளை.. இந்த வாரமும் யாரும் வெளிய போகல... நா வேற பயந்துட்டேன்" ன்னு சொல்லிகிட்டு எங்கம்மா டிவிய off பண்ணிச்சி.

என்னது இந்த வாரமுமா? அப்ப எப்பவுமே இப்புடித்தானா.. அட வெக்கங்கெட்டவியிங்களா.. இந்த program ku எதுக்குடா மூணு judge? நீங்க அப்புடியே வந்து ஆடிட்டு போகலாமேடா... 36352_1222868111666_1820875_n.jpg

Share this post


Link to post
Share on other sites

பிசினஸ் ட்ரிக்ஸ்.-

அமெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இலங்கை ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்.

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).

...

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இலங்கை அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இலங்கை அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க.

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இலங்கை அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க.
இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ்.

Share this post


Link to post
Share on other sites

வாழ்வு ..!பூவதி முருகேஷ் .

 

வீட்டுக்கு அருகில் ஒரு கையேந்திபவன் வைத்துள்ள தம்பதியினர்.ஒரு வாடகை தள்ளுவண்டி,யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள் போல மாலை நேரத்தில் வட்டி வாங்க வருவார்.மாதக்கடைசியில் காவல்துறைக்கு மாமூல்.பெரிதாக முதலீடு இல்லை.பெரிய லாபமும் இல்லை,கடின உழைப்பு அன்றாடம் பிழைப்பு.ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் புரிதல் அவ்வளவு அழகு.
இவர் தோசை ஊற்றும்போது அவர் சப்பாத்தி தேய்த்துக் கொண்டு இருப்பார்,இவர் பூரி போடும்போது அவர் இட்லி எடுத்துக்கொண்டு இருப்பார்.கணவனுக்கு அத்தனை ஒத்துழைப்பு.இதுபோக கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் "நீங்க சாப்பிடுங்க" என்று சொல்லி அவருக்கு இலைபோட்டு சாப்பிட வைப்பார்,அதே போல அவரும் அந்த பெண்ணை சாப்பிட வைப்பார்.
இது தவிர தினமும் 100 குடிகாரர்களின் தவறான பார்வைகளை கடந்த அந்த பெண்ணின் கண்ணியம்,அவர்களுக்குள் பரஸ்பர நம்பிக்கை.மனைவியை சந்தேகிக்கும் கணவன்,கணவனை சந்தேகிக்கும் மனைவி,பன்னாட்டு நிறுவனத்தில் லட்சக்கணக்கில் சம்பாரித்தும் வாழ்கையில் நிம்மதி இல்லை என்று சொல்லி டைவர்ஸ் பெரும் தம்பதிகள் மத்தியில் உண்மையில் ஒரு சூப்பர் ஜோடி தான்.
இப்படி ஒரு பொண்ணு கிடைச்சா போதும் எங்கயாவது இட்லி கடை போட்டு பொழச்சுக்குவேன்...

Share this post


Link to post
Share on other sites

திருமூலரின் திருமந்திரப் பாடல்கள்:

1.”தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள்”

2.”தன்னை அறிய தனக்கொரு கேடில்லை

தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”(பாடல் 280)

3. “உள்ளம் பெரும் கோயில் ஊன் உடம்பு ஆலயம்

தெள்ளத் தெளிந்தோர்க்குச் சீவன் சிவலிங்கம்”

Share this post


Link to post
Share on other sites

விக்கல் எடுத்ததும் மகன் தான் நினைக்கிறான் என எண்ணி  மகிழ்கிறாள் முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்  :(

Edited by அஞ்சரன்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

நேத்து ராத்திரி.................

வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். காவல்துறையினரின் வாகன சோதனை...போதை(னை) சோதனை. ஒவ்வொரு ஆளாக நின்று சோதித்துக் கொண்டிருந்தார்கள். போதையில் இருந்த ஒரு ஆளுக்கும் ஒரு டிராபிக் இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடந்த உரை"ஆடல்"....!

யோவ் லைசன்ஸ் இருக்கா ?

ஒரே ஒரு லைசன்ஸ் சார் ...ஒரே ஒரு பொண்டாட்டி சார்.

டிரைவிங்க லைசன்சை கேட்டேன். சரி..குடிச்சுட்டு வண்டி ஓட்டரையே அறிவில்ல...ரசீது தர்றேன் கோர்ட்ல பைன் கட்டு.

சார்...ஒரே கஷ்டமான வேலை சார். வூட்டுக்குப் போன பொண்டாட்டி தொல்லை..கொஞ்சூண்டு சாப்பிட்டேன் சார்.

சரிய்யா...ஒரு டிரைவர் வச்சு வண்டி ஓட்டச் சொல்ல வேண்டியதுதானே ?

நடந்து போற எனக்கு எதுக்குய்யா டிரைவர் ??

யோவ்..கான்ஸ்டபிள்...என்னய்யா இந்த ஆளு இப்படி சொல்றான்.

அப்போதுதான் அவர்களிருவரையும் பார்த்த கான்ஸ்ட்பிள்..சார் அந்த ஆள் நடந்து வந்தவந்தான் சார். அவரை ஏன் சார் நிறுத்தி விசாரிச்சீங்க ?

இன்ஸ்பெக்டர் : யோவ் போய்யா...கடுப்பேத்திக்கிட்டு.

போதை ஆசாமி : அதான பார்த்தேன் எங்க குடிச்சிட்டு நடந்து போனாக்கூட புடிக்கறாங்களேன்னு பிளடி நான்சென்ஸ்....

ரோட்டில்..எட்டுப்போட்டுக்கொண்டே நகர்ந்தார் போதை ஆசாமி

 

வேலையின் மீது கண் வையுங்கள்,

கடிகாரத்தின் மீது கண் வைக்காதீர்கள்.

- சீனக் கோட்பாடு

Share this post


Link to post
Share on other sites

வைகோ வை பற்றி பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கருத்துக்கள்:

1. என்னோடு இருக்கும் 200 MPகளுக்கு சமமானவர் வைகோ - இந்திரா காந்தி

2.வைகோ வை போன்ற நேர்மையான தலைவர்களின் கைகளில் தான் எதிர்கால அரசியல் இருக்கிறது - வி பி சிங்

3.வைகோ வை போன்ற போராட்டட குணம் கொண்டவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது இல்லை -ராஜீவ் காந்தி

4.எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ -நரசிம்ம ராவ்

5.வைகோ வை போன்ற திறமைசாலிகள் மத்திய அமைச்சரவையை அலங்கரிக்க வேண்டும் -முரளி தியோரா

6.அரசியலை மக்கள் பணிக்கான தளமாக பார்ப்பவர் வைகோ -பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங்க் பாதல்

7.வைகோ வை என் நண்பனாக பெற்றது நான் செய்த பாக்கியம் -உமர் அபுல்லாஹ்

8.என் 70 ஆண்டு கால பொது வாழ்கையில் நான் சந்தித்த மிக சில லட்சியவாதிகளில் வைகோ முக்கியமானவர்- ஹர்கிசன் சிங்க் சுர்ஜித்

9.பதவி வெறி பிடித்த அரசியல் வாதிகளுள் வைகோ மாறுபட்ட கொள்கைவாதி -சோம்நாத் சட்டர்ஜி

10.இந்திய வில் கொள்கை வலி அரசியலை முநேடுக்கும் அரசியல் தலைவர்களில் வைகோ வும் ஒருவர் அவரை என் மகனாகவே கருதுகிறேன் -அடல் பிகாரி வாஜ்பாய்

11.வைகோ வை போன்ற தலைவரை பெற்றதற்காக தமிழ் நாடு பெருமை கொள்ள வேண்டும் ,என்னை ஒவ்வொரு முறை சந்தித்த போதும் மக்கள் பிரச்னை குறித்தே கோரிக்கை வைப்பார் ,i salute vaiko -பிரதமர் மன்மோகன் சிங்க்

12.விலை போகாத போராளி வைகோ -அத்வானி

13.அண்ணா வின் கொள்கை விளக்கை ஏற்ற வந்த அன்பு தம்பி வைகோ -கருணாநிதி

வைகோ வின் மீது எனக்கு அன்பும் நன் மதிப்பும் எப்போதும் உண்டு -முதல்வர் ஜெயலலிதா

14.பெரியாரின் உண்மையான வழிதோன்றல் வைகோ -தமிழருவி மணியன்

15.முழுமையான தமிழ் இலக்கியங்களை கற்ற ஒரே அரசியல் தலைவர் வைகோ தான் -நெல்லை கண்ணன்

16.என் இருதய சிகிசைக்கு எல்லோரும் கை விட்ட பின்பு தன சொந்த பணத்தை குடுத்து என் உயிரை காபற்றியவர் வைகோ ,என் இதயம் சாகும் வரை வைகோ வைகோ என்று தான் துடிக்கும் -நடிகர் எஸ் எஸ் சந்திரன்

17.வைகோ ஒருவரை தான் எதிர்கால நம்பிக்கையாக பார்கிறேன் -நடிகர் மணிவண்ணன்

18.வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின் வாங்கியதே இல்லை .அவர் உண்மையான ,நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து

இல்லை .ஒரு நல்ல தலைவர் .நமக்கான மாற்று அரசியலை முன்யேடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்

-கவிஞர் தாமரை

19.வைகோ அதிகாரத்துக்கு வரும் சமயம் தான் தமிழ் இனத்தின் இழி நிலை போக்க படும் -கொளத்தூர் மணி

20.வைகோ தமிழர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் -பழ .நெடுமாறன்

 

Share this post


Link to post
Share on other sites

வாழ்க்கை,,,, கால்பந்து விளையாட்டு போல!!!!
நீங்கள் ஒரு கோல் அடிப்பதற்கு 10-பேர் உதவவும், 11-பேர் எதிர்க்கவும்தான் செய்வார்கள்.

Share this post


Link to post
Share on other sites

"எழுதிவச்சுக்கோங்க இந்த பணம் திரும்பி வரவே வராது" - கணவனின் சகோதரனுக்கு தரும் போது..

"அதெல்லாம் ஒரு மாசத்துல திருப்பி தந்துடுவாங்க" - மனைவியின் சகோதரனுக்கு தரும் போது..

Share this post


Link to post
Share on other sites

நரம்புகள் அதிரும் பாட்டு ..

 

Share this post


Link to post
Share on other sites

21 - 26 வயது ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது....
.
1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.
.
2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது?" என்பது
போன்றே இருக்கும்.
.
3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம், அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள். உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.
.
4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்...
.
5) உடல் பருமன் ஏறாம , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது..
.
6) தினமும் shave செய்யாவிட்டால், வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்....
.
7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்...
.
8) உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்? மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?
.
9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும். ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.
.
10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ, அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.
.
11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.
.
12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும். இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.
.
13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள். காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .
.
14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.
.
15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.....
.
# எனக்கு இதுல நிறைய விஷயங்கள் பொருந்துது.....!!

Share this post


Link to post
Share on other sites

“தாய்மைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை”

---------------------------------------------------------------------------

மனித உடல் 45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணரும். ஆனாலும், பிரசவத்தின் போது ஒரு பெண் 57 யூனிட் வலியை உணருகிறாள். இது, ஒரே நேரத்தில், 20 எலும்புகள் உடையும் போது உணரப்படுவதற்கு சமம்.

“தாய்மைக்கு ஈடு இணை உலகில் ஏதுமில்லை”

 

Share this post


Link to post
Share on other sites

நள்ளிரவில் அந்த நகரத்திற்கு வந்த ஒருவன் தங்குவதற்கு அறை தேடி அலைந்தான். எங்கும் கிடைக்கவில்லை. ஒரு விடுதியிலிருந்து அவன் ஏமாற்றத்துடன் திரும்பும்போது அங்கிருந்த பொறுப்பாளர்.

"இரவு உங்களுக்காக இரு படுக்கைகள் கொண்ட அறை. அதில் ஒரு படுக்கையில் பெண்மணி ஒருத்தி தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளை எக்காரணம் கொண்டும் எழுப்ப மாட்டேன் என்றால் இன்னொரு படுக்கையில் நீங்கள் இன்றிரவு அமைதியாகத் தூங்கலாம்" என்றார்.

அவனும் அந்த அறையில் தங்க ஒப்புக் கொண்டான்.

20 நிமிடம் கழித்துக் கீழே ஒடி வந்தபடியே,

"சார் அந்தப் படுக்கையில் படுத்திருந்த பெண் இறந்து கிடக்கிறாள்" என்று அலறினான் அவன்.

"நான்தான் உங்களுக்கு முன்னமேயே சொன்னேனே, நீங்கள் அந்த படுக்கையில் இருக்கும் பெண்மணியை தொந்தரவு செய்யாத வரையில் நிம்மதியாக தூங்கலாம்" என்றார் பொறுப்பாளர்.

 

Share this post


Link to post
Share on other sites

நான்கே வருடம் தான்--மனித இனம் கூண்டோடு அழிந்து விடும்--ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

காரணம்--" தேனெடுத்து திரும்பி வரும் தேனீக்கள், தங்கள் கூட்டிற்குத் திரும்புவதில்லை.நடுவழியில் இறந்து விடுகின்றன."

வேலைக்காரத் தேனீக்கள்,பூக்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் முறையும் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் முறையும் அதிசயமானது.ஒரு வேலைக்காரத் தேனீ மட்டும் அலைந்து திரிந்து--பூக்களின் இருப்பிடத்தை கண்டறிந்து வரும்.அதன் பின் அதை மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கும் விதமாக வானில் வட்டமிட்டு நடனமாடும்.அந்த நடனத்தை வைத்தேப் பூக்கள் தேன் கூட்டிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என துல்லியமாக மற்ற தேனீக்கள் புரிந்து கொள்ளும் .அந்நடனத்தில் சூரியனை நோக்கிப் பறந்தால் சூரியன் இருக்கும் திசையிலும், சூரியனுக்கு எதிர் திசையில் பறந்தால் எதிர் திசையிலும் பூந்தோட்டங்கள் இருக்கின்றன என்று பொருள்.அவ்வாறு கடினப்பட்டு சேகரித்து வரும் தேனை சேமிக்கும் முறை பற்றியும், அதைக் கெடாமல் பாதுக்காக செய்யப்படும் வேலைகளைப் பற்றியும் ஒரு 1000 பக்கத்திற்கு தனி புத்தகமே எழுதலாம்.அவ்வளவு விஞ்ஞானம்,அவ்வளவு நுணுக்கம்.

Bees are the claasic example for Colonial and Communal system of living.கூட்டாக ஒரு சமுதாயமாக வாழும் முறைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, தேனீக்களின் வாழ்க்கை முறைதான்.ஒரு தேனீ கூட்டத்தில் ஒரே ஒரு ராணித் தேனீ மட்டுமே இருக்கும்.மற்றவை ஆண் தேனீக்கள், வேலைக்கார தேனீக்கள்.இதில் இனப்பெருக்கம் செய்வது மட்டுமே ராணித் தேனீயின் பணி.ஆண் தேனீயின் வேலை பற்றி சொல்ல வேண்டியதில்லை.இதில் வேலைக்காரத் தேனீக்கள் தான் தேன்கூட்டிற்கு முழுமுதல் பொறுப்பு.

இந்த தேனீக்கள் கூட்டத்தால் தான், அது தேனைச் சேகரிக்கும் பொழுது அதன் கால்களில் ஓட்டிச் செல்லும் மகரந்த சூல்களால் தான் தாவரங்கள்,மரங்கள்,காடுகளே உருவாகின்றன.

இவ்வளவு பயன் உள்ள தேனீக்கள் சமீபகாலமாக வெகு வேகமாக அழிந்து வருகின்றன.ஐரோப்பாவில் 42% தேனீக்கள் அழிந்து விட்டன.காரணம்-மலட்டுத் தன்மை கொண்ட பூக்கள்.அவற்றை நல்ல பூக்கள் என்று நம்பி தேனெடுக்க வரும் தேனீக்கள் அமர்கின்றன.அப்பூக்களில் உள்ள Neonicotinoids- நீயோ நிகோட்டினாய்ட்ஸ் என்னும் ஒரு வேதிப் பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கி,அதனால் இயற்கையிலேயே மிகப் புத்திசாலியானதும்,நல்ல ஞாபகதன்மைக் கொண்டதுமான தேனீக்கள் தங்கள் கூட்டை மறந்து--குழம்பி இறந்து விடுகின்றன.இவற்றை நம்பி கூட்டில் காத்திருக்கும் ராணித் தேனீ--இறுதியில் தானும் இறக்கிறது.அதோடு அந்த சமுதாயமே அழிகிறது.

இந்தப் பேரழிவிற்கு முழுமுதல் காரணம்: மரபணு மாற்றப் பட்ட விதைகள்.அவையே மலட்டுத் தன்மை கொண்ட பூக்களை உருவாக்குகின்றன.

வான் பொய்த்ததால், வாழ்வு பொய்த்த விவசாயியின் வாழ்வில்,குறுகிய காலத்தில் நல்ல மகசூல் என்ற பெயரில், மரபணு மாற்றப்பட்ட B.T கத்திரிக்காய்களும்,

வாழைப்பழங்களும்,மாம்பழங்களும்- Monsanto மான்சான்ட்டோ எனப்படும் மரபணு மாற்றப் பற்ற விதைகளும் இந்திய விவசாய சந்தைகளுக்குள் ஊடுருவத் துவங்கியுள்ளன.இவற்றை ஆரம்ப நிலையிலேயே, வேரோடும்--வேரடி மண்ணோடும் விரட்டியடிக்க வேண்டியது நம் பொறுப்பு.ஏனெனில் நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,

மனிதனின் துணையின்றி தேனீக்கள் எத்தனை ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் உயிர் வாழ்ந்து விடும்.ஆனால் தேனீக்கள் இல்லையேல் மனித இனம் நான்கே ஆண்டுகளில் துடைத்தெறியப்பட்டு விடும்.

பி.கு: " Bee Movie " என்றொரு Animated English Movie உள்ளது.அதை பாருங்கள்.ஒரு தேன்கூட்டின், தேனீயின் வாழ்வை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டும் படம்.

Share this post


Link to post
Share on other sites

விமான { பயணம் } ரகசியங்கள்!

விமானப் பயணத்தின்போது நிறைய திகிலான விஷயங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன

விமானிகளிடமும் விமானப் பணியாளர்களிடமும் வேலைபார்த்த, வேலைபார்க்கிற சிலரிடமும் மனம்விட்டுப் பேசியபோது கிடைத்த ரகசியங்கள் இவை.

முகமூடி ரகசியம்

விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும்.

விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள்.

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம்.

அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்குத் தான்.

ஐயையோ! அவ்வளவுதானா என்று அலறவும் வேண்டாம்.

அதற்குள் பைலட், விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்துக்குக் கொண்டுவந்துவிடுவார்.

எனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள்,

குழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம்.

குழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும்.

முதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக் கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.

தண்ணீர் ரகசியம்

விமானத்தில் பாட்டிலில் தரப்படும் தண்ணீரை மட்டும் குடியுங்கள்.

ஏனென்றால், குடிக்கவும், விமானக் கழிவறையில் பயன்படுத்தவும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தண்ணீரை நிரப்புகிறார்கள்.

இரு பயன்பாட்டுகளுக்குமான தண்ணீர் தொட்டி ஓரடி இடைவெளியில்தான் இருக்கின்றன.

அதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தான் தண்ணீர்தொட்டியைச் சுத்தப்படுத்துகிறார்கள்.

அந்த நீரில் ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புண்டு.

அந்த ஒட்டுண்ணிகள் பல நாடுகளைச் சுற்றிவருவதால் எந்த பூச்சிக்கொல்லிக்கும் சாகாமல் இருக்க வரம் பெற்றவை!

குடிப்பது மட்டுமல்ல, கையைக் கழுவுவது, வாயைக் கொப்பளிப்பதுகூட ஆபத்துதான்!

டிப்ஸ் ரகசியம்

விமானப் பணிப்பெண்களுக்கு யாரும் டிப்ஸ் தருவதில்லை.

ஆனால், முதலில் பானம் தரும்போது கொஞ்சமாக டிப்ஸ் தந்தால், அடுத்தடுத்த முறை நல்ல கவனிப்பு இருக்கும் என்று அனுபவஸ்தர் கூறுகிறார்.

எச்சரிக்கை - எல்லோருமே டிப்ஸை ஏற்பார்கள் என்று சொல்லிவிட முடியாது.

பைலட்டுகள் தூங்குவார்களா?

பைலட்டுகளில் பாதிப் பேர் நீண்ட பயணத்தின் போது இடையில் தூங்குவார்கள்!

கண்விழித்துப் பார்க்கும்போது உடன் வேலைசெய்யும் பைலட்டும் தூங்குவதைப் பார்த்துக் கோபப்படுவார்கள்.

வேலை நேரத்தில் துணை விமானி தூங்கினால் விமானிக்குக் கோபம் வராதா என்ன?

பெரிய நிறுவனம் என்றால் ஒஸ்தியா?

மிகப் பெரிய நிறுவனத்தின் விமானத்தில் செல்லும்போது பைலட்டும் நல்ல அனுபவம் பெற்றவராக இருப்பார் என்று நினைத்துவிட வேண்டாம்.

அவர்கள் உள் ஒப்பந்தத்தில் உள்ளூரைச் சேர்ந்த கற்றுக்குட்டி பைலட்டைக் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதும் நடக்கக்கூடியதே!

அதிக நேரம் ஓட்டினால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதால், அந்தப் பைலட்டுகள் மெதுவாகவே ஓட்டுவதும் உண்டு.

செல்பேசி என்ன வெடிகுண்டா?

செல்போன் உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களை விமானம் பறக்கும்போது பயன்படுத்தக் கூடாது என்பதில் பாதுகாப்புக் காரணங்கள் ஏதும் இல்லை.

இவற்றைக்கொண்டு விமானத்துக்குச் சேதம் விளைவித்துவிட முடியாது.

செல்போன் பேச அனுமதித்தால் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள், “ஹலோ, நான் புறப் பட்டுட்டம்மா, ரவைக்கு இட்லி, சட்டினி போதும்மா” என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள்.

அது பைலட்டுக்கு சிக்னல்களைப் பெறுவதில் இடைஞ்சலாக இருக்கும் என்பதால்தான் செல்லை மூடிவைக்கச் சொல்கிறார்கள்.

அப்படியும் சிலர் தடையை மீறிப் பேசுவதால், பைலட்டுகள் மேலே உயரம் பிடிக்க முடியாமலோ, தரை இறங்க முடியாமலோ அவதிப்பட்டிருக்கிறார்கள்.

ஹெட் போன் கதையும் அதுதான்!

விமானத்தில் ஏறியதும் தரப்படும் ஹெட்போன்கள் புதிதல்ல. ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதை ஒவ்வொரு பயணத்தின்போதும் துடைத்து புதிய கவரில் போட்டு புதிதுபோலத் தருவார்கள்.

சுத்தம் சுகாதாரம் எப்படி?

தலையணை, போர்வைகளை எல்லா நேரமும் துவைத்து, காயவைத்து எடுத்துத்தருவார்கள் என்று நினைக்க வேண்டாம்.

ஒரு பயணம் முடிந்ததும் அப்படியே பதவிசாக மடித்து எடுத்துவைப்பார்கள்.

கேட்கும்போது புன்சிரிப்போடு தருவார்கள்.

நாமும் சுகந்தமான வாசனையில் மனதைப் பறிகொடுத்து வாங்கிக்கொள்வோம்.

வாசனை பணிப்பெண்ணிடமிருந்து வந்தது என்று நமக்குத் தெரியாது!

மிகப் பெரிய நகரில் காலையில் புறப்படும் முதல் விமானத்தில் மட்டுமே உண்மையில் துவைத்து சுத்தப்படுத்திய போர்வைகள், தலையணைகள் ஏற்றப்படும்.

அதேபோல, உங்கள் சீட்டின் முன்னால் இருக்கும் ட்ரே பரிசுத்தமானது என்று நினைத்து, அதில் வேர்க்கடலை, பொரித்த வற்றல் - வடாமெல்லாம் வைத்துச் சாப்பிடாதீர்கள்.

உங்களுக்கு முன்னால் பயணம் செய்த தம்பதியின் குழந்தை அதில் ‘சூச்சா’ போய் காய்ந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கழிப்பறையில் ஆஷ்-டிரே ஏன்?

விமானங்களில் புகை பிடிக்கக் கூடாது என்ற விதி பல ஆண்டுகளாகக் கண்டிப்புடன் அமல் படுத்தப்படுகிறது.

அப்படியும் சில புகை அடிமைகள் கழிப்பறைக்குப் போய் ரகசியமாக பற்றவைப்பது உண்டு.

குப்பை போடும் கூடையில் போட்டால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று வேறு எங்கு போடுவது என்று யோசிப்பார்கள். “பிடித்து விட்டாயா, இதிலே போட்டுத்தொலை” என்ற ரீதியில்தான் ஆஷ்-டிரேயை வைக்கிறார்கள்.

பைலட் எப்படித் தரை இறங்குகிறார்?

மழை பெய்து தண்ணீர் நிறைந்த ஓடுபாதையில் டமால் என்ற ஓசையுடன் விமானத்தின் சக்கரங்கள் மோதிக் குலுங்கிய பிறகு விமானம் ஓடும்.

பைலட்டுக்கு அனுபவம் போதாது என்பதால் இப்படி நேர்வதில்லை, வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார்கள்.

தண்ணீரில் வேகமாக அமிழ்ந்தோ அல்லது கிழித்துக்கொண்டோ சென்றால்தான் தரைக்கும் விமானச் சக்கரத்துக்கும் இடையே உராய்வு ஏற்பட்டு, சக்கரம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இல்லாவிட்டால், வழுக்கிக்கொண்டே போய் விபத்தை ஏற்படுத்திவிடும்.

விமானம் தரையிறங்குவதே ‘கட்டுப்பாடான நொறுங்கல்தான்’ என்பார்கள்.

விமானம் கடத்தப்பட்டதை அறிவது எப்படி?

கடத்தல்காரர்களின் பிடியில் விமானம் இருக் கும்போது தரையிறக்கும் பைலட், அதன் சிறகுகளில் இருக்கும் மடிப்புப் பட்டைகளை மேல்நோக்கி இருக்கும்படி வைத்திருப்பார்.

அவர் சொல்லாமலே இது மற்றவர்களுக்குப் புரிந்துவிடும்.

வெடிகுண்டு அபாயம்

சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து டோக்கியோவுக்கு விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.

பசிபிக் பெருங்கடலின் மீது பறந்தபோது விமானிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

“விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது, கடைசிப் பயணத்துக்கு வாழ்த்துகள்” என்று ஒரு சதிகாரன் எச்சரித்தான்.

விமானத்தின் முதல் வகுப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

விமானம் ஒவ்வொருமுறை குலுங்கியபோதும் பைலட்டுக்கு அவருடைய இதயமே தொண்டைக்கு வருவதைப்போன்ற பதற்றம் ஏற்பட்டது.

கடைசியில் அது வெறும் புரளி என்று தெரியவந்தது.

இந்த வெடிகுண்டு எச்சரிக்கையைப் பயணிகளுக்கு அவர் தெரிவிக்கவில்லை.

அது அவசியமும் இல்லை!

Share this post


Link to post
Share on other sites

10379724_873912595955825_453375854518019

 

 

 

 

இப்போது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய ஒரு செய்தியைக் கவனியுங்கள். நாங்கள், நமது கோவில்களின் கோபுரங்களை எப்படி அழைப்போம் தெரியுமா? 'விமானம்' என்றுதான் அழைக்கிறோம். அதேநேரம், எமது பண்டைய காவியங்களில் பறந்து வரும் ஒவ்வொரு உபகரணமும் விமானம் என்றுதான் அழைக்கப்பட்டிருக்கிறது. இது உங்களை ஆச்சரியப் படுத்தவில்லையா? கட்டடமும், பறக்கும் சாதனமும் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை உலகில் வேறு எந்த மொழிகளிலுமோ, இனங்களிலுமோ கிடையாது. இது எப்படிச் சாத்தியமாயிற்று.

நமது வேதங்களிலும் புராணங்களிலும், பழைய நூல்களிலும் உள்ள குறிப்புகளை வைத்து, பரத்வாஜ முனிவரால் எழுதப்பட்டது என்று கருதப்படும் நூல் ஒன்று, 'சுப்பராயா சாஸ்திரி' (Subbaraya Sastry) என்பவரால் தொகுக்கப்பட்டது. அந்த நூலின் பெயர் 'வைமானிக சாஸ்திரம்' (Vymaanika Shaastra - விமான சாத்திரம்). சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட அந்த நூல், 1918 ம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டது. பின்னர் அதை ஆங்கிலத்தில் ஜோஸ்யர் (Josyer) என்பவர் மொழிபெயர்த்தார்.

அதன்பின் 1918 இல் சுப்பராயா சாஸ்திரிகளின் நூலின்படி வடிவம் கொடுக்கப்பட்ட விமான வரைவுகள். இது மட்டுமல்ல, இந்த விமானங்களை எப்படி எப்படி இயக்க வேண்டும், இயக்குபவர்கள் எப்படி உடை அணிய வேண்டும், எத்தனை பேர் அமர்ந்து இந்த விமானங்களில் செல்ல வெண்டும் என்பது எல்லாமே அட்சர சுத்தமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில வகை விமானங்கள் போருக்கும் பயன்படுத்தப்படுமாம். அத்துடன் இந்த விமானங்களைப் பாதரசத்தைத் திரவ நிலைக்கு உள்ளாக்கி, அதனை அதி வேகமாகச் சுற்ற வைப்பதனால் பெறப்படும் ஒருவித சக்தியினால் இயக்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

மேலைத் தேச அறிஞர்கள் இந்த வைமானிக சாஸ்திரத்தைப் புகழோ புகழென்று புகழ்கின்றனர். புராதன அறிவியல் பற்றிப் பேசும் ஒவ்வொரு இடங்களிலும் இதை முன்வைத்து சிலாகிக்கின்றனர். எமக்குத் தெரியாதது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இதில் ஒருபடி மேலே போய், இரண்டாம் உலகப் போரின் சமயங்களில், ஹிட்லரின் விஞ்ஞானிகள் மேற்படி வைமானிக சாஸ்திரத்தை மையமாக வைத்து பறக்கும் தட்டு ஒன்றைத் தயாரித்துப் பறக்கவிட்ட செய்தியும் உண்டு. பறக்கும் தட்டை ஜெர்மன் தயாரித்தது வதந்தி அல்ல. மிக நிச்சயமான உண்மை.

 

 

Share this post


Link to post
Share on other sites

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்,அந்த ஐந்து இது :

1,ஆடம்பரமாய் வாழும்தாய்,

2,பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3,ஒழுக்கமற்ற மனைவி,

4,ஏமாற்றமும் துரோகமும்செய்யும் உடன்பிறந்தோர்

5,சொல்பேச்சு கேளா பிள்ளை

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

மாவீரன் அலெக்சாண்டர் உலகத்தையே ஒரு குடை நிழலில் ஆள வேண்டும் என்ற வெறியுடனும் பாரசீகத்தையும் இந்தியாவையும் வென்று விட வேண்டும் என்ற ஹெர்குலிஸ் ன் நிறைவேறாத கனவையும் சுமந்து கொண்டு சுமார் ஒரு லட்சம் வீரர்களுக்கு மேலான தன் படையுடன் கிரேக்கத்தை விட்டு கிளம்புகிறார் ...

தான் நினைத்ததில் சுமார் 75 சதவிகித நாடுகளை வென்று இந்தியாவுக்குள் நுழைகிறார் ...

இந்தியாவில் அவருக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது ...

இதுவரை சமவெளிப் பகுதிகளில் சண்டையிட்டவர் முதன்முறையாக காடுகளில் சண்டையிட வேண்டி இருந்தது...

குதிரைப்படைகளை மட்டுமே சந்தித்து பழக்கப்பட்ட அலெக்சாண்டரின் படை முதல்முறையாக யானைப்படையை எதிர்நோக்க வேண்டி இருந்தது ....

பருவநிலை மாற்றத்தால் அப்போது இந்தியாவில் நல்ல மழைக்காலம் தொடர் போர்களால் களைத்துப் போய் இருந்த படை வீரர்கள் நிறைய பேர் நோய்வாய்ப்பட்டார்கள் போரிட மறுத்தவர்களை கட்டாயப்படுத்தி போர் புரிய வைத்தார்...

இப்படி பல்வேறு காரணங்களால் இந்திய மன்னரின் படைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள் அலெக்சாண்டரின் வீரர்கள்

போரில் படுகாயம் அடைந்த அலெக்சாண்டர் கிட்டதட்ட தோல்வி என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு முழு இந்தியாவையும் வெல்ல முடியாமல் தனது கனவு நிறைவேறாத ஏக்கத்தோடு கிரேக்கம் திரும்பினார் ...

இது வரலாறு ...

# ஒருவன் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் நேரம், காலம், சுற்றம், சூழல், இயற்கை இவைகள் ஒத்துழைக்காவிடில் வெற்றி என்பது பகல் கனவாகவே போய்விடும்

இது வரலாறு நமக்குத் தரும் பாடம்...

 

Share this post


Link to post
Share on other sites

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??

அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல் .

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக்

கவியரங்கத்தில்

கலந்து கொண்டு கவிதையை வாசிக்க

ஆரம்பித்தார்.

அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.

அவர்

கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு

வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.

வாசித்து முடிந்ததும்

கரவொலி அடங்குவதற்கு வெகு நேரம்

பிடித்தது.

கைதட்டல்கள் முடிந்ததும்,

கண்ணதாசன் சொன்னார்,

''இன்று நான் வாசித்த கவிதை நான்

எழுதியது அல்ல. உங்கள் கல்லூரி மாணவர்

ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக்

கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.

அது மிக நன்றாக இருந்தது.

எனவே நான்

எழுதிய கவிதையை அவரை வாசிக்க

சொல்லிவிட்டு அவர் எழுதிய

கவிதையை நான் வாசித்தேன்.

என் கவிதையை அவர்

வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும்

இல்லை.

அவர் எழுதிய கவிதையை நான்

வாசித்தபோது பலத்த வரவேற்பு. ஆக

சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம்

பார்க்கிறதே ஒழிய, சொல்லும் பொருளைப்

பற்றிக் கவலைப் படுவதில்லை.

என்பதுதான்

உண்மை என்று புரிகிறது.” என்றார்.

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு வயதுக்கு மேல் அப்பாவிடம்

அடிக்கடி பேசாவிட்டாலும்,

அப்பாவை பற்றி அதிகம்

தெரிந்து வைத்திருக்கும் மகன்...

அண்ணனின் இரகசியங்கள் எல்லாம்

தெரிந்திருந்தும் அப்பாவிடம் சொல்லிவிடாத

தங்கை...

தங்கை இன்னொரு வீடு செல்லும் வரை,

அவளைக் காக்கும் மதுரை வீரனாய் அண்ணன்...

தன் வரவுச்

செலவு சோகங்களை சமையலறைக்குள்ளே

ஒளித்துவிட்டு, எப்போதும் சிரித்த

முகத்துடனே வரும் அம்மா...

உழைத்த களைப்போடு வீடு வந்தபோதும்,

பிள்ளைகளின் முகத்தைக் கண்டதும்

புத்துணர்ச்சி அடையும் அப்பா...

சேலை முந்தானையில் முடிஞ்ச

சில்லரைகளாலே பேரனின் பொருளாதார

தேவைகளை தீர்த்துவைக்கும் பாட்டி...

நாங்கலாம் அந்த

காலத்துலன்னு ஆரம்பிச்சி கதை சொல்லியே பேத்தியை தூங்க

வைக்கும் தாத்தா...

இன்றைக்கும் இப்படியான நடுத்தரக் குடும்பங்கள்

தமிழகத்தில் இருக்கின்றன.

சொர்க்கத்தை மண்ணில்

காட்டுவது பாசம் நிறைந்தக் குடும்பம்...!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு முறை ஐந்து வயது பெண் குழந்தை தன் அப்பாவின்
மூக்கு கண்ணாடியை தவறுதலாக கீழே போட்டு உடைத்து விட்டது.
அவள் அப்பா அந்த குழந்தையை கடுமையாக திட்டி விட்டார்....
அன்று இரவு முழுவதும் அந்த பெண் தன் அப்பாவுக்காக ஒரு பரிசு தயார் செய்து, அடுத்த நாள் தன் தந்தையிடம்
கொடுத்தாள்.அதை பிரித்து பார்த்த அவர் அதில் ஒன்றும்
இல்லாததை பார்த்து மீண்டும் கோபமுற்றார்.
யாருக்காவது பரிசு கொடுக்கணும்னா அதில் எதாவது பொருள் வைத்து கொடுக்கனும்மா நீ வெறும் பெட்டியை கொடுப்பது தவறு என்று கண்டித்தார்.
அந்த குழந்தை சிரித்து கொண்டே ஆர்வத்துடன் சொன்னது நான் இரவு முழுவதும் 1000 முத்தங்களை அந்த பெட்டிக்குள்ள கொடுத்து, மூடி தான் உங்களிடம் தந்தேன் என்றாள்.
அதைக் கேட்ட அவரது தந்தை அந்த குழந்தையை இறுக்கி அணைத்து மன்னிச்சிக்கோமா உன் அன்பு புரியாமல்
உன்னை திட்டிட்டேன் என்றார்.
அவர் தன் தலையனை அடியில் அந்த பெட்டியை வைத்து கொண்டார்.எப்போது எல்லாம் அவர் மனம் வருத்தமடைகிறதோ அப்போது எல்லாம் தன் மகளின் அன்பு முத்தத்தை அந்த பெட்டியை திறந்து எடுத்து கொண்டார்.
பெண் குழந்தைகள் இருக்கும் வீடு தேவதைகள் வாழும் வீடு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சில அதிசய தகவல்கள்.........

* தொடர்ந்து 42 கப்பு காப்பி குடிச்சா நீங்க செத்துப் போவிங்க!

* நீங்க இந்த வரிய படிச்சு முடிப்பதற்குள் உங்க உடலின் 25,000,000 உயிர் செல்கள் இறந்திருக்கும்!!

* உங்களுடைய கம்பியூட்டர் கீபோர்டில் கழிவறை சீட்டைக் காட்டிலும் 60 மடங்கு அதிக கிருமிகள் இருக்கலாம்!

* மனிதனின் DNA வாழைப்பழத்தின் DNAவுடன் 50% ஒத்துப்போகிறதாம்!

* 70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க)

* ஒரு அன்னாசிப்பழ செடி ஒரு வருஷத்துக்கு ஒரே ஒரு அன்னாசிப் பழத்தைத் தான் காய்க்குமாம்!
* பெங்குவின் பறவைகள் ஒரே இடத்தில் 7 லட்சம் வரை எண்ணிக்கையில் கூடும்.

* கடலில் 30,000 மீன் வகைகள் உள்ளதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் பூச்சி இனத்திற்கு அடுத்து மீன் இனங்களே அதிகம் என்று ஆராய்ச்சி வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

* விமானத்தில் பறந்தவாறே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்சன்.

* நைலான் துணியால் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் நாடு ஜெர்மனி.

* முதல் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சம். இரண்டாவது உலகப் போரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி!

* பிளாஸ்டிக்கில் கரன்சி நோட்டுகளை முதலில் வெளியிட்ட நாடு ஆஸ்திரேலியா.

* சூரியகாந்தி வகையைச் சேர்ந்த காசினி என்ற செடியின் வேரைக் காயவைத்து வறுத்துப் பொடி செய்வதுதான் சிக்கரி பவுடர். காப்பிப் பொடியுடன் மணத்துக்காகச் சேர்க்கிறார்கள்.

* உலகிலேயே அதிக இலைகள் கொண்டது சைப்ரஸ் மரம். இதில் 4 முதல் 5 கோடி இலைகள் இருக்குமாம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

* 70% பெண்கள் தங்களுக்கு தெரிந்த விஷயத்தை பற்றியே கேள்வி கேட்கிறார்களாம்! (தெரியாதுன்னு நினைச்சி பொய் சொல்லி மாட்டிக்காதிங்க)

 

 

இதென்றால் உண்மை தான். அதனால் தான் நாங்க பெண்கள் கேள்வி கேட்டால் விழுந்தடிச்சு பதில் சொல்லுறதில்ல. மெளனமா இருந்து.. அலசி ஆராய்ஞ்சிட்டு.. மாத்தித்தான் சொல்லுறது..! :lol::D

நாலு தரம் மாத்திச் சொல்லுங்க.. 5ம் தரம் கேள்வியே உங்களை நோக்கி வராது. பெண்களை மிக இலகுவாகக் கையாள முடியும்.. அவங்க உளவியலை விளங்கிக் கொண்டால்..! அவங்க மனசு ஆளமும் இல்ல அலங்காரமும் இல்ல. டம்மிப் பீசுங்க. :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this