• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அஞ்சரன்

நான் கேட்டது ..பார்த்தது ..படித்தது :அஞ்சரன்

Recommended Posts

விமானம் பறந்து கொண்டிருந்தது

மதுபான சேவை தொடர்ந்தது

ஐந்தாறு peg ஆன பிறகு ....

ஆங்கிலேயன் - நான் தூங்கபோகிறேன்

அமெரிக்கன் - நான் லேப்டாப்பில் வேலை செய்ய போகிறேன்

ஜெர்மானியன் - நான் படம் பார்க்க போகிறேன்

சீனன் - நான் பாட்டு கேட்க போகிறேன்

தமிழன் .- ங்கொய்யால , நவ்வுர்ரா நான் ஓட்றன் பிளேனை .

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு.

வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது.

தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது.

இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும்,

தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும்.

அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது.

கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும்.

காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.

இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பதனால் அனேகம்பேர் அதனை விரும்புவதில்லை.

2) வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).

அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.

நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம்.

இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும்.

(உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்).

இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

 

Share this post


Link to post
Share on other sites

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்
புலவர்கள்
1. அச்சியத்தை மகள் நாகையார்
2. ஔவையார்
3. அள்ளுரர் நன்முல்லை
4. ஆதிமந்தி - குறுந் 3
5. இளவெயினி - புறம் 157
6. உப்பை ஃ உறுவை
7. ஒக்கூர் மாசாத்தியார்
8. கரீனா கண்கணையார்
9. கவியரசி
10. கழார் கீரன் எயிற்றியார்
11. கள்ளில் ஆத்திரையனார்
12. காக்கை பாடினியார் நச்செள்ளையார்
13. காமக்கணிப் பசலையார்
14. காரைக்காலம்மையார்
15. காவற்பெண்டு
16. காவற்பெண்டு
17. கிழார் கீரனெயிற்றியார்
18. குட புலவியனார்
19. குமிழிநாழல் நாப்பசலையார்
20. குமுழி ஞாழல் நப்பசையார்
21. குறமகள் ஃ இளவெயினி
22. குறமகள் ஃ குறிஎயினி
23. குற மகள் இளவெயினியார்
24. கூகைக்கோழியார்
25. தமிழறியும் பெருமாள்
26. தாயங்கண்ணி - புறம் 250
27. நக்கண்ணையார்
28. நல்லிசைப் புலமை மெல்லியார்
29. நல்வெள்ளியார்
30. நெட்டிமையார்
31. நெடும்பல்லியத்தை
32. பசலையார்
33. பாரிமகளிர்
34. பூங்கண்ணுத்திரையார்
35. பூங்கண் உத்திரையார்
36. பூதபாண்டியன் தேவியார்
37. பெண்மணிப் பூதியார்
38. பெருங்கோப்பெண்டு
39. பேய்மகள் இளவெயினி
40. பேயனார்
41. பேரெயென் முறுவலார்
42. பொத்தியார்
43. பொன்மணியார்
44. பொன்முடியார்
45. போந்தலைப் பசலையார்
46. மதுவோலைக் கடையத்தார்
47. மாற்பித்தியார்
48. மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
49. மாறோக்கத்து நாப்பசலையார்
50. முள்ளியூர் பூதியார்
51. முன்னியூப் பூதியார்
52. வரதுங்க ராமன் தேவியார்
53. வருமுலையாருத்தி
54. வில்லிபுத்தூர்க் கோதையார்
55. வெண்ணிக் குயத்தியார்
56. வெள்ளி வீதியார்
57. வெறிபாடிய காமக்கண்ணியர்

Share this post


Link to post
Share on other sites

தமிழின் 16 வகைச் சிறப்பு

தொன்மை, முன்மை, மேன்மை, எண்மை, ஒண்மை, வண்மை, வாய்மை,

தூய்மை, செம்மை, மும்மை, தனிமை, இனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை

- பாவாணார்

Share this post


Link to post
Share on other sites

Face bookஐ தமிழில் மாற்றினால்...

facebook - மூஞ்சி புத்தகம்

home - வூடு

status - வாய்க்கு வந்தத உளறு...

post - தபால் டப்பா

comment - காரித்துப்பு

reply - திருப்பித் துப்பு

angry bird - கவட்ட விளாட்டு

people you may know - தெரிஞ்ச மொகரயா பாரு...

warning - மரியாதை கெட்டுபோகும் நாயி நாயி

search - மாதா கோயிலு (யோவ் அது church யா)

you are blocked for 30 days - 30 நாளைக்கு மூடிட்டு இரு

friend request- மச்சி என்ன சேர்த்துக்கோ

chat- கடலை

like- புடிச்சா அமுக்கி போடு

settings- எதயாவது மாத்து

fake id- ஊரை ஏமாத்து

poke- மூஞ்சில குத்து

notifications- எவனோ என்னமோ அனுப்பிகீறான்

criminal case- குற்றம் நடந்தது என்ன

farm ville - கம்பியூட்டர் விவசாயம்

developer - அடிமை

follow - பின்னாலே போ

inbox - உள்ளே போ

update info- மேல சொல்லு மேல சொல்லு

groups- குட்டி செவுரு

wall- பெரிய செவுரு

recent activity- கொஞ்சம் மின்னாடி இன்னா பண்ணினு இருந்த

logout - வெளிய போடா அயோக்கிய ராஸ்கலு..

 

Share this post


Link to post
Share on other sites

* 05நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,

அது தாய்

* 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,

அது சகோதரி

* 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,

அது தோழி

* 03 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானப்படுத்த முடிய வில்லையெனில் அது காதலி

* உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி 

 

Share this post


Link to post
Share on other sites

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்.,

ஒருவனுக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..

நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்

அவன் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னான் ..

வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால்

தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

வெற்றியோ தோல்வியோ என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

அந்த வெற்றியே எனக்கு போதுமென்றான் ..!!

 

Share this post


Link to post
Share on other sites

அருணாக்கயிறுங்கிறது கெட்ட சக்தி அண்டாம இருக்குறதுக்காக பழங்குடி மக்கள் கட்ட ஆரம்பிச்ச பழக்கம். 

அதுல நாயி, சாவி, தாயத்து,காசு, அரச எலை வடிவத்துல உலோகத்துல செஞ்சு போட்டுக்குவாங்க. இதுக்கு “ஐம்படைத் தாலி”னு பேரு. 

ஏன்னா, இடுப்புங்குறது உயிர்தலம் இல்லையா அந்த எடத்துல உலோகம் இருந்தா கெட்ட சக்திய உலோகம் ஈர்த்துக்கும்னு சொல்வாங்க.

கெட்ட சக்திங்குறது நெசமாப் பாத்தா, கெட்ட சக்தி இல்ல, மிதமிஞ்சிய நல்ல சக்தி. அதத் தாங்குற அளவுக்கு அந்தப் பகுதிக்கு தெடம் இருந்தா பரவால்ல, கொஞ்சம் கம்மியா இருந்தாலும் அந்தப் பாகங்களுக்கு வார ரத்தநாளம் பாதிச்சுரும் இல்லனா வெடிச்சுரும். முனியடிச்சு செத்தாங்கனு சொல்வாங்கல்ல அது இந்த வகையச் சேந்ததுதேன். முனி, பேயினு சும்மா நம்மள பயமுறுத்துனது.

10527322_1457814311144612_22035739942252

 

Share this post


Link to post
Share on other sites

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய்

இருந்தாலும், "Good touch", "bad touch"

எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம்,

எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும்

போது கவனம் தேவை, நெடு நேரம்

குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள்

மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில்

தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும்

தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க

வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள்,

மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து,

மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத

இடங்களை தொடுவதும், சில இடங்களில்

நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார்

கொடுத்தால் வாங்க வேண்டும்

என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின்

தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்

இருந்தால், ஒருபோதும் ஒருவருடன்

மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்,

வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள்

விருப்பங்களை குழந்தையின் மேல்

திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது,

வன்முறை, காதல், கொலை, களவுப்

போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ,

நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில்

மூழ்கி இருக்காமல்,

குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,

அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும்

வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள்,

ஒரு தோழமையுடன் அவர்கள்

சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள்,

தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன்

அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ,

பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள்.

பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள்

பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின்

ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின்

வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்!

பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்

போது தெரிந்தால் சொல்லுங்கள்,

தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன்

என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான

பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல்

அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு"

"தொணதொண என்று கேள்வி கேட்காதே"

என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின்

ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால்,

உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ,

சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின்

குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின்

எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள்,

ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள்

அல்ல!

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு ஆணின் உடம்பிலிருந்து உயிரை பிரித்தெடுத்தால் அவன் "பிணம்"ஆவான்!

ஒரு பெண்ணின் உடம்பிலிருந்து உயிரை பிரித்தெடுத்தாள் அவள் "தாய்"ஆவாள்!!!

Share this post


Link to post
Share on other sites

 

அருணாக்கயிறுங்கிறது கெட்ட சக்தி அண்டாம இருக்குறதுக்காக பழங்குடி மக்கள் கட்ட ஆரம்பிச்ச பழக்கம். 

அதுல நாயி, சாவி, தாயத்து,காசு, அரச எலை வடிவத்துல உலோகத்துல செஞ்சு போட்டுக்குவாங்க. இதுக்கு “ஐம்படைத் தாலி”னு பேரு. 

ஏன்னா, இடுப்புங்குறது உயிர்தலம் இல்லையா அந்த எடத்துல உலோகம் இருந்தா கெட்ட சக்திய உலோகம் ஈர்த்துக்கும்னு சொல்வாங்க.

கெட்ட சக்திங்குறது நெசமாப் பாத்தா, கெட்ட சக்தி இல்ல, மிதமிஞ்சிய நல்ல சக்தி. அதத் தாங்குற அளவுக்கு அந்தப் பகுதிக்கு தெடம் இருந்தா பரவால்ல, கொஞ்சம் கம்மியா இருந்தாலும் அந்தப் பாகங்களுக்கு வார ரத்தநாளம் பாதிச்சுரும் இல்லனா வெடிச்சுரும். முனியடிச்சு செத்தாங்கனு சொல்வாங்கல்ல அது இந்த வகையச் சேந்ததுதேன். முனி, பேயினு சும்மா நம்மள பயமுறுத்துனது.

10527322_1457814311144612_22035739942252

 

 

முந்தி ஊரிலுள்ள உடையார்மார் கட்டியிருந்த, இடுப்பு சலங்கையும்.....

இந்த அறுணாக்கொடி  கொடி வகையை சேர்ந்தது போலை கிடக்கு. :D

Share this post


Link to post
Share on other sites

விமான நிலையத்துக்கு பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்...

ஸார்...! பாராசூட்டுகளை வாங்கிட்டு போங்க விமானம் திடீரென விபத்தில சிக்கும் போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்....!

ஓரு பயணி நின்றார்.

பாராசூட் என்ன விலை?

இரண்டாயிரம் ரூபாய் ஸார்.

சரி ... வாங்கிக்கிறேன்...

விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது அது ஓரு வேளை விரியலைன்னா..?

``பணம் வாபஸ் ஸார்"

ஹி ஹி ஹி புத்திசாலி வியாபாரி.

 

Share this post


Link to post
Share on other sites

வருடத்தில் 365 நாள் வேலை..... 
ஒவ்வொரு நாளும் 24 மணிநேர வேலை....
அதிகமான நேரம் நிற்கவேண்டும்... இருக்கமுடியாது..
சாப்பிடுவதிற்கு கூட நேரம் கிடைக்காது....
மிக முக்கியமாக எந்த சம்பளமும் கிடையாது..... 

இப்படி ஒரு வேலை கிடைத்தால் எத்தனை பேர் வேலை செய்வீர்கள்?? 

தினமும் ஒவ்வோர் வீட்டிலும் இப்படி ஒருத்தி வேலை செய்துகொண்டே இருக்கிறாள் என்றால் நம்புவீர்களா .....

அம்மா  :( 

(ஓர் ஆங்கில விளம்பரத்தின் தழுவல்)

Share this post


Link to post
Share on other sites

வருடத்தில் 365 நாள் வேலை..... 

ஒவ்வொரு நாளும் 24 மணிநேர வேலை....

அதிகமான நேரம் நிற்கவேண்டும்... இருக்கமுடியாது..

சாப்பிடுவதிற்கு கூட நேரம் கிடைக்காது....

மிக முக்கியமாக எந்த சம்பளமும் கிடையாது..... 

இப்படி ஒரு வேலை கிடைத்தால் எத்தனை பேர் வேலை செய்வீர்கள்?? 

தினமும் ஒவ்வோர் வீட்டிலும் இப்படி ஒருத்தி வேலை செய்துகொண்டே இருக்கிறாள் என்றால் நம்புவீர்களா .....

அம்மா  :( 

(ஓர் ஆங்கில விளம்பரத்தின் தழுவல்)

 

உண்மை

மனைவி  என்றும் வரலாம்....

Share this post


Link to post
Share on other sites

அந்த இளைஞன் நன்றாகக் கார்ட்டூன் வரைவான். தான் வரைந்த படங்களை எடுத்துக் கொண்டு போய் பல இடங்களில் காட்டி வேலை கேட்டான். யாரும் வேலை கொடுக்கவில்லை. “இந்தக கார்ட்டூனையெல்லாம் மக்கள் ரசிக்க மாட்டார்கள்” என்று அவனை ஒதுக்கினார்கள். ஆனால் அந்த இளைஞன் தன் முயற்சியைக் கைவிட வில்லை.

இந்தச் சூழ்நிலையில் ஓர் ஆலயத்தில் சிறு பிள்ளைகளுக்கான கார்ட்டூன் படங்களை வரையும் வாய்ப்புக் கிடைத்தது. அவனை ஒரு பழைய குப்பைகூளம் நிறைந்த அறையில் அமர வைத்து படம் வரையச் சொன்னார்கள்.

அந்த அறையில் எலிகளும், சுண்டெலிகளும் மேலேயும் கீழேயும் ஓடிக் கொண்டிருந்தன. அந்த இளைஞன் மனம் தளரவில்லை. “வேலை வேண்டாம்” என்று ஓடவில்லை. அங்கேயே உட்கார்ந்து படம் வரைந்தான். அங்கு ஓடிய ஒரு எலியையே கார்ட்டுனாக்கினான். அந்தக் கார்ட்டுன்தான் இன்று உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மிக்கி மவுஸ்.

அதை உருவாக்கிய வால்ட் டிஸ்னிதான் அந்தக் கார்ட்டூனிஸ்ட்.

# வெற்றி என்பது முயற்சியின் பாதி நம்பிக்கையின் மீதி

 

Share this post


Link to post
Share on other sites

அக்காக்கள் இல்லாத வீடுகள் 

அழகாய் இருப்பதில்லை-

அக்கா தரும் தேநீரும் 

அம்மா தரும் தேநீரும் 

ஒன்று போலவே இருக்கும் என்று 

என் சிநேகிதன் அடிக்கடி சொல்வான் 

உண்மைதான் 

அம்மாக்கள் இல்லாத வீடுகளைப் போல 

அக்காக்கள் இல்லாத வீடுகளும் 

அழகாய் இருப்பதில்லை

அக்காக்கள் எல்லோரும்

அன்பானவர்களாகவே இருக்கிறார்கள்

அக்காக்கள் இருக்கும் தம்பிகள் 

ரகசியங்களை வேறு யாருடனும் 

பகிர்ந்து கொள்வதில்லை

தம்பிகளின் முதல் பெண் தோழிகளாக 

அக்காக்களே இருக்கிறார்கள்

சிறு வயதில் 

அம்மாவின் முந்தானையில்

முகம் துடைத்துக் கொள்ளும்

தம்பிகள் பதின் பருவங்களில் 

முகம் துடைக்க 

அக்காவின் துப்பட்டாக்களையே

தேடுகின்றார்கள்

அக்காக்களின் மடிகளிலேயே

தலை வைத்து உறங்குகிறார்கள்

அதைத்தான் அக்காக்களும்

விரும்புகின்றார்கள்

அம்மாக்களுக்கு அடுத்ததாய்

தம்பிகளுக்கு கிடைக்கும்

அன்பான உலகம் அக்காக்கள்தான் 

அக்காக்களை அம்மாவை போல்

நினைத்துக் கொள்ளும் தம்பிகளுக்கு ஏனோ..?

அம்மாக்களை அக்காக்களாய்

நினைக்க முடிவதில்லை

தம்பிகளுடனான செல்ல சண்டைகளை 

அக்காக்கள் விரும்புகின்றார்கள்

தம்பிகள் கோபப்படும் போது

தலை தடவி புன்னகைக்கிறார்கள்

அக்காக்களை தவிர தம்பிகள் 

வேறு யாருடனும் 

உரிமையோடு சண்டை இடுவதில்லை

கணவனைத் தவிர

அக்கக்கள் அன்போடு முத்தமிடுவது 

தம்பிகளை மட்டும்தான்

தம்பிகள் தன் காதலி பற்றி

முதலில் சொல்வது அக்காக்களிடம்தான்

அப்பாக்கள் தம்பிகளை திட்டும் போதல்லாம்

அக்காக்களே பரிந்து பேசுகின்றார்கள்

சாக்லேட்டோ 

கொய்யாக் கனிகளோ 

பாதி கடித்த பின்

தம்பிளுக்கு என்று பத்திரப்படுத்துவது

அக்காக்கள் மட்டும்தான்

தம்பிகளுக்கு கொடுப்பதற்கென்றே

அக்காக்கள் ரகசியமாக

பணம் சேமிக்கிறார்கள்

அம்மாக்கு வாங்கி தரும் சேலைகளை போலதான்

அக்காக்களுக்கு தம்பிகள் வாங்கித்தரும் 

மலிவான சுடிதார்களும்

உயர்வானவைதான்

திரு மணம் முடித்த பின்

அக்காக்கள் கணவனுக்காக

வாழ பழகிக் கொள்கிறார்கள்

அதன் பின் தம்பிகள் மீதான

அன்பை வெளிப்படையாக 

காட்ட முடிவதில்லை அவர்களால்

 

Share this post


Link to post
Share on other sites

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-

* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்

"பாளையகரர்கள் நுழை வாயில்"

என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில்

தமிழ்மொழியில் பாராளுமன்ற

என்பது பொறிக்கபட்டிருகும்.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்

தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்

பெயர் இடம் பெற்று இருக்கும்..

* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்

மொழியிலும் மாளிகையின் பெயர்

பொறிக்கபட்டிருக்கும்.

* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்

இந்தியாவிற்கு சுதந்திரம்

கொடுக்கலாமா என்ற

விவாதத்தின் பொது ஆங்கிலேய

தளபதி இந்தியாவின்

மிகபெரியசொத்தான

திருக்குறளை நாம்

எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல்

அது வெறும்

மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லைஎன்று கூறினாராம்..

* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதி

கமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்

திருக்குறள்..

 

Share this post


Link to post
Share on other sites

ஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...

பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..

நீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...

அதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்

எனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.

காலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.

அதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.

என்ன சொல்வதென்று கணவன் முழிக்க "என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

* ஆங்கில முதல் எழுத்து A, எகிப்திய மொழியிலிருந்து பெறப்பட்டது.

* வைட்டமின் B பெருமளவில் பாலில் உண்டு.

* ஆங்கிலத்தில் C என்ற எழுத்து தன் ஒலியில் அமையாது.
* அமெரிக்காவில் D என்ற பெயரில் ஆறு உள்ளது.
* ‘காட்ஸ்பை’ என்ற ஆங்கில நாவலில் E என்ற எழுத்தே கிடையாது.
* ஃபாரன்ஹீட் வெப்பநிலை F என்று குறிக்கப்படுகிறது.
* சூரியன் G வகுப்பு நட்சத்திர வகையைச் சார்ந்தது.
* ஹைட்ரஜன் வாயுவைக் குறிக்கும் H என்ற குறியைஉருவாக்கியவர் லவாய்சியர்.
* ‘I’ யின் தலையில் வைக்கப்படும் புள்ளி, 14ம் நூற்றாண்டில் பிறந்தது.
* ஆங்கில மொழியில் கடைசியாக சேர்க்கப்பட்டது J.
* வைட்டமின் K குறைந்தால் ரத்தம் உறையாது.
* ரோமன் எண்ணிக்கையில் L ஐம்பதைக் குறிக்கும்.
* M வகுப்பு நட்சத்திரங்கள் சிவப்பாய் ஒளிரும்.
* ரத்தப் பிரிவுகளில் N வகை வெகு அபூர்வமானது.
* ‘O’ என்ற எழுத்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தும்.
* P என்பது வேதியியலில் பாஸ்பரஸைக் குறிக்கும்.
* எந்தவொரு ஆங்கில வார்த்தையிலும் ‘ Q ’வைப் பின்பற்றி U வரும்.
* ருவாண்டா நாட்டுக் கொடியில் R காணப்படும்.
* ஆப்ரிக்கர்களிடையே S ரத்தப்பிரிவு காணப்படுகிறது.
* புகழ்பெற்ற T டைப் கார்கள் ஃபோர்டின் 9வது மாடலாகும்.
* ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை U என்ற குறிச் சொல்லால் குறிப்பிடுவார்கள்.
* V என குறிக்கப்படும் வெனேடியம், கார் ஸ்டியரிங்குகள் செய்யப் பயன்படுகிறது.
* முதன்முதலில் டைப்ரைட்டர் டைப் செய்த எழுத்து W .
* பெருக்கலுக்கு X என்ற குறியை ஆதிரட் என்ற கிறிஸ்தவ மதகுரு பயன்படுத்தினார்.
* Y குரோமோசோம்களால் பெண்களுக்கு வழுக்கை விழுவதில்லை.
* Z என்பது மண்டலம் என்பதைக் குறிக்கும்.

Share this post


Link to post
Share on other sites

நடிகர் திலகம் சிவாஜி வீட்டுக்கு கோவில் திருவிழா வசூலுக்கு ஊர் பெரியவர்கள் சென்றனர். அவரும் பத்தாயிரம் ருபாய் கொடுத்துள்ளார். பிறகு பெரியவர்கள் மகன் பிரபுவை பார்க்க வேண்டும் என கூற, மாடியில் இருக்கிறார் மேலே போங்க என்று சிவாஜி கூறினார்.

பிரபுவை பார்த்து விட்டு வந்தவர்கள் ஐயா நீங்கள் பத்தாயிரம் கொடுத்திங்க.

ஆனால் பிரபு ஒரு லட்சம் கொடுத்தார் என்றார்கள்.

அதற்கு சிவாஜி என்ன சொன்னார் தெரியுமா?

ஐயா அவங்க அப்பா பணக்காரன் அவர் தருவார் ஆனால் எங்க அப்பா ஏழை என்னால் இவ்வளவு தான் முடியும் என்றார்.

 

Share this post


Link to post
Share on other sites

திகில்!

உலகிலேயே மிக சிறிய திகில் கதை இது, 

எழுதியவர் "Fredric Brown" கதை பெயர் "Knock"

"ஓருவனை தவிர உலகில் எல்லோரும் இறந்துவிட்டனர், 

அவன் மட்டும் தனியாக அறையில் அமர்ந்திருந்தான் 

அப்போது........ 

யாரோ கதவை தட்டினார்கள். :டக் டக் டக்" 

 

Share this post


Link to post
Share on other sites

இப்படி இருந்தும் முக நூலைப் பிடித்து தொலைக்கிறதே ! முக நூலில் இல் இருக்கும் பல வகை மனிதர்களின் சிலவகைக் குணங்கள் எப்படி எண்டு தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடிய பனம்பாரனார், சிகண்டியார், காக்கைப்பாடினியார் ஆகியோர் சங்க காலத்திலேயே எழுதி வைத்து இருக்கிறார்களாம்.

1) இரகசியப் பார்வையாளர் The "Lurker"- ஒரு பதிவோ,கொமாண்டோ போடுவதில்லை , ஆனால் மற்றவர்களின் எல்லா பதிவும் வாசித்து மண்டையில் ஏற்றி எப்பவாவது நேரடியா சந்தித்தால் வைச்சு அறுப்பவர்கள்

2) கழுதைப்புலி "Hyena" - ஒண்ணுமே சொந்தமா ஜோசிக்கமாட்டார்கள் ,வெறும் LOL, LMAOs ஐ நேரம் கெட்ட நேரத்தில் தள்ளி விடுபவர்கள்.

3)மிஸ்டர் அண்ட் மிஸ்ஸிஸ் பரபரப்பு "Mr/Ms Popular" -4367 நண்பர்கள் உள்ளவர்கள், எதுக்கு அவளவு நண்பர்கள் எண்டு கடவுளுக்கு தான் தெரியும்.

4) இம்சை அரசர் The "Gamer" -கண்டி காட்ஸ், பார்ம் வலி, Words With Friends, Mafia Wars, Bakes virtual cakes,இதெல்லாம் கையைக் காலை ஆட்டாமல் இருந்த இடத்தில விளையாடுபவர்கள், பார்ம் வலிக்கு கறவை மாடு இருந்தா அனுப்பு எண்டு விளையாட அழைப்பவர்கள்.

5)தீர்க்கதரிசிகள் The "Prophet" - எல்லாப் பதிவுகளும் கடவுளோடு தொடங்கி ஏதாவது ஒரு சமயப் புத்தகத்தின் நம்பிக்கையோடு முடிப்பவர்கள் .

6) அறிவுத் திருடர் The "Thief" -அங்க இங்க சுட்டு ,எங்க இருந்து சுட்டது எண்டு கண்டு பிடிக்க முடியாதவாறு உரு மறைப்பில் உலா வருவோர். இந்தப் பதிவையும் திருடிப் போட்டாலும் போடலாம்

7)அழு மூஞ்சிகள் The "Cynic" - எல்லாத்திலையும் எதிர் மறையா பதிவு போடுபவர்கள்,அவர்கள் போடும் கொமென்ட்டும் அப்படியே..

8)அரைச்ச மாவு The Grinding mils- வருசக்கணக்கா அவர்கள் எழுதிய ஒரே ஒரு புத்தகத்தையே போட்டு போட்டு ஓட்டிக்கொண்டு இருப்பவர்கள்

9)அதிரடி அருளம்பலம் The Hot & Spicy-இன்றைக்கு என்ன சூடாக நியூஸ் ஓடுதோ அதை இன்னும் சூடாக்கிப் பத்தி வைச்சு பதிவு போட்டு ஆளை ஆள் கொழுவி விட்டு போட்டு எஸ்கேப் ஆகுபவர்கள்

10) கொக்கத்தடி TheTaggers - மாசத்தில் ஒரு கவிதையோ,கதையோ,பதிவோ எழுதி எல்லாரையும் அதில டாக் பண்ணிக் கொழுவி இழுத்து விட்டுப்போட்டு அவர்கள் பாட்டில் போய்க்கொண்டே இருப்பவர்கள்

11)விசுவாசிகள் The Loyals- கடமை உணர்ச்சியோடு காலை, மாலை வணக்கம் சொல்லி சில நேரம் அதை டாக் பண்ணி, சேர் பண்ணி முடிந்தவரை கடமை உணர்சியைக் காட்டுபவர்கள்..

12) வலை வீசிகள் The Hunters,- எல்லாப் பெண்களுக்கும் இன,மத ,சாதி வயது பார்க்காமல் நட்பாக, தேசிய ஒருமைப்பாட்டில் நட்பாக்க பிரெண்ட் ரிக்குவேஸ்ட் அனுப்பி அனுப்பியே வேஸ்ட் ஆகிப் போறவர்கள்...

''உள்ளது சிதைப்போர்'' உளர் எனப்படார் என்று பொழிப்புரை எழுதி " முக நூல் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு'' எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்ற பலர் இருந்தும், " ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை " போல் தொடர்ச்சியாக போடும் போஸ்டிங்குகளால் பல நல்ல விசயங்களும் , நல்ல நண்பர்களும், வியப்பான தகவல்களும் சில நேரம் வெள்ளி திசை வேலை செய்தால் இதய ராணிகளும் கிடைக்கலாம் ! பல விதத்தில் நேரத்தை விழுங்கும் ஒரு விதத்தில் சம்பளம் இல்லாத உத்தியோகம் ! ஆனால் வேலை செய்யும் இடத்தை விட இதில நேரம் வேகமா போகுது !சிலபேர் வேலைசெய்யிற இடத்திலேயே சம்பளம் இல்லாத இதையும் சேர்த்து செய்கிறார்கள்! இப்படி இருந்தும் முக நூலைப் பிடித்து தொலைக்கிறதே.

என்ன சீவியமடா இது.

 

Share this post


Link to post
Share on other sites

டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...

" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "

" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "

" வெள்ளைக்கு..! "

" புல்லு..! "

" அப்ப கருப்புக்கு..?! "

" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "

" இதை எங்கே கட்டி போடறீங்க..? "

" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "

" வெள்ளையை..! "

" வெளில இருக்குற ரூம்ல..! "

" அப்ப கருப்பு ஆட்டை..?! "

" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "

" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "

" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "

" கருப்பு ஆட்டை..! "

" தண்ணில தான்...! "

" அப்ப வெள்ளையை..?! "

" அதையும் தண்ணிலதான்..! "

பேட்டி எடுக்கறவர் இப்ப கடுப்பாகிடறார்..

" லூசாய்யா நீ... ரெண்டுக்கும் ஒரே மாதிரி தானே

செய்யுறே... அப்புறம் எதுக்கு திரும்ப திரும்ப

வெள்ளையா..? கருப்பானு.? கேட்டுட்டே இருக்கே..?!! "

" ஏன்னா வெள்ளை ஆடு என்னுது..!! "

" அப்ப கருப்பு ஆடு..?!! "

" அதுவும் என்னுதுதான்..!! "

" டேய்ய்ய்ய்ய்ய்ய்....!!! " ߘ

10665345_10203731022549746_5976855148628

 

Share this post


Link to post
Share on other sites

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சரியங்கள் பின்வருமாறு.

-----------------

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?

அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? 

தமிழன் யார் என தெரிகிறதா..?

திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே

கூறிவிட்டது

 

Share this post


Link to post
Share on other sites

*ஒரு மியூசியத்தில் ‘கோலியாத் பீட்டில்’ என்ற வண்டுக்கு வாழைப்பழம் அளிக்கப்பட்டது. தன்னுடைய கொம்புகளாலேயே தோலை உரித்துவிட்டு, பழத்தைத் தின்று முடித்தது அவ்வண்டு!

*காண்டர் என்ற சிறப்புப் பறவையானது, ஒருமுறை தென் அமெரிக்காவில் 20 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தோடு மோதியிருக்கிறது!

*பாராசூட் வீரர்கள் பூமியில் குதிக்கும் அதிகபட்ச உயரம் 30.5 கிலோமீட்டர்!

*தகர (டின்) டப்பாக்கள் முழுக்க முழுக்க தகரத்தினால் மட்டுமே செய்யப்பட்டவை அல்ல!

*ஒரு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தபோது, அதன் வயிற்றில் 267 கூழாங்கற்கள் காணப்பட்டன!

*உலகில் ஒவ்வொரு நாளும் விமானப் பயணங்களின்போது 70 ஆயிரம் பேக்கேஜ்கள் தொலைகின்றன.

*30 அடி நீளமுள்ள சுறாவின் வயிற்றில், ஒருமுறை 50 கிலோ எடையுடைய கடல் சிங்கம் காணப்பட்டது!

*ஃபிளாட்ஃபிஷ் என்ற மீன்வகை சுற்றுப்புறத்துக்கேற்ப தன் உடல் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும்!

*நல்ல பார்வைத்திறன் உடையவர்களால் ஒரு மைல் தூரத்தில் (1.6 கி.மீ.) உள்ளவரையும் முக அடையாளம் காண முடியும்!

*1948ல்தான் கடைசி வைட்டமின் கண்டறியப்பட்டது. அது பி12!

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this