கிருபன்

நெரிசலில் ஓர் மோகம்

Recommended Posts

நெரிசலில் ஓர் மோகம்

மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து மணி தாண்டிவிட்டதால் எல்லா ரயில், பஸ் நிலையங்களும் எள்ளுப் போட்டால்கூட கீழே விழமுடியாதபடி வேலைமுடிந்து வரும் மக்கள் வெள்ளத்தால் நிறைந்துவிடும் என்பது நினைவுக்குவர அசதியுடன் எரிச்சலும் சேர்ந்துகொண்டது.

படிக்கும் காலங்களில் இப்படியான நெரிசல் மிக்க காலைகளிலும் மாலைகளிலும் இலண்டனின் புறநகர் பகுதியில் இருந்து மத்திய இலண்டன் பகுதிக்கு பல வருடங்கள் பயணித்து அனுபவம் இருந்ததால் நான் மத்திய இலண்டன் பகுதிக்கு நெரிசல் நேரங்களில் வருவதை ஒருபோதும் விரும்புவதில்லை. இதற்காகவே படித்து முடித்து தொழில்வாய்ப்புக்களைத் தேடும்போது கூட கவனமாக மத்திய இலண்டன் பகுதி வேலைகளைப் புறக்கணித்திருந்தேன். ஆனாலும் இன்று தலைமை அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாய சூழல் இருந்ததால் தவிர்க்கமுடியவில்லை.

புறநகரப் பகுதிகளில் இருந்து ரியூப் பயணத்தை ஆரம்பித்தாலும் நெரிசல் மிக்க காலை மாலை வேளைகளில் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துகொண்டே இருப்பதால், ஒரு போதும் ஆசனங்களில் இருந்து பயணங்களை மேற்கொள்ள முடிந்ததில்லை. நெரிசல்கள் நிறைந்த பிரயாணங்களில் இருந்து தப்பிக்கவேண்டும் என்பதாலும், எஸ்கலேற்றர்களின் வலது பக்கத்தில் நின்று பயணிப்பதை வயது போனவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இயலாதவர்களுக்கும் என்று மனம் கணித்து வைத்திருந்ததாலும், பரபரப்பான இலண்டன் வாழ்வில் இயைபாக்கம் அடைந்துள்ளதாக என்னையே நான் நம்பச் செய்யவேண்டியிருந்ததாலும், வேகமாக ரஜினிகாந்த் போன்று படிகளைப் பார்க்காமல் நேரே பார்த்துக் கொண்டு தடதடவென ஓடுவது காலைவேளை உடற்பயிற்சியின் ஒரு கூறு என்று நினைத்திருந்ததாலும் குறுகலான நகரும் படிகளில் பாரமான தோள் பையுடன் ஓடுவது எனக்கு வழமையான ஒரு பொழுதுபோக்கு.

சில நிமிடங்களுக்கு ஒன்றென இலண்டனின் சகல திசைகளிலிருந்தும் குறுக்கும் நெடுக்குமாக பல சுரங்கத் தடங்களில் ரியூப் ரயில்கள் அகிளான்கள்போல் நிலத்திற்குக் கீழ் பெருந்தொகையான மக்களைச் சுமந்து ஓடிக்கொண்டிருந்தாலும், சிலவேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது ரியூப்பில் ஏற முடியாமல் போகும் என்பதால், அவற்றின் வருகைக்காக பிளாற்ஃபோமில் கதவுகள் திறக்கப்படும்போது முதலாவதாக ஏறிக் கொள்ளவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக நிற்கவேண்டிய இடத்தை தெரிவு செய்து, கதவு திறக்க்கப்பட்டதும் உள்ளிருந்து இறங்கும் பயணிகளுக்கு ஒன்றிரண்டு செக்கன்கள் வழிவிட்டு, இறுதியாக இறங்கும் பயணியும் நானும் ஏறும் தருணத்தை ஒன்றாக ஒழுங்குபடுத்திக் கொள்வதும் ஒரு சுவாரசியமான விடயம்.

என்னதான் முண்டியடித்து ரியூப்பின் உள்ளே நுழைந்தாலும், சக பயணிகளுடன் முட்டுப்படாமல் நிற்பதற்குக் கூட இடம் இருக்காது. அப்படியிருந்தும் ஒருவருக்கு ஒருவர் நூலிழை இடைவெளியில் பயணிப்பது மிகவும் சவாலானதுதான். சுரங்கத்தினூடான பயணம் என்பதால் வெளியே வேடிக்கை பார்க்க எதுவுமில்லை என்பதாலும், பிறருடன் பேசாமல், பார்க்காமல் பயணிக்கவேண்டிய நியதியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதாலும், இந்த நெரிசலுக்குள்ளும் கிடைக்கும் சிறு வெளிகளுக்குள்ளும் பத்திரிகைகளை அல்லது புத்தகங்களைப் படிப்பது பலருடைய வழக்கம். இப்போதெல்லாம் ஸ்மார்ட்ஃபோனிலும், ஈ-ரீடர்களிலும் எதையாவது படிப்பது/பார்ப்பது அல்லது அங்ரி பேர்ட் போன்ற விளையாட்டுக்களில் நேரத்தைச் செலவழிப்பதுதான் அதிகம். ஆயினும் நின்றுகொண்டே பயணிக்கும்போது படிப்பது அல்லது கட்ஜற்றை நோண்டுவது எனக்குப் பழக்கமில்லையாதலால், உலகத்தின் பெருநகர்களில் ஒன்றாக விளங்கும் இலண்டனில் பல்வேறு வகை மனிதர்கள், விதவிதமான கலாச்சார, நடையுடை பாவனைகளில் பயணிப்பதை வேடிக்கை பார்ப்பதில் எனது பயண நேரத்தைச் செலவழிப்பேன்.

நெரிசல் மிகுந்த வேளைகளில் மிக இள வயதினர்களைவிட வேலைக்குச் செல்லும் வயதினரே அதிகம் பயணிப்பார்கள். ரியூப் ரெயினில் திரளாக பயணிகள் நிறைந்திருந்தாலும், தமது குடும்பத்தின் நாளாந்தப் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்துக் கொள்வதாலோ என்னவோ, கவலை ரேகைகள் தெரிய முகத்தை மலச்சிக்கல் உள்ளவர்கள் கடுமையாக வைத்துக்கொண்டு வேலைக்குச் செல்லுபவர்களில் அநேகர் zombie (நடைபிணங்கள்) களாகத் தோற்றம் அளிப்பார்கள். இந்த நிலை குத்திய வெறித்த பார்வையுடனான நடைபிணங்கள் ஒரு நாட்பொழுதைப் பாழாக்கிவிடுவார்கள் என்பதால் ஏறிக்கொள்ளும் பயணிகள் பெட்டியில் கவலைகள் அற்ற மலர்ந்த முகத்துடனான இளமை பொங்கும் சக பெண் பயணி யாராவது ஒருத்தியாவது இருக்கின்றாளா என்று கண்கள் வலைவீசித் தேடும். ஒவ்வொரு நாளும் மலரும் பூவைப் பார்த்து இரசிப்பதுபோல தினம் தினம் பயணிக்கும்போது ஒரு இளம் பெண்ணின் அழகான முகத்தை, பிளவுகள் சற்றே தெரியும் திரண்ட வெளிர் மார்புகளை, குட்டைச் சட்டையின் நீக்கல்களூடு தெரியும் வாளிப்பான தொடைகளை பார்த்துக் கொண்டு பயணிப்பது நெரிசலிலும் சந்தோஷத்துடன் கூடிய புத்துணர்ச்சியைத் தரும். இப்படியான தருணங்களில் பட்டினத்தாரின் “நித்தம் பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்; கறந்த இடத்தை நாடுதே கண்” என்ற வரிகளின் தத்துவம் பரிபூரணமாக விளங்கும். ஒரு பெண்ணை விழுங்குவது போலத் தொடர்ந்து உற்று நோக்குவது மனதில் தீய எண்ணங்கள் உள்ளவன் என்ற தோற்றப்பாட்டைப் அவளுக்கும் பிறருக்கு உண்டாக்கலாம் என்பதால் இடையிடையே கண்கள் சுழன்று நடைபிணங்களாக இருப்பவர்களையும் அவதானிக்கும். ஆனாலும் சில நொடி ஆவர்த்தன இடைவெளிகளில் மீண்டும் பெண் மீது பார்வை படரும்.

மாலை நேரத்தில் பறவைகள் கூடுகளை நோக்கி பறப்பதுபோன்று வேலையை முடித்துக் கொண்ட மக்கள் கூட்டம் லண்டன் பிரிட்ஜ் ரியூப் ஸ்ரேசனை நோக்கி சிற்றெறும்புகள் சாரி சாரியாக தமது புற்றை நோக்கிப் போவதுபோன்று படையெடுத்துக் கொண்டிருந்தனர். ரியூப் ஸ்ரேசனை அண்மித்தபோது ஊசிகளாகக் குத்தும் பனிக்காற்று வீசும் சப்தத்தையும் மீறி கட்டட இடுக்குகளில் வசிக்கும் வெளிர்சாம்பல் வர்ணப் புறாக்களின் படபடப்போடு கூடிய குறுகும் சப்தம் கேட்டது. பாதசாரிகள் மற்றும் பயணிகள் திரளினுள் ஒரு எறும்பு போன்று நானும் சுரங்க வாயிலிலிருந்து கீழிறங்கும் அகல அகலமான படிகளில் வேகமாக இறங்கி, பயணச்சீட்டை ரிக்கற் மெசினில் அழுத்தி நான் போகவேண்டிய பிளாற்ஃபோம் இலக்கத்தை தொடர்ந்து நடந்துகொண்டே கண்களால் துழாவினேன். சரியான பிளாற்ஃபோமைக் அடையாளம் கண்டு அதற்குரிய எஸ்கலேற்றர் படிகளில் நின்றபடி பயணம் செய்யாமல், தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நெரிசலில் இருந்து விடுவிக்கும் என்று எண்ணியவாறே தட தடவென கீழே நோக்கி ஓடத் தொடங்கினேன். என்னைப் போலவே அதிகமானவர்களும் ஒவ்வொரு நொடியின் பெறுமதியை உணர்ந்தவர்களாக படிகளில் ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது.

பிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது.

--தொடரும்--

  • Like 18

Share this post


Link to post
Share on other sites

இப்பிடி விட்டுவிடு ஒரேயடியாப் போவிடாமல் விரைவில் மிகுதியை எழுதுங்கள் பேராண்டி.

Share this post


Link to post
Share on other sites

கதைக்குள்  உங்கள் சிந்தனைகளையும் சேர்த்துக் கோத்திருப்பது சம்பவங்களை தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவியுள்ளது . இந்த வித்தை தொடர் வாசிப்பின் முதிர்ச்சியினால் வருவதாகும் . தொடருங்கள் கிருபன் ஜி :) :) .

 

Share this post


Link to post
Share on other sites

நல்லா இருக்கு.. :rolleyes: ஆனாலும் என்னாத்த பண்ணியிருக்கப் போறீங்க.. :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

நெரிசலில் மோகம் எண்டால் எங்கடை தட்டிவான் , சிரிபி வசுவிலைதான் கிடைக்கும். :lol:


பிளாற்ஃபோமில் பயணிகள் நிறைந்திருந்தாலும் நெரிசல் நேரக் கூட்டத்தைவிடக் குறைவு போன்று தோன்றியது. அடுத்த ரயில் இன்னும் இரண்டும் நிமிடங்களில் வரும் என்பதாகத் திரை காண்பித்தபோது எப்படியும் அந்த ரயிலில் இடம் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை முளைவிட்டது. ஆனாலும் பயணிகள் தொடர்ந்தும் வந்துகொண்டிருந்ததனால் பிளாற்ஃபோம் அடுத்த சில வினாடிகளில் நிறைந்துவிட்டது. சற்றுப் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தவேளை பிளாற்ஃபோம் விளிம்பிலுள்ள பாதுகாப்பிற்கான மஞ்சள் கோட்டிற்கும் எனக்கும் இடையில் இரண்டு வரிசையில் பயணிகள் நெருக்கியடித்துக்கொண்டு சேர்ந்துவிட்டார்கள். சில வினாடிகளில் வரப்போகின்ற ரயிலில் ஏறமுடியாமல் போகப் போகின்றதே என்ற எரிச்சலுடன் திரும்பிய வேளையில் எனக்கு முன்னால் ரயில் வரும் திசையைப் பார்த்தவாறு, சுரங்கத்தினூடு வேகமாக வரும் ரயிலினால் உந்தப்பட்ட காற்றில் கலந்த சுகந்த வாசனையோடும் அலைபாயும் கருங்கூந்தல் தோள்களிலும் பின் முதுகிலும் புரள அதீத இளமையான பெண் ஒருத்தி கடல் போன்ற பயணிகள் கூட்டத்திற்குள் கடற்கன்னி போன்று நிற்பதைக் கண்ணுற்றேன். புரளும் கேசமும், காதும், கழுத்தும் மாத்திரமே கண்ணுக்குத் தெரிந்தாலும் அவள் கட்டாயம் ஒரு இந்திய பெண்ணாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது. அந்தக் கணமே அசதியும் களைப்பும் வழிந்தோடி உற்சாகமும் மகிழ்வும் மனதிற்குள் பீறிட்டது.

 

 

ஒரு வேளை என்ரை தங்கச்சியாய் இருக்குமோ???  :o  :rolleyes:  :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

நெரிசலில் மோகம் எண்டால் எங்கடை தட்டிவான் , சிரிபி வசுவிலைதான் கிடைக்கும். :lol:

அண்ணோய், புங்குடுதீவு மொரிஸ் மைனர் கார் மாதிரி வருமோ?

 

சூடான மடியென்ன? குளிரான கடல் காத்து என்ன? அந்த மயக்குகின்ற மாலைச் சூரியனின் மஞ்சள் வெளிச்சமென்ன?

 

ம்ம்ம்......ம்ம்ம்...ம்ம்ம்.... :o

 

அதெல்லாம் ஒரு காலம்! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

க்கூம்.... உதெல்லாம் இ.போ.ச வின் பின் வாசலுக்குப் பின் இருக்கும்  இருக்கைக்கு ஈடாகாது. காலையிலும், மாலையிலும் பயணிப்பவர்களைக்  கேட்டால்  ஜொள்ளுவார்கள்!! :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

150 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட லண்டன் ரியூப் நெரிசல் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதினாலும் தட்டிவான் நெரிசல்தான் பலருக்கு இப்பவும் கிளுகிளுப்பாக இருக்கின்றது :icon_mrgreen: . நான் தட்டிவானைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஏறியதில்லை!
 

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கிருபன்............   மூச்சுத் திணறுது...!!! :wub::lol:

Share this post


Link to post
Share on other sites

150 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட லண்டன் ரியூப் நெரிசல் பயணத்தை வைத்து ஒரு கதை எழுதினாலும் தட்டிவான் நெரிசல்தான் பலருக்கு இப்பவும் கிளுகிளுப்பாக இருக்கின்றது :icon_mrgreen: . நான் தட்டிவானைப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஏறியதில்லை!

 

 

லண்டன் ட்யூப் 150 வருடாத்திற்கு முன் வந்திருக்கலாம்

 

ஆனால் எங்கள் பதின்ம வயதில் தட்டி வானிலும் , ரோசா வானிலும் தானே நெரிசல் பட்டோம்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கிருபன் அண்ணா

Share this post


Link to post
Share on other sites

க்கூம்.... உதெல்லாம் இ.போ.ச வின் பின் வாசலுக்குப் பின் இருக்கும்  இருக்கைக்கு ஈடாகாது. காலையிலும், மாலையிலும் பயணிப்பவர்களைக்  கேட்டால்  ஜொள்ளுவார்கள்!! :lol: :lol:

 

கிகி அப்ப நீங்களும் நானும் அந்த சீற்றுக்கு சன்டை பிடித்திருப்போம் :lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

பாகம் - 2

இடுப்பினைத் தொட்டும் தொடாமலும் நிற்கும் கருஞ்சாந்து நிறமான குளிர்கால ஜக்கற், அதே நிறத்தில் கணுக்கால் வரை உயர்ந்து பாதங்கள் நோகாமல் இருக்க மென்மையான பஞ்சுகள் பதித்த பூட்ஸ், செக்கச் சிவந்த செந்நிற துணியால் வீணையின் இரு குடங்களை இறுக்கிக் கட்டியது போன்ற உருண்டு வளைந்த பின்புறத்தையும், இள வாழந்தண்டு போன்ற கால்களையும் சிக்கென இறுக்கிப் பிடித்த ஒட்டிய சிவப்பு வர்ண ஜீன்ஸ் அணிந்து அதீத இளமையுடன் அழகுப் பதுமை போன்று ஐந்தரையடி உயரமாய் நின்ற நவநாகரிக நங்கையான அவளின் பின்பக்கத்தோற்றத்தையே பார்க்கமுடிந்தது. முகத்தைப் பார்க்க முடியவில்லையாயினும் பார்வைக்குள் விழுந்த அவளது வெண்மையான கழுத்தும் கன்னக் கதுப்புக்களும் நல்ல நிறமான எடுப்பான தோற்றமுடைய பேரழகியாக இருப்பாள் என்று உள்ளுணர்வு கூறியது.

சில வினாடிகளில் சுரங்கப்பாதையில் அடைபட்டு இருந்த குளிர் காற்றை உந்தித் தள்ளியபடி பிளாற்ஃபோம் சுவர்களையே கிடுகிடுவென்று அதிரவைக்கும் இரைச்சலுடன் நிரம்பி வழியும் பயணிகளோடு ரயில் வந்து நிறுத்தப்பட்டபோது பிளாற்ஃபோமில் நின்றவர்கள் ஏறுவதற்குத் தயாராக வரிசைகட்டி முண்டியடித்துக் கொண்டு நெருங்கி நிற்க ஆரம்பித்தனர். அழகியும் என்னில் இருந்து ஒன்றிரண்டு அடிகள் முன்னால் சகபயணிகளால் மறைக்கப்பட்டு நின்றிருந்தாள். அவள் அந்த ரயிலில் ஏறிக்கொள்வதற்கும் நான் ஏறமுடியாமல் பின்தங்கி விடுவதற்கும் அதிக சாத்தியங்கள் இருப்பதாகவேபட்டது. அழகியின் முக தரிசனத்தைக் காணமுடியாமல் போய்விடுமோ என்ற பதற்றம் தொற்றிய அத்தருணத்தில் என்னையுமறியாமல் அவள் அந்த ரயிலில் ஏறக்கூடாது என்று எனக்குத் தெரிந்த எல்லாக் கடவுளரையும் வேண்டினேன். கடவுள் நம்பிக்கையற்றவன் என்று என்னை நானே நம்பிக்கொண்டும் மற்றவர்களை நம்பச் செய்வதும் எவ்வளவு போலியானது என்று ஒரு கணம் சிந்தித்தாலும் அழகியின் முகத்தைப் பார்க்கமுடியாமல் போகப் போகின்றதே என்ற தவிப்பு என்னை ஆட்கொண்டபோது நான் எனக்குள்ளேயே தர்க்கம் செய்ய இது நேரமல்ல, அழகியின் பார்வைக்குள் எப்படியாவது நுழைந்துவிடவேண்டும் என்று இன்னமும் அதிகமாகவே கடவுளரைப் பிரார்த்திக்கத் தொடங்கினேன். “நாலு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகனுக்கும் கடவுள் உண்டு” என்று சும்மாவா கண்ணதாசன் பாடல் எழுதியிருக்கின்றார்! துன்பம் வராவிட்டாலும் இன்பம் பறிபோகப் போகின்றதே என்ற தவிப்பு இதயத்தின் துடிப்பை அதிகரித்தது. தரித்து நின்ற ரயிலின் கதவுகள் திறக்கப்பட்டபோது சனவெக்கை நெடியோடு பல பயணிகள் இறங்கினாலும் காத்திருந்தவர்களில் ஒரு வரிசையினர்தான் உள்ளே ஏற இடமிருந்தது. ரயிலில் ஏறமுடியும் என்று எத்தனித்துத் தோல்விகண்டவர்கள் தமது முயற்சிகளைக் கைவிட கதவுகள் மூடப்பட்டு ரயில் புறப்பட ஆயத்தமாகிவிட்டது.

எனது வேண்டுதல்கள் பலித்தது போன்று அழகி, நான் உட்படப் பலர் அந்த ரயிலில் ஏறமுடியவில்லை. முகம் காட்டாத அழகியின் அருகாமையும், நம்பாத கடவுள் எனது வேண்டுதலை நிறைவேற்றி வைத்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சியை உருவாக்கி எனது முகத்தில் புன்முறுவலை வரவழைத்து என்னை ஆசுவாசப்படுத்தியது. அவளோடு அடுத்த ரயிலில் பயணிக்கப்போகின்றேன் என்ற இனிய நினைப்போடு இரு நிமிடங்களில் வரவுள்ள அடுத்த ரயிலின் வரவுக்காக அழகியின் அருகே பயணிகளூடாக நகர என்னைத் தயார்படுத்தினேன்.

ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அகன்றபோது கூட்டம் ஓரளவு குறையத் தொடங்கியது. அப்போதுதான் அழகியின் அருகே இடப்பக்கத்தில் அவளைவிட சற்றுக் குள்ளமான முள்ளம்பன்றியின் மயிர்கள் போன்ற "ஜெல்”லுக்கும் மசியாமல் குத்திட்டு நிற்கும் கறுப்புத் தலைமயிரடர்ந்த பையன் ஒருவன் நிற்பதை அவதானித்தேன். அழகியின் தம்பியாக இருக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை “ஜெல்”லைக் கொண்டே முள்ளுப் பன்றிச் சிகையலங்காரத்தை உருவாக்கியிருப்பானா என்றும் சந்தேகம் வந்தது. அடுத்த ரயிலின் வருகையை சுரங்கத்தினூடான வேகமான குளிர் காற்றும் தண்டவாளங்களில் இரும்புச் சில்லுகள் தேய்த்து உரசும் ஓசையும் தெரிவித்தன.

“இந்த ரெயினை விடக்கூடாது. எப்படியும் ஏறவேணும்” என்று பையன் தமிழில் அழகிக்குச் சொல்லியது அந்த இரைச்சலிலும் காதில் தெளிவாக விழுந்தபோது அவர்கள் இருவரும் தமிழர்கள் என்பதும், அதிலும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான் என்பதும் சொல்லப்பட்ட வார்த்தைகளில் இருந்து உடனேயே புரிந்தது. தமிழர்களுக்கும் மயக்க வைக்கும் மோகினி போன்ற பேரழகி ஒருத்தி இருப்பதும் வியப்புடன் கூடிய மனமகிழ்வைத் தந்தது. மாயக் காந்தம் போன்று சுண்டியிழுக்கும் அந்த அழகியின் முகத்தைத் தரிசிக்கவேண்டும், அவளது மிகவும் மெருதுவான உடலினைத் தீண்டி ஸ்பரிசிக்கவேண்டும் என்ற மோகத் தீயானது அந்த நிமிடத்தில் எனது இருதயத்தில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. மோகத் தீயின் நாக்குகள் எனது உடலை வளைத்து முறுக்க, வெம்மை வேகமாகப் பரவி வியர்வைத் துளிகள் நெற்றியில் அரும்புவதாகத் தோன்றியது.

ரயில் நிறுத்தப்பட்டதும் வழமைபோன்றே இறங்குபவர்களுக்கு வழிவிட்டு உள்ளே ஏற பயணிகள் எல்லோரும் ஆளையாள் அதிகம் தள்ளாமல் நெரிசலில் முண்டியடித்து முன்னேறினோம். என் முன்னே நின்ற அழகி ஏறிக்கொண்டதும் நானும் எப்படியாவது ஏறிக்கொள்ளவேண்டும் என்ற குறியுடன் வேகமாகக் கால்களை எடுத்து ரயிலின் கதவைத் தடுத்து பிற பயணிகளுடன் முட்டுப்பட்டவாறே ரயிலின் உள்ளே ஒருக்களித்து நுழைந்தேன். ரயில்பெட்டி முழுவதும் பயணிகள் நெருக்கியடித்து நிறைந்திருந்தார்கள். கை, கால், கழுத்தைக் கூட ஒரு இம்மியளவும் அசைக்கமுடியாத கூட்டம். எனக்கும் அழகிக்கும் அவள் கூட நின்ற பையனுக்கும் இடையில் டைட்டானிக் போன்ற பாரிய பின்புறத்துடனும் பருத்த சரீரமுடனும் ஒரு மத்தியவயதான ஆங்கிலமாது நந்தியாக நின்றிருந்ததால் அழகிக்கு மிக அருகில் நின்று பயணிக்கமுடியவில்லை. அவளைப் பார்க்கவும் முடியவில்லை. இருவரும் அருகருகே நின்றிருந்தும் ஒருபோதுமே சந்திக்கமுடியாமல் சமாந்தரமாக இயங்கும் இருவேறு பிரபஞ்சவெளியில் பயணிப்பதாகத் தோன்றியது.

அழகியின் முகத்தை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற விருப்பு எனக்குள்ளே தீயாக வளர்ந்ததால் ரயில் புறப்பட்டு வேகம் எடுத்து ஓட ஆரம்பிக்க எனது பலத்தையெல்லாம் திரட்டி ஆங்கில மாதுவை நெருக்கியபடி என்னை இருக்கைகளின் நடுவேயுள்ள இடைவெளியை நோக்கித் திணித்தேன். இப்போது பையனை முழுவதுமாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால் அழகி அவனுக்குப் பக்கவாட்டில் நின்றதால் அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. பையன் நான் நினைத்தமாதிரி சிறுபையனாக இல்லை. அழகியைவிடச் சற்றுக் குள்ளமாக இருந்தாலும், அவன் இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தான் என்பதை அவனது கள்ளம் நிரம்பிய முகத்தில் இருந்து கண்டுகொண்டேன். சற்றே பெரிதான ஆனால் தட்டையான மூக்கு, மேலுதட்டைத் துருத்திக்கொண்டு உள்ளே ஒளிந்திருக்கும் பற்கள், ஆந்தை போன்று படபடப்புடன் சுழலும் கண்கள், மெல்லிய கோடாக முடியும் சற்று நீண்ட கிருதா, செதுக்கப்பட்ட மீசை, குறுந்தாடி, இடது காதில் ஒரு தோடு, கறுப்பு நிற ரீ-சேர்ட், அதற்குப் பொருத்தமான குளிர் ஜக்கற், பெரிய பெல்ற்றால் இறுக்கியிருந்தாலும் இடுப்பில் இருந்து நழுவியதுபோன்ற ஜீன்ஸ் என்று அமர்க்களமாக இருந்தான்.

அவன் அழகியின் தம்பியாக இருக்கமுடியாது; நண்பன் அல்லது காதலனாக இருக்கலாம் என்று உள்ளுணர்வு சொல்லியது. அழகியின் காதலனாக இருக்கலாம் என்ற நினைப்பு கசப்பு மிகுந்த கசாயத்தைக் குடித்த உணர்வுடன் எரிச்சலைத் தூண்ட நான் அவனது கண்களை மிகக் கடுப்புடன் ஊடுருவது போன்று பார்த்தேன். எனது எரிச்சலும், கடுப்பும், மிரட்டலும் கலந்த பார்வை அவனுக்குப் பிடிக்கவில்லை என்பது அவன் எனது பார்வையைத் தவிர்த்து அழகியின் பக்கம் பார்த்தவாறு என்னை ஓரக்கண்ணால் அவதானிக்க முயன்றதில் இருந்து புரிந்தது. எனது கண்களை நேரே சந்திக்கத் திராணியற்றதால் அவன் பிரச்சினைகளை நேரே எதிர்கொள்ள விரும்பாத ஒரு தைரியமற்றவனாகத்தான் இருக்கக்கூடும் என்று கணித்தேன். சடுதியாக ஒரு திட்டம் மூளைக்குள் உதித்தது.

--தொடரும்--

Edited by கிருபன்
  • Like 9

Share this post


Link to post
Share on other sites

நாட்டிலும் இப்பிடி அழகிமார் இருக்கினமா என்று ஆவலை தூண்டுது..  :D


எனக்கும் அழகிக்கும் அவள் கூட நின்ற பையனுக்கும் இடையில் டைட்டானிக் போன்ற பாரிய பின்புறத்துடனும் பருத்த சரீரமுடனும் ஒரு மத்தியவயதான ஆங்கிலமாது நந்தியாக நின்றிருந்ததால் அழகிக்கு மிக அருகில் நின்று பயணிக்கமுடியவில்லை.
  :lol: 

Share this post


Link to post
Share on other sites

கதை நல்லா சூடு பிடிக்குது , தொடருங்கோ  கிருபன் அண்ணா ... :)

Share this post


Link to post
Share on other sites

நாட்டிலும் இப்பிடி அழகிமார் இருக்கினமா என்று ஆவலை தூண்டுது..  :D

 

  :lol: 

இது ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை :wub: . தாய்க்குலங்களின் ஆதரவு துளியும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. :(  எனவே கதையின் திசையைத் திருப்பலாம் என்று யோசிக்கின்றேன். :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

இது ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்துப் புனையப்பட்ட கதை :wub: . தாய்க்குலங்களின் ஆதரவு துளியும் கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கின்றது. :(  எனவே கதையின் திசையைத் திருப்பலாம் என்று யோசிக்கின்றேன். :icon_mrgreen:

 

கவலையே படவேண்டாம் கிருபன். நீங்கள் எழுதுவதில் கற்பனை கலந்திருப்பினும் உங்கள் எழுத்தாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. உங்கள்  கற்பனையும் பெண் பற்றிய வர்ணனையுமே மற்றப் பெண்களை இதில் கருத்தெழுத விடாது வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அதற்காக நீங்கள் எழுத எண்ணியதை விட்டு கருத்தெளுதாத பெண்களுக்காக கதையைத் திசை திருப்பினால் கதையின் அழகு சிதைந்துவிடும். :D கதையை இடையில் நிறுத்திக் கடுப்பேற்றுகிறீர்கள்  :lol: 

 

Share this post


Link to post
Share on other sites

நாங்க போற ரெயின் எல்லாம் பெட்டி பெருத்ததா.. நெரிசலுக்கு வழி இல்லாமல் எல்லோ இருக்குது. அதுபோக.. உட்கார்ந்து செல்வதில் நாட்டமில்லை. நின்று செல்வதே விருப்பம். காரணம்.. ஒரு பிகரைப் பார்த்து அருகில போய் உட்கார்ந்தா.. அது எழும்பிப் போக.. அட்ட பிகரு வந்து உட்கார்ந்து.. மூக்கைச் சொறிய.. எழும்பி ஓடுறதிலும்.. நின்றே போனால்.. யன்னல் வழியாக.. நிறைய இயற்கைக் காட்சிகளாவது காணலாம். :lol::D

 

லண்டன் பெண்களைப் பற்றிய உங்கள் வர்ணனை நிஜம். அதுவும் பிளவு தெரியும் மேற்சட்டை.. இங்கு பஷன். குறிப்பாக மேற்தட்டு தொழிலிடப் பெண்களிடம். ஒரு தடவை நேரவே ஒரு நண்பியிடம் கேட்டோம். ஏன் இந்த விளம்பரம் என்று. அதுக்கு அவா சொன்னா.. இருக்கிற இயற்கை அழகை காட்டிறதில என்ன தப்புன்னு. இல்லாதவங்க மூடி மறைக்கிறாங்க.. என்றா. :D

Edited by nedukkalapoovan

Share this post


Link to post
Share on other sites

கவலையே படவேண்டாம் கிருபன். நீங்கள் எழுதுவதில் கற்பனை கலந்திருப்பினும் உங்கள் எழுத்தாற்றல் என்னைப் பிரமிக்க வைக்கிறது. உங்கள்  கற்பனையும் பெண் பற்றிய வர்ணனையுமே மற்றப் பெண்களை இதில் கருத்தெழுத விடாது வைத்திருக்கிறது என்று எண்ணுகிறேன். அதற்காக நீங்கள் எழுத எண்ணியதை விட்டு கருத்தெளுதாத பெண்களுக்காக கதையைத் திசை திருப்பினால் கதையின் அழகு சிதைந்துவிடும். :D கதையை இடையில் நிறுத்திக் கடுப்பேற்றுகிறீர்கள்  :lol:

கதையை விரைவாக எழுத நேரம் கிடைப்பதில்லை. அத்தோடு அவசரப்பட்டு எழுதினால் அழகு குறைந்துவிடுமல்லவா! <_<

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதை இப்படித்தான் இருக்கப் போகிறது என என் மனதுள் ஒரு வரைபடம் வந்துவிட்டது. கதை முடிந்தால்த்தான் அது எப்படி என்று தெரியும்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் கிருபன்ஜீ  . வர வரக் கதை  மொறுமொறுப்பாகவும் விறு விறுப்பாகவும் கதை நகருகின்றது  .

Share this post


Link to post
Share on other sites

பலே கில்லாடிம்மா..

 

ஆமா நாலு பக்கம் துன்பம் சூழ்ந்தால்தானே நாத்திகனும் கடவுளை வேண்டுவான்......... (என்னுடைய மனதிற்குள் திட்டிக் கொள்கிறேன் நாதாரி இவனுக்கு அப்படி என்ன துன்பம் நேர்ந்ததாம்?) :lol:  சும்மா சொல்லக்கூடாது கதை அந்த மாதிரி தொடர்ந்து எழுதுங்க.. 

Share this post


Link to post
Share on other sites

பாகம் - 3

அடுத்த தரிப்பு அண்மிக்கின்றது என்ற அறிவிப்பு காதில் விழுந்தபோது இத்தனை நெரிசல்களுக்குள்ளும் எப்படியாவது அழகியை நேரே பார்க்கக் கூடியமாதிரி நிலையெடுக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. உடனடியாகவே அடுத்த தரிப்பில் இறங்கப்போவது போன்ற பாவனையைக் காட்டி பரபரக்க, பருத்த ஆங்கிலமாது சற்று நகர்ந்துகொண்டாள். கிடைத்த சிறிய இடைவெளிக்குள் அவளது மலை போன்ற தசைக்கோளங்களை நெருக்கித் தள்ளிக்கொண்டு அழகியை நோக்கி என்னை முன் தள்ளினேன். பயணிகள் கூட்டத்தினுள் ஒருவாறு என்னைச் சமநிலைப்படுத்தி நிமிர்ந்து அழகியைப் பார்த்தபோது என் இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்தி அடுத்த கணமே சிலிர்த்து உயிர்த்தெழுந்தது. உள்ளத்தில் நிர்மாணிக்கப்பட்ட இன்ப ஊற்றில் இருந்து உயிர்ப்பு நிறைந்த சூடான இரத்தம் அதிவேகத்துடன் பிரவாகித்து அடியாழங்களைத் தேடி ஓடுவது போன்று நாடி நாளங்களூடாக உடலெங்கும் சடுதியாகப் பரவியது. கண்களை விலக்கிக் கொள்ள முடியாதபடிக்கு சகல லட்சணமும் பொருந்தி அவள் பேரழகியாகத் தெரிந்தாள். எனக்கு நா குளிர்ந்து உலர்ந்தது போன்றும் வியர்க்காத உதடுகளில் வியர்வைத் துளிகள் அரும்புவது போன்றும் ஓர் பரவசநிலை உருவாகி உடலில் மெலிதாய் நடுக்கம் பரவ ஆரம்பித்தது. மெல்ல சுதாகரித்து இயல்பு நிலையை அடைந்தாலும் உடலெங்கும் காமம் நிறைந்து வழிந்தது.

வில் போன்ற வளைந்த செதுக்கிய புருவம், கேள்வி தொடுப்பதுபோல் அகன்று விரிந்து வசியம் செய்யும் கரிய கண்கள், இலேசான மேக்கப், நெற்றியில் சிறியதாய் அரிசி வடிவில் ஒரு கறுப்புப் பொட்டு, கூர்மையான ஒல்லியான மூக்கு, அளவான உதட்டுச் சாயம் தீட்டிய செக்கச் சிவந்த உதடுகள், அலைபாயும் கருங்கூந்தல் அதில் ஒரு கற்றை நெற்றியிலும் இடது கன்னத்திலும் மிதந்து நின்றது. வெள்ளை வெளேரென்ற கழுத்திலிருந்து ஒரு மெல்லிய சில்வர் சங்கிலி அவளது மிகவும் நளினமாக அதி மிருதுவான தேகத்தில் ஒட்டி உறவாடி கார்வண்ண மேலாடையூடாக மதமதர்த்து நின்ற தளிர் மார்புப் பகுதிக்குள் சென்று மறைந்தது. தோளில் நீண்டபட்டியுடன் கூடிய சற்றே பெரிய விலையுயர்ந்த பளபளப்பான கருமை வர்ணத்தில் கைப்பை தொங்கியது. அவளது படிகம் போன்ற கைகளில் வெளிர் நிற ஐஃபோன் ஒன்று பளபளத்து இருந்தது. அவளது இரு காதுகளிலும் பாடல்களைக் கேட்பதற்காக மாட்டியிருந்த ஹெட்ஃபோனின் வயர்கள் நீண்டு வளைந்து அழகிய சங்கிலி போன்று ஐஃபோனுடன் பிணைக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவள் ஓரு நவநாகரிக அழகுப் பதுமையாக இருந்தாள்.

ஜெயமோகன் கதை ஒன்றில் பெண்ணழகின் உச்சத்தைப் பற்றி விபரித்திருந்தார். " எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான்". அவள் அழகின் உச்சத்தை எட்டிய தருணத்தின் அந்தக் கணத்தில் என்முன் நின்றாள்.

அடுத்த தரிப்பில் ரயிலிலிருந்து தடம் மாறுவதற்காகச் சிலர் இறங்கினார்கள். இறங்கியவர்களால் குறைவடைந்த நெரிசல் கூடுவதற்கு முன்னரே நான் அழகியை ஒரு நேர்கோட்டில் முழுவதுமாகப் பார்க்கக்கூடியவாறு எனது நிலையை மாற்றினேன். சில வினாடிகளில் வேலை முடிந்து வீடு நோக்கிச் செல்லும் அவசரத்தில் உள்ளே நெருக்கியடித்து ஏறிய பயணிகளால் ரயில்பெட்டி நிறைந்துவிட்டது. பயணிகள் திரளாக எங்களைச் சுற்றி நின்றாலும் எவருமே என் கண்களில் படவில்லை. அவர்கள் என்னைக் கவனிக்கின்றார்களா என்று கூட என்னால் சிந்திக்கமுடியவில்லை. என் புலன்கள் எல்லாம் எனது விழிகளில் ஒடுங்கி பார்வையால் அவளை அளவெடுத்துக்கொண்டிருந்தேன். அழகியைப் பார்வையால் பருகிக் கொண்டு நின்ற கணங்கள் அதிகரிக்க அதிகரிக்க அவளை அப்படியே அள்ளிப் தூக்கி அவளது உடலின் திண்மை, திரட்சி, மென்மை எல்லாவற்றையும் ஆராயவேண்டும் என்று மனமும் கைகளும் துறுதுறுத்தன. அவள் மெலிதாக உதடுகளைப் பிரித்து இளைஞனைப் பார்த்து முறுவலித்தபோது பளிங்குக் கற்கள் போன்ற முத்தான பற்களில் இருந்து தெறிந்த ஒளி என் விழிகளைக் கூசச் செய்தது. எனது பார்வை சற்றுக் கீழே தாழ்ந்தபோது சூரியக் கற்றைகள் தொட்டுக்கூடப் பார்க்காத கூட்டுக்குள் வளரும் வெண்ணிற இள முயல் குட்டிகளைப் போன்று திமிறிக் கொண்டிருந்த அழகியின் இள மார்புகள் மீது கண்கள் தேனில் விழுந்த ஈயைப் போல ஒட்டிக்கொண்டன. அந்த நொடியில் எனது வாழ்வில் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

நான் பார்வையாலே அவள் மீது படர்ந்து அளவாக உருண்டு திரண்ட மார்புகளின் வட்டத்தையும் விட்டத்தையும் கணக்கெடுத்துக்கொண்டிருந்தது அவள் பக்கத்தில் நின்ற இளைஞனுக்கு சினத்தை ஊட்டியது. நான் அழகியைத் தொடர்ந்தும் பார்வையாலே உறிஞ்சுவதைத் தடுக்கும் நோக்கில் அவன் அழகியை நெருங்கி "நீ கேட்கின்ற பாட்டைக் நானும் கேட்கவேண்டும்" என்றவாறே அவளது ஹெட்ஃபோனில் ஒன்றை உரிமையோடு எடுத்துத் தனது காதில் மாட்டிக்கொண்டு என்னை நோக்கி வெற்றிப் பெருமிதமான பார்வையைச் செலுத்தினான். அவனது செய்கையும் அவன் நின்ற தோரணையும் அழகி அவனுக்கே உரித்தானவள்; நான் அவர்களுக்குள் நுழையமுடியாது என்று எனக்கு சவால் விடுவதாகப்பட்டது. எனது பக்கம் அழகியின் கவனம் வராமல் இருக்க ஏதோ இப்போதுதான் புதிதாகச் சந்தித்தவர்கள் போலவும், இனி வருங் காலத்தைப் பற்றிக் கனவு காண்பவர்கள் போலவும் அவளோடு உரசிக் கொண்டு மெல்லிய குரலில் கிசுகிசுத்தான். அழகியும் தன் ஜக்கற் பைகளுக்குள் கைகளை வைத்தபடி பதிலுக்கு எதையோ முணுமுணுத்துக் "களுக்"கென்று சிரித்தாள். அவர்களது கிசுகிசுப்பான பேச்சு சங்கிலி போல ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவி வார்த்தைகள் ரயிலோடும் ஓசையில் மறைந்துகொண்டிருந்தன.

அழகி இன்னமும் என்னைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதும் இறுதித் தரிப்பை அடைய அதிகபட்சம் 30 நிமிடங்களே எடுக்கலாம் என்பதும், அவர்கள் இடையில் எந்த நேரமும் இறங்கலாம் என்பதும் எனக்கு மனதுக்குள் கலவரத்தை உண்டுபண்ணியது. அழகியோடு பயணிக்கும் சொற்ப நேரத்தில் அவள் என் மீது கவனத்தை உண்டுபண்ண என்ன செய்யலாம் என்று மூளையைக் கசக்கிச் சிந்தித்தேன். இளைஞன் அவளது காதலன் என்பது உறுதியாகிவிட்டதால், அவளை என்பக்கம் இழுப்பது அவ்வளவு இலகுவாக இருக்காது என்பதும் உறைத்தது.

ஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். தன் பரம்பரையைத் தோற்றுவிப்பதன் வழியாகத் தன் இனத்தை வலுவாகத் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் உந்துதல் காரணமாக அதற்குத் தோதாக இருக்கும் சூல் கொண்ட இளமை பொங்கும் பெண்களைப் பார்த்த மாத்திரத்திலேயே விரும்புவது ஆண்களின் இயல்பு. இது ஆபத்துக்கள் சூழ்ந்த ஆதி காலத்தில் இருந்து சந்ததி சந்தியாகக் கடத்தப்பட்ட உயிரியல் பண்புகளாலான உணர்வு. இதைத்தான் காதல் என்று புனிதப் போர்வை உடுத்துகின்றார்கள் சிலர். ஆனால் காதலின் அடிப்படையே மோகத்தால் உருவாகி காமத்தீ வளர்த்து அம்மணமாகக் கலவி கொண்டு சந்ததியை விருத்தி செய்யும் நோக்கம்தான்.

ஆனால் ஒரு பெண் ஆண் மீது ஈர்ப்புக்கொள்ள பல நிபந்தனைகளை சரிபார்ப்பதுண்டு. முதலில் சந்ததியை உண்டாக்கக்கூடிய ஆண்மையும் ஆபத்துக்களில் இருந்து காக்கக் கூடிய வலிமையும், அவளையும் அவள் குழந்தைகளையும் நீண்ட காலம் பாதுகாத்து பராமரிக்கக் கூடிய பொறுப்புணர்வும் பொருளாதார பலமும் அன்பான உணர்வுகளும் உள்ளவனா பார்ப்பாள். பெண்ணின் சுதந்திர உணர்வுகளை மதித்து அவளோடு ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வானா என்றும் பார்ப்பாள். அதேவேளை தன்னுடன் கூடும் ஆண் மரத்துக்கு மரம் தாவும் பறவை போன்று பிற பெண்களுடன் சேர்வதையும் துளியும் விரும்பமாட்டாள். தன்னைவிட அழகில் குறைந்த பெண்ணுடன்கூட தனது துணையானவன் பழகினால்கூட பிடிக்காது பலபெண்களுக்கு.

ஆதிகாலத்தில் இனக்குழுக்களாக வாழ்ந்தபோதும் ஒரு பெண்ணைக் கவர ஆண் தனது வலிமையையும், அன்பான உணர்வுகளையும் காண்பிக்க பலப் பரீட்சைகளில் இறங்குவதும் சிறந்த நடனக்காரன் என்று நிரூபிப்பதும் நிகழ்ந்தன. இராமாயணத்தில் இராமன் வில்லை ஒடித்து சீதையை அடைந்ததும் அப்படித்தானே. இவைதான் தொடர்ச்சியாகி இப்போது மிடுக்கான நாகரிகத் தோற்றமும், அதிக பணம் புரளும் நிரந்தரமான வேலையும், வசதியான வீடும், காரும், ஆடம்பரமான விடுமுறைகளும், விலையுயர்ந்த பரிசுப்பொருட்களும் பெற்றுத் தரக்கூடிய ஆண்களை பெண்கள் விரும்புவதற்குக் காரணமாகவுள்ளது. அதுமட்டுமல்ல. பெண்ணுக்கு அவளது மாதச் சுற்றின் நேரத்திற்கு ஏற்ப உணர்வுகள் மாறும்போது விருப்பங்களும் மாறுகின்றன. சிலவேளைகளில் சாந்தகுணத்தையும் இன்னொரு வேளையில் மூர்க்ககுணத்தையும் விரும்புவாள். அதற்கேற்ப ஆண் பலவேடங்களைப் பூண்டால்தான் வாழ்வு தொடர்ந்தும் இனிமையாகப் போகும். இப்படி பெண்ணுக்கே பெண்ணைப் புரியாமல் இருக்கும்போது அவளின் மனதைப் புரிய முயலும் ஆண்கள் தமது நேரத்தை விரையம் செய்து, காரியத்தைச் சாதிக்கமுடியாத முட்டாள்களாக ஆகிவிடுகின்றனர்.

இப்படியான சிந்தனைகள் மனதில் ஓட அழகியின் கவனத்தை என்மீது திருப்பி அவளைக் கவரவேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னதான் ஒரு காதலன் இருந்தாலும் ஒரு கணநேர சலனத்தை அவள் மனதில் உருவாக்கி அதை ஒரு தீப்பொறியாக்கி பெருநெருப்பை உருவாக்கினால் அது அவள் காதலைச் சுட்டெரித்துவிடும். இது அதிகம் ரிஸ்கான அணுகலாக இருந்தாலும் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பெறுமதியானது என்பதால் தைரியமாக முயன்று பார்ப்பதுதான் ஒரேவழியாகத் தெரிந்தது.

-- தொடரும் --

  • Like 7

Share this post


Link to post
Share on other sites

ஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். ////  இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மை லோர்ட்  :lol:  :lol:  .  நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல கதை வாசிக்கின்றேன் , தொடருங்கள் ஜீ :) :) .

Share this post


Link to post
Share on other sites

ஆண்கள் நாய்க்குணம் கொண்டவர்கள். நாய் எந்தப் பொந்தைக் கண்டாலும் ஓடிப்போய் முகர்ந்து பார்ப்பதுபோன்று ஆண்களும் மணந்து பார்த்துவிட்டுத்தான் வர விரும்புவார்கள். ////  இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் மை லோர்ட்  :lol:  :lol:  .  நீண்ட காலத்துக்குப் பிறகு நல்ல கதை வாசிக்கின்றேன் , தொடருங்கள் ஜீ :) :) .

ஹி.ஹி..

கதையின் போக்கு பலருக்குப் பிடிக்கவில்லைப் போலிருக்கு!

உள்ளத்தில் உள்ள உண்மையைச் சுட்டிக் காட்டினாலும் பிரச்சினைதான் :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.