Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

தனுஷ்கோடி...உன்னைத் தேடி!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி... உன்னைத் தேடி!

 

Dhanushkodi_rere_image_6.jpg

 

இவ்வருடத்தில் அடிக்கடி காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதனால் எழும் புதுப்புது பெயர்களில் வலம் வரும் புயல்களை அறிகையில், ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் அக்கால சிலோனையும், தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கி, தற்பொழுது உருத்தெரியாமல் சுயமிழந்து நிற்கும் தனுஷ்கோடி நகரம் பற்றிய நினைவு வந்தது.

 

தனுஷ்கோடி பற்றி இணையத்தில் தேடியபோது படித்ததை இங்கே பகிர்கிறேன்.

 

 

Dhanushkodi_rere_image_steam_locomotive.

 

நாம் பயணித்துக் கொண்டிருக்கும் காலம் 1964 டிசம்பர் 22. நாம் பயணிக்கும் நேரம், இருள் இருள், இருள் மட்டுமே பரவி இருந்த இரவு நேரம். கடந்த சில நாட்களாக பெய்திருந்த பேய் மழையில் தென்தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தன. மிகப்பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல்கள் பாம்பன் ரயில் நிலையத்தைக் குளிர்வித்துக் கொண்டிருந்ததன. தனுஷ்கோடி செல்லும் கடைசி ரயிலான பாம்பன்-தனுஷ்கோடி பாசன்ஜர் 110 பயணிகளையும், 5 ரயில்வே அதிகாரிகளையும் சுமந்து கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. ஏழு பெட்டிகள் கோர்க்கப்பட்டிருந்த ரயிலில் 40 வட இந்தியக் கல்லூரி மாணவர்களும், துறவிகளும், யாத்ரீகர்களும், உள்ளூர்ப் பயணிகளும் இருந்தனர்.

டிசம்பர் 17ம் தேதியே வங்காள விரிகுடாவின் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருந்தது, அந்த காற்றழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வலுபெற்று 19ம் தேதி புயல் சினமாக வலுகொண்டது. எப்போது வேண்டுமானாலும் புயல் தாக்கலாம் என்ற நிலையில் தான் வங்களா விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடலின் பெரும்பாலான கடற்கரை ஓரங்கள் இருந்தன. காரணம் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது துரதிஷ்டவசமாக மக்கள் அதிகம் வாழும் மிக முக்கியமான பகுதிகளான இலங்கையின் வவுனியா வழியாக தலைமன்னாரையும் தனுஷ்கோடியையும் சேதப்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாக நெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கி நகரத் தொடங்கியது.

தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம். சென்னை தூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது. பிரிட்டிஷ் அரசு, இந்தியாவையும் இலங்கையையும் ஒருசேர ஆண்டு கொண்டிருந்த 18 - 20 ம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம் வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது.

 

Dhanushkodi_rere_image_Boat_mail.jpg

 

1911ம் ஆண்டு பிரிட்ஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒரே போன்ற துறைமுகக் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில் (1914) கப்பல் போக்குவரத்தையும் தொடங்கிவிட்டார்கள். இர்வின், போஷின் என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவிக் கப்பல்களும் இந்தத் துறைமுகத்தில் இருந்து தான் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கப்பல் போக்குவரத்து நடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் வரை தனுஷ்கோடி சென்று வந்து கொண்டிருந்தன.

சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள் தனுஷ்கோடி வரை சென்று வந்தன. இந்தோ-சிலோன் போட் மெயில் (BஓஆT Mஆஈள்) என்று அழைக்கப்பட்ட இந்த ரயிலின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்தது தான். எண்பது ருபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால் சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம்.

 

Dhanushkodi_rere_image_2.jpg

 

சென்னையில் இருந்து தனுஷ்கோடி துறைமுகம் வரை ரயில் பயணம், தனுஷ்கோடி துறைமுகத்தில் தயாராக இருக்கும் நீராவிக் கப்பலில் ஏறினால் அங்கிருந்து தலைமனார் துறைமுகம் வரை கப்பல் பயணம். தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம். இந்தியாவையும் கொழும்புவையும் இணைத்த இந்த போட் மெயில் மூலம் தான் பெரும்பாலான இந்தியர்கள் வர்த்தகம் மேற்கொண்டனர். இந்தக் கால கட்டங்களில் வியாபாரம் நிமித்தமாக தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று குடியமர்ந்த தமிழர்கள் மலையக தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் சுதந்திரமாக பயணித்துக் கொண்டிருந்த இந்த ரயில்வழிபோக்குவரத்து 1964 புயலுக்குப் பின் முடிவுக்கு வந்தது. அதன் பின் இந்த ரயில் தற்போது சேது எக்ஸ்பிரஸாக பயணித்து வருகிறது. இர்வினும் போஷினும் தங்கள் பயணத்தை கணித மேதை ராமனுஜம் பெயரில் தொடர்ந்து கொண்டிருந்தன. 1984ல் ஏற்பட்ட இனப் போராட்டம் மூலம் நீர்வழி சேவையும் முடிவுக்கு வந்தது.

தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொரு நம்பிக்கை உண்டு, மேலும் காசி புனித யாத்திரையை ராமேஸ்வரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு, அதனால் வாரனாசியில் இருந்து தனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை இரயில்கள் வந்து செல்லும். மேலும் பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பாசன்ஜர் ரயிலும் உண்டு. பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாகத் தான் ரயில் பாதையை அமைத்திருந்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதை இந்தியப் பெருங்கடலின் கடற்கரையோரம் அமைந்திருந்தது. சாதாரணமாகவே இந்தியப் பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்தக் காற்றானது அடிகடி இரயிலின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டு மூடிவிடுவதால் அடிக்கடி ரயில் போக்குவரத்து தடைபடுவது உண்டு.

இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் ரயில் பாதையை குந்துக்கல் என்ற இடம் வழியாக மாற்றி அமைத்தார்கள். மேலும் குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு ரயில் உண்டு.

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பற்றி புயலுக்கு முன் பயலுக்குப் பின் என்று பார்தோமானால் ராமேஸ்வரம் இராமன் வழிபட்ட தீர்த்தத் ஸ்தலம் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி எதுவும் அடைந்திருக்கவில்லை. தனுஷ்கோடியோ துறவிகளும் யாத்ரீகர்களும் வியாபாரிகளும் வெளிநாட்டவர்களும் வந்து செல்கின்ற மிகவும் பரபரப்பான ஒரு நகரம். மிகப்பெரிய ரயில் நிலையம், தபால் நிலையம், தந்தி ஆபீஸ், கஸ்டம்ஸ் ஆபீஸ், மேல்நிலைப் பள்ளி, மாநிலத்தின் மிக முக்கியமான துறைமுகம் என்று பரபரப்பாக இயங்குகின்ற மிக முக்கியமான வர்த்தக நகரம். மீன் கருவாடு உப்பு ஒப்ன்றவை மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருட்கள். மேலும் இந்தியாவில் இருந்து இலங்கை சென்று வர விசா தேவை இல்லை என்பதால் மக்கள் போக்குவரத்தும் அதிகம்.

 

Dhanushkodi_rere_image_3.jpg

 

புயல் அந்தமானில் இருந்து மன்னார் வளைகுடாவை வெகுவாக நெருங்கிய நேரம், பாம்பனில் இருந்து ரயில் மெதுவாக தனுஷ்கோடி நோக்கி நகரத் தொடங்கியது, எதிர்கொள்ளப் போகும் ஒரு அபாயத்தை எதிர்பாராமல்.

 

டிசம்பர் 22 1964, தனுஷ்கோடியின் அன்றைய தினம் தொடக்கம் முதலே  வழக்கத்தை விட அதிகமான காற்றையும் மழையையும் எதிர்கொண்டிருந்தது. கடலுக்குள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருக்க வில்லை. வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு எப்போது எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை புயல் மையம் கொண்டுள்ளது, காற்றடிக்கும் மழை பெய்யும் கடலுக்குள் செல்லக் கூடாது என்றளவில் மட்டுமே விழிப்புணர்வு இருந்தது. புயல் எச்சரிக்கை என்பது தெரியும் ஆனால் புயல் எங்கு கரையைக் கடக்கப் போகிறது என்பதை எல்லாம் அறிந்து கொள்ளும் வசதி அந்நாளில் இல்லை. புயலின் தீவிரம் இந்த அளவிற்கு இருக்கும் என்பது புயல் கரையைக் கடந்த பின் மட்டுமே தெரிந்தது.

 

ட்ரைன் நம்பர் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தனுஷ்கோடி - பாம்பன் பாசன்ஜெர் சரியாக 11.55க்கு தனுஷ்கோடி நோக்கிய தனது (இறுதி) யாத்திரையைத் தொடங்கியது. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன்,  காற்றின் வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது. இஞ்சின் டிரைவர் ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை என்பதை அப்போதுதான் கவனித்து இருந்தார், தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால் அணைத்து தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பலத்த மழையின் காரணமாக சிக்னல் செயல் இழந்து இருக்கும் என்று கணிக்கத் தெரிந்தவருக்கு வரப்போகும் அபாயத்தைப் கணிக்கத் தெரியவில்லை.

எங்கும் இருள் சூழ்ந்து இருக்கவே ரயில் வருவதை தெரிவிக்க தன்னிடம் இருந்த விசிலை ஊதிக் கொண்டே வண்டியை நகற்ற ஆரம்பித்தார். அந்த நிமிடம், அந்த நொடி, அந்த 115 பேரும் என்ன மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று ஊகித்துக் நீங்களே கொள்ளுங்கள்.  ஆழிப் பெருங்காற்றும் அதைத் தொடர்ந்த பேரலையும் இரயிலை வாரி அணைத்துக் கொண்டது. இரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் ஜலசமாதி ஆயினர். ரயில் நிலையத்திற்கும் ரயிலுக்குமான சில நூறு மீட்டர் இடைவெளிகளில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து விட்டது. ஒரு சில நிமிடங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்குமானால் அந்த பாசன்ஜெர், ரயில் நிலையத்தை அடைந்திருக்கும், அத்தனை உயிர்களும் மிகப் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டிருக்கும். விதி சற்றே வலியது அதனால் தானோ என்னவோ அவர்கள் உயிர் பிழைக்க வழி கொடுக்காமல் தன்னுடன் அழைத்துக் கொண்டது.     

தனுஷ்கோடியிலோ நிலைமை இன்னும் பரிதாபம், மின்கம்பங்கள் அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டிடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின  அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி ஒரு ஊரையே மிரட்டிக் கொண்டிருந்தன. நடுநிசியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பலராலும் ஆழிக்காற்றின் வேகத்தை உணர முடியவில்லை. உறக்கத்தில் உயிரைத் தொலைத்தவர்கள் அநேகம் பேர்.

இருந்தும் அதிகரித்த காற்றின் வேகமும், அலைகள் மூலம் ஊருக்குள் புகுந்த தண்ணீரும் வரப் போகும் அசம்பாவிதத்தை எடுத்தியம்பத் தொடங்கின. இயற்கை கொடுந்த இந்த அபாய அறிவிப்பை உணர்ந்து கொண்டவர்கள் வேகமாக செயல் படத்தொடங்கினார்கள். அங்கு குடியிருந்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள் என்பதால் குழந்தைகள் பெண்களை சுமந்து கொண்டு பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். இதில் நீச்சல் காளி என்னும் மீனவர் மட்டும் தனியொரு ஆளாக பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார்.  

 

 அடைமழையில் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு பாதுகாப்பான இடம் உயர்ந்த மணற்குன்றுகள் மட்டுமே. அதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி  இல்லை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கு தான் நின்றாக வேண்டும். இதைத் தவிர இன்னுமொரு முக்கியமான இடமும் சில நூறு உயிர்களைக் காப்பாற்றியது.

ஒரு ரயில் ஒருநூறு உயிர்களைக் காவு வாங்கியது, மறுபுறம் ஒரு ரயில் சில நூறு உயிர்களைக் காவல்காத்தது . ஆம் பெரும்பாலான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தேடி ஓடிய இடம் தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலைத் தான். மொத்த மக்கள் கூட்டமும் ரயிலை நிரப்பி கதவு ஜன்னல்களை இருக்க மூடிக் கொண்டது.

 

Dhanushkodi_rere_image_pamban.jpg

 

 ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் ஒரு சேர பரவத் தொடங்கி இருந்தது. தங்கள் குழந்தையை, துணையை, உறவினரைத் தேடத் தொடங்கியது. தங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சியை விட தொலைந்து போன உயிர்கள் பற்றிய பயமும் சோகமும் அவர்களை வாட்டியது. எதிர்பாரா சம்பவங்கள் அவர்களை குழப்பத்தில் தள்ளியது. கூச்சலும் குழப்பமும் நிறைந்த தனுஷ்கோடி தன்னுடைய ஒட்டுமொத்த ஆர்பரிப்பையும் அந்த ஒரு இரவில் வெளிப்படுத்தி அடங்கியது.

இவை எதுபற்றியுமே அறியாமல் தமிழகம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் பொழுதுபுலர்ந்த பொழுது கூட தனுஷ்கோடியின் நிலைமை குறித்து ஒருவரும் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில் ராமேஸ்வரம் செல்வதற்கு தரைப்பாலம் கிடையாது, படகுப் போக்குவரத்தும், ரயில் சேவையும் மட்டுமே போக்குவரத்துக் காரணிகள். மற்றுமொரு கொடுமையான விஷயம் குடிநீரும் உணவுப் பொருட்களும் தமிழகத்தில் இருந்து செல்லும் ரயில்கள் மூலமாக மட்டுமே கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். புயல் பாம்பன் பாலத்தையும் பதம் பார்த்திருந்தது, தண்டவாளங்கள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தன. ஒட்டு மொத்த தனுஷ்கோடியும் எவ்வித தொடார்பும் இன்றி தனித்து விடப்பட்டிருந்தது. குடிக்கும் நீருக்குக் கூட வழியில்லாத ஆழி சூழ் உலகாக மாறி இருந்தது தனுஷ்கோடி.    

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்கியது. தமிழக அரசாங்கம் விழித்துக் கொண்டது. அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனடியாக செயல்படத் தொடங்கினார். இந்தியாவின் உதவியை நாடினார். நிலைமையைப் புரிந்து கொண்ட இந்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்படத் தொடங்கியது. தனுஷ்கோடி துயரச் சம்பவத்தை தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. இராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படையின் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது.

அடுத்த நாளும் மழை நின்றபாடில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். எஞ்சிய தனுஷ்கோடியை "சாரதா" என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. உயிர் பிழைத்த மக்கள்அனைவரையும் மதுரை அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்த பின்னும் கூட அரசாங்கத்தால் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

மூன்றாம் நாள் தான் அரசாங்கத்திற்கு நினைவு வந்தது, ஒரு பயணிகள் ரயிலைக் காணவில்லை என்று. மீண்டும் தேடல் தொடங்கியது. இறுதியாக முடிவுக்கு வந்தனர். புயலில் இரயில் கடலோடு கடலாக கலந்திருக்க வேண்டுமென்று. கடலுக்குள் இறங்கித் தேடத் தொடங்கினர், இரயிலின் பெரும்பாலான பாகங்கள் அதாவது இரும்பு தவிர்த்து மற்றவை அனைத்தும் கடலோடு கடலாக அடித்துச் செல்லப் பட்டுவிட்டது. அதில் பயணித்த 115பயணிகளும் மாண்டுவிட்டதாக அறிவித்தனர். பேரழிவைப் பார்வையிட வந்த முதல்வர் பக்தவத்சலம் தன்னால் ரயிலின் சில பாகங்களைக் காண முடிந்தது என்று குறிப்பிடுகிறார்.

தனுஷ்கோடியில் வெள்ளம் வடிய நான்கு நாட்களுக்கு மேல் ஆகியது. இந்தியாவை நிலை குலைய வைத்த சம்பவம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசத் தொடங்கியது.      

சமீபத்தில் ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாகிய புயல் பல ஆயிரம் மக்களை பலி வாங்கியது. அதனுடன் ஒப்பிடும் பொழுது தனுத்கொடியில் உயிரிழப்புகள் குறைவு தான் என்ற போதிலும் அடித்த புயலின் வேகம் மிக அதிகம். தலைமன்னரைக் கடக்கும் பொழுது மணிக்கு 150 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், தனுஷ்கோடியை தாக்கும் பொழுது மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கியுள்ளது. விளைவு 1500 மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் மேலானா நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. சொல்லப் போனால் மூன்று முழு கிராமங்கள் இன்றும் கடலடியில் தான் இளைப்பாறிக் கொண்டுள்ளன, தனுஷ்கோடி துறைமுகத்தையும் சேர்த்து.

 

P1150336.JPG

 

ஆசியாவின் இருபதாம் நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. நிலமை இப்படி இருக்க தமிழகமோ  புயலில் சிக்கிய ஒரு சினிமா நடிகர் குறித்துக் கவலை கொள்ளத் தொடங்கியது.

 

ராமேஸ்வரமும் மற்ற பகுதிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்திருந்தாலும், தனுஷ்கோடி முழுவதுமாய் அழிந்திருந்தது. இந்நேரத்தில் பத்திரிகைகள் வேறுவிதமான ஒரு பீதியைக் கிளப்பின, "தனுஷ்கோடி புயலில் சிக்கிய ஜெமினி கணேசனும் அவரது மனைவி சாவித்திரியும் மாயம்". தமிழகமெங்கும் இந்த செய்தி இன்னும் பரவலாகப் பேசப்பட்டது. தங்களுக்கு எதுவும் ஆகவில்லை தாங்கள் நலமாக இருப்பதாக ஊடகங்களின் வாயிலாக தகவல் அறியப்பட்டதுமே தமிழகம் அந்தப் பீதியில் இருந்து தெளிந்தது. இருந்தும் புயலின் தாக்கம் பற்றி இவர்கள் கூறிய கருத்துக்கள் தனுஷ்கோடி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கின்றன.

 

டிசம்பர் 22 மாலை, ஜெமினியும் சாவித்திரியும் தனுஷ்கோடி கடலில் புனித நீராடிவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும் பொழுதே காற்றின் வேகம் மிகவும் பலமாக இருந்தது. மழையும் விடாமல் பெய்து கொண்டிருந்தது. அன்றைய இரவுப் பொழுதை தனுஷ்கோடியில் வேண்டும் என்பது சாவித்திரியின் விருப்பம். விடாது அடித்த காற்றும் அடைமழை கொடுத்த எச்சரிக்கையும் ஜெமினியை தனுஷ்கோடியில் இருக்கச் சம்மதிக்கவில்லை. சாவித்திரி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் ஜெமினி கண்டிப்புடன் எச்சரிக்கவே அன்றைய மாலை ரயிலில் ராமேஸ்வரம் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

 

தனுஷ்கோடிக்கு முன்பே புயல் தலைமன்னாரை நெருங்கி இருந்தது. தலைமன்னாரும் பல ஆயிரம் உயிர்களை புயலுக்கு காவு கொடுத்திருந்தது. தலைமன்னார் கடலில் கலந்த உயிர்கள் தனுஷ்கோடி கரையில் உடலாக ஒதுங்கத் தொடங்கியிருந்தது.

புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள் :

"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விடாம கேட்டுதே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது. சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."

"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது. அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.

ராமேஸ்வரம் ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயிலை தங்களுக்காக பாம்பன் வரை முடியுமா என்று கேட்டுள்ளனர். இருந்த நிலகரிகள் அனைத்தும் புயல் மழையோடு சென்று விட்டதால் எரிபொருள் இல்லை என்று கூறி கையை விரித்துவிட்டனர் . அதன்பின் பேரிழப்பைப் பார்வையிட வந்த முதல்வரை சந்தித்து ஜெமினி தங்கள் நிலைமையை எடுத்துக் கூற அவரும் உதவி செய்வதாக கூறியுள்ளார். பின்பு ஒருவழியாக அவர்கள் பாம்பன் வந்து அங்கிருந்து மோட்டார் படகு மூலம் ராமநாதபுரம் வந்து பின் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளனர். ராமஸ்வரத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தங்கள் கையிலிருந்த ஆயிரம் ரூபாயையும் அங்கிருந்த மக்களுக்காகக் கொடுத்துவிட்டுத் தான் வந்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியைப் பார்ப்பதற்கு வந்திருந்த தனுஷ்கோடி மக்கள் புயலில் இருந்து தப்பித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அப்படித் தப்பித்தவர்களில் ஒருவர் கூறுகிறார் " அன்னிக்கு மட்டும் நான் ராமேஸ்வரம் போகாம இருந்திருந்தா என் பொண்டாட்டி புள்ளைங்கள காப்பாத்தி இருப்பேன், இல்ல அதுங்களோட சேர்ந்து ஒரேடியாப் போயிருப்பேன்" தன்னைச் சந்திக்கும் பலரிடமும் இந்த வார்த்தைகளையே கூறிக் கொண்டுள்ளார்.

அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம். அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.

மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற நகரம் என்று அறிவித்தது. தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி. ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீஸ், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து மக்கள் வாழத் தகுதியற்ற என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து அன்று தொலைந்த தனுஷ்கோடி இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.

 

Thanks: http://www.seenuguru.com/p/blog-page_2408.html

Edited by ராசவன்னியன்
 • Like 4
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி பற்றி நேற்றைய (04-12-2013) தினமணியில் வந்துள்ள செய்தி:

 

ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையே 20 கோடி செலவில் சாலை அமைக்கபடும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் நீலமேகம் தெரிவித்துள்ளார்.

1964 ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு பிறகு ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான சாலை போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் முதன்முறையாக சாலை அமைக்கபடவுள்ளது. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி  இடையே தற்போது முகுந்தராயர் சத்திரம் வரை சாலைவசதி உள்ளது.  இந்நிலையில் தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி ஜனவரியில் துவங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் நீலமேகம் தெரிவித்துள்ளார்.

 

source:http://dinamani.com/latest_news/2013/12/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81/article1927431.ece

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா பகிர்வுக்கு. தனுஸ்கோடியைப் பற்றிய கட்டுரை நேரே புயலின் அழிவைக் கண்டது போல் இருந்தது. நன்றி அண்ணா.1982 இல் பெற்றோருடன் இந்தியா வரும்பொழுது தனுஸ்கோடியிலிருந்து பாலத்தினூடாக ராமேஸ்வரம் வரும்போது இதுபற்றி பெற்றோர் கதைக்கும்போது கேட்ட ஞாபகம். நன்றி அண்ணா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

fisherfolk%20dhanushkodi.jpg

 

தனுஷ்கோடி மீனவர் சமுதாயம்

 

 

 

RameshwaramDhanushkodi4.JPG

 

குறுகிய நிலபரப்பில் தனுஷ்கோடி நோக்கி ...

 

 

 

 

RameshwaramDhanushkodi2.JPG

 

கடல் அரிப்புகளினூடாக பயணம்

 

 

 

WR_20131206044833.jpeg

 

இன்றைய(06-12-2013) தினமலரில் வந்த செய்தி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்கோடி என்ற பெயரைக் கேட்கும் போதெல்லாம், முன்பு அதனை நேரில் பார்த்திருக்காவிட்டாலும்....
அது எமது சொந்த‌ ஊர் என்ற உணர்வு ஏற்படும். இணைப்பிற்கு நன்றி வன்னியன்.
நேரம் கிடைக்கும் போது, பொறுமையாக இருந்து.. இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. நேரம் கிடைக்கும்போது முழுமையாகப் படித்துப் பார்க்கிறேன்.

rameswaram2.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்வுக்கு நன்றிகள், வன்னியன்!

 

அனுபவம் தொகுக்கப் பட்ட விதம், மனதை ஒருமுறை உலுக்கிச் செல்கின்றது!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

.. மிகவும் பயனுள்ள   கட்டுரை .  நான் இதுவரை அறியாத பல விடயங்கள் உள்ளன. தங்கள் பணி தொடரட்டும். 

 

  பகிர்வுக்கு நன்றி வன்னியன்..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி!

 

தனுஸ்கோடி பெயர் வரக் காரணம் என்ன? என தேடியதில் கிட்டிய செய்தி

ராமேஸ்வரத்தில் அனைவராலும் பெரிதும் ரசிக்கப்படும் இடம் தனுஸ்கோடி. ரத்னாகரம் மற்றும் மஹோததி என்ற இரண்டு கடல் சந்திக்கும் இடம் இது. மேலும் இந்த இடத்திலிருந்து தலைமன்னார் 18 கடல் மைல் மட்டுமே.

 

இந்த தனுஸ்கோடி பெயர்காரணம் என்ன எனில், ராவண வதத்தின் பின் விபீஷனன் ஆட்சியில் அமர வேண்டிய நேரம், ஆனால் விபீஷனனோ அமர மறுத்தான். ராமனே அமர வேண்டுமென எண்ணினான். ஆனால் ராமன் அதனை மறுத்து விபீஷனனை ஆட்சியில் அமரச்செய்தான். விபீஷனன் மேலும் ஒரு வேண்டுதலை வைத்தான். அது என்ன எனில், “ராமா!  என்ன இருந்தாலும் நாங்கள் அரக்கர்கள், நீங்களோ மானுடர்கள். எதிர் காலத்தில் நம் சந்ததியினர் சண்டையிடலாம். எனவே தாங்கள் தயை கூர்ந்து இந்த பாலத்தை உடைத்து விடுங்கள்”  என்பதே அது.

 

அவனது கோரிக்கையை ஏற்ற ராமபிரான் தனது அம்பு நுனியால் கோடு கிழித்து பாலத்தை உடைத்தார். அம்பு = தனுஸ், நுனி=கோடி:  தனுஸ்கோடி. இதுவே இந்த பெயர் காரணம்.

 

ராமன் தனுஸால் கோடு கிழிக்க ஆரம்பித்த இடமே தனுஸ்கோடி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்பதான் இந்தப் பெயர்க் காரணம் தெரிகின்றது!

இணைப்புக்கு நன்றி  வன்னியன்!  :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இனி காலம் விட்டுச் சென்ற படங்கள் - தனுஷ்கோடி

 

 

1156874d1382552710t-dhanushkodi-beauty-r

 

முகுந்தராயர் சத்திரம் வரை சாலை. இதன் பின்னர் தனுஷ்கோடிக்கு(10 கி.மீ) வரை சாலை கடலால் அழிந்து போயுள்ளது.

 

 

1156876d1382552710t-dhanushkodi-beauty-r

 

1156875d1382552710t-dhanushkodi-beauty-r

 

தனுஷ்கோடி சாலை.

 

 

 

1159984d1383070886t-dhanushkodi-beauty-r

 

அழிந்த நிலையில் தனுஷ்கோடி தொடருந்து நிலையம்

 

 

 

1158269d1382845236t-dhanushkodi-beauty-r

 

எஞ்சியுள்ள வீடுகள்

 

 

83897671.jpg

 

சர்ச்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிறைய இடம் இன்னும் மிச்சம் இருக்கும் போலை இருக்கே.. :unsure: இலங்கைக்கு தூக்கிக் குடுத்து சமாளிக்க முடியாதா? :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிறைய இடம் இன்னும் மிச்சம் இருக்கும் போலை இருக்கே.. :unsure: இலங்கைக்கு தூக்கிக் குடுத்து சமாளிக்க முடியாதா? :icon_idea:

 

யார் வீட்டு நிலத்தை, யார், யாருக்கு தாரை வார்ப்பது டங்கு? :wub:

 

இது 1974ம் வருடம் அல்ல..'மணிமேகலை'யின் தோழரும் இப்பொழுது அரியணையில் இல்லை! :rolleyes:

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

scene1.jpg

 

காலனால் மனித இனம் அழிந்த தனுஸ்கோடியில், மனிதம் தேடி இறங்கும் உறவுகள்...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ராஜவன்னியர்.

Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

100 ஆண்டுகளை நிறைவு செய்த பாம்பன் ரயில் பாலம்!

 

Tamil_Daily_News_6528437138.jpg

 

 

ராமேஸ்வரம்-பாம்பன் பகுதியை இணைக்கும் வகையில் கடலில் அமைந்துள்ள மிக நீளமான ரயில் பாலம் திங்கள் கிழமையுடன் (பிப். 24) 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடாவை இணைக்கும் பகுதி பாம்பன் கடலாகும்.

மண்டபம் நிலப்பரப்பு பகுதியையும், பாம்பன் கடல் பகுதியையும் இணைக்கும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைந்துள்ள ரயில் பால கட்டுமானப் பணிகள் 1902 ஆம் ஆண்டு துவங்கின.

கடலில் ரசாயன கலவைகளோடு 144 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 மீட்டர் நீளத்தில் 1000 டன் இரும்பால் அமைந்துள்ள தூக்குப் பாலத்தை தாங்கும் அளவுக்கு கடலில் 124 அடி ஆழத்திலிருந்து இரண்டு பில்லர் தூண்கள் கட்டப்பட்டு, அதன் மேல் இரண்டு இரும்பு கிரில் லீப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பாலம் கட்டும் பணி 1913 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கப்பட்டது. ஏறத்தாழ 10 ஆண்டுகளாக பாலம் கட்டும் பணி

நடைபெற்றது. அனைத்து பணிகளும் முடிந்து 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி மண்டபம் மற்றும் பாம்பன் பகுதி வழியாக தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.

இந்த பாலம் தொடங்கப்பட்டது முதல் இன்று வரை ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே ஊழியர்களாகப் பணியாற்றக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 100 ஆண்டுகளை நிறைவு செய்த பாலத்தை சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.

 

http://www.dinamani.com/tamilnadu/2014/02/24/100-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article2074477.ece

 

 

இன்று (24-02-2014) பாம்பன் பாலம் நூற்றாண்டு விழா!

 

pamban-rail-bridge-2-600.jpg

 

paamban-invitation.jpg

 

 

ராமேஸ்வரம்: பாம்பன் பால நூற்றாண்டு விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று பாம்பனில் தொடங்கிவைக்கிறார். நாட்டின் மிகப்பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும் பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் 1902ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்படும் என ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.  10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று 1913ம் ஆண்டு டிசம்பரில் முழுமையாக பணிகள் முடிந்தன. 1914ம் ஆண்டு ஜனவரியில் பாம்பன் பாலத்தில் ரயிலை இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

அதே ஆண்டில் பிப்ரவரி 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு, முதல் பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு பிப். 24ம் தேதியுடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இந்திய ரயில்வே துறையால் வரலாற்றுச்சிறப்பு மிக்க பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது. இதன் தொடக்க விழா  ஜனவரி28ல் பாம்பனில் தொடங்கியது. நிறைவு விழா இன்று பிப்ரவரி 24ல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாம்பன் ரயில் நிலையத்தில் இன்று பகல் 12.30 மணிக்கு அமைச்சர் சுந்தரராஜ் தலைமையில் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைக்கிறார். விழாவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

 

Thanks:Thinakaran.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலேயர் காலத்தில்... தமிழகத்தும், இலங்கைக்கும்.... எவ்வளவு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது என்பதை இப் பதிவின் மூலம் அறியக்கூடியதாக இருந்தது.
இப்போதிருக்கும் நிலையை, பார்க்க...
இரண்டு நாட்டுக்கும்.... 47, 48´ல் சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று என்ணத் தோன்றுகின்றது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இப்போதிருக்கும் நிலையை, பார்க்க...

இரண்டு நாட்டுக்கும்.... 47, 48´ல் சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் என்று என்ணத் தோன்றுகின்றது.

 

அவனே நல்ல மேய்ப்பன் என்கிறீர்களா? :lol:

தொழிலில் உண்மையும், சிரத்தையும், ஒரே இனத்திற்குள் ஒற்றுமையும் இல்லாவிடில், நாம் மந்தைகள்தான், அவர்கள் மேய்ப்பர்கள்தான். :)

 

Link to post
Share on other sites
 • 10 months later...
 • கருத்துக்கள உறவுகள்

9.JPG

 

 

ராமேஸ்வரம்:

 

தனுஷ்கோடியில் 2 ம் கட்டமாக தேசிய சாலை அமைக்க நிதி ஒதுக்கி, புயலில் சேதமடைந்த கட்டடங்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1964 ம் ஆண்டு டிச., 22 ல் நள்ளிரவு ஏற்பட்ட புயலால் தனுஷ்கோடியில் இருந்த ரயில்வே ஸ்டேஷன், கோயில், சர்ச், தபால் நிலையம், தங்கும் விடுதிகள் இடிந்து சின்னாபின்னமாகியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பலியாகினர். அதன்பிறகு மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் நடந்து 50 ஆண்டுகளாகி விட்ட நிலையில், இன்று வரை தனுஷ்கோடிக்கு சாலை, ரயில், மின்சாரம், சுகாதாரம் போன்ற எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.

 

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கி.மீ., தொலைவிற்கு உள்ள தேசிய நெடுஞ்சாலை மூலம் முகுந்தராயர் சத்திரம் வரை செல்ல முடியும். அங்கு அடிக்கடி வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும், தற்காலிக குடிசைகள் அமைத்து வசிக்கும் மீனவர்களும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ., தூரமுள்ள தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்க, முதல்கட்டமாக மத்திய அரசு, ரூ.25 கோடி நிதி ஒதுக்கியது. அதன்படி கடந்த செப்டம்பரில் பணி துவங்கியது. இச்சாலையில் உள்ள மணல் மேடுகளை சரி செய்து, முள் மரங்களை அகற்றி, நேராக சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால், இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

புயலில் உருக்குலைந்த கட்டடங்களை புராதன சின்னங்களாக்கி, பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் இச்சாலை, வளைவுகள் இன்றி நேராக அமையவும், அதே சமயம் புயலால் இடிந்த கட்டடங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் தீர்மானித்துள்ளது. இந்த புதிய சாலையை சென்னை ஐ.ஐ.டி. பொறியியல் நிபுணர்கள், மத்திய அரசு நியமித்த தனியார் நிறுவன (எம்.சி. கன்சல்டிங்) பொறியாளர்கள் குழு விரைவில் ஆய்வு செய்து, 'அப்ரூவல் சான்றிதழ்' வழங்கிய பிறகே, தார் சாலை பணி துவங்க உள்ளது.

2ம் கட்ட சாலை:

தனுஷ்கோடியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள அரிச்சல் முனைக்கு சாலை அமைக்க, 2ம் கட்டமாக மத்திய அரசு ரூ.28 கோடி ஒதுக்கி, ஜனவரி இறுதியில் டெண்டர் விட்டு பணிகள் துவங்க உள்ளதால், மீண்டும் தனுஷ்கோடி நகரம் புத்துயிர் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

50 ஆண்டுக்கு முன்பு பக்தர்கள் பின்பற்றிய ஆன்மிக முறைபடி, தனுஷ்கோடியில் முதலில் புனித நீராடி விட்டு, ராமேஸ்வரம் கோயில் தரிசனம் செய்யும் வழக்கம் மீண்டும் வரவுள்ளது.

 

தனுஷ்கோடிக்கு சாலை அமைக்கும் பணி முடிந்ததும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வசதிக்காக ஓய்வு அறைகள், பொழுது போக்கு அம்சங்கள், குடிநீர், மின்சார வசதி மற்றும் பூஜை செய்து, புனித நீராட பாதுகாப்பான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த மாநில அரசு முன்வரவேண்டும். தனுஷ்கோடிக்கு புத்துயிர் ஊட்டும் மத்திய அரசின் வழியை, மாநில அரசும் பின்பற்ற வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

தினமலர், சனவரி 16,2015

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் எப்போது மோடி கட்டப் போகிறார் ராசவன்னியர்?? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இராமர் பாலம் எப்போது மோடி கட்டப் போகிறார் ராசவன்னியர்?? 

 

ராமரு பாலத்தை இந்துத்வா மோடி ஏன் கட்டப் போகிறார்? :o

 

இராமாயண விபீடனின் வாதப்படி, இலங்கையில் இருப்பவர்கள் அரக்கர்களாம்(?), இந்தியாவில் இருப்பவர்கள் மனிதர்குலமாம், ஆகையால் மீண்டும் அரக்கர்கள் பின்னாளில் தொல்லை கொடுக்ககூடாதென விரும்பி ராமரை வில் கொண்டு பாலத்தை அழிக்கச் சொன்னதாகவும் தனுஷ்கோடியில் நின்று ராமரு பாலத்தை உடைத்தார் எனவும் புராணம் சொல்கிறது.

இந்த 'அசுரர்-மனிதர்' சிந்தை வட ஹிந்தியர்களின் மனதில் இன்னமும் பலமாக ஊறிப்போயுள்ளது. (ஒருவேளை இந்த சிந்தைதான் ஈழத்தமிழர்களை, வட ஹிந்தியர்கள் சினேகமாக பார்ப்பதை தவிர்க்கிறதோ என எனக்கு ஐயமுண்டு :o )

மூன்று வாரங்களுக்கு முன் நான் ராமேஷ்வரம் & தனுஷ்கோடி சென்றபொழுது அங்கே இவர்களின் நம்பிக்கையை வட ஹிந்திய சுற்றுலாவாசிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் தமிழ் வழிகாட்டிகளிடமிருந்து இதை கேள்விப்பட்டேன்.

 

ராமர், விபீடனுக்கு மீண்டும் இலங்கை மன்னனாக முடிசூட்டிய இடமான(கோதண்டராமர் கோயில்) முகுந்தராய சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரை சாலைகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 12 மீ அகலத்தில் சாலையை மேம்படுத்தி மணல் திட்டுகளை மட்டமாக்கும் இயந்திரங்களும், சர்வே செய்யும் ஊழிய்ர்களையும் காண முடிந்தது.கடல் அரிப்பிலிருந்து புதிதாக மேவும் சாலையை பாதுகாக்க சாலையின் இருபுறமும் பாறைகளால் ஒரு ஆள் உயரத்திற்கு அடுக்கி அப்பாறை தொகுப்பை கலையாமலிருக்க நெருக்கமான வலைகளால் பின்னபட்டிருந்தது. :)

 

சிதைந்து கிடக்கும் தனுஷ்க்கோடி கிராமத்திலிருந்து 3 - 4 கி.மீ தூரத்தில், மணல்திட்டின் கடைக்கோடியில் மிகப் பெரிய "கண்காணிப்பு கோபுரத்தையும்" தனுஷ்கோடியின் சிதைந்த சர்ச்சிலிருந்து காண முடிந்தது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இராமாயண விபீடனின் வாதப்படி, இலங்கையில் இருப்பவர்கள் அரக்கர்களாம்(?), இந்தியாவில் இருப்பவர்கள் மனிதர்குலமாம், ஆகையால் மீண்டும் அரக்கர்கள் பின்னாளில் தொல்லை கொடுக்ககூடாதென விரும்பி ராமரை வில் கொண்டு பாலத்தை அழிக்கச் சொன்னதாகவும் தனுஷ்கோடியில் நின்று ராமரு பாலத்தை உடைத்தார் எனவும் புராணம் சொல்கிறது.

இந்த 'அசுரர்-மனிதர்' சிந்தை வட ஹிந்தியர்களின் மனதில் இன்னமும் பலமாக ஊறிப்போயுள்ளது. (ஒருவேளை இந்த சிந்தைதான் ஈழத்தமிழர்களை, வட ஹிந்தியர்கள் சினேகமாக பார்ப்பதை தவிர்க்கிறதோ என எனக்கு ஐயமுண்டு :o )

மூன்று வாரங்களுக்கு முன் நான் ராமேஷ்வரம் & தனுஷ்கோடி சென்றபொழுது அங்கே இவர்களின் நம்பிக்கையை வட ஹிந்திய சுற்றுலாவாசிகளுக்கு மொழிபெயர்த்துச் சொல்லும் தமிழ் வழிகாட்டிகளிடமிருந்து இதை கேள்விப்பட்டேன்.

 

 

 

முள்ளிவாய்க்காலுக்கு 'முன்னுரை எழுதியதும்', 'முடிவுரை எழுதியதும்' வட இந்தியர்களில் முட்டாள் தனமான... அரக்கர்... தேவர் என்ற நம்பிக்கையே என்பதில் எனக்கு எந்த விதமான குழப்பமுமில்லை, வன்னியன்!

 

அந்த நம்பிக்கையைச் சிங்களத்தலைமை பயன் படுத்தியது தான் உண்மை!

 

ஆனால், வட நாட்டுக்காரன் மறந்தாலும், நம்ம தமிழ் வழிகாட்டிகள் மறக்க விட மாட்டார்கள் போல உள்ளது! :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனால், வட நாட்டுக்காரன் மறந்தாலும், நம்ம தமிழ் வழிகாட்டிகள் மறக்க விட மாட்டார்கள் போல உள்ளது! :o

 

ராமேசுவரம் நகரின் வட மேற்கு பகுதியில் கெந்தமாதன பர்வதம் பகுதியிலுள்ள ராமர் பாதம் கோயிலில் ஒரு தமிழ் வழிகாட்டி, வரலாற்றை சாதாரணமாக விளக்க தயாரானாலும் கூட வட ஹிந்தியர்கள், அசுரர்-மனிதர் என பொருள்படும்படியே இந்தியில் அடித்துக் கூறியதை காண முடிந்தது. எனக்கு, இந்தி நகி மாலும், அதனால் ஓரளவே அனுமானிக்க முடிந்தது.

 

அதிகாலை 'ஸ்படிக லிங்க தரிசன'த்திற்காக காலை 5 மணிக்கு அக்னி தீர்த்தம் சென்றபொழுது கண்ட "ராம்... ராம்" வடக்கத்திய கூச்சலைக் கேட்டும், பார்த்ததில், நாம் இருப்பது 'தமிழர்நாடு'தானா என்ற சந்தேகமே வந்துவிட்டது..! :o

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தரைவழிப்பாதை இந்திய உபகண்டத்தை இன்னும் நெருக்கமாகக் கொண்டுவரும். கருங்கற்களைக் கொண்டு நிரவி ( ஏற்கனவே உங்கள் பதிவில் சொல்லியவாறு தனுஷ்கோடி வரைக்குமான பாதைக்கு செய்வது போல்) 20 மைல் பாதை ஒன்றைப் போடுவது இரண்டு அரசாங்களும் முயற்சித்தால் முடியாதது அல்ல. தமிழ் நாட்டினதும் இலங்கையின் வடபகுதியினது கடல் அரிப்பை இந்தப் பாதை குறைக்கும்.
 
 

.

Edited by ஈசன்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்வரன்,

நீங்கள் முன்னர் கூறியபடி(அதை நீங்கள் நீக்கியிருந்தாலும்), ஹிந்தியர்கள் தமிழக தமிழர்களை மதிக்காவிட்டால் பரவாயில்லை, எங்கள் மனங்களின் மீது கருங்கற்களை மேவி உங்களுக்கு மானசீக பாதை அமைந்து ஈழத்தமிழர்கள் இலக்கில் வெற்றியடைந்தால் மகிழ்ச்சியே!

இந்த சில்லுண்டிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். :lol:

 

Please go ahead & win the hearts of Hindians..! :icon_mrgreen:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.