Jump to content

டெல்லியில் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி எழுச்சி


Recommended Posts

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை வசப்படுத்துகிறது.

டெல்லியை பாஜக கைப்பற்றவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புது டெல்லி தொகுதியில், முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார்.

முதன்முதலாக தேர்தல் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 25 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையிலேயே ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பு காட்டுகிறது.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதை தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இளைஞர்கள் மத்தியிலும் வெகுவாகக் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/india/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article5436186.ece?homepage=true


காங்கிரஸை துவம்சம் செய்த ஆம் ஆத்மி.. முதல் தேர்தலிலேயே அபார வெற்றி
 
 
! Posted by: Sudha Updated: Sunday, December 8, 2013, 10:38 [iST] டெல்லி: முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட கையோடு, காங்கிரஸ் கட்சியை வேரோடு சாய்த்து விட்டது ஆம் ஆத்மி. அக்கட்சிக்கு டெல்லியில் கிடைத்துள்ள வெற்றி மிக முக்கியமானது, வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது. முதல் தேர்தலிலேயே 15 வருட கால காங்கிரஸ் ஆட்சிக்கு திரை போட்டு விட்டது ஆம் ஆத்மி. அதை விட முக்கியமாக கிட்டத்தட்ட பாஜகவையே நடுநடுங்க வைக்கும் அளவுக்கும் இடத்தைப் பிடித்து பாஜகவுக்கும் சற்று கலக்கத்தைக் கொடுத்துள்ளது கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி. காங்கிரஸை துவம்சம் செய்த ஆம் ஆத்மி.. முதல் தேர்தலிலேயே அபார வெற்றி! டெல்லி சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 25 இடங்களில் இக்கட்சி முன்னிலையில் உள்ளது. 30 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவுகிறது. லீடிங் செய்திகள் வரத் தொடங்கியதுமே கேஜ்ரிவாலின் ஆதரவாளர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு கொண்டாட்டங்களில் குதித்தனர். அவர்களிடையே கேஜ்ரிவாலும் காணப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது இப்போதைய கவலை அடுத்த முதல்வர் யார் என்பது அல்ல. அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. நாட்டுக்கு எப்படி உதவப் போகிறோம் என்பது மட்டுமே எங்களது ஒரே கவலை என்றார். பின்னர் தியானம் செய்வதற்காக அலுவலகத்துக்குள் போய் விட்டார் கேஜ்ரிவால். பாஜக ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருந்தாலும் கூட கேஜ்ரிவாலின் எழுச்சிகரமான வெற்றி, அக்கட்சிக்கும் பெரும் நெருக்கடியாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள். Topics: aam aadmi, arvind kejriwal, congress, bjp, delhi, assembly polls, ஆம் ஆத்மி, அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸ், பாஜக, டெல்லி, சட்டசபைத் தேர்தல்

Read more at: http://tamil.oneindia.in/news/india/aap-s-whooping-debut-189099.html

டில்லி, ராஜஸ்தானில் காங்கிரஸ் படுதோல்வி; ஊழல் எதிர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் ஆதரவு தினமலர் – 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்
  • டில்லி, ராஜஸ்தானில் காங்கிரஸ் படுதோல்வி; ஊழல் எதிர்ப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் ஆதரவு

  • புதுடில்லி: நமது அரசியல் வரலாற்றைப் பார்த்தால், நாம் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் 20 ஆண்டுகளுக்கு ஆளும் கட்சிகளே மீண்டும் 90 சதவீதம் ஆட்சிக்கு வந்துள்ளன. பின்னர் இந்த சதவீதம் 75 ஆக அடுத்த 25 ஆண்டுகளில் குறைந்தது. தற்போது இந்த விகிதம் 50:50 ஆக உள்ளது. அதாவது மக்களுக்கு நல்லது செய்யும் ஆளும் கட்சிகள், தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்கின்றன.

இன்று ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் 4 சட்டசபை தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஆளும் கட்சி வெற்றி நோக்கிச் செல்வதும், வளர்ச்சித் திட்டஙகளில் கவனம் செலுத்தாத ஆளும் கட்சி தோல்வியைத் தழுவும் நிலையும் காணப்படுகிறது. டில்லியில் மட்டும் வித்தியாசமான நிலை காணப்படுகிறது. ஆளும் காங்கிரஸ் மீது மக்கள் கோபம் கொண்டிருந்தாலும் மாற்றுக் கட்சியான பா,ஜ.,வுக்கு முழு ஆதரவு கொடுக்காமல், ஊழலை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய ஆம் ஆத்மி கட்சியையும் பா.ஜ.,வுக்கு இணையாக ஆதரித்துள்ளனர். இதனால் டில்லியில் மட்டும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.


ராஜஸ்தானில் பா.ஜ., இழந்த பெருமையை மீட்டு, மிகப் பெரிய பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வர இருக்கிறது. இங்கு அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மக்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் சவுகான் தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் பதவிக்கு வர இருக்கிறது. குஜராத் முதல்வர் மோடிக்கு அடுத்தபடியாக, சிறந்த முதல்வர் என்ற பெயரைப் பெற்றவர் சவுகான். மக்கள் நலனிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் இவர் காட்டிய அக்கறை மற்றும் மோடியின் பிரசாரம், இவர் மீண்டும்ஆட்சிக்கு வர வழி வகுத்துள்ளது.

சட்டீஸ்கரைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இழுபறி நிலை நீடித்தாலும் தற்போது பா.ஜ., முந்தி வருகிறது. இங்கும் ஆளும் கட்சியின் சாதனையே இதற்கு காரணமாக இருக்கிறது.

நடந்து முடிந்துள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்கள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் இந்த கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஆண்டு கொண்டிருக்கும் டில்லியில் ஆளும் காங்கிரசுக்கு தற்போது 3 வது இடம்தான் கிடைத்துள்ளது. டில்லியில் பா.ஜ.,வுக் 34 க்கும் மேற்பட்ட இடங்களிலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு 25 க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலை பெற்றுவருகின்றன. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் இங்கு இதனால் இங்கு இழுபறி நிலையே நீடிக்கிறது.

 

ராஜஸ்தானை பொறுத்தவரை இங்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ., பல இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தனது ஆட்சியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது. மத்திய பிரதேசம் , சட்டீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும் தக்க வைத்துக்கொள்கிறது. மொத்தம் 5 மாநிலங்களில் மிசோரம் நாளை எண்ணப்படுகிறது . இன்று எண்ணப்பட்டு வரும் 4 மாநிலங்களில் பா.ஜ., 3ல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைநகர் டில்லியை இழக்கிறது.
 

இந்த முடிவுகள் காங்கிரஸ்சுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் போல வரவிருக்கும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற பீதி காங்கிரசாருக்கு ஏற்பட்டுள்ளது.
 

கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாத இறுதி வரை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 90 உறுப்பினர்களை உடைய, சத்தீஸ்கர் சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 11 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நடந்தது. 230 உறுப்பினர்கள் உடைய, ம.பி., சட்டசபைக்கான தேர்தல், நவம்பர், 25ம் தேதியும், 200 உறுப்பினர்கள் அடங்கிய, ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், டிச., 1ம் தேதியும் நடந்தது. 70 உறுப்பினர்கள் அடங்கிய, டில்லி சட்டசபைக்கான தேர்தலும், 40 உறுப்பினர்கள் அடங்கிய, மிசோரம் சட்டசபைக்கான தேர்தல்(டிச., 4ம் தேதி) நடந்தது.


யார் முதல்வர் ? மத்திய பிரசேதத்தில் மீண்டும் சிவராஜ்சிங் சவுகான், சட்டீஸ்கரில் ராமன்சிங், ராஜஸ்தானில் கடந்த ஆட்சியின்போது முதல்வராக இருந்த வசுந்த்ரா ராஜே ஆகியோர் முதல்வராகவுள்ளனர். டில்லியில் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின்னர் இங்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற விவரம் தெரியவரும். ஏறக்குறைய தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மோடி பிரசாரத்திற்கு பரிசு: இந்த தேர்தலை பொறுத்தவரை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பா.ஜ.,வின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இது முதல் அவர் 5 மாநிலங்களிலும் அவர் சூறாவளி பிரசாரம் செய்தார். இவரது பிரசாரத்தின்போது நாட்டில் வளர்ச்சி பணிகள் நடக்க வேண்டுமானால் , பா.ஜ.,வுக்கு ஓட்டளியுங்கள், ஊழலை அகற்ற வேண்டுமானால் காங்கிரஸ் அரசை அகற்றுங்கள் என அவரது பிரசாரத்தின் போது முக்கிய அம்சமாக இருந்தது. சமீபத்திய தேர்தல் முடிவுகள் வரும் லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
 

யாருக்கும் ஆதரவு இல்லை; ஆம் ஆத்மி: டில்லி சட்டசபை தேர்தலில் முதன்முறையாக களம் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி கணிசமான தொகுதிகளை பிடிக்கும் . இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் பேசுகையில்: ஒரு வேளை டில்லி சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபை அமைந்தால் எங்கள் கட்சி பா.ஜ., அல்லது காங்., குடன் கூட்டணி வைக்காது, தனித்தே செயல்படும். யார் முதல்வராக வருகிறார் என்பது பற்றி கவலையில்லை, நாட்டுக்கு எப்படி உதவப்போகிறோம் என்பதே எங்களது கவலை என்றார்.
 

தவறான நடவடிக்கையால் டில்லியில் காங்கிரஸ் அரசு தோல்வியை சந்தித்துள்ளது என டில்லிக்கான பா.ஜ., முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்த்தன் கூறியுள்ளார்.


http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-054200517.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு மூன்றாவது இடமா.....
சந்தோசமான செய்தி. :)

Link to comment
Share on other sites

ராஜஸ்தான், டெல்லி, சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி ஈழக்கிற்து. டெல்லியில் ஆம் ஆத்மி 29 தொகுதியும், பாஜாக 31 தொகுதியும் பெற்றுள்ளன. இறுதி முடிவுகள் மாறாலாம். மத்திய பிரதேசம் உட்பட மற்ற மூன்று மாநிலங்களில் பாஜாக ஆட்சியமைக்கிற்து.

ஒழிந்தான் எட்டப்பன்.......

Link to comment
Share on other sites

 ஆம் ஆத்மி கட்சியின் அரசியல்வாதிகள் இந்தியர்களைக் கொண்டுள்ளதா? மனிதர்களைக் கொண்டுள்ளதா?

Link to comment
Share on other sites

ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்பு அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பில் இருந்தார், அரசின் நிர்பந்தங்களை தொடர்ந்து ஹாசாரே அரசுக்கு எதிரான போரட்டங்களை நிறுத்திக் கொண்ட போது அதிலிருந்து விலகி ஏழைகளின் கட்சி என்ற ஆம் ஆத்மி கட்சியை சென்ற ஆண்டு தொடங்கினார். இவர் ஒரு முன்னால் கலெக்டர் என்று நினைக்கிறேன், ஆம் ஆத்மி ஒரு மாநில கட்சி மட்டுமே, மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை வாக்குறுதியளித்தார். மேலும் இதுவே இவர் மற்றும் இவரது கட்சியினருக்கு கன்னி தேர்தல் என்பதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் இந்த அரசியல்வாதி இந்தியனா இல்லை மனிதனா என்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷீலா தீட்சித்தை வீழ்த்தினார் கேஜ்ரிவால்.

 

டெல்லி: டெல்லியில் ஆட்சியை இழந்ததோடு, 10 தொகுதிகளில் கூட வெல்ல முடியாத நிலைக்கு காங்கிரஸ் போய் விட்டதால், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

 

மேலும் புதுடெல்லி தொகுதியில் அவர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தோல்வியையும் தழுவினார்.

 
08-arvind-kejriwal-sheila-disk.jpg

 

ஷீலா தீட்சித்தை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 3 முறை முதல்வரான ஷீலா தீட்சித்தின், 4வது முறை முதல்வர் ஆகும் கனவை கேஜ்ரிவால் தோற்கடித்து விட்டார்.

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் ஷீலாவை வீழ்த்தி கேஜ்ரிவால் வெற்றி பெற்றார்.

 

கடந்த 15 வருடங்களாக காங்கிரஸ் வசம் இருந்து வந்த தலைநகர் தற்போது பாஜக வசம் போய்விட்டது. காங்கிரஸுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்துள்ளது ஆம் ஆத்மி. தேர்தல் முடிவுகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருப்பதால் காங்கிரஸ் வட்டாரம் அமைதியில் உறைந்துள்ளது.

 

பெரும் தோல்விக்கு காங்கிரஸ் போய் விட்டதால் ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தில்லான மனிதன் தான் தமிழ்நாட்டில் சிலர் கட்சி தொடக்கி 4 வருடம் மேல் ஒரு தேர்தலிலும் போட்டி இடாமல் நாங்கதான் அடுத்த பிரதமர் என்று சொல்லிட்டு திரியுறாங்க .

Link to comment
Share on other sites

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு தில்லான மனிதன் தான் தமிழ்நாட்டில் சிலர் கட்சி தொடக்கி 4 வருடம் மேல் ஒரு தேர்தலிலும் போட்டி இடாமல் நாங்கதான் அடுத்த பிரதமர் என்று சொல்லிட்டு திரியுறாங்க .

அறிந்தவரை முதல் தேர்தலிலேயே பெரும்பான்மை ஆட்சி அமைத்த தலைவர், எம்.ஜி.இராமச்சந்திரன் மட்டுமே...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

STATE ASSEMBLY ELECTIONS 2013 RESULTS LIVE

Delhi (70/70 Seats)
Parties Leading Won 2008 BJP 0 32 23 AAP 0 28 NA CONG 0 8 43 OTH 0 2 4
Madhya Pradesh (230/230 Seats)
Parties Leading Won 2008 BJP 0 165 143 CONG 0 58 71 BSP 0 4 7 OTH 0 3 9
Rajasthan (199/200 Seats)
Parties Leading Won 2008 BJP 0 162 78 CONG 0 21 96 OTH 0 16 26 INLD 0 0 0
Chhattisgarh (90/90 Seats)
Parties Leading Won 2008 BJP 0 49 50 CONG 0 39 38 BSP 0 1 2 OTH 0 1 0

 

-தற்ஸ் தமிழ்-

 

நடை பெற்ற நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் மண் கவ்வியுள்ளது.

இனி...  இதன் எதிரொலி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் கிடைக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இரண்டாம் இடத்தை வசப்படுத்துகிறது.

டெல்லியை பாஜக கைப்பற்றவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புது டெல்லி தொகுதியில், முதல்வர் ஷீலா தீட்சித்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் உள்ளார்.

முதன்முதலாக தேர்தல் களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 25 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் வகையிலேயே ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பு காட்டுகிறது.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதை தனது முக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. இளைஞர்கள் மத்தியிலும் வெகுவாகக் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

ஆம் ஆத்மி கட்சி  என்பதற்கு  பதிலாக  நாம் தமிழர் கட்சி  என  போட்டு வாசித்தேன்

அடுத்த தேர்தலில்  தமிழகத்திலிருந்து இப்படியொரு செய்தி  வரணும்

வரும். :icon_idea: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய  இந்தியா

தத்தமது மாநிலங்களை 

அந்தந்த பகுதி  மக்களே  ஆளுவதாகவும்

மத்திய  தேர்தலில் ஒழுங்கான வலுவான கட்சியையே  மக்கள் நிறுத்துகின்றனர்

அந்தவகையில் இன்றும் கண்ணுக்கெட்டிய  தூரம் வரை காங்கிரசு மட்டுமே தெரிகிறது.

இதுவே  காங்கிரசின்  நாடாளுமன்ற  தேர்தல் வெற்றிக்கான  காரணம்

ஒழுங்கான  

ஒற்றுமையான எதிர்க்கட்சியே இதுவரை தெரியவில்லை.........

Link to comment
Share on other sites

ஆம் ஆத்மி கட்சி என்பதற்கு பதிலாக நாம் தமிழர் கட்சி என போட்டு வாசித்தேன்

அடுத்த தேர்தலில் தமிழகத்திலிருந்து இப்படியொரு செய்தி வரணும்

வரும். :icon_idea:

ஆடி போய்

ஆனி போய்

ஆவணி வந்தா நம்ம நாம் தமிழர் கட்சி டாப்பிலே வந்துடும் அண்ணை..... :)

# தாமரை மலர்ந்தால் ஈழம் மலரும்

Link to comment
Share on other sites

ஆடி போய்

ஆனி போய்

ஆவணி வந்தா நம்ம நாம் தமிழர் கட்சி டாப்பிலே வந்துடும் அண்ணை..... :)

# தாமரை மலர்ந்தால் ஈழம் மலரும்

 

இனி வயதுக்கு வந்து என்ன வராட்டி என்ன  :D 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணாவுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கும்.. சீமான் அண்ணாக்கும்.. நல்ல அனுபவப் பகிர்வுகளை தரும் என்று நம்பலாம். மக்களின் மனங்களை நாடி பிடித்து நடந்து கொண்டால்.. நாம் தமிழரும் வெற்றுவாகை சூடும் நேரம் நீண்டு போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.வைகோவுடன் கூட்டணிவைத்தால் தமிழ்த்தேசிய வாக்குகள் பிரிவதைத்தடுக்கலாம்.

Link to comment
Share on other sites

ஆம் ஆத்மி கட்சி எப்படி என தெரியாவிட்டாலும் காங்கிரஸை பின்தள்ளி முன்னேறியது மகிழ்ச்சி.

 

நாம் தமிழர் கட்சியும் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும்.

Link to comment
Share on other sites

தொடங்கி ஒரு ஆண்டே முடிந்த 'இந்தி'க்கார கட்சியான ஆம் ஆத்மி கட்சி டெல்லி ஒன்றியத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரை எதிர்த்து போட்டியிட்டு அதிக அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அரவிந்த் மற்றும் அன்னா ஹசாரே இருவரும் 'ஊழல் ஒழிப்பு' என்ற மந்திரத்தால் மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர்கள். அரவிந்த் அதையே அரசியலாக்கி இப்போது சட்டமன்ற எதிர்க்கட்சியாகும் அளவிற்கு வெற்றியும் பெற்று விட்டார்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழல் என்பது பெரும் பிரச்சனையாக இருந்தாலும் உண்மையான பிரச்சனை அதுவல்ல. மாநிலங்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வு இல்லாதது, இந்திய நடுவண் அரசிடம் அதிகாரக் குவிப்பு, மக்களின் விவசாய நிலங்கள் சுரண்டப்படுதல், இயற்கையை சீரழித்தல், அனைத்து இன மக்களிடம் ஒரு மொழிக் கொள்கையை திணித்தல் , வேலை வாய்ப்பில் சம உரிமை கொடாமல் இருத்தல், மாநிலங்களின் உணர்வுகளை மதியாமல் இருத்தல், நீர் உரிமை , நில உரிமைகள் மறுக்கப்படுதல், முறையான மின்சாரப் பகிர்வை மறுத்தல் , பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தல் , மீனவர்களை பாதுகாக்க தவறுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆம் ஆத்மி கட்சி உட்பட எந்த கட்சியும் தீர்வு காண விரும்புவது இல்லை.

தமிழகத்தில் தற்போது தமிழினத்தின் அடிப்படை மொழி, பண்பாட்டு, வரலாற்று, கல்வி, நிலங்கள், வளங்கள் மீதான உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் இங்குள்ள தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இரு பெரும் திராவிட கட்சிகளையும் வீழ்த்த முடியும் என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. குறிப்பாக புதிய கட்சிகளான நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி, பல தேர்தல்களை சந்தித்த மதிமுகவோடு கரம் கோர்த்து வரும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்தால் நிச்சயம் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

டெல்லி அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய 'இந்தி'க்கார ஆம் ஆத்மி கட்சியை போல் தமிழர் இன நலன் சார்ந்த கட்சிகள் தமிழகத்தில் ஒன்றிணைந்தால் தமிழ் மக்களுக்கு வெற்றி நிச்சயம். இத்தகைய தமிழர் நல கூட்டணிக்கு தமிழக மக்கள், மாணவர்கள், தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகளும் ஆதரவு தருவார்கள். தமிழக கட்சிகள் சிந்திப்பீர்களாக!!

 

(facebook)

Link to comment
Share on other sites

சீமான் அண்ணாவுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. டெல்லி தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கும்.. சீமான் அண்ணாக்கும்.. நல்ல அனுபவப் பகிர்வுகளை தரும் என்று நம்பலாம். மக்களின் மனங்களை நாடி பிடித்து நடந்து கொண்டால்.. நாம் தமிழரும் வெற்றுவாகை சூடும் நேரம் நீண்டு போகாது.

 

நம்ம எம்பி ஶ்ரீதரன் தலைவர் உயிருடன் இல்லை என்று கூறுகிறார். இவர் தலைவர் உயிருடன் உள்ளார் என்று கூறுகிறார். ஆரம்பமே குழப்பமாக இருக்கிறது. எனினும் தமிழன் தமிழ்நாட்டை ஆள்வது மிக மிக மகிழ்ச்சியே!  :)  :o

Link to comment
Share on other sites

அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிட்டது தனது மாநில மக்களை காப்பாற்ற ...அண்ணன் சீமான் போராடுவதோ ஈழம் அமைக்க

அண்ணன் சீமான் வேண்டும் என்றால் யாழ்பாணத்தில் வெல்லலாம்

Link to comment
Share on other sites

அரவிந்த் கேஜ்ரிவால்: பாம்புகளில் நல்ல பாம்பு!  

கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்குக் யாரெல்லாம் – எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார்.

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%

அரவிந்த் கேஜ்ரிவால்

காங்கிரஸ்காரர்கள் ‘பொறுமைக்குப்’ பெயர் போனவர்கள். எதையும் நின்று நிதானித்து, ஆழமாய் ரசித்துச் செய்து முடிப்பதில் கில்லாடிகள் என்கிற புகழ் அவர்களுக்கு உண்டு. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஓட்டாண்டியாக்க வேண்டுமென்கிற ஒற்றை லட்சியத்துக்காக நூற்றாண்டுகளையும் கடந்து கொஞ்சம் கொஞ்சமாய் காய் நகர்த்தும் சாமர்த்தியம் அவர்களுக்குண்டு. சட்டென்று பாய்ந்து குரல்வளையைக் கடித்துக் குதறி ரத்தம் உறிஞ்சும் பாரதிய ஜனதாவின் வழிமுறையும் காங்கிரசின் வழிமுறையும் வேறு வேறானது. முந்தையது ரத்தக்காட்டேறி என்றால் இது ராட்சச அட்டைப்பூச்சி. வலியை உணரக் காலமாகும்.

நிற்க.

இப்படியாப்பட்ட பெருமைக்கும் புகழுக்கும் சமீபமாய் பெரும் ஆபத்து வந்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இன்றி டீசல் விலையை உயர்த்தியது, சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு விதித்தது, ஓய்வூதியத்தை சூதாட்டத்தில் இறக்கி விட்டது, வால்மார்ட்டை நுழையவிட்டது, இன்சுரன்ஸ் துறை மற்றும் ஊடகத் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரித்தது விமான சேவையில் அந்நிய முதலீட்டை அனுமதித்தது மற்றும் இறுதியாக முக்கியமான மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க முடிவு செய்தது என்று தேசத்தின் மேல் அதிரடித் தாக்குதல்களை காங்கிரஸ் கூட்டணி அரசு தொடுத்துள்ளது. இது மக்கள் மேல் தொடுக்கப்பட்ட ஒரு உள்நாட்டுப் போர்.

தலையே கூத்தாடும் போது வால் துடிக்கவாவது வேண்டுமல்லவா? தில்லி நடுத்தர வர்க்கத்தினரிடையே ஆக்ஸ்போர்டில் படித்தவர், பண்பானவர் என்றெல்லாம் பெயரெடுத்த சல்மான் குர்ஷித் நாலாந்தர ரவுடியைப் போல ‘எங்க ஏரியாவுக்கு வாடா மவனே முழுசா திரும்பிப் போய்டுவியான்னு பாக்கறேன்’ என்பது போல மிரட்டல் விடுத்துள்ளார். யாருக்கு இந்த மிரட்டல்? அர்விந்த் கேஜ்ரிவால் தான் மிரட்டப்பட்டவர். ஆம், வினவு வாசகர்களுக்கு நன்றாக அறிமுகமான ‘ அண்ணா ஆதரிக்கிறாரு ஆனா ஆதரிக்கலை’ புகழ் கேஜ்ரிவால் தான்.

கேஜ்ரிவால் தனக்கென்று சொந்தமாக ஒரு புத்தம் புதிய அரசியல் கம்பெனி துவங்கி கோதாவில் குதித்திருப்பது வாசகர்கள் அறிந்ததே. புதுப் படமல்லவா, எனவே புரமோஷன் வேலைகள் படு ஜரூராக நடந்து வருகிறது. நாளொரு ஊழல் குற்றச்சாட்டும் பொழுதொரு முறைகேட்டுப் புகாருமாக அம்பலப்படுத்தி டி.ஆர்.பி ரேட்டிங் பெற கடுமையாகப் போராடி வருகிறார். அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களின் யோக்கியதைகள் தொடர்ச்சியாக வெளியாகி இந்திய ஓட்டுக்கட்சி ‘ஜனநாயகம்’  ஒளிவீசிப் பிரகாசித்து வருகிறது.

சமீபமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘ஊழல் எதிர்ப்பு’ ரியாலிட்டி ஷோவின் எத்தனாவதோ சீசனில் முதலில் மாட்டியவர் ராபர்ட் வதேரா. ஐம்பது லட்சத்தில் ‘தொழிலைத்’ துவங்கிய நாட்டின் முதல் மறுமகனார் ராபர்ட் வதேரா, சூரியவம்சம் லாலாலா பாட்டு முடியும் இடைவெளிக்குள் முன்னூறு கோடியாக அதை வளர்த்தெடுத்ததன் பின்னே இருக்கும் இரகசியங்களை கேஜ்ரிவால் சந்திக்கு இழுத்து வந்தார். இதில் டி.எல்.எஃப் என்கிற கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ராபர்ட் வதேராவுக்கு சும்மா கைமாத்தாக பல கோடி ரூபாய்களைக் கொடுத்ததும், அதைத் தொடர்ந்து தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அரியானாவிலும் அந்நிறுவனம் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டதும் அம்பலமானது.

அதைத் தொடர்ந்து ராபர்ட் வதேரா நேரடியாகவே அடிமாட்டு விலைக்கு நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதும், பல்வேறு வகையான அசையாத சொத்துக்களை வாங்கிப் போட்டிருப்பதும், இதற்கு அரசு இயந்திரமே முன்னின்று உதவியிருப்பதும் ஒவ்வொன்றாக வெளியாகி காந்தி குடும்பத்தின் மானம் கந்தல் கந்தலானது. நாட்டின் முதல் குடும்பத்தின் முதல் மறுமகனாரையே சந்திக்கு இழுத்திருப்பதால் யாவாரம் சூடு பிடிக்கும் என்று கேஜ்ரிவால் எதிர்பார்த்திருப்பார். ஆனால், அவர் நினைத்த அளவிற்கு  செல்ப் எடுக்கவில்லை. தில்லி ஜந்தர் மந்தரில் வழமையாக கூடும் ஊழல்  எதிர்ப்பு கட்சியினரின் கூட்டங்களுக்கு எப்போதும் வரும் அதே இருநூற்றி பதினேழரை பேர்கள் தான் வந்திருந்தனர்.

திரைக்கதையில் நான்கைந்து சண்டைக்காட்சிகள் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார்களோ என்னவோ, ராபர்ட் வதேராவைத் தொடர்ந்து சல்மான் குர்ஷித் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி ஆகியோரும் மேடைக்கு வந்துள்ளார்கள்.

சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான என்.ஜி.ஓ அமைப்பு, சுமார் 71 லட்சம் அளவிற்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஜாகீர் ஹுசேன் நினைவு அறக்கட்டளை எனும் பெயரில் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் அவரது மனைவி லூசி பெர்னான்டஸும் இணைந்து நடத்தி வரும் என்.ஜி.ஓ அமைப்பு, ஊனமுற்றோருக்கு கருவிகள் வாங்கியதில் போர்ஜரி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டு கொள்ளையடித்திருப்பதாக வட இந்தியாவைச் சேர்ந்த ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகத் தொடங்கியது.

இதையடுத்து, சல்மான் குர்ஷித் மேல் நடவடிக்கை எடுக்க கோரி பிரதமரின் இல்லத்தை மாற்றுத்திறனாளிகளோடு முற்றுகையிட்டுப் போராடப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது தொகுதியான பரூகாபாத்தில் பேசிய போது தான் சல்மான் குர்ஷித், அரவிந்த் கேஜ்வாலுக்கு மிரட்டல் விடுத்திருந்தார்.

நிதின் கட்காரியைப் பொருத்தளவில் ஆர்.எஸ்.எஸின் அரசியல் கம்பேனிக்கு மேனேஜர் வேலை பார்ப்பதோடு சொந்தமாக பூர்த்தி சின்ச்சன் கல்யான்காரி சன்ஸ்தா என்கிற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு பெயர் பலகை அமைப்புகள் பலவற்றிடம் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் கோடிக்கணக்கான முதலீடுகள் வந்து குவிந்துள்ளன.

1995-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டுவரை மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சிவசேனா – பரதிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிதின் கட்காரி, ஐடியல் ரோடு பில்டர் எனும் கம்பெனிக்கு பல்வேறு கட்டுமானக் காண்டிராக்டுகளை வாரி வழங்கியுள்ளார். 1996-ல் 46 கோடி ரூபாயாக இருந்த இந்நிறுவனத்தின் வருமானம் 1999-ம் ஆண்டு வாக்கில் 67 கோடிகளாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஐடியல் நிறுவனம் தனது இன்னொரு துணை நிறுவனமான குளோபல் சேப்டி விஷன் வழியாக நிதின் கட்காரின் பூர்த்தி நிறுவனத்திற்கு எந்த அடிப்படையும் இல்லாமல் ‘கடனாக’ 165 கோடி ரூபாய்களை வழங்கியுள்ளது. மேலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களையும் நிதின் கட்காரி மகாராஷ்டிர அரசின் துணையோடு ஆக்கிரமித்திருப்பதும் அம்பலமானது.

இப்படியாக கேஜ்ரிவால் தன்னைச் சுற்றி 360 டிகிரியிலும் கற்களை சராமாரியாக எரிந்து வருவது தேசிய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளாக இடம் பெற்று வருகின்றது.

இதில் பாரதிய ஜனதாவின் நிலை தான் உண்மையிலேயே நகைச்சுவையாய் இருக்கிறது. காங்கிரசு சேற்றில் சிக்கித் தவிக்கிறதே என்று இவர்களால் குதூகலிக்கவும் முடியாதபடிக்கு மலக்குட்டைக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எதிர்ப்பு ரியாலிட்டி ஷோவிலிருந்து கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவில்லை என்பதால் வெளியேற்றப்பட்டுள்ள பாரதிய ஜனதா, வைல்ட் கார்ட் ரவுண்டிலாவது இடம் கிடைக்க வேண்டுமே என்று தவியாய்த் தவிக்கிறது. நடக்கும் நாடகத்தில் எந்தக் கதாபாத்திரத்தின் வாலைப் பிடித்துக் கொண்டு தொங்கலாம் என்கிற முடிவை வழக்கம் போல் இன்னும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகள் எடுத்து முடிக்கவில்லை. எடுத்து விட்டாலும் அது அவரகளின் பாரம்பரிய வழக்கத்தின்படி மொக்கையாய்த் தான் இருக்குமென்பதால் அதைப் பற்றி மக்களே கவலைப்பட மாட்டார்கள். போகட்டும்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒரு குறிப்பான பிரச்சினைக்காக போராடும் இயக்கம் என்பதைக் கடந்து பொதுவான அரசியல் கட்சி என்கிற அவதாரத்தை எடுத்துள்ளது. இவர்கள் ஊழல் எதிர்ப்பு மற்றும் அதற்கான தீர்வாக ஜன்லோக்பால் மசோதா என்பவற்றை முன்வைத்து இயங்கிய போதே பிரச்சினைகளைப் பற்றி கொண்டிருந்த கண்ணோட்டம் அபாயகரமானது. ஊழல் ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசும் போதே அதற்கான அடிப்படைகளையும் அதன் ஊற்றுமூலம் என்னவென்பதையும் பற்றி பேசாமல் தவிர்த்தே வந்தனர்.

அதன் காரணமாகவே  இந்த நாட்டின் மிகப் பெரிய கிரிமினல் கும்பலான ரிலையன்ஸ் குழுமத்திடமிருந்தும் கூட உதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அலைக்கற்றை ஊழலில் தின்று வீங்கிய செல்பேசி நிறுவனங்கள் முன்வந்து வழங்கிய உதவிகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டே ஊழலை எதிர்த்து முழக்கமிடத் தயங்கவில்லை.

பன்னாட்டு மூலதனத்தின் முன்னும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளிடமும், மேல்நிலை ஏகாதிபத்தியங்களின் பாதார விந்தங்களிலும் இந்தியப் பொருளாதாரமே அடகு வைக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களின் லாப வேட்டைக்கும் பகாசுர கொள்ளைக்கும் தேசத்தின் எல்லைகள் அகலமாகத் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையிலிருந்தே இந்நாட்டின் வளங்களை வேண்டிய மட்டிலும் கூடிய விரைவில் உறிஞ்சித் தீர்த்து விட இவர்கள் வெறி கொண்ட முறையில் முயற்சிப்பதிலிருந்து தான் சட்டங்கள் நடைமுறைகள் விதிமுறைகள் மரபுகள் என்று சகலமும் கழிவறைத் தொட்டிக்குள் வீசியெறியப்படுகிறது. ஊழல் துவங்குகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் வெட்டியெடுத்ததாக சொல்லப்படும் கிரானைட் ஊழலைப் பற்றிப் பேசும் போது பி.ஆர்.பிக்கு எந்த வரைமுறையும் இன்றி மலைகளைப் பட்டா போட்டுக் கொடுக்க வகை செய்த அரசின் தனியார்மயக் கொள்கைகளில் இருந்து தான் துவங்க வேண்டும். அனைத்து மக்களுக்குச் சொந்தமான இயற்கையான வளம் ஒன்றை பி.ஆர்.பி என்கிற தனி நபருக்குச் சொந்தமாக்க வேண்டும் என்பதில் இருந்து தான் ஊழல் துவங்குகிறது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு என்பதெல்லாம் வெறும் கேலிக்கூத்து – குரல்வளையை ஒரு இஞ்சு ஆழத்துக்கு அறுக்க அனுமதி; அதற்கு மேல் அனுமதியில்லை என்பதைப் போன்ற வாதம் தான் அது.

கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்குக் யாரெல்லாம் – எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார். ஊழல் ஒழிப்புக்கான வருத்தமில்லா வாலிபர் சங்கமாக இருந்து அதன் அடித்தளத்தின் மேல் இப்போது அவதரித்திருக்கும் கட்சியின் நிலைப்பாடும் இப்படித்தான் இருக்கும் என்பது ஆபத்துக்குரியது.

இன்றைய நிலையில் ஆளும் கும்பல் தேசத்தின் மக்களின் மேல் ஒரு உள்நாட்டுப் போரைத் திணித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயராத நிலையிலும் எந்தக் காரணமும் இன்றி டீசல் விலை உயர்த்தப்பட்டதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டுமளவிற்கு அதிகரித்துள்ளது. மின் உற்பத்தியும் வினியோகமும் தனியார் நிறுனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டதால் மின்சார கட்டணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. தண்ணீர் வினியோகமும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார்களுக்குத் திறந்து விடப்பட்டு விட்டது.

“நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சேன். இப்ப ஜாலியா இருக்கேன். நான் ஏன் போராடனும்” என்று கிண்டலாக கேட்கும் தடித்தோல் கனவான்களுக்கும் ஆப்பு வந்துள்ளது மன்மோகன் மாண்டேக் சிதம்பரம் கும்பலால். உழைப்பால் உயர்ந்த விக்கிரமன் பட ஹீரோக்களின் ஓய்வூதியத்தையும் சேமிப்பையும் காப்பீட்டையும் சூதாட்டத்தில் இறக்கி விட அரசு தயாராகி வருகிறது. இன்று கிரீஸிலும் ஐரோப்பாவின் பிற நாடுகளிலும் நடப்பது நாளை இங்கும் நடக்கும். இதெல்லாம் தாராளமய பொருளாதார சீர்திருத்தத்தின் பல்வேறு கட்டங்களாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு, ஓய்வூதியத்தை தனியாருக்கும் அந்நியருக்கும் திறந்து விடுவது, பச்சை வேட்டை, வேதாந்தாவின் சுரண்டல், 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், பி.ஆர்.பியின் மலைத்திருட்டு, பா. சிதம்பரத்தின் கள்ளச் சிரிப்பு, மன்மோகனின் கள்ள மௌனம், நிதின் கட்கரியின் நில மோசடி, ராபர்ட் வதேராவின் நில மோசடி, ராகுல் காந்தியின் ஃபிராடுத்தனம், நரேந்திர மோடியின் இதழோரம் வழியும் இரத்தம், விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு – இவையனைத்தும் வேறு வேறு அல்ல. தேசத்தின் இறையாண்மையை ஒட்டுமொத்தமாக அடகுவைத்து நாட்டை மீண்டும் காலனியாக்கும் ஒரு  மாபெரும் நிகழ்ச்சி நிரலின் சின்னச் சின்ன பகுதிகளாக செயல்படுத்தப்படும் திட்டங்களின் வெளிப்பாடுகள் தான் இவை.

ஆக, இவையணைத்துக்கும் மையமான பிரச்சினையாக விளங்கும் காரணத்தைப் பற்றிப் பேசாமல் தவிர்ப்பதென்பது அதற்குச் சேவை செய்வதில் தான் முடியும். அந்த வகையில் தான் ஊழிலின் அடிப்படையை பற்றிப் பேசாமல் தவிர்க்கும் அரவிந்த் கேஜ்ரிவால் அதே மௌனத்தை மின்வெட்டு, விலைவாசி உயர்வு, தனியார்மயமாக்கம், பன்னாட்டு மூலதனத்தின் சுரண்டல் போன்றவைகளையும் பேசாமல் அமைதி காக்கிறார்.

போராடும் மக்களை திசை திருப்புவதற்காக ஏகாதிபத்தியங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட என்.ஜி.வோ பாணியிலான அரசியல் இயக்கம்தான் அரவிந்த கேஜ்ரிவால் மற்றும் அண்ணா ஹசாரேவுடையது. பரபரப்பான முழக்கங்கள், கிளர்ச்சிகள், வாய்ச் சவடால்கள் என்று வடிவத்தில் புரட்சியையும், உள்ளடக்கத்தில் ஆளும் வர்க்க சேவையும்தான் இத்தகைய தன்னார்வக்குழுக்கள் கொண்டிருக்கின்றன.

மாறி மாறி வரும் ஓட்டுக்கட்சிகளின் அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து தாம் வஞ்சிக்கப்படுவதை மக்கள் ஒருவேளை உணர்ந்து விழிப்படைந்து விட்டால் அவர்களுக்கு ஒரு மாற்று இருக்கட்டுமே என்பது தான் கேஜ்ரிவாலுக்கு முதலாளிததுவ ஊடகங்களில் கிடைக்கும் முக்கியத்துவத்தின் அடிப்படை. ஒருவேளை காங்கிரசும் பாரதிய ஜனதாவும் தமது ஊழல் மகாத்மியங்களால் மக்களில் ஒருபிரிவினரிடையே செல்வாக்கிழந்து போனால் அந்த இடைவெளியை அரவிந்த் கேஜ்ரிவால் நிரப்புவது போன்ற மாயையைத் தரக்கூடும். ஆனால் அந்த மாயை எதையும் சாதித்து விடாது என்பதும் ஆளும் வர்க்கத்திற்கு தெரியும். அவர்களுக்குத் தேவை மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன். “நல்ல நடிகன்”.

அதாவது, ‘நல்ல’ தாலிபான்கள்  ‘நல்ல’ பாம்பு  என்றெல்லம் சொல்வார்களே அதுபோல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

http://www.vinavu.com/2012/10/23/kejriwal-congress-bjp/

Link to comment
Share on other sites

மிசோரமில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை  

Tamil-Daily-News_94936335087.jpg

 

 

 

மிசோரம்: மிசோரம் சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் நடைபெற்ற 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மற்றொரு கட்சியான மிசோ தேசிய முன்னணி 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் நவம்பர் 25-ம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

- See more at: http://ww.dinakaran.com/News_Detail.asp?Nid=71156#sthash.zNbBnijZ.dpuf

Link to comment
Share on other sites

அட போங்கப்பா எல்லாமே முடிஞ்சு போச்சாம் இனி காங்கிரஸ் வெண்டால் தான் என்ன தோற்றால் தான் என்ன தாங்கள் நினைச்சத சாதிச்சு முடிச்சிட்டாங்கள் :(

Link to comment
Share on other sites

நல்லது இந்திய அரசியல் வாதிகளில் ஒரு சிறிய அளவேனும் மனிதப் பண்புகளுக்கான குறியீடுகள் வளர் து வருவது நல்ல அறிகுறி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.