Jump to content

இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ?


Recommended Posts

தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் ,

ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ?

இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் உணமையைத் தானே சொல்லுறாங்கள்,அந்த விளம்பரம் ஆசிய மக்களுக்கானது.தமிழர்களுக்கு மட்டுமானதல்ல

Link to comment
Share on other sites

அதில் உணமையைத் தானே சொல்லுறாங்கள்,அந்த விளம்பரம் ஆசிய மக்களுக்கானது.தமிழர்களுக்கு மட்டுமானதல்ல

 

இட்லி மசாலா தோசெ தமிழர்களூக்கான மொழியா, ஆசியா மக்களுக்குமானதா?! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது.. இந்திய மக்களின் மொழி உச்சரிப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இங்கு பிறந்த நம்மவர்களின் பிள்ளைகள் கூட ஊரில் இருந்து வாறவையை பலவாறு நக்கல் அடிக்கினம் தானே.உலகில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் மொழி உச்சரிப்பில் மாறுபாடுகள் உண்டு. அதனை அங்கீகரிக்கவும்.. மொழி என்பது தொடர்பாடலுக்கானது.. அந்தஸ்துக்கானதல்ல என்ற சிந்தனையும் இன்றேல்.. நக்கல் நளினம்.. மட்டுமே இவற்றில் விஞ்சி இருக்கும். இந்த ஆட் அதன் வியாபார நோக்கில் வெற்றி பெற்றுள்ளது. சர்ச்சைகள் கிளம்பும் போது.. விளம்பரமும் தானே கூடி வருகிறது.

 

இந்தியா வரும் ஆங்கிலேயர்களுக்கு என்ன பிரிட்டிஷ் ஆங்கிலத்திலா எல்லாம் பரிமாறப்படுகிறது இல்லைத் தானே. ரேக் இட் ஈஸி. எல்லாத்திலும் குறை கண்டுகொண்டிருந்தால் சுற்றம் இருக்காது. சில விடயங்களில் நெகிழ்வோடு அரவணைத்துப் போவதும் அவசியம். பிரதான இலக்கை கோட்டை விடக்கூடாது அது தான் முக்கியம். :icon_idea::)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்லி மசாலா தோசெ தமிழர்களூக்கான மொழியா, ஆசியா மக்களுக்குமானதா?! :)

அது இந்தியர்களுக்கான உணவு அங்கிருந்து இப்போ எங்களிடமும் வந்துவிட்டது
Link to comment
Share on other sites

அது இந்தியர்களுக்கான உணவு அங்கிருந்து இப்போ எங்களிடமும் வந்துவிட்டது

 

என்ன செய்வது.. என்னதான் வசதியும் வாய்ப்பும் வெளிநாடுகளில் இருந்தாலும்… விளம்பர உற்பத்திக்கு இந்தியாவைத்தான் நாடவேண்டிக் கிடக்கிறது.. நகைக்கடை புடவைக் கடை என்று பலதையும்தான் சொல்லுறேன்.  :)

Link to comment
Share on other sites

இங்கு இரண்டு விரல்களையும் தண்ணிக்குள் வைத்துக்கொண்டு தண்ணியை கொண்டு மேசையில் சிந்தும் வண்ணம் வைத்தல் ,  மூக்கை நோண்டி கொண்டு பேசுதல் , இவை நாகரிகமான செயல் அல்ல , இது ஒரு இனம் செய்வதாக காட்டுவது நாகரிகமா ?

Link to comment
Share on other sites

ஒரு வெள்ளைக்காரனுடைய உணவகத்தில் தமிழ் இளைஞன் ஒருவன் தரக்குறைவாக உபசரிக்கப்படுவதாகவே காட்சி உணரவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சேர்ந்து என்ன செய்வதா உத்தேசம்???????

Link to comment
Share on other sites

லெபரா பொதுவாக அழகான விளம்பரங்களை செய்யும். உறவுகளையும் உணர்வுகளையும் வைத்து சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஆனால் ஹரி குறிப்பிட்டிருக்கும் விளம்பரம் முகத்தை சுளிக்க வைப்பதாகத்தான் இருக்கிறது.

வெளிநாட்டில் வாழ்பவரையும் தாயகத்தையும் நெருக்காமவதை பொருளாகக் கொண்டு விளம்பரம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மூக்கை சுரண்டுவது, குடிதண்ணீருக்குள் விரலை வைத்துக் கொண்டு வருவது போன்ற செயற்பாடுகளின் மூலம் தாயகம் நினைவுபடுத்தப்படுகிறது.

தாயகத்தை நினைவுபடுத்துவதற்கு நல்ல விடயங்களும் இருக்கின்றன.

இதே பொருளில் அமைந்த இன்னும் ஒரு லெபரா விளம்பரமும் இருக்கின்றது. தேவாலயத்தில் நடக்கின்ற வெள்ளைக்காரரின் திருமணத்தில் பாதிரியார் "கெட்டி மேளம்" சொல்வதாகவும், நாதஸ்வரமும், தவிலும் வாசிக்கப்படுவதாகவும் வருகின்றது. அது நன்றாகவே இருந்தது.

இந்த உணவக விளம்பரம்தான் இப்படி அமைந்து விட்டது.

Link to comment
Share on other sites

லெபரா விளம்பரங்கள் எல்லோருக்கும் பிடித்த ஒன்றாகத்தான் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதிலுள்ள குற்றங்குறைகள் ஆரம்பத்தில் தெரிந்தபோதும் அதனைக்கண்டுகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை. இன்று தேவையை லெபரா நிறுவனம் தோற்றுவித்துள்ளது. பொதுநலவாய மகாநாடு நடாத்த சிறீலங்காவிற்கு அது அளிக்கொடுத்த நிதி தமிழர்கள் அனைவரையும் கொதிக்கச் செய்திருப்பது நியாயமானதே. :mellow:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இரண்டு விரல்களையும் தண்ணிக்குள் வைத்துக்கொண்டு தண்ணியை கொண்டு மேசையில் சிந்தும் வண்ணம் வைத்தல் ,  மூக்கை நோண்டி கொண்டு பேசுதல் , இவை நாகரிகமான செயல் அல்ல , இது ஒரு இனம் செய்வதாக காட்டுவது நாகரிகமா ?

 

எனக்கு... இந்தக் காட்சிகள், முகத்தை சுழிக்க வைக்கின்றது.

எம்மை... நாமே... தரம் தாழ்த்தி விளம்பரம் செய்வது தவறு.

Link to comment
Share on other sites

பான்ச்! பொதுநலவாய மாநாட்டுக்கு நிதி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது லெபரா அல்ல, அது லைக்கா

Link to comment
Share on other sites

பான்ச்! பொதுநலவாய மாநாட்டுக்கு நிதி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது லெபரா அல்ல, அது லைக்கா

 

மன்னிக்க வேண்டுகிறேன் பாஞ்சுக்கு வயதுபோட்டுது.

Link to comment
Share on other sites

எனக்கு... இந்தக் காட்சிகள், முகத்தை சுழிக்க வைக்கின்றது.

எம்மை... நாமே... தரம் தாழ்த்தி விளம்பரம் செய்வது தவறு.

 

எனக்கு என்ன கவலையென்றால் , இந்த விளம்பரம் பல இருந்தாலும் தமிழ் தொலைக்காட்சிகள் இதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகின்றனர், எந்த விதமான வெட்கம் ரோசம் இல்லாமல்

தொப்பி அளவாக இல்லாவிடினும் நம்மாக்கள் போட்டு கொள்கிறார்களே!

 

 விளம்பரத்தை கவனமாக பார்த்தால் தெரியும் , தமிழ் உணவகத்தை தான் நக்கல் செய்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன கவலையென்றால் , இந்த விளம்பரம் பல இருந்தாலும் தமிழ் தொலைக்காட்சிகள் இதையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகின்றனர், எந்த விதமான வெட்கம் ரோசம் இல்லாமல்

 

 விளம்பரத்தை கவனமாக பார்த்தால் தெரியும் , தமிழ் உணவகத்தை தான் நக்கல் செய்கின்றனர்

 

மற்றவர்களைக் குறை கூறிப் பயனில்லை gari. இந்தியாவிலும் இலங்கையிலும் எம் உணவகங்களில் மக்களின் உணவுமுறை வெளி இடங்களில் பார்க்கமுடியாதபடிதானே உள்ளது. முதலில் நாம் அப்படியானவற்றைத் திருத்திக்கொள்ள முயலவேண்டுமே தவிர மற்றவனில் பிழை பிடிப்பது தவறு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விளம்பரம் எந்த விதத்தில் தமிழை இழிவு படுத்துகின்றது என்பது கொஞ்சமும் விளங்கவில்லை!....விளங்கியவர்கள் விளக்குங்களேன்.

:)

 

இட்லி.வடை,தோசை என்பது பெரும்பாலும் ‘தென்னிந்தியா உணவுகள் தானே!?

 

 

 

எனக்குப்புலப்பட்டது அந்த வெள்ளைக்காரனுக்கு ‘இவ்வளவு தமிழ் உணவு தெரிஞ்சிருக்கு எண்டுதான்!.... எல்லாத்திலையும் ‘நூல்’ பிடிச்சால் கஷ்டம்!

 

 

Link to comment
Share on other sites

தமிழ்தங்கை! லெபரா வெளிநாட்டையும் தாயகத்தையும் இணைக்கிறது என்பதற்கான விளம்பரம் இது. வெளிநாட்டு உணவகத்தில் சாப்பிடப் போனவர் திடிரென்று தாயக சூழலை அங்கே காண்கிறார்.

இட்லி, தோசை, வடை என்பதோடு மட்டும் தாயகம் அங்கே அடையாளப்படுத்தப்படவில்லை. மூக்கை சொறிவது, குடிதண்ணீருக்குள் விரலை வைத்து கொடுப்பது என்று அநாகரீகமான, அசுத்தமான செயற்பாடுகள் ஊடாகவும் தாயகம் அடையாளப்படுத்தப்படுகிறது. இதுதான் இங்கே பிரச்சனையாகிறது.

தாயகத்தை அடையாளப்படுத்த அநாகரீகமும், அசுத்தமும்தான் கிடைத்ததா? லெபராவின் மற்றைய விளம்பரங்களைப் போல் நல்ல விடயங்களை அடையாளப்படுத்தியிருக்கலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

மற்றவர்களைக் குறை கூறிப் பயனில்லை gari. இந்தியாவிலும் இலங்கையிலும் எம் உணவகங்களில் மக்களின் உணவுமுறை வெளி இடங்களில் பார்க்கமுடியாதபடிதானே உள்ளது. முதலில் நாம் அப்படியானவற்றைத் திருத்திக்கொள்ள முயலவேண்டுமே தவிர மற்றவனில் பிழை பிடிப்பது தவறு.

 

 

  நிச்சியமாக அதைத்தான் நான் விரும்புகின்றேன் , ஆனால் என் அம்மா அழகில்லாமல் இருந்தாலும் பிறர் நக்கல் அடித்தால் ஆத்திரம் வரும்

Link to comment
Share on other sites

இந்த விளம்பரம் எந்த விதத்தில் தமிழை இழிவு படுத்துகின்றது என்பது கொஞ்சமும் விளங்கவில்லை!....விளங்கியவர்கள் விளக்குங்களேன்.

:)

 

இட்லி.வடை,தோசை என்பது பெரும்பாலும் ‘தென்னிந்தியா உணவுகள் தானே!?

 

 

 

எனக்குப்புலப்பட்டது அந்த வெள்ளைக்காரனுக்கு ‘இவ்வளவு தமிழ் உணவு தெரிஞ்சிருக்கு எண்டுதான்!.... எல்லாத்திலையும் ‘நூல்’ பிடிச்சால் கஷ்டம்!

 

சில விடயங்கள் சிறிதாகதான் தெரியும் , ஆனால் இப்படி பல சிறு விடயங்கள் இம் இனத்துக்கு எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது எனது கருத்து,  சிங்கள ஹிந்தி படங்களில் தமிழர்களை கோளாளிகளாக அடிக்கடி சித்தரிக்கப்படுவதையும் நாம் பெரிதாக எடுப்பதில்லை, ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுப்பதால்தான் அடிக்கடி இப்படி சித்தரிக்கின்றனர் ,சில விடயங்கள் மேல் நோக்கமாக பார்க்கும் போது தெரியாது , உதாரணத்துக்கு கீழ் உள்ள இணைப்பில் வரும் நடிகையின் உரையை கவனியுங்கள் , எதில் உனக்கு கனிமொழி தேன்மொழி போன்றோர்கள் தான் கிடைக்கும் என்று சொல்கிறார் , இதன் பொருள் என்ன ? கனிமொழி தேன்மொழி என்ற பெயர் உள்ளவர்கள் குறைந்தவர்களா? இப்படி பல படங்களில் இருந்து உதாரணம் கூறலாம் , இதன் விளைவுதான் இன்று தூய தமிழ் பெயர் வைக்க நம்மவர்கள் தயங்குகின்றனர், தவறாகவும் புரிந்துகொள்கின்றனர்

http://youtu.be/Mr5qur6tQIs?t=49m27s

Link to comment
Share on other sites

ஹரி இணைத்த கனிமொழி, தேன்மொழி காட்சியைக் கண்டேன்.. தமிழர்கள் அந்தக் காட்சியை இரசித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.. (ராஜா ராணி ஒரு வெற்றிப்படம் என்று அறிந்தேன்.. ) வாழ்க தமிழ்..! வளர்க அவர்தம் மான உணர்வு..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த விளம்பரம் எடுத்த லிப்பரா மொபைல் நிறுவனத்தவரும் ஒரு தமிழர் என்ற முறையில் அவருக்கு ஏன் இது எமது இனத்தை கேவலப்படுத்துவதாக தெரியவில்லையா ? 

 

அல்லது அப்படிதான் இன்றும் இலங்கை இந்தியாவில் சாப்பாட்டு கடைகளில் உணவு பரிமாறுபவர்கள் நடப்பதினால் அது சாதாரண நிகழ்வாக விட்டுவிட்டாரா என்பது அவரிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டும் 
 
 
''இன உணர்வென்பது எல்லருக்கும் ஒரே மாதிரி  இருப்பதில்லை'' 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.