Jump to content

வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு :


Recommended Posts

மீண்டும் தேர்வு

By  admin  On 9 Dec, 2013 At 11:17 AM | Categorized As முதன்மைச் செய்திகள் | With  0 Comments 

வி.உருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக ஏகமனதாக மீண்டும் தேர்வு : உலகத் தமிழர்கள் வாழ்த்து !
DSC_3928
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் பிரதமராக வி.உருத்திரகுமாரன் அவர்கள்,ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டிசெ 6-7-8 ஆகிய நாட்களில் அமெரிக்காவின் நியூ ஜேர்சியிலும் ,துணையாக சூரிச்சிலும் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்துக்கான முதலாவது அரசவை அமர்விலேயே ஏகமனதாக வி.உருத்திரகுமாரன், பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

DSC_3928.jpg

அரங்கு நிறைந்த கரவொலியோடும், உலகத் தமிழர்களது வாழ்த்துக்களோடும் பிரதமர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஏற்புரைரையினை வழங்கிய வி.உருத்திரகுமாரன் அவர்கள்,

2002ம் ஆண்டு தமிழ் தேசிய இனத்தின் உணர்ச்சியின் பிரதிபலிப்பான, எழுச்சியின் வடிவமா,ன தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் போராடும் ஆற்றலினைவும், பேரம்பேசும் திறத்தினையும், மக்களையும் தேசத்தினையும் நிர்வகிக்கும் தகமை எனும் தலையினையும், அனைத்துலகிற்கு எடுத்தியம்பி, அதனடிப்படையில் அனைத்துலகத்தின் அனுசரணையுடன் சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது. அந்தவேளையிலே தேசியத் தலைவரது நம்பிக்கைக்கு ஒருவனாக அதில் பணியாற்றும் பேறு எனக்கு கிடைத்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை அந்த செயற்பாட்டின் ஒர் தொடர்சியாகவே நான் பார்க்கின்றேன். அந்தப் பணி முடியும் வரை அந்த இலட்சியம் அடையும் ஓயப்போவதில்லை என முரசறைந்தார்.

 

RudraTGTE.jpg

தற்போது அமெரிக்காவினை வாழ்விடமாக கொண்டுள்ள திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இராஜதந்திர அரசியற் செயற்பாட்டுக்களத்தில் பெரும் பங்காற்றி வருகின்ற செயல்வீரர்களில் ஒருவர். அனைத்துலக சட்டவல்லுனராக விளங்கும் இவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகராகவும் ,2002ம் ஆண்டுக்காலப்பகுதியின் சமாதானப் பேச்சுவார்தையில் தமிழீழர் தரப்பு பிரதிநிதிகளாக ஒருவராக பங்கெடுத்தவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்து, அதன் முதற்தவணை அரசவையின் பிரதமராக திகழ்ந்திருந்தவர். தற்போது மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

 

http://naathamnews.com/?p=203

Link to comment
Share on other sites

புதிய பாராளுமன்ற அமர்வு:

 

5.jpg

 

நியூ யோர்க.

 

 

DSC01861-SMILE.jpg

 

ஜெனிவா

 

4.jpg

 

புதிய அவைத்தலைவர் கலாநிதி தவேந்திரராஜா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது

படித்த

பண்பான 

மக்களுக்கு நன்கு தெரிந்த கூட்டம் தான்.........

மக்கள் மட்டும்  இவர்களுடனில்லை....

ஏன்??? :(  :(  :(

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ...அவர்களின் ராஜதந்திர பணி தொடரட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிரதமரே. உங்கள் பணிகள் தமிழீழம் என்ற இலக்கை அடைய உதவி நிற்கட்டும்.

Link to comment
Share on other sites

நலலதொரு உரையை ஆற்றியுள்ளார். வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

 

நான் நா. க. அரசின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஒரு கேள்வி, மக்களின் ஆதரவு இவர்களுக்கில்லையென்றால், அவர்களின் ஆதரவு யாருக்குத்தான் இருக்கிற்தெனறு நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

 

நான் நா. க. அரசின் ஆதரவாளன் இல்லை. ஆனால் ஒரு கேள்வி, மக்களின் ஆதரவு இவர்களுக்கில்லையென்றால், அவர்களின் ஆதரவு யாருக்குத்தான் இருக்கிற்தெனறு நினைக்கிறீர்கள்?

 

வணக்கம்  ரகு......

 

அது ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்த்து

ஏமாந்ததால் வந்த வரிகள்..

 

யாருக்கு இருக்கிறது என்ற தங்கள் கேள்விக்கு தேசியத்தலைவரைத்தவிர வேறு ஒருவரையும்

ஒன்றையும் இன்றையநிலைவரை  சொல்லமுடியவில்லை....

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழ்த்துக்கள்

நாடுகடந்த அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

12/05/2014, 12/06/2014, 12/07/2014 ஆகிய நாட்களில் நியூயோர்க்கிலும் பரிசிலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. 

 

 

இன்றைய நியூயோர்க் அமர்வில், பிரதானமாக, விருந்தினர்களின் உரைகள் மட்டும் இடம் பெற்றது.  பல மேல்ச்சபை உறிப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்தும், கருத்துக்கள் பதிந்தும் உறையாற்றியிருந்தார்கள். காலை 10:20 அளவில்,  முதல் நாள், அக வணக்கத்துடனும், மாவீரருக்கு மலர் அஞ்சலியுடனும் ஆரம்பமானது. சபாநாயகர் தவேந்திர ராஜா தலைமை வகித்திருந்தார் .  

 

பிரதம விருந்தினர் தலைமை உரையை ஆரம்பித்த பினாங்கு மாநிலப் பேராசிரியர், 30 வருடங்களாக கம்பீர நிலையில் இருந்த ஈழத்தமிழர் வாழ்வு இன்று கவலைக்கிடமாக இருக்கிறது என்று கூறினார். கடந்த மாதம்,  தமிழரின் "அடையாளத்தை தேடி" என்ற தலைப்பில் அங்கு நடைபெற்ற கூடத்தில் நிறைவேற்றப்பட்ட 8 பிரேரணைகளைப்பற்றியும், அதில் ஒன்றான வடக்கு கிழக்குக்கான பொதுக் கருத்து வாக்கெடுப்பு பற்றியும் பேசியிருந்தார்.

 

அதைத் தொடர்ந்து டென்மார்க் பாராளுமன்றத்திலிருந்து  வந்த வாழ்த்துச் செய்தி பேராசிரியர் சிறீஸ்கந்த ராஜாவினால் படிக்கப்பட்டது. டென்மார்கில்  நகரசபை உறுப்பினராக இருக்கும் தர்மகுலசிங்கம் தனது உரையை  தொடர்ந்தார். அடுத்தாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தலைவர் போல் கனகராஜா உரையாற்றினார்.

 

பிரையன் செனிவரத்தினா  தனது பேச்சில் நா.க.அரசிடம் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்றதை விளங்கப்படுத்தினார்.  பொது கருத்து வாக்கெடுப்பையும், இனவழிப்புக் குற்றத்தை விசாரிப்பதையும் கவனமெடுத்து முன்னேற்ற வேண்டும் என்றார்.

 

அடுத்ததாக பெருத்த எதிர்பார்ப்புக்களுடன் இருந்த நாஞ்சில் சம்பத்தின் வேளை. தொடர்ந்த பலத்த கரகோசங்களுக்கிடையில் சம்பத் தனது செய்தியை வழ்ங்கினார். தமிழ் நாடும் இந்தியாவும் தங்கள் பங்கை ஆற்றாதவரைக்கும் தமிழ் ஈழம் மலர்வது இலகுவல்ல என்றார். வங்கக் கதையை கூறிய அவர், தமிழ் நாட்டு தமிழர்கள் தமிழ்நாடுக்கு தனியரசை மத்தி வழங்கினால் கூடஅவர்கள் பெற்றுக்கொள்ள ஆரவம் இல்லை. அப்ப்டியிருக்க தமிழ் நாட்டை காரணம் காட்டி தமிழ் ஈழத்தை மத்தி முடக்குவதை ஏமாற்றுவித்தையாக வருணித்தார்.  1930 களில் காந்தி கொழும்பு வந்து உரையாற்ற முயன்ற போது மேடை பிடுங்கப்பட்டு, காந்தியும் துரத்தபட்டார். பின்னர் நேரு உரையாற்ற வந்து அதே நிலைமையை சந்தித்திருந்தார்.  கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் AKG இலங்கை வாழ் (ந்த) மலையாளிகள் சமூகத்திற்கு உரையாற்ற வந்து ஏமாந்தமையால், பிற்காலம் மலையாளிகளை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துவிட்டதாக கூறினார்.  ரஜீவ் காந்தி வந்த போது பிறேமதாசா வேண்டுமன்றே வெளியூர் சென்றிருந்த்தார். பின்னர் கடல்படை கோமாளி ஒருவனால்(விஜித்தமுனி) ரஜீவ் தாக்கப்பட்டிருந்தார்.  அவற்றைக்கூறி, சம்பத் சிங்கள அரசு இந்தியாவை ஏற்றுகொள்ளாது என்றும், தமிழ் மக்கள் பிரச்சனையை தீர்த்து தமிழரை அணைத்துக்கொள்வது மட்டும்தான் இந்தியாவுக்கு செய்யத்தக்கது என்றும் கூறினார்.

 

அடுத்ததாக பேராசியர் சிறீஸ்கந்த ராஜா சேவை பாராட்டு செய்யும் போது Jonathan Miller ஆல் தாரிக்கப்பட்ட  வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜாவின் கதையை ஒளிப்பேழை ஒன்று மூலம் போட்டுக்காட்டினார். வைத்தியர் வரதராஜா முள்ளிவாய்க்காலில் கடமையாற்றும் போது அரசு செய்திருந்த அட்டூளியங்களை சர்வதேச ஊடகங்களுக்கு எடுத்து சொல்லியிருந்தார்.  பின்னர் வைத்திய சாலையில் நடந்த குண்டுத்தாக்குதலில் காயம் அடைந்த போது கைப்பற்றுப்பட்டு நாலாம் மாடியில் வைத்திருக்கப்பட்டார். ராணுவம் வைத்தியரை காப்பாற்றியதின் நோக்கம் அவரை அவரது அரசுக்கெதிரான அறிக்கையை மறுதலிக்க வைக்கவே. வைத்தியருடன் கைதான பலர் விசாரணை முடிந்த உடனேயே இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன் போது வரதராஜா மேடையில் வந்து தான் அமெரிக்கவுக்கு தப்பி வந்ததையும், இலங்கையில் தனது அனுபவங்களையும் கூறினார்.

 

மதிய உணவுக்கு பின்னர் மேல்சபை கீழ் சபை உறுப்பினர்களின் அறிமுகம்

 

நாளைய நிகழ்வில் கீழ்ச்சபை பிரேரணைகள், விவாதங்கள், பிரதமரின் உரை என்பவை இடம் பெறும்.

 

 
 
நேரம் காலை 9:00

 

 

நாதம் ஊடக சேவையிலிருந்து

 

உலகத்தமிழர் தேசிய கொங்கிரஸ் அமைக்க தமிழக அரசிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை ! 
 
 தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து, உலகத்தமிழ் தேசிய கொங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்குதன் மூலம் தமிழர்களை உலக அரங்கில் பலம் மிக்க மக்களாக நிலைநிறுத்த முடியும் என பிரதமர் வி.உருத்;திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு தமிழக அரசினை நோக்கி இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.
 
நியூ யோர்க்கிலும் பாரிசிலும் இணைந்ததாக இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2வது நேரடி பாராளுமன்ற முதன்நாள் தொடக்வுரையிலேயே இந்த அறைகூவலை பிரதமர் வி.உருத்;திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார்.
 
இத்தகையதொரு முன்னெடுப்பில் தமிழர் தலைவர்கள் எல்லாம் தமது கட்சி பேதங்கள் பார்காது இணைந்து கொள்ளல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளதோடு
இத்தகையதொரு உலகளாவிய தமிழர் அமைப்பு, ஈழத் தமிழர் விடுதலையைத் தாங்கி நிற்கும் போது, அனைத்தலக அரசுகள் எம்மை உதாசீனம் செய்து விட முடியாது என அவர் இடித்துரைத்துள்ளார்.
 
முதன்நாள் அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரையின் முழுவடிவம் :
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் மாவீர்களை மனதில் இருத்தி எனது வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்காலத்தக்குரிய இரண்டாவது நேரடிஅமர்வில் கூடியிருக்கிறோம்.
 
இந்த அமர்வு அரசவை உறுப்பிர்களையும், மேலவை உறுப்பினர்களையும் இணைத்ததோர் அமர்வாக அமைகிறது. இவ் அமர்வில் பங்கு பற்றும் அனைவரதும் கரங்களையும் தோழமையுடன் பற்றிக் கொள்கிறேன்.
 
நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 
 
இந்த நான்கு ஆண்டு காலத்தில் தமழீழ மக்களின் தணியாத தாகமாகிய சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்ற அரசியல் தீர்வை, எமது மக்களின் விடுதலை வேட்கையை குறியீடு செய்து நிற்கும் ஓர் அமைப்பாக நாம் உருவெடுத்துள்ளோம். 
 
அந்த இலக்கை வென்றடைவதற்காக ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர முறையில் போராடுவதற்காக செயற்படும் அமைப்பாக நாம் வடிவெடுத்தள்ளோம். 
 
இன்றைய தருணத்தில் எத்தகைதொரு காலகட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டடு என்பதனை ஒரு தடவை திரும்பிப் பார்த்தல் பொருத்தமுடையது எனக் கருதகிறேன். 
 
2009 ஆம் ஆண்டின் மே மாதம்!
 
ஈழத் தமிழர் வரலாற்றில் மட்டுமன்றி உலகத் தமிழர் வரலாற்றிலும் நிலையாய் நிலைத்து விட்ட மாதம். 
 
அனைத்துலக அரசுகளின் உதவியுடன் சிங்களம் எமது மக்களை இனஅழிப்புக்குள்ளாக்கி, தமிழீழத் தாயக மண்ணின் மீதான ஆக்கிரமிப்பினை மேற்கொண்டு முடித்த காலம்.
 
சிங்களத்தின் ஒவ்வொரு காலடி நகர்வையும் எதிர்த்து, தமிழீழத்தின் வீரர்கள் தேசியத் தலைவரின் தலைமையில் போரிட்டனர். ஆயிரக்கணக்காணோர் மாவீரராகித் தாய்மண் மடியில் விதைந்தனர். 
 
சிங்களம், நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் தனது பேரை நடாத்தியது. தடைசெய்யப்டட்ட இரசாயன ஆயதங்களையும் போரில் பயன்படுத்தியது. அணுகுண்டினைத் தவிர அனைத்து பேராயுதங்களும் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டன.  
 
இருந்த போதும் எதிரியிடம்; மண்டியிடாது மானத்துடன் போரிட்டது நமது சின்னம் சிறிய தேசம். 
 
மாபெரும் தமிழன அழிப்பினை நடாத்தியவாறு தமிழீழ தேசத்தை ஆக்கிரமித்து தமிழர்களின் விடுதலை வேட்கையினை நசுக்கி விட்டதாக கொக்கரித்தான்.
 
இத்தயைதொரு வரலாற்றுச் சூழலில்தான  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிறப்பெடுத்தது. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் குறியீடாகத் தன்னை வரித்தக் கொண்டது. 
 
முள்ளிவாய்கால் தமிழின அழிப்பின் முதலாம் ஆண்டின் நிறைவை சிங்களம் வெற்றி மமதையுடன் கொண்டாடிக் கொண்டிரந்த அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தினை அமெரிக்க நாட்டில் நடாத்தியது. 
 
இதன் மூலம் சிங்களத்தக்கும் அனைத்துலக சமூகத்தக்கும் தமிழீழ மக்களின் விடுதலை உணர்வு உயிர்ப்பாக உள்ளது என்ற செய்தி முரசறைந்து சொல்லப்பட்டது.
 
அன்பானவர்களே!
 
இன்று நாம் ஒரு முக்கியமானதொரு காலகட்டத்தில் கூடியிருக்கிறோம்.
 
முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடைபெற்று ஜந்தரையாண்டுகள் கழிந்து விட்டன. 
 
இந்த காலகட்டத்தில் தமிழீழ தேசம் எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதனையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய மூலோபாயத்தடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய நேரமிது.
 
போரின் ஊடாக சிங்களம் மேற்கொண்ட தமிழின அழிப்பின் கோரத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. 
 
தமிழர்களை ஒரு தேசம் என்ற நிலையியில் இருந்து அழித்தொழித்து வெறும் உதிரிகளாகச் சிதைத்து விடும் நோக்குடன் மிகவும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்ட இனஅழிப்பு அது.  
 
தமிழர் தேசத்தின் வளங்கள் யாவும் சிங்களத்தால் சிதைக்கப்பட்டன. தமிழர் தேசத்தின் நிறுவனங்கள் எல்லாம் நொறுக்கப்பட்டன. 
 
மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கக்கூடிய தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டு மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கபட்டனர்,போர்க்கைதிகளாகிய ஏராளமான போராளிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு கொடுமைப்படுத்தபட்டனர். 
 
தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வு சூறையாடப்பட்டது. 
 
தமிழீழ மண் சிங்கள இராணுவ புலனாய்வு வலைப் பின்னலால் சிறைப்பிடிக்கப்பட்டது. 
 
உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாவருக்கம் மரணபயத்தின ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
 
மக்கள் அச்சம் நிறைந்த சூழிலில் வைக்கப்பட்டனர். மக்களுக்கான அரசியல் 
வெளி மறுக்கப்பட்டது. 
 
இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்கள் தம்மிடம் மண்டியிடுவார்கள் என்றுதான் சிங்களம் கருதியது
 
தமது அடையாளங்களையும் தேச நிலைப்பாட்டையும் கைவிட்டு «நாம் எல்லோரும் சிறிலங்கர்கள் என்ற ஒரு மக்கள்» என்ற சிங்களத்தின் நிலையைத் தமிழர்கள் தழுவிக் கொள்வார்கள் என்றுதான் எண்ணியது.
 
தமிழர்கள் தம்மீது நம்பிக்கை இழந்து சிங்களத்தின் மேலாண்மையை இயல்பாக 
ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்பியது.
 
சிங்களத்தின் இந்த எதிர்பார்ப்பைத் தமிழ் மக்கள் முழுமையாக தகர்த்தெறிந்ர் இருக்கிறார்கள் என்பதை இந்த ஜந்தரை ஆண்டுகள் உறுதியாக பதிவு செய்திருக்கின்றன.
 
இது நமது மக்கள் ஈட்டியுள்ள ஒரு முக்கியமான வெற்றி. 
 
நாம் ஆயதப்போராட்டம் மௌனிக்கபட்டாலும், தமிழர் தேசமாக சிங்களத்தின் காலில் மண்டியிடவில்லை. சிங்கள மேலாண்மையினை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. 
 
இந்த வெற்றியில் இருந்து நமது இறுதி இலக்கான தமிழீழ அரசினை அடைவது வரையான பேராட்டத்தை நாம் நம்பிக்கையுடன் தொடர முடியும்
 
ஆயுதப்போரிலும் கூட சிங்களம் உலகைத் துணைக்கு அழைக்காது தனித்துப் போரிட்டிருந்தால் நம்மை வெற்றி கொண்டிருக்க முடியாது. 
 
முள்ளிவாய்க்கால் எமக்கு சில படிப்பினைகளையும் தந்துள்ளது. 
 
போரில் எமக்கு எற்பட்ட  பேரிடர், தமிழர்களின் வீரத்தின்  வீழச்சியல்ல. உள்நாட்டு நிலைமைகளால் மட்டும் விளைந்ததொன்றும் அல்ல. 
 
மாறாக அனைத்துலக அரசுகளின் பாத்திரமே போரின் முடிவைத் தீர்மானிப்பதில் தீர்க்கமாக பாத்திரத்தை வழங்கின. இதில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் பாத்திரம் இரகசியமானதொன்றும் அல்ல.  
 
சிங்களம் சம்பாதித்த அனைத்துலக அரச நண்பர்களை, சிங்களம் பயன் படுத்திய அனைத்துலக அரச உறவுகளை, தமிழீழம் சம்பாதிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது போனது தான் நமது ஆயதப் போரின் மௌனிப்புக்கு  காரணம்.
 
இது தமிழீழத்தின் தவறு மட்டுமல்ல. அனைத்துலக உறவுகள் கட்டப்பட்ருந்த உலக ஒழுங்கில் தமிழீழத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்களே இருந்தன. 
 
உலக ஒழுங்கு அரசுகளுக்கு சார்பாக இருந்தது. சிங்களத்துக்கு சிறிலங்கா என்ற அங்கீகரிக்கப்பட்ட அரசு இருந்தது. 
 
தமிழீழத்தின் நடைமுறை அரசுக்கு அனைத்துலக அங்கீகாரம் இருக்கவில்லை. தமிழர்களுக்கென்று உலகில் வேறு எந்த அரசும் இருக்கவில்லை.
 
இது முதலாவது காரணம்.
 
அனைத்துலக உலக ஒழுங்கு தர்மத்தின் சக்கரத்தில் சுற்றமால் நலன்கள் எனும் அச்சில் சுழல்வது அடுத்த காரணம்.
 
இருந்த போதும், உலகின் வலிமை மிக்க அரசுகளின் நட்புறவு எமது வெற்றிக்கு அவசியமானது என்பதனை முள்ள்pவாயக்கால் எடுத்துச் சொன்னது. 
 
ஆனால் இஙகு முக்கியமான கேள்ளவி எழுகிறது? நாம் எவ்வாறு இந்த நட்புறவை எற்படுத்த வேண்டும்?
 
உலகின் பலமிக்க அரசுகளின் நலன்களுக்கு மட்டும் சேவகம் செய்தவர்களாக இருந்தால்தான் நட்புறவைப் பேண முடியுயானால் அதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்?
 
தமிழ் மக்களின் நலன்களையும் பலமிக்க அரசுகளின் நலன்களை இணைய வைப்பதற்கான மார்க்கத்தைக் கண்டிறிந்த அதன்வழி பயணிப்பதே தொலைநோக்கில் பயன்தரக்கூடியது என நாம் கருதினோம்.
 
இந் நிலைப்பாற்பட்டுத்தான் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்தலக உறவுகளுக்கான மூலோபயத்தை வடிவமைத்தோம். 
 
அனைத்தலக அரசுகள் தற்போதய காலகட்டத்தில் இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள் உருவாகுவதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை நாம் நன்கு அறிவோம். 
 
இலங்கைத்தீவில் ஒன்றை அதிகார மையத்தை வைத்துக் கொண்டு தமது நலன்களை அடையவே உலக அரசுகள் தற்போதும் முயல்கின்றன.
 
இதனால் தனித் தமிழீழ அரசு இல்லாத வகையிலான, நாடு பிரியாத முறையிலான ஒரு தீர்வுமுறை குறித்தே அனைத்துலக அரசுகள் சிந்திக்கின்றன.
 
ஆனால், சிங்கள பௌத்த இனவாதச் சித்தாந்தத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசு எந்தவகையான அரசியல் தீர்வுக்கும் தயாராக இருக்கப் போதில்லை.
 
இதனால் அனைத்துலக அரசுகளின் ஒற்றையரசு சிந்தனை தோல்வியினைத் தழுவும் என்பது திண்ணம்
 
இருந்த போதும் தமிழர்கள் தம்மையொரு வலுமையமாக உருவாக்காவிடின் எம்மை எவரும் ஒரு பொருட்டாகக் கருதப் போவதில்லை. அனைத்தலக அரங்கில் உருவாகக்கூடிய மாற்றங்களைக் கெட்டியாகப் பிடித்து முன்னேறுவதற்கு தமிழர்கள் ஒரு வலுமையமாக உருவாக வேண்டும்.
 
இவ் அணுகுமுறையின் பாற்பட்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுவான அமைப்பாக நாம் வளர்த்தெடுப்பது மகிவும் அத்தியவாசியமானதான உள்ளது.
 
தற்பொதய அரசவைக் காலத்தின் அடுத்த நான்காண்டுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்த்தினை செயல்வீச்சுக் கொண்ட அமைப்பாக வளத்தெடுப்பதென நான் உறுதி பூண்டுள்ளேன்.
 
இதற்கான செயற்திட்டத்தினை பிரதமர் பணியமனையின் ஊடாக பல செயலமர்வுகளை நடாத்தி நாம் வடிவமைத்துள்ளோம். 
 
ஒரே நேரத்தில் வெ;வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் வகையில்  ஒரு Massive Action Plan ஆகத் இத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகிறன்றன. 
 
இத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பெரும் ஆளணி மற்றும் பொருhளதார பலம் தேவைப்படும். அவற்றையும் திரட்டி எடுப்பதற்கான வழிமுறைகளும் சிந்திக்கப்பட்டுள்ளன. 
 
இத் திட்டங்கள் குறித்த விபரங்கள் நாளை அரசவை அமர்வில் வெளியிடப்படும். 
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்த பிரதமர் பணிமனையின் பரிநிதிகளை நாடுலாரியாக நியமிப்பது குறித்து முன்னர் அறிவித்திருந்தேன். 
 
சில நாடுகளுக்கு பிரதமர் பணிமனையின் பரிநிதிகள் நியமிக்கப்படு;ள்ளனர். இது குறித்தும் நாளை அமர்வில் அறியத்தரவுள்ளேன்.
 
தமிழர்களை ஒரு வலுமையமாக உருவாக்குவதில் மாவீர்களின் நினைவுகள் காத்தரமாதொரு பங்கை வகிக்கக் கூடியவை. நமக்கு உறுதியையும் வீச்சையும் வழங்கக் கூடியவை. எமது செயற்பாட்டில் உந்து சக்தியாக விளங்கக் கூடியவை. 
 
இதனால் மாவீர்களுக்காக கட்டி எழுப்பதற்குத் திட்டமிடப்படவுள்ள மாவீரர் நினைவாலயமும் எமது போராட்டத்தின் முன்னோக்கிய நகர்வில் முக்கியம் பெறுவதாக அமையும்.
 
மேலும் தமிழர்கள் வலுமையாக உருவெடுப்பதற்கு தமிழகத்தின் பாத்திரம் முக்கியமானது என்பதனை நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். 
 
தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து ஒரு உலகத்தமிழ் தேசிய கொங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்குதன் மூலம் தமிழர்களை உலக அரங்கில் பலம் மிக்க மக்களாக நிலைநிறுத்த முடியும். 
 
இத்தகையதொரு முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொள்வது சிறப்பாக அமையும் என நாம் கருதுகிறோம். இத்தகையதொரு முன்னெடுப்பில் தமிழர் தலைவர்கள் எல்லாம் தமது கட்சி பேதங்கள் பார்காது இணைந்து கொள்ளல் வேண்டும். 
 
இத்தகையதொரு உலகளாவிய தமிழர் அமைப்பு ஈழத் தமிழர் விடுதலையைத் தாங்கி நிற்கும் போது அனைத்தலக அரசுகள் எம்மை உதாசீனம் செய்து விட முடியாது.
 
நண்பர்களே!
 
சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 
போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாத்தை திருப்பதிப்படுத்துவதில் குறியாக உள்ளனர். 
 
தமிழ், முஸ்லீம் மக்களை எவரும் பொருட்டாவே கருதவில்லை. இது இலங்கதை;தீவின் யதார்த்தத்தை நன்கு வெளிப்படுத்துகிறது.
 
சிறிலங்காவின் சிங்கள பௌத்த தீவிரவாதம் திரும்பி வரமுடியாததோர் உச்ச நிலையில் இறுகிப் போய்விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. 
 
தேர்தலில் எவர் வென்றாலும் சிங்கள பௌத்த இனவாத்துக்குத் தீனி போடும் புறநிலைமைகளே உள்ளன.
 
இதனால் சிங்கள இனவாதம் தமிழ் முஸ்லீம் மக்களை தொடரந்தும் குறிவைத்துத் தாக்கவே செய்யும். 
 
இதனால் தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் தோழமையுணர்iவுயும் வளர்க்க்கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும்.
தோழர்களே!
 
அரசவை கூடும் இத் தருணத்தில் நாம் அனைத்துலக சமூகம் முன்பாக முன்மைவத்துச் செயற்பட N;வண்டிய நமது அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றியும் வெளிப்படுத் விரும்புகிறேன். 
 
எனது 2014 ஆம  ஆண்டுடு மவீரர் நாள் அறிக்கiயில் குறிப்பிடப்பட்டுள் இவ் விடயங்களை மீண்டும் இவ் இடத்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.
 
1. தமிழீழ மக்களது  தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
 
2. ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் மக்கள் வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்தின் பங்கு பற்றலோடு நடாத்தப்பட வேண்டும்.
 
3. தமிழீழ மக்கள் மீது சிங்களத்தால் நடாத்தப்பட்ட, நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 
 
4. போர் முடிவடைந்த பின்னரும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடியதான அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.
 
5. தமிழீழத் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். 
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அரசவையில் முக்கியமான திட்டங்கள் பலவற்றறைப் பற்றிக் நாம் கவனம் செலுத்தவுள்ளோம் முக்கியமான தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ளோம்.
 
மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோகி நகர்த்தும் பணியில் இம் இமர்வு காத்திரமானதொரு பங்கை வகிக்கும் என்ற நம்புகிறேன்.
 
நன்றி, தமிழரின் தாகம் தமிழீழத் தாகம்.இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது உரை அமைந்திருந்தது.
 
நாதம் ஊடகசேவை 
 
 
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு தொடங்கியது : தமிழகத்தில் இருந்து நாஞ்சில் சம்பத் மலேசியாவில் இருந்து இராமசாமி பங்கெடுப்பு ! 
 
 
நாடுகடந்த தமிழழ அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக் காலத்தின் இரண்டாவது நேரடி பாராளுமன்ற அமர்வு டிசம்பர் 5ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 
அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வும், பிரான்சில் துணை அமர்வும், தொழில்நுட்ப வழி இரண்டும் இணைந்ததாக இடம்பெறும் இந்த பாராளுமன்றத் கூட்டத் தொடரானது, எதிர்வரும் 7ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மூன்றுநாள்  இடம்பெறுகின்றது.
 
தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சியின் பிரதிநிதி நாஞ்சில் சம்பத் அவர்களும், மலேசியா பினாங்கு மாநில் துணை முதல்வ் இராமசாமி அவர்களும் இந்த அமர்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கெடுத்துள்ளனர்.
 
குறிப்பாக பிரான்சில் இடம்பெறுகின்ற துணை அமர்வு பாரிசின் புறநகர் Blanc Menil பகுதியான பகுதியின் நகரசபைபிதாவின் உறுதுணையுடன் நகரசபை மண்டபத்திலேயே இடம்பெறுகின்ற முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.
 
அமைச்சர்களின் ஆண்டறிக்கைகள், 2015ம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் ,தீர்மானங்கள், விவாதங்கள் என பல்வேறு விவகாரங்கள் மூன்று நாள் அமர்விலும் இடம்பெறவுள்ளது.
 
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாட்டுத்தளத்தில், சனநாயக விழுமியங்களின் அடிப்படையில் நேரடித் தேர்தலின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றது.  
 
தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று ஒரு முக்கிய காலகட்டத்தில் உள்ளதென்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரால் மேற்கொள்ளப்படும் பன்னாட்டு விசாரணை, இந்திய ஆட்சிமாற்றம், ஸ்கொற்லாந்து தேசத்தினது பொதுசனவாக்கெடுப்பு போன்றவை, ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான பல்வகை சந்தர்ப்பத்தை கொடுத்துள்ள நிலையில் இந்த அமர்வு இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது
 
நாதம் ஊடகசேவை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லை 

வரவுக்கு நன்றி

தொடர்ந்திருங்கள்


எனக்கும்  அழைப்பிதழ் கிடைததது

 

நாளை  சிலவேளை  போவேன்..

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/149644-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/

 

Page_1_img040.jpgPage_2_img040.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமாரன் மீண்டும் பிரதமரானதைவிட  மல்லையூரான் யாழுக்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சி :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லை இந்த நிழல்படங்களில் நீங்களும் இருக்கிறீர்களா?

 

Link to comment
Share on other sites

மல்லையூரானை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..! :D

Link to comment
Share on other sites

மல்லையூரானை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி..! :D

 

இன்றைக்கு உஙகளை கண்டதில் மகிழ்ச்சி, நாளைக்கு கண்டால் நாளைக்கு மகிழ்ச்சி, அடுத்த மாதம் கண்டால் அடுத்த வருடம் மகிழ்ச்சி !!!!!!!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

வரவேற்றவர்களுக்கு நன்றி. நமது கனவு நிறைவேறும் வரை நாம் ஒன்றாகத்தான் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.  

Link to comment
Share on other sites

இந்த செய்தியை ஏற்கனவே முகநூலில் பார்த்திருந்தேன்.

மல்லை அண்ணாவை மீளவும் கண்டது மகிழ்ச்சி. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "உனக்கு தலை குனியும் !"     நேற்று:   "சிந்து சம வெளியில் இயற்கை ஒன்றி இவன் இருந்தான் குந்து வைத்து பல மாடி கட்டி நன்று இவன் வாழ்ந்தான் வந்து ஏறு குடிகள் ஆரியராம் வென்று இவன் தாழ்ந்தான் தந்து மயக்கி மனு தர்மத்தால் நேற்று இவன் சூத்திரனானான்!"   இன்று:   "புராணங்கள் - பொய் புரட்டுகள் இன்று இவன் பழகிவிட்டான் காரணங்கள்- சான்று உண்மைகள் இன்று இவன் விலக்கிவிட்டான் தோரணங்கள்- ஆலாத்தி அபிசேகங்கள் இன்று இவன் வாழ்க்கையாயிற்று சரணங்கள்[முருகா!] - ஸ்கந்தனை கொன்று என்று இவனைக் காப்பற்றுவாய்!"   நாளை:   "கண்ணை திறந்து கோபுரத்தை பார் சிற்பம் தலை குனியும்! உன்னை அறிந்து வேதத்தை படி தேவர் தலை குனியும்!! பொண்ணை புரிந்து சடங்கை நடத்து மந்திரம் தலை குனியும்!!! விண்ணை மறந்து மண்ணில் நில் மாயை தலை குனியும்!!!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • தனிப்பட்ட கோப தாபங்கள் இல்லை. ஆனால், நீங்கள் ஒரு கருத்தாளர் தரும் தரவுகளைக் கேள்விக்குள்ளாக்கும் போது மறுத்துரைக்கும் தரவுகளைத் தருவதில்லை. கொஞ்சம் வற்புறுத்திக் கேட்டால் "மேற்கின் , அமெரிக்காவின் செம்பு" என்பீர்கள். நீங்கள் உருப்படியான தரவுகளைத் தந்ததை விட "செம்பு" என்பதைத் தான் அதிக தடவைகள் பாவித்திருக்கிறீர்கள் என்பது என் அவதானிப்பு, இன்னும் நீங்கள் "சுழல் கழிப்பறை" பாவிப்பதாலோ தெரியாது😂!
    • நேற்றைய தினம் எனும் திரியில் கள உறுப்பினர்களுக்கும் முக்கியமாக @goshan_che அவர்களுக்கும் நிர்வாகத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கும் இடையில் இடம் பெற்ற கருத்தாடலில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு நிர்வாகம் தனது வருத்தத்தினைத் தெரிவிக்கின்றது.
    • இலங்கையில் இருந்து தப்பித்து புலம்பெயரும் பலரும் இனி ரசிய இராணுவ முன்னரக்குகளில். எப்படி இருந்த ரசியா ....
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.