Jump to content

எனிக் கோள்கள் எட்டு (8)

Recommended Posts

_42010788_pluto_bbc_203.jpg

_42011050_solar_system_planets2_416.jpg

சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5282440.stm

Link to comment
Share on other sites

உந்த ஆங்கில இணைப்புக்களைவிட்டிட்டு விசயம் தெரிஞ்சனியள் கொஞ்சம் விபரமா சொல்லுங்கோப்பா!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படி என்றால் இனி யோசியம் பார்ப்பவர்களின் நிலை என்ன? ராகு, கேது என்று கோள்களை வைத்து தானே எதோ சொல்வார்கள்

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி குருவிகாள்

அட புளூட்டோ இல்லாமல் போச்சா நான் போட்ட பிளான் எல்லாம் நாசாமாப் போச்சே :cry:

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி குருவிகாள்

அட புளூட்டோ இல்லாமல் போச்சா நான் போட்ட பிளான் எல்லாம் நாசாமாப் போச்சே :cry:

என்ன புளுட்டோல போய் தொடர் மாடி கட்டலாம்ன பிளான்னா? ஜய்யோ பாவம்... :cry:

Link to comment
Share on other sites

கிரகம் என்ற அந்தஸ்தை புளூட்டோ இழந்தது: சர்வதேச வானியல் நிபுணர்கள் மாநாட்டில் தீர்மானம்

சூரியக்குடும்பத்தில் புளூட்டோவுடன் சேர்ந்து இதுவரை 9 கிரகங்கள் இருப்பதாக வானியல் நிபுணர்கள் கணித்து இருந்தனர்.

புளூட்டோ கிரகம் கடந்த 1930-ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிரகம் பற்றி நீண்ட நாட்களாக சர்ச்சை இருந்து வந்தது. இந்த நிலையில் செக் குடியரசு நாட்டின் பராகுவேயில் சர்வதேச வானியல் நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. 75 நாடுகளை சேர்ந்த ஏறத்தாழ 2,500 அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில், எவை தனி கிரகங்கள்? எவை கிரகங்கள் அல்ல என்பதற்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ கிரக அந்தஸ்தை இழந்துவிட்டது. தனி சுற்று வட்டப்பாதை இன்றி, நெப்டிïன் கிரக வளையத்துக்குள் புளூட்டோ வருவதால் தானாகவே தனிகிரக அந்தஸ்தை இழந்துவிட்டதாக வானியல் அறிஞர்கள் அறிவித்து உள்ளனர்.

இனி, புளூட்டோ புதிய பிரிவான `குட்டி கிரக' பிரிவில் சேர்க்கப்படும். அத்துடன், சூரியனை சுற்றிவரும் எண்ணற்ற விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை சூரிய குடும்பத்தின் சிறிய அமைப்புகளாக கருதப்படும்.

இனி மொத்த கிரகங்கள் மெர்குரி(புதன்), வீனஸ்(வெள்ளி), பூமி, மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர் (வியாழன்), சனி, யுரேனஸ் மற்றும் நெப்டிïன் ஆகிய 8தான் என்றும் வானியல் அறிஞர்கள் அறிவித்து உள்ளனர்.

http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&

Link to comment
Share on other sites

என்ன புளுட்டோல போய் தொடர் மாடி கட்டலாம்ன பிளான்னா? ஜய்யோ பாவம்... :cry:

சாச்சா நான் ஏன் உம்மளப்போல எல்லாம் நினைக்கிறன் :evil: :evil:

Link to comment
Share on other sites

சாச்சா நான் ஏன் உம்மளப்போல எல்லாம் நினைக்கிறன் :evil: :evil:

அப்ப தேத்தண்ணிக்கடை போடவிருந்தவ போல........

Link to comment
Share on other sites

அப்ப தேத்தண்ணிக்கடை போடவிருந்தவ போல........

அடப் பாவியளா நான் என்னவோ சொல்ல வர நீங்கள் என்னவோ சொல்லுறியள். உது நல்லா இல்லைச் சொல்லிப்போட்டன் :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

அப்போ சாயக்கடை ரசிகை என்டு சொல்லுங்க... :lol::lol:

சுண்டல் எப்ப தொழிலை மாத்தனீர் :evil: :evil: :evil: :P

Link to comment
Share on other sites

அடப் பாவியளா நான் என்னவோ சொல்ல வர நீங்கள் என்னவோ சொல்லுறியள். உது நல்லா இல்லைச் சொல்லிப்போட்டன்

நீங்கள் என்ன சொல்ல வந்தனீயள் என்று சொன்னால் ஏனிந்தப் பிரச்சனைகள் வரப்போகுது. மெளனமாக இருந்தால் நாலுபேர் நாற்பது விதமாக யோசிக்கதான் செய்வார்கள். நாற்பது பேர் நானூறு விதமா...நானூறுபேர் நாலாயிரம் விதமா...நாலாயிரம்பேர் நாற்பதாயிரம் விதமா...

நான்கூட நீங்கள் புளுட்டோவில் புளுக்கொடி விற்கப்போறீங்கள் என்று நினைச்சன். அதற்காக எங்களையா திட்டுறது... :idea: :!: :?: :arrow:

Link to comment
Share on other sites

புளூட்டோ 9-வது கிரகம்தான்: வான இயல் நிபுணர்கள் முடிவுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்ப்பு

சூரியனை மையமாக வைத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிட்டர், சனி, யுரேனஸ், நெப்டிïன், புளூட்டோ ஆகிய 9 கிரகங்கள் அதன் சுற்றுப்பாதையில் சுற்றி வருவதாக வான சாஸ்திரத்தில் கூறப்பட்டது. பாடப்புத்தகங்களிலும் கூட இப்படித்தான் கூறப்பட்டது.

இதில் 9-வது கிரகம் ஆன புளூட்டோ 1930-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய னில் இருந்து புளூட்டோ கிரகம் 366 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சற்றி வர 248 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் கடந்த வாரம் நடந்த சர்வதேச வான இயல் நிபுணர்கள் மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் தானா என்ற சர்ச்சை கிளப்பப்பட்டது. இந்த மாநாட்டில் புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று முடிவு செய்து அறிவித்தனர். கிரகத்துக்கு உரிய தகுதிகளும் அதற்கு இல்லை என்று அந்த விஞ்ஞானிகள் அறிவித்தனர். இது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

சர்வதேச வான இயல் நிபு ணர்கள் முடிவுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொலராடோவில் உள்ள வான இயல் விஞ்ஞானி ஆலன் ஸ்டென் கூறும்போது, "புளூட்டோ 9-வது கிரகம் அல்ல என்று முடிவு எடுக் கப்பட்டதை ஏற்க முடி யாது. புளூட்டோ 9-வது கிரகம் தான். மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவில் அரசி யல் உள்நோக்கம் உள்ளது. விஞ்ஞான ரீதியில் எடுக்கப் பட்ட முடிவு அல்ல'' என்று தெரிவித்து இருக்கிறார்.

இவரது கருத்தை மேலும் 300 அமெரிக்க விஞ்ஞானிகள் ஆதரிக்கிறார்கள். இவர்கள் 300 பேரும் கையெழுத்து போட்டு சர்வதேச வான இயல் நிபுணர்கள் சங்கத்துக்கு இது தொடர்பாக மனு அனுப்பி உள்ளனர். புளூட்டோ ஒரு கிரகம் இல்லை என்றால் பூமி உள்பட மற்ற கிரகங் களும் அதன் தகுதியை இழக்க வேண்டும். அவை வெறும் கற்கள் என்றுதான் கருத வேண்டும் என்றும் அந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்.

http://www.tamilwin.net/

http://www.sooriyan.com/index.php?option=c...id=3388&Itemid=

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.