Jump to content

2 சித்தம் - (மருத்துவம் ....இன்னும் பல) தமிழர்களின் வாழ்வியல் உணவும் மருந்தும்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேனின் மருத்துவம் குணங்கள்.!
--------------------------------------------

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.


தெரிந்து கொள்வோம்:

கழு தைக்க (கழுதைக்குத்) தெரியுமாம் கற்பூரவாசம்.

கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது...

மற்றபடி கழுதைக்கும், கற்பூரத்திற்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே.
1477564_547850895308234_1437398940_n.jpg

 


விரண சஞ்சீவினித் தைலம்
(வெளிப்பிரயோகத்திற்காக)

இரசம்
கந்தகம்
கந்தகம்
மயில்துத்தம்
வெண்குங்கிலியம்
கருஞ்சீரகம்
சேராங்கொட்டை
நீரடிமுத்து
புங்கன் வேர்ப்பட்டை
வெள்ளை கரிசாலைச் சாறு
வெட்டுக்காயப்பூண்டு
கிரந்திநாயகம்
சிறுகண்பீளை
நேத்திரப்பூண்டு விழுது

நேத்திரப்பூண்டை அத்தாற் பொருத்தி என்றும் சொல்வார்கள் .அதாவது அறுத்து மீண்டும் பொருத்தினால் பொருந்தும். எனவே இந்தப் பெயர் . இதை கண் கோளாறுகள் 96 க்கும் நல்லெண்ணெயில் போட்டு பத்து நாட்கள் சூரிய புடத்தில் வைத்து வடிகட்டி நேத்திரப் பூண்டுத் தைலம் தயாரித்து கண்களில் நேரடியாக பிரயோகம் செய்யலாம்.இந்த காணொளிக் காட்சியில் அத்தாற் பொருத்தியின் செயல் பாட்டைக் காணுங்கள்.

பொடுதலைச்சாறு
சிறுசெருப்படைச்சாறு.
குப்பைமேனிச்சாறு
வேப்பெண்ணெய்
தேங்காயெண்ணெய்

தீரும் நோய்கள்: அனைத்து வகைப் புண்களும் சர்க்கரை வியாதியால் ஏற்படும் புண்கள் ( GANGRENE ) முதல் அனைத்துப் புண்களும் ஆறும்.சொறி சிரங்கால் வரும் புண்களையும் ஆற்றும்.இதில் பாஷாணச் சரக்குகள் சேர்வதால் , இதை சிறு குழந்தகள் நடமாடும் இடத்தில் வைக்கக் கூடாது. நீங்களும் கவனமாகக் கையாளுங்கள் .மிகக் கடுமையான ஆறாத புண்கள் கூட ஆறும்.

பால்வினை நோய்களான ஆண்குறி மற்றும் பெண் குறிகளிலுண்டாகும் புண்களை மிக நன்றாக ஆற்றி அங்குள்ள கிருமிகளைக் கொல்வதில் இந்த விரண சஞ்சீவித் தைலம் அற்புதமானது .


தமிழ்ச்சித்தர்களின் பெருமை, தமிழின் பெருமை!

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..”

என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

உள்ளம் பெரும் கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ள தெளிந்தவர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளபுலன் ஐந்தும் காணா மணி விளக்கே.

இது பாடல் மற்றும் அல்ல இதனை கோவில் வடிவமாகவும் தில்லையில் காணலாம். அய்யன் சீவ தலமான சிதம்பரத்தில் கோவில் கட்டுமானமே நம்மை நமக்கு உணர்த்தும் தத்துவமாக விளங்குகிறது. பொன்னம்பலம் மேல் உள்ள தங்க ஓடுகளின் எண்ணிக்கை 21,600. இது நமது சுவாச காற்று இனையாக உள்ளது. அதன் மேல் பொருந்திய தங்க ஆணிகள் கணக்கு 72000. இது நமது நாடி கணக்கு. வெட்டவெளி என்னும் ஆகாய தலத்தில்பொன்னம்பல மேடையில் சிவசக்தி தாரணை பிரதானரகசியமாய் வெளியாகிறது.இதே நம்முள் இருக்கும் சொர்ண தத்துவம்.

இப்படி பட்ட சொர்ணமான உத்தமன் உள்ளிருக்க அவனை வெளியே
விடாமல் பலகாலம் வேண்ட வழிகளை கீழே திருமூலர் சொல்கிறார்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

வில்வதையோ, துளசியை , அருகம்புல்லை வைத்து கூட இறைவனுக்கு அன்பை செலுத்துங்கள். பசுவிற்கு ஒரு வாய் புல் அன்புடன் கொடுங்கள். உண்ணும் பொது ஒரு கவளத்தை முன் வாசலிலோ பின்புறமோ மற்ற உயிரினத்துக்கு அன்போடு அளியுங்கள். சுற்றி இருக்கும் பிறர்க்கு அன்புடன் இன்சொல் கூறுங்கள்.

இது பேர் அன்பு. இதை செய்தால் தெய்வத்தின் அருள் கிட்டும். அது கிட்டினால் பிரபஞ்சம் மற்றும் சித்தர்கள் அன்பு நமக்கு நேரிடையாக கிடைக்கும். அது கிடைத்தால் தன்னை தான் அறியும் ஆசியும் வழியும் கிட்டும். அதுவே சாகா கலைக்கும் வழி வகுக்கும்.

தமிழன் சாதித்த கட்டிடக்கலை! ஆயிரங்கால் மண்டபம் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில். Madurai Meenakshi Temple 1000 pillars hallway.

1508201_548051171954873_583887594_n.jpg


துறவால் நீர் கண்ட பயன் என்ன...??

பெருஞ்செல்வந்தராக இருந்த பட்டினத்தார் திடீரென்று ஒரு நாள் எல்லாவற்றையும் துறந்து துறவியாகி விட்டார்.

அதை கேள்விப்பட்ட அரசன் தன் சுற்றம் சூழ ஆரவாரமாக அவரை காண வந்தான். பட்டினத்தார் ஓரிடத்தில் வெறுங்கோவணத்துடன் ஆண்டிக்கோலத்தில் அமர்ந்திருந்தார்.

அரசன் அவரை வணங்கி, எமக்கு இணையாக செல்வம் படைந்திருந்த நீர், எல்லாவற்றையும் துறந்து விட்டீர். இதனால் நீர் கண்ட பயன் என்ன? என்று அலட்சியமாக கேட்டான்.

அவை எல்லாம் இருந்திருந்தால் நான் உம்முன் நின்றிருப்பேன். துறந்ததால் இப்போது என் முன் நீர் நிற்கிறீர்கள். இந்த சிறப்பு ஒன்று போதாதா.. !

என்று அமைதியாக பதிலளித்தார் பட்டினத்தார்.

சித்தர்கள்..!

சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச் சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான் இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால் அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.

சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை அறிந்த விற்பன்னர்கள்.

சித்தர்கள் என்போர் வெறும் மருத்துவர்கள் மட்டுமல்லர். வெற்று வேதாந்தம் பேசும் வறட்டுப் புலவர்களும் அல்லர். வெந்ததைத் தின்று விதி வந்ததும் போகச் சொல்லும் கர்மவினையைப் போதிக்கும் வைதீக சமயக் கும்பலைச் சேர்ந்தவரும் அல்லர்.

அவர்கள் வாழும் போதே வாழ்வின் பயனை, மண்ணிலேயே விண்ணைக் காணச் சொன்னவர்கள். தற்போது கிடைத்த உடலைக் கொண்டே, அதைக் கற்பங்கள் பல உண்டு, பல காலம் வாழும் வழி அறிந்து, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வித்தை அறிந்தவர்கள். கர்ம வினையை வாழும் போதே கழிக்கும் வித்தை அறிந்தவர்கள். பிறத்தலின் பயன் முடியும் வரை இங்கேயே வாழக் கற்றவர்கள். பிறத்தலின் பயனே பரிணாமத்தின் அடுத்தபடி போவதுதானே! விரும்பும் வரை இறப்பைத் தள்ளிவைக்கும் வித்தை கற்றவர்கள்.

இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையையும் இயக்குகின்ற சக்தியை உணர்ந்தவர்கள். அவர்கள் காண்கின்ற எல்லையற்ற பரம்பொருள் இங்கும் எங்கும் விரவி இருப்பதை உணர்ந்தவர்கள். சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் பரம் பொருளை உணர்ந்தவர்கள்.

சொல்லப் போனால் மனித குலத்தில் யார் ஒட்டுமொத்தமாக ஆனந்தமாக இருக்கிறார்கள்?
இறப்பு இல்லாத மனிதர்கள் யார்?
மூப்பு இல்லாத மனிதர்கள் யார்?
நோய் இல்லாத மனிதர்கள் யார்?

புத்தர் இறப்பு, மூப்பு, நோய் முதலிய மனிதனின் துக்கங்களைப் பார்த்துத்தானே அதற்கு வழி காணத் துறவு பூண்டார் என்று கதைகள் கூறுகின்றன. ஆனால் இதுவரை மனித குலத்தின் மாறாத இந்தத் துயரங்களுக்கு விடிவு வந்ததா? யாராவது, எந்த மதமாவது, இது செய்தால் இறப்பு, மூப்பு, நோய் வராது என்று அறுதி இட்டுக் கூறி, வழியைக் கூறி இருக்கிறார்களா?

ஆனால் சித்தர்கள் அனைவரும் மானுடத்தின் இத்தகைய ஒட்டுமொத்த துயரங்களுக்கு வழி முறை கூறி இருக்கிறார்கள். அதுவும் ஒரே மாதிரி கூறியிருக்கிறார்கள். மரணமில்லாப் பெருவாழ்வே, அவர்கள் லட்சியம். வாழும் இதே உடலில் இருந்தே முக்தி பெறும், விடுதலை பெறும் ஆர்வம் கொண்டவர்கள்.

வாழ்வின் அத்தனை புதிர்களுக்கும் விடையைக் கண்டவர்கள். அவர்கள் தொடாத வாழ்வின் நெறிகளோ, உண்மைகளோ எதுவும் இல்லை எனலாம். ஆனாலும் சித்தர்கள் எனப்படுவோர், மிகவும் நடைமுறை வாதம் கொண்டோர். அவர்களின் அறிவுப் பாதையில் வெறும் வேதாந்த, சித்தாந்தப் பேச்சுகள் மட்டும் இல்லை. கூடவே அத்தனைக்கும் நடைமுறைப்படுத்தும் விதிமுறை அறிந்தவர்கள். வாழ்வின் அத்தனை விதி முறைகளும் அறிந்து வாழ்வின் விதியை வாழும் போதே மாற்றும் வல்லமை படைத்தவர்கள். வினையைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பதை மறுத்தவர்கள்.

தானே இறையென தெரிந்தவர்கள் மட்டுமல்லர்.
தானே இறையென முற்றும் உணர்ந்தவர்கள்.


மகான் அழுகணி சித்தர்..!

இவர் எழுதியுள்ள பாடல்கள் ஒப்பாரி போலவே அழுகின்ற ஓசையுடையதாயிருந்ததால் இவருக்கு அழுகணி சித்தர் என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். அழுகணிச் சித்தரின்பாடல்களின் அழகையும், அணியையும், தமிழ் சொற்களின் இனிமையும் சுட்டி இவருக்கு ஆரம்பத்தில் அழகணிச் சித்தர் எனப் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இந்த அழகணிச் சித்தர் என்பதே அழுகணி எனத் திரிந்தது என்பர்.

இவரது பெயரில் 32 கலித்தாழிசைகள் உள்ளன. வாசியோகம் காய சித்திமுறை முதலியவைகள் பற்றி இவர் பாடல்கள் விரித்துரைக்கின்றன. தவத்தின் ஆற்றலால் கூற்றுவனைவென்று நெடிது வாழலாம் என்பது யோக முறையில் நெடிது வாழும் வகை என்று அழுகண்ணி கூறுகின்றார்.

இந்த தூய சித்தி முறைகளைக் கூறிய அழுகண்ணி சித்தர் தமிழ் நாட்டில் பல இடங்களும் சுற்றித் திரிந்தார். அழுகணி சித்தரின் சமாதி நாகப்பட்டினத்தில் உள்ள சிவபெருமான் கோவில் வளாகத்திலேயே இருக்கிறது.

1525641_548053578621299_1944770695_n.jpg


ஆதளை மூலிகை.. மாயமாய் மறைய திலதம்..!

சித்தர்கள் நூலில் சில இடங்களில் மாயமாய் மறைவதைப் பற்றி குறிப் பிடுகின்றனர்.இதில் மூலிகைகள்,விலங்குகள் போன்றவற்றின் மூலமாக மறையும் வித்தையை செயல் படுத்தும் முறைகள் உள்ளன.

ஆனால் இவற்றை தக்கதொரு குருவின் துணையுடன் முயற்சி செய்து பார்க்க வேண்டுகிறோம்.இந்த முறை கருவூரார் பல திரட்டில் உள்ளவை.

ஆமாப்பா வெண்ணையிலே தேனைத்தேய்த்து
ஆதளையின் பால் கூட்டி அடைவாய்த் தேய்த்து
ஓமப்பா திலதமிட தன்னைக் காணார்
ஓங்கிநின்ற உருமாற்றம் ஒருவர் காணார்
போமப்பா வெண்டிசையுங் கால் வேகங் கொண்டு
பூமிதனில் மறைந்ததெல்லாம் பொலிவாய்க் காண்பர்
வேமப்பா அண்டரண்டம் வழலை பட்டால்
வேதாந்த பஞ்சகர்த்தா ளெனச்சொன்னாரே

விளக்கம் :

முன்பு கூறப்பட்ட வெண்ணையுடன் ,தேன் ,ஆதளை மூலிகையின் பால், இவைகளைக் கூட்டி மத்தித்து திலதமிட தன உருவம் மறைந்து விடும் . ஒருவரும் உருவத்தைக் காண முடியாது.

எட்டு திசையும் காற்றின் வேகத்தில் சென்று வரலாம். மேலும் பூமியில் மறைந்துள்ள பொருட்களெல்லாம், புதையலெல்லாம் கண்ணில் தோன் றும். வழலைச் சுண்ணம் பட்டால் அண்டரண்டம் நீறிப் போகும்.

"ஆதளை மூலிகை" என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்காக படம் இணைக்கப்பட்டுள்ளது..!

1508049_653662801358838_1020129254_n.jpg


சின்முத்திரை

தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.

பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.
கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.

உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின் தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.

Link to post
Share on other sites
 • Replies 80
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
அலர்ஜி-தடுப்பதெப்படி?

அலர்ஜி இருப்பவர்களுக்கு சில உணவுகள் ஆகாது. அலர்ஜி தரும் உணவுகளை கண்டுபிடிப்பது எப்படி, அவற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வது எப்படி?

அறிகுறிகள்
* உணவை வாயில் வைத்தவுடன் கூசும். முகச்சுளிப்பு கூட ஏற்படும்.
* சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம்.
* குரல்வளையில் ஒருவித மாற்றங்களை உணரலாம். வாந்தி ஏற்படும்.
* அடிவயிற்று வலி வரலாம். மூச்சுவிடுவதில் தகராறு, பெருமூச்சு விடுதல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
* சிலருக்கு நினைவு இழப்பும் நிகழ்வதுண்டு.
* சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.
* அமெரிக்காவில் 30-ல் ஒருவருக்கு அலர்ஜி இருக்கிறது. பெற்றோருக்கு அலர்ஜி இருந்தால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்பட 75 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
* அலர்ஜி ஏற்பட்டால் குடல், சுவாசம், தோல், ரத்தசெல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய்த்தடுப்பு மண்டலமும் அலர்ஜியால் பாதிப்புக்குள்ளாகலாம்.
* வேர்க்கடலை, பட்டாணிக்கடலை போன்ற பருப்பு வகைகள்தான் அதிக அலர்ஜியைத் தரக்கூடியவை. இவை இம்யுனோகுளோபின் என்ற ரசாயனத்தைச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கச் செய்யும்.
* முட்டை, பால், வேர்க்கடலை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை வகை போன்ற 9 வகை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளாக நிபுணர்கள் பட்டியலிட்டு உள்ளார்கள். இவற்றில் வேர்க்கடலை, மீன், நத்தை, கொட்டை உணவு வகைகளில் அலர்ஜி ஏற்பட்டால் அது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும். மற்ற உணவுகள் தற்காலிகமாக ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

தடுப்பது எப்படி?
*அலர்ஜியை தடுக்க சிறந்த வழி, அறிகுறிகளை அறிந்துகொண்டு அந்த வகை உணவுகளை உறுதியாகத் தவிர்த்து விடுவதுதான்.
* வெளியில் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேகவைக்காமல் மேற்புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் பழவகைகளை உண்ண வேண்டாம்.
* அலர்ஜி உடையவர்களுக்காக தனியாகத் தயாரிக்கப்படும் அலர்ஜியற்ற உணவு, உணவுப் பொருட்களை உண்ணலாம்.
* நண்பர்கள், விருந்தினர் வீடுகளில் விருந்தோம்பல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் உங்களுக்கான உணவில் தவிர்க்க வேண்டியவை பற்றி கூறிவிடுங்கள். நீங்களாகவே தயார் செய்து எடுத்துச் சென்ற குழம்பை பயன்படுத்துவதும் சிறந்த வழிமுறை தான்.
* பாலிதீன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பைகளில் உணவை பொட்டலம் கட்டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாயன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
996081_547862195307104_2144209010_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கத்தரிக்காய் குறைந்த கலோரியும் நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர் நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.

கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல்தரக் கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ‘ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.

அடர் நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும்.

‘பி காம்ப்ளக்ஸ் வகை விட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (விட்டமின் பி 5), பைரிடாக்சின் (விட்டமின் பி 6), தயமின் (விட்டமின் பி 1), நியாசின் (விட்டமின் பி 3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் காபோஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றித்திற்கும் உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த விட்டமின்கள் அவசியமாகும்.

கத்தரிக்காயில் தாதுஉப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்ப்பொருள்களின் துணைக் காரணியாக செயல்படும் பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.

 

1526169_209317925920883_143620394_n.jpg


எமது கிராமங்களில் அக்காலத்தில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை இருந்தது. மாமரம் போன்ற சில வகை மரங்கள் நன்றாக காய்க்காது போனால் தும்புத்தடியினால் மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து தடவுவார்கள், மாமரம் பூத்துக் குலுங்கும் காலத்தில் தும்புத் தடியின் தும்புப் பகுதியினால் பூந்துணர் உள்ள பகுதிகளை மெதுவாக தட்டித் தட்டி விடுவர்.

மாமரத்துக்கு ரோஷம் வந்து விடுமென்றும் அதன்பின்னர் மாமரம் நன்கு காய்க்கத் தொடங்குமென் றும் அன்றைய கிராமத்து பாமர மக்கள் நம்பினார்கள்.

மாமரமும் அவ்வாறே நன்கு காய்க் கத் தொடங்கும். அவர்களது நம்பிக்கை யும் வீண் போனதில்லை.

மாமரத்துக்கு ரோஷம் வந்ததற்குக் காரணம் என்ன?

விஞ்ஞான ரீதியில் கூறுவதானால் மாம்பூவின் மகரந்தச் சேர்க்கைக்கு தும்புகள் உதவியிருக்கின்றன. பூச்சிகள் மூலம் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் வாய்ப்பு குறைவாக இருந்ததால் மாமரம் காய்ப்பது குறைவாக இருந்தது. தும்புகளால் பரவலாக தட்டியதனால் மகரந்தச்சேர்க்கை நன்கு நடைபெற்று மாமரம் கூடுதலாகக் காய்த்துள்ளது.

1528748_209318009254208_331144491_n.jpg


பிரசவத்தின் பின்னர் உடல் மெலிய ஆசையா

கர்ப்பமாக இருக்கும் போது உடல் நலனை கவனிப்பதைப் போல பிரசவத்திற்குப் பின்னர் உடல் நலனை கவனிக்கத் தவறிவிடுகின்றனர் தாய்மார்கள். இதனால் உடல் குண்டாகி ஏகப்பட்ட இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குழந்தை பிறப்பதற்குப் பின்னர் தாய்மார்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி வந்தால் விரைவில் உடல் மெலிந்து பழைய நிலைக்கு வரலாம்.

கர்ப்பமாக இருக்கும் போது எந்த அளவிற்கு கவனமாக உடலை கவனித்துக் கொள்கிறோமோ அதேபோல பிரசவத்திற்குப் பின்னரும் உடல் நலனை அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்ளுதல் மிகவும் அவசியம்.

பிரசவத்திற்கு பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக்கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

பிரசவத்தற்குப் பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பது பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன. பிரசவத்திற்குப் பின் எடை போடுவது அதிலும் வயிற்றில் சதைபோடுவது சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது.

பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். இரும்பு சத்து மாத்திரையை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் இரத்தச் சோகை வராமல் தடுக்க முடியும்.

தானியங்கள், பால், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன் கூட அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். பழச்சாறுகளை அருந்துவதால் உடலில் தேவையற்ற கலோரிகள் சேருவது தடுக்கப்படும். சர்க்கரை சேர்க்காத பழச்சாறுகள் அருந்துவதுதான் நன்மை தரும். எந்த காரணம் கொண்டும் உணவுகளை தவிர்க்கக்கூடாது.

மூன்றுவேளை உண்பதற்குப் பதிலாக சிறுது சிறுதாக 6 வேளை உணவாக உட்கொள்ளலாம். இடை இடையே காய்கறிகள், பழங்கள் போன்றவைகளை சாலட்களாக உட்கொள்ளலாம். பிரசவத்திற்குப் பின்னர் ஆயில் மசாஜ், வெந்நீர் குளியல், நாட்டுமருந்து பத்திய உணவு, பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப் பயன் அடைந்து வந்தனர்

 

1513185_209318479254161_1083023063_n.jpg


நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றின் பிரித்தெடுப்பில் செக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நவீன இயந்திரங்களின் மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது. எனினும் பாரம்பரிய முறையில் பிரித்தெடுக்கும் போது மட்டுமே சுவை, போசணை, முக்கியமான விற்றமின்கள், தாதுப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றது. இயந்திரங்களின் பிரித்தெடுப்பில் வெப்பம் அதிகம் பிறப்பிக்கப்படுவதால் விற்றமின்கள் ஆவியாகி விடுகின்றன.

எவ்வாறெனினும் செக்கு என்பது இன்றும் கூட பிரபலமாக உள்ளதற்கு காரணம் போசாக்கான விளைவுதான். செக்கின் அடிமரம் பொதுவாக புளிய மரத்தின் தண்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அத்துடன் கடையும் அச்சு முதிரை, பாலை மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முன்னர் செக்கை இயக்க மாடுகள் பாவிக்கப்பட்டது. தற்போது சில மாற்றங்களுக்குட்பட்டு லான்மாஸ்ரர் பயன்படுகிறது. எள்ளைப் பாவித்து நல்லெண்ணெய் பிரித்தெடுக்கும் போது பிண்ணாக்கும் சக்கையாக எஞ்சுகிறது. இது கால்நடைகளிற்கு ஆரோக்கியமான உணவாகும். இதைப்போல தேங்காய் கொப்பராவில் இருந்து தேங்காயெண்ணெயும், இலுப்பை வித்திலிருந்து இலுப்பெண்ணெயும் எடுக்கப்படுகிறது.

 

1526277_209318585920817_1611817392_n.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1497809_1458368081057478_1609201361_n.jp

 


1517642_547859818640675_1315581775_n.jpg
மனம் வருந்தவில்லை மங்கையர் சூடாதத்ற்காக எருக்கம் பூ…. எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்.. எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்….. இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்…. இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும். பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது. இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும். காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம். எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும். பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது. எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்.. தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம். மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

*கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

*ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

*வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

*கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்சர் அவதியா..?
சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது'' என்பது சான்றோர்களின் அனுபவ மொழி. சிந்தை என்கிற சித்தம் என்பது அந்தகரணங்கள் முழுவதுக்குமான பொதுப் பெயராகும். சித்தம் என்கிற உள்ளத்தின் ஒவ்வொரு செயலுக்கு ஏற்ப மனம் என்றும், புத்தி என்றும், அஹங்காரம் என்றும் சொல்லப்படுகிறது. புறப் பொருளை நுகர்வதால் சித்தத்தில் உருவாகும் அலைகளே எண்ணங்கள் எனப்படுகின்றன. இந்த அலைகள் ஒன்றிலிருந்து ஒன்றாக தோன்றி விரிந்து கொண்டே செல்வதை சித்த விருத்தி என்கிறோம். இந்த எண்ணம் என்பதற்கான விளக்கம் என்னவென்றால், இந்த பூமிக்கு ஈர்ப்பு சக்தி இருப்பதால் அதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் ஆகர்ஷண சக்தி இருக்கிறது. அது போல விலக்கித் தள்ளும் சக்தியும் இருக்கிறது. இதைக் காந்தத் தத்துவத்தில் நாம் அறிந்திருக்கிறோம். வெளியில் நடப்பது போலவே நம்முள்ளேயும் இந்த காந்த சக்தி செயல்படுகிறது. சித்தமானது வெளியில் இருந்து ஒரு சக்தியை பற்றி இழுத்துத் தனதாக்கிக் கொள்கிறது. பிறகு எண்ணமாக வெளியே தள்ளுகிறது. உணவின் மூலமாக நாம் அடையும் சூக்கும சக்திகளின் விளைவுகளே எண்ணம், உணர்வு போன்றவைகள்.

அடுத்தது அறிவு. இயல்பாக நம் மனதிற்கு சுய போதம்(அறிவு) கிடையாது. ஆனால், அறிவு நிறைந்தது போலத் தென்படுகிறது. அதற்குக் காரணம் அது ஆத்மாவைச் சார்ந்திருப்பதே. மனமானது ஆத்மாவின் அறிவை தான் ஏற்றுக் கொண்டு அறிவுப் பொருளாக மிளிர்கிறது. ஒரு தடாகத்தின் மேல் மட்டத்தில் அலையடித்துக் கொண்டிருந்தால் கீழ் மட்டத்தை நாம் பார்க்க முடியாது. அது போல தடாகத்தின் அடிப்பகுதியை ஒத்தது நம் ஆத்ம சொரூபம். அதுதான் நம் யதார்த்த சொரூபம். மேல்பகுதி சித்தம் முதலிய அந்த கரணங்களாகும். மேல் பகுதியில் நீரில் அலைகள் அடிப்பது போல நம் சித்த விருத்திகள் இருக்கின்றன. அலைகள் அடிக்காமல் மேல்மட்டம் தெளிவாக இருந்தால் அடிப்பகுதியை காண முடியும். அது போல விருத்திகள் ஒடுங்கி விட்டால் நாம் நம் ஆத்மாவை தரிசிக்க முடியும். பொதுவாக இயற்கையில் தோன்றும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பிறப்பிடம் உண்டு. அந்த பிறப்பிடத்தை அடைய வேண்டும் என்கிற உந்துதல் இயல்பாகவே அனைத்திலும் அமைந்துள்ளது. கடல் நீர் ஆவியாகிறது, மேகமாகி மழையாப் பொழிகிறது, பிறகு நதியாகி மீண்டும் கடலுக்கே வந்து சேர்கிறது. ஆனால், இடையில் பல தடைகளைத் தாண்டி அது கடலுக்கு வரவேண்டும். அதுபோல இயல்பாகவே ஆத்மாவினின்று தோன்றிய சித்தமானது ஆத்ம சொரூபத்தை அடையவே முயற்சிக்கிறது. எனினும், இந்திரியங்கள் அதை புறத்தே இழுக்கின்றன. அப்படி பொறிகளைச் சார்ந்து சித்தத்தை புறத்தே போகவிடாமல் செய்து, உள் முகமாக ஆத்மாவை நோக்கி செலுத்துவதே சாதனை.

இப்படி சித்த விருத்திகளை தவிர்க்கவே மனிதன் ஏகாந்தத்தை நாடி காடு, மலைகளிலெல்லாம் சென்று அமர்ந்து கொண்டான். புற சூழலில் எப்படியோ ஏகாந்தத்தை அமைத்துக் கொள்ளலாம் ஆனால், அகத்தில் ...... ?
நாம் எங்கு சென்றாலும் நம் சித்தமும், அதன் விருத்திகளும் நிழல் போல் தொடர்கின்றனவே ? என்ன செய்வது ? மலைகளைச் சூழும் மேகங்கள் போல் எண்ணங்களும் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றனவே ? இதிலிருந்து மீள ஒரே உபாயம்தான் உள்ளது. அதுதான் வைராக்யம். வைராக்யத்தின் உண்மையான பொருள் பற்றின்மையே. அந்தப் பற்றின்மை ஏற்பட வேண்டுமானால் மனம் அதற்கேற்ற பக்குவத்தை அடைய வேண்டும். அத்தகைய பரிபாகம் மனதிற்கு அமைய வேண்டுமானால் அது நல்ல மனமாக ஆக வேண்டும். அதற்கு பகுத்தறிவு அவசியம். அதாவது ஒவ்வொரு பொருளின் இயல்பையும் உள்ளதை உள்ளவாறு தெளிந்து, அறிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். அந்நிலையில் பயனில்லாத தீயவைகளிடம் பற்றின்மை தானாகவே வந்து விடும். இவை எல்லாமே இனி நடக்கப் போவதற்கான முன்னேற்பாடுகள்தான். ஆனால், ஏற்கனவே நடந்த விஷயங்களுக்கான தீர்வு என்ன ?

அதற்கு பற்றின்மையை மனதிற்கு உருவாக்கிக் கொண்ட பிறகு யோக சாதனங்களை கைகொள்ளுதல் வேண்டும். அந்த யோக சாதனங்களை விடாமல் மீண்டும் மீண்டும் செய்வதையே அப்பியாசம் என்கிறார்கள். இந்த அப்பியாசம் ஏதற்காகவென்றால், மனமென்ற தடாகத்தில் ஒவ்வொரு செயலும் ஏற்படுத்திய அசைவு அல்லது சலனம் அடங்கி விட்டாலும், செயலின் பதிவுகள் தடாகத்தின் அடியில் போய் புதைந்து கிடக்கின்றன. அத்தகைய பதிவுகளையே சம்ஸ்காரங்கள் அல்லது வாஸனை என்கிறார்கள். இந்த சம்ஸ்காரங்கள் ஒன்று கூடி மீண்டும் மீண்டும் கிளம்பி மனிதனை செயல்படுத்தும் எண்ணமாக மலர்கின்றன. அதன் விளைவாக செய்யப்படும் செயலையே பழக்கம் என்கிறார்கள். அந்தப் பழக்கமே இயல்பாக அமைகிறது. நம் இயல்புகள் எல்லாம் பழக்கத்தால் வந்தவைகளே. எனவே பழக்கங்களை மாற்றி அமைக்கும் பொழுது நம் இயல்பும் மாறி விடுகிறது. இதேபோல ஒரு மனிதனின் பண்பை அடையாளப்படுத்துவதும் இந்த சம்ஸ்காரங்களே. ஒவ்வொருவரின் பண்பும் அவர்கள் சேர்த்து வைத்துள்ள சம்ஸ்காரங்களைப் பொறுத்தே அமைகிறது. நல்ல பதிவுகளை அதிகம் உடையவர்கள் நல்லவர்கள் என்றும், தீய பதிவுகளை அதிகம் உடையவர்கள் கெட்டவர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். முற்றிலும் நல்லவர் என்றோ, முற்றிலும் கெட்டவர் என்றோ சொல்வதற்கில்லை.

முற்றிலும் நல்லவராவதற்கான உபாயம் என்னவென்றால், நல்ல பழக்கங்களை செய்து வருவதேயாகும். இதனால் கெட்ட பழக்கங்கள் அற்றுப் போய்விடுகின்றன. இடைவிடாது நல்ல பழக்கங்களை கைகொள்ளும் போது நல்ல பழக்கங்கள் கெட்ட பழக்கங்களை அடக்கி தன் வசப்படுத்திக் கொள்கின்றன. இதையே அப்பியாசம் என்கிறோம். செய்கின்ற செயல்களனைத்தும் நல்ல செயல்களாகவும், எண்ணுகிற எண்ணங்கள் எல்லாம் தூய்மையான நல்ல எண்ணங்களாகவும் இருக்க வேண்டும். தீய எண்ணம் எழும் போதே அதைத் தவிர்த்து பழகிக் கொள்ள வேண்டும். நம் கைவசமுள்ள வலிமையான ஆயுதம் அப்பியாசம் மட்டுமே. அதைக் கொண்டு தீய சம்ஸ்காரங்களை வெளியே வர முடியாத அளவிற்கு அழத்தே புதைத்து விடலாம். நம் யோகப் பயிற்சிகளின் அப்பியாசத்தின் மூலம் வறுத்த விதையைப் போல அவற்றை செயலற்றதாக ஆக்கி விடலாம். அப்பியாசத்தின் மூலம் பழைய வினைகள் அற்றுப் போகும், வைராக்யத்தின் மூலம் விருத்திகளை அடக்கி விடுவதால் புதிய வினைகளும் அற்றுப் போகும். எனவே மனம் அடங்கி நசிந்து போகும். எனவே மேன்மை அடைய விரும்புபவர்களுக்கு வைராக்யமும், அப்பியாசமும் உற்ற உபாயமாகத் திகழ்கின்றன. இந்நிலை யோகத்தில் மட்டுமல்ல பக்தியிலும் மேன்மையை அடைந்திடச் செய்யும். பரமாத்மா மீதான பற்று மற்ற எல்லா பற்றுகளையும் அற்றுப் போகச் செய்யும் வைராக்யமாக அமைகின்றது. அவருக்காகச் செய்யும் கிரியைகள் நல்ல செயல்களின் அப்பியாசமாக அமைந்து தீயவற்றிலிருந்து விலக்கி நன்மையை வலிமைப்படுத்தி மேன்மையைத் தேடித் தருகின்றது.
1532152_258382130983125_1361810582_n.jpg

https://www.facebook.com/PayanamTetal


960260_477749602334672_819470191_n.jpg

 

1504118_477749735667992_21669882_n.jpg

 

1526971_477749772334655_1870706138_n.jpg

 

தேகத்தை வலிமைப்படுத்தி, பிராணனை வசப்படுத்தி, புலன்களை கட்டுப்படுத்தி, மனதை அடக்கி தவத்தில் நிலைத்திருப்பவர்களுக்கே நடு நாடியைத் திறந்து மகாசக்தி மேலேறுவாள். தேகத்தை வலிமைப்படுத்த உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் அவசியமாகும். அமிலத் தன்மை உள்ள உணவுகளைக் குறைத்து காரத் தன்மை உள்ள உணவுகளை பக்குவப்படுத்தி உண்ண வேண்டும். உப்பு, புளியை வறுக்காமல் உணவில் சேர்ப்பது தவ வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. மேலும் உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்வதோடு அவை நன்கு ஜீரணமாகி உடல் ஏற்றுக் கொண்டது போக மீதமுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கும் அதற்கான உள்ளுறுப்புகள் சீராக இயங்குவதற்கும் உடற்பயிற்சி அதாவது ஆசனப் பயிற்சி பேருதவியாக இருக்கிறது. வித்து சக்தியே அனைத்திற்கும் ஆதார சக்தியாக இருப்பதால் அதன் உற்பத்தி மற்றும் பாலுறவு உறுப்புகள் யாவும் சீராக இயங்க வேண்டியது அவசியமாகும். பெரும்பாலும் பாலுறவு உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளே தீராத உடலுறவு உந்துதலுக்குக் காரணமாக அமைகின்றன. எனவே அளவு மீறும் போது உயிர் சக்தியின் விரையத்தை தவிர்க்க இயலாமல் போய் விடுகிறது. எனவே குண்டலினி தவம் செய்பவர்களுக்கு சில குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளுறுப்புகளை பலப்படுத்திடுடலுறவு உந்துதலைக் கட்டுப்படுத்துகின்றன.

ஆசனங்களைப் பொருத்த வரை சிரசாசனம் தந்தை என்றும், சர்வாங்காசனம் தாய் என்றும் சொல்வார்கள். எல்லா ஆசனங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. உலகில் காணும் ஒவ்வொரு வடிவமும் ஒரு ஆசனமே. என்றாலும், யோக சாதனையைப் பொருத்த வரை, சிரசாசனம், சர்வாங்காசனம், சக்கராசனம், பத்மாசனம், வீராசனம், பரியங்காசனம்,பத்த கோணாசனம், பத்த பத்மாசனம், அர்த்த மத்சயேய்திராசனம், யோக முத்ராசனம், உபாவிஸ்த கோணாசனம், பச்சிமோத்தானாசனம், மயூராசனம், சித்தாசனம் போன்ற பல ஆசனங்கள் சிறந்த பலனைத் தரும் என்று சொல்லப்பட்டடுள்ளது. அந்த வகையில் வஜ்ரொளி முத்ராஸனம் என்ற ஆசனத்தைப் பற்றி நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். முறையாக பிராணாயாமமும், தியானமும், செய்து வருபவர்கள் ஒரு கால கட்டத்தில் மேற்குறிப்பிட்ட சில ஆசனங்கள் செய்யும் போது குண்டலினி சுழுமுனை வழியாக பாய்வதை உணரமுடியும் என்பது முன்னோர் வாக்கு. எனவே ஆசனம் செய்யும் போது அது வெறும் உடற்பயிற்சி என்று எண்ணி விடாமல், குண்டலினியை மேலேற்றும் உபாயம் என்ற எண்ணமும், பாவமும் கொண்டு ஏதேனும் ஒரு ஆதாரத்தில் மனதை நிறுத்தி செய்து வருவது விரைவில் வெற்றியைத் தேடித் தரும்.

அட்டாங்க யோகத்தின் மூன்றாவது படி ஆசனமாகும். குண்டலினியை மேலேற்றுவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ஆசனம் உடலளவில் உதவுகிறது. மனதை நெறிப்படுத்த உடல் நலமும் மிக்கிய அம்சமாகத் திகழ்கிறது. வஜ்ரம் என்றால் இறுக்கமான, கட்டியான என்று பல பொருள் கூறப்படுகிறது. இந்த வஜ்ரொளி முத்ராசனம் செய்வதால் பாலுணர்வு சார்ந்த உறுப்புகள் அனைத்தும் இருபாலினருக்கும் வலிமை பெறுகிறது. இந்த ஆசனம் செய்பவர்களுக்கு மலட்டுத் தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. ஆண்மைக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கி விடுகின்றன. இல்லற சுகத்தில் நீடித்த இன்பமும், களைப்பின்மையும் கிடைக்கச் செய்கிறது. விந்து கெட்டிப்பட்டு உயிர் சக்தி சேமிக்கப்படுவதால் தேஹம் ஒளியுடன் தேஜஸுடன் மிளிரும். குண்டலினி சக்தியை தூண்டி ஒளிரச் செய்கிறது. பெண்களுக்கு கர்பப் பை பலப்படுகிறது. எனவே கருத்தரிப்பது நிச்சயமாவதோடு குழந்தைப் பேறும் எளிதாகிறது. ஆண்களுக்கு விரை சம்மந்தபட்ட பிரச்சனைகள் தோன்றுவதில்லை. இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என இதன் பலன்களை அளவிட முடியாது. எனவே இருபாலினரும் கற்றுச் செய்ய வேண்டிய மேன்மையான ஆசனம் இதுவாகும்.

செய்முறை ; (a)முதலில் உடலைத் தளர்த்தி நிமிர்ந்து நேராக சிறிது நேரம் நிற்க வேண்டும்.
(b) விரைப்பாக முதுகுப் பகுதி தரையில் படும்படிக்கு படுத்துக் கொள்ள வேண்டும்.
© தலையில் இருந்து ஆசனப் பகுதி வரை மேலெழும்பாத வண்ணம் கால்களை மேலே தூக்க வேண்டும்.
(d) பின்பு இருகால்களையும் கைகளைக் கொண்டு வளைத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். படம் c, d ஐப் பார்த்து அதைப் போல செய்யவும்.
(e) அப்படியே படுத்த நிலையில் இருந்து மெல்ல எழுந்து அமர வேண்டும். ஆசனப் பகுதி தரையில் இருக்க வேண்டும். கைகளால் கால்களை வளைத்துப் பிடித்திருக்க வேண்டும். கால்கள் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இந்நிலையில் நெற்றியை கால்களுக்கு அருகில் கொண்டு வர வேண்டும்.
(f) அப்படியே மெதுவாகப் பின்புறம் சாய்ந்து முதுகு தரையில் படும்படியும், தலையை தரையில் படும்படியும் படுத்துக் கொள்ள வேண்டும். கால்களும், கைகளும் அதே நிலையில்தான் இருக்க வேண்டும். அப்படியே கால்களை வளைத்து தலையின் பின்புறம் வருமாறு செய்து கால் விரல்கள் தரையில் படும்படி செய்ய வேண்டும்.
(g) பிறகு மெதுவாக முன்புறமாக உருள வேண்டும். இப்போது பாதங்களின் பின்பகுதி தரையில் படும்படி முன்புறமாக கால்கள் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். e, f, g, மூன்று நிலைகளிலும் கால்களை கைகளால் வளைத்துப் பிடித்தபடியேதான் இருக்க வேண்டும். நெற்றியும் முட்டுப் பகுதிக்கருகில் ஒட்டியபடிதான் இருக்க வேண்டும். எடுக்கவே கூடாது. f, g என்ற இரு நிலைகளையும் உருளுதல் முறையில்(முன்னும், பின்னும்) மீண்டும் மீண்டும் முடிந்த அளவு செய்ய வேண்டும். படங்களைப் பார்த்தால் தெளிவாகப் புரியும்.
(h) தேவையான அளவு செய்த பிறகு பழைய படியும் "e" நிலைக்கு வர வேண்டும்.
(i) பிறகு மெதுவாக கைகளை விடுவித்து, கால்களை நீட்டி படம் ''b '' ல் காட்டிய படி தளர்வாகப் படுத்துக் கொண்டு, உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை மனதால் கூர்ந்து கவனிக்க வேண்டும்.(relaxation)

இந்த ஆசனம் இல்வாழ்விற்கும் சரி, தவ வாழ்வுக்கும் சரி மிகுந்த பயனளிக்கும் ஆசனமாகும். முறைப்படி குரு மூலமாகக் கற்று மேன்மையடையும் படிக்கு வாழ்த்துகிறேன். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
குரு வாழ்க. குரு நன்றாய் வாழ்க. குருவே துணை.

https://www.facebook.com/PayanamTetal


இளநீர் குடிப்பதனால் உண்டாகும் நன்மைகள்!

கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். மற்ற பானங்களை விட இளநீருக்கே மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர்.

மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது. அடிக்கும் கோடை வெயிலில் பச்சை இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது என்பது ஒரு பேரானந்தமாகும். இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.

இந்த நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள் மற்றும் சைட்டோகைனின் வளமாக இருக்கின்றன. இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.

மேலும் இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது.

மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டாமா? சரி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா?

வயிற்றுப்போக்கு:

வயிற்றுக் போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.

இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மேன்கனீஸ் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன.

மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைப்பாட்டை நீக்க உதவும்.

எடை குறைவு:

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

நீரிழிவு:

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.

வைரஸ் நோய்கள் :

சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அஅடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.

உடல் வறட்சி:

உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.

இரத்த அழுத்தம்:

இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

சிறுநீரக கற்கள்:

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும்.

சரும பிரச்சனைகள் :

பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.

புற்றுநோய் :

சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும், கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம்பாட்டிக்களை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.

கொலஸ்ட்ரால்:

மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின் படி, இளநீரில் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறினாலும், அது வெறும் தொடக்க நிலையிலே இருக்கிறது. ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.

பொலிவான சருமம் :

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்களின் கலவை உள்ளன. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாக மின்னும்.

1530329_553288944764429_914282415_n.jpg


இஞ்சி

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?

தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!

சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ”த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை

என்பது பழமொழி அல்லவா?

நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.

இஞ்சி பொதுக்குணம்

இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.

உபயோக முறைகள்

இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே! (ஓலைச் சுவடி)

சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.

இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!

இஞ்சி முறபா

மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

ஆஸ்துமா இருமலுக்கு

இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஆஸ்துமா

இது ஒரு பரம்பரை நோயாகவும் வரலாம் அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். இந்நோய்க்கும் காச நோய்க்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. ஒவ்வாமை காரணமாகவே இந்நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா ஏற்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அறிகுறிகள்:

மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை அறிகுறிகள் ஆகும்.

காரணங்கள்:

தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வேதி- கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந் துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம்.

மூலிகைகள்:

வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடுதொடா, தூதுவளை, முருங்கையிலை ஆகியவை ஆகும்.

இவை அனைத்தையும் பறித்துவந்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து சமஅளவு ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத பாட்டிலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் இவற்றில் இருந்து ஒரு ஸ்பூன் தூள் எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட் கொண்டால் பூரணகுணம் பெறலாம். முதல் மாதத்திலேயே ஓரளவு குணம் தெரிய ஆரம்பிக்கும்.
 

1496680_553288341431156_291070295_n.jpg


சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

காய்ச்சல்

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா:

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம்

இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்:

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி:

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு:

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்:

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்.


1546280_553287394764584_459285572_n.jpg

 

மஞ்சள் மகத்துவம்

மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உண்டு. முதல்வகை முகத்திற்குப் போடும் மஞ்சள் என்பார்கள். இதை முட்டா மஞ்சள் என்பார்கள். இது உருண்டையாக இருக்கும்.

இரண்டாம் வகை கஸ்தூரி மஞ்சள். வில்லை வில்லையாகத் தட்டையாக நிறைய வாசனையோடிருக்கும்.

மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும். இதற்கு விரலி மஞ்சள் என்ற பெயர். கறி மஞ்சளும் இதுதான்.

முகத்திற்குப் பூசும் மஞ்சள், முகத்தில் முடி வராமல் தடுக்கிறது. முகத்திற்கு ஒருவித மினுமினுப்பைத் தருகிறது. வசீகரத்தைத் தருகிறது. மிகவும் மங்களகரமானது.

இரண்டாவது வகையான கஸ்தூரி மஞ்சள் வாசனை மிகுந்தது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களி இதைச் சேர்த்து வருகிறார்கள்.
மூன்றாவது ரகமான விரலி மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள்.
இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது.

வாசற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும், வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பதற்கும், இந்த மஞ்சளில் அதிக கிருமி நாசினி இருப்பதே காரணம்.
மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், மூர்ச்சை போட்டு விழுந்தவர்களுக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கில் காட்டுவார்கள். இதனால் தெளிவு ஏற்படும்.
வேனல் கட்டி, விரல் சுற்றி, அடிப்பட்ட வீக்கம் இவைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து கிளறிச் சூடாக அடிபட்ட இடங்களில் பத்துப் போட்டால் குணம் உண்டாகும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் கட்டிகள் உடைந்துவிடும்.

மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்த வர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.

மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.

மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.
மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.

மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.

கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோக சிகிச்சை::

அறியாமை சோம்பல் புகுந்த கூட்டில்,
யாரும் அறியாமல் ஊன்றுமே நோய்

உடல், மன துன்பம் நீங்கவும், இவை அண்டாமல் இருக்கவும் சோம்பலையும் அறியாமையையும் தவிர்ப்போம்!

கள்ளநோய் காணு மயலைந்து மாகுமே
லுள்ள நோய் வேண்டா வுயிர்க்கு.

அரம்போல் தன்னைத் தேய்க்கின்ற உறவு, தனக்கடங்காத பெண் , அடங்காதன செய்யும் அடிமை, மரம் போன்ற தன்புதல்வனும்,மாறுபட்டு நின்று நஞ்சுபோல, வஞ்சனையாகிய நோயைச் செய்கிற அயலிருப்பும், ஆகிய இவ்வைந்தும், உளவாயின் உயிர்களுக்கு மற்றொரு மனப்பிணி வேண்டப்படாது..

ஆகா... நாம் நல்ல உடல் / மன ஆரோக்கியம் கொண்டவராக இருந்து, மற்றவருக்கு நன்மை செய்து வந்தால்.. மன நோய் அண்டாமல் பாதுகாக்கலாம்.

யோகக்கலை, ஒருவருடைய தெய்வத்தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று, பரவி, ஒளிறச் செய்வதேயாகும்.

ஓம் நமசிவாய.

553433_659308040794314_720466213_n.jpg

https://www.facebook.com/photo.php?fbid=659308040794314&set=np.80363933.1471025811&type=1&ref=notif&notif_t=notify_me

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மின்சாரம் இல்லாமலே குளிர்ந்த நீரை நமக்கு உருவாக்கித் தரும் வரலாற்றுப் பெருமைமிக்க பாத்திரம்.

தண்ணீர் ஊற்றிவைக்க, தானியங்கள் போட்டுவைக்க, வருட செலவுக்காக நல்லெண்ணெய் விளக்கெண்ணெய் போன்றவை ஊற்றிவைக்க, மிளகாய், புளி, உப்பு போன்றவைபோட்டுவைக்க இது பயன்பட்டது.

பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும்.

நவீன வாழ்க்கை என்ற பெயரால் நாம் இழந்து வரும் எண்ணற்றவைகளில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க இந்த மண்பானைகளும் அடங்கும்!..

-----------------------------------------------------
https://www.facebook.com/Siththar.Masters

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

ஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.
1098127_524016057666167_384879748_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரம்புட்டான் பழம்..!

ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.எலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.

ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.


இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்.

 

1505148_214387822080560_2057791157_n.jpg


சாப்பிடும் முறை..!

1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க.

2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம்.

4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதிங்க.

5.அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்.

6.பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.

7.பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.

8.ஆரோக்கிய உணவுகளை சிலர் பிடிக்காமல் வைத்துவிடுவாங்க.. அப்படிசெய்யாமல் சாப்பிட பழகவும்.

9.இரவு உணவில் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்

10.சாப்பாட்டுக்கு பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்.

11.சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும்.

12.சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதிங்க.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

உடலில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.
நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் அறிகுறிகளை கண்டறிய...
நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது. நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.
நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும். மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும். நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.

மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஓட்சிசன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை...
1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.
2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.
3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.
4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.
5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.
ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தர்கள் தங்கள் உடலில் ஆற்றலை மேம்படுத்த உணவுகளைக் கையாண்டது போல, எட்டுவகையான யோக முறைகளைப் பயன்படுத்தும் போது, ஒன்பது வகையான இருக்கைகளை மேற் கொண்டனர். இந்த இருக்கைகள் ஆசனம் என்றும் யோகத்திற்காகப் பயன்பட்டதினால் யோகாசனம் என்றும் கூறப்படுகிறது. யோகாசனங்கள் மொத்தம் 126 எனச் சித்தர் நூலுள் கூறப்பட்டாலும் இவற்றுள் ஒன்பது ஆசனங்கள் சிறப்பானவையாகக் கூறப்படுகின்றன. அவை,

1. கோற்றிகம்
2. சிங்கம்
3. பத்திரம்
4. முத்து
5. கோமுகம்
6. வீரம்
7. பத்மம்
8. மயூரம்
9. சுகம்
என்பனவாகும்.

1484195_214389152080427_1369160862_n.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?

*குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

*அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

*கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

*அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

*ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

*புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

*நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

*பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

*நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

 

1525180_214385428747466_106528495_n.jpg


விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும்.

இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பூண்டு
இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மாதுளை
இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

பசலைக் கீரை
பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது

மிளகு
மிளகு என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகு விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.

தக்காளி
இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.

தர்பூசணி
தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வைட்டமின் சி உணவுகள்
வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.

ஆப்பிள்
பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

முந்திரி
ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்.

ஆபத்தாகும் மாத்திரைகள்

சிலர் காய்ச்சல் தலைவலி என எதற்கு எடுத்தாலும் அதிகம் எடுத்து கொள்ளும் ஒரு மாத்திரை பாராசிடம்மல் தொடர்ந்து அதிகமாக பாராசிடம்மல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் உட்டகொள்ளும் வலி நிவாரணி சிறிது சிறிதாக உடலில் தேங்கினாலும் அது ஒரு குறிப்பிட் அளவு சேர்ந்ததும் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர்.

முந்தைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்து உள்ளதை எடின்பர்க் என்ற ம
த்துவமனை பதிவு செய்யதுள்ளது என்று பல்கலை கழக ஆராய்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பராசிட்டம்மால் உட்கொண்ட சில மணி நேரத்திலே வலி பறந்து ஒடுகிறது என பலர் இதனை எடுத்து கொள்கின்றனர்.இதில் ஒரு நபர் உட்கொள்ளும் அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டம்மால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை உணராமலேயே பலர் இருந்துள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்

நீங்களும் வலி நிவாரணி மாத்திரைனகை உட்டகொள்பவராக இருந்தால் இதை கவணத்தில் கொள்ளுங்கள் உங்கள் உடல் நலம் உங்கள் கையில் தான் உள்ளது.

1501712_214378068748202_44779292_n.jpg


துளசி

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் கத்தரிக்காய் பயிரிடப்படுகிறத ு.

• ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

• 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.

• அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது.

• ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும்.

• "பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.

• மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.

• கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும ், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.

1526840_214377742081568_1020410800_n.jpg


நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.
1504101_214377652081577_1248899718_n.jpg

சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
 
 

72307_214387705413905_1216886924_n.jpg


கொழுப்பை குறைக்கும் உணவுகள்:-

திடீரென்று எடை கூடுகிறதா? களைப்பாக இருக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம். உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவைப் பாருங்கள்.

கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால் இல்லை. மாறாக, நல்ல கொலஸ்டிராலான ஹெச்.டி.எல். கொலாஸ்டிரால் சரியான அளவில் இருக்கிறது. இதனால் இதயநோய் அபாயம் இன்றி நலமாக இருக்கிறார்கள். அடிக்கடி கோபம் ஏற்பட்டால் நல்ல கொலாஸ்டிராலான HDLன் அளவு குறைகிறது. எனவே, ஆண்களும் பெண்களும் வைட்டமின் E-400 சர்வதேச அலகு சாப்பிடவும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர் ஆலோசனைப்படி நிபாஸின் மாத்திரையும் சாப்பிடவும், கோபப்படுவதை தவிர்க்கவும்.கொழுப்பின் அளவு:

மொத்த கொழுப்பின் அளவு 200-க்குள் இருக்க வேண்டும். இந்த அளவில் இருந்தால் இதய நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். 200-லிருந்து 239 வரை கொழுப்பின் அளவு இருக்கும் பட்சத்தில் இதயநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். 240-க்கும் மேலாக இருந்தால் இவர்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து அதிகமாகும். உயர் அடர்வு கொழுப்பு 40-க்கும் குறைவாக இருந்தாலும் ஆபத்து ஆகும்.

பெண்களை பொருத்தவரை 50-க்கும் குறைவாக இருந்தால் ஆபத்து ஆகும். குறை அடர்வு கொழுப்பு 100க்குள் இருக்கலாம். 100 லிருந்து 129 வரை பரவாயில்லை. 130 லிருந்து 159 வரை அதிகமாகும். 160லிருந்து 189 வரை இருந்தால் மிக அதிகமாகும். 190க்கும் மேல் இருந்தால் மிக மிக அதிகமாகும். இது இதய நோய்க்கான ஆபத்தை அதிகப்படுத்தும். ட்ரை இளிசரைடுகள் 150க்குள் இருக்கலாம். 199 வரை கொஞ்சம் அதிகமாகும். 200லிருந்து 499 வரை இருந்தால் அதிகமாகும். 500க்கும் மேலிருந்தால் மிக அதிகமாகும்.
கொழுப்பை குறைக்கும் உணவுகள்:

1. கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகும்.
2. இஞ்சி உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும்.
3. வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம்.
4.லவங்க மசாலா பட்டை நமது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதுடன் மொத்த கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவையும் குறைக்கிறது.
5.சிவப்பு அரிசி, கொழுப்பை குறைக்கிறது.
6. நிலக் கடலை நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து தீமை செய்யும் கொழுப்பை குறைக்கிறது. உணவில் முக்கியமாக கடலை எண்ணையை பயன்படுத்த வேண்டும்.
7. கவளை மீன் எனப்படும் சாலை மீன் நமது உடம்பின் கொழுப்பை குறைப்பதுடன், நமக்கு தேவையான ஒமேகா 3 யை அதிகளவில் கிடைக்கச் செய்கிறது.
8. கருப்பு திராட்சை, கொழுப்புச் சத்தை குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.
9. கொள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்பது நமது பழமொழி. கொள்ளு நமது உடம்பின் மிகை கொழுப்பை சமன்படுத்துகிறது.
10. சோயா, கோதுமை போன்ற தாணியங்களும் கொழுப்பை குறைக்கப் பயன்படுகிறது.

சிகரெட் பிடிக்கக்கூடாது. மற்றவர்கள் விடும் சிகரெட் புகையை இலவசமாகப் பிடிப்பதால் இரத்தக் குழாய்களில் நெருக்கடி ஏற்படுகிறது. கெடுதலான கொலாஸ்டிரால் உருவாகாமல் இருக்க ஓட் மீல், பீன்ஸ், பட்டானி, பார்லி அரிசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, ஆப்பிள் முதலியன உதவும். இவற்றையும் அவ்வப்போது உணவில் சேர்க்கவும். சில தானிய உணவுகளில் கரையத்தக்க நார்ச்சத்தான சிலியம் (Psyllium) என்ற நார்ப்பொருள் இருக்கிறது. எனவே, கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றையும் அவ்வப்போது காலைப் பலகாரமாக சேர்க்கவும். இதில் உள்ள நார்ப்பொருள்களும் கொலாஸ்டிராலைக் கரைக்கும்.

சோயாபால் தினமும் அருந்தவும். இல்லை எனில் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சோயாமாவை, உங்களுக்குத் தயாரிக்கப்படும் உணவில் சேர்த்து பலகாரம் செய்யச் சொல்லுங்கள். சோயா தயிரும் பயன்படுத்தலாம்.

கொலாஸ்டிராலைக் குறைத்து HDL என்ற நல்ல கொலாஸ்டிரால் எப்போதும் அளவு குறையாமல் பார்த்துக்கொள்வதில் மீனின் பங்கு மகத்தானது. ஒமேகா-3 என்ற அமிலம் மீனில் கிடைக்கிறது. எனவே ஒருநாள் விட்டு ஒரு நாள் 100 கிராம் மீனையும் உணவில் சேருங்கள். சைவ உணவுக்காரர்கள் மீன் எண்ணெய் கேப்சூல் இரண்டு சாப்பிடலாம்.

தேங்காய் எண்ணெய், பாம்ஆயில் முதலியவற்றில் சமையல் செய்யக்கூடாது.

தினமும் பத்து டம்ளர் தண்ணீர் அருந்தவும். இத்துடன் தனியாவைத் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி அருந்தவும். தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவது மிக மிக நல்லது. இது கொலாஸ்டிரால் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

உடல் பருமனாவதைத் தடுக்கும் முயற்சியில் கவனத்தைச் செலுத்தினால் எல்லா நோய்களும் குணமாக
ஆரம்பித்துவிடும்
 
1545118_214387612080581_694389320_n.jpg

 


பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்:

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”..!

மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum):-

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.

பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டி வைத்தியம்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.


புதினா கீரையின் மருத்துவ குணங்கள் :-

கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியைப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். சீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும்.

பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.

புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட ஔடதமாக இருந்து வருகிறது.

புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார்.

எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும்.

தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
1544570_662108007144851_902482151_n.jpg

 


தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள் ஆணிடமுள்ள ''சுக்கிலம்'' எனப்படும் தாதுவாகும்.

இந்தத் தாதுவில் எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன. அதில் இருபத்து எட்டு அம்சங்கள் அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவான; பெற்றோரிடமிருந்து இருபத்தியொரு அம்சமும், பாட்டனாரிடமிருந்து பதினைந்து அம்சமும், முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும், நான்காம் மூதாதையிடமிருந்து ஆறு அம்சமும், ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும், ஆறாம் மூதாதையிடமிருந்து ஒரு அம்சமும் என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலை முறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை.

இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள், பெற்றோர், பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே. எனவேதான், திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது..!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூண்டு..!

நமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.

பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.

தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.

பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.

அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.

பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.

நம்மாழ்வார் சொன்ன நான்கு ரகசியங்கள்!

''உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும்,

இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,

மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,

நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’

நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை.

உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.

நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.

எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு உண்டு’ என்றார் மறைந்த பசுமை நாயகன் நம்மாழ்வார்.

1472817_385882754891869_14662359_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மூளையைப் பராமரிப்பது எப்படி?

சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது .தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம் மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும்,மீன் எண்ணெயிலிருந்துகிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும்,காரியத்தைச் செய்து முடிக்கும் விடாமுயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி,தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு.மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி வைட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர்.ஆனால்அவர்களில்பி6 பி12 ஃபோலேட் ஆகிய வைட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இநத மூன்று வைட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல்வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் மற்றும் கீரை இருந்தால் இந்த வைட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும்.மூளையும் அற்புதமாக இயங்கும்.
1546383_735553936462656_1398767171_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

உடலுக்குள்ளே எவ்வளவோ நரம்புகள் இருந்தாலும், உயிரோட்டத்தை உடைய 72000 நரம்புகளையே நாடிகள் என்பார்கள். நாடி சுத்தி பிராணாயாமம் செய்வதால் இந்த நாடிகள் தூய்மையடைந்து உயிரோட்டம் இந்த உடல் முழுவதும் தங்கு தடையின்றி பரவுவதற்கு ஏதுவாகிறது. இடது மூக்கு வழியான சுவாசம் சந்திர கலை, வலது மூக்கு வழியான சுவாசம் சூரிய கலை என்பது யாவரும் பொதுவாக அறிந்ததே. எனினும் சந்திரன் மறைந்த பிறகு திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் சந்திர கலையும், ஞாயிறு, செவ்வாய், சனிக் கிழமைகளில் இரண்டு மணி நேரம் சூரிய கலையும் பயிற்சி செய்வது மிகவும் நல்லது. காற்றை இரண்டு துவாரத்திலும் ஒரு சேர உறிவது நல்லதல்ல. இதை கேவல சுழுமுனை என்பார்கள். இதனால் உடலுக்குப் பெருங்கேடு விளையும். ஒரு மூக்கின் வழியாக இழுத்து தொப்புள் வரை கொண்டு சென்று நிறுத்தி, மறு துவாரம் வழியாக விடுவதே பூரண மூச்சாகும். இதையே பூரண சுழுமுனை என்பார்கள். பூரண மூச்சை இயல்பாகக் கொண்டவனுக்கு நோய் நொடிகள் வரவே வராது. அவன் மார்க்கண்டேயனைப் போல சிரஞ்சீவி போல வாழ்வான்.

பொதுவாக நம் முன்னோர்கள் மூச்சுக்கலையை யோகாசனத்தோடு சேர்த்துதான் செய்திருக்கிறார்கள். காலப் போக்கில் பிராணாயாமம் குறித்து பல வகையில் ஆராய்ந்து அது தனியாகவே பல முறைகளில் செய்யப்படுகிறது. இதில் அடங்கியுள்ள மூன்று நிலைகளான ரேசகம், பூரகம், கும்பகத்தில் ரேசகத்தின் நேரத்தை படிப்படியாக அதிகரிப்பவனுக்கு ஆயுளும் அதிகரிக்கும் என்பது திருமூலர் வாக்கு. இந்தப் பிராணாயாமத்தின் தொடர்ச்சியாக பந்தங்களும், முத்திரைகளும் நம் முன்னோர்களால் தரப்பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஜலந்திரபந்தம், மகா வேதை, எண்முக முத்திரை, மூலபந்தம் எனபவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜலந்திர பந்தம் - சித்தாசனம் அல்லது பத்மாசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, நெஞ்சை சற்று நிமிர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு இழுத்த சுவாசத்தை மெதுவாகப் பூரணமாக வெளியற்றி தலையைத் தாழ்த்தி தொண்டைக் குழியில் தாடை படுமாறு வையுங்கள். நெஞ்சைத் தாழ்த்தக் கூடாது. இயல்பாகச் செய்ய வேண்டும். முரட்டுத்தனமாகச் செய்யக் கூடாது. இரண்டு கண்களாலும் மூக்கின் நுனியைப் பாருங்கள். கைகள் யோக முத்திரையில் இருக்கட்டும் இதுவே ஜலந்திர பந்தம். ஆரம்பத்தில் அதிக நேரம் இந்நிலையில் இருக்க முடியாது. பழகி வரும் போது எளிதாகி விடும். சிலர் மூச்சை இழுத்து கும்பிக்கும் போது தாடையை மார்போடு வைத்தால் ஜலந்திர பந்தம் என்பார்கள். இதனால் செல்களில் உட்சுவாசம் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் கழுத்தின் கீழ் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு உடலியக்கத்தில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி மன அமைதியை உண்டாக்கும். இதனால் சுவாசம் தறிகெட்டு உட்புகாமல் சீராகப் புகுந்து உள்ளுறுப்புகளைச் சீராக இயக்கும். மன ஓட்டம் கட்டுப்படும்.

மகா வேதை - முதலில் கால்களை நீட்டி உட்காரவும். பிறகு இடக் காலை மடித்து மலத்துவாரத்தை குதி காலால் மூடவும். அதன் பிறகு வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். ஜலந்திர பந்தம் போடவும். இப்போது இரு கைகளையும் பக்க வாட்டில் தரையில் ஊன்றி உடலை மேலே தூக்கவும். இப்போது மூலத்தை இடது குதிகாலால் மெதுவாகத் தட்டவும். இதுவே மகா வேதை. இப்பயிற்சியினால் நரம்பு செல்களில் பிராண ஓட்டம் அதிகரிக்கும். குண்டலினியில் அசைவு ஏற்படும்.

எண்முக முத்திரை. மூலாதார தசைகளை நன்றாக உள்ளிழுக்கவும். இடது கை பெருவிரலால் இடது காதையும், வலது கை பெரு விரலால் வலது காதையும் அடைக்க வேண்டும்.அடுத்தபடியாக இடது கை ஆள்காட்டி விரலால் இடது கண் மேல் இமையையும், வலது கை ஆள்காட்டி விரலால் வலது கண்ணின் மேல் இமையையும் மூடவேண்டும்.இடது கை நடு விரலால் இடது மூக்குத் துவாரத்தையும், வலது கை நடு விரலால் வலது மூக்குத் துவாரத்தையும் மூட வேண்டும். இடது கை மோதிர விரலால் வாயின் இடது பக்கத்தையும், வலது கை மோதிர விரலால் வாயின் வலது பக்கத்தையும் மூடி அழுத்தி மூடவும். நாக்கை மேல் தாடையின் உட்புறத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளவும். இதுவே எண்முக முத்திரை. இந்த முத்திரையை பயிற்சி செய்பவர்கள் இடது மூக்குத் துவாரத்தில் உள்ள நடுவிரலைத் தளர்த்தி மெதுவாக காற்றை உள்ளே இழுக்க வேண்டும். இழுத்த பிறகு மூக்குத் துவாரத்தை விரலால் மூடி விட வேண்டும். இப்போது இழுத்த நேரத்தைப் போல நான்கு மடங்கு நேரம் காற்றை உள் நிறுத்தி கும்பிக்க வேண்டும். பிறகு வலது மூக்குத் துவாரத்தை அடைத்துள்ள விரலைத் தளர்த்தி மெதுவாக இழுத்த நேரத்தின் இரண்டு மடங்கு நேரம் வெளியே விட வேண்டும். இப்பயிற்சியினால் நரம்பு செல் உட்பட அனைத்து செல்களிலும் உட் சுவாசம் அதிகரித்து அதி பிராணவாயு கிடைக்கும். இதனால் ஆயுள் கூடும்.

மூலபந்தம் - ஜலந்திர பந்தத்தில் இருந்து கொண்டு மூலத் தசைகளை உள் நோக்கி இழுப்பதே மூல பந்தம். இதைப் பயிற்சி செய்பவர்களுக்கு உணர்வுகள் அடித்தள மூளை வரை சென்று நாளமில்லாச் சுரப்பிகளை நன்கு , சீராக இயங்கச் செய்திடும். ஜலந்திர பந்தம், எண்முக முத்திரை, மூலபந்தம் மூன்றும் ஒரு சேர செய்யும் போது உள்ளே சென்ற காற்றானது எந்த வழியாகவும் செல்ல முடியாமல் மூலாதாரத்திற்கு மேல் உள்ள நடு நாடியின் மூடியிருக்கும் வாசலில் போய் மோதும். மேலும் மகாவேதை செய்யும் போது மூலாதாரத்தை குதிகாலால் தட்டும் போது மூலாதாரத்தில் உள்ள நரம்புக் கொத்துகள் சூடேறும். இப்போது கும்பகத்தால் கடைத்த பிராண சக்தியும் உடலின் விந்து சக்தியும் மனதின் சக்தியும் சேர்ந்து சூடேறி விழித்த நிலையில் இருக்கும் குண்டலினியை உந்துத் தள்ளுகிறது. இதனால் நடு நாடி எளிதில் திறந்து விடும். அது எதனால் என்றால் வாயுவுடன் சேர்ந்த மகா சக்தி வாயு ரூபம் கொண்டு மேலெழும்புகிறது. வாயு மேல் நோக்கிச் செல்லும் தன்மை உடையது. மேலும் தலை உச்சியில் பிரம்மரந்திரத்தில் ஒரு கண்ணுக்குத் தெரியாத துளை உள்ளது. மற்றவழிகள் அடைக்கப்பட்டுள்ளதால் அது நோக்கி மகா சக்தி இழுக்கப்படுகிறது.

''வடிவு பத்மாசனத் திருத்தி மூல வனலையே

மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு

முடிவு முத்திரைப் படுத்தி மூல வீணா தண்டினால் முளரி யாலயங் கடந்து மூல நாடி யூடு போய்.....

என்று சிவ வாக்கியர் பாடுவது இதைத்தான். மகா சக்தியானது ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூவான மூளையைச் சென்றடைந்து ஹைப்போ தலாமஸ் எனும்அடித்தள மூளை வழியாக பிட்யூட்டரி சுரப்பியை அழுத்துகிறது. இதனால் அங்கு உடல் வளர்ச்சிக்குத் தேவையான சுரப்பு நீர் அதிகம் சுரக்கிறது. இதுவே அமிர்தம் என்றும், சோம ரசம் என்றும் சொல்லப்படுகிறது. இதை உண்ட சாதகரின் உடல் அழியாத் தன்மையை பெற்று விடுகிறது. ஜலந்திரபந்தம் மற்றும் மூலபந்தம் செய்து கும்பிப்பதால் மகா வேதையால் சூடேறி கிளம்பத் தயாரகத் தவித்துக் கொண்டிருக்கும் மகாசக்தி பிராணனோடு கலக்கும். பிறகு மூலபந்தம் போட்டு எண்முக முத்திரை செய்யும் போது அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருப்பதால் வாயு ரூபத்தில் இருக்கும் மகா சக்தி நடுநாடியைத் திறந்து கொண்டு அனைத்து ஆதாரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை சென்றடையும். இது நடை பெறுவதற்கு மனோ சக்தியும் அவசியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே குண்டலின் மேலேறுவது என்பது அஷ்டாங்க யோகத்தின் ஏழு நிலைகளும் விடா முயற்சியுடன் முழுமையாகவும், முறையாகவும் கடைபிடிக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். குருவே துணை. குரு போற்றி. குரு திருவடிகள் சரணம். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

996681_254012941428356_1896372163_n.jpg
1493260_254012994761684_1311456355_n.jpg
1551674_254013084761675_1299764524_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேன்.. தேன்.. தேன்..

01. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

02. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

03. தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

04. தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

05. இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

06. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

07. உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

08. தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

09. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

10. கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

11. வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

12. தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

13. அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

14. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

15. முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

16. தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது. ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

17. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

18. அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

19. நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

20. என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
மணம் வீசும் மலர்களின் மருத்துவ குணங்கள்:-

இலுப்பைப் பூ:

இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.


ஆவாரம்பூ:

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.


அகத்திப்பூ:

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.


நெல்லிப்பூ:

நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.


மகிழம்பூ:

மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.


தாழம்பூ:

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.


செம்பருத்திப்பூ:

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.


ரோஜாப்பூ:

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.


வேப்பம்பூ:

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.


முருங்கைப்பூ:

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.


மல்லிகைப்பூ:

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.


கருஞ்செம்பைபூ:

இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.


குங்குமப்பூ:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.
1513227_663689763653342_2125608189_n.jpg

 


கை, கால் வலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு
இந்த பயிற்சியினால் எந்த பக்க விளைவுகளும் இல்லை. மருந்து மாத்திரை இல்லை. பணம் செலவில்லை. சிறிது நேர பயிற்சிதான் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். இதனால் வலி போய்விடுமா என்று எண்ண வேண்டாம்? செய்துதான் பாருங்களேன் அகல் விளக்கு பிரகாசமாக எரிய தூண்டிவிடுவதுபோல, உங்கள் உடலில் உருவாகும் மின்னூட்டத்தை தூண்டிவிட்டு, ரத்த ஒட்டத்தை முறைபடுத்தி ஆரோக்கியம் அடையுங்கள்.

தினமும் அதிகாலை படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்து, இந்த நாள் இனிய நாளாக தொடங்கட்டும் என்ற உணர்வுடன் கால் விரல்களையும், கை விரல்களையும், நாற்பது தடவை உருட்டுங்கள், பிறகு உங்களுக்கான வேலைகளை தொடங்குங்கள். உற்சாகம் பிறக்கட்டும் உடல் வலிகள் நீங்கட்டும் வாழ்நாள் முழுவதும் வசந்தமாக மலரட்டும்! இனிமேல் எல்லா நாட்களும் இனிய நாட்களே.


இலவங்கப்பட்டை - மருத்துவ பயன்கள்!

நீரிழிவு நோய்க்கு

நீரிழிவுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் லவங்கப்பட்டை அதிகம் சேர்கிறது.

வாய் துர்நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் அதன் பாதிப்பு வாயில்தான் தெரியவரும். இவர்களின் வாயிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் மாற அன்றாட உணவில் இலவங்கப்பட்டையைச் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், குடல்புண் ஆறி வாய் துர்நாற்றம் நீங்கும்.

செரிமான சக்தியைத் தூண்ட

எளிதில் சீரணமாகாத உணவுகளை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல், வாயுத்தொல்லை, குடல்புண், மூலநோய் போன்ற நோய்கள் உண்டாகும். அன்றாட உணவில் சேர்க்கும் கறிமசாலையில் இலவங்கப்பட்டையையும் சேர்த்து அரைத்து சமைத்து சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும்.

இருமல், இரைப்பு

சளித்தொல்லையால் சிலர் வறட்டு இருமலுக்கு ஆளாக நேரிடும். காச நோய் உள்ளவர்களும் இருமல் தொல்லைக்கு ஆளாவார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு, வாய்விடங்கம், கிராம்பு இவற்றில் வகைக்கு 5 கிராம் அளவு எடுத்து 1 லிட்டர் நீர் விட்டு கொதிக்கவைத்து அது 250 மி.லி.யாக அதாவது நான்கில் ஒரு பங்காக வற்றவைத்து வடிகட்டி கஷாயம் போல் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்திவந்தால் இருமல், இரைப்பு மேலும் வயிற்றுவலி, பூச்சிக்கடி போன்றவை குணமாகும்.

விஷக்கடிக்கு

சிலந்திக்கடி மற்றும் விஷப் பூச்சிகள் தாக்கினால் இலவங்கப்பட்டையை அரைத்து கடிபட்ட இடத்தின் மீது பற்றுப் போட்டு வந்தால் விஷம் முறியும்.

வயிற்றுக் கடுப்பு நீங்க

வயிற்றுக் கடுப்பால் அவதியுறுபவர்களுக்கு சில சமயங்களில் வாந்தி உருவாகும். வயிற்றில் பயங்கரமான வலி உண்டாகும். இவர்கள் இலவங்கப்பட்டை, ஏலக்காய், சுக்கு இவைகளை பொடித்து சலித்து எடுத்துக்கொண்டு அதனுடன் தேன் கலந்து காலை மாலை இருவேளையும் சாப்பிட்டுவந்தால் வயிற்றுக்கடுப்பு, வயிற்றுவலி, வாந்தி போன்றவை குணமாகும். உடலுக்கும் புத்துணர்வை உண்டாக்கும்.

பெண்களுக்கு

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு கருவாப்பட்டை கஷாயம் செய்து கொடுத்து வந்தால் கருப்பை வெகு விரைவில் சுருங்கி சாதாரண நிலைக்கு வரும். அதிக உதிரப்போக்குள்ள பெண்களுக்கும் இது சிறந்த மருந்து.

தாது விருத்திக்கு

தாது நட்டம் உள்ளவர்கள் இன்று பகட்டு விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தைத் தொலைத்துக்கொண்டிருப்பார்கள். இவர்கள் இலவங்கப் பட்டையை தினமும் ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம்
1531706_663384943683824_1801858437_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்....

நடக்கும்போது ஓடும்போது அல்லது சாதாரண வேலைகளின் போது கூட சில தருணங்களில் கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டுவிடுவதுண்டு.


சுளுக்கு ஏற்பட்டால் அந்த இடத்தில் வீக்கம் எற்படலாம், வலி ஏற்படும், சில நேரங்களில் செம்மை படர்ந்தது போலவும் இருக்கும். அத்துடன் அந்த இடத்தை ஆட்ட அசைக்க முடியாதபடி பிடித்தது போலவும் இருக்கலாம்.

அவ்வாறு கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?


சுளுக்கு ஏற்பட்டதைத் தொடரும் அடுத்த மூன்று நாட்களுக்கு ஐஸ் தண்ணீரில் நனைத்தல், ஐஸ் பக் (ice pack) வைத்தல் அல்லது ஐஸ் மசாஸ் (ice massage) செய்வது அவசியம். அவற்றை செய்வது எப்படி?

ஒரு பிளாஸ்டிக் பையினுள் ஐஸ் துண்டுகளை உடைத்துப் போடுங்கள். எடுத்த எடுப்பில் உடனடியாக வலியுள்ள இடத்தில் வைக்க வேண்டாம். முதலில் மெல்லிய நனைந்த துணியினை சுளுக்குப் பட்ட இடத்தின் மீது விரித்துவைத்துவிட்டு அதன் மேல் ஐஸ் பக்கை வைக்கவும். அது ஆடாமல் அசையாமல் இருப்பதற்கு ஒரு எலாஸ்டிக் பன்டேஜை (elastic bandage ) நீங்கள் பயன்படுத்தலாம்.

ஒரு பெரிய வாளியினுள் ஐஸ் கலந்த நீரை ஊற்றுங்கள். அதற்குள் சுளுக்குப்பட்ட காலை வையுங்கள். கால் மரப்பது போன்ற உணர்வு ஏற்படும்வரை அவ்வாறு வைத்திருங்கள்

ஐஸ் மஸ்ஜ் கொடுப்பதற்கு ஸ்டைரோஃபோம் கப்களில் (Styrofoam cups) நீரை விட்டு ஐஸ் ஆக்குங்கள். அதன் நுனியில் படர்ந்திருக்கும் ஐஸ் கட்டிகளை உடைத்துவிட்டு. ஐஸ் உள்ள கப்பை சுளுக்கு பட்ட இடத்தின் மீது மசாஸ் பண்ணுவது போல மெதுவாக நீவி விடுங்கள்.ஒரு இடத்தில் தொடர்ந்து வைத்திருக்காமல் சுற்றுவட்டம் இடுவதுபோல சுற்றிச் சுற்றி வாருங்கள். ஒரே இடத்தில் 30 செகண்டிற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது முக்கியம்.

இவை எவற்றையும் ஒரு தடவையில் 20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து செய்ய வேண்டாம்.


நன்றி = ஹாய் நலமா
1554509_663385030350482_1070881907_n.jpg

 


 
கொய்யாப்பழம். .!

நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது. கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது. குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது.

கொய்யாப்பழத்தில் உள்ள சத்துக்கள். . .

நீர்=76%
மாவுப்பொருள்=15%
புரதம்=1.5%
கொழுப்பு=0.2%
கால்சியம்=0.01%
பாஸ்பரஸ்=0.04%
இரும்புச்சத்து=1 யூனிட்
வைட்டமின் C=300 யூனிட்

இவை அனைத்தும் 100 கிராம் கொய்யாப்பழச்சாறில் உள்ள சத்துக்கள்.

நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.

கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியதாவது:-

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம்.

இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும்.

கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.

கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன.

கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.

கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.
1503382_215866758599333_152418028_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
பூரான் கடிதால் என்ன செய்வது ?

விஷ ஜந்துக்களில் பூரான் என்று அழைக்கப்படும் - நூறுகால் பூச்சியும் ஒன்று. சுமார் 5 முதல் 7 அங்குல நீளமுடையது. பூரான் மிகவும் சுறுசுறுப்பான பிராணி. பூச்சிகளைத் தின்று வாழும். எப்போதும் திரிந்துக் கொண்டே இருக்கும். இதில் பல பிரிவுகள் உண்டு. பூரான் பக்கவாட்டில் கணக்கற்ற கால்கள் உண்டு. இது நீண்டு வளர்ந்திருக்கும். கெட்டியான தலையின் முன் பக்கத்தில் உணர்வு இலை இருக்கும்.

ாயின் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு கொக்கியைப் போல் உள் வளைந்த கூர்மையான பற்கள் கரு நிறத்துடன் இருக்கும். பூரான் தயங்காமல் கடித்து விட்டு ஓடிவிடும். அது கடிக்கும்போது ஒரு வகையான விஷம் வெளிவரும். பூரான் கடிக்கும்போது வலியே தெரியாது. இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரியும்.

உடலில் பல இடங்களில் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்படும். பூரான் கடித்த பிறகு உடலில் ஏற்படும் அவதியைக் கொண்டுதான் பூரான் கடி என்று உறுதி செய்யமுடியும். பூரான் கடித்த உடலில் விஷத்தின் அளவிற்கேற்ப தடிப்புகள் கூடவும் குறையவும் செய்யும். உடலெங்கும் அதிக தடிப்பும் அரிப்பும் எரிச்சலும் காணப்பட்டு சொறிந்தால் புண் ஏற்பட்டால் விஷம் அதிகம் என அறியலாம்.

பூரான் கடித்தான் என்று தெரிந்ததும் தடிப்பு ஏற்பட்ட இடத்தில் முதல் சிகிச்சையாக மண்ணெண்ணெயை விட்டு நன்றாகத் தேய்க்கத் தடிப்புகள் மறையும். உள்ளுக்கு பனைவெல்லாம் சாப்பிடவேண்டும்.

பூரான் கடியை தீர்க்க மருந்து

குப்பைமேனி இலையையும் உப்பையும் வகைக்கு 150 கிராம் எடுத்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் 30 கிராம் மஞ்சள் சேர்த்து இடித்து உடல் முழுவதும் நன்றாகப் பூசவும். ஒருமணி நேரம் சென்ற பிறகு சுத்தமான நீரில் குளிக்கவேண்டும். மூன்று நாட்கள் காலையில் மட்டும் இவ்வாறு செய்து வர தடிப்பும் அரிப்பும் மறையும்.

வெற்றிலைச் சாற்றை சுமார் 6 அவுன்ஸ் எடுத்து அதில் 35 கிராம் மிளகை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும். ஊறிய மிளகை எடுத்து உலர்த்திப் பொடி செய்து கண்ணாடி பாத்திரத்தில் வைக்கவும். இந்த மருந்தை காலை, மாலை இரண்டு சிட்டிகை அளவு வென்னீரில் பருகவேண்டும். உப்பு, புளி இரண்டையும் சேர்க்கக் கூடாது. பூரான் கடிதானே என்று அலட்சியம் கூடாது.

மற்றொரு மருந்தாக ஆகாச கருடன் கிழங்கை சிறுசின்னி சாறுடன் கலந்து அரைத்து சுண்டைக்காய் அளவு தினசரி 3 வேளை மூன்று நாள் சாப்பிடவேண்டும். வெய்யில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். புளி நீக்கிய உணவை சாப்பிடவேண்டும். பூரான் கடி விஷம் அறவே நீங்கும். பூரான் கடிக்குச் சிகிச்சை செய்யாமல் இருந்து தடிப்புகள் தோன்றி நீடித்து பலமாதமாகி விட்டால் ஊமத்ததைலம் தயாரித்து உடலில் தடவி குளிக்கவேண்டும்.

ஊமத்தம் செடியின் வேர்- 100 கிராம் நல்லெண்ணெய் - கால் லிட்டர் ஊமத்தை வேரை நன்றாக நைய இடித்து நல்லெண்ணெயில் ஊற போடவும். சூரிய வெயிலில் வைத்து தினந்தோறும் தடிப்புகளில் தடவி ஊறி குளிக்கவேண்டும். உடலெங்கும் தடிப்பு சொறி போன்ற சில்லரை தொந்தரவும் சீங்கும். தைலத்தைத் தினந்தோறும் சூரிய வெயிலில் வைத்து உபயோகிக்க வேண்டும்.

1526478_216020478583961_1299464637_n.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

1554518_438586682935466_758476577_n.jpg
இன்று ஒரு தகவல்:- 02.01.2014 அதிசய பானம் - புற்று நோய் தடுப்புக்கு முற்காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிசய சிவப்பு : தினமும் இரண்டு முறை சிவப்பு நிற பழங்களின் கொண்ட ஜூஸ் பருகுவதால் அதிசயிக்கத்த மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. A + B + C ..... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் : 1. புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ். 2. கல்லீரல், கணையம், சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை குணப்படுத்துகிறது. 3. நுரையீரலை பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. 4. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது . 5. உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது. 6. இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது. 7. கண் மற்றும் பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது. 8. மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு. 9. உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும். 10. முகப்பொலிவை அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது. 11. சீரணமண்டலம், தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. 12. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது. 13. காய்ச்சலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. எப்படி தயாரிப்பது : இந்த பானத்தை தயாரிப்பது எளிது காரட்- 1, பீட்ரூட்– 1, ஆப்பிள்– 1 மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்து நறுக்கவும். மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கவும். சுவைக்கு எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம். காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை பருக வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப்பின்னர் காலை உணவு சாப்பிடலாம். மாலையில் 5 மணிக்கு முன்னர் இதனை பருகலாம். உடனுக்குடன் செய்து பருகுவது முக்கியம். தினமும் இருவேளை பருகுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. சிறப்பு மிக்க இந்த பானத்தை உணவியல்துறை நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த பானம் எடைக்குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அதிசய பானத்தை தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பருகி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். எனவே அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றுமுதல் இந்த பானத்தை பருகலாம். கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவிய பின்னரே அரைக்கவும் .

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்தியம்:-

நம்மில் பல பேர் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணம் ஆகாமல் அஜீரண கோளாறுகளால் கஷ்டப்படுவதை அறிந்திருக்கிறோம் . இதற்காகவே பல மருந்துகளை மருந்து கம்பனிகள் தயாரித்தும் வருகின்றன . ஆனால் இந்த மாதிரியான அஜீரண கோளாறுகள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை பயன்படுத்தினால் நீங்கி நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம் .

விசேஷ நாட்களில் பலகாரம் சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணம் , பசியின்மை , வயிறு உப்பி காணப்படுதல் , உடல் வலி , அசதி முதலியவைகளுக்கு வீட்டிலேயே தயாரிக்கும் சுக்கு தண்ணீர் சிறந்தது . 2 பெரிய சுக்கு , 2 ஏலக்காய் இவற்றை நசுக்கி கொண்டு ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து , 2 டம்ளர் நீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து , முக்கால் தம்ளராக சுண்டியவுடன் கருப்பட்டி ( பனை வெல்லம் ) அல்லது சாதாரண வெல்லத்துடன் கலந்து குடித்து வந்தால் அணைத்து அஜீரண கோளாறுகளும் நீங்கி உடம்பு கலகலப்பாக இருக்கும் .

ஓமம் - 200 கிராம் , சீரகம் - 100 கிராம் , மிளகு - 100 கிராம் , கருஞ்சீரகம் - 100 கிராம் , பூண்டு - 50 கிராம் , கறிவேப்பிலை - 100 கிராம் , தோல் நீக்கிய சுக்கு - 200 கிராம் ஆகியவற்றை லேசாக நல்லெண்ணையில் வரித்து பொடி செய்து தினசரி பகல் உணவில் 2 ஸ்பூன் 1 பிடி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர செரிமானம் நல்ல நிலையில் ஆகி வயிற்று கோளாறு இன்றி சுகமாக இருக்கலாம் .

தினசரி 4 பேரீச்சம் பழம் சாப்பிடுபவர்களுக்கு வயிற்று கடுப்பு , அஜீரண பேதி , மலசிக்கல் போன்ற வயிற்று கோளாறுகள் வருவதில்லை .

சுக்கு பொடியுடன் சுடு நீரை சேர்த்து குடித்தாலும் அஜீரணத்தில் இருந்து நல்ல சுகம் கிடைக்கும் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.