Jump to content

2 சித்தம் - (மருத்துவம் ....இன்னும் பல) தமிழர்களின் வாழ்வியல் உணவும் மருந்தும்


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளமையாக இருக்க ஆசையா? அப்படியாயின் இதை படியுங்கள்…

then-150x150.jpgதேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகிறது.

 

தினமும் தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

தேனில் அடங்கியுள்ள பொருட்கள்:

 

1. தண்ணீர் 17 முதல் 70 சதவீதம்.

2. பழச்சர்க்கரை 40 முதல் 80 சதவீதம்.

3. திராட்சை சர்க்கரை 10 முதல் 30 சதவீதம்.

4. கரும்பு சர்க்கரை 1 முதல் 90 சதவீதம்.

 

மேலும் சிலிக்கா, கிருப்பு, தாமிரம், மாங்கனீஸ், கால்சியம், குளோரின், பொட்டாசியம், கந்தகம், பாஸ்பரஸ், அலுமினியம், மக்னீசியம் உள்ளிட்ட பொருட்களும் அடங்கியுள்ளது.

 

தேன் சாப்பிடுவதால் உள்ள பயன்கள்:

 

1. உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதியாகும்.

 

2. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி குணமாகும்.

 

3. தேனும் வெங்காயச்சாறும் கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசமடையும்.

 

4. தேன், முட்டை, பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா உபாதையில் இருந்து தப்பலாம்.

 

5. உடம்பில் இரத்த குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும் பாலும் கலந்து சாப்பிட்டால் சோகை நோய் தீரும்.

 

6. மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து சாப்பிட்டால் ஆறாத புண் ஆறிவிடும்.

 

7.வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்கு தொப்பு ளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

 

8. ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை எலும்பிச்சை பழம் சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் போல் சுறுசுறுப்பாக இருக்கும் நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடி விடும்.

 

9. அதிகாலையிலும், படுக்க செல்வதற்கு முன்பும் தேன் பருகினால் உடலுக்கு நல்லது.

 

10. அல்சர் நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு தேக்கரண்டி தேன் சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டு வர அல்சர் நோய் குணமாகும் உள்ளிட்ட ஏராளமான பலன்கள் தேனில் உள்ளது.

Link to post
Share on other sites
 • Replies 80
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

988375_647593898624063_800550840_n.jpg

HEART ATTACKS AND WATER ! How many folks do you know who say they don't want to drink anything before going to bed because they'll have to get up during the night. Heart Attack and Water - I never knew all of this ! Interesting....... Something else I didn't know ... I asked my Doctor why people need to urinate so much at night time. Answer from my Cardiac Doctor - Gravity holds water in the lower part of your body when you are upright (legs swell). When you lie down and the lower body (legs and etc) seeks level with the kidneys, it is then that the kidneys remove the water because it is easier. This then ties in with the last statement! I knew you need your minimum water to help flush the toxins out of your body, but this was news to me. Correct time to drink water... Very Important. From A Cardiac Specialist! Drinking water at a certain time maximizes its effectiveness on the body 2 glasses of water after waking up - helps activate internal organs 1 glass of water 30 minutes before a meal - helps digestion 1 glass of water before taking a bath - helps lower blood pressure 1 glass of water before going to bed - avoids stroke or heart attack I can also add to this... My Physician told me that water at bed time will also help prevent night time leg cramps. Your leg muscles are seeking hydration when they cramp and wake you up with a Charlie Horse. Mayo Clinic Aspirin Dr. Virend Somers, is a Cardiologist from the Mayo Clinic, who is lead author of the report in the July 29, 2008 issue of the Journal of the American College of Cardiology. Most heart attacks occur in the day, generally between 6 A.M. and noon. Having one during the night, when the heart should be most at rest, means that something unusual happened. Somers and his colleagues have been working for a decade to show that sleep apnea is to blame. 1. If you take an aspirin or a baby aspirin once a day, take it at night. The reason: Aspirin has a 24-hour "half-life"; therefore, if most heart attacks happen in the wee hours of the morning, the Aspirin would be strongest in your system. 2. FYI, Aspirin lasts a really long time in your medicine chest, for years, (when it gets old, it smells like vinegar). Please read on... Something that we can do to help ourselves - nice to know. Bayer is making crystal aspirin to dissolve instantly on the tongue. They work much faster than the tablets. Why keep Aspirin by your bedside? It's about Heart Attacks. There are other symptoms of a heart attack, besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating; however, these symptoms may also occur less frequently. Note: There may be NO pain in the chest during a heart attack. The majority of people (about 60%) who had a heart attack during their sleep did not wake up. However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep. If that happens, immediately dissolve two aspirins in your mouth and swallow them with a bit of water. Afterwards: - Call 911. - Phone a neighbor or a family member who lives very close by.- Say "heart attack!" - Say that you have taken 2 Aspirins. Take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival and ...DO NOT LIE DOWN! A Cardiologist has stated that if each person after receiving this e-mail, sends it to 10 people, probably one life could be saved! I have already shared this information. What about you? Do forward this message. It may save lives! "Life is a one time gift" Must Share with others..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க -இய‌ற்கை வைத்தியம்:-

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.

சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது
1504567_664398440249141_174060795_n.jpg

 


முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா???

உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது.

நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த பிறகு கருப்பு தழும்பாக மாறி விடும் .இதே போல்

அம்மை நோய்,மற்றும் சூட்டுக் கொப்புளங்கள் முகத் தில் வந்தாலும் சிலருக்கு முகத்தில் தழும்பு நீண்ட நாட்களுக்கும் அப்படியே இருக்கும்.

இதற்கான சித்த மருத்துவ முறை தீர்வுகள் :

1 – முகப் பருவைக் கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளி யைப் போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும் புள்ளியின் மேல் போட்டு வரவும் .

தினமும் இது போல் செய்து வர சில நாட்களில் கரும் புள்ளி மறைந்து விடும்.

2 – முகப் பரு – கரும் புள்ளி -தழும்புகள் நீங்க :

கோபி சந்தனம் – ஒரு டீ ஸ்பூன் அளவு
பாதாம் பருப்பு – மூன்று (நீரில் ஊற வைத்தது)
தயிர் – 2 – டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 – டீ ஸ்பூன்

இவைகளை அரைத்து எடுத்து முகம், கழுத்து பகுதி களில் பூசி ஒருமணி நேரம் கழித்து கழுவவும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வர முகப் பரு ,கரும்புள்ளி ,தழும்புகள் நீங்கி முகம் அழகு
பெரும்.

3 -முகத்தில் தழும்புகள் – தீப்புண் தழும்புகள் மறைய :
அரச மர பழுப்பு இலைகளை சேகரித்து எரித்து கரி யாக்கி தூள் செய்து தேங்கா எண்ணையில் விட்டு குழப்பி வைத்துக் கொள்ளவும். இதனை இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,
மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,
ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...

அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....,

இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்..


இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
1546324_685558128141506_1497348535_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1509776_481406548635644_1854902288_n.jpg
ஆறு அமைதியாக இருப்பது போல் தோன்றும். ஆனால், ஓயாது அது ஓடிக் கோண்டே இருக்கிறது. அது போலவே நம் தேகமும். அது ஓயாது மாறியமைந்து கொண்டே இருக்கிறது. சேர்த்து பிடித்து வைத்திருக்கும் சக்தி கலைந்து போனால் இந்த உடலானது மண்ணில் வீழ்ந்து விடுகிறது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் அழியாது வைத்திருக்க முயன்றாலும், அதற்குப் பிறகு ஓரு நாள் இந்த உடலானது அழிந்தே தீரும். ஒரு நொடிப் பொழுதாவது இந்த உடலின் இயக்கத்தை மாறாமல் வைத்திருப்பவர் யாரும் கிடையாது. பிறகு ஏன் இந்த தேகம் அமைந்தது என்று கேட்டால், இதைக் கொண்டு தான் நாம் பரிபூரண நிலையை அடைய முடியும். மற்ற எல்லா உயிரினங்களுக்கும் அவ்வளவு ஏன் தேவாதி தேவர்களுக்கும் கூட இல்லாத சிறப்பு இந்த உடலாகும். இது மனிதனுக்கு மட்டுமே இறைவனால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் திருமூலர்.... ''உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானஞ் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே - என்கிறார். எனவே இந்த உடல் நாம் சம்ஸ்சார சாகரத்தைக் கடக்க உதவும் ஒரு தோணியாகும். ஒரு அரிய கருவியாகும். மெய்யை அடைய உதவும் தலையாய கருவியாக விளங்குவதால்தான் அழியும் இந்தப் பாழும் பொய்யுடம்பைக் கூட மெய்யென்று ஞானிகள் பகர்கிறார்கள். ஆனால் நம் மனதின் பற்று என்ற குணத்தினால்தான் பாச பந்தத்தில் கட்டுண்டு தேஹத்தை மெய்யென்று எண்ணி ஏமாந்து மடிந்து போகிறோம். இந்திரிய சுகத்தை பெரிதென்று எண்ணி சக்தியை இழந்து, கருவியையும் இழந்து போகிறோம். வாழ்க்கையின் முடிவான குறிக்கோளை மறந்து இந்திரிய சுகத்தில் அழுந்தி சேற்றில் புரளும் பன்றியைப் போல உழன்று கொண்டிருக்கிறோம். நிறைய பேர் என்னிடம் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியையே கேட்கக் காண்கிறேன். எவ்வளவோ முயற்சி செய்தும் என் மனம் அடங்க மாட்டேன் என்கிறது, என்ன செய்யலாம் ? இதற்கு நான் சொல்லும் பதிலைக் கேட்டு சிலர் என்னிடம் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அதாவது குருவானவர் வித்தையை கற்றுத் தருவார். முயற்சி என்பது நம் கையில்தான் இருக்கிறது. நம் மனதில் உருவாக வேண்டிய மாற்றத்திற்கு முழுப் பொறுப்பும் நம் கையில்தான் இருக்கிறது. ஒரு நல்ல குருவிடம் வித்தை பயில்கிற அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடைவதில்லை. இதை நான் சொல்வதால் நான் என்னவோ குருவுக்கு எதிரானவன் என்கிற மாதிரியான விமர்சனங்கள் எழுகின்றன. எனவே ஒழுங்காகவும், முறையாகவும் சாதனங்களைக் கடைபிடிப்பது அவசியம். ஆண்டுக் கணக்கில் பிறர் சொல்வதைக் கேட்டுக் கொண்டோ, படித்துக் கொண்டோ இருப்பதனால் யாதொரு பயனுமில்லை. மனதளவில் மாற்றத்தைக் கொண்டு வருவது மிகமிக அவசியமாகும். அது அவ்வளவு எளிதல்ல என்கிற காரணத்தினால்தான் பயிற்சி முறைகளில் பல விதமான படித்தரங்களை அமைத்துத் தருகிறார்கள். முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். தியான யோகம் என்கிற இராஜ யோகமானது உடலையும், மனதையும் பக்குவப்படுத்தி அறிவுள்ள, வலிமையுள்ள மனிதனாக இந்த உலகை ஆள்வதற்கு என்று கற்பனை செய்தோமேயானால், நாம் தோற்றுப் போவோம். ஒரே ஒரு நிகழ்வில் நாம் சேர்த்து வைத்திருந்த அத்தனை உடல் வலிமையும், மன வலிமையும் கரைந்து காணாமல் போய் விடும். மனக் கோட்டைகள் தகர்ந்து தூள் தூளாகிப் போகும். இது அதற்கான யுக்தியல்ல. நம் முடியை விட மெல்லிய நரம்பு ஒன்றில் ஒரு சிறிய பழுது நேர்ந்தாலும் போதும் எவ்வளவு வலிமையான தேகமாக இருந்தாலும் இயக்கமற்றுப் போய் விடும். இது அதையும் தாண்டிய ஒரு முயற்சியாகும். நம் ஆத்மாவானது பந்த பாசங்களில் இருந்து விடுபட்டு முக்தியடைய வேண்டும் என்பதே முடிவான குறிக்கோளாகும். அதை மனதளவில் உணர்ந்து கடைபிடிப்பவர்களுக்கே தியான யோகமாகிய இராஜ யோகத்தில் வெற்றி வாய்க்கும். பக்தி யோகம், ஞான யோகம் போல தியான யோகத்தைப் பழக முடியாது. வெறும் தியானத்திற்கு ஒரு எல்லை உண்டு. அதைத் தாண்டி எதுவும் மாற்றத்தை உணர முடியாது. எனவே இந்த இராஜ யோகம் என்பது ஒரு யுக்தி. இதற்கு உடல் வலிமை, பிராணனில் வலிமை, மன வலிமை மூன்றும் மிக மிக அவசியம். ஒன்று குறைவுபட்டாலும் முடிவான இலக்கை அடைவது சாத்தியமில்லாமல் போய் விடும். இதில் அடையப் பெறுகின்ற சித்திகள் கூட யோகிக்கு ஒரு பரிட்சைகளேயாகும். ஏழு சித்திகளையும் கடந்து உதாசினப்படுத்தி விட்டு எட்டாவது சித்தியை அடைவதே குறிக்கோளாகும். இதையே எட்டாம் நிலை அது எட்டா நிலை என்பார்கள். இதற்கு புராணத்தில் ஒரு கதை உண்டு. தேவர்களின் அரசன் இந்திரனும், அசுரர்களின் அரசன் விரோசனனும் ஆத்ம வித்தையாகிய பிரம்ம வித்தையைக் கற்றுத் தரும்படி படைப்புக் கடவுளாகிய பிரம்ம தேவனிடம் போய் வேண்டுவார்கள். பல ஆண்டுகள் கற்றுத் தரப்பட்டு முடிவில் ''நீங்கள் தேடுகின்ற பொருள் நீங்களே'' என்று சொல்லி பிரம்மா அவர்களை அனுப்பி வைத்திடுவார். இருவரும் கற்க வேண்டிய மிகப் பெரிய விஷயத்தையே கற்றாகி விட்டது. இனி கற்க எதுவும் இல்லை என்று எண்ணி நாமே ஆத்ம சொரூபம் இதற்கு அப்பால் எதுவுமில்லை என்று சொல்லி அவரவர் இனத்தவர்களுக்கு கற்றுத்தரலாயினர். அசுரன் என்றாலே அஞ்ஞானத்தின் உறைவிடமே. அவர்களுக்கு விவேகம் மறைக்கப்பட்டிருப்பதால் அதற்கு மேல் எதையும் விசாரிக்காமல் தம் உடலே ஆத்மா என்று கருதி அஹங்காரம் தல்க்கேறி அழிவைத் தேடிப் போய் விடுகிறார்கள். ஆனால், இந்திரன் தேவர்கள் தலைவனல்லவா, அவனுக்கு அசுரர்களை விட பக்குவமுள்ள மனம் உண்டாயிருந்த படியினால் அவனுக்கு ஐயம் எழுந்தது, அவன் மீண்டும் பிரம்ம தேவரிடம் சென்று ஐயனே, ஆத்மாவோ அழிவற்றது என்றீர்கள். இந்த தேகமோ அழியத்தக்கதாக இருக்கிறது. உயிர்களின் தேகங்கள் அனைத்தும் மடிந்து போகக் காண்கிறேன். எனவே இந்த தேகம் ஆத்மாவாக இருக்க முடியாது. எனவே நீங்கள் தேடுகின்ற பொருள் நீங்களே என்பதற்கு இந்த உடல் தகுதியானதல்ல என்று தோன்றுகிறது. எனவே உண்மையை விளக்கியருள வேண்டும் என்று தொழுது நின்றான். பிரம்ம தேவரும் தத் த்வம் அஸி - நீ அதுவாகிறாய். எனவே அதன் பொருளை நீயே கண்டு உணர்வாயாக என்று சொல்லி அனுப்பி வைத்தார். இந்திரனும், ஒரு வேளை குரு பிராணனைச் சொல்லியிர்பார் என்று எண்ணி சென்று பயிற்சி செய்து வருகிறான். அந்த எண்ணம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. உணவு உண்டால் பிராணன் உறுதி பெறுகிறது. பட்டினி கிடந்தால் பிராணன் நலிவடைகிறது. எனவே பிராணனாக இருக்க முடியாது என்று கருதி குழப்பத்தோடு மீண்டும் பிரம்ம தேவரிடத்தில் செல்கிறான். அவர் அதை நீயே உன் முயற்சியால் கண்டு கொள் என்று மீண்டும் அதையே சொல்லி அனுப்பி வைக்கிறார். இம்முறை இந்திரன் மனம் ஆத்மாவாக இருக்கும் என்று எண்ணி வந்து விடுகிறான். சில நாட்களில் அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது. மனதில் இடைவிடாது எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. நல்ல எண்ணங்களும், கெட்ட எண்ணங்களும் மாறி மாறி அமைகின்றன. எனவே மனமானது ஆத்மாவாக இருக்க முடியாது என்று ஐயம் கொண்டு மீண்டும் பிரம்ம தேவரிடம் வருகிறான். அவர் மீண்டும் தத் த்வம் அஸி என்று சொல்லி இதன் உண்மையை நீயே உணர்ந்து கொள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அதன் பிறகு அவன் நீண்ட நாட்கள் தவம் செய்து ஆத்மாவை உணர்கின்றான். உடலுக்கும், மனதிற்கும், மனதின் செயலாகிய எண்ணத்திற்கும், உணர்வுகளுக்கும் அப்பாற்பட்டது ஆத்மா என்பதை தெளிவாக உணர்கிறான். ஆத்மா அழிவற்றது. அதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதை உணர்ந்து மேன்மையடைகிறான். இது கதை. இதில் என்ன சொல்லப்படுகிறது ? நீ ஆத்மா. ஆமாம் நான் ஆத்மா என்பது எனக்குத் தெரிந்து விட்டது. அப்படியானால் நான் உண்மையை தெரிந்த ஞானியாகி விட்டேனா ? நாம் ஆத்மா என்பதை நமக்கு மறைக்கின்ற விஷயங்களை அழித்து அவற்றையெல்லாம் கடந்து தன்னில் தானாய் லயித்து நிற்க வேண்டும். அதுவே ஞானம். அப்போது இந்த தேகம், இந்த மனம், எண்ணங்கள், உணர்வுகள், குணங்கள் இத்யாதி...... எல்லாம் நிரந்தரமானவைகளல்ல, ஆத்மா ஒன்றே சாஸ்வதமானது. அதுவே நான், அதுவே நீ, அதுவே எல்லாம் என்கிற பேதமற்ற இரண்டற்ற தன்மை, நிலை ஏற்பட்டு விடும். அதுவே ஞானம். அதுவே முக்திக்கான வாயில். அதற்குள் நுழைந்து விட்டால் பிறகு எந்தக் கவலையுமில்லை. வினைகள் அற்றுப் போய் விடும். மெல்ல மெல்ல அதில் கரைந்து அதுவாகவே ஆகி விடுவோம். அதுவே முக்தி. எனவே தியானம், யோகம், சமாதி, முக்தி இதெல்லாம் வார்த்தை ஜாலங்களல்ல. அவரவர் உள்ளுக்கும் ஏற்படுத்தப்படும் மாற்றம். செயலுக்கு வர வேண்டும். மற்றவர்கள் இதில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. ஆனால், வழிகாட்டியாக, தூண்டு கோளாக, உத்வேகத்தை ஏற்படுத்துபவர்களாக வேண்டுமானால் இருக்கலாம். எனவே தன்னை அறிவதற்கு தன்னால் மட்டுமே முடியும். இதுவே முடிவாகும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

1546324_685558128141506_1497348535_n.jpg

 

 

இஞ்சிப் பாலில்... பல முக்கிய‌ மருத்துவ குணங்கள் உள்ளது போலுள்ளது.

நல்லதொரு தகவலுக்கு நன்றி, Jdlivi.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

பால் உணவு உட்கொள்ளுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.

படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள்.

புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.

பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக தூங்குங்கள்.

பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் . முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.

உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.

6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.

4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.

1 1/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )

4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)

விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்

அவரை நெருங்கி வரவே பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.

காலை இளம் வெயிலில் அலையாதீகள்.

மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.

முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.

உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.

உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.

மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .

மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.

இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.

பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.

மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.

மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

-இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார் சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம். ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
நம் தலைமுறையின் வேகமான வளர்ச்சியில் தொலைந்து போன ஒரு சுகம் ... பட்டை சோறு உண்பது.

எவர்சில்வர் பாத்திரம்கள்.. அதிக புழக்கத்தில் இல்லாத காலம் உணவு உண்ண.. உடனடி பாத்திரமாக இதுவே பயன்பட்டது..

தோட்ட வேலை செய்வோருக்கு.. வீட்டிலிருந்து உணவு கொண்டுவரப்படும்.. பாத்திரம்கள் அதிக எண்ணிகையில்.. இருக்காது..

அப்போது அருகில் நிற்கும் வடலி (இளம் பனை) மரத்திலிருந்து ஓலை வெட்டி.. மட்டையிலிருந்து ஓலையை துண்டுகளாக தேவையான அளவில் வெட்டி.. நடுப்பகுதியை பிரித்து கையால் அழுத்தி .குழி ஏற்படுத்தி.. தும்பு பகுதி.. அதே ஓலையால் கட்டப்படும்.. இன்னொரு சிறுதுண்டு ஓலையை மடக்கி ஸ்பூனாக செய்து பயன்படுத்துவார்கள்.. சுற்றுலா செல்வோரும்.. கூட்டமாக தோட்டங்களில் சமைத்து சாப்பிடுவோரும்.. இதையே பாத்திரமாக பயன்படுத்துவார்கள்
1509223_557236887702968_1888154993_n.jpg

 


பாட்டி வைத்தியம்:-

* வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

* வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

* புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

* மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

* இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

* சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

* சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

* அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
1497794_665924346763217_1884690373_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
கால்ப்பாதத்திலுள்ள அக்குப்பஞ்சர் புள்ளிகளையும் அவை எந்த உடலுறுப்புடன் தொடர்புபட்டுள்ளது என்பதையும் காட்டும் படம்.
1479524_557231947703462_1490030733_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

வெள்ளரிக்காயை நிச்சயம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 14 காரணங்கள்:-

பச்சையாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கக்கூடிய காய்கறிகள் சில வகைகள் தான் உள்ளது. அவைகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். பொதுவாக வெள்ளரிக்காய் பிடிக்காதவர்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்க முடியும். உலகத்தில் அதிகமாக விளையக் கூடிய காய்கறியில் வெள்ளரிக்காய் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணையாக நிற்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

உடல் வறட்சியை நீக்கும்:--

தண்ணீர் குடிப்பதற்கு நேரம் கிடைக்காமல் வேலையாக இருக்கிறீர்களா? அப்படியானால் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. மேலும் இது தண்ணீர் குடிக்காததை ஈடுசெய்யும்.

உடல் சூட்டை தணிக்கும்:-

வெள்ளரிக்காய் உண்ணுவதால், உடலில் ஏற்பட்டுள்ள வெப்பத்திற்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் சருமத்தில் வெள்ளரிக்காயை சருமத்தில் தடவினால், சூரிய கதிர்களில் இருந்து அது உங்களை காக்கும்

நச்சுப் பொருட்களை நீக்கும்:-

வெள்ளரிக்காயில் உள்ள நீர், உடலில் இருக்கும் கழிவை நீக்கும் ஒரு துடைப்பமாக விளங்குகிறது. அதனை சீரான முறையில் சாப்பிட்டால், சிறுநீரகத்தில் ஏற்பட்டுள்ள கற்களை கரையச் செய்யும்

தினசரி தேவையான வைட்டமின்களை நிரப்பும்:-

வெள்ளரிக்காயில் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இதனால் அதை சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் வைட்டமின் ஏ, பி மற்றும் சி இதில் உள்ளது. இதனை இன்னும் சத்துள்ளதாக மாற்ற, அதனை கீரை மற்றும் கேரட்டுடன் சேர்த்து ஜூஸ் போட்டு குடியுங்கள். மேலும் வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுங்கள். ஏனென்றால் தோளில் தேவையான அளவு வைட்டமின் சி உள்ளது. அதிலும் அன்றாடம் தேவைப்படும் அளவில் 12% அடங்கியுள்ளது.

சருமத்திற்கு தேவையான கனிமங்களை அளிக்கும்:-

வெள்ளரிக்காயில் அதிக அளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிகான் உள்ளது. அதனால் தான் ஸ்பா மற்றும் அழகு சாதன நிறுவனங்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன்படுத்துகின்றனர்.

செரிமானம் மற்றும் உடல் எடை குறைவுக்கு உதவி புரியும்:-

வெள்ளரிக்காயில் நீர் அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சரியான உணவாக அமையும். ஆகவே இதனை சூப் அல்லது சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு வெள்ளரிக்காய் பிடிக்காது என்றால் அதனை அப்படியே எடுத்து தயிரில் நனைத்து கொறிக்கலாம். அதனை மெல்லுவதால், தாடைக்கு நல்ல பயிற்சியாக அமையும். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். தினமும் வெள்ளரிக்காயை உட்கொண்டால் தீவிரமான மலச் சிக்கலை நீக்கும்

கண்களுக்கு புத்துயிர் அளிக்கும்:-

வெள்ளரி துண்டை வீங்கிய கண்களின் மேல் வைத்துக் கொண்டால், மற்றவர்களுக்கு அந்த காட்சியை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்! அதில் அழற்சி எதிர்க்கும் குணங்கள் உள்ளதால், வீங்கிய கண்களுக்கு அவை சரியான நிவாரணியாக விளங்கும்

புற்றுநோயை எதிர்த்து போராடும்:-

வெள்ளரிக்காயில் செகோய்சொலாரிசிரேசினோல், லாரிசிரேசினோல் மற்றும் பினோரெசினோல் அடங்கியுள்ளது. இந்த மூன்று பொருட்களுக்கும் கருப்பை, மார்பகம், முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்களை எதிர்க்கும் தன்மை உள்ளது.

சர்க்கரை நோய், கொழுப்பு மற்றும் இரத்தக் கொதிப்பு ஆகியவைகளுக்கு தீர்வு:-

இன்சுலின் சுரப்பதற்கு, கணையத்தில் உள்ள அணுக்களுக்கு தேவையான ஹார்மோன் ஒன்று வெள்ளரிக்காய் சாற்றில் உள்ளது. அதனால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது. வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறையச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் அதிலுள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். அதனால் தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் என இரண்டிற்குமே வெள்ளரிக்காய் உபயோகப்படுகிறது.

முடி மற்றும் நகங்களை மென்மையாக வைத்திருக்கும்:-

சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும்

மூட்டு ஆரோக்கியம் மற்றும் கீல்வாதத்திற்கு நிவாரணம்:-

வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உள்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும். அதிலும் இதனை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

ஹேங்-ஓவரை சரிசெய்யும்:-

காலை எழுந்தவுடன் ஏற்படும் தலைவலி அல்லது ஹேங்-ஓவரை சரிசெய்ய படுக்க போகும் முன், கொஞ்சம் வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ணுங்கள். வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் பி, சர்க்கரை மற்றும் எலெக்ட்ரோலைட்டுகள் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களை புதுப்பித்து, ஹேங்-ஓவர் மற்றும் தலைவலி என இரண்டையுமே சரிசெய்யும்

சிறுநீரகத்தை பாதுகாக்கும்:-

உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

1560454_667013166654335_589203164_n.jpg

 

மற்றும் சித்த மருத்துவம்.

சூரியகாந்தி விதை:

பாதாம், முந்திரி போல பருப்பு வகைகளில் முக்கியமானது சூரியகாந்தி விதைகள். இனிப்பு சுவையுடன் உடலுக்கு அவசியமான பல்வேறு சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகளும் இதனை கொறித்து உண்கின்றன. சூரியகாந்தி விதையில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான எண்ணெய் தயாரிக்கப் பயன்படும். உலகம் முழுவதும் சூரியகாந்தி எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுடைய இதனை மற்ற பருப்புகள் போலவே மென்று தின்னலாம். 100 கிராம் விதைகள் 584 கலோரி ஆற்றல் வழங்கவல்லது.

இதில் நிறைந்துள்ள கொழுப்பு அமிலங்களே உடலுக்கு அதிக ஆற்றலைத் தருகின்றன. லினோலெய்க் ஆசிட் எனப்படும் பூரிதமாகாத கொழுப்பு இதில் மிகுதியாக உள்ளது. இது கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவும்.

நல்ல கொழுப்புகளான எச்.டி.எல். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். சூரியகாந்தி விதைகள் அதிக புரதம் உடைய பருப்பு வகையாகும். டிரிப்டோபான் எனும் சிறப்புக்குரிய அமினோ அமிலம் இதிலுள்ளது. இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிக அவசியமானது. 100 கிராம் சூரிய காந்தி விதைகள் 21 கிராம் புரதம் வழங்க வல்லது.

இது தினசரி உடலில் சேர்க்க வேண்டிய அளவில் 37 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களான குளோரோஜெனிக் அமிலம், குயினிக் அமிலம், காபிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. குளோரோஜெனிக் அமிலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் 'கிளைகோஜன்' அளவை கட்டுக்குள் வைப்பதிலும் உதவும். 'வைட்டமின்-ஈ', சூரிய காந்தி விதைகளில் மிகுந்துள்ளது. 100 கிராம் விதையில் 35 கிராம் 'வைட்டமின் ஈ' உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிறந்த நோய் எதிர்ப்பு பொருளாக செயல்படும். செல் சவ்வுகள் முழு வளர்ச்சி பெற உதவும்.

ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை அகற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு. நியாசின், போலிக் அமிலம், தயாமின், பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களும் சூரிய காந்தி பருப்பில் நிறைய உள்ளது.

போலிக் அமிலம் டி.என்.ஏ. இணைப்புக்கு அத்தியாவசியமானது. நியாசின் ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், மக்னீசியம், செலினியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன.

சாப்பிடும் முறை.....

* சூரியகாந்தி விதைகளை சிறிது உப்பு சேர்த்து வறுத்து சாப்பிடலாம்.

* சாலட்களிலும் சுவைக்காக இது சேர்க்கப்படுவது உண்டு.

* சாஸ் போல தயாரித்து பிரைடு-ரைஸ் உணவுகளில் தெளித்து சாப்பிடலாம்.

* கேக் மற்றும் ரொட்டி வகைகளில் சூரியகாந்தி விதைகள் சேர்ப்பார்கள்.

* ஜெர்மனியில் 'சன்னென் புளுமென்பிராட்' என்ற பெயரில் சூரியகாந்தி 'பிரெட்' பிரபலம்.

* சூரியகாந்தி விதையில் வெண்ணெய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

 
1505139_219354461583896_133218787_n.jpg
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,
விலகி ஓடும் பி.பி., சுகர்...!

சகோதரர்களே இந்த செய்தியை அதிகம் ஷேர் செய்யுங்கள்...

"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல் பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.

இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!

ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே....
1505108_686817454682240_1302729520_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படி உடம்பைக் குறைக்கலாம்? இதோ அதற்கான வழிமுறைகள் !

1. தாகத்திற்காக குடிக்கும் சாதாரண தண்ணீரைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். சோம்பு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் விரைவிலேயே உடம்பில் உள்ளதை அடிப்படியான சதைகள் குறைந்து, உடல் அழகான வடிவத்திற்கு வந்துவிடும்.

2. அமுக்கிரா வேர், பெருஞ்சீரகம் ஆகியவற்றை பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்துவர உடல் எடை குறையும்.

3. சுரைக்காய் வயிற்றுச்சதையை குறைப்பதில் அதிகப்பங்கு வகிக்கிறது. அதனால் சுரைக்காயை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

4. உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்தாலே போதும். உடல் எடை வெகுவாக குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் பயன்படுகிறது. இவற்றை உணவுடன் சிறிது அதிகமாக பயன்படுத்தும்பொழுது, உடல் எடை குறையும்.

5. இது தவிர ப்ப்பாளிக் காயை சமையலாகச் செய்து சாப்பிடலாம்.

6. மந்தாரை வேரை நீர்விட்டு, நீர் பாதியாக குறையும் வரை காய்ச்சி தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் எடையில் பாதியாக குறைந்துவிடும்.

7. அன்றாடம் குடிக்கும் தேநீரில் பாலிற்கு பதிலாக சிறிது எழுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவர, விரைவில் உடல் மெலிவதை நீங்களே உணரலாம்.

8. வாழ்த்தண்டு சாறு பருகலாம். அரும்புல் சாறும் உடல் எடையைக் குறைக்கிறது.

9. இவற்றுடன் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் இயற்கையாகவே உடல் எடையை குறைப்பதற்குரிய சிறந்த வழிமுறைகளாகும்.

மேற்கண்ட வழிமுறைகள் அனைத்தும் இயற்கையான முறையில் நாம் உண்ணும் உணவால் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒரு வழிமுறைகளே...உடம்பைக் குறைக்க இன்னும் நிறைய வழிமுறைகள் உள்ளன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
நல்ல ஆலோசனை
1150172_451044731666968_1213733267_n.jpg

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா!!! ??? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்... ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையை குறைக்க ஆசையா? அது நடக்காது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் சரியான டயட்டை மேற்கொள்வதன் மூலம் நிச்சயம் ஏழே நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். அதிலும் பலர் இந்த புத்தாண்டில் இருந்து, உடல் எடையை குறைத்து, சிக்கென்று வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசிப்பதுண்டு. அப்படி நீங்கள் உடல் எடையைக் குறைக்க என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தால், அட்டகாசமான டயட் டிப்ஸ்களை கடைப்பிடித்து அதன் படி நடந்தால், நிச்சயம் ஏழு நாட்களில் ஏழு கிலோ உடல் எடையைக் குறைக்கலாம். இந்த மாதிரி எத்தனையோ உடல் எடை குறைப்பு வழிமுறைகளைப் படித்து பின்பற்றி, அதனால் சிலருக்கு எந்த பலனும் கிடைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் இங்கு குறிப்பிட்டிருப்பது போல் நடந்தால், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். முக்கியமாக எப்போதும் உடல் எடையை குறைக்க எந்த ஒரு முயற்சியை மேற்கொள்ளும் போதும், அதன் மீது முதலில் மனதில் நம்பிக்கை நம்பிக்கை கொண்டு முயற்சித்தால், நிச்சயம் அதன் பலனைப் பெற முடியும். நாள் 1 ஏழு நாட்களில் உடல் எடையை குறைக்க முயலும் போது, முதல் நாளை ஆரோக்கியமாக தொடங்க வேண்டும். அதற்கு அந்நாள் முழுவதும் பழங்களை மட்டும் தான் சாப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும், பழங்களைத் தவிர வேறு எதையும் உட்கொள்ளக் கூடாது. அதிலும் வாழைப்பழத்தை தவிர வேறு எந்த ஒரு பழத்தையும் பயமின்றி சாப்பிடலாம். அதற்காக தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். தண்ணீர் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு குடிக்கலாம். நாள் 2 இரண்டாம் நாள் முழுவதும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாலட் செய்து சாப்பிட்டு வர வேண்டும். ஏன் உங்களுக்குப் பிடித்த உருளைக்கிழங்கைக் கூட பயமின்றி சாப்பிடலாம். குறிப்பாக இப்படி செய்யும் போது, மறக்காமல் 8 டம்ளர் தண்ணீரையும் குடித்து வாருங்கள். நாள் 3 மூன்றாம் நாளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இரண்டையுமே சேர்த்து சாப்பிட வேண்டும். அதிலும் காலையில் ஒரு பௌல் பழங்களை சாப்பிட்டால், மதியம் ஒரு பௌல் காய்கறி சாலட்டையும், இரவில் பழங்கள் அல்லது காய்கறிகளையோ சாப்பிடலாம். ஆனால் இந்நாளில் வாழைப்பழத்தையும், உருளைக்கிழங்கையும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. நாள் 4 நான்காம் நாள் முழுவதும் வாழைப்பழம் மற்றும் பால் மட்டும் தான் சாப்பிட வேண்டும். அது ஸ்மூத்தி, மில்க் ஷேக் என எப்படி வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். அதிலும் குறிப்பாக ஸ்கிம் செய்யப்பட்ட பாலை தான் சாப்பிட வேண்டும் நாள் 5 இந்நாளில் ஒரு கப் சாதம் மட்டும் சாப்பிட வேண்டும். அத்துடன், தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் 7-8 தக்காளியை வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட வேண்டும். அதுவும் காலை முதல் மாலை வரை தக்காளியையும், இரவில் சாதத்தையும் சாப்பிடுவது நல்லது. ஆனால் இந்நாளில் குடிக்கும் தண்ணீரின் அளவை இன்னும் அதிகரிக்க வேண்டும். உதாரணமாக, சாதாரணமாக 12 டம்ளர் தண்ணீர் குடித்தால், இந்நாளில் 15 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். நாள் 6 ஆறாம் நாளில் மதிய வேளையில் ஒரு கப் சாதத்தையும், மற்ற நேரங்களில் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். நாள் 7 இந்த நாளில் ஒரு கப் சாத்துடன், அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடலாம். அதுமட்டுமின்றி, இந்நாளில் பழச்சாறுகளையும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும். இது உடலில் நல்ல மாற்றத்தை வெளிப்படுத்தும். visit & join https://m.facebook.com/sureshbabusuperphotos

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

SHARE & Like the page here-->>World Wide Tamil People

வர்மக்கலை: தமிழனின் தற்காப்பு கலை
வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்

"அகத்தியர் வர்ம திறவுகோல்"

"அகத்தியர் வர்ம கண்டி"

"அகத்தியர் ஊசி முறை வர்மம்"

"அகத்தியர் வசி வர்மம்"

"அகத்தியர் வர்ம கண்ணாடி"

"அகத்தியர் வர்ம வரிசை"

"அகத்தியர் மெய் தீண்டா கலை"

ஆகியவை குறிப்பிடத்தக்கவை

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்

நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்

முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்

கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்

கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்

கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வர்மத்தின் அதிசயங்கள் !

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்

 

552649_557726647591322_2027943590_n.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
தக்காளி விதைகள்

சருமத்தை அழகாக்க பயன்படும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இத்தகைய தக்காளியின் உள்ளே இருக்கும் விதைகளை சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் இவை உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல் இந்த தக்காளியின் விதையில் உள்ள ஆன்டி-க்ளாட்டிங் என்னும் பொருள், இதயத்தில் எந்த அடைப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். இப்போது சொல்வதை நம்புவீர்களோ, இல்லையோ, தக்காளியின் விதைகளை சாப்பிட்டால், விரைவில் செரிமானம் ஆகாது. ஆனால் மலச்சிக்கலை சரிசெய்யும். மேலும் செரிமானம் நடைபெற்று வெளியேறும் செரிமானப் பாதையை சுத்தம் செய்யும்.
1513299_219409388245070_646818293_n.jpg

 


* தயிரில் அதிகளவு ஊட்டச்சத்து, புரதம், கல்சியம் ஆகியன நிறைந்துள்ளன.

* தயிர் எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்ட புரதத்தை அதிக அளவில் கொண்டுள்ளது. பால் ஒரு மணி நேரத்தில் 12 சதவிகிதம் மட்டுமே ஜீரணமாகும். ஆனால் தயிர் ஒரு மணி நேரத்தில் 91 சதவிகிதம் ஜீரணமாகும்.

* தயிரில் நிறைந்துள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உடலின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

* உடலில் வைட்டமின் ‘பி’ உறுஞ்சுவதற்கு- கிறகிப்பதற்கு தயிரிலுள்ள ‘பாக்டீரியாக்கள்’ ஊக்குவிக்கும்.

* தலையில் தயிர் கொண்டு ‘மஸாஜ்’ செய்வதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதுடன் தூக்கமும் நன்கு வரும்.

* சர்க்கரை, இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவை உள்ளவர்கள் கொழும்புச் சத்து உள்ள பாலில் தயாரிக்கப்பட்ட தயிரையோ அல்லது மோரையோ சாப்பிட்டுவர நோய்கள் நீங்கும்.

* குழந்தைகளுக்கு சர்க்கரை அல்லது தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

* தயிர் கொண்டு தோல்களுக்கு ‘மஸாஜ்’ செய்வதென்றால் தோல் நுண்ணிய பகுதிகளிலுள்ள அழுக்குகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.

* ஒரு கரண்டி தேன், மசித்த பப்பாளி இவற்றுடன் இரண்டு கரண்டி தயிர் சேர்த்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும்.

* தயிருடன் தோடம்பழம் அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் முகத்தில் தடவி வரலாம்.

* நரம்புகளுக்கும், எலும்புகளுக்கும் தயிர் அதிக நன்மை பயக்கக் கூடியது.

* தூக்கமின்மையில்லாதோர் தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவர்.
1560664_219407824911893_231339575_n.jpg

 


மணதக்காளி...!!!

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
1560671_219409308245078_163776904_n.jpg

 


பயன் தரும் பச்சிலை அருகம்புல்!

நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.

நல்ல தளிர் அருகம்புல்லை சேகரித்து நீரில் கழுகி நன்கு அரைத்து பசும்பாலுடன் சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் பலவீனமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையை கையாளலாம். அருகம் புல்லை நீரிலிட்டு நன்கு காய்ச்சி அந்த நீரை பதமான சூட்டில் குடித்து வந்தால் இதய நோய்க்கு இதமளிக்கும்.

தீடீரென ஏற்படும் வெட்டு காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும் அருகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்கட்டினால் உதிரப்பெருக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும். அருகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

அருகம்புல்லை பொடியாக்கி கடலை மாவுடன் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது. வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது. அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூட்டு வலியைப் போக்க ஒரு அருமருந்துதான் இந்த முடக்கத்தான் கீரை மார்க்கண்டு வைத்தியர் அவர்களால் Friday 14th June 2013 அன்று 19:33:04 மணிக்கு பதியப்பட்டது. - See more at: http://newsalai.com/details/This-is-a-drug-to-alleviate-joint-pain-spinach-mutakkattan.html#sthash.SHan0JnG.dpuf மூட்டு வலிக்கு முக்கிய காரணமே மூட்டுத் தேய்மானம்தான். இது வயதாக வயதாக அனைவருக்கும் உண்டாகும் நோய்தான்.. இதிலிருந்து தப்புவது என்பது பெரும்பாலானோருக்கு முடியாத ஒன்று. இளவயதிலேயே மூட்டுவலியா? அப்படியென்றால் நிச்சயம் நீங்கள் குண்டாக இருப்பீர்கள். அளவுக்கதிமாக வயதுக்கு மீறிய எடையுடன் இருப்பீர்கள். அல்லது காலுக்கு அழுத்தம் கொடுத்து செய்யக்கூடிய வேலைப் பார்ப்பவராக இருப்பீர்கள்.. நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டு வேலை செய்பராக இருக்கக்கூடும். அதிக எடையை சுமக்கக்கூடிய வேலை செய்பவராக இருக்ககூடும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பிட்ட வயதுக்கு மேல் எலும்பு தேய்மானத்தால் பெரும்பாலானவர்களுக்கு இந்த மூட்டுவலி வந்துவிடுகிறது. மருத்துவரைப் பார்த்து, வைத்தியங்கள் செய்து கொண்டு வந்தால் அன்றைக்கு அல்லது ஓரிரு நாட்கள் வலி குறைந்ததுபோல இருக்கும். மருத்துவர்கள் இவர்களுக்கு கொடுப்பது வலி நிவாரணிகளைத்தான். இந்த வலி நிவாரணி மாத்திரைகள் என்ன செய்யும் தெரியுமா? வலியை மறத்துப்போகச் செய்யும். அதாவது வலி உணர்வை மட்டுமே போக்கும்..மாத்திரைகள் அனைத்தும் வலியைக் கட்டுப்படுத்தக்கூடியவை மட்டுமே.. அப்போதைக்கு குறைப்பது போலிருக்கும். ஆனால் அவை நிரந்தரமல்ல.. தொடர்ந்து மூட்டுவலியைக் கட்டுக்குள் கொண்டு வர தினமும் இந்த வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும் பக்கவிளைவுகள் ஆபத்தை ஏற்படுத்தலாம். இரத்தத்தில் மாத்திரையின் சாரம் குறையும்போது மீண்டும் பல்லவிதான்.. மூட்டுவலி.. மூட்டுவலி.. மேலும் மூட்டுவலி.. சிலருக்கு வலியைத் தாங்கக்கூடிய சக்தி இருக்கும். ஒரு சிலருக்கு உயிர்போகிற வலி இருக்கும்.. மூட்டுவலியால் இவர்கள் அவதிப்படும்போது காண சகிக்காது… இதற்கு காரணம் மூட்டுகளில் தங்கும் கொழுப்பு, புரதம், கொழுப்பு, பாஸ்பரஸ் போன்ற படிகங்கள்தான். இத்தகைய துன்பம் தரும் மூட்டு வலியை நீக்க அருமையான இயற்கை முறை, இயற்கை மூலிகை உள்ளது. முடக்கத்தான் கீரை: பெயரே முடக்கத்தான் கீரை..அதாவது மூட்டுவலிகளை, உடல் வலிகளை முடக்கம் செய்துவிடும் குணம் உள்ளதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயரிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன். கிராம்ப்புறங்களில் இக்கீரை அதிகமாக காணப்படும். வயல்வெளிகள், ஏரிக்கரைகள், கிணற்றடியில் என நீர்வளம் மிக்க எங்கும் இது காணப்படும். பயன்படுத்தும் முறை: முடக்கத்தான் கீரையில் அனைத்துப் பகுதிகளையும் பயன்படுத்தலாம். முடக்கத்தான் கீரை, முடக்கத்தான் தண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளுங்கள். இதை ஒரு கைப்பிடி அளவிற்கு எடுத்துக்கொண்டு, இதனுடன் தேவையான இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சிறிய வெங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு வதக்கவும். வதங்கிய பிறகு அதில் இரண்டு குவளை நீர் விட்டு நன்றாக வேக வையுங்கள். நன்றாக கீரை வெந்த பிறகு கீரையின் சத்துகள் அனைத்தும் நீரில் இறங்கியிருக்கும். இப்போது அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்டிய சாறை சிறிது சிறிதாக பருகலாம். முதலில் சாறை கொஞ்சமாக எடுத்து பயன்படுத்தவேண்டும். ஒரு சிலருக்கு சேராமல் பேதியாகும். ஆனால் பேதியால் உடலுக்கு எந்த விட கெடுதியும் ஏற்படாது. இரண்டொரு நாளில் முடக்கத்தான் சாறு உங்கள் உடலுக்கு ஒத்துப்போய்விடும். பிறகு தினம்தோறும் இவ்வாறு சாறெடுத்து பருகலாம். வயதானர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து வயதினருடைய மூட்டுவலிகளை முடக்கத்தான் கீரை போக்கிவிடும். மூட்டு வலிகள் மட்டுமல்ல.. உடல், முதுகு தண்டுவடம், கை, கால் வலிகள் போன்ற அனைத்துவலிகளை முடக்கத்தான் போக்கிவிடும். பயன்படுத்திப் பார்த்துவிட்டு நீங்களே சொல்வீங்க… http://newsalai.com/details/This-is-a-drug-to-alleviate-joint-pain-spinach-mutakkattan.html#sthash.SHan0JnG.dpbs

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெந்நீர் குடிப்பதால் விளையும் நன்மைகள்

எளிதாகக் கிடைக்கும் விஷயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. அப்படிப்பட்ட ஒன்றுதான், 'வெந்நீர்'. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். அவை இதோ..

* காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

* ஏதாவது எண்ணைப் பல காரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் பருகுங்கள். சிறிது நேரத்தில் நெஞ்செரிச்சல் மறைந்துவிடும்.

* தொடர்ந்து வெந்நீர் குடித்தால், உடம்பில் சேரும் கொழுப்பு கரையும் என்று கூறப்படுகிறது.

* மூக்கு அடைப்பால் அவதிப்படுகிறீர்களா? வெந்நீரைப் போன்ற சிறந்த மருத்துவர் ஏது? வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு 'ஆவி பிடித்தால்' மூக்கு அடைப்பு, தலைப் பாரம் அகன்றுவிடும்.

* உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத் தூள், பனங்கற்கண்டு போட்டுக் குடியுங்கள். இதனால், பித்தத்தினால் ஏற்படும் வாய்க்கசப்பு மறைந்துவிடும். மேலும் உடல் வலிக்கும்போது நன்றாக வெந்நீரில் குளித்து விட்டு, சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

* அலைந்து திரிந்ததால் பாதங்கள் வலியெடுக்கிறதா? அப்போதும் வெந்நீர் தான் கை கொடுக்கும். பெரிய பாத்திரத்தில் கால் சூடு பொறுக்கும் அளவு வெந்நீர் ஊற்றி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு கொஞ்சம் நேரம் பாதத்தை அமிழ்த்தி எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போலத் தோன்றினால் வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகி விடும்.

* வீட்டில் துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும் இல்லத்தரசிகள், வாரத்துக்கு ஒரு முறையாவது உங்கள் கைகளை சிறிது நேரம் வெந்நீரில் வைத்திருங்கள். அதனால் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் அகன்று, கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

* வெயிலில் அலைந்துவிட்டு வந்த உடனே 'ஜில்'லென்று ஐஸ் வாட்டர் பருகுவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தலாம். அது நன்கு தாகம் தீர்க்கும்.

* ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா போன்றவற்றால் அவதிப்படுபவர்கள், தாகம் எடுக்கும்போதெல்லாம் கண்டிப்பாக வெந்நீர் பருகுவது நல்லது. அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால் அது அந்த நேரத்தில் இதமாக இருப்பதோடு, விரைவாக இயல்பு நிலை ஏற்படும். இப்படி வெந்நீரின் நன்மைகளை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். வெந்நீர் பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது என்றும் நன்மை தரும்.


மஞ்சள் பால்...

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.

*இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.

*பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது

.*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்..


மறதி தொல்லைக்கு...

மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.


பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

A + B + C .......ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து
தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும்

.விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .

இந்த பானம் அருந்துவதால் பயன்கள் ::

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ்

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .
உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது

இரத்தத்தை சுத்தபடுதுகின்றது
பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு

*****உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு .

......................................................................................

கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள் அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.

உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.

ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.

எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

வெந்தயக் கீரை

கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சுரைக்காய்

இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.

லெட்யூஸ் (Lettuce)

இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.

காலிஃப்ளவர்

மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

பூசணிக்காய்

அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.

பிரெஞ்சு பீன்ஸ்

பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.


வெங்காய வைத்தியம்

* வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும்.

* குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும்.

* உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் குறையும்.

* மயக்கமுற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றை பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.

* காதிரைச்சல், காதில் சீழ்வடிதல் முதலிய நோய்களுக்கு வெங்காயச்சாற்றை இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர அவை குணமாகும்.

* பசு நெய்யில் வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சர்த்து உண்டு வர மூலச்சூடு தணியும்.

* வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தவிர்க்கலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் இது பயன்படுகிறது.

* இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வருவது நல்லது.

* முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வ¡ந்திபேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது வாந்திபேதியின்போது உண்ட¡கும் தாகம், அயர்ச்சி முதலியவைகளுக்கு நல்லது.

* பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது.

* நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி உள்ள சத்துக்கள்:-

ஈரப்பதம் - 86.6%
புரதம் - 1.2%
கொழுப்புச்சத்து - 0.1%
நார்ச்சத்து - 0.6%
தாதுச்சத்து - 0.4%
கார்போஹைட்ரேட்டுகள் - 11.7%
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவிக்குத்தி வர்மம்

வேறு பெயர்கள் :
1. செவிக்குத்தி வர்மம் (வர்ம கண்ணாடி-500)
2. செவிக்குற்றி வர்மம் (உற்பத்தி நரம்பறை-1000)
3. செவிக்குறி வர்மம் (வர்ம சூடாமணி)
4. சிருங்காடம் (வர்ம விதி)

இருப்பிடம் :
1. ‘தேளப்பா காது சிறு தண்டருகு பற்றி
திட்டமுடன் செவிக்குத்தி காலமாகும்’ (வர்ம நிதானம்)

2. ‘மூலமாம் காதில் சிறுதண்டருகில் தானே
முறையான செவிக்குத்தி காலமென்பர்
கூலமாம் இதனிரண்டு இறைக்கும் மேலே
குணமான பொய்கை என்ற காலமாகும்’
(வர்ம கண்ணாடி-500)

3. ‘காடப்பா காதில் சிறுதண்டில் தானே
கலங்காதே செவிக்குத்தி காலம் என்பர்’ (வர்ம சூத்திரம்-101)

4. ‘காதின் முன்புறத்தில் செவிக்குத்தி காலம்’ (வர்மவிரலளவு நூல்)

5. ‘சயமாகும் செவிக்குறி வர்மம் தானும்
செயலாக அதன் குணத்தை சொல்லக்கேளு’
‘கேளப்பா காதில் சிறுதண்டின் அருகே
கெடி குழிவுங்காணும் அதுதானே......’ (வர்ம சூடாமணி)

6. ‘சீறுகின்ற கொல்லியதில் ஆறுவிரலில்
ஆறுவிரல் சுற்றி செவிக்குத்திக் காலம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)

7. ‘வருதியின் செவியினில் சேர்வன்மையாம் சிறுதண்டிற்கும்
சுருதியின் சேரிடத்தில் செவிக்குற்றி காலம் தானே’ (வர்ம லாட சூத்திரம்-300)

8. ‘பேதகமே இல்லையடா கீழ்தாரைக்குள்
வேதகமே அலவாடி மூட்டில் குச்சம்
சேதகமுனை ஏவி நிற்கும் செவிக்குற்றியில்’ (உற்பத்தி நரம்பறை-1000)

9. ‘கண்டத்தின் மேல் திலர்த வர்மத்திலிருந்து
சீறுங்கொல்லியுட்படச் சுற்றளவெடுத்து (32 விரலளவு) நான்காக மடக்கி (8 விரலளவு) திலர்த காலத்திலிருந்து
பார்த்தால் செவிக்குத்திக் காலம் அறியலாம்’ (வர்ம நூலளவு நூல்)

10 ‘உற்ற கண்ணாடி நாசியுறு கன்னமிவை பிரிந்து
வெற்றியுள் வாயிற் காணுமெதிற் சிருங்காட வன்மம்’ (வர்மவிதி)

குறிகுணம் :
சொல்லு செவிக்குற்றியுட காலம் தானும்
சுண்டுதான் கோணி ஒருபுறமாய் கொள்ளும்
தொல்லையோடு வாய் மூக்கில் ரத்தம் வந்து
தொடராக கொப்பளித்து ஒலிக்கும் பாரு
முல்லையுடல் மயங்கிவரும் மூக்கு வியர்க்கும்
மோசம் ஒரு செவிகேளாது இருக்கும் பாரு
பல்லையாம் படுவர்மம் இதுதானய்யா
பலமாகும் கடிகை இருபத்தி மூன்றே.

வர்மலாட சூத்திரம்-300 :வாய், மூக்கில் இரத்தம் வரும். (பிரதான குறிகுணம்)

வர்ம சாரி-205 :வாய், மூக்கில் நீர் வடியும். முகம் கறுக்கும். மூக்கில் இரத்தம் கொட்டும்.

வர்ம கண்ணாடி-500 :வாய், மூக்கில் இரத்தம் கொப்புளித்து பாயும். உதடும் வாயும் கோணும். உணர்வு கெட்டு மயங்கும்.

வர்மாணி-101 :வாயில் நுரை தள்ளும். விழி இரண்டும் தெறித்து நிற்கும். செவி ஒன்றும் கேட்காது.

வர்ம கண்டி : கண்ணிரண்டும் தள்ளி இரத்தம் காணும்.

வர்ம கண்டி - உரைநடை : சன்னி வரும். பல் பூண்டு, கண் அடைக்கும். தலை சுற்றும்.

வர்ம சூத்திரம்-101 :விழியிரண்டும் தள்ளி வாயில் நுரை வரும்.

வர்ம சூடாமணி : வாயில் நுரை வரும். கண்ணிரண்டும் அரை கண்ணாகும்.

வர்ம விதி : மரணம் ஏற்படும்.

வர்ம நிதானம்-500 :சென்னி வலிக்கும். கண் வலிக்கும். கண்ணில் நீர் பாயும். தலைசுற்றும். இதில் முறிந்தால் வாய் மூக்கில் இரத்தம் வரும். கவிழ்ந்து விழும். தலை உருட்டும், சன்னி உண்டாகும். காது இரண்டும் அடைக்கும். மயங்கும் பிடரியில் குத்து உண்டாகி, சுரம், குளிர், சீதம் வரும். 3-6-9-12 கழிந்தால் மரணம் ஏற்படுத்தாது.

தட்டு வர்ம திரட்டு : விழி இரண்டும் தள்ளி வாயில் நுரை வரும். செவி இரண்டும் கேளாது. மருத்துவம் செய்தாலும் 3-ம் மாதம் காது இரண்டும் தடிக்கும், கேளாது. 6-ம் மாதம் முகம் கோணும். 12-ம் மாதம் மரணம் வரும்.

உற்பத்தி நரம்பறை-1000 :காயம் பலமாய் கொண்டால் உடனே கொல்லும். மாத்திரை குறைவாக இருந்தால் கொண்டவுடன் ஆள் மயங்கும். கண்டம் ஒரு பக்கம் கோணும். கண்ணிரண்டும் சிவக்கும். நாசியில் நீர் பாய்ந்து காணும்.

காலக்கெடு :
1. கடிகை - 37 (வர்ம சாரி-205) (கடிகை/நாழிகை 24 நிமிடம்)
2. கடிகை - 21 (வர்ம கண்ணாடி-500)
3. கடிகை - 29 (வர்ம பீரங்கி-100)
4. கடிகை - 13¾ (வர்மாணி-101)
5. நாழிகை - 23 (வர்ம கண்டி)
6. நாழிகை - 13 (வர்ம கண்டி-உரைநடை)
7. நாழிகை - 17 (வர்ம சூடாமணி)
8. நாழிகை - 25 (தட்டு வர்ம திரட்டு)
9. 3-6-9-12 கழிந்தால் மரணம் ஏற்படாது (வர்ம நிதானம்-300)

மருத்துவம் :
இது குறித்து மேலும் விரிவான விளக்கங்களுக்கு இங்கு பதிவு செய்யவும் செவிக்குத்தி வர்மம் - http://siddhabooks.com/therapeutic-varma-or-marma-points/457-chevi-kuthi-varmam-2

ஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்
2. வர்ம மருத்துவம் (சிறப்பு)

நன்றி டாக்டர் கண்ணன் ராஜாராம் கன்னியாகுமரி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
பெண்களுக்கான இயற்கை மருத்துவ குறிப்புகள்:-

காதில் கம்மல் போடும் இடத்தில் புண் இருந்தால் கடுக்காய், மஞ்சள் அரைத்து பூசி வர விரைவில் புண் ஆறி விடும்

தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்..

பப்பாளிக்காயைக் கூட்டு செய்து சாப்பிட்டால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பால் அதிகமாக சுரக்கும்..

இரவில் செம்பருத்திப் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டு படுத்து காலையில் எடுப்பதால் மூளைக்கும் கண்களுக்கும் குளிர்ச்சி உண்டாகும்.பேன் பொடுகு அகலும்..

தந்தத்தால் ஆன அழகான அலங்காரப் பொருள்கள் நாளடைவில் மஞ்சள் நிறமடைந்து மங்கி விடும் இதற்கு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அப்பொருள் களின் மீது வைத்துஅழுத்தி தேய்த்தால் மஞ்சள் நிறம் போய் விடும் அசல் நிறம் கிடைக்கும்..

மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்துப் பூசி வந்தால் கரப்பான் புண்கள் விரைவில் ஆறி விடும்.

கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து அந்நீரால் வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கி விடும்.

ரவையை வறுத்து வைத்துக் கொண்டால் நீண்ட நாள்களுக்கு பூச்சி புழுக்கள் வராமலிருக்கும்.
1484224_670913806264271_577834262_n.jpg

 


 
நில வேம்பு மூலிகை மருத்துவ பயன்கள்:-

பசியைத் தூண்ட
பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

குடல் பூச்சி நீங்க

வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

மயக்கம் தீர

சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது.

பித்த அதிகரிப்பைக் குறைக்க

பித்தம் பிசகினால் பிராணம் போகும்.

என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.

தலைவலி நீங்க

அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை ஏற்படாது.

ஜூரக் காய்ச்சல் குறைய

நிலவேம்பு 15 கிராம்
கிச்சிலித் தோல் 5 கிராம்
கொத்துமல்லி 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும்.

குழந்தைகளுக்கு

வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம்
வசம்புத் தூள் 4 கிராம்
சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம்
கோரைக் கிழங்கு தூள் 17 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்

நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம்
கிராம்புத்தூள் 4 கிராம்
பொடித்த ஏலம் 4 கிராம்
இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை

6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும்.

தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும்.

அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும்.

சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்
1527028_670913616264290_658137533_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

1520767_486585381451094_897372228_n.jpg
குண்டலினி தவத்தைப் பற்றி விளக்கிச் சொல்லும் பொழுதெல்லாம் ஒரு கேள்வியைப் பல நண்பர்கள் முன் வைக்கிறார்கள். அதாவது, யோகிகள் நினைத்தால் ஒரு சீடனுக்கு அவனை தொட்டு குண்டலினியை எழுப்ப முடியும் என்று சிலர் கூறுகிறார்களே ? என்று. இதற்கு இராம கிருஷ்ண பரமஹம்சரை உதாரணப்படுத்தி, அவர் விவேகானந்தருக்குத் தொட்ட மாத்திரத்தில் பரவசத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார்கள். சரியாக அவர்கள் குறித்த வரலாறுகளைப் படிக்காததினால்தான் அவ்வாறு சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர் விவேகானந்தருக்குப் பல பரிட்சைகளை வைத்துத் தேறிய பிறகுதான் உபதேசித்தருளினார் என்பதுதான் உண்மை. இராம கிருஷ்ண பரமஹம்சரே ஓரிடத்தில் சொல்கிறார் ''நினைத்த மாத்திரத்தில் ஒருவனுக்கு ஞானத்தை அளித்து விட முடியாது. அதைப் பெறுவது காலத்தைப் பொருத்திருக்கிறது. உலகப் பற்றில் ஆழ்ந்திருக்கும் வரையில் ஒருவனுக்கு பெரும்பாலும் ஆன்ம உபதேசங்கள் பயன்படுவதில்லை. எனவே கொஞ்ச காலம் அவன் உலக சுகங்களை அனுபவிக்கும் படி விட்டு விட வேண்டும். உலகப் பற்று கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து உபதேசம் பயன் தரக் கூடிய காலம் அவனுக்கு வரும். அப்போதுதான் உபதேசித்து உதவ வேண்டும். அதற்கு முன்னால் செய்யும் உபதேசமெல்லாம் வீணே. அதனால் யாதொரு பயனும் விளையாமல் வீணாகிப் போகும்'' என்கிறார். தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவிப்பவனுக்கே வைராக்யம் ஏற்படும். மற்றவர்களுக்கு வைராக்யம் ஏற்படாது. உலக சம்பத்துகளெல்லாம் எளிதில் அடையக் கூடியவை. ஆனால், அவை நிலையற்றவை. மேலும் நிலையான இன்பமான ஆனந்தத்தை அடைய அவை ஏற்றதல்ல. இதை ஒருவன் உணரும் பொழுதுதான் வைராக்யம் ஏற்படும். இத்தகைய வைராக்யத்தைப் பெற்றவனிடம் சகலமும் வந்து குவியும். ஆனால், எல்லாம் இருந்தும் அவன் ஒன்றுமில்லாதவனைப் போல் வாழ்வான். அவனே ஞானத்தைப் பெறத் தகுதியானவன். எனக்குத் தெரிந்து நிறைய ஞானிகள் வாழ்ந்திருக்கிறார்கள். யோகி ராம் சூரத் குமார், காஞ்சி மஹா பெரியவர் போன்று பலர் உண்டு. எளிமை எளிமை அவ்வளவு ஒரு எளிமை. ஒரு உண்மையான குருவுக்குத் தெரியும் இவன் தகுதியானவனா ? இல்லையா ? என்பது. அவனுக்குத்தான் அவர்கள் ஞானத்தை வழங்குவார்கள். தற்போது சிலர் தங்கள் பிராண சக்தியின் திணிவைப் பயன்படுத்தி தொட்டவுடன் குண்டலினியை மேலேற்றி விடுகிறார்கள் என்கிறார்கள். அது பொய். குண்டலினி மேலேறுவது என்பது இறுதி நிலை. முக்தி நிலை. அப்படி ஒருவேளை ஏறிவிட்டது என்றால் அதனால் யாதொரு பயனுமில்லை. குருவானவர் அவனை மேன்மைப்படுத்துவதற்குப் பதிலாகப் படுகுழியில் தள்ளி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மனம் பரிபாகம் அடையாத ஒருவன் பெறும் சக்திகளெல்லாம் அவனை அழிவு நிலைக்கே கொண்டு செல்லும். மேலும் பிறருக்கும் அவன் மூலம் துன்பங்களை விளைவிக்கும். இதைப் புராணங்கள் தோறும் பார்க்கிறோம். ஒருவன் நீந்த வேண்டும் என்று விரும்பினால், அதற்கான பயிற்சியை பழகும் வரை சில நாட்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாளில் பழகி கடலில் போய் யாரும் நீச்சலடித்து விட முடியாது. அதைப் போலவே பரமாத்மா எனும் கடலில் நீந்த விரும்புபவன் பல கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக் கூடிய சக்தி அவனுக்கு உருவாகும். குண்டலினி என்பது மஹா சக்தி. ஒட்டு மொத்த உலகின் சக்தி. அதை தொட்டவுடன் ஒருவனுக்கு மேலேற்றினால் அவ்வளவுதான், அவன் அதைத் தாங்க மாட்டாமல் கபாலம் வெடித்து, இரத்த நாளங்கள் வெடித்து இறந்து விடுவான். இது ஒன்றும் விளையாட்டு காரியங்களல்ல. உயிர் சம்மந்தப்பட்ட விஷயங்களாகும். பிராணாயாமம் கூட அப்படித்தான். ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட உயிர் பிரிந்து விடும். இதைத்தான் ''இழுத்து விடும் மூச்சு நின்னாப் போச்சு'' என்பார்கள். சதுரகிரியில் பிராணாயாமம் செய்யும் போது தவறாகச் செய்து உயிரை விட்ட ஒரு வாலிபனின் உடலில்தான் அரசனின் உடலை விட்டு நீங்கி திருமூலர் புகுந்து கொள்வார். பரமாத்மாவோடு கலக்கப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பவர்கள் உண்டு. உடல்தான் அழியும் ஆன்மா அழியாது. எனவே புதிய உடலை எடுப்பது பிறவியாகாது பல உடல்களை மாற்றுவது அவ்வளவுதான் என்பவர்கள் உண்டு. இப்படி பல உயிர்களாகப் பரிணமித்து கிடைப்பதற்கரிய மானிடப் பிறவியை அடைந்ததன் நோக்கமே இந்தப் பிறவியைப் பயன்படுத்தி முக்தியை அடைய வேண்டும் என்பதற்காகவே. இப்படி அடைய வேண்டிய ஒரு விஷயத்தை, தொட்டவுடன் ஒருவர் தந்து விடுகிறார் என்றால், அதை நம்பலாமா ? குண்டலிடனியை எழுப்ப பல வழிகள் உண்டு. குறிப்பாக இராஜ யோகம், ஹட யோகம் இவற்றைச் சொல்லலாம். எல்லா யோகங்களிலும் இது தலை சிறந்தது என்கிறார்கள். இதனால் அடையும் சமாதி மற்றவற்றை விடச் சிறந்தது. மன ஏகாக்ரதையினாலும் சமாதி நிலையை அடையலாம். உலகப் பற்றிலிருந்து விடுபட்டுள்ள அளவுக்கு அதன் தரம் இருக்கும். ஆனால் குண்டலினி அவ்வாறல்ல, எழுப்பப்பட்ட உடன் ஞானத்தையும், முக்தியையும் தந்து விடுகின்றது. இதனால் விளையும் சமாதி மிகவும் வலிமையானது. இதை அடைந்தவர் பூரண யோகியாவார். அவர் நீண்ட நாட்கள் இந்தக் கூட்டில் தங்க முடியாது. எனவே அதை அனுசரித்தே இணைப்பானது நிகழும். பிராப்தம் உள்ளவரை பூரண இணைப்பு என்பது நிகழாது. மற்ற வினைகள் எல்லாம் நீங்கிய பூரண யோகியாக, ஜீவன் முக்தர்களாக வாழ்ந்து வருவார்கள். எனவே மனதின் பரிபாகம் இல்லாதவர்களுக்கு குண்டலினி ஏறாது. ஏறினாலும் நிலைக்காது. நிலைத்தாலும் மேன்மையைத் தராது.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்க்கை அழகு குறிப்புகள்..!

* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.

* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.

* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.

* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.

* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.

* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.

* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.

* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.

* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.

* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.

* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.

* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.

* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.

* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.

* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.

* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.

* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.

* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.

* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.

* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.

* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.

* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

1551564_671484569540528_971713075_n.jpg
தலை முடி வளர இயற்க்கை மருத்துவங்கள்:- முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். வழுக்கையில் முடி வளர கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும். இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். முடி கருப்பாக காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும். நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும். முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும். முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும். சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும். புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
விக்கல் பிரச்சனைக்கான தீர்வுகள்:-

ஜீரண மண்டலத்தில் பிரச்னை உருவாகியுள்ளது என்பதன் அறிகுறிதான் அடிக்கடி வந்து போகும் விக்கல். விக்கலை சமாளிக்க ஆலோசனை சொல்கின்றனர் மருத்துவர்கள். தற்போது இருக்கும் வாழ்க்கை முறை உடலில் பல நோய்களுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி விடுகிறது.

உணவுகளில் பயன்படுத்தப்படும் அதிக எண்ணெய், சுவை கூட்டும் பொருட்கள் மற்றும் செயற்கை வண்ணம் ஆகியவற்றால் குடல் மற்றும் வயிற்றில் நாளடைவில் பல பிரச்னைகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. சின்னப் பிரச்னை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம். விக்கலும் அது போன்றதுதான்.


விக்கல் எப்படி வருகிறது? வயிற்றுக்கும், மார்புப் பகுதிக்கும் இடையில் உதரவிதானம் உள்ளது. நாம் மூச்சை இழுக்கும் போது நுரையீரலுக்கு ஆக்சிஜன் செல்வதற்கு வசதியாக, இந்த உதரவிதானம் மேலும் கீழும் இயங்குகிறது.

இதனால் நுரையீரலுக்குள் ஆக்சிஜன் எளிதில் நுழைகிறது. இது நம் உடலில் இயல்பாக நடக்கும் ஒரு செயல்பாடு. மூச்சு விடும் போது உதரவிதானம் தானாகத் துடிக்கும் சமயத்தில் நம் குரல் வளை மூடியிருந்தால் விக்கல் ஏற்படுகிறது.

விக்கல் ஏற்பட சில காரணங்கள் உள்ளன. காரம் அதிகம் உள்ள உணவு சாப்பிடும்போது வருகிறது. வயிறு முட்ட சாப்பிடும்போது மற்றும் வயிறு நிறைய தண்ணீர் குடிக்கும்போதும் விக்கல் ஏற்படுகிறது.

அதிகமாக சிரிப்பவர்களுக்கும் விக்கல் வரலாம். விக்கல் வந்து சில நிமிடங்களில் நின்று விட்டால் பிரச்னை இல்லை. விக்கல் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும் பட்சத்தில் பிரச்னை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உடலில் அபாயமான நோயின் அறிகுறியாகவும் இந்தத் தொடர் விக்கல் இருக்கலாம். காசநோய், புற்றுநோய் ஆகியவற்றால் நுரையீரலின் வேர்ப்பகுதியில் நெறிகட்டியோ, நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தாலோ, மார்பு வழியாக உதரவிதானம் செல்லும் பெரினிக் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தாலோ விக்கல் வர வாய்ப்புள்ளது. மனரீதியான பிரச்னை அல்லது உணர்வுகள் காரணமாக தொடர்ந்து விக்கல் ஏற்படலாம். இந்த வகை விக்கல் விழித்திருக்கும்போது மட்டும் வரும்.

சிறுநீரகம் பழுதடைந்த காரணத்தால் ரத்தத்தில் யூரியா அதிகம் சேரும்போது விக்கல் வரும். இத்துடன் கல்லீரல், இரைப்பை பகுதியில் புற்றுநோய், உதரவிதானத்தில் ஓட்டை போன்ற அபாயகரமான காரணங்களாலும் விக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விக்கல் வந்த உடன் தண்ணீர் குடித்தால் நின்று விடும் என்பதும் தவறான கருத்தே. தண்ணீர் நிறைய குடித்தால் பிரச்னை மேலும் பெரிதாக வாய்ப்புள்ளது.

இதனால் விக்கல் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்பு முறை விக்கல் வராமல் தடுக்க தண்ணீரை ஒரே சமயத்தில் நிறைய குடிப்பதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம்.

வயிறு முட்ட சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்கலாம். இதே போல் மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போன்ற பழக்கங்களை கைவிடுவதும் நல்லது. அதிக காரம் மற்றும் மசாலா சேர்ப்பதையும் தவிர்க்கலாம்.
1525413_674034895952162_373773089_n.jpg

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!...

கெட்டுப்போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப்போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும்கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.

இது தவிர, சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி-பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும். ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.

குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.
971936_797459766947083_1408840508_n.jpg
 

சளித்தொல்லைக்கு கருந்துளசி.

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.

சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.

நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.

'ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.
1527798_797457690280624_960346260_n.jpg

 


சிறந்த இயற்கை மருந்து தேங்காய்:-

தேங்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச்சத்து, நார்சத்து, கால்சியம் என உடலுக்கு தேவையான அனைத்து மருத்துவச் சத்துக்களும் உள்ளதாக தேங்காய் விளங்குகிறது.

தேங்காயை வெறும் வாயில் மென்று திண்பதினால் வாய் புண், எரிச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். நம் உடலின் சூட்டை தணிப்பதோடு மட்டுமல்லாமல், தோலை மிருதுவாக்கவும் தேங்காய் பயன்படுகிறது.

தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்து என கூறலாம். இது பல்வேறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக உள்ளது.

பெண்கள் கூந்தலுக்கு சிறந்த கண்டீஷ்னராகவும் தேங்காய் பாலை பயன்படுத்தலாம். வாரம் இருமுறை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளிப்பதனால் தலைமுடி உதிர்வது குறைவதோடு மிருதுவாகவும், சருமம் பளபளப்பாகவும் காட்சியளிக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் வியாதிகளில் இருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் மிகவும் பயன் படுகின்றது.
1622727_227575440761798_1969721154_n.jpg

 


1016547_227584290760913_1256714010_n.jpg

 


இயற்கை முறையில் கருமையான முடியை பெற ஆசையா?

முடிக்கு அழகே கருப்பு நிறம் தான். அத்தகைய கருமையான முடி தற்போது பலருக்கு கிடையாது, ஏனெனில் நமது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் ஆரோக்கியமற்றதாக இருப்பதால், உடலுக்கே போதிய சக்துக்கள் கிடைக்காத நிலையில், முடிக்கு மட்டும் எப்படி சத்துக்கள் கிடைக்கும். அதுமட்டுமின்றி அதிக நேரம் வெயிலில் சுற்றுவதால், முடியின் நிறம் மாறாமல் இருப்பதற்கு தடவிய எண்ணெய் சூரியனால் உறிஞ்சப்பட்டு, கருமை நிறமானது மங்கிவிடுகிறது.

சிலருக்கு இளமையிலேயே நரை முடியானது வர ஆரம்பிக்கிறது. அதற்கு பரம்பரை அல்லது ஊட்டச்சத்தின்மை தான் காரணமாக இருக்கும். எனவே கூந்தலின் நிறம் மாறாமல் கருமையாக இருப்பதற்கு, நல்ல ஆரோக்கியமான உணவுகளையும், கூந்தலுக்கு அவ்வப்போது போதிய பராமரிப்புக்களையும் கொடுக்க வேண்டும். அதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று பராமரிப்பு கொடுக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முடியை பராமரித்து, கருமையான முடியை நிலைக்க வைக்கலாம்.

சரி, இப்போது கூந்தலின் கருமை மாறாமல் இருப்பதற்கும், இருக்கும் கருமையை தக்க வைக்கவும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் பின்பற்றி வந்தால், இயற்கையாக கருமை கூந்தலைப் பெறலாம்.

1) முடிக்கு ஒரு மாத காலமாக எண்ணெய் தடவாமல் இருந்தால், கூந்தல் ப்ரௌன் நிறத்தில் மாற ஆரம்பிக்கும். எனவே கூந்தலுக்கு தினமும் எண்ணெய் தடவுவது மிகவும் இன்றியமையாதது. மேலும் வாரத்திற்கு இரண்டு முறையாவது எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாகவும், கருமை நிறத்துடனும் இருக்கும்.

2)கருப்பான முடியைப் பெறுவதற்கு பயன்படும் மூலிகைகளில் கறிவேப்பிலை முக்கியமானது. ஆகவே கறிவேப்பிலையை வெயிலில் காய வைத்து, சூடான எண்ணெயில் சேர்த்து, ஒரு வாரத்திற்கு குளிர வைத்து, பின் அதனை கொண்டு மசாஜ் செய்தால், கருமையான முடியைப் பெறலாம்.

3) முடிக்கு நிறமூட்டுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மிகவும் சிறந்தது. அதற்கு செம்பருத்தி எண்ணெயையோ அல்லது சூடான எண்ணெயில் செம்பருத்தி பூக்களை போட்டு ஊற வைத்தோ, தினமும் முடிக்கு தடவ வேண்டும்.

4)வெளியே வெயிலில் செல்லும் போது, முடியின் மேல் சூரியக்கதிர்கள் நேரடியாக படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது. ஆகவே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். இதனால் சூரியக்கதிர்களின் தாக்குதலால் முடியில் ஏற்படும் நிற மாற்றத்தைத் தடுக்கலாம்.

5)நெல்லிக்காய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை. கருமையான கூந்தலைப் பெறவும் தான் உதவியாக உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெய் அல்லது நெல்லிக்காய் சாறு கொண்டு, வாரத்திற்கு இரண்டு முறை மசாஜ் செய்து வந்தால், கூந்தல் கருமையோடும், அடர்த்தியோடும் வளரும்.

6)ஆயுர்வேத மருத்துவத்தில் கூந்தல் வளர்ச்சிக்கு அஸ்வகந்தா மூலிகை தான் உதவியாக உள்ளது. எனவே இந்த அஸ்வகந்தா பொடியை எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து முடிக்கு தடவி வந்தால், முடி நன்கு அடர்த்தியாக, கருமையாக மற்றும் நீளமாக வளரும்.

7)அனைவருக்குமே நல்லெண்ணெய் கூந்தலுக்கு கருமை நிறத்தை தரும் என்பது தெரியும். எனவே இந்த எண்ணெய் முடிக்கு பயன்படுத்தினால், அது முடியில் இருக்கும் கருமை நிறத்தை தங்க வைக்கும்.

8)கேரட் சாப்பிட்டால், அதில் உள்ள கரோட்டினாய்டுகள் முடிக்கு கருமை நிறத்தை தரும். அதற்காக அதன் சாற்றை முடிக்கு பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, கேரட் சாற்றை அதிகம் குடிப்பது மிகவும் நல்லது.

9)எலுமிச்சை கூந்தலுக்கு பல வழிகளில் பயன்படுகிறது. அவற்றில் பொடுகுத் தொல்லையை நீக்கும் என்பது தான் பிரபலமானது. ஆனால் இந்த சாற்றினைக் கொண்டு, கூந்தலுக்கு தடவி ஊற வைத்து குளித்தால், முடியானது கருமையாக இருக்கும்.

10)முடிக்கு கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, சீகைக்காய் பயன்படுத்தி குளித்தால், முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளரும்.

பாகற்காயின் மகிமை....

பாகற்காய் எப்படி வாங்குவது?: பச்சையாக, தொட்டுப் பார்க்க கெட்டியாக, உள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்கு நல்லது. மஞ்சள் தோல் இருக்கக் கூடாது. பழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாக வாங்குங்கள்.

பாதுகாப்பது: பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும். அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் நல்லது.

சமைப்பது: பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் கொஞ்சம் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம். காயை நீளவாட்டத்தில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும். சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாக இருக்கும். பாகற்காயை வேகவைத்து, வதக்கி, பொரித்து, குழம்பாக, உருளைக்கிழங்கில் அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

100 கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 25, கால்சியம் 20 மில்லிகிராம், பாஸ்பரஸ் 70 மி.கிராம், புரோட்டின் 1.6%, கொழுப்பு 0.2%, இரும்புச்சத்து 1.8 மி.கிராம், மினரல்ஸ் 0.8%, பி காம்ளெக்ஸ் 88 மி.கிராம், நார்ச்சத்து 0.8%, கார்போஹைட்ரேட் 4.2%, சிறிதளவு விட்டமின் சி.

மருத்துவ குணங்கள்:
இதில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.

இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், சுரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு இவை நீங்கும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.

பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை எடுத்துக்
கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும். இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.

பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த ஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.

பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

பாக்டீரியா, டயபெடீஸ், ரத்தப் புற்றுநோய், குடல்புண், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.

மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர். பழம் இலைகளை கறி, சூப்பில் கலந்தனர்.

பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும், மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

சர்க்கரை நோய்:
1லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்று வேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.

மஞ்சள்காமாலை நோய்: 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும். இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.

கல்லீரல் பிரச்னை:
3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.

மூலநோய்:
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

 

8213_227583920760950_126688340_n.jpg

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இது ராசுக்குட்டி மாத்திரமல்ல தமிழர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. ராசுக்குட்டி விதிவிலக்கா என்ன?
  • இப்ப பலரும் ராசுக்குட்டி போலத்தான்.
  • நன்றி கதைக்கு?? தொடர்ந்து  எழுதுங்கள் வாழ்த்துக்கள்   (அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு  வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. நிச்சயமாக இந்த ராசுக்குட்டி என் தம்பியாகத்தான் இருக்கணும்😜)
  • இறுதிப்பகுதி. சாலை எங்கும் பனிக்காலத்தின் முடிவுரையை சிறு சிறு பனித்துளிகள் எழுதி கொண்டு இருந்தன. காற்று கடுமையாக வீசி குளிர்காலத்தினை அகற்றி அந்த இடத்தில் இலையுதிர்காலத்தை விதைத்துக் கொண்டு இருந்தது. இனி கொஞ்ச காலத்துக்கு காற்று பெரிசாக வீசாது.  இலைகளை உதிர்த்து கொட்ட வைப்பதற்காக செப்ரம்பர் இறுதியில் மீண்டும் வரும். குளிர் மறை இரண்டில் இருந்தது. ராசுக்குட்டி ஸ்கார்புரோவில் எல்ஸ்மியார் எனும் வீதியில் இருக்கும் ஆஸ்பத்திரியின் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். இந்த ஆஸ்பத்திரிக்கு தமிழர்கள் பலர் இணைந்து பெரியளவு கொடை கொடுத்து இருப்பதால் மனசுக்குள் ஒரு மிதப்புடன் தான் நின்று கொண்டு இருந்தார். கொரனா காலம் என்பதால் ஒவ்வொருவராக விசாரித்தே உள்ளே அனுமதித்துக் கொண்டு இருந்தனர். குளிர் காற்று வேகமாக வீசி முகத்தில் அறைய, மூக்கு விறைத்தவாறு நின்று கொண்டு இருக்கும் போது அவர் முறையும் வந்தது. முன்னுக்கு இருந்த தாதி ராசுக்குட்டியிடம், "நீ எப்ப கடைசியாக வெளிநாடு போனாய், காச்சல் இருக்கா, கொரனா வந்த எவருடனாவது தொடர்பில் இருந்தாயா" போன்ற கேள்விகளை கேட்டு விட்டு "இந்த முககவசத்தை அணிந்து கொண்டு உள் பகுதிக்கு செல்" என்று ஒரு முகக்கவசத்தை கொடுத்தார். ராசுக்குட்டி ஏற்கனவே வீட்டில் இருந்து முகக்கவசம் ஒன்றை கொண்டு சென்று இருந்தாலும், ஓசியாக கிடைக்கும் எதையும் மறுத்து பழக்கமில்லாத அற்(ப)புத குணத்தால் அந்த  முக்கவசத்தை வேண்டாம் என்று சொல்லாமல் அதை வாங்கி அணிந்து கொண்டு உள்ளே சென்றார். போன கிழமையும் இதைத்தான் செய்தவர். ஏற்கனவே முதல் கிழமையும் இங்கு வந்திருந்தார். அல்றா ஸ்கானிங்கில் சிறுநீரகப் பாதையில் கல்லு கில்லு இல்லையென்று ரிசல்ட் வந்த பின்னர், சிறு நீரகத்தில் வேறு ஏதும் பிரச்சனை இருக்கா என்ரு பார்க்க CT scan எடுக்க வந்திருந்தார். வெறு வயிற்றில் போனவரை மூன்று கிளாஸ் தண்ணீர் கொடுத்து விட்டு, மல்லாக்க படுக்க வைத்து, ஒரு உருளை வடிவ ஸ்கானருக்குள் அனுப்பும் போது விழி பிதுங்கி, நெஞ்செல்லாம் பாரமாக, ஆள் பயந்து கொண்டு தான் உள்ளே போனவர். அந்த பயத்திலும் கூட அவருக்கு பரிசோதனையை செய்த பெண்ணுக்கு ஒரு 25 வயது தான் இருக்கும் என்றும், வடிவான பெட்டை என்றும், வேறு ஒரு  வயதான பெண் வராமல் இந்த இளம் பெண் இன்று தனக்கு ஸ்கான் பண்ண வந்தது தன் அதிஷ்டம் என்றும் நினைக்க தவறவில்லை. CT scan முடிந்த பின் "எப்ப ரிசல்ட்ஸ்" வரும் என்று கேட்க அந்த அழகி, "அடுத்த கிழமை உனக்கு இருக்கும் மற்ற டெஸ்ட் இன் பின் தான் டொக்டர் இதன் முடிவையும் சொல்லுவார்" என்று அனுப்பி வைத்தார்.  மீண்டும் அந்த இறுதி பரிசோதனைக்கு வந்திருக்கின்றார். இன்று அப்படி எந்தப் பெண்ணுமே அறைக்குள் இருக்க கூடாது, எல்லாரும் ஆண்களாக இருந்து விட்டால் நல்லா இருக்கும் என்று மனசுக்குள் என்ணியபடி வரவேற்பறையில் இருந்த பெண் குறிப்பிட்ட அறைக்குள் சென்றார் ராசுக்குட்டி. ஆனால் அங்கு 25 வயது மதிக்கத்தக்க செக்கச் சிவந்த வேறு ஒரு பெண் நின்று கொண்டு இருந்தார். ராசுக்குட்டிக்கு கொஞ்சமே கொஞ்சமாக வெட்கம் எட்டிப் பார்த்தது. ராசுக்குட்டியின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட அந்த தாதி நான் தான் டொக்டருக்கு உதவப் போகின்ற பிரதான தாதி என்று சொல்லி, பக்கத்தில் இருக்கும் ஆண் தாதியைக் காட்டி இவர் உதவியாளர் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். ராசுக்குட்டி வந்திருப்பது cystoscopy எனும் பரிசோதனைக்கு. அது எப்படி இருக்கும் எந்தளவுக்கு வலி இருக்கும் என்பதை மூன்று நாட்களாக வாசிச்சு வாசிச்சு மனசுக்குள் தன்னை தயார்படுத்தி வைத்திருந்தார். இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது இருந்த பயத்தின் அளவு நல்லா குறைந்து இருந்தது ராசுக்குட்டிக்கு.  மனுச மனம் எப்பவுமே இப்படித்தான். என்ன ஏது நோய் என்று அறிய முதல் போது பயந்து சாகும், பிறகு மெல்ல மெல்ல பயத்தில் இருந்து வெளியே வரப் பார்க்கும், பின் எது வந்தாலும் சரி என்று ஏற்கத் தொடங்கி தன்னை தயார்படுத்தி வைக்கும். ராசுக்குட்டிக்கும் கொஞ்சம் தைரியம் இந்த 4 மாதங்களுக்குள் வந்து இருந்தது.  என்ன நடந்தாலும் குடும்பம் பாதிக்கப்பட கூடாது என்று நினைத்து இடைப்பட்ட காலத்தில் தன் ஆயுள்காப்புறுதி தொகையையும் கூட்டி விட்டிருந்தார். ஒருவிதமான அமைதியும் மனசுக்குள் குடிவந்து இருந்தது அவருக்கு. prostate இல், Bladder இல், சிறு நீரக பாதையில் (urethra ) புற்றுநோய் உள்ளதா அல்லது வேறு ஏதும் பிரச்சனை உள்ளதா என அறிவதற்காகவே cystoscopy செய்வினம். ராசுக்குட்டிக்கு ஏற்கனவே செய்த பரிசோதனைகளில் பிரச்சனை ஏதும் இல்லை என முடிவு வந்தமையால் இறுதிப் பரிசோதனையாக cystoscopy செய்யச் சொல்லியிருக்கினம். சின்னஞ் சிறு கமரா, அந்த. கமராவுக்கு வெளிச்சம் பாச்ச சிறு லைட்டுகள், இவை எல்லாவற்றையும் கொண்ட ஒரு சிறு டியூப். ஆணுக்கு எனில் அந்த சிறு டியூப்பை ஆண்குறியின் சின்னஞ் சிறு துவாரதின் வழியே உள்ளே சிறுக சிறுக Bladder வரைக்கும் அனுப்பி கமராவின் மூலம் அதை வீடியோ எடுத்து டியூப்பின் மறுமுனையில் இணைக்கப்பட்டு இருக்கும் திரையில் டொக்டர் பார்ப்பார். இதன் மூலம் அவரால் பிரச்சனை ஏதும் இருப்பின் கண்டு பிடிக்க முடியும். அத்துடன் biopsy செய்வதற்காக உள்ளே அனுப்பிய டியூப்பில் பொருத்தி உள்ள கருவி மூலம் சின்னஞ் சிறு பகுதி (துணிக்கை) ஒன்றை ஒன்றை கிள்ளி பின் அதை வெளியே எடுத்து பரிசோதித்து பார்ப்பர். "இப்படித்தான் மச்சான் நடக்கப் போகுது எனக்கு நாளைக்கு" என்று ராசுக்குட்டி தன் நண்பனுக்கு முதல் நாள் சொல்லும் போதே அவனுக்கு வேர்த்து விட்டது. "எப்படியடா...அதுவும் அந்த சின்ன துவாரத்துக்குள் கமரா எல்லாம் அனுப்பி...செரியாக வலிக்க போகுது பார் " என்று அவன் திருப்பி திருப்பி அதையே ரிப்பீட் மோட்டில் ராசுக்குட்டியிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். ராசுக்குட்டியை சிறு கட்டிலில் (வாங்கில்) மல்லாக்க படுக்க வைத்த பின் டொக்டர் ஆரம்பிக்க முன்னரே, "என்னால் உனக்கு வலி ஏற்படுவதற்கு முதலில் என்னை மன்னித்துக் கொள், இது ஆளை மயக்கி செய்யும் பரிசோதனை அல்ல... கொஞ்சம் வலிக்கும்.. முக்கியமாக Bladder இனை டியூப் சென்று அடைந்த பின் சிறு பகுதியை கிள்ளி எடுக்கும் போது வலி கூடியளவு இருக்கும், ஆனால் தாங்க கூடியது... என்னை மன்னித்துக் கொள்" என்று கூறியபின் தான் பரிசோதனையை ஆரம்பித்தார். "இவ்வளவு படிச்ச மனுசன்... எவ்வளவு தன்மையா கதைக்கின்றார்..அதுவும் மன்னிப்பெல்லாம் கேட்கின்றார்" என்று எண்ணிய ராசுக்குட்டி 'என்ன வலி வந்தாலும் தாங்கத்தான் வேண்டும்... அழுது கிழுது பக்கத்தில் நிற்கும் பெண் தாதி தன்னை ஒரு கோழை என்று நினைக்க வைக்க கூடாது என்பதில் உறுதியாக கிடந்தார். அவருக்கு இந்த ரணகளத்திலும் அருகில் நிற்கும் பெண்ணிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற நினைப்பு. டொக்டர் சொன்னது போலவே, நண்பன் அரண்டது போலவே ராசுக்குட்டிக்கு வலி இருந்தது. முதலில் உள்ளே நுழைக்கும் போது, உடனடியாக எழும்பி சுச்சு போக வேண்டும் போல உணர்வு வந்தது அவருக்கும் பின் வலி மெது மெதுவாக ஆரம்பித்து உச்சத்துக்கு போனது.அதுவும் Bladder இனை அந்த டியூப் அடைந்த அந்தக்கணமும் கிள்ளி எடுத்த வினாடியும் அவரை அறியாமலே இரண்டு சொட்டு கண்ணீர் துளி கடைக்கண்ணால் வழியுமளவுக்கு வலி வந்து போனது. பதினைந்து நிமிடங்கள் டியூப் அங்கும்மிங்கும் அலைந்து திரிந்தது. இது வரைக்கும் உடலில் ஒரு போதுமே தொடுகை உணரப்படாத இடத்தில் எல்லாம் நின்று நிதானித்து தொடுகையை உணர்த்திச் சென்றது. அந்த டியூபின் பின்னாலேயே ராசுக்குட்டியின் தன்னுணர்வும் பின் தொடர்ந்தது. அதன் கமரா பார்க்கும் இடமெல்லாம் ராசுகுட்டியின் மனமும் தொட்டுப் பார்த்தது. இதுவரைக்கும் இந்த இடமெல்லாம் தன் உடலில் உள்ளதா என்பதையே அறியாத மனம் அந்த டியூபின் வழி சென்று அறிந்து கொண்டது. வலியும் தன்னை அறியும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று கலந்தும் மேவியும் உரசியும் சமாந்தரமாகவும் சென்றன. எல்லாவற்றிலும் புதினம் பார்க்கும் ராசுக்குட்டியின் மனசும், எல்லாவற்றையும் அனுபவித்தே சாகும் என்ற ராசிக்குட்டியின் இயல்பும் அந்த டியூபின் வழி பயணித்து களித்தது. மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே என்ற பாடலை திடீரென ராசுக்குட்டியின் மனசு பாடியது எல்லாம் முடிந்த பின் டொக்டர் "உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாமே மிக நல்லா இருக்கு.. உன் CT scan முடிவிலும் ஒரு பிரச்சனையும் இல்லை." என்று சொல்லும் போது "அப்படியென்றால் ஏன் டொக்டர் அன்று கொஞ்சம் இரத்தம் வந்தது...அதன் பின் மூன்று நாட்கள் கழிந்த பின்னும் ஏன் மீண்டும் வந்தது" என்று ராசுக்குட்டி கேட்க.. "சிலருக்கு எப்பவாவது ஒரு நாள், சில நாட்கள் இப்படி வரும். சிவப்பாக இருப்பினும் அது இரத்தம் அல்ல. சிறு நீரில் எத்தனையோ விசயம் வெளிவரும், அதில் சிலது இப்படி மங்கலான சிவப்பு நிறத்திலும் இருக்கும்" என்றார்.  டொக்டருக்கு நன்றி சொல்லி வெளியே வந்த ராசுக்குட்டி முதலில் மனுசிக்கு போன் போட்டார். "எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை"  "நான் அன்றைக்கே சொன்னனான் தானே...நீங்கள் தான் எல்லாத்துக்கும் கூகிளை நோண்டி தேவையில்லாமல் பயப்பிடுகின்றீர்கள்... " என்று சொன்ன அவரது மனிசி மேலும் "ஆஸ்பத்திரியில் இருந்து வரும் போது அதுக்கு கிட்ட இருக்கின்ற இரா சுப்பர் மார்கெட்டில் புளியும் சின்ன வெங்காயமும், உள்ளியும் வாங்கிட்டு வாங்கோ: என்று சொல்ல, ராசுக்குட்டி தன் காரை இரா சுப்பர் மார்க்கெட் பக்கம் திருப்ப, அவரது இந்தக் கதையும் இத்துடன் முடிகின்றது.
  • அது அப்பவே தெரிஞ்ச விசயமாச்சே....இனவாதமும் இனக்கொலைகளும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு  அவசியமானதொன்று.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.