Jump to content

நானும் அப்பாச்சியும் 2 .!


Recommended Posts

grand+.jpgநான் செய்யும் குறும்புகளுக்கு அளவே இருக்காது அப்படி குழப்படி சிறுவயதில் ஒவ்வரு நாளும் காயம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் வீடு போனது கிடையாது அப்படி விளையாடி வரும் காயங்களுக்கு மருந்து போட்டு விடுவதில் இருந்து சுடுதண்ணீ ஒத்தனம் கொடுத்து பழைய நிலைக்கு வரும்வரை கிழவி உறங்காது .சும்மா பஞ்சி  பட்டு படுத்து இருந்தாலே கிழவி குழற தொடங்கிடும் ஒருநிமிடம் சும்மா இருக்க மாட்டான் இன்னும் எழும்பாமல் படுத்து இருக்கிறான் என்ன எண்டு கேளண்டி மகளே என்று அம்மாவை நச்சரித்து எடுக்கும் .

 

மாதுளம் பழம் மரத்துக்கு மாதுளைக்கு அணில் கடிக்காமல் அங்கர் பை எடுத்து கட்டி விடுவா பழம் நல்லா முற்றிய பின் பை இருக்கும் பழம் இருக்காது நானு ஆட்டையை போட்டு பள்ளிக்கூடம் கொண்டு போயிடுவன் ,அந்த நேரங்களில் யாரவது பக்கத்துக்கு வீட்டு பெடியள் வந்து போனா முடிச்சுது கதை அந்த பெடிவந்தது புடுங்கி கொண்டு போட்டுது கள்ள பெடி வீடுவாசளுக்கு எடுக்க கூடாது என்று பழி அங்க விழும் நாம சோகமா குந்தி இருந்து கதை கேட்பம் ஓமன ஆச்சி அவன் வர நீ என்ன செய்தனி பார்க்காமல் என்று இன்னும் கொளுத்தி போடுறது நம்ம வேலை பாருங்கோ .

 

அப்பாச்சியின் கைவந்த கலை ஓட்டப்பம் சுடுவது ஒரு 20வருடமா நான் இன்னும் அப்படி ஒரு அப்பம் சாப்பிடவே இல்லை உடைச்ச சட்டியில் ஊற்றி சிரட்டையால் மூடி எடுக்க அந்த அப்பத்தில் பல நூறு ஓட்டை இருக்கும் நல்ல தேங்காய் பாலும் சீனியும் கலந்து அதில் தொட்டு சாப்பிடும் ருசி வாழ்வில் இன்றைய தலைமுறைக்கு கிடைக்காத ஒரு காலமா போட்டுது .என்ன சமையல் செய்தாலும் வாசனை நாலுவீடு தள்ளி மணக்கும் கைப்பக்குவம் உள்ள ஆள் ஆச்சி என்னமோ தெரியல்ல அளவான பாசமும் கூடிய அன்பும் கொட்டி கொடுபதால் எனக்கு சுவையா இருந்து இருக்கும் என்று இப்பொழுது தோன்றுவது உண்டு .

 

உள்ள பனைமரம் எல்லாம் ஏறி கிளி பிடிக்க நெஞ்சு எல்லாம் உரிச்சு கை எல்லாம் கீறி கிழிபட்டு வீட்டுக்கு வருவன் அம்மா கண்டா ஓட ஓட அடி விழும் என்கிற பயத்தில் வீடுக்கு புறத்தால் செக்கல் பொழுதில் வந்து பதுங்கி இருக்கிறது அப்பாச்சி கோயிலா வரும்வரை வந்தபின்தான் ஓடிபோய் அவா பின்னாடி நின்று பாதுகாப்பை தேடி ஆயிரம் பொய் எல்லாம் சொல்லி அம்மாவை சமாளிச்ச பின்னே வீட்டுக்கு உள்ளே போகலாம் இல்லது கிளுவம் தடி முறியும் முன்னாடி போய் மாட்டினா பாருங்கோ .அம்மா அடிக்கவேணும் என்று முடிவு எடுத்தா இரவு பாய்க்கு கிழே தடி முறிச்சு வைத்து இருப்பா படுக்கைக்கு போக எட்டி கையில பிடிச்சு சுற்ற தொடங்கினா கொப்பளம் வரும்வரை விழும்   என்று தெரியும் ஆச்சிக்கு எனக்கு வேவு பார்க்கிறது கிழவிதான் அட பெடி அம்மா தடி முறிச்சவா பின்னேரம் நீ இன்று எனக்கு அருகில பேசாமல் படு அங்க போன நான் பிடிக்க வரமாட்டன் என்று முதலே தகவல் தந்துடுவா .

 

 

நான் அடிக்கடி கிழவியின் சங்கிலி ...தோடு ..மோதிரம் .எல்லாம் நீனு செத்தா எனக்கு தானே என்று சொல்லுவன் இப்பவே ஒரு பேப்பர்ல எழுதி வை அல்லது மகனிட்ட சொல்லி வை என்று பகிடியா சொல்வது உண்டு அதுக்கு ஆச்சி சொல்லுவா நான் சாகிற காலம் நீ என்னை எப்படி பார்க்கிறாய் என்று பார்த்துதான் உனக்கு தருவன் அல்லது இல்லை என்று அப்படி அப்பாச்சி இறக்கும்போது 89 வயது கடைசி காலங்களில் கண் தெரியாமல் போயிட்டது குளிக்க தண்ணி நிறைத்து கொடுத்து, பேப்பர் வாசிக்கிறது; ஊர் புதினங்களை வந்து வக்கனையா சொல்லுறது ,எல்லாம் என்னுடைய வேலை அவியல் அப்படி இவையள் இப்படி அந்தபெடி அங்க நிக்கு யாரு யாரு கலியாணம் கட்டினம் யாரு தெருவில நின்று காதல் பண்ணினம் என்று கிழவிக்கு ஒன்றும் இல்லாமல் நான் வந்து சொல்லுவன் .

 

சிலவேளை தனிய இருப்பா வீட்டில் நான் வந்தா சத்தம் இல்லாமல் போய் மெதுவா சங்கிலியில் பிடிப்பன் என்ன செய்கிறா பார்ப்பம் என்று கிழவி சிரிச்சு போட்டு சொல்லும் உனக்குத்தான் கழட்டிக்கொண்டு போ என்று நான் பேசுறது இப்படி கள்ளன் வந்து செய்தா சத்தம் போடாமல் இப்படி சொல்லுவியா என்று அதுக்கு கிழவி சொல்லும் திருவாலி உன்னை தவிர எவனுக்கு என்னை தொடும் தைரியம் வரும் என்று ;யாருடைய மகள் என்று நினைச்ச என்று வீராப்பா சொல்லுவா .

 

சும்மா காச்சல் வந்தால் நான் அனுங்கி குனுங்கி கிடப்பேன் அண்ணன் சொல்லுவான் அவனுக்கு நெஸ்ட்மொட்  காச்சல் வந்திட்டு ஒன்று வாங்கி கரைத்து கொடுத்தா குளிசை போடாமல் மாறும் என்று நக்கல் பண்ணுவான் கிழவி தன்னிடம் உள்ள எல்லாம் புறக்கி செவினப் சோடாவும் .நெஸ்ட்மொட்டும் வாங்கி வந்து தலைமாட்டில் வைக்கும் உண்மைக்கும் இரண்டையும் கண்டால் கச்சல் போயிடும் எனக்கு :) பாசம் என்றால் என்ன என்று சொல்லி கொடுத்தவா ஆச்சி அப்படி வாழ்த்து காட்டி சென்றார் .

 

இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு இந்தக் கொடுப்பினை இல்லை.நாம உலகத்துக்கு அறிமுகமாகும் போதே அப்பாவைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டே வந்தேன்.

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு,

Link to comment
Share on other sites

இதை வாசித்த போது ஒரு ஏக்க பெருமுச்சு தான் வந்தது உண்மையை சொன்னால்.

நான் இவ்உலகுக்கு வரும்போது எனது பெற்றோரின் அம்மா,அப்பா போய் விட்டார்கள்.

 

ஆனால் எனது பிள்ளைகளுக்கு அவர்கள் இருந்தும் இப்படியான ஒரு அன்பு கிடைக்க கொடுத்து வைக்கவில்லை. :(

 

 

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு

 

 

 

Link to comment
Share on other sites

இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .  ////   நியாயமான கேள்வி . வைத்துப் பார்க்கவேண்டாம் , மற்றையவர்கள் முன் இது எனது அப்பா , இது எனது அம்மா என்று சொல்லி அங்கீகாரப்படுத்துவார்களா ??? இவர்களை சிதைப்பதில் ஊடகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதும் வலியான உண்மை . அப்பாச்சி 2 உண்மையிலேயே தொட்டது . வாழ்த்துக்கள் அஞ்சரன் தொடருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடையில் முன்னேற்றம் தெரிகிறது.அவசரப்படாமல் எழுதியுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. அதனால் நன்றாகவும் உள்ளது.

Link to comment
Share on other sites

நமக்கு இந்தக் கொடுப்பினை இல்லை.நாம உலகத்துக்கு அறிமுகமாகும் போதே அப்பாவைத் தவிர மற்றவர்களை அனுப்பிவிட்டே வந்தேன்.

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு,

 

நன்றி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் . 

 

இதை வாசித்த போது ஒரு ஏக்க பெருமுச்சு தான் வந்தது உண்மையை சொன்னால்.

நான் இவ்உலகுக்கு வரும்போது எனது பெற்றோரின் அம்மா,அப்பா போய் விட்டார்கள்.

 

ஆனால் எனது பிள்ளைகளுக்கு அவர்கள் இருந்தும் இப்படியான ஒரு அன்பு கிடைக்க கொடுத்து வைக்கவில்லை. :(

 

 

நன்றி அஞ்சரன் பகிர்வுக்கு

 

நன்றி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் . 

 

என் கவலையும் இதுவே பிள்ளைகளுக்கு படம் காட்டி சொல்லு வைக்க வேண்டி இருக்கு :(

இப்பொழுது என்னுடைய கவலைகள் எல்லாம்  குடும்பம் என்றால் என்ன ?உறவு என்றால் என்ன ? அன்பை பரிமாறுவது எப்படி ...விட்டுகொடுப்பு ..புரிதல் ..நேசம் ..பாசம் என்று இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சொல்லி கொடுக்க அப்பாச்சிகள் ...அம்மம்மாக்கள் அருகில் இல்லையே திக்கு திசைகள் அற்று அனாதரவா வளர்த்து வரும் இளைய சந்ததி அப்பா அம்மாவைக்கூட வைத்து பார்க்குமா எதிர்காலத்தில் என்பது கேள்வி குறியே .  ////   நியாயமான கேள்வி . வைத்துப் பார்க்கவேண்டாம் , மற்றையவர்கள் முன் இது எனது அப்பா , இது எனது அம்மா என்று சொல்லி அங்கீகாரப்படுத்துவார்களா ??? இவர்களை சிதைப்பதில் ஊடகங்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதும் வலியான உண்மை . அப்பாச்சி 2 உண்மையிலேயே தொட்டது . வாழ்த்துக்கள் அஞ்சரன் தொடருங்கள் .

நன்றி அண்ணே வரவுக்கு ..உங்கள் கருத்துக்கும் . 

 

 

நிஜம் அண்ணா பலர் இப்படி செய்வதை நானும் நேரில் பார்த்து உள்ளேன் . :(

 

உங்கள் எழுத்து நடையில் முன்னேற்றம் தெரிகிறது.அவசரப்படாமல் எழுதியுள்ளீர்கள் என்றும் தெரிகிறது. அதனால் நன்றாகவும் உள்ளது.

 

நன்றி அக்கா உங்கள் கருத்து எதிர்பார்த்தேன் ஆதலால் மகிழ்ச்சி :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பக்கம் நானும் வந்து உங்கள் கதையை வாசிச்சுட்டு போறனான்..எழுத்துப் பிழை,எக்ஸ்பிறஸ்ல எழுத்தை ஓட விட்டு எழுதுவது இவற்றைக் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நன்று அஞ்சரன்.தவறாக சொல்ல இல்ல, கவனத்தில் எடுக்க மட்டுமே சொல்கிறேன்..மற்றப்படி தப்பு செய்யாமல் திட்டு வாங்கின பிள்கைள் ரொம்ப பாவங்கள்.

Link to comment
Share on other sites

இந்த பக்கம் நானும் வந்து உங்கள் கதையை வாசிச்சுட்டு போறனான்..எழுத்துப் பிழை,எக்ஸ்பிறஸ்ல எழுத்தை ஓட விட்டு எழுதுவது இவற்றைக் கொஞ்சம் கவனத்தில் எடுத்தால் நன்று அஞ்சரன்.தவறாக சொல்ல இல்ல, கவனத்தில் எடுக்க மட்டுமே சொல்கிறேன்..மற்றப்படி தப்பு செய்யாமல் திட்டு வாங்கின பிள்கைள் ரொம்ப பாவங்கள்.

 

நன்றி யாயினி ...கண்டிப்பா உங்கள் அறிவுரை கவனத்தில் எடுக்கப்படும் கருத்துக்கு நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வாழ்ந்த இடத்துக்கும், அப்பாச்சி வாழ்ந்த இடத்துக்கும் இடையே பெரிய கடல் இருந்தது! இருந்தாலும், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் அப்பாச்சி வீட்டுக்குப் போகத் தவறியதில்லை! திரும்ப வரும்போது, கட்டாயம் ஒரு பனாட்டுககூடையும், புழுக்கொடியலும்,சீசனைப் பொறுத்து, ஒரு பெரிய பாரைக்கருவாடும் எப்போதும் தந்து விடப்படும்! ஒடியல் புட்டு. குரக்கன் புட்டு, கூழ், எல்லாம் அப்பாச்சியோட போனது தான்! :o

 

அப்பாச்சியின் நினைவை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் அஞ்சரன்!

Link to comment
Share on other sites

நாங்கள் வாழ்ந்த இடத்துக்கும், அப்பாச்சி வாழ்ந்த இடத்துக்கும் இடையே பெரிய கடல் இருந்தது! இருந்தாலும், ஒவ்வொரு பாடசாலை விடுமுறைக்கும் அப்பாச்சி வீட்டுக்குப் போகத் தவறியதில்லை! திரும்ப வரும்போது, கட்டாயம் ஒரு பனாட்டுககூடையும், புழுக்கொடியலும்,சீசனைப் பொறுத்து, ஒரு பெரிய பாரைக்கருவாடும் எப்போதும் தந்து விடப்படும்! ஒடியல் புட்டு. குரக்கன் புட்டு, கூழ், எல்லாம் அப்பாச்சியோட போனது தான்! :o

 

அப்பாச்சியின் நினைவை மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றிகள் அஞ்சரன்!

 

உண்மைதான் அண்ணா அவைகள் ஒரு வசந்தகாலம் .

 

நன்றி வரவுக்கும்  ..கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய பிள்ளைகளுக்கு அந்தக் கொடுப்பிணை குறைவுதான்!! :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் தொடும் பகிர்வு இக் கால குழந்தைகளுக்கு எங்கே விளங்கக் போகிறது . மீண்டும் நினை வுகளை எண்ணி ஏங்க வைத்து விடீர்கள். எனக்கு இவைகள் கிடைக்கவே இல்லை. எல்லோரும் பரலோகம்போய் விட்டினம் கதைகளாக் கேள்விபட்டு ள்ளேன் . கொடுத்துவைத்த நீங்கள் . இங்கு எழுதவும் வைத்துவிட்டது. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

நன்றி சுவி ..நிலாமதி வரவுக்கு ...உங்கள் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சயனின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. :icon_idea:

(இவரிடம் உள்ள  இந்த திறமையை  ஆரம்பத்திலிருந்தே கண்டு ஊக்குவித்தவன்  என்ற  வகையில்.)

நல்லதொரு  கலைஞனாக  வளர  வாழ்த்துக்கள்

எனக்கு

இரட்டிப்பு மகிழ்ச்சி............. :icon_idea:

Link to comment
Share on other sites

அஞ்சயனின் திறமைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. :icon_idea:

(இவரிடம் உள்ள  இந்த திறமையை  ஆரம்பத்திலிருந்தே கண்டு ஊக்குவித்தவன்  என்ற  வகையில்.)

நல்லதொரு  கலைஞனாக  வளர  வாழ்த்துக்கள்

எனக்கு

இரட்டிப்பு மகிழ்ச்சி............. :icon_idea:

 

நன்றி அண்ணே ....நீங்கள் எல்லோரும் எனது எனர்ஜி :)

Link to comment
Share on other sites

இம்முறை அப்பாச்சி கதை கோர்வை பிசகாமல் அழகாக எழுதப்பட்டுள்ளது. அவசரமில்லாத அப்பாச்சியின் கதை ஊரை மீளவும் கொண்டு வந்து அப்பாச்சிகளின் நினைவுகளைத் தந்து போகிறது.

Link to comment
Share on other sites

இம்முறை அப்பாச்சி கதை கோர்வை பிசகாமல் அழகாக எழுதப்பட்டுள்ளது. அவசரமில்லாத அப்பாச்சியின் கதை ஊரை மீளவும் கொண்டு வந்து அப்பாச்சிகளின் நினைவுகளைத் தந்து போகிறது.

 

நன்றி அக்கா .

 

Link to comment
Share on other sites

அம்மம்மா, அப்பாச்சிகளின் பாசத்துக்கு ஈடிணையாக எதுவும் இருக்காது.

சென்றவருடம் என் அம்மம்மாவை இழந்தேன். "நீதான்டா எனக்கு கொள்ளி வைக்கோனும்...!" என்று என்னிடம்

எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிற மனிசிக்கு.... என்னால் அதை நிறவேற்ற முடியாத சூழ்நிலையில் நான் இருந்தேன். :(

 

 பல பழைய ஞாபகங்களை கிளறிவிட்டிருக்கிறது உங்கள் படைப்பு... மிக்க நன்றி அஞ்சரன்....!

 

Link to comment
Share on other sites

அம்மம்மா, அப்பாச்சிகளின் பாசத்துக்கு ஈடிணையாக எதுவும் இருக்காது.

சென்றவருடம் என் அம்மம்மாவை இழந்தேன். "நீதான்டா எனக்கு கொள்ளி வைக்கோனும்...!" என்று என்னிடம்

எப்பவும் சொல்லிக்கொண்டிருக்கிற மனிசிக்கு.... என்னால் அதை நிறவேற்ற முடியாத சூழ்நிலையில் நான் இருந்தேன். :(

 

 பல பழைய ஞாபகங்களை கிளறிவிட்டிருக்கிறது உங்கள் படைப்பு... மிக்க நன்றி அஞ்சரன்....!

 

நன்றி கவிதை கருத்துக்கு .

 

சிலவற்றுக்கு கொடுப்பனவு வேணும் அண்ணே எங்கு இருந்தாலும் தலைமாட்டில் நிண்டு பத்தம் பிடிக்க வந்திடு என்று சொல்லிட்டே இருப்பா ஆனால் நாட்டில் இருந்து கூட என்னால் போகமுடியவில்லை சூழல்  அப்படி இன்று மனதில் ஒரு நெருடல் இருக்கு எனக்கு .:(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.