Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு.

 

இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும்.

 

இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

 

உதாரணமாக :-

அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும்.

rice.jpg

மீன்ரின் – 220ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 180ரூபாவிற்கு வழங்க முடியும்.

5லீட்டர் குடிதண்ணீர் – 170ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 145ரூபாவிற்கு வழங்க முடியும்.

images-3.jpg

நேசம் உற்பத்திகளான கருவாடு , கைக்குத்தரிசி , குரக்கன்மா , அரிசிமா , மிளகாய்த்தூள் , நெசவுப்பொருட்களான சாறம், சாறி , போர்வை மற்றும் நூடில்ஸ் , தேங்காய் , சவர்க்காரம் , தேயிலை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் யாவையும் ஒரேயிடத்தில் எம்மிடம் பெற்றுக் கொள்ள முடியும்.

images-2.jpg

இதே போன்று நீங்கள் விரும்பும் அனைத்துப் பொருட்களையும் குறைந்த விலையில் தரமான பொருட்களை எமது நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளலாம்.

 

இவ்வர்த்தகமானது வியாபார நோக்கம் அல்லாது போரால் பாதிக்கப்பட்டு எம்மால் வாழ்வாதார உதவியைப் பெற்று சுயதொழிலில் பெரும் வியாபாரிகளால் பாதிப்புக்குள்ளாகும் எமது மக்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தலையே எமது நிறுவனம் செய்து கொள்கிறது.

 

எனவே எமது தயாரிப்புகளை பெற்றுக் கொள்ள விரும்பும் வர்த்தக நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் நன் கொடையாளர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் எம்மால் உங்களுக்குத் தேவையான பொருட்களை தந்துதவ முடியும்.

 

எமது நோக்கம் போரால் பாதிப்புற்ற சிறு சிறு உற்பத்திகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களை பெரு உற்பத்தியாளர்கள் முடக்காத வண்ணம் பொருத்தமான விற்பனையைச் சந்தையை உருவாக்குவதோடு எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதேயாகும்.

 

தொடர்புகளுக்கு :-

 

Telephone: (Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

rameshsanthi@gmail.com/hmcgroupslk@gmail.com

Skype – Shanthyramesh

www.hmclk.com

 

http://hmclk.com/p140.html

http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    நன்றி மருதங்கேணி, ஆமா நல்லதொரு இனிமையான குரல், அமைதியகா மனதை ஈர்க்கும் ஒரு சக்தி இவரின் குரலில்
  • கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு.  அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம். (துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)  
  • அல் அக்­ஸா மீதா­ன இஸ்ரேலின் மிலே­ச்­சத்­த­ன­மா­ன தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­­டிக்­கி­றோம் பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு   http://www.vidivelli.lk/wp-content/uploads/2021/05/SLCSP.pngஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­­லில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது. பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்­நா­யக்­க, பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்­பி­­டப்­பட்டிருப்பதாவது: ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்­­மை­யாகக் கண்­டிக்­கி­­றோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம். சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்­ளி­வா­ச­லுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். பல தசாப்தகால சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களின் அண்மைக்கால பேசுபொருளாக மாறியிருக்கும் ஷெய்க் ஜர்ராவை அண்மித்த பகுதிகளிலும் இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும். எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்­ளிட்ட புனித தலங்­களின் காவ­லர்­கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம். மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   http://www.vidivelli.lk/article/10697
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.