Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

இந்திய தூதரை பாலியல் தொழிலாளர்களுடன் சிறையில் அடைத்த அமெரிக்கா

Recommended Posts

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அதில் பணியாற்றும் அதிகாரிகளின் கார்கள் இனிமேல் உள்ளூர் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ipopo.jpg

தவறாமல் மாமுல் வாங்கப்படும்.. :D

Share this post


Link to post
Share on other sites

சர்வதேச விதிகளின் படி சங்கீதா வீட்டு வேலைக்காறி. அவருக்கு அமெரிக்கா வீச கொடுக்கும் போது அது அமெரிக்க விதிகளுக்குள் வருமே அல்லாமால் சர்வதேச விதிகளுக்குள் வராது. இந்த விடையத்தில் அமெரிக்க விதிகளை ஒருவர் மீறினால் அவர் சர்வதேச நியமங்களுக்கு வெளியே ஆன குற்றத்தை செய்கிறார். சங்கீதா வீட்டு வேலை செய்வது அமெரிக்க வர்த்தக விதிகளின் கீழ் வரும். 

 

அமெரிக்க தூதுவராலயத்தில் கிளப் வைப்பது தூதுவராலய பாவனைக்காயின் அதி தடுக்க முடியாது. வெளியார் சென்று பாவிக்கிறார்களாயின் அது இந்திய வர்த்த்க சட்டங்களின் கீழ் வரும். இந்திய வர்த்தக சட்டங்களை அமெரிக்க தூதுவராலயம் மீறாதவரையும் அதை மூடச் சொன்னால், அமெரிக்காவை இந்தியா வர்த்தப் போட்டிக்கு அழைக்கிறது என்பதுதான் பொருள். 

 

இதில் கிந்தி மோடையா அமெரிக்கர்கள் தமது வழமையான அலுவல்களை செய்வதை தடுக்கிறார்கள். ஆனால் அமெரிக்கா அதை செய்யவில்லை. அமெரிக்கா எந்த தூதுவராலய அதிகாரியினது வீட்டு வேலையாட்களின் வீசாக்களை ரத்து செய்யவில்லை. அவர்கள் இனிமேல் வேலையாட்கள் வைத்திருக்க முடியாது என கூற்வில்லை. இந்தியா செய்வது கோமாளித்தனம். நடந்த விசையத்தை அந்தஸ்த்து, பார்ப்பான் என்று பார்க்காமல் விசாரித்து கோட்டில் உண்மையை காண வேண்டும் என்கிறது. தேவயானி குற்றம் செய்ய்விட்டால் அமெரிக்க கோட்டை சந்திக்க வேண்டும்.

 

இததாலிக் கப்பல் காறங்கள் மாதிரி  இந்தியாவுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வீட்டுக்கு போயிருந்தால் கப்சிப் என்று வாயை பொத்திக்கொண்டிருப்பர்கள்.

Share this post


Link to post
Share on other sites
1389181507_DEL170-17_2014_151442_low-250Zoom

Indian activists of an organization called Dalit Cobra shout slogans during a protest outside the U.S. consulate in Mumbai, India, Tuesday, Jan. 7, 2014. The arrest of an Indian consular Devyani Khobragade in New York, arrested and strip-searched for allegedly forcing her maid to toil for little pay, sparked a diplomatic furor between the United States and India. (AP Photo/Rajanish Kakade)

AP PHOTO/RAJANISH KAKADE

India takes aim at US diplomats’ privileges as fallout from diplomat’s strip search grows  

NEW DELHI – India took aim Wednesday at the privileges enjoyed by American diplomats in New Delhi, warning that the U.S. must stop all “commercial activities” at a popular embassy club that includes a bar, a bowling alley and other amenities. New Delhi also warned that embassy cars will not be immune to traffic violations.

The move was the latest fallout from a diplomatic row between India and the United States stemming from the arrest and strip search last month of Devyani Khobragade, an Indian diplomat in New York City. Khobragade, 39, has pleaded not guilty to fraud charges alleging she paid her Indian-born maid far less than the U.S. minimum wage and lied about it on a visa application.

The Press Trust of India news agency reported the Indian government’s demands Wednesday, saying the U.S. has been asked to “discontinue commercial activities” from its embassy premises by Jan. 16. That includes a club that houses a restaurant and bar, bowling alley, swimming pool, sports field, hair salon and gym.

Foreign Ministry spokesman E. Vishnu Vardhan Reddy confirmed the PTI report and said the government was waiting for a response from the United States. Asked if India would shut down the club if the U.S. doesn’t comply, he said: “It all depends on what the U.S. embassy does next. Embassies anywhere in the world cannot engage in commercial activities.”

India says the fact that non-diplomats can join the club violates diplomatic laws. U.S. embassy officials did not immediately reply to calls for comment.

Khobragade was arrested Dec. 13 and was strip-searched in custody, as is common practice according to the U.S. Marshals. But the case has caused an outcry in India, where the idea of an educated, middle class woman facing a strip search is seen as outrageous and heavy-handed.

The controversy has chilled relations between the United States and India, and New Delhi already has revoked privileges for U.S. diplomats in protest, including withdrawing import licenses that allowed the commissary at the U.S. Embassy to import alcohol and food.

Khobragade could face a maximum sentence of 10 years for visa fraud and five years for making a false declaration if convicted. She has said she has full diplomatic immunity. Federal officials dispute that, saying her immunity is limited to acts performed in the exercise of consular functions.

U.S. prosecutors and lawyers for Devyani are at odds over a possible plea deal.

A letter filed Tuesday by attorneys for Khobragade accused federal prosecutors of trying to pressure her into pleading guilty by next week. The attorneys renewed a request for an extension of the Jan. 13 deadline for an indictment.

The letter from her lawyers came in response to a filing on Monday by prosecutors saying they had “participated in hours of discussions in the hope of negotiating a plea that could be entered in court before Jan. 13.” It said there had been no response to the government’s latest offer.

The prosecutors’ filing violated an agreement not to discuss the negotiations publicly, the defence letter said. “We can only think that the violation was a distressingly calculated one,” it said.

There was no immediate response from the court.

http://www.news1130.com/2014/01/07/india-takes-aim-at-us-diplomats-privileges-as-fallout-from-diplomats-strip-search-grows/

Share this post


Link to post
Share on other sites

இந்த விடயத்தில் இந்தியாவில் நடைபெறுவதை பார்க்க படு சிறுபிள்ளை தனமாக இருக்கிறது....இவ்வளவு காலமும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருக்கிறார்கள்....இந்தியா நன்றாக மூக்குடைபடுகிறது...

Share this post


Link to post
Share on other sites

தேவயானி விவகாரம்: அமெரிக்க மந்திரியின் இந்திய பயணம் ரத்து

 

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய தூதராக பணி புரியும் தேவயானியை விசா மோசடி மற்றும் பெண் ஊழியரின் சம்பள மோசடி புகார் கூறி அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அப்போது தூதரக அதிகாரிக்கான விதிமுறையை மீறி அவரை கைவிலங்கு மாட்டியும் ஆடைகளை களைத்தும் காவலில் வைத்தனர்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்கள் அனுபவித்து வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. அவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் எந்த நடவடிக்கைக்கும் பணிந்து கொடுக்காத அமெரிக்கா தேவயானி மீதான வழக்கை தொடர திட்டமிட்டுள்ளது.

இந்த விவகாரத்தால் அமெரிக்க எரிசக்தி மந்திரி எர்னஸ்ட் மோனிகின் இந்திய சுற்றுப்பயணம் திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. அவர் இந்த மாதம் டெல்லி வந்து இந்தியா – அமெரிக்கா இடையேயான எரிசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு நடத்த திட்டமிட்டு இருந்தார்.

முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மந்திரி தனது இந்திய பயணத்தை திடீர் என்று ரத்து செய்தார். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் வணிக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்று இந்தியா நேற்று தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மந்திரி தனது சுற்றுப் பயணத்தை ரத்து செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையே தேவயானி தன் மீதான வழக்கு விசாரணையை ஜனவரி 13–ந் தேதியில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்று அமெரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். இது இந்த வழக்கில் தேவயானிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.

 

http://www.maalaimalar.com/2014/01/09103830/Tevayani-issue-US-Secretary-of.html

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க சட்டத்தின் படி... ஒருவர் மீது குற்றம் சுமத்தப் பட்டால்,
அந்த வழக்கை ஒருமாதத்துக்குள், நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தியா மாதிரி... சட்டத்தை என்றும் அமெரிக்கா தளர்த்த மாட்டாது.
தேவயானி கோட்டுக்குப் போயே... ஆக வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்: அமெரிக்கா சட்ட பாதுகாப்பு வழங்கியது

 

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடி மற்றும் பெண் ஊழியரின் சம்பள மோசடி புகார்களுக்காக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே தேவயானி மீதான வழக்கு விசாரணை வருகிற 13–ந்தேதி நியூயார்க் கோர்ட்டில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட்டில் தேவயானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தேவயானிக்கு இந்த வழக்கில் இருந்து அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிரீத் பாராரா மாவட்ட நீதிபதி ஷிரா ஷெயின்ட் லினுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து பெண் ஊழியர் சங்கீதா ரிச்சர்ட்டுக்கு விசா வாங்க மோசடி செய்தல் மற்றும் அதற்காக பொய் தகவல்கள் கொடுத்தல் என்ற 2 குற்றச்சாட்டுகள் தேவயானி மீது பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது.

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேவயானிக்கு அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளதால் ஜி1 விசா கிடைத்துள்ளது.

எனவே, அவர் இன்று இந்தியா திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா புறப்படும் முன் நியூயார்க் விமான நிலையத்தில் தேவயானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. மற்றும் ஆதாரமற்றது. நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிருபிப்பேன் என்றார்.

மேலும், அவர் கூறும் போது எனது துறை மந்திரிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் என் பக்கம் நின்ற நாட்டு மக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சக தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தேவயானி இந்தியா திரும்பினாலும் அவர்மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.maalaimalar.com/2014/01/10140700/devyani-returns-to-India-today.html

Share this post


Link to post
Share on other sites

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்..!

 
 
OBAMA+%2521%2521%2521.jpg
 
 

 

 

ஒபாமாவுக்கு ஒரு கடிதம்..!
 
 
அன்பு அண்ணன் பராக் ஒபாமாவுக்கு,
வணக்கம்,
சமிபத்தில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே என்பவரை தங்களின் அமெரிக்க போலிஸ் நடு வழியில் வைத்து கைது செய்த சம்பவம் தேச பக்தி போதையில் உருண்டு கொண்டிருக்கும் என் போன்ற இந்தியர்களுக்கு பெரும் அவமானத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
 
தங்கள் அரசாங்கத்துக்கு போலி ஆவணங்களை தந்ததோடு தனது பணியாளருக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட ஊதியத்தை தராத தேவயானி கோப்ரகடேவை ஒரு கிரிமினல் குற்றவாளி போல நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
எங்கள் நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோஷம் நீண்டகாலமாக ஒலித்துக் கொண்டிருந்தாலும் சட்டம் என்பது மேட்டுக்குடிகளின் காலுக்கு கீழே அழுக்கு படிந்து கிடக்கும் ஒரு கம்பளமாகவே காட்சியளிக்கிறது.
 
மேட்டுக்குடியின் முன் நின்று வாலை ஆட்டும் சட்டம் ஏழை எளியமக்களைக் கண்டால் அவர்கள் மீது ஏறி விழுந்து கடித்து குதறுகிறது.உயர் பதவியிலிருப்பவர்கள், செல்வம் படைத்த பெரிய மனிதர்கள், ஊழல் மற்றும் சுரண்டல்கள் மூலம் கோடிகோடியாய் குவித்த ஊழல் பேர்வளிகள், அதிகார மையங்களையே தங்கள் காலில் விழச்செய்யும் அழவிற்கு சர்வ வல்லமை பொருந்திய ஆன்மீக வாதிகள் இவர்கள் எத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் சட்டம் அவர்களோடு சமபந்தியில் சங்கமித்திருக்கும்.
 
எங்கள் நாட்டில் இந்துமதத்தின் போப் ஆண்டவராக சித்தரிக்கப்பட்டவர் காஞ்சி சங்கராச்சாரியார்.பிரதமர், ஜனாதிபதி ஏன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூட இவரது காலடியில் விழுந்து ஆசிபெறுவதை ஒரு பாக்கியம் எனக் கருதுமளவிற்கு முக்கியமான ஒரு அதிகார மையமாக விளங்கியவர்.
 
சில ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலுள்ள இவரது ஆசிரமத்தில் தவறுகள் நடப்பதாகவும் ஆகம விதிகளுக்கு விரோதமாக சங்கராச்சாரியார் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் சங்கரராமன் என்ற ஆசிரம ஊழியர் புகார்களை எழுதிக் குவித்தார்,
ஒருநாள் சங்கர்ராமன் காஞ்சிபுரம் கோயில் வளாகத்தில் வைத்தே பட்டப்பகலில் ஒரு கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.விசாரணையில் சங்கராச்சாரியார்தான் சங்கரராமனை கொலை செய்த்தாக கூறிய காவல்துறை அவர் மேல் வழக்கு பதிவு செய்து அவரை சிறைக்கும் அனுப்பியது.
 
ஆனால் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே எங்கள் மாகாணத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது.அதுவரை நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சியாக சங்கராச்சாரியாருக்கு எதிராக சாட்சியமளித்த பலரும் தாங்கள் ஏற்கனவே வழங்கிய சாட்சியங்களை திடீரென மறுத்தனர். கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவியும் குழந்தைகளும் கூட தொடர் அச்சுறுத்தல்களால் பிறள் சாட்சிகளாயினர். சமிபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது சங்கராச்சாரியார் உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 
கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் பெரிய ஆனமீக குருவாக இருந்த ஒரே காரணத்தால் சட்டம் அவரை நிரபராதியாக விடுதலை செய்தது. என்னதான் இருந்தாலும் இந்தியா ஒரு ஆன்மீக நாடல்லவா..?
அதே போன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேற்றிவாளன் என்ற இளைஞன் கருணை மனுக்கள் நிராகரிக்கப் பட்ட நிலையில் வேலூர் சிறையின் மரணக்கொட்டடியில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருக்கிறான்.
 
ராஜிவ்காந்தி படுகொலை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கான பேட்டரியை வாங்கித் தந்தான் என்பதுதான் இவன் மீதான குற்றச்சாட்டு.
 
நீண்ட நாட்களாக தான் ஒரு நிரபராதி என்று கூறிவரும் பேற்றிவாளன் ’கொலையாளிகள் ராஜிவை கொலை செய்யும் திட்டத்தோடு வந்திருக்கிறார்கள் என்பதையோ தான் வாங்கித்தந்த பேட்டரி மூலம்தான் வெடிகுண்டை வெடிக்கச்செய்யப்போகிறார்கள் என்பதையோ தான் அறிந்திருக்கவில்லை’ என்று கூறிவருகிறார்.
 
ஆனால் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி கொலையாளிகள் ராஜிவ் காந்தியை நெருங்குவதற்கு உதவியாக செயல்பட்டவர்கள் ராஜிவ் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான சில காங்கிரஸ் பிரபலங்கள்.
பாதுகாப்பு வலையங்களை தங்கள் உதவியோடு தாண்டி ராஜிவ் காந்தி அருகே வந்தம் அந்த நபர்கள் அவரை கொல்லும் நோக்கத்தில் தான் வருகிறார்கள் என்பது எப்படி அவர்களை அங்கு அழைத்துவந்த அந்த காங்கிரஸ் காரர்களுக்கு தெரியாதோ அதே போலத்தான் தான் வாங்கித்தந்த பேட்டரி ராஜிவ்காந்தியை கொல்ல பயன்படப் போகிறது என்ற உண்மை பேறறிவாளனுக்கும் தெரியாது.
 
ஆனால் கொல்லப்பட்டவர் நாட்டின் மிக முக்கியமான நபர் என்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதாரண ஆட்களாக இருந்ததாலும் காவல்துறையும் விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றமும் ராஜிவ் கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
 
ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன் ராஜிவ் கொலைவழக்கில் பேறறிவாளனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த சிபி ஐ புலனாய்வு அதிகாரி தியாகராஜன், பேற்றிவாளனின் வாக்குமூலத்தை தான் பதிவு செய்த போது அதில் சில தவறுகளை செய்து விட்டதாகவும் அதன் விளைவாகவே பேற்றிவாளனுக்கு மரண தண்டனை கிடைத்ததாகவும் பேற்றிவாளன் விடுதலை செய்யப்படுவார் என்று தான் கருதியவதால் அப்போது அவ்வாறு செய்ததாகவும் இப்பொது தனது மனசாட்சி உறுத்துவதாலேயே காலம் கடந்து உண்மையைக் கூறுவதாகவும்.. பேறறிவாளன் நிரபராதி என்றும் கூறியுள்ளார்.
 
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் ஒரு இளைஞனை குற்றவாளி என தீர்ப்பு எழுதிய பிறகு அந்த தண்டனைக்கு காரணமான வாக்குமூலத்தை எழுதிய அதிகாரியே தான் தவறு செய்துவிட்டதாக கருத்து தெரிவித்த பின்னும் அந்த இளைஞன் இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருப்பதுதான் இந்தியாவின் நீதி.
சென்னையை சார்ந்த சரவணபவன் குழுமம் இந்தியா முழுவதிலும் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றிலும் உணவு விடுதிகளை நடத்தி வருகிறது.
 
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜகோபால் ஏற்கனவே இரு பெண்களை திருமணம் செய்த நிலையில் மூன்றாவதாக தனது நிறுவனத்தில் வேலைபார்த்த நிர்வாகி ஒருவரின் மகள் மீது காதல்கொண்டார்.
 
திருமணமான அந்த பெண்ணை பல வழிகளிலும் துன்புறுத்தியதோடு கடைசியில் அந்த பெண்னின் கணவனையும் கடத்திச் சென்று கொன்று புதைத்து விட்டார். இது புகாராகி பெரும் பரபரப்பான வழக்கானது அனாலும் ராஜகோபால் இப்போதும் ஒரு கம்பீரமான தொழில் அதிபராகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த சரவணபவன் நிறுவனத்தின் அமெரிக்க கிளைகளுக்கு போலியான ஆவணங்கள் மூலம் ஊழியர்களை வேலைக்கு எடுத்ததாக சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தால் புகார் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த புகாரின் மீது சென்னை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்று கண்டிப்பாக உங்களுக்கு தெரியாது.
 
சென்னையில் கொழுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் ஓய்வில்லாமல் உழைக்கும் காவல் துறையினருக்கு காலை மதியம் இரவு என்று மூன்று வேளையும் தாயுள்ளத்தோடு இலவச உணவு வழங்கி வருகிறது சரவணபவன்.
 
இங்கு கையேந்தாத காவலர்கள் மிகக் குறைவு. குறைந்த வருமானத்தில் வாயைக்காட்டி வயிற்றைக்கட்டி வாழும் ஏழைக்காவலர்களுக்கு உணவு வழங்கும் சரவண பவன் நிர்வாகத்தின் மீது கொஞசம் கூட நன்றி விசுவாசமே இல்லாமல் நடவடிக்கை எடுக்கக் கோருவது எந்த வகையில் நியாயம்.. அப்படி சரவணபவன் மேல் நடவடிக்கை எடுக்க அந்த அளவிற்கு நன்றி கெட்டவர்களா எங்கள் காவல் துறையினர்.
 
மேக்டோனல்ஸும் கெ எஃப் சி யும் உங்கள் ஊரில் ஒரு போலீசுக்கு ஒரு துண்டு பர்கர் பீசாவது இலவசமாய் குடுத்திருக்குமா..?
 
எங்கள் ஊரில் காவலர்களுக்கு வயிறார உணவு வழங்கும் சரவணபவன் மீது புகார் கொடுக்கவேண்டும் என்ற கொடிய எண்ணம் உங்களுக்கு வந்தது..?
 
சமிபத்தில் முன்னாள் காவல் துறை உயர் அதிகாரி வெங்கடேசன் என்பவர் வீட்டில் முருங்கைக் கீரை பறித்ததாக இரண்டு கூலித் தொழிலாளிகளை கைது செய்து சிறைக்கு அனுப்பிய எங்கள் ஸ்காட்லாண்ட் யார்ட் கனிம வழங்கள் கொட்டிக்கிடக்கும் கடற்கரைகள் காடுகள் மலைகள் ஆறுகள் என்று நாட்டையே கபளீகரம் செய்து கொண்டிருக்கும் மாபியாக்களுக்குமுன் மௌனமாய் கைக்கட்டி நிற்கிறது.
 
இத்தனைக்கும் முருங்கைக்கீரை விவகாரத்தில் சம்மந்தப்பட்ட முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி வெங்கடேசனின் வீடே பொது இடத்தை அபகரித்து கட்டப்பட்டிருபாதாக தமிழக அரசின் வீட்டு வசதித்துறை ஏற்கனவே குற்றம் சாட்டியிருக்கிறது.
 
அரசு நிலத்தை அபகரித்து கட்டப்பட்ட அந்த அந்த வீட்டில் முருங்கைக் கீரை பறித்த இரண்டு அன்றாடம் காய்ச்சிகளை ஏதோ தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் ரேஞ்சுக்கு சுற்றிவளைத்து சிறைக்கு அனுப்பிய எங்கள் காவல்துறை மும்பை குண்டுவெடிப்போடு தொடர்புடையதாக கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருக்கும் சஞ்சை தத்துக்கு மாலை நேரங்களில் மது விருந்து கொடுத்து அவர் மனம் நோகாமல் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
 
இன்னும் சொல்லப்போனால் எங்கள் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் சட்டம் சொல்லும் நீதி. ஆனால் சட்டம் இயற்றும் அமைச்சர்கள் துவங்கி திகாரமையங்களிலிருக்கும் பலரும் பல தாரங்களுடன் வாழ்பவர்கள். இவர்களின் இரண்டாம் மனைவிகள் அரசியலில் பலம் பொருந்திய அதிகார மையங்களாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதையும் நாங்கள் சகித்துக் கொண்டிருக்கிறோம். சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறை இந்த அதிகார மையங்களுக்கு சல்யூட் அடித்து நிற்கின்றன.
 
முதல் மனைவி இரண்டாவது மனைவி பிரித்துப் பாராமல் எல்லோரையும் சமமாக பாவிப்பதுதானே எங்கள் கலாச்சாரத்தின் இயல்பு.
 
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மாகாணத்தில் அப்போதும் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா அரசாங்க சொத்தை தன்பெயருக்கு பத்திரப் பதிவு செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அடுத்து வந்த அரசு அவர்மேல் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியது. விசாரணையின்போது குறிப்பிட்ட சொத்துக்கான பத்திரப்பதிவு ஆவணங்களில் இருப்பது தனது கையெழுத்தே அல்ல என்று வாதிட்டார்.
 
பல ஆண்டுகளாக வழக்கு நடந்து தீர்ப்பு எழுதப்படும் வேளையில் மீண்டும் ஜெயலலிதா மீண்டும் எங்கள் மாகாண முதல் அமைச்சராகிவிட்டார்.
 
ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும். தமிழ் நாட்டில் ஆளும் கட்சியினர் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரியில் கல்லூரி மாணவர்கள் சென்ற பேருந்து தீவைத்து கொழுத்தப்பட்டது மூன்று கல்லூரி மாணவிகள் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர்.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த ஜெயலலிதா தன் வசமிருந்த அரசுச் சொத்தை அரசிடமே திருப்பி தந்துவிடுவதாக தெரிவித்தார்.
 
அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுகொண்ட நீதிமன்றம், ‘ ஜெயலலிதா தான் வாங்கிய சர்ச்சைக்குரிய சொத்தை அரசாங்கத்திடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் மேலும் அவர் ஒரு கையெழுத்தை, தன் கையெழுத்தே இல்லை என்று மறுத்துள்ளார். இதை அவரது மனசாட்சிக்கே விட்டு விட்டு அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறோம்..’ என்று தீர்ப்பு எழுதியது.
 
ஒரு குற்றவாளியின் குற்றத்தை அவரது மனசாட்சியின் தீர்ப்புக்கே விட்டுவிடும் பெருந்தன்மை வாய்ந்த சிறப்பான நீதிமன்றங்கள் எங்கள் நாட்டில் ஈனமுன் ஏராளம் உள்ளன.
 
ஆகவே ஒரு சாதாரண வேலைக்காரியான சங்கீதாவுக்கு அநீதி இழைத்தார் என்பதற்காக எங்கள் இந்திய கலாச்சாரத்தின் வடிவமான தேவயானி கோப்ரகடே மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது என்பது தேவையற்ற விஷயம் என்றே கருதுகிறேன்.
 
வேண்டுமானால் தேவயானி கோப்ரகடே விஷயத்திலும் நீங்களும் உங்கள் சட்டமும் எங்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தின் அணுகு முறையை பின்பற்றி தேவயானி கோப்ரகடேயையும் மனசாட்சியின்படி நடக்குமாறு அறிவுறுத்தலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
 
மேலும் உங்கள் காவலர்களால் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டபோது அவர் கிரிமினல்களோடு அடைத்து வைக்கப் பட்டிருந்ததாகவும் அதை இந்திய நாடாளுமன்றம் கண்டித்ததாகவும் படித்தேன்.
 
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்றே இதை நான் கருதுகிறேன் ஏனென்றால் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே முப்பத்து மூன்று சதவிகிதம் பேர் கிரிமினல்கள் என்று அதிகார பூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
 
அதாவது சின்னச் குற்றவாளிகளை சிறைச்சாலைகளுக்கும் பெரிய குற்றவாளிகளை நாடாளுமன்றத்திற்கும் அனுப்புவது எங்கள் நாட்டில் ஒரு நீண்டகால வாடிக்கை.
இந்த நடைமுறைகளை அமேரிக்காவும் கடை பிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.
 
இனி வரும் காலங்களிலாவது எமது இந்திய கலாச்சாரம் இறையாண்மை பண்பாடு போன்றவற்றை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
 

Share this post


Link to post
Share on other sites

இதில் என்ன திடீர் திருப்பம்?? பிரச்சினையில் சிக்கிக் கொண்டவுடன் பதவியை மாற்றி ஐநாவுக்குள் போட்டுவிட்டார்கள்.. குற்றம் இன்னும் நிரூபிக்கப்படாத பட்சத்தில் அமெரிக்கா அவருக்கு தூதரக பாதுகாப்பை வழங்கியுள்ளது.. இதிலும் அமெரிக்க சட்டங்களின் நேர்மைத்தன்மையும் இந்திய ஆளும் வர்க்கத்தின் மொள்ளமாரித்தனமுமே வெளிப்பட்டுள்ளன..

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற இந்தியா உத்தரவு

 

 தேவயானி விவகாரத்தில் பதிலடி தரும் விதமாக, டெல்லியில் உள்ள அமெரிக்க தூதகரத்தில் பணிபுரியும் தூதர அதிகாரிக்கு இணையான பொறுப்பில் இருந்த ஒருவரை நாட்டு விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டுள்ளது.
விசா மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்ட தேவயானி கோபர்கடேவை தங்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்ட சில மணி நேரத்தில், தேவயானிக்கு இணையாக டெல்லியில் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
தேவயானி அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, இந்தியா வந்து சேர்வதற்குள், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இயக்குநர் அந்தஸ்தில் பணியாற்றும் பெயர் வெளியிடப்படாத அந்த அதிகாரியை, இரண்டு நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் தம்மிடம் இருந்தாலும், அதுகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.
அதேவேளையில், தேவயானி வழக்கு தொடர்பான நடைமுறைகளில் இந்த அதிகாரி ஈடுபட்டிருந்ததன் காரணமாகவே, தேவயானி அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு ஆளானார் என இந்தியா நம்புவதாக வெளியுறவு வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக, இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால், அதற்கு இந்தியா மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியதை அடுத்து, தேவையானி இன்று அங்கிருந்து இந்தியா புறப்பட்டார்.
இந்தியா புறப்படுவதற்கு முன்பு தேவயானி அளித்த பேட்டியில், தன் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது என்றும், இது பொய் குற்றச்சாட்டு என்பதை சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு நிரூபிப்பேன் என்றும் கூறினார்.
முன்னதாக, தேவயானி கோப்ரகடே தனது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸுக்கு குறைவான ஊதியம் அளித்தார்; விசா மோசடி செய்துள்ளார் என்ற புகாரின் பேரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அமெரிக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற போலீஸார், காவல் நிலையத்தில் போதை கடத்தல் குற்றவாளிகளுடன் அடைத்து வைத்தனர். தேவயானியின் ஆடையை அகற்றி சோதனையிட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பெண் தூதரை மிகவும் மோசமாக நடத்திய அமெரிக்க அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துடன் பதில் நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
 
tamil.thehindu.com

 

Share this post


Link to post
Share on other sites

இந்தியா ஒரு கேலிக்கூத்து நாடு என்பதை இப்படியான சம்பவங்கள் மேலும் மேலும் உறுதி செய்கின்றன.

Share this post


Link to post
Share on other sites

தேவயானி வெளியேற்றம்- இந்தியா பதிலடி

140110055342_khobragade_624x351_reuters.

இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இந்தியா , டில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து ஒரு அதிகாரியை வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்த மேலும் தகவல்கள் உடனடியாகத் தெரியவில்லை.

 

முன்னதாக , விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் சர்ச்சை ஏற்படக் காரணமாக இருந்த, இந்தியத் துணைத் தூதர் தேவயானி, அமெரிக்காவை விட்டு வெளியேறி இந்தியா திரும்பிக்கொண்டிருக்கிறார்.

தேவயானியை அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வியாழக்கிழமை இரவு தேவயானி நியூயார்க் ஜான் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாக மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்காகப் பேசவல்ல அதிகாரி, சையத் அக்பருதீனும், இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார்.

"இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக தான் நிரபராதி என்பதை தேவயானி கோபர்கடே வலியுறுத்தினார்", என்றார் அக்பருதீன்.

" அவர் இந்தக் காலகட்டத்தில் தனக்கு பலத்த ஆதரவைத் தொடர்ந்து வழங்கியதற்காக,இந்திய அரசுக்கும், குறிப்பாக இந்திய வெளியுறவு அமைச்சருக்கும், இந்திய மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்", என்றார் அக்பருதீன்.

முன்னதாக வியாழக்கிழமை , தேவயானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் முறையாகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதற்கிடையே, அவரை நியுயார்க்கில் இருக்கும் ஐ.நாவில் அமைந்திருக்கும் இந்திய தூதரகத்தின் நிரந்தரப் பிரதிநிதியாக இந்தியா நியமித்ததை அடுத்து அமெரிக்கா அவருக்கு ராஜீய பாதுகாப்பு வழங்கியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

"குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் இருக்கும்" -அமெரிக்கா

தேவயானியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும் என்று அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

நியுயார்க்கில் இந்தியத் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே, அவரது இந்தியப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.

தனக்குத் தருவதாக அவர் விசா விண்ணப்பத்தில் ஒப்புக்கொண்ட ஊதியத்தைத் தரவில்லை என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், தேவயானியோ, சங்கீதா தன்னை மிரட்டியதாகவும், வீட்டில் இருந்த பொருட்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் கைது செய்யப்பட்டு,கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் ராஜீய நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தியா, அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வழங்கி வந்த பல சலுகைகளை விலக்கிக்கொண்டது.

அமெரிக்காவைக் கண்டிக்கிறார் கார்ல் இந்தர்பர்த்

ஆனால் இந்த ஒட்டுமொத்த விவகாரத்தை அமெரிக்கா கையாண்ட வித்த்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் முன்னர் தெற்காசியப் பிரிவின் துணைச் செயலராகப் பணிபுரிந்தவரான, கார்ல் இந்தர்பர்த் கண்டித்தார்.

"இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன ஆனால் என்னுடைய பார்வையில், இந்த விஷயத்தை அமெரிக்க அதிகாரிகள் மிகவும் மோசமாகவே கையாண்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன். ஆரம்பத்திலிருந்தே இதை சற்று மேலும் ராஜதந்திரத்துடனும் நாசுக்காகவும் கையாண்டிருக்கவேண்டும். தேவயானி கைது செய்யப்பட்டது, சிறை வைக்கப்பட்டது, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது ஆகிய எல்லாமே, ஒட்டுமொத்த ராஜிய நடத்தைக்கான எல்லா அளவுகோல்களுக்கும் எதிராக இருக்கிறது. இந்த விஷயம் கையாளப்பட்ட விதம் குறித்து இந்தியர்கள் மிகவும் கோபமடைவதற்கு எல்லாக் காரணங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறேன்", என்றார் கார்ல் இந்தர்பர்த்

 

மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த விஷயத்தைக் கையாண்ட விதம் குறித்து வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்தது ஒரு உதவிகரமான விஷயம் . ஆனால் தேவயானி கோபர்கடேயிடமும் அமெரிக்கா மன்னிப்பு கோரவேண்டியிருக்கிறது என்றார். இதைத் தாண்டி இரு நாடுகளும் இந்தத் துரதிருஷ்டவசமான சம்பவத்துக்கு இட்டுச் சென்ற அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது முக்கியம்,என்றார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140110_devyanileaves.shtml

Share this post


Link to post
Share on other sites

தொடரட்டும் மகாபாரதம் ....................

Share this post


Link to post
Share on other sites
கீழுள்ள செய்தி இந்த தேவாயனை குடும்பம் ஒரு ஊழல் பேர்வழிகள் என்பதை கூறுகின்றது. இவள் இந்த பதவிக்கு வந்ததே பின்காதாவால் தான் என செய்தி சொல்கின்றது. சோழியன் குடுமி சும்மா ஆடாது 
 
 
Adarsh housing, BEST buses, IFS recruitment: Khobragades' controversial past
HT Correspondent , Hindustan Times  Mumbai, January 10, 2014
First Published: 23:48 IST(10/1/2014) | Last Updated: 00:04 IST(11/1/2014)
 
Long before the row over the maid erupted in the US, the Khobragde family had courted controversy. From her recruitment in the elite Indian Foreign Service (IFS) to the Adarsh housing scam, both Devyani Khobragade and her father Uttam Khobragade had weathered several storms.
 
As early as in December, when Devyani fought the US agencies, a judicial panel probing into Adarsh housing scam decided she was ineligible to get a flat in the controversial society.
 
Questioning the legality of the financial transactions, the panel said the diplomat owned another flat in Mumbai when she applied for a flat in Adarsh. Her father has rejected the findings.
 
Khobragade senior’s role in the Adarsh scam too, had come under scanner. He was the general manager of the Brihanmumbai Electric Supply and Transport (BEST) undertaking when floor space index (FSI) of a neighboring BEST bus depot was transferred to the society for R6 crore.
 
The FSI indicates total construction area that could be built on legally over a land of a particular size. Since Adarsh did not have much FSI left to build more floors and accommodate extra members, it had asked to buy the FSI of BEST depot. The proposal was expedited at all government levels.
 
Khobragade also courted a controversy over the purchase of air-conditioned buses for BEST.
 
The buses, which were touted as a famous Chinese brand, King Long, turned out to be built by a manufacturer near Chandigarh. Though some King Long spares were used, the buses continue to be under scanner for developing snags frequently and causing further losses to the loss-making civic undertaking.
 
Devyani’s recruitment in the IFS came under the shadow when her batchmate Mahaveer V Singhvi alleged that the rules for allotment of foreign language on basis of IFS officers’ ranks was changed for her batch (1999), to ensure she got her chosen language, German.
 
Singhvi alleged that despite being graded higher than five other candidates in the shortlist of 10, he was not allowed to pick the language of his choice. And this, he said, was solely in order to accommodate Devyani, who was two places below him.
 
Singhvi, who was dismissed from the service, moved court and got the Supreme Court to order his reinstatement.
 

Share this post


Link to post
Share on other sites

தேவயானியை மீண்டும் கைது செய்வோம்: அமெரிக்கா எச்சரிக்கை

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்தவர் தேவயானி கோபர்கடே. இவர் மீது விசா மோசடி மற்றும் பணிப்பெண் சம்பள மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அமெரிக்க போலீசார் கடந்த டிசம்பர் மாதம் 12–ந்தேதி கைது செய்தனர்.

ஜாமீனில் விடுதலையான அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரை பாதுகாக்க இந்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே தேவயானியை துணைத் தூதர் பெறுப்பில் இருந்து நீக்குமாறு அமெரிக்கா விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்து விட்டது. இதனால் தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டது.

இதையடுத்து அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்ட தேவயானி நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவரை தந்தை கோபர்கடே மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர். டெல்லியில் அவர் மராட்டிய பவன் இல்லத்தில் தங்கினார்.

நாடு திரும்பிய தேவயானிக்கு டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் புதிய பணியை ஏற்க உள்ளார். தேவயானி டெல்லி திரும்பினாலும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் படிப்பதால் அவர்களும் குடும்பத்தினரும் தொடர்ந்து நியூயார்க்கில் தங்கியுள்ளனர்.

அவர் டெல்லி புறப்படும் முன் கடைசி நடவடிக்கையாக மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

டெல்லி திரும்பிய தேவயானி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும் போது, ‘எனக்காக குரல் கொடுத்து ஆதரவு அளித்த மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.

தேவயானி துணை தூதர் அந்தஸ்தில் தொடர்ந்து இருப்பதால் அவருக்கான சட்ட பாதுகாப்பு அமலில் உள்ளது. இதனால் அவர் வழக்கு விசாரணையை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. இதனால் அவரால் இந்தியாவுக்கு திரும்பி வர முடிந்துள்ளது.

தேவயானி விவகாரத்தில் பதில் நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தேவயானி நீண்ட நாள் விதிவிலக்கில் இருக்க முடியாது. அவரை மீண்டும் கைது செய்வோம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது:–

தேவயானி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால் இனி அவருக்கு தூதரக முறையிலான சட்டப்பாது காப்பு இல்லை. அமெரிக்காவில் இருந்து அவர் புறப்படும் முன்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் மீண்டும் அமெரிக்கா திரும்ப அனுமதி வழங்கப்பட மாட்டாது. இந்த தகவலை அவருக்கும் இந்திய அரசுக்கும் தெரியப்படுத்தி விட்டோம்.

தேவயானியின் பெயர் இனிமேல் அமெரிக்க விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளில் தேடப்படும் நபரின் பட்டியலில் இடம் பெறும். எனவே அவர் நீண்ட நாட்களுக்கு தூதருக்கான விதிவிலக்கை அனுபவிக்க முடியாது. அவரை மீண்டும் கைது செய்வதற்கான வாரண்டு பிறப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.maalaimalar.com/2014/01/11132314/america-warning-Let-devyani-ar.html

Share this post


Link to post
Share on other sites

தேவயானியை மீண்டும் கைது செய்தால் திரும்பவும் துகிலுரிவார்கள்.. :huh: ஆகவே இனிமேல் அமெரிக்காவின் பக்கம் தலைவைக்கமாட்டா என நினைக்கிறேன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற இந்தியா வலியுறுத்தல்

 

துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கை வாபஸ் பெறுமாறு அமெரிக்காவை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டுக்கு விசா வாங்கியதில் மோசடி மற்றும் தவறான தகவல்களைக் கூறியது ஆகிய புகார்களின் பேரில் தேவயானியை நியூயார்க் போலீஸார் கடந்த மாதம் 12ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தேவயானி மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்ற நடுவர்கள் குழு முறைப்படி ஏற்றுக் கொண்டு, பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா திரும்பினார்.

சல்மான் குர்ஷித்துடன் சந்திப்பு:

 

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோரை தேவயானி சனிக்கிழமை தில்லியில் சந்தித்துப் பேசினார். அவர்களிடம் தனக்கு ஏற்பட்ட துன்பம் குறித்து அவர் எடுத்துக் கூறினார். மேலும், அவர்கள் அளித்த ஆதரவுக்காக தேவயானி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, சல்மான் குர்ஷித் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தேவயானி மீதான வழக்கை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்து, பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

அமெரிக்க அரசு குற்றம்சாட்டியுள்ளதைப் போல் தேவயானி கோப்ரகடே எந்தத் தவறும் இழைக்கவில்லை. அவர் மீதான விசா மோசடி வழக்குகளைத் திரும்பப்பெறுமாறு இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும். இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கும் வகையில் இந்த விவகாரத்தை முடிப்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தேவயானி விவகாரமானது ஒரு சிறிய நெருக்கடியாகும். தில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியா கேட்டுக் கொண்டதும், தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புச் சலுகைகள் பறிக்கப்பட்டதும் சரியான நடவடிக்கைகள்தான். இது பதிலடி அல்ல. இது பொருத்தமான பதில் நடவடிக்கைதான்.

அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கு சிறப்புச் சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மாட்டோம். இந்தியா ஒரு நாட்டுக்கு அதிகமாகவும், மற்றொரு நாட்டுக்கு குறைவாகவும் சலுகை காட்டுகிறது என்று யாரும் நினைக்கக் கூடாது என்றார் குர்ஷித்.

வெளியேறும் அமெரிக்க அதிகாரி: தேவயானியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக அமெரிக்கத் தூதரக அதிகாரி வேய்ன் மே என்பவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அவருக்கு 48 மணிநேரம் அவகாசம் தரப்பட்டுள்ளது. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகி வருகிறார்.
 

http://www.dinamani.com/india/2014/01/12/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA/article1995616.ece

Share this post


Link to post
Share on other sites

தேவயானி- சங்கீதா ஒப்பந்தம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல்

 

இந்திய துணைத் தூதர் தேவயானிக்கும், அவரது பணிப்பெண் சங்கீதாவுக்கும் இடையேயான இரண்டு ஒப்பந்தங்கள் நியூயார்க் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேவயானி மீது விசா மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள், நியூயார்க் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போது தேவயானிக்கும், சங்கீதாவுக்கும் இடையே ஊதியம் தொடர்பான ஒப்பந்தங்களின் நகல்களை, இந்த வழக்கிற்கான ஆதாரமாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இருவருக்கும் இடையே 2012-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க சட்டத்தின்படி ஒரு மணி நேரத்துக்கு 9.75 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.599) சங்கீதாவுக்கு அளிக்கப்படும். வாரத்துக்கு 40 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்றும், ஞாயிறு விடுமுறையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தைத்தான், விசா பெறுவதற்கான நேர்காணலின்போது அமெரிக்க அதிகாரிகளிடம் தேவயானியின் அறிவுறுத்தலின்படி சங்கீதா காட்டியுள்ளார்.

2012-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஏற் படுத்தப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் சங் கீதாவுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் அளிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் பணிபுரிந்தால் கூடுதலாக ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டிப் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா, “அமெரிக்க சட்டப்படி தர வேண்டிய ஒரு மணி நேரத்துக்கு 9.75 டாலர் ஊதியத்தை வழங்க தேவயானிக்கு விருப்பமேயில்லை. அதன் காரணமாகத்தான் குறைவான ஊதியத்தில் தனியாக ஓர் ஒப்பந்தத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆனால், மாதம் ரூ. 30 ஆயிரம் ஊதியம் என்று உண்மையைக் கூறினால் சங்கீதாவுக்கு விசா கிடைக்காது என்பதால், ஒரு மணி நேரத்துக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.599) என்ற பொய்யான தகவலை தேவயானி அளித்துள்ளார்” என்றார்.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article5567980.ece

Share this post


Link to post
Share on other sites

-------

ஆனால், மாதம் ரூ. 30 ஆயிரம் ஊதியம் என்று உண்மையைக் கூறினால் சங்கீதாவுக்கு விசா கிடைக்காது என்பதால், ஒரு மணி நேரத்துக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.599) என்ற பொய்யான தகவலை தேவயானி அளித்துள்ளார்” என்றார்.

 

தேவயானி வீட்டு வேலைகளைச் செய்ய... வேலைக்காரியை நியமிக்காமல்,

எமது ஆட்கள் செய்வது போல்... ஊரில் உள்ள தனது தாய் தகப்பனையோ, கணவரின் தாய் தகப்பனையோ கூப்பிட்டு தன்னுடன் வைத்திருந்திருந்தால் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிராது. :D

Share this post


Link to post
Share on other sites

தேவயானி வீட்டு வேலைகளைச் செய்ய... வேலைக்காரியை நியமிக்காமல்,

எமது ஆட்கள் செய்வது போல்... ஊரில் உள்ள தனது தாய் தகப்பனையோ, கணவரின் தாய் தகப்பனையோ கூப்பிட்டு தன்னுடன் வைத்திருந்திருந்தால் இவ்வளவு சிக்கல் ஏற்பட்டிராது. :D

அவர்கள் அங்கே இந்தியாவில் ஊழல் செய்வதில் சரியான பிஸி. கோேடியாக சுருட்டுவதை விட்டிட்டு 9 டாலருக்கு வருவீனமே?

Share this post


Link to post
Share on other sites

"ஷப்பா" இந்த திரி தேவயானி கிழவியாப் போனபின்பும் போகும் போலை கிடக்கு. :D

அவ விட்டா தானே. :) 

 

நேற்று தன்னுடைய குச்சுகளை எப்ப பாக்க முடியுமோ என்று பத்திரிகைக்கு செய்தி விட்ட. பிறகு சவுத் ப்லாக் போய் தனக்கு நடந்தது என்னே என்று சொன்னதாக சொன்னா.அவ புளுடாவை தொடரும் வரையில் இதுவும் போகும் 

Share this post


Link to post
Share on other sites

"ஷப்பா" இந்த திரி தேவயானி கிழவியாப் போனபின்பும் போகும் போலை கிடக்கு. :D

சில வழக்குகள் செத்தாலும் முடியாது.

"ஷப்பா" இந்த திரி தேவயானி கிழவியாப் போனபின்பும் போகும் போலை கிடக்கு. :D

 

சில வழக்குகள் செத்தாலும் முடியாது..  :)

Share this post


Link to post
Share on other sites