Jump to content

பெளத்தம் தமிழைக் கட்டிகாத்ததா ??


Recommended Posts

தமிழ் சிறப்புற்றது சமணர் காலத்தில் தான் விரிவாக எழுத நேரம் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

புங்கை இந்துமதம் கடல் போன்றது எல்லாராலும் இந்துமதத்தில் உள்ள  எல்லாவற்றையும் தெரிந்து தான் கதைக்க வேண்டும் என்றால் முடியாது...இந்து மதத்தில் எங்கே சொல்லி இருக்கு மாமிசம் உண்ந கூடாது என்று? இந்து மதத்தை பற்றி எல்லாம் தெரிந்த நீர் கூறும்...

 

நான் கூறுவது ஒன்று தான்...உமக்கு இந்து மதத்தை பிடிக்கவில்லை என்றால்... நீர் அதிலிருந்து விலகி வேறு எதையும் பின்பற்றலாம்..காரணம் அதன் பின் இந்துமதம் உம் பின்னால் வரப்போவதில்லை... விலகிய நீர் அதை பற்றி ஏன் புறம் கூறுகிறீர்?

அதுவும் மதவியாபரிகளின் கதைகளை கூறிக்கொண்டு? இந்துமதத்தை தாக்குபவர்கள் ஒரே கூட்டத்தினரே மதவியாபாரிகள்...ஆள் பிடிப்புக்காக.... இந்துமத்திலிருந்து விலகிய நீர் உமது புதிய மதத்தை தூக்கி பிடிக்கலாம்....ஆனால் இந்து சமயத்தில் இது பிழை அது பிழை என்று நொண்டி சாக்குகள் சொல்ல வேண்டாம்...

 

இந்துமதம் என்றால் சத்தியசாயிபாபா/காஞ்சி விஜயேந்திரன் மட்டும் அல்ல.....வள்ளலார், பட்டினத்தார், கிருபானந்தவாரியார் தான் எங்களின் வழிகாட்டிகள்....அவர்கள் கூறியதை வாசித்தீரா? இந்துமதம் சுதந்திரமான மதம் என்றபடியால் கண்ட கழிசடைகளும் ஏதும் அதைபற்றி கூற முடியும்....

கோமகன் இங்கு பதிந்த கட்டுரை இந்தியாவில் இந்து மதத்தை தாக்கும் சிலர் எழுதும் கட்டுரை (ஏனென்றால் அந்த கட்டுரையை வாசியுங்கள் பௌத்தம் என்று தொடங்கி பின் ஜைனர்களில் தொங்கி கொண்டு செல்லுகிறார்கள்)...கம்பராமாயணம், தேவாரங்கள் எப்படி தமிழில் இனிமையாக உள்ளதோ அதே போல் தான் சமணர்களின் காப்பியங்களும் தமிழில் எழுதியபடியால் இனிமை...அதற்காக பொத்தமும் சமணமும் தான் தமிழை காத்ததோ, வளர்த்ததோ அல்ல..... இப்போது இந்தியாவில் தமிழ் கிருத்துவகீதங்கள் எல்லாம் சிவபுராண சந்தங்களில் பாடுகிறார்கள் இன்னும் 20 ஆண்டில் சிவபுரானமே Jesuவை பற்றி தான் பாடுகிறது என்று சொல்லுவார்கள்...திருக்குறளுக்கு பௌத்தர், ஜைனர், கிருத்துவர்கள் இப்போதே அடிபட தொடங்கியது போல...இன்னும் முஸ்லீம் தான் தொடங்கவில்லை....அதுக்கும் நாள் தூரம் இல்லை..

 

பி.கு: எனக்கு தர்க்கம் செய்யும் அளவுக்கு இந்துமதத்தில் அறிவு இல்லை..எனது அறிவு எல்லாம் GCE O/L மற்றும் கதை புத்தகங்களே....எனது சமயம்...பெண்ணை எரி, பிள்ளையை பலி கொடு என்று சொல்லிதரவில்லை....நான் எனக்கு விரும்பியமாதிரி இருக்கலாம்...வீண் கட்டுபாடுகள், எனக்கு இல்லை...நான் கடவுளை உணர்வதாக யாருக்கும் நாடகமும் போட தேவையில்லை...

 

உமக்கு நடராஜரின் அர்த்தம் தெரியுமா? (எனக்கு தெரியாது  :) )

 

மெசொபொதேமியா சொன்ன மாதிரி ஒரு திரி திறந்து பௌத்தத்தில் உள்ள மேன்மைகளை எழுதும்...அது இந்து சமயத்தில் சொல்லவில்லையா என்பதை நாங்கள் தேடி பார்க்கிறோம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒரு மனிதனாக, சமூதாய விலங்ககாக வாழப்பழகுங்கள்!

 

கள விதிகளின் படி, இன்னொரு உறுப்பினரை ஒருமையில் விழிப்பது கள விதிகளுக்கு முரணானது! இதற்காகவே நான் விலத்திப்போய் இருக்கலாம்!

 

நான் மதம் மாறவில்லை! அதற்கான தேவையும் எனக்கில்லை!

 

நாவலன் கூட, வைதாலும் 'நல் தமிழாலேயே வைதவன்! :D

 

கொலை, களவு, கள், காமம், சூது இவற்றைப் பஞ்சமா பாதகங்கள் என்கிறது இந்து மதம்! இது அடிப்படை!

 

வள்ளுவனும் இதையே தான் சொல்கிறான்!

 

கொல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை,பிறன் மனை விழையாமை,சூது என்று விவரிக்கப்படுகின்றது!

 

இதுக்கு மேல் நான் எனது நேரத்தை விரயமாக்க விரும்பவில்லை!

 

அதே வேளை, மற்றவனைத் தாழ்த்தித் தன்னையுயர்த்திக்கொள்ளும் 'தந்திரமே' இந்து மத வாதிகளின் முக்கிய 'பலவீனம்" ! அதையே உங்கள் கருத்தும் சொல்லி நிற்கின்றது!

 

உங்கள் வளவு 'ஒரு காலத்தில்' சுத்தமாக இருந்தது! இப்போது, வளவு முழுவதும் குப்பை! அதைத் தான் துப்புரவாக்குங்கள் என்று கூறுகின்றேன்!

 

நடராச மூர்த்தத்தின் வடிவம்! 

 

;அகிலம்' இயங்கும் தத்துவம்! பஞ்ச பூதங்களின் தத்துவம்! அர்த்த நாரீஸ்வரம், உலகத்தில் எந்த மதத்துக்கும் இல்லாத தனித்துவம்! படைத்தல், காத்தல், அழித்தல், அருளல். மறைத்தல் ஆகிய ஐந்தொழில்களைப் புரியும் சிவ வடிவம்!

 

அத்துடன் சைவம் முடிந்து விடுகின்றது! :o

 

பிரமாவுக்கும், விஷுணுவுக்கும், படைத்தலையும், காத்தலையும் பகிர்ந்தழித்து, அழித்தலைச் சிவனுக்குப் பகிர்ந்தளித்த போதே, சைவம் தனது தனித்துவத்தை இழந்து, இந்து மதத்தினுள் அமிழத் தொடங்குகின்றது!

வேதங்களில் வருகின்ற 'உருத்திரன்' என்னும் புறம்போக்கு 'சிவனின்' இடத்தை எடுப்பதைக் கவனமாகக் கவனியுங்கள்!

 

உங்களிடம், இன்னொரு  சக சைவைனாக ஒரு வேண்டுகோள்!

 

சரியை, கிரியை என்பவற்றைத் தாண்டி, யோகம், ஞான நிலைகளைப் பற்றிச் சிந்தியுங்கள்! 

 

கர்மகாண்டத்தை தாண்டி, ஞான காண்டத்துக்கு வாருங்கள்!

 

சரியை வழி நடந்த நாவுக்கரசருக்கு முக்தி கிடக்க, அவருக்குத் தேவையாக இருந்தது ஒரு 'ஆயுட்காலம்"!  :lol:

 

ஞான வழி நடந்த சம்பந்தருக்கு முக்தி கிடைக்க எடுத்தது வெறும் மூன்றே வருடங்கள்! :D

 

இதே நான் சொல்லவில்லை, சொன்னது ' சைவ மதம்" ! :icon_idea:

 

மழித்தலும், நீட்டலும் வேண்டா,உலகம்

பழித்தது ஒழித்து விடின்! 

 

Shiva-shakti2.jpg

 

 

 

 

 

Link to comment
Share on other sites

புங்கை இந்துமதம் கடல் போன்றது எல்லாராலும் இந்துமதத்தில் உள்ள  எல்லாவற்றையும் தெரிந்து தான் கதைக்க வேண்டும் என்றால் முடியாது...இந்து மதத்தில் எங்கே சொல்லி இருக்கு மாமிசம் உண்ந கூடாது என்று? இந்து மதத்தை பற்றி எல்லாம் தெரிந்த நீர் கூறும்...

 

நான் கூறுவது ஒன்று தான்...உமக்கு இந்து மதத்தை பிடிக்கவில்லை என்றால்... நீர் அதிலிருந்து விலகி வேறு எதையும் பின்பற்றலாம்..காரணம் அதன் பின் இந்துமதம் உம் பின்னால் வரப்போவதில்லை... விலகிய நீர் அதை பற்றி ஏன் புறம் கூறுகிறீர்?

அதுவும் மதவியாபரிகளின் கதைகளை கூறிக்கொண்டு? இந்துமதத்தை தாக்குபவர்கள் ஒரே கூட்டத்தினரே மதவியாபாரிகள்...ஆள் பிடிப்புக்காக.... இந்துமத்திலிருந்து விலகிய நீர் உமது புதிய மதத்தை தூக்கி பிடிக்கலாம்....ஆனால் இந்து சமயத்தில் இது பிழை அது பிழை என்று நொண்டி சாக்குகள் சொல்ல வேண்டாம்...

 

இந்துமதம் என்றால் சத்தியசாயிபாபா/காஞ்சி விஜயேந்திரன் மட்டும் அல்ல.....வள்ளலார், பட்டினத்தார், கிருபானந்தவாரியார் தான் எங்களின் வழிகாட்டிகள்....அவர்கள் கூறியதை வாசித்தீரா? இந்துமதம் சுதந்திரமான மதம் என்றபடியால் கண்ட கழிசடைகளும் ஏதும் அதைபற்றி கூற முடியும்....

கோமகன் இங்கு பதிந்த கட்டுரை இந்தியாவில் இந்து மதத்தை தாக்கும் சிலர் எழுதும் கட்டுரை (ஏனென்றால் அந்த கட்டுரையை வாசியுங்கள் பௌத்தம் என்று தொடங்கி பின் ஜைனர்களில் தொங்கி கொண்டு செல்லுகிறார்கள்)...கம்பராமாயணம், தேவாரங்கள் எப்படி தமிழில் இனிமையாக உள்ளதோ அதே போல் தான் சமணர்களின் காப்பியங்களும் தமிழில் எழுதியபடியால் இனிமை...அதற்காக பொத்தமும் சமணமும் தான் தமிழை காத்ததோ, வளர்த்ததோ அல்ல..... இப்போது இந்தியாவில் தமிழ் கிருத்துவகீதங்கள் எல்லாம் சிவபுராண சந்தங்களில் பாடுகிறார்கள் இன்னும் 20 ஆண்டில் சிவபுரானமே Jesuவை பற்றி தான் பாடுகிறது என்று சொல்லுவார்கள்...திருக்குறளுக்கு பௌத்தர், ஜைனர், கிருத்துவர்கள் இப்போதே அடிபட தொடங்கியது போல...இன்னும் முஸ்லீம் தான் தொடங்கவில்லை....அதுக்கும் நாள் தூரம் இல்லை..

 

பி.கு: எனக்கு தர்க்கம் செய்யும் அளவுக்கு இந்துமதத்தில் அறிவு இல்லை..எனது அறிவு எல்லாம் GCE O/L மற்றும் கதை புத்தகங்களே....எனது சமயம்...பெண்ணை எரி, பிள்ளையை பலி கொடு என்று சொல்லிதரவில்லை....நான் எனக்கு விரும்பியமாதிரி இருக்கலாம்...வீண் கட்டுபாடுகள், எனக்கு இல்லை...நான் கடவுளை உணர்வதாக யாருக்கும் நாடகமும் போட தேவையில்லை...

 

உமக்கு நடராஜரின் அர்த்தம் தெரியுமா? (எனக்கு தெரியாது  :) )

 

மெசொபொதேமியா சொன்ன மாதிரி ஒரு திரி திறந்து பௌத்தத்தில் உள்ள மேன்மைகளை எழுதும்...அது இந்து சமயத்தில் சொல்லவில்லையா என்பதை நாங்கள் தேடி பார்க்கிறோம்...

 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்வது நாகரீகம்  :icon_mrgreen:  . என்னைப் பொறுத்தவரையில் எங்களுக்கு வந்த இந்த தொடர் சம்பந்தமாக வந்த கருத்தாடல் சந்தேகங்களுக்கு , யாழ் இணையத்தின் மூத்த உறுப்பினரும் சைவப் பெரியாரும் ,  ஞானப்பழமுமான ஆறுமுக நாவலர் ஐயா வந்து விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்  :wub:  :unsure:  .

 

Link to comment
Share on other sites

புங்கையூரான் நான் நினைத்தேன் நீங்கள் மதம் மாறி விட்டு தான் இந்து மதத்தை பழிதீர்கள் என்று.. ஆகவே தான் நீர் மதம் மாறியவர் என்கிற கருத்தில் பதிவிட்டேன்...எனது பதிவு உம்மை தனிப்பட மன வருத்தத்தை அளித்ததற்கு என்னை மன்னிக்கவும்...

 

ஆனால் மதம் மாறிவிட்டு இந்து மதத்தை தூற்றுபவரை நானும் தூற்றுவேன்.... நான் மேலே காஞ்சியையும்/ சத்தியசாயிபாவவையும் இழுத்ததற்குமுழு காரணமே எமது சமயத்தில் உள்ள சுதந்திரத்தால் யாரும் எவரையும் ஏமாற்ற முடியுமே என்று காட்ட தான்...இப்போதுள்ள (கள்ள)சாமிகளையும் கோயில் business களையும் மட்டும் வைத்து இது தான் இந்துமதம் என்று கூறவேண்டாம் என்பது தான் எனது வாதம்...

 மீண்டும்...உம்மை புன்படுதியதற்கு என்னை மன்னிக்கவும்...

Link to comment
Share on other sites

பௌத்த மதத்தின் தோற்றம் எப்போது என்று அறுதியிட்டுக் கூறக்கூடிய ஆதாரங்கள் உள்ளனவா??? நான் நினைக்கிறேன் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுள்த்தான் பௌத்த மதத்தின் தோற்றம் இருக்க வேண்டும்.

 

தமிழரின் மதம் ஆரியரின் வருகையின் பின்னரே இந்து மதமாக உருவெடுத்தது. அதன் பின்னரே வேள்விகள், யாகங்கள் என்பன  தோற்றுவிக்கப்பட்டன. தமிழர்கள் சைவர்களாகவே முன்பு இருந்துள்ளனர் என்பதும் அவர்களின் வழிபாட்டு முறைகளும் ஆரியத்தின் வருகையின்பின்னர் மறக்கடிக்கப் பட்டு விட்டது. இன்றுமட்டும் எமக்கென தனித்துவமான வழிபாட்டு முறையை நாம் கொண்டிருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

 

இந்து மதத்தின் நாயன்மார்கள் காலம் கி. பி பதின்மூன்றாம் நூற்றாண்டு தானே.

 

நல்லதொரு பதிவு கோமகன் தொடருங்கள்.

 

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுமேரியர்  .

 

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த அனைத்துக் கள  உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் :) :) .

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார் :

 

1. இளம் போதியார்.

 

இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ் மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி. பி. முதல், அல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் சங்க இலக்கியத்தில் 72-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:

 

‘பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை ! உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின் நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றால் தானே ! கொண்கன் யான்யாய் அஞ்சுவல் ! எனினும் தானே பிரிதல் சூழான் ; மன்னே ! இனியே, கானல் ஆயம் அறியினும், ஆனா தலர்வ தன்றுகொல் என்னும் ! அதனால், புலர்வது கொல்அவன் நட்(பு)எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே !’

2. அறவண அடிகள்.

 

இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக் கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்துவந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு, மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தர்மங் கேட்டுச் சீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் மனைவி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறை வீடுசெய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரசகுடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, அங்குச் சிலநாள் தங்கியபின், காஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமா நகரத்திலே நிர்வாணம் பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

 

இப்பொழுது காஞ்சீபுரத்தில், அறப்பணஞ்சேரி என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அது அறவணஞ்சேரி என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி ( சேரி=தெரு) என்று வழங்கப் பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள்.

 

அறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர்போலும். அறவண அடிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி. பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.
அறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாகக் கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகின்றது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை ரித்தி என்பர். ரித்தி எனினும் சித்தி எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில்மட்டுமன்று; இந்து மதத்திலும் சங்கராசாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றது. அதுகொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ? இவற்றை அவ்வச்சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.

 

3. மணிமேகலை.

 

யாம் அறிந்த வரையில், தமிழ் நாட்டுப் பௌத்தப் பிக்ஷணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் செல்வத்திற் சிறந்த கோவலன் என்பவனுக்கும் அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள் மணிமேகலை. இக்குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந்நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமாரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.

 

இவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமா நகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டிறந்தான். கோவலன் இறந்த கொடுஞ் செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்கு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக்கணிகை வாழ்க்கையில் புகுத்த அவளது பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் புக இசையவில்லை. அரசன் மகன் உதயகுமாரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணி கோலத்தை விட்டுவிடும் படி வேண்டினான். மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அது முதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கிவந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கச் சொன்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்கவேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.

 

காயசண்டிகை என்பவள் ஒருத்தி வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் அந்நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதயகுமாரன் சொல்லாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டுவிடும்படி கூறிக்கொண்டிருந்தாள். காயசண்டிகையைத் தேடிக்கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு, அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னொரு ஆடவனோடு பேசுவதைக் கண்டு பொறானாய்,. உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகுமாரன் மணிமேகலையை விட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையால் தன் மனைவி என்று தவறாகக் கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன் இரவில் வந்த உதயகுமாரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதயகுமாரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.
தவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைப் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து, மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமாதேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக்கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக்கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.

 

பின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறைகூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடை பெற்றுச் சாவகநாடு சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்த சேர நாட்டின் தலைநகரமான வஞ்சிமா நகர் சென்று, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சிமா நகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடு நாள் நோற்று, கடைசியில் அவ்வூரிலேயே காலமானாள்.

 

மணிமேகலையின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.

 

மணிமேகலை வரலாற்றிலும், பௌத்தமதக் கொள்கைப்படி, வானத்தில் பறந்து செல்லுதல், அமுத சுரபி என்னும் சிறு பாத்திரத்தினின்றும் நினைத்த போதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல் முதலிய ரித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக்கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.

 

காஞ்சீபுரத்துக்கு அருகில், மணிமேகலை அம்மன் கோயில் ஒன்று இருக்கிறதாகத் தெரிகின்றது. மணிமேகலைக் காவியத்தில் கூறப்படும் மணிமேகலை காஞ்சீபுரத்தில் உயிர் நீத்ததாகக் கூறப்படுவதிலிருந்தும், காஞ்சீபுரத்தில் இப்போது மணிமேகலை அம்மன் கோயில் இருப்பதிலிருந்தும், இரண்டுக்கும் தொடர்புண்டாயிருக்கக் கூடுமோ என்கிற ஐயம் உண்டாகிறது. மணிமேகலை என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்றுண்டு.

 

(தொடரும்)

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சங்க மித்திரரைக் கொன்ற இலங்கை மன்னன்!

 

 

450px-srilanka_buddhiststatue_pixinn_net

இலங்கையிலுள்ள பழமையான புத்தரின் சிற்பம்

 

4. சீத்தலைச் சாத்தனார்.

 

இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகின்றது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் சாத்தன் என்று வழங்குகின்றது. சீத்தலை என்னும் அடை மொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையர் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக் கொள்ள, அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் சீத்தலை என்னும் அடை மொழி கொடுக்கப் பட்டதென்று கூறுவார் கூற்று பொருத்தமாகத் தோன்றுகின்றது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகம் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர். சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய சாத்தன் என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை.

சாத்தன் என்னும் பெயர் தமிழ் நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில்மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நமது சாத்தனாருக்கும் அவ்வாறே சீத்தலை, மதுரைக் கூலவாணிகர் என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார். எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல்வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ் நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல் நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில், புகார், மதுரை, வஞ்சி, காஞ்சீபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று நன்கு தெரிய வருகின்றது. சேர நாட்டினை அரசாண்டிருந்த செங்குட்டுவனுக்கும், அவனது தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில்தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன். கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான்; இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார்.

 

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகிய மணிமேகலை என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார். மணிமேகலையை இயற்றியதுமன்றி, வேறுசில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.

 

சங்கநூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மேற்படிச் செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவதுகொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ? ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச்சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காகமட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது.

 

தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்கு மட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லா மக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே, பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது. இவர் தாம் இயற்றிய மணிமேகலையில்,

 

 ’ தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேறாய் ‘ 

 

என்று திருக்குறளை மேற்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. மணிமேகலை நூலின் காலம் என்னும் தொடர்புரை காண்க.

 

5. சங்க மித்திரர்.

 

இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழ நாட்டில் வாழ்ந்திருந்த காலத்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேகவர்ணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டுவந்தான். இந்த அரசன் கி. பி. 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில், இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால், அவர்களை அரசன் அக்கரைக்கு, அதாவது தமிழ் நாட்டில், நாடு கடத்தி விட்டான். இலங்கை மன்னன் ஈனயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவன், ஆகையால், மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தைத் தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப்பிக்ஷக்களைத் தமிழ் நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

இவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர் தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்க மித்திரரையும் ஈனயான பிக்ஷக்களின் தலைவரான சங்கபாலர் என்பவரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றிபெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது.

 

வாதத்தில் தமிழரான சங்க மித்திரரே வெற்றி பெற்றார். இலங்கை வேந்தன் சங்கமித்திரரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றி, தமது பிள்ளைகளான ஜேத்த திஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர்,. இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், மூத்தவனான ஜேத்த திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டிவந்தான். இவர் அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக்கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.

 

இவ்வாறிருக்க, மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமை மூத்த மகனான ஜேத்த திஸ்ஸன் ஏற்று, அரசு கட்டில் ஏறினான். ஏறினவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்க மித்திரர் தமது மாணவனான இவன் ஏற்கனவே தம்மிடம் பகைமை பாராட்டிவந்தவனாதலின், தம்மையும் கொன்றுவிடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார். பிறகு, பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழிந்த பின்னர், ஜேத்த திஸ்ஸன் இறந்து விட்டான். அப்போது அரசுரிமையை இவரது அன்புக்குரிய மாணவனான மகாசேனன் மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் சிங்களநாடு சென்று, தமது மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயே முடி சூட்டினார். அதுமுதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.

 

மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் வாழும் ஈனயான பிக்ஷக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்கவில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்லைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷக்களுக்கு நகர மக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக்கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷக்கள் உண்ண உணவு கிடைக்கப்பெறாமல் நகரத்தை விட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய் விட்டார்கள். போய்விடவே, மகாவிகாரைப்பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அது அரசனுக்குரிய பொருளாய் விட்டது என்று சங்க மித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்க மித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷக்கள் வாழும் அபயகிரி விகாரையைப் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றையெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி – அவனால் அதிகமாகக் காதலிக்கப்பட்டவள் – இலங்கைத் தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்க மித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த மந்திரி சோணனையும் கொன்றுவிடும்படி சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலை செய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36, 37 -ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

சங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன் வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக் கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி. பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவரென்று அறிகிறோம்.

 

சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச்செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச்செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகா வம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார். (Tamilian Antiquary Vol I. No. 4. P. 54.). இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை மாணிக்கவாசகர் சைவமதத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்கக்கூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்கவாசகரைப் புத்தபிக்ஷ சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். (The Early History of India : Page 246-7, Third Edition : V.A. Smith.)

 

இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கொள்கை. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனை சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சங்க மித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கோ. வரலாறுகள் திரிக்கப்பட்டும் மறைக்கப்படுவதும்தானே உலக வரலாறு

 

Link to comment
Share on other sites

இந்த முறையில் இவர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டு தமிழர்களால் மறக்கற் பாலதன்று. அன்றியும், சிறுவர்களின் கல்வியைப்பற்றியும் இவர்கள் கருத்தினைச் செலுத்தி,. அவர்களுக்குத் தாய் மொழியை எழுதப் படிக்கக் கற்பித்துவந்தார்கள். நாம் இப்பொழுது வழங்குகிற பள்ளிக்கூடம் என்னும் சொல்லே, இவர்கள் கல்வியைப் பரப்புவதற்காகச் செய்துவந்த முயற்சியை இனிது விளக்குகின்றது.

 

இந்த புத்தகத்தின் நோக்கம் பௌத்தத்தின் தமிழ்க்கான தொண்டை சொல்லவருவது என்று நூல் ஆசிரியரே உண்மையை கூறித்தான் ஆரம்பிக்கிறார். ஒருவர் சைவத்தின், வைணவத்தின் தமிழுக்காண தொண்டு பற்றி புதகம் எழுத வேண்டிய தேவை இல்லை.  தமிழுக்கு செம்மொழி பட்டம் கிடைத்தது சங்கால கவிதைகள், தேவார திவ்விய பிரபந்தங்கள் போன்றவற்றால் மட்டுமே. வடகே இருந்து கோண்டுவந்த எந்த நூலும் இவற்றில் கணிக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தழுவல்கள், மொழி பெயர்ப்புகள் செம்மொழி தரத்துக்கு கணிக்கப்பட மாட்டா. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தியின் சரித்திரம் காணத மொழி பெய்ர்ப்புகள் ஒன்றும் இதற்கு துணை வரவில்லை. 

 

யாழில் இன்னொரு பதிவில்(ஆத்தித இளம்பிறையனது) சமணம் என்ற சொல்லுக்கு பல விளகங்கள் கொடுக்கப்பட்டிருகிறது. இதில் சொல்லும் விளகங்கள் அதற்கு முரணானவை. 

 

சங்க காலத்தில் பள்ளிகள் இருந்த மாதிரி தெரியவில்லை. பள்ளிகள் சமஸ்கிருதம், பாளியை மட்டும் வளர்த்தால்தான் தமிழ் சொல் பள்ளிகளுக்குவராமல் அந்த மொழி சொல் ஏற்கப்பட்டது. பெண்கள் கல்வி இழந்தது சங்கால கல்வி முறை மாறி இந்த அடக்கு முறை மத வெறிப்பள்ளிகள் வந்ததால் மட்டுமே.  முதல் முதல் தமிழ் நாட்டுக்குள் ஆரிய அடக்குமுறை சமையங்கள் இந்த அதிகார திமிர் பிடித்த ஆரியத் துறவிகளால்த்தான் கொண்டுவரப்பட்டது.

 

இளங்கோ, திருவள்ளுவர், திருநாவுக்கரசை போன்ற மிகப்பெரிய கவிஞர்கள் கடத்தப்பட்ட பிள்ளைகள் என்பத்தால் தமது சமையங்களை பற்றி அவர்கள் பாடவில்லை. இளங்கோ மெல்லமாய் கைவிட்டார். வள்ளுவர் சமயவாதங்களை எதிர்த்தார். சமையம் எல்லாம் ஒன்றே, கடவுள் ஒன்றே, அந்தணன் என்பவன் அருளுடையவனே என்று வரைவிலக்கணபடுத்தினார். ஆனால் பிக்குவையோ, சமணக்குருவையோ படித்தவன் என்றோ, பண்பானவன் என்றோ, இரக்கம் உள்ளவன் என்றோ சொல்லவே இல்லை. அவர் படித்திருக்க கூடிய புத்த, சமண மதங்களை முற்றாக தனது நூலில் ஒதுக்கிவிட்டர்.(சைவத்தையும் சமய குரவர் மாதிரி தூக்கிப்பிடிக்கவில்லை என்பதும் உண்மை. கடவுளைப்பறித்தான் கவலைப்பட்டார்) திருநாவுக்கரசர்(பிராமணன் அல்லாதவர்) தனது சமண சமையத்தின் அதிகார வெறியை உயிரை கொடுத்து எதிர்த்தார். சம்பந்தர் இளைஞன் என்ற முறையில் தந்திரங்களுக்குள் மாட்டுப்பட்டு, அடிதொடியோடு மணபந்தலில் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டார்.  அந்த மதங்களை பின்பற்றி போனவர்கள் அந்த மதங்களின் குரூரங்களை எழுதுவைத்துவிட்டு போக மிககெட்டு அத்ற்கு வெள்ளை அடிப்பது இங்கே சில மாற்றுக்கருத்துகள் மகிந்தாவுக்கு வெள்ளை அடிப்பது போன்றது. 

 

புதமும் சமணயம் சங்ககாலத்தில் கள்ளுக்கொடிகள் எல்லாம் பாடப்பட்ட சங்க கவிதைகளை, திருக்குறள், நாலடியார் போன்ற நீதி நூலகளாக மாற்றி தமிழ் கல்வியை பொதுமக்கள் கைகளில் இருந்து எடுத்து பள்ளிகளுக்குள் அடைததுதான் செய்த வேலை. (இது வெள்ளைக்காரர் ஆட்சி வரும் வரை நீடித்தது) இதில் பழை சங்கால குருகுல முறைப்படி எல்ல சிறுவர்களும் ஒரு குருவை தேடி படித்து பின்னர் வாழ்வில் இறங்குவது என்ற முறை ஒழிந்ட்து, ஒழிந்து பள்ளி முறை முக்கியதுவம் பெற்றது. இதனால் சமண புத்த மாண்வர்களை தவிர மற்ற்வர்கள் படிப்பது தடுக்கப்பட்டது. சங்க காலத்தில் தொல்காபியயரின் வகுப்பில் காக்கை பாடினியரும் இன்னொரு பெண்ணும் தொல்காபியருடன் இலக்கணம் பயின்றிருக்கிறார்கள்.  பெண்கல் ஆண்களுக்கு சமனாக கவிதைகள் பாடி அளித்திருக்கிறார்கள். இதைக் கெடுத்த பின்னர் 1300 வருடங்கள் கழிந்து குலோத்துங்கன் சபையில்தான் ஒரு பெண் புலவர் இலக்கணம் பயின்றவராக காணப்படுகிறார்.

 

புங்கையூரான் நிறைய இந்து மத எதிர்ப்பு எழுதுவது உண்மைதான். ஆனால் அவர் செய்வதெல்லாம் புராணமத எதிர்ப்பே. அதற்கும் வைவத்திற்கும் தொர்பு கிடையாது. புராணமதம் வட இந்திய மதம். சைவம் தென்னிந்திய மதம்.  இதைதான் புத்தரும் மகாவீரரும் வடக்கில் செய்தார்கள்.(அங்கே தேவை இருந்தது) ஆனால் பின்பற்றியவர் சைவ மததைதைவிட கொடூரமாக நடந்தார்கள். இவர்களால் தேர்கிற்கு கொண்டுவரப்பட்ட இந்த ஆரிய துறவு வெறிச் சமையங்கள், வடக்கிலிருந்து கொண்டுவரப்பட்ட களுவேற்றலின் மூலம் நிறைவேற்றப்பட்டது.  சிந்து வெளியில் இருந்த குலப்பிரிவை புராண மதப் பிராமணர் சாதியாக்கினார்கள். புராண மதம் புத்தருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளி அழியும் போது ஆரம்பமானது. ஆனால் உண்மையான கொடுமைகளும், கதைகளும் இன்றிலிருந்து 2000 வருடங்களுக்கு முனனர் வந்தவைதான்.  மதக் கொடுமை என்பது ஆரியக் குணமேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. இது இன்றும் கூட வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் இருக்கும் சமய முரண்பாடுகளை வைத்து தெளிவாக விளங்க்கிக்கொள்ளலாம். 

 

புத்தமும் , சமணமும் உலகின் எந்த கோடியிலும் காணாத வளமான கல்விமுறையாக சங்காலத்தில் இருந்த தமிழை அழித்து, பெண்களை புற்க்கணித்து, மதம் மாறும் ஆண்துறவிகளுக்கான கல்விமுறையையும், சமஸ்கிருதம், பாளி இரண்டையும் திணித்ததுதான் உண்மை.

 

 

Link to comment
Share on other sites

போதி தருமரின் உண்மையான வரலாறு!

 

dscn0365.jpg?w=496

 

6. நாதகுத்தனார்

 

இப்பெயர் நாதகுப்தனார் என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 -ஆம் பாட்டின்) உரையில், புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்டவினைய வுடம்பு என்னும் அடியை மேற்கோள் காட்டி, இதனை நாதகுத்தனார் வாக்கு என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது.
நாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. குண்டலகேசி என்னும் பௌத்த பிக்குணி ஒருத்தி, வடநாட்டில் இருந்த ஆவணம் என்னும் ஊரில் நாதகுத்தனார் என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசியின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.

நீலகேசி என்னும் ஜைனநூல் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல்வேண்டும். ஏனென்றால், குண்டலகேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல்வேண்டும்.

 

7. புத்ததத்த தேரர்

 

இவர் சோழநாட்டவர். இலங்கையில் அநுராதபுரத்திலிருந்த மகாவிகாரையில் இவர் சிலகாலம் தங்கியிருந்தார். பின்னர், கவீரபட்டினம் (காவிரிப்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சீபுரம் முதலான ஊர்களில் வாழ்ந்துவந்தார். தாம் பிறந்த சோழ நாட்டினைத் தமது நூல்களில் பாராட்டிக் கூறியிருக்கின்றார். காவிரிப்பூம்பட்டினம் துறைமுகப்பட்டினமென்றும், செல்வத் தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடமென்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கியிருந்த பௌத்தப்பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பட்டுப் பெரியவாயில்களை உடையதென்றும், பள்ளிக்கட்டிடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல் வெண்ணிறமாக விளங்குமென்றும் அபிதம்மாவதாரம் என்னும் நூலில் இவர் எழுதியிருக்கின்றார்.

 

காவிரிப்பூம்பட்டினத்துப் பௌத்தப்பள்ளியில் இருந்த போது, தமது மாணவராகிய புத்த சீகா என்பவர் வேண்டுகோளின்படி புத்தவம்சாத்தகாதை என்னும் நூலையும், சுமதி என்பவர் வேண்டுகோளின்படி, அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் இயற்றினார். சோழநாட்டுப் பூதமங்கலம் என்னும் ஊரில் கண்ண தாசர், அல்லது வேணுதாசர் (இவர் வைணவராக இருந்து பின்னர்ப் பௌத்தர் ஆனார் போலும்) என்பவாரல் கட்டப்பட்ட பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்தபோது, இவர் வினய வினிச்சயம் என்னும் நூலைப் புத்த சீகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். அன்றியும், இலங்கையில் வாழ்ந்திருந்த மகாதேரர் சங்கபாலர் என்பவர் வேண்டுகோளின்படி, உத்தர வினிச்சயம் என்னும் நூலினைச் செய்தார். அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்கு மதுராத்த விலாசினீ என்னும் உரையையும், ரூபாரூப விபாகம், ஜினாலங்காரம் என்னும் நூல்களையும் இயற்றியிருக்கின்றார். இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள பௌத்தர்களால் இவர் மிகவும் போற்றப்படுபவர்.

 

பேர்பெற்ற புத்த கோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமார குப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவராகையாலும், சோழ நாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுத விக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் மேற்படி குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர்.

 

8. போதிதருமர்

 

இவர் காஞ்சீபுரத்தை அரசாண்ட ஓர் அரசனுடைய குமாரர். இவர் தியான மார்க்கம் என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று, அங்குத் தமது கொள்கையைப் போதித்துவந்தார். இவரது கொள்கை சங்கரரின் அத்வைதமதக் கொள்கையைப் போன்றது. இவர் கி. பி. 520 -இல் சீன தேசத்துக் காண்டன் பட்டினத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். வேறு சிலர் கி. பி. 525 -இல் சீனதேசம் சென்றதாகக் கூறுவர். அக்காலத்தில் சீனதேசத்தை ஆண்டுவந்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ-டி (Wu Ti) என்னும் அரசன் அவைக்களத்தில் இவர் தமது தியான மார்க்கத்தைப் போதித்தார். இந்த அரசன் கி. பி. 502 முதல் 549 வரை அரசாண்டவன். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். பின்னர், இந்த அரசனுக்கும் இவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, சீனதேசத்தின் வடபகுதியிற் சென்று இவர் தமது கொள்கையைப் பரப்பியதாகக் கூறுவர். இவருக்குப் பிறகு, இவர் போதித்த மதம் சீன தேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சிறப்புற்றது. இவரது தியான மார்க்கத்துக்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch an) மதம் என்றும் பெயர் கூறுவர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றார். இவரைச் சீனர் டா-மொ (Ta mo) என்பர். இவரது மாணவர் சீனராகிய ஹ¨ய்-கெ-ஓ (Hui-K O) என்பவர். போதி தருமர் சீன தேசத்தில் தமது மதத்தைப் போதித்த பிறகு, ஜப்பான் தேசத்துக்குச் சென்றதாகவும், அங்குக் கடோகயாமா (Kataoka Yama) என்னும் இடத்தில் ஷோடகுடாய்ஷி (Shotoku Taishi) என்பவர் இவரைக் கண்டு உரையாடியதாகவும் ஜப்பான் தேசத்து வரலாறு கூறுகின்றது. ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோயில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன.

 

(தொடரும்)

 

http://fourladiesforum.com/2013/11/20/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தம் அல்ல.. புத்தம் தான் தமிழ் வளர்ச்சியில் பங்குபற்றி இருந்துள்ளது. அதற்காக சிங்கள மகாவம்ச..தேரவாத பெளத்த பேரினவாதத்திற்கு தமிழர்கள் சாமரம் வீசனுன்னு கிடையாது. அது வேற.. மணிமேகலை இலக்கிய கால.. தமிழ் வளர்த்த புத்தம் வேற..! :icon_idea::)

Link to comment
Share on other sites

பெளத்தம் அல்ல.. புத்தம் தான் தமிழ் வளர்ச்சியில் பங்குபற்றி இருந்துள்ளது. அதற்காக சிங்கள மகாவம்ச..தேரவாத பெளத்த பேரினவாதத்திற்கு தமிழர்கள் சாமரம் வீசனுன்னு கிடையாது. அது வேற.. மணிமேகலை இலக்கிய கால.. தமிழ் வளர்த்த புத்தம் வேற..! :icon_idea::)

 

பௌத்தமதம் , புத்தமதம் இரண்டுக்குமான வேறுபாடுகள் எவை ?? விளக்கினால் எல்லோரும் அறிந்த கொள்ளலாம் . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நெடுக்கர்  :)  :)  .

 

Link to comment
Share on other sites

பௌத்தம் வளர்த்த காஞ்சிபுரம்!

 

449px-avukana5.jpg?w=264

 

 

9. தின்னாகர் (திக்நாகர்).

 

இவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்தவர். இளமையிலேயே தருக்கம் முதலான நூல்களைப் பயின்று, பின்னர் வடநாட்டில் வாழ்ந்திருந்த வசுபந்து என்பவரிடம் பௌத்த சமய நூல்களில் சிலவற்றைக் கற்றார். பின்னர், நளாந்தைப் பல்கலைக் கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பற்பல தேசம் சென்று தர்க்கவாதம் செய்து, கடைசியாக மீண்டும் காஞ்சீபுரம் வந்து வாழ்ந்திருந்தார். காஞ்சீபுரம் திரும்புவதற்கு முன்னரே, ஒரிசா தேசத்தில் காலஞ்சென்றார் என்றும் சிலர் கூறுவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞானவாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். நியாயப் பிரவேசம், நியாயத் துவாரம் என்னும் இரண்டு தர்க்க (அளவை) நூல்களை வட மொழியில் இயற்றியிருக்கின்றார். இவரது மாணவர் சங்கர சுவாமி என்பவர். இன்னொரு மாணவர், நளாந்தைப் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக விளங்கிய ஆசாரிய தரும பாலர் (கி. பி. 528 – 590) என்பவர். இவர் வசுபந்து என்பவரிடம் சில நூல்களைக் கற்றார் என்று கூறப்படுகின்றபடியால், இவர் வசுபந்து காலத்தவராவர். வசுபந்து கி. பி. 420 முதல் 500 வரை இருந்தவர். சமுத்திரகுப்தன் என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். அவன் சபையில் காளிதாசருடன் ஒருங்கிருந்தவர். எனவே, அவரது மாணவராகிய திக்நாகர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்திருந்தவராதல்வேண்டும்.

 

10. தருமபால ஆசாரியர் (கி. பி. 528 – 560).

 

இவர் காஞ்சீபுரத்தில் படராதித்த விகாரை என்னும் பௌத்தப்பள்ளியில் இருந்த தருமபால ஆசாரியரின் வேறானவர். இவர் காஞ்சீபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது குமாரர். இவருக்குத் தக்க வயது வந்தகாலத்தில் காஞ்சி மன்னன் இவருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இவர் உலகத்தை வெறுத்தவராய், ஒருவருக்குஞ் சொல்லாமல் ஒரு பௌத்த மடத்தையடைந்து துறவு பூண்டு பௌத்த பிக்ஷ ஆனார். பின்னர், பல நாடுகளில் யாத்திரை செய்து தமது கல்வியை மேன்மேலும் வளர்த்துக்கொண்டார். இவர் கல்வியிலும் அறிவிலும் மேம்பட்டவர்.

 

ஆசாரிய தருமபாலர் தின்னாக (திக்நாக)ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார் என்பர்.

இவர் வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்த போது, கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாது செய்து வெற்றி பெற்றார். அதனோடு அமையாமல், எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத்தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. மற்றொருமுறை, நூறு ஈனயான பௌத்தர்களுடன் ஏழுநாள் வரையில் வாது செய்து வெற்றிபெற்றுத் தமது மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். மகாயான பௌத்தர்கள் இவரைத் தமது மதத்தை நிலை நிறுத்த வந்த சமயகுரவரெனப் போற்றினார்கள். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினமையால், அக்காலத்தில் வட இந்தியாவில் இருந்த உலகமெங்கும் பேர் பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பதவி யாருக்கும் எளிதில் வாய்ப்பதொன்றன்று. துறைபோகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குத்தான் அப்பதவி வாய்க்கும். இவர்க்கு இத்தலைமைப் பதவி கொடுத்ததிலிருந்து அக்காலத்து மக்கள் இவரை எவ்வளவு உயர்வாக மதித்தனர் என்பது நன்கு விளங்கும்.

இவருக்குப் பிறகு அப்பல்கலைக் கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த சீலபத்திரர் என்பவர் இவரிடம் பயின்ற மாணவர்களில் தலைசிறந்தவர். தரும பாலர் நளாந்தைக் கழகத்தின் தலைமையாசிரியராய் வீற்றிருந்த காலத்தில், தமிழ் நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாது செய்ய அழைத்தார். இவர், தமது மாணவராகிய சீல பத்திரரை அப்பிராமணருடன் வாது செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். இந்தச் சீலபத்திரரிடத்தில்தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சம்ஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி. பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைக் கழகத்தில் இருந்தவர். இந்தத் தருமபால ஆசாரியர் ஏதேனும் நூல் இயற்றினாரா என்பது தெரியவில்லை.

தருமபாலர் இளமையிலேயே, அதாவது தமது 32 -ஆவது வயதில், கி. பி. 560-இல் காலமானார். இவருடைய தலைமாணவர் சீலபத்திரர் என்று சொன்னோம்.

 

இவரது மற்ற மாணவர்கள். 1. விசேஷ மித்திரர் – இவர் மைத்திரேயர் அருளிச்செய்த யோகசாரபூமி என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 2. ஜின புத்திரர் – இவர் மைத்திரேயர் அருளிச்செய்த போதிசத்வபூமி என்னும் நூலுக்கு உரை இயற்றியவர். 3. ஞானசுந்தரர் – இவர் இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி. பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தார். இந்தத் தருமபாலரும் மணிமேகலை நூலில் கூறப்படும் அறவண அடிகளும் ஒருவரே எனச் சிலர் கருதுகிறார். அறவண அடிகள் என்னும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகத் தருமபாலர் என்னும் பெயர் காணப்படுவதுகொண்டு இவ்வாறு கருதுகின்றார் போலும். இந்தக் கருத்துத் தவறானதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், அறவண அடிகள் காஞ்சீபுரத்தில் கடைசி நாட்களில் தங்கினதாகக் கூறப்பட்டபோதிலும், அவர் தமது வாழ்நாளில் பெரும்பகுதியைக் காவிரிப்பூம்பட்டினம் முதலிய தமிழ் நாட்டு ஊர்களில் கழித்தவராவர். தருமபாலரோ, தமிழ் நாட்டில் காஞ்சீபுரத்தில் பிறந்தவராகவிருந்தும், தமது வாழ்நாட்களின் பெரும்பகுதியையும், கடைசி நாட்களையும் வட இந்தியாவில் கழித்தவர். அறவண அடிகள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபாலரோ கி. பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இந்தக் காரணங்களாலும், பிற சான்றுகளாலும் தருமபாலர் வேறு, அறவண அடிகள் வேறு எனபது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.

 

11. ஆசாரிய தர்மபாலர்.

 

இவரது ஊரைப்பற்றித் தம்பராட்டே வசந்தேந நகரே தஞ்சா நாமகே என்று கூறப்பட்டிருப்பதால், இவர் தாம்பிரபரணி ஆறு பாயும் திருநெல்வேலியில் தஞ்சையைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. * இந்தத் தர்மபாலர், காஞ்சீபுரத்தில் பிறந்து பின்னர் நளாந்தைப் பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசியராக விளங்கிய மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்த பேர்பெற்ற தரும பாலரின் வேறானவர். இவர் பாளி மொழியில் வல்லவர். பௌத்த மத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். காஞ்சீபுரத்தில் இருந்த படராதித்த விகாரையின் தலைவராக இருந்தவர். இலங்கையில் அநுராதபுரத்திலிருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இவர் சில காலம் தங்கியிருந்ததாகத் தெரிகின்றது. பௌத்தமத உரையாசிரியர்களில் சிறந்தவர். இவர் எழுதியுள்ள உரைநூல்களில், இவர் காலத்துத் தமிழ்ப் பௌத்த நூல்களில் காணப்பட்ட கருத்துக்களையும் அமைத்து எழுதியிருக்கிறார் என்று இவரது நூல்களை ஆராய்ச்சி செய்த அறிஞர் கூறுகின்றனர். உதான, இதிவுத்தக, தேரகாதா, தேரிகாதா , பேதவத்து, விமானவத்து என்னும் பாளி மொழிப் பௌத்த நூல்களுக்கு அட்டகதா என்னும் உரை எழுதியிருக்கின்றார். இந்த உரை முழுவதுக்கும் பரமார்த்த தீபனீ என்பது பெயர். மேற்படி உரைகளில், விமான வத்து உரைக்கு விமல விலாசனீ என்பது பெயர். இன்னும் பரமார்த்த மஞ்சுஸா , நெட்டிபகரணாட்டகதா என்னும் நூல்களையும் இயற்றியிருக்கின்றார். ஆக மொத்தம் பதினான்கு நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார் என்று கந்தவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. தமிழில் இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. இவரது காலம் கி. பி. ஐந்தாவது, அல்லது ஆறாவது நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது.

 

தொடரும்…

 

http://fourladiesforum.com/2013/11/24/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் சைவத்தின், வைணவத்தின் தமிழுக்காண தொண்டு பற்றி புதகம் எழுத வேண்டிய தேவை இல்லை.  தமிழுக்கு .

 

இன்னும் பல நூற்றாண்டின் பின்பு....சைவம் கட்டிகாத்த தமிழ் என்று கட்டுரைகள் நிச்சயம் வரும்....காரணம் இன்று எவரும் தங்களை சைவர் என அடையாளப்படுத்துவதில்லை இந்துக்கள் என்றுதான் சொல்கின்றனர்....சைவம் தனது அடையாளத்தை இழக்கத்தொடங்கிவிட்டது

Link to comment
Share on other sites

தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்று பௌத்தம் போதித்தவர்கள்!

 

450px-srilanka_buddhiststatue_pixinn_net

 

12. புத்த நந்தி, சாரி புத்தர்:

 

இவ்விருவரும் சோழ நாட்டில் போதி மங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியராகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்துகொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத் தடுத்து, வாதில் வென்ற பின்னரே வெற்றிச் சின்னங்கள் ஊதவேண்டும் என்று சொல்ல, அவரும் அதற்குச் சம்மதித்தார். பிறகு பௌத்தர்கள் புத்த நந்தியைத் தலைவராகக் கொண்டு வாது நிகழ்த்திய போது, சம்பந்தருடன் இருந்த சம்பந்த சரணாலயர் என்பவர் இயற்றிய மாயையினால் இடி விழுந்து புத்த நந்தி இறந்தார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இதனைக் கண்ட பௌத்தர்கள், மந்திரவாதம் செய்யவேண்டா, சமயவாதம் செய்யுங்கள் என்று சொல்லிச் சாரி புத்தரைத் தலைவராகக் கொண்டு மீண்டும் வந்தார்கள். அவ்வாறே சாரி புத்தருக்கும் சம்பந்தருக்கும் சமய வாதம் நிகழ, அதில் சாரி புத்தர் தோல்வியுற்றார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. (சாரி புத்தர் காண்க.) இவர்களைப்பற்றி வேறு வரலாறு தெரியல்லை. திருஞானசம்பந்தர் கி. பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்தவராதலால், இவர்களும் அந்த நூற்றாண்டிலிருந்தவராவர்.

 

13. வச்சிரபோதி. (கி. பி. 661 – 730.):

 

இவர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த பொதிகை மலைக்கு அருகில் மலையநாட்டில் இருந்தவர். இவரது தந்தையார் ஓர் அரசனுக்கு மதபோதகராக இருந்தார். இவர் கி. பி. 661-இல் பிறந்தார். வட இந்தியாவில் இருந்த பேர்பெற்ற நளாந்தைப் பல்கலைக் கழகத்தில் 26 வயது வரையில் கல்வி பயின்றார். பின்னர், 689 -இல் கபிலவஸ்து என்னும் நகரம் வரையில் யாத்திரை செய்தார். பின்னர், மீண்டும் தமிழ் நாட்டிற்கு வந்தார். அக்காலத்தில் தொண்டைமண்டலத்தில் வற்கடம் உண்டாகி மக்கள் வருந்தினர். அந்த நாட்டினை அரசாண்ட நரசிம்ம போத்தவர்மன் என்னும் அரசன் வச்சிரபோதியின் மகிமையைக் கேள்விப்பட்டு, இவரையணுகி, நாட்டுக்கு நேரிட்டுள்ள வருத்தத்தைப் போக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ள, இவர் தெய்வத்தைப் போற்றி வேண்டிக்கொள்ள, மழைபெய்து நாடு செழிப்படைந்தது என்று இவரது வரலாறு கூறுகின்றது.

 

இவர் தந்திரயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். தந்திரயான மதத்துக்கு வச்சிரயானம் , மந்திரயானம் என்னும் பெயர்களும் உண்டு. இவரது மாணவர் அமோக வச்சிரர் என்பவர். இவர் இலங்கைக்குச் சென்று, அங்கிருந்த அபயகிரி விகாரையில் ஆறு திங்கள் தங்கியிருந்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து சிலநாள் தங்கியிருந்தார். பின்னர், தமது தந்திரயான பௌத்த மதத்தைச் சீன தேசத்தில் பரவச்செய்ய எண்ணங்கொண்டு சீனதேசம் செல்ல விரும்பினார். இவர் எண்ணத்தை அறிந்த காஞ்சி அரசன் கடல் யாத்திரையின் துன்பங்களை எடுத்துரைத்துப் போகவேண்டா என்று தடுத்தான். இவர் பிடிவாதமாக விருந்தபடியால், அரசன் இவரது சீனதேசப் பிரயாணத்துக்கு வேண்டும் உதவிகளைச் செய்துகொடுத்தான். மகாப் பிரஜ்ஞ பாரமிதை என்னும் பௌத்த நூலின் பிரதியொன்றனையும், மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் சீன அரசனுக்குக் கையுறையாக வழங்க, ஒரு தூதுவனையும் இவருடன் அரசன் அனுப்பினான்.

 

வச்சிரபோதி தமது மாணவருடன் புறப்பட்டுச் சென்றார். கப்பல் அடுத்த நாள் இலங்கையையடைந்தது. ஸ்ரீ சைலன் என்னும் இலங்கை அரசன் இவரை வரவேற்றுத் தனது அரண்மனையில் ஒரு திங்கள் வரையில் இருக்கச் செய்தான். பின்னர், மரக்கலமேறிச் சீனநாட்டுக்குச் செல்லும் வழியில், சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீ விஜயதேசத்தில் ஐந்து திங்கள் தங்கினார். மீண்டும் புறப்பட்டு, கி. பி. 720-இல் சீனதேசம் சேர்ந்தார். ஆங்குத் தமது தந்திரயான பௌத்தக் கொள்கைகளைப் போதித்துத் தாந்திரிக பௌத்த நூல்களைச் சீனமொழியில் மொழிபெயர்த்தார். இவர் அந்நாட்டிலே கி. பி. 730-இல் காலமானார்.

 

14. புத்த மித்திரர்:

 

இவர் புத்த மித்திரனார் என்றும் கூறப்படுவார். இவரது பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம்.
‘ மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால் தொக்கவன் யார்க்குந் தொடரஒண் ணாதவன் தூயனெனத் தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழ்உரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே ‘
என்னும் இவர் இயற்றிய வீரசோழியப் பாயிரச் செய்யுள் இதனை வற்புறுத்துகின்றது. இவர், சோழ நாட்டில், மாலைக்கூற்றத்தில், பொன்பற்றி என்ற ஊரில் சிற்றரசராய் விளங்கியவர். பொன்பற்றி என்னும் ஊர் தஞ்சை ஜில்லாப் புதுக்கோட்டைத் தாலூக்காவில் உள்ளது என்பர் சிலாசாசன ஆராய்ச்சியாளர் காலஞ்சென்ற திரு. வெங்கையா அவர்கள். தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கி தாலூக்காவில் பொன்பேத்தி என்று இப்போது வழங்குகின்ற ஊர்தான் புத்தமித்திரனாரின் பொன்பற்றி என்பர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். புத்த மித்திரர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றியிருக்கிறார். வீரசோழன், அல்லது வீரராசேந்திரன் என்னும் பெயருள்ள சோழ மன்னன் வேண்டுகோளின்படி இந்நூலை இவர் இயற்றி அவன் பெயரையே இதற்குச் சூட்டினார். இதனை
‘ ஈண்டுநூல் கண்டான் எழில்மாலைக் கூற்றத்துப் பூண்டபுகழ்ப் பொன்பற்றி காவலனே-மூண்டவரை வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுனை வீரன்றன் சொல்லின் படியே தொகுத்து.’
என்னும் வெண்பாவினாலும்,
‘ நாமே வெழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும் பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப் பைச்சுருக்கித் தேமே வியதொங்கற்றர்வீர சோழன் திருப்பெயரால், பூமேல் உரைப்பன் வடநூல் மரபும் புகன்றுகொண்டே ‘
என்னும், கலித்துறைச் செய்யுளினாலும் அறியலாம். இவரது காலம், இவரை ஆதரித்த வீரசோழன் காலமாகும். வீரசோழன் என்பவன் வீரராசேந்திரன் என்னும் பெயருடன் கி. பி. 1063 முதல் 1070 வரையில் சோழ நாட்டை அரசாண்டவன்; வீரசோள கரிகால சோள ஸ்ரீ வீரராஜேந்திர தேவ ராஜகேசரி வன்ம பெருமானடிகள் என்று சாசனத்தில் புகழப்படுவன்; எல்லா உலகுமேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன் என்று புத்த மித்திரனாரால் வீரசோழியத்தில் புகழப்படுபவன். கிருஷ்ணை, துங்கபத்திரை என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று கூடுகின்ற கூடல் சங்கமம் என்னும் இடத்தில் சோமேஷ்வரன் ii, விக்கிரமாதித்தன் என்னும் இரண்டு சாளுக்கிய அரசர்கள் அரசுரிமைக்காகச் செய்த போரில், இந்தச் சோழன், விக்கிரமாதித்தன் பக்கம் சேர்ந்து போர் செய்து, சோமேஸ்வரனை முறியடித்து, விக்கிரமாதித்தனை அரசுகட்டில் ஏறச்செய்தான். அன்றியும், அவனுக்குத் தன் மகளை மணஞ்செய்து கொடுத்தான். இவனால் ஆதரிக்கப்பட்ட புத்த மித்திரனாரும் இவன் காலத்தில், அதாவது கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில், இருந்தவராவர். அணி என்னும் அலங்கார இலக்கணத்தைத் தண்டியாசிரியரைப் பின்பற்றிச் சொன்னதாக இவர் தமது வீர சோழியத்தில் கூறுவதால், இவர் தண்டியாசிரியருக்குப் பிற்பட்டவராதல்வேண்டும். சிவபெருமானிடத்தில் அகத்திய முனிவர் தமிழ் மொழியைக் கற்றார் என்று ஒரு கொள்கை சைவர்களுக்குள் உண்டு. புத்தமித்திரனார், பௌத்த முனிவராகிய அவலோகிதீஷ்வரரிடத்தில் அகத்திய முனிவர் தமிழ் பயின்றதாகக் கூறுகின்றார். இதனை, ஆயுங்குணத்து அவலோகிதன் என்னும் வீரசோழிய அவையடக்கச் செய்யுளால் அறியலாம். (தொடர்புரை 5 காண்க.) புத்தமித்திரனார் வீரசோழியத்தைத் தவிர வேறு நூல் யாதேனும் செய்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இவர் இருந்த சோழநாட்டிலேயே இவர் பெயரைக் கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் இருந்ததாகவும், அவர் இலங்கை சென்று அநுராதபுரத்தில் தங்கியிருந்ததாகவும், இலங்கையில் அவருக்குச் சோழதேரர் என்ற பெயர் வழங்கியதாகவும் பௌத்த நூல்களால் அறிகின்றோம். ஆனால், அந்தப் புத்தமித்திரர் இவரின் வேறானவர் என்று தெரிகின்றது.

 

15. பெருந்தேவனார்:

 

பெருந்தேவனார் என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர் பண்டைக் காலத்தில் இருந்திருக்கின்றனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் பெருந்தேவனார் பௌத்தர்; புத்தமித்திரனாரின் மாணவர்; புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர். இதனை
‘தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின் திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக் கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே ‘
என்னும் வீரசோழிய உரைப்பாயிரச் செய்யுளால் அறியலாம். வீரசோழிய நூலின் சிறப்பை அதிகப்படுத்துவது இவரது உரையே என்று கூறுவது மிகையாகாது. இவர் எழுதிய உரை தமிழாராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளருக்கும் மிக்க உதவியாக இருக்கின்றது. இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ள புத்தரைப் போற்றும் செய்யுள்களில் பெரும்பான்மையும் இவர் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள்களே, (தொடர்புரை 1 காண்க) இவர் தமது உரையில் நியாய சூடாமணி, புதியாநுட்பம், வச்சத் தொள்ளாயிரம், உதயணன் கதை, கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் என்னும் நூல்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்றியும், குண்டலகேசி, பாரதவெண்பா, யாப்பருங்கலம் முதலிய நூல்களினின்றும் செய்யுள்களை மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கின்றார். இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவரது காலம் புத்தமித்திரனாரும் வீரராசேந்திர சோழனும் வாழ்ந்திருந்த கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

 

16. தீபாங்கர தேரர்:

 

இவர் சோழ நாட்டினைச் சேர்ந்தவர். ஆனதுபற்றிச் சோளிய தீபாங்கரர் என்று இவர் வழங்கப்படுகின்றார். புத்தப் பிரிய தேரர் என்றும் வேறொரு பெயர் இவருக்கு உண்டு. இவர் இலங்கைக்குச் சென்று, ஆங்கு ஆனந்த வனரதனர் என்னும் தேரரிடம்சமயக்கல்வி பயின்றார். பின்னர், காஞ்சீபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார். பாளி மொழியை நன்கு பயின்றவர். அந்த மொழியில் பஜ்ஜமது என்னும் நூலை இயற்றியிருக்கின்றார். புத்தரது உருவ அழகினையும், அவர் உபதேசித்த பௌத்தக் கொள்கை, அவர் அமைத்த பௌத்த சங்கம். இவற்றின் செவ்விகளையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார். இந்நூல் நூற்று நான்கு செய்யுள்களைக் கொண்டது. இவர் இயற்றிய இன்னொரு நூல் ரூப சித்தி என்பது. பாட ரூப சித்தி என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது பாளி மொழி இலக்கண நூல், இதற்கு ஒரு உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார் என்று கூறுவர். இவர் இயற்றிய பஜ்ஜமது என்னும் நூல் கி. பி. 1100-இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.

 

17. அநுருத்தர்:

 

அநிருத்தர் என்றும் இவருக்குப் பெயர் உண்டு. இவர் காஞ்சீபுரத்தில் மூலசோம விகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர். இவர் பாண்டிய தேசத்தவர் என்று தெரிகின்றது. அபிதம்மாத்த சங்கிரகம் , பரமார்த்த வினிச்சயம் , நாமரூபப் பரிச்சேதம் என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். அபிதம் மாத்த சங்கிரகம் இலங்கையிலும், பர்மாதேசத்திலும் உள்ள பௌத்தர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப் பட்டுவருகின்றது. இவர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்நிதிருந்தவர். ஆசிரியர் அநிருத்தர் என்பவர் ஒருவர் பெரும் பிடுகு முத்தரையன் என்னும் சிற்றரசனைப் பாடிய கட்டளைக் கலித்துறையொன்று, திரிச்சிராப்பள்ளியை அடுத்த செந்தலை என்னும் ஊரில் உள்ள சிவன் கோயில் சாசனத்தில் சிதைந்து காணப்படுகின்றதைச் சாசனப் புலவர் என்னும் நூலில் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவர்கள் காட்டிய செய்யுள் இது:
‘ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  போலரசு பிறவா பிறநெடு மேரு நெற்றிப் பொன்போல் பசுங்கதி ராயிரம் [வீசும்] பொற்றேர்ப்பருதிக் கென்போ தரவிடுமோவினைச்சோதி யிருவிசும்பே. ‘
இச்செய்யுளைப் பாடிய அநிருத்தரும் மேற்படி நூல்களை இயற்றிய அநுருத்தரும் ஒருவர்தாமோ என்பது தெரியவில்லை.

 

18. புத்தமித்திரர்,மகாகாசிபர். (சோழ தேரர்கள்.):

 

இவ்விருவரையும் சோழ தேரர்கள் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. சோழநாட்டவராகிய இவர்கள் இலங்கைக்குச் சென்று ஆங்கு வாழ்ந்துவந்தனர் போலும். இவர்கள் வேண்டுகோளின்படி உத்தோதயம் , நாமரூபப் பரிச்சேதம் என்னும் நூல்கள் இயற்றப்பட்டன. நாமரூபப் பரிச்சேதம் இயற்றிய அநிருத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர்; ஆதலால், இவர்களும் அக்காலத்தவராவர். இவர்களைப்பற்றிய வேறு வரலாறுகள் தெரியவில்லை. இந்தப் புத்தமித்திரர், வீரசோழியம் இயற்றிய புத்தமித்திரரின் வேறானவர்.

 

19. ஆனந்த தேரர்:

 

(? – 1245.) இவர் காஞ்சீபுரத்தில் இருந்தவர். பௌத்த மத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா தேசத்தவரான சத்தம்ம ஜோதி பாலர் என்னும் சிறப்புப் பெயரைக்கொண்ட சாபதர் என்பவர் இவரைப் பர்மா தேசத்திலிருந்த அரிமர்த்தனபுரத்துக்கு அழைத்துச் சென்றார் என்று சாசனவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் இவருக்கு யானை ஒன்றைப் பரிசாக அளித்தான் என்றும், அந்த யானையை இவர் காஞ்சீபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார் என்றும் கல்யாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவர் தமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது. இவர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து, பின்னர் கி. பி. 1245-இல் காலமானார் என்று கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை.

 

20. தம்மகீர்த்தி:

 

இவர் தம்பராட்டா என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். (தாமிரவர்ணி பாயும் பாண்டிய நாட்டினைத் தம்பராட்டா என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.) கல்வி அறிவு ஒழுக்கங்களினால் சிறந்தவர். இவரது மேன்மையைக் கேள்வியுற்று, பராக்கிரமபாகு (இரண்டாவன்) என்னும் இலங்கை மன்னன் இவரைத் தன்னிடம் வணக்கமாக வரவழைத்துக்கொண்டான். அன்றியும், சோழநாட்டிலிருந்த பௌத்த பிக்குகளையும் இவன் இலங்கைக்கு வரவழைத்து, ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இந்த அரசன் மற்றப் பிக்ஷக்களைவிடத் தம்மகீர்த்தியிடத்தில் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். தாட்டா வம்சம் என்னும் நூலினை இவர் பாலி மொழியில் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சம் என்னும் நூல் (மகாசேனன் என்னும் அரசன் காலமுதல் பராக்கிரமபாகு இரண்டாவன் காலம் வரையில்) இவர் இயற்றியதாகக் கருதப்படுகின்றது. இவரை ஆதரித்த பராக்கிரமபாகு இரண்டாவன் இலங்கையை கி. பி. 1236 முதல்- 68 வரையில் அரசாண்டவன். ஆகையால், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

 

21. கவிராசராசர்:

 

இவர் ஒரு பௌத்தப் புலவர். இவர் தமிழ்க்கவி இயற்றுவதில் தேர்ந்தவர் என இவரது பெயரினால் அறியப்படும். இவரது காலம் தெரியவில்லை. ஆயினும், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதலாம். இவர் இயற்றிய நூலின் பெயர் தெரியவில்லை. வன்பசிக் கடும்புலிக்குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து என்னும் செய்யுளடியை மேற்கோள் காட்டி, இது கவி ராசராசன் வாக்கு என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியிருப்பதிலிருந்து, இப்பெயரையுடைய புலவர் ஒருவர் இருந்தாரென்பது தெரிகின்றது. (377 -ஆம் தாழிசை உரை காண்க.)

 

22. காசப்பதேரர்:

 

இவர் மோகவிச்சேதனீ , விமதிவினோதனீ , விமதிவிச் சேதனீ , அநாகத வம்சம் என்னும் நூல்களைப் பாளி மொழியில் இயற்றியிருக்கிறார். இந்நூல்களை இயற்றிய காசப்பர் சோழநாட்டவர் என்றும், டமிள (தமிழ) தேசத்தவர் என்றும் கந்த வம்சம் , சாசன வம்சதீபம் என்னும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே, இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது தெரிகின்றது. இவர் இயற்றிய அநாகத வம்சம் என்பது இனி வரப்போகிற மைத்ரேய புத்தரின் வரலாற்றினைக் கூறுவது. இவரைப்பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை.

 

23. சாரிபுத்தர்:

 

இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர் என்பதும், பாடா வதாரம் என்னும் பாளிமொழி நூலை இயற்றியவர் என்பதும் கந்த வம்சம் (கிரந்த வம்சம்), சாசன வம்சம் என்னும் நூல்களினால் தெரிகின்றன. இவரது காலம், வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை. திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் சோழநாட்டில் சாரிபுத்தர் என்னும் ஒரு தேரர் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தர் சமயவாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. பெரிய புராணம் கூறுகின்ற சாரிபுத்தரும், கந்தவம்சம் கூறுகின்ற சாரிபுத்தரும் ஒருவர்தாமோ, அன்றி வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு சாரிபுத்தர்களோ தெரியவில்லை.

 

24. புத்தாதித்தியர் :

 

இவர் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு. இவர் சாவகத்தீவின் (ஜாவா) அரசன் ஒருவனைப் புகழ்ந்து சில பாடல்கள் இயற்றியிருக்கின்றார். இவரது காலம், வரலாறு ஒன்றும் தெரியவில்லை. தமிழ் நாட்டிலே இன்னும் எத்தனையோ தேரர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். புத்தசிகா, ஜோதி பாலர், இராகுல தேரர், பூர்வாசாரியர் இருவர், (இவர்கள் பெயர் தெரியவில்லை) மகா வஜ்ஜிரபுத்தி, சுல்ல வஜ்ஜிரபுத்தி, சுல்ல தம்ம பாலர், முதலியவர்களைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர்களன்றி, வேறு இருபது பௌத்த ஆசிரியர்களும் காஞ்சீபுரத்தில் நூல்கள் இயற்றியதாகக் கந்த வம்சம் (கிரந்த வம்சம்) என்னும் நூல் கூறுகின்றது. இவர்களது வரலாறும் தெரியவில்லை.

* இப்பொழுது சோழநாட்டில் ஒரு தஞ்சை இருப்பது போலவே, பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சை இருந்ததாகத் தெரிகின்றது. இந்தப் பாண்டிய நாட்டுத் தஞ்சையை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன்மேல் பாடப்பட்டதே தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ் நூல்.

 

தொடரும்…

 

http://fourladiesforum.com/2013/12/07/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/

Link to comment
Share on other sites

அழிக்கப்பட்ட பௌத்த நூல்கள்!

 

buddha-2.jpg?w=610

 

பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் :

 

சித்தாந்தத் தொகை:

 

இது இறந்துபட்ட நூல்களுள் ஒன்று. இது பௌத்த மதக் கொள்கைகளைத் தொகுத்துக் கூறும் நூல் எனத் தெரிகின்றது. இதனை இயற்றியவர் இன்னார் என்பதும், ஒருவரா பலரா என்பதும் தெரியவில்லை. இயற்றப்பட்ட காலமும் தெரியவில்லை. சிவஞான சித்தியார் என்னும் சைவசமய நூலுக்கு ஞானப்பிரகாசர் என்பவர் தாம் எழுதிய உரையில் (பரபக்கம் சௌத்திராந்திகன் மதம், 2, 31 பாட்டுக்களின் உரை) கீழ்க்கண்ட செய்யுளை இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கின்றார் :

 

  ‘ அருணெறியாற் பாரமிதை யாறைந்து முடனடக்கிப்
        பொருண்முழுதும் போதியின்கீழ் முழுதுணர்ந்த முனிவரன்றன்
        அருண்மொழியா னல்வாய்மை யறிந்தவரே பிறப்பறுப்பார்
        மருணெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ. ‘

 

“மருடரு மனம்வாய் மெய்யிற் கொலைமுதல் வினைபத்தாமே’ என்பது சித்தாந்தத் தொகை” என்று நீலகேசி, புத்தவாதச் சருக்கம் 64-ஆம் பாட்டுரையில் கூறப்பட்டிருக்கின்றது. இவற்றைத் தவிர இந்நூற் செய்யுள்கள் வேறொன்றும் கிடைக்கவில்லை.

 

திருப்பதிகம்:

 

இதுவும் இறந்துபட்ட நூலுள் ஒன்று. இந்நூல் ஆசிரியர் யாவர், இந்நூல் எத்தனைப் பாக்களைக் கொண்டது என்னும் செய்திகள் ஒன்றும் தெரியவில்லை. காலமும் தெரியவில்லை. இந்நூலின் பெயரைக்கொண்டு இது புத்தர் மீது இயற்றப்பட்ட தோத்திர நூல் என்று கருத இடமுண்டாகின்றது. சிவஞான சித்தியார் (பரபக்கம் : சௌத்திராந்திகன் மதம், 2-ஆம் செய்யுள், மேற்படி மறுதலை, 8-ஆம் செய்யுள்) உரையில், ஞானப்பிரகாசர் கீழ்க்கண்ட செய்யுளை மேற்கோள் காட்டி, ‘இது திருப்பதிகம் எனக் கொள்க’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்:

 

    ‘ எண்ணிகந்த காலங்க ளெம்பொருட்டான் மிகவுழன்று
        எண்ணிகந்த காலங்க ளிருடீர வொருங்குணர்ந்தும்
        எண்ணிகந்த தானமுஞ் சீலமு மிவையாக்கி
        எண்ணிகந்த குணத்தினா னெம்பெருமா னல்லனோ ‘.

 

நீலகேசி உரையாசிரியர் கடவுள் வாழ்த்து உரையில், மேலே காட்டிய செய்யுளையும், கீழ்க்கண்ட செய்யுளையும் மேற்கோள் காட்டியுள்ளார். ஆனால், அவர் இச்செய்யுள்கள் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டன எனக் குறிப்பிடவில்லை. ஆயினும், அவர் காட்டிய கீழ்க்கண்ட செய்யுளும் இந்த நூலைச் சேர்ந்ததுதான் என்பதில் ஐயமில்லை :

 

‘ என்றுதா னுலகுய்யக் கோளெண்ணினா னதுமுதலாச்    
        சென்றிரந்தார்க் கீந்தனன் பொருளுடம் புறுப்புக்க
        டுன்றினன் பிறக்குந னுளனாயின் மாமேருக்
        குன்றியின் றுணையாகக் கொடுத்திட்டா னல்லனோ ‘.

 

விம்பசார கதை :

 

இந்தப் பெயர்கொண்ட பௌத்தநூல் ஒன்றிருந்ததென்பது நீலகேசி உரையினால் (190-ஆவது பாட்டுரை) அறியப்படும். நீலகேசி உரையாசிரியர் விம்பசார கதையிலிருந்து நான்கு அடிகளை மேற்கோள் காட்டி, ‘இது விம்பசார கதை என்னும் காவியம்; பௌத்தருடைய நூல்; அதன்கட் கண்டு கொள்க’ என்று எழுதியிருக்கின்றார். சிவஞான சித்தியார் என்னும் நூலுக்கு உரையெழுதிய ஞானப்பிரகாசர் (பர : சௌத்தி : மறுதலை. 5-ஆம் செய்யுளுரை) நீலகேசி உரையாசிரியர் மேற்கோள் காட்டிய அதே நான்கடிகளை மேற்கோள் காட்டி, விம்பசார கதையைப்பற்றி அவர் எழுதியவற்றை அவ்வாறே எழுதியிருக்கிறார்.

 

விம்பசார கதை என்னும் இந்தக் காப்பியம் எத்தனைச் செய்யுள்களையுடையது, எத்தனை அதிகாரங்களையுடையது, இதனை இயற்றியவர் யாவர் என்பதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆயினும், இக்காப்பியத்தின் பெயரைக் கொண்டு, புத்தர் காலத்தில் இருந்தவனும், அவருக்குப் பல விதத்திலும் தொண்டுசெய்து அவரை ஆதரித்துவந்தவனுமான விம்பசாரன் என்னும் அரசனது வரலாற்றினைக் கூறுவது இக்காப்பியம் என்று கருதக் கிடக்கின்றது. விம்பசாரனது வரலாற்றுச் சுருக்கம் இதுவாகும்.

 

விம்பசாரன் அல்லது பிம்பசாரன் என்னும் அரசன் இராசகிருகம் என்னும் நகரைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை (கி. மு. 540 முதல் 490 வரையில்) அரசாண்டு வந்தான். அக்கால்தில் ஒருநாள், இல்லற வாழ்க்கையைத் துறந்து, துன்பத்தை நீக்கும் வழியைக் காண்பதற்காகச் செல்லும் சித்தார்த்தரை அரன்மனையில் இருந்தபடியே வீதியில் கண்ட விம்பசாரன், அவரை அழைத்துத் தன்னிடம் தங்கியிருக்கும்படி வேண்டினான். சித்தார்த்தர், தாம் செல்லும் நோக்கத்தைத் தெரிவிக்க, அவன் உமது நோக்கம் நிறைவேறிய பிறகு என்னிடம் வரவேண்டும் என்று இரந்து வேண்டினான். சித்தார்த்தர் அதற்கு உடன்பட்டு, அவனிடம் விடைபெற்றுச் சென்றார். பின்னர், சித்தார்த்தர் புத்தரான பிறகு, விம்பசாரனுக்குத் தாம் வாக்களித்ததை நினைத்து, தமது சீடர்களுடன் இராசகிருகத்தின் அருகில் உள்ள சுபதித்த சேதியத்தில் வந்து தங்கினார். இதனையறிந்த அரசன் தனது சுற்றத்தாருடன் சென்று புத்தரை வணங்க, அவர் அவர்களுக்கு உபதேசம் செய்தார். அன்று முதல் அரசன் பௌத்த மதத்தை மேற்கொண்டான். அடுத்த நாள் அரசன் புத்தரையும் அவரது சீடர்களையும் அரண்மனைக்கழைத்து அவர்களுக்கு விருந்தளித்த பின்னர், அவர்கள் தங்குவதற்கு ‘வெளுவனம்’ என்னும் தோட்டத்தைப் புத்தருக்குத் தானமாகக் கொடுத்தான். அன்றியும், அவன் இறக்கும்வரையில் புத்தருக்கும் அவரது சங்கத்தாருக்கும் பற்பல உதவிகளையும் தொண்டுகளையும் செய்துவந்தான்.

 

இந்த அரசனுக்கு அஜாத சத்துரு என்னும் மகன் ஒருவன் உண்டு. இப்பிள்ளை பிறக்கும்போதே, இவனால் அரசனுக்கு மரணம் நேரிடும் என்று நிமித்திகர் கூறினர்.
புத்தருக்கு மைத்துனன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தேவதத்தன் என்பது. அவன் புத்தரது தாய் வழி மாமனது மகன். இந்தத் தேவதத்தன், புத்தர் உலகத்தாரால் போற்றிப் புகழப்படுவதைக் கண்டு பொறாமை கொண்டான். பௌத்த சங்கத்தின் தலைவராக வீற்றிருக்கும் புத்தரை நீக்கிவிட்டு, அவர் இடத்தில் தான் அமர்ந்து பெருமையடைய அவாக்கொண்டான். ஆனால், புத்தரும், விம்பசார அரசனும் உயிரோடுள்ளவரையில் தனது விருப்பம் நிறைவேறாதெனக் கண்டு, அவர்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்.
தேவதத்தன் சில சித்திகள் கைவரப்பெற்றவனாகலின், அவன் அரசன் மகன் அஜாத சத்துருவிடம் சென்று, அவன் அஞ்சும்படி சில சித்திகளைச் செய்து, அவனைத் தன்வசப்படுத்தி, அரசனைக் கொன்று அரசைக் கைப்பற்றிக்கொள்ளுமாறும், புத்தரைக் கொன்று பௌத்த சங்கத் தலைமைப் பதவியைத் தனக்களிக்குமாறும் அவனுக்குக் கூறினான். இவனது சித்திகளைக் கண்டு இவனிடம் அச்சமும் மதிப்புங் கொண்ட அரசகுமாரன் இவன் கற்பித்த தீச்செயல்களைச் செய்ய உடன்பட்டான்.

 

தேவதத்தன், அரசகுமாரன் உதவியால் சில வில்வீரர்களை ஆங்காங்கேயிருக்கச் செய்து, புத்தர் பாதைவழியே செல்லும்போது அவரை அம்பெய்து கொல்லுமாறு ஏவினான். புத்தர் வீதிவழியே சென்றபோது, வில்வீரர்கள் அவர்மேல் அம்பெய்ய முடியாதவர்களாகி விறைத்து நின்றனர். பின்னர், அவர்கள் புத்தரிடம் வந்து அவரிடம் உபதேசம் பெற்றுச் சென்றனர். தனது நோக்கம் நிறைவேறாமற் போனதைக் கண்ட தேவதத்தன், தானே புத்தரைக் கொல்ல முடிவுசெய்து, அவர் பாதைவழியே செல்லும்போது பெரும் பாறைகளை மலைமீதிருந்து உருட்டினான். அவை அவருக்குப் பெரிய ஊறு செய்யவில்லையாயினும், காலில் சிறிது காயத்தையுண்டாக்கின. இதனையறிந்த அவரது சீடர்கள் அவரை வெளியே செல்லக்கூடாது என்று தடுத்தார்கள். புத்தர், ‘ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் ஆகாது’ என்று சொல்லி, தம் வழக்கம்போல் வெளியே சென்றுவந்தார். பின்னர், தேவதத்தன் அரச குமாரன் உதவியால், ‘நளாகிரி’ என்றும், ‘தனபாலன்’ என்றும் பெயருள்ள மதம்பிடித்த யானையைக் கள்ளூட்டி வெறிகொள்ளச் செய்து, புத்தர் வீதிவழியே செல்லும் போது அவரைக் கொல்ல அதை ஏவினான். அவ்யானை புத்தரைக் கண்டபோது மதமும் வெறியும் தணியப்பெற்று அவரை வணங்கியது.

 

இவ்வாறு, தேவதத்தன் புத்தரைக் கொல்லச் சூழ்ச்சி செய்திருக்க, அஜாத சத்துரு அரசனைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான். இதனையறிந்த அரசன் தன் மகனுக்கு அரசாட்சியைக் கொடுத்துவிட்டுத் தான் அப்பதவியினின்றும் விலகிக்கொண்டான். ஆயினும், தேவதத்தன் அரசகுமாரனிடம் சென்று, அரசனைக் கொல்லும்படி வற்புறுத்தினான். அதனைக் கேட்டு, அஜாத சத்துரு அரசனைச் சிறைப்படுத்தி, காற்றோட்டமில்லாத ‘பொதியறை’யில் அடைத்து, அரசியைத் தவிர ஒருவரும் அங்குச் செல்லக்கூடாதென்றும், ஒருவரும் அவனுக்கு உணவு கொடுக்கக்கூடாதென்றும் கட்டளையிட்டான். இவ்வாறு சிறைப்பட்ட விம்பசார அரசனுக்கு அவனது மனைவி அவனைக் காணச் செல்லும்போதெல்லாம் தனது உடையில் உணவை மறைத்துக்கொண்டுபோய்க் கொடுத்துவந்தாள். இது கண்டறியப்பட்டபின், தனது தலையணியில் சிறிது உணவை மறைத்துக் கொண்டுபோனாள். இதுவுங் கண்டறியப்பட்டபோது, இந்த அரசி நீராடித் தன் உடம்பில் ‘சாதுர் மதுரம்’ என்னும் நால்வகை இனிப்பு வகைகளைப் பூசிக்கொண்டு அரசனிடம் சென்றாள். அரசன் அவள் உடம்பில் பூசப்பட்ட இனிப்பை நக்கி உண்டு உயிர் வாழ்ந்தான். இதுவும் கண்டுபிடிக்கப்பட்டு, அரசி விம்பசாரனைப் பார்க்கக்கூடாதென்று தடுக்கப்பட்டது. விம்பசாரன் மனம் கவலாமல் பொதியரையாகிய அச்சிறையில் உலாவிக்கொண்டிருந்தான். இதனையறிந்த அஜாத சத்துரு சில மயிர்வினைஞரை அனுப்பி, விம்பசாரனுடைய பாதத்தைக் கத்தியால் கீறியறுத்து, உப்பையும் புளித்த காடியையும் இட்டுக் கட்டுமாறு கூறினான். இக்கொடுஞ் செயலைச் செய்ய மனமற்றவராக இருந்தும், அவ்வூழியர் அவ்வாறே செய்தனர். இக்கொடுமைகளால் ஏற்பட்ட துன்பத்தைத் தாங்கப் பெறாமல், விம்பசாரன் சிறைச்சாலையில் உயிர்நீத்தான்.
விம்பசாரன் உயிர் துறந்த அதே நாளில், அஜாத சத்துருவுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தையிடத்தில் தந்தைக்கு உண்டாகும் அன்புணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. தன்னையும் தன் தந்தை இப்படித்தானே நேசித்திருப்பான் என்று கருதி, அவன் தன் தாயிடம் சென்று இதைப்பற்றி வினாவினான். அஜாத சத்துரு பிறந்தது முதல் விம்பசார அரசன் எவ்வாறு அவனை அன்பாக நேசித்தான் என்பதனையும், எவ்வாறு கண்ணுக்குக் கண்ணாயும் உயிருக்குயிராயும் போற்றிக் காப்பாற்றினான் என்பதனையும் அவள் அவனுக்கு விளக்கிச் சொன்னாள். இவற்றையெல்லாங் கேட்ட அஜாத சத்துரு தான் தன் தந்தையாகிய விம்பசார அரசனைக் கொடுமையாய்ச் சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து வருந்தினான்.

 

இவ்வரலாற்றினைப் பொருளாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்த விம்பசார கதை என்னும் காப்பியம் எனத் தோன்றுகின்றது. இது இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை. இந்தக் காப்பியத்தினின்று நமக்குக் கிடைத்திருப்பன நான்கு அடிகள்மட்டுமே. அவை பின் வருவன :

 

‘ உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி
        வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்
        ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்
        ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்.’

 

இச்செய்யுள் நடையை நோக்கும்போது, இந்தக் காப்பியம், மணிமேகலையைப் போன்றே ஆசிரியப்பாவினால் இயற்றப்பட்டிருக்கவேண்டும் எனத் தோன்றுகின்றது.

 

வளையாபதி:

 

ஐம்பெரும் காப்பியங்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் இப்போது இறந்துபட்டதாகலின், இது பௌத்தச் சார்பினதா, அன்றி ஜைனச் சார்பினதா என்று துணிந்துகூற இயலவில்லை. ஆயினும், இது பௌத்த நூல் என்று பலரால் கருதப்படுகின்றபடியால், இது இப்பகுதியில் சேர்க்கப்பட்டது. இக்காவியத்தினின்று எடுக்கப்பட்ட சில பாடல்கள் ‘புறத்திரட்டு’ என்னும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அன்றியும், சிலப்பதிகார உரையில் இரண்டு செய்யுள்களும், யாப்பருங்கல விருத்தியில் இரண்டு செய்யுள்களும் இக்காவியத்தினின்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இக்காவியத்தின் தலைவன் யாவன், அவன் வரலாறு யாது, இதன் ஆசிரியர் யாவர், எத்தனை அதிகாரங்களைக் கொண்டது என்பன தெரியவில்லை. இந்நூற் செய்யுள்களில் திருக்குறளிற் காணப்படும் சொற்களும் சொற்றொடர்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இக்காவியத்தின் செய்யுள்நடை மாதிரிக்காகக் கீழ்க்காட்டப்பட்ட செய்யுள்களில், இரண்டாவது செய்யுளில், திருக்குறள் ஒன்றனை இவ்வாசிரியர் எடுத்தாண்டிருப்பது நோக்கத்தக்கது.

 

கடவுள் வாழ்த்து.

 

 உலக மூன்று மொருங்குட னேத்து மாண்
        டிலக மாய திறலறி வன்னடி
        வழுவி னெஞ்சொடு வாலிதி னாற்றவுந்
        தொழுவல் தொல்வினை நீங்குக வென்றியான்.’         1.
    
      ‘ மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
        லுற்றார்க் குடம்பு மிகையிவை யுள்வழிப்
        பற்றா வினையாய்ப் பலபல யோனிக
        ளற்றா யுழலு மறுத்தற் கரிதே.’                     2.
      ‘ உயர்குடி நனியுட் டோன்றல், ஊனமில் யாக்கையாதல்,
        மயர்வறு கல்விகேள்வித் தன்மையால் வல்லராதல்,
        பெரிதுணர் வறிவே யாதல், பேரறங் கோடல் என்றாங்
        கரிதிவை பெறுத லேடா பெற்றவர் மக்க ளென்பார்.’     3.
      ‘ குலந்தரும் ; கல்வி கொணர்ந்து முடிக்கும் ;
        அலந்த கிளைக ளழிபசி தீர்க்கும் ;
        நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
        புலம்பில் பொருள்தரப் புன்கண்மை யுண்டோ ?’         4.
      ‘ பொறையிலா வறிவு, போகப் புணர்விலா விளமை, மேவத்
        துறையிலா வனசவாவி, துகிலிலாக் கோலத் தூய்மை,
       நறையிலா மாலை, கல்விநலமிலாப் புலமை, நன்னர்ச்
        சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வமன்றே.’     5.
      ‘ பொய்யன் மின்புறங் கூறன்மின், யாரையும்
        வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
        உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாட்
        செய்யன் மின்சிறி யாரோடு தீயன.’                  6.
      ‘ தொழுமக னாயினுந் துற்றுடை யானைப்
        பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப ;
        விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தால்
           பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப.’                 7.
           ‘ வித்தகர் செய்த விளங்குமுடி கவித்தார்
             மத்தக மாண்பழிதல் காண்வழி நெஞ்சே.
             மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே
             உத்தம நன்னெறிக்க ணில்வாழி நெஞ்சே.
             உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேல்
             சித்தி படர்தல் தௌ¤வாழி நெஞ்சே.’      
           8.

 

(தொடரும்)

 

http://fourladiesforum.com/2014/01/25/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/

Link to comment
Share on other sites

பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் – குண்டலகேசி

 

img_3275.jpg?w=419

 

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய இந்த நூல் இப்போது இறந்துபட்டது. ‘தருக்கமாவன : ஏகாந்த வாதமும் அனேகாந்த வாதமும் என்பன. அவை குண்டலம், நீலம், பிங்கலம், அஞ்சனம், தத்துவதரிசனம், காலகேசி முதலிய செய்யுட்களுள்ளும் சாங்கிய முதலிய ஆறு தரிசனங்களுள்ளும் காண்க’ என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் ‘மாலை மாற்றே சக்கரம் சுழிகுளம்’ என்னும் சூத்திர உரையில் கூறியிருப்பதனால், குண்டலகேசி தருக்கநூல் என்பது அறியப்படும். எனவே, பௌத்த சமயச் சார்பான இந்நூல் தருக்க வாயிலாக ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைக் கண்டிப்பதாகும். இது பெரும்பான்மையும் விருத்தப் பாவினால் இயற்றப்பட்டதாதலின், இதனைக் ‘குண்டலகேசி விருத்தம்’ என்றும் கூறுவர். ‘குண்டலகேசி முதலான காப்பிய மெல்லாம் விருத்தமாம்’ என்பது வீர சோழிய (யாப்பு. 23-ஆம் பாட்டு) உரை. எனினும், இடையிடையே கலித்துறைச் செய்யுள்களும் விரவியிருந்தன என்பது ‘குண்டலகேசி விருத்தம் . . . . . . . . . . . . . . . முதலாயினவற்றுட் கலித்துறைகளு முளவாம்’ எனவரும் வீர சோழிய (யாப்பு. 21-ஆம் செய்யுள்) உரையினால் விளங்குகின்றது. ‘குண்டலகேசி . . . . . . . . . முதலாகவுடையவற்றிற் றெறியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக் கவி செய்வானுக்கு அப்படி யல்லதாகாதென்பது. அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கியிருக்கும் என்றாலும் அமையுமெனக் கொள்க’ என்ற வீரசோழிய (அலங். 4-ஆம் செய்யுள்) உரைக் குறிப்பினால், இக்காவியத்தில் பொருள் தெரியாத சொற்கள் சில இருந்தன என்பது விளங்குகின்றது.

 

இந்நூலாசிரியர் நாதகுத்தனார் என்பவர். இதனை நீலகேசி 344 -ஆம் பாட்டுரையில் ‘புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு’ என்னும் குண்டல கேசிச் செய்யுள் அடியை எடுத்துக் காட்டி, நாதகுத்தனார் வாக்கெனக் குறிப்பிடுவதனால் அறியலாம். (கீழ்க்காணும் மாதிரிச் செய்யுள் 3 -ஆவது காண்க.)
மணிமேகலைக் காப்பியத்தின் தலைவி மணிமேகலை என்பவளின் பெயரையே அக்காப்பியப் பெயராக சூட்டினமை போல, இக்காவியத் தலைவியின் பெயர் குண்டலகேசி என்பதாதலின், இக்காப்பியத்திற்குக் குண்டலகேசி என்னும் பெயர் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள் புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில் வடநாட்டிலிருந்த ஒரு பெண் துறவி. இப்பெண்மணியின் வரலாறு பாளி மொழியில் எழுதப்பட்ட பௌத்த நூலாகிய ‘தேரிகாதையிலும்’, ‘தம்ம பாதா’, ‘அங்குத்தரநிகாயா‘ என்னும் நூலிலும் நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூல் (286 -ஆம் செய்யுள்) உரையிலும் கூறப்பட்டிருக்கின்றது. குண்டலகேசியின் வரலாற்றுச் சுருக்கம் வருமாறு :-

இராச கிருகம் என்னும் நகரத்தை அரசாண்ட அரசனது மந்திரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குப் பத்திரை எனப் பெயரிட்டுப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தார். இவ்வாறு வளர்ந்த அப்பெண் மகவு பெரியதாகி மணம் செய்யத்தக்க வயதினையடைந்தது. ஒருநாள், இப்பெண் தன் மாளிகையின் மேற்புறத்தில் உலாவியபோது, தெருவழியே கட்டழகு மிக்க காளையொருவனை அரசனது சேவகர் கொலைக்களத்துக்கு அழைத்துக்கொண்டு போவதைக் கண்டாள். கண்டதும் அக்காளையின்மேல் காதல் கொண்டாள். அவன் அரசனது புரோகிதன் மகன். வழிப்பறி செய்த குற்றத்திற்காகக் கொலைத்தண்டனை அடையப்பெற்றுக் கொலைகளத்திற்கு அழைத்தேகப்பட்டான். இக்குற்றவாளியின்மேல் காதல் கொண்ட பத்திரை, ‘அவனையே மணம் புரிவேன்; அன்றேல் உயிர் விடுவேன்’ என்று பிடிவாதம் செய்தாள். இதனையறிந்த இவள் தந்தை கொலையாளருக்குக் கைக்கூலி கொடுத்து அவனை மீட்டுக்கொண்டு வந்து நீராட்டி ஆடையணிகளை அணிவித்துப் பத்திரையை அவனுக்கு மணஞ் செய்வித்தான்.

மணமக்கள் இருவரும் இன்பமாக வாழும் காலத்தில் ஒருநாள், ஊடல் நிகழ்ச்சியின்போது பத்திரை தன் கணவனைப் பார்த்து, ‘முன்பு கள்வன் அல்லனோ?’ எனக் கூறினாள். அவன், அவள் தன்னை இகழ்ந்ததாகக் கருதி மிக்க சினங்கொண்டான். ஆயினும், அதனை அப்போது வெளியிற்காட்டாமல் அடக்கிக்கொண்டான்.

பின்னர், ஒரு நாள் அவன் பத்திரையை அழைத்து, அவளிடம், தன் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தை வழிபடும் பொருட்டு அருகிலிருக்கும் மலையுச்சிக்குப் போக விரும்புவதாகவும், அவளையும் உடன் வரும்படியாகவும் கூறினான். அவளும் இசைய, இருவரும் மலையுச்சிக்குச் சென்றனர். மலையுச்சியினை அடைந்தவுடன், அக்கொடியோன் அவளைச் சினந்து நோக்கி, ‘அன்று நீ என்னைக் கள்வன் என்று கூறினாயன்றோ? இன்று உன்னைக் கொல்லப்போகின்றேன். நீ இறக்குமுன் உனது வழிபடு கடவுளை வணங்கிக்கொள்’ என்றான். இதனைக் கேட்டுத் திடுகிட்ட அவள், ‘தற்கொல்லியை முற்கொல்லவேண்டும்’ என்னும் முதுமொழியைச் சிந்தித்து, அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிபவள்போல நடித்து, ‘என் கணவனாகிய உன்னையன்றி எனக்கு வேறு தெய்வம் ஏது? ஆதலின், உன்னையே நான் வலம்வந்து வணங்குவேன்’ என்று சொல்லி, அவனை வலம்வருவதுபோல் பின்புறம் சென்று, அவனை ஊக்கித் தள்ளினாள். இவ்வாறு அக்கொடியவன் மலையுச்சியினின்றும் வீழ்ந்து இறந்தான்.

இதன் பிறகு, பத்திரை உலகத்தை வெறுத்தவளாய், ஜைன மதத்தின் பிரிவாகிய நிகண்ட மதத்தில் சேர்ந்து துறவு பூண்டாள். அந்த மதக்கொள்கைப்படி, பத்திரையின் தலைமயிரைக் களைந்துவிட்டார்கள். ஆயினும், மீண்டும் தலையில் மயிர் வளர்ந்து சுருண்டு காணப்பட்டது. ஆகவே, ‘சுருண்ட மயிரினையுடையவள்’ என்னும் பொருள்படும் ‘குண்டலகேசி’ என்று அவளைக் கூறினர். இப்பெயரே பிற்காலத்தில் இவளுக்குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது. சில வேளைகளில் இவளது இயற்கைப் பெயரையும் காரணப் பெயரையும் ஒருங்கு சேர்த்துப் ‘பத்திரா குண்டலகேசி’ என்றும் சொல்வதுண்டு.

 

ஜைன மதத்திற் சேர்ந்த குண்டலகேசி ஜைனர்களிடம் சமய சாத்திரங்களையும் தர்க்க நூல்களையும் கற்றுத்தேர்ந்து, சமயவாதம் செய்யப் புறப்பட்டு, சென்றவிடமெங்கும் நாவல் நட்டு, வாதப்போர் செய்து வெற்றிகொண்டு வாழ்ந்தாள். (வாதப்போர் செய்வோர் நாவல் மரக்கிளையை ஊர்நடுவில் நட்டு வாதுக்கழைப்பது அக்கால வழக்கம்.) இவ்வாறு நிகழுங்கால், ஒருநாள் ஓர் ஊரையடைந்து, அவ்வூர் நடுவில் மணலைக் குவித்து நாவற்கிளையை நட்டு, உணவுபெறுவதற்காக வீடுதோறும் சென்றாள். அவ்வமயம் புத்தர் தமது சீடர்களுடன் அவ்வூருக்கருகிலிருந்த ஒரு தோட்டத்தில் வந்து தங்கினார். அவரது சீடர்களில் சாரிபுத்தர் என்பவர் உணவுக்காக அவ்வூர்க்குட் சென்றார். சென்றவர் அங்கு நாவல் நட்டிருப்பதைக் கண்ணுற்று, அதன் காரணத்தை அங்கிருந்தவர்களால் அறிந்து, அங்கிருந்த சிறுவர்களை அழைத்து, அக்கிளையினைப் பிடுங்கி எறியும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.

பின்னர், உணவு கொள்ளச் சென்ற குண்டலகேசி மீண்டும் திரும்பி வந்தபோது, தான் நட்ட நாவல் வீழ்த்தப்பட்டிருப்பதைக் கண்டு, அதனை வீழ்த்தியவர் அருகிலிருந்த சாரிபுத்தர் என்பதனையறிந்து, அவ்வூர்ப் பெரியோரை அழைத்து, அவை கூட்டச்செய்து, சாரி புத்தருடன் வாதம் செய்யத் தொடங்கினாள். நெடுநேரம் நடைபெற்ற வாதத்தில் குண்டலகேசி வினாவிய வினாக்களுக்கெல்லாம் சாரி புத்தர் விடையளித்தார். பின்னர், சாரிபுத்தர் வினாவிய வினாவுக்குக் குண்டலகேசி விடையிறுக்கத் தெரியாமல் தான் தோற்றதாகச் சொல்லி, அவர் காலில் விழுந்து வணங்கி, அவரை அடைக்கலம் புகுந்தாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் பார்த்து, ‘என்னிடம் அடைக்கலம் புகாதே, எனது குரு புத்த பகவானிடம் அடைக்கலம் புகுவாயாக’ என்று சொல்லி அவளை அழைத்துச் சென்று புத்தரை வணங்கச் செய்தார். புத்தர் அவளுக்கு உபதேசம் செய்து, அவளைப் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதுவே குண்டலகேசி என்னும் தேரியின் வரலாறு.

இந்தக் குண்டலகேசி என்பவள் சமயவாதம் செய்யப் புறப்பட்டு, ஜைனம், வைதீகம் முதலான சமயங்களைத் தருக்க முறையாகக் கண்டிப்பதாக இயற்றப்பட்டதுதான் குண்டலகேசி காப்பியம் என்பது. இந்தக் குண்டலகேசிக்கு விடையிறுத்து, ஜைனமதக் கொள்கையை நாட்ட இயற்றப்பட்டது, நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி இயற்றப் படாமலிருந்திருந்தால், நீலகேசியும் இயற்றப்பட்டிருந்திராது. இப்போது நீலகேசி உயிருடன் இருக்க, குண்டலகேசியோ இறந்து பட்டது. இது சமயப் பொறாமையின் விளைவு, சமயப்பகை தமிழ் நாட்டில் பெருந்தீங்கு விளைத்திருக்கின்றது. நினைத்தால் மனம் பதறுகின்றது. குண்டலகேசியை இழந்துவிட்டது தமிழ் நாட்டிற்குப் பெருங்குறையே, ஏனென்றால், தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்கள், சரித்திரக் குறிப்புகள், அக்காலத்திலிருந்த சமயங்கள்,. அவற்றின் கொள்கைகள் இவற்றையும், அக்காலத்தில் தமிழ் நாட்டுப் பௌத்த மதக்கொள்கைகளையும், அம்மதத்தின் நிலைமையையும் தெரிவிக்கக்கூடிய ஒரு நூலை நாம் இழந்துவிட்டோம். இந்த நூல் இயற்றப்பட்ட காலம் தெரியவில்லை.

குண்டலகேசி இறந்துவிட்டது. ஆயினும், பல நூல்களினின்றும் தொகுக்கப்பட்ட ‘புறத்திரட்டு‘ என்னும் நூலில் குண்டலகேசிச் செய்யுள்கள் காணப்படுகின்றன. அன்றியும், தொல்காப்பிய உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை என்னும் இவற்றில் குண்டலகேசிச் செய்யுள்கள் சில மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. செய்யுள் நடை மாதிரிக்காக அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகின்றோம் :-

 

கடவுள் வாழ்த்து

‘ முன்றான் பெருமைக்க ணின்றான் முடிவெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே பொழிந்தான் தனக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தா
னன்றே யிறைவ னவன்றாள் சரணங்க ளன்றே. ‘
‘ நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்ககில்லார்
தீக்குற்ற காதலுடையார் புகைத்தீமை யோரார்
போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறுவேற்கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழு வல்லவன்றே. ‘
‘ எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடன் பின்பத்துக்காமேல்
தினைப் பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவுமாகி
நுழைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்ட
இனைய உடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ. ‘
‘ வகையெழிற் றோள்களென்று மணிநிறக் குஞ்சி யென்றும்
புகழெழ விகற்பிக்கின்ற பொருளில்கா மத்தை மற்றோர்
தொகையெழுங் காதல் தன்னால் துய்த்துயாந் துடைத்துமென்பார்
அகையழ லழுவந்தன்னை நெய்யினால விக்கலாமோ ‘
‘ அனலென நினைப்பிற் பொத்தி யகந்தலைக் கொண்ட காமக்
கனலினை யுவர்ப்பு நீராற் கடையற வலித்து மென்னார்
நினைவிலாப் புணர்ச்சி தன்னால் நீக்குது மெனறு நிற்பார்
புனலினைப் புனலினாலே யாவர்போ காமை வைப்பார். ‘
‘ பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்துங்
காளையாந் தன்மை செத்தும் காமுறு மிளமை செத்தும்
மீளுமிவ் வியல்பு மின்னே மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின்றோமால் நமக்குநா மழாத தென்னோ. ‘

 

(தொடரும்)

 

http://fourladiesforum.com/2014/01/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கொலை செய்யப்பட்ட பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள்!

 

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டிலே பௌத்தமதம் செல்வாக்குற்றுச் சிறந்திருந்ததென்பதை அறிந்தோம். அந்த மதக்கொள்கைகளை நன்கறிந்த பௌத்த ஆசிரியர் பற்பலர் ஆங்காங்கே தமிழ் நாட்டில் இருந்ததையும் கண்டோம். அந்தப் பௌத்த ஆசிரியர் பாளிமொழியில் பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதையும் அறிந்தோம். ஈண்டு, பௌத்த ஆசிரியர் தமிழ்மொழியில் என்னென்ன நூல் இயற்றியுள்ளார் என்பதை ஆராய்வோம்.

 

இப்போது தமிழில் உள்ள பௌத்த நூல்கள் மிகச்சில. இலக்கியத்தில் ஒன்றும் இலக்கணத்தில் ஒன்றும் ஆக இரண்டு நூல்களே இப்போது முழுநூலாக எஞ்சி நிற்கின்றன. ஏனைய நாலைந்து நூல்களின் பெயர்மட்டும் வழங்கப்படுகின்றனவேயன்றி நூல் முழுவதும் கிடைக்கப் பெற்றிலம்.

 

ஜைனரும், பௌத்தரும் தத்தம் மதக்கொள்கைகளை அந்தந்த நாட்டுத் தாய்மொழி வாயிலாகப் பரவச் செய்தனர் என்று ‘பௌத்தரும் தமிழும்’ என்னும் அதிகாரத்தில் கூறினோம். அங்ஙனமாயின், தமிழ் மொழியிலும் அவர்கள் பல நூல்களை இயற்றியிருக்கவேண்டுமன்றோ? ஆம். பல நூல்களை இயற்றிவைத்தனர் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. கி. பி. நான்காம் நூற்றாண்டில் உரகபுரம் (உறையூர்), பூம்புகார், பூதமங்கலம் முதலான இடங்களில் தங்கிப் பௌத்தமத ஊழியம் புரிந்துவந்த பேர்பெற்ற புத்ததத்தர் என்னும் தமிழப் பௌத்தர், பாளிமொழியில் பாளிமொழி நூல்களுக்குப் பல உரைகள் எழுதியிருப்பதில், தென்னாட்டில் வழங்கிய பல பௌத்தக் கொள்கைகளை எடுத்துக் கூறியிருக்கிறார் என்றும், அவற்றை அக்காலத்திருந்த தமிழ்ப் பௌத்த நூல்களினின்றும் எடுத்திருக்கக்கூடும் என்றும் ரைஸ் டேவிட் என்னும் மேல்நாட்டு ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். நீலகேசி உரையிலும், வீரசோழிய உரையிலும் பௌத்தமதச் செய்யுள்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, அவற்றில் சில பாடல்கள் எந்த நூலினின்று எடுக்கப்பட்டன என்பது அறியக்கூடாமல் இருக்கின்றது. எனவே, பண்டைக் காலத்தில், பௌத்தமதம் தமிழ் நாட்டில் வழங்கிவந்தபோது, பௌத்தரால் இயற்றப்பட்ட பல தமிழ் நூல்கள் இருந்தன என்பதில் ஐயமில்லை.

 

அங்ஙனமாயின், அந்த நூல்கள் இப்போது எங்கே? இவ்வினாவிற்கு விடைபெறுவது கடினமன்று. பௌத்த மதத்துக்குப் பெரும் பகைஞராக இருந்தவர் ஜைனரும் வைதீகரும் என்பதனை மூன்றாம் அதிகாரத்தில் அறிந்தோம். பௌத்த மதத்தின் பிறவிப் பகைஞராகிய இவர்களால் பௌத்த நூல்கள் அழியுண்டனபோலும். பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற சமயப்போரில், வைதீக மதம் ஜைன மதத்தை அழித்துவிட்டபோதிலும், சில ஜைனர் ஆங்காங்கே தமிழ்நாட்டில் அருகிக் காணப்படுகின்றனர். இவ்வாறு எஞ்சி நின்ற ஜைனரால் ஜைனமத நூல்கள் சில இறந்துபடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால், பௌத்த மதம் ஜைன மதத்தைவிடக் கடுமையான வீழ்ச்சியை அடைந்துவிட்டது. பௌத்தத் தமிழ் நூல்களைப் போற்றிப் பாதுக்காக்கத் தமிழப் பௌத்தர் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழ்ப் பௌத்த நூல்கள் எவ்வாறு உயிர்பெற்றிருக்கும்?அவையாவும் ‘கொலை’ செய்யப்பட்டன. இப்போது எஞ்சி நிற்கும் இரண்டொரு பௌத்த நூல்கள் எவ்வாறு தப்பிப் பிழைத்திருக்கின்றன என்பதே எமக்குப் பெருவியப்பாக இருக்கின்றது. தமிழ் நாட்டுப் பௌத்த ஆசிரியர் இயற்றிய பாளிமொழி நூல்கள் மட்டும் எவ்வாறு இன்றும் நின்று நிலவுகின்றன என்றால், அவை இலங்கை, பர்மா முதலான தேசத்துப் பௌத்தர்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்ப் பௌத்த நூல்களைப் போற்றுவதற்குத் தமிழப் பௌத்தர் இல்லாத படியால், அவை இறந்துபட்டன.

 

பௌத்த நூல்களை இழந்துவிட்டோம். அஃதாவது, தமிழ் இலக்கியச் செல்வத்தின் ஒரு பகுதியைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. ஒரு நாடு தனது பொருட் செல்வத்தை இழந்து வறுமைப்படுவதைவிட இலக்கியச் செல்வத்தை இழந்துவிடுவது பெரிதும் வருந்தத்தக்கது. என்செய்வது? சென்றது சென்றுவிட்டது. இனி, தமிழில் இப்போது எஞ்சியுள்ள பௌத்த நூல்களைப்பற்றி ஆராய்வோம்.

 

தொடரும்…

 

http://fourladiesforum.com/2013/12/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/

Link to comment
Share on other sites

பெளத்தர் இயற்றிய முதன்மையான நூல்!

 

தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப்பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப் பட்டன. மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த மூன்றில் மணிமேகலையைத் தவிர மற்ற இரண்டும் இறந்துவிட்டன. மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படுகின்றபோதிலும், இது சிலப்பதிகாரத்துடன் தொடர்புடையது. இதனை

‘ மணிமே கலைமே லுரைப்பொருண் முற்றிய
           சிலப்பதிகார முற்றும் ‘

என்னும் சிலப்பதிகார வஞ்சிக்காண்டக் கட்டுரைச் செய்யுட் பகுதியினால் அறியலாம். எனவே, சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஒரே காப்பியம் என்று கூறினும் பொருந்தும். ஆயினும், ஆன்றோர் இவையிரண்டனையும் வெவ்வேறு காப்பியங்களாகவே கொண்டனர். மணிமேகலையை இயற்றியவர் மதுரைக் கூலவாணிகர் சீத்தலைச் சாத்தனார். (இவரது வரலாற்றினை ஏற்கனவே பார்த்தோம்.) இந்நூல் முழுவதும் ஆசிரியப்பாவினால் அமைந்தது. ‘கதை பொதி பாட்டு’ என்னும் பதிகத்தைத் தவிர்த்து, ‘விழாவறை காதை’ முதலாகப் ‘பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை’ இறுதியாக முப்பது காதைகளையுடையது. இதற்கு மணிமேகலை துறவு என்றும் பெயர் உண்டு. இதனை இயற்றிய சாத்தனார், இளங்கோவேந்தர் என்னும் இளங்கோ அடிகள் முன்னிலையில் இதனை அரங்கேற்றினார். இவற்றை,

‘ இளங்கோ வேந்த னருளிக் கேட்ப
            வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
            மாவண் டமிழ்த்திற மணிமே கலைதுற
            வாறைம் பாட்டினு ளறியவைத் தன்னென் ‘

எனவரும் பதிக ஈற்றடிகளால் அறியலாம்.

மணிமேகலை பல திறத்தானும் சிறப்புடைய நூல், சொல் வளமும் பொருள் ஆழமும் செறிந்து திகழும் இந்நூல் வெறும் இலக்கியமட்டும் அன்று. பண்டைத்தமிழ் நாட்டின் வரலாற்றினையும், கலைகளையும், நாகரிகத்தினையும், அக்காலத்திலிருந்த சமயங்கள் அவற்றின் கொள்கைகள் முதலியவற்றையும், அக்கால வழக்க ஒழுக்கங்களையும் ஆராய்வதற்கு இது பெரிதும் பயன்படுகின்றது. இந்த மணிமேகலை நூல் தமிழ்த்தாய்க்கு அணி செய்யும் மணிமேகலையாகவே இலங்குகின்றது. இந்த நூல் இயற்றப்பட்ட காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு.

சுவை மலிந்த இச்செந்தமிழ் நூலை முதன் முதல் அச்சிற் பதிப்பித்தவர் மகாவித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்களாவர். 1894 – ஆம் ஆண்டுக்கு நேரான ‘விஜய தனுர் ரவி’யில் இப்புத்தகம் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டு, 12 -அணாவுக்கு விற்கப்பட்டது. மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் தம்மிடமிருந்த ஏட்டுச்சுவடியைமட்டும் ஆராய்ந்து வெளியிட்ட நூலாதலின், இதில் சிற்சில பிழைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பிள்ளையவர்கள் பதிப்பு வெளிவந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், டாக்டர் சாமிநாத ஐயரவர்கள் பல பிரதிகளை ஆராய்ந்து 1898 -ஆம் ஆண்டில் அரும்பத உரையுடன் இந்நூலை அச்சிற் பதிப்பித்தார்கள். ஐயரவர்களுக்கு உதவியாயிருந்த பல ஏட்டுப் பிரதிகளுள் மகா வித்துவான் சண்முகம் பிள்ளையவர்கள் உதவிய பிரதியும் ஒன்றாகும். பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலைப் புத்தகத்தையும் ஐயரவர்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், எக்காரணத்தினாலோ, ஐயரவர்கள் பிள்ளையவர்கள் பதிப்பித்த மணிமேகலையைப்பற்றிக் குறிப்பிடாமலேயேயிருந்துவிட்டார்கள். பிள்ளையவர்களின் பதிப்பில் காணப்பட்ட பிழைகள் பலவும் ஐயரவர்களின் பதிப்பில் திருத்தப்பெற்றன. எஞ்சி நின்ற ஒரு சில பிழைகளும் இரண்டாவது, மூன்றாவது பதிப்புகளில் திருத்தப்பெற்றன. இந்த அருமையான சிறந்த செந்தமிழ் நூல் இறந்துபடாமல் உய்வித்தருளிய இரண்டு பெரியாருக்கும் தமிழ் நாட்டின் நன்றி என்றும் உரியதாகுக.
இந்நூல் நடையினை அறியக் கீழே சில பகுதிகளை எடுத்துக்காட்டுவோம்.

 

புகார்ப்பட்டினத்தின் உவவனம் என்னும் பூஞ்சோலையைக் கூறும் பகுதி இது :-

 

  ‘ குரவமு மரவமுங் குருந்துங் கொன்றையுந்
        திலகமும் வகுளமுஞ் செங்கால் வெட்சியும்
        நரந்தமு நாகமும் பரந்தலர் புன்னையும்
        பிடவமுந் தளவமு முடமுட் டாழையுங்
        குடசமும் வெதிரமுங் கொழுங்கா லசோகமுஞ்
        செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண் பகமும்
        எரிமல ரிலவமும் விரிமலர் பரப்பி
        வித்தக ரியற்றிய விளங்கிய கைவினைச்
        சித்திரச் செய்கைப் படாம்போர்த் ததுவே
        ஒப்பத் தோன்றிய வுவவனந் தன்னைத்
        தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
        மலர்கொய்யப் புகுந்தனள் மணிமே கலையென். ‘

                                   (மலர்வனம் புக்க காதை, 160 – 171.) 

மேற்சொன்ன உவவனத்திற் சென்றது மணிமேகலைக்கு அதுவே முதல் தடவையாதலின், அவளுடன் சென்ற சுதமதி என்பவள், அப்பூஞ்சோலையின் இயற்கை எழிலினை மணிமேகலைக்குக் காட்டி விளக்குகின்றாள். அப்பகுதி இது :-

‘ பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்
        கிருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில்
        குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட
        மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய
        வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்
        மயிலா டரங்கின் மந்திகாண் பனகாண் !
        மாசறத் தௌ¤ந்த மணிநீ ரிலஞ்சிப்
        பாசடைப் பரப்பிற் பன்மல ரிடைநின்
        றொருதனி யோங்கிய விரைமலர்த் தாமரை
        அரச வன்ன மாங்கினி திருப்பக்
        கரைநின் றாலும் ஒருமயில் தனக்குக்
        கம்புட் சேவற் கனைகுரன் முழவாக்
        கொம்ப ரிருங்குயில் விளிப்பது காணாய் !
        இயங்குதேர் வீதி யெழுதுகள் சேர்ந்து
        வயங்கொளி மழுங்கிய மாதர்நின் முகம்போல்
        விரைமலர்த் தாமரை கரைநின் றோங்கிய
        கோடுடைத் தாழைக் கொழுமட லவிழ்ந்த
        வால்வெண் சுண்ண மாடிய திதுகாண் !
        மாதர் நின்கண் போதெனச் சேர்ந்து
        தாதுண் வண்டின மீதுகடி செங்கையின்
        அஞ்சிறை விரிய வலர்ந்த தாமரைச்
        செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்
        கெறிந்தது பெறா’அ திரையிழந்து வருந்தி
        மறிந்து நீங்கு மணித்திரல் காண் ! எனப்
        பொழிலும் பொய்கையஞ் சுதமதி காட்ட
        மணிமே கலையம் மலர்வனம் காண்புழி. ‘

                            (பளிக்கறை புக்க காதை, 1 – 26.)

கீழ்க்காணும் பகுதி மாலைப்பொழுதின் இயற்கையை இனிது விளக்குகின்றது :-

‘ அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
        தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
        பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்
        டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற
        அன்றிற் பேடை யரிக்குர லழைஇச்
        சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
        பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
        குவளை மேய்ந்த குடக்கட் சேதா
        முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
        கன்றுநினை குரல மன்றுவழிப் படர
        அந்தி யந்தணர் செந்தீப் பேணப்
        பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
        யாழோர் மருதத் தின்னரம் புளரக்
        கோவலர் முல்லைக் குழன்மேற் கொள்ள
        அமரக மருங்கிற் கணவனை யிழந்து
        தமரகம் புகூஉ மொருமகள் போலக்
        கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ
        டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
        வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென். ‘

 

(மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை, 123 – 141.)
காலை வேளையின் இயற்கையைச் சாத்தனார் கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார் :-
‘ காவ லாளர் கண்டுயில் கொள்ளத்
        தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
        வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
        புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
        புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்பப்
        பொறிமயிர் வாரணங் குறுங்கூ விளிப்பப்
        பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப்
        பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தால
        பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
        பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பக்
        கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
        குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
        கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
        ஊர்துயி லெடுப்ப வுரவுநீ ரழுவத்துக்
        காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்’.
        
                                     (துயிலெழுப்பிய காதை, 111 – 126.)

(தொடரும்)

http://fourladiesforum.com/2013/12/27/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/

Link to comment
Share on other sites

  • 1 month later...

பெளத்தம் தமிழுக்குத் தந்த பாளிமொழிச் சொற்கள்!

 

 

76585587oe2.jpg

 

வாணிகம், மதம், அரசாட்சி முதலிய தொடர்புகளினாலே ஒரு தேசத்தாரோடு இன்னொரு தேசத்தார் கலந்து உறவாடும்போது அந்தந்தத் தேசத்து மொழிகளில் அயல்நாட்டுச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் வெவ்வேறு பாஷைச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். இந்த இயற்கைப்படியே தமிழிலும் வெவ்வேறு மொழிச் சொற்கள் சில கலந்து வழங்குகின்றன. இவ்வாறு கலந்து வழங்கும் வேறுமொழிச் சொற்களைத் திசைச்சொற்கள் என்பர் இலக்கண ஆசிரியர். தமிழில் போர்ச்சுகீசு, ஆங்கிலம், உருது, அரபி முதலிய அயல்மொழிச் சொற்கள் சில கலந்துவிட்டது போலவே, பாகத (பிராகிருத) மொழிகளில் ஒன்றான பாளி மொழியிலிருந்தும் சில சொற்கள் கலந்து காணப்படுகின்றன. பாளி மொழி இப்போது வழக்காறின்றி இறந்து விட்டது. என்றாலும், பண்டைக் காலத்தில், வட இந்தியாவில் மகதம் முதலான தேசங்களில் அது வழக்காற்றில் இருந்துவந்தது. ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’ எனப் போற்றப்படும் கௌதம புத்தர், இந்தப் பாளி மொழியிலேதான் தமது உபதேசங்களை ஜனங்களுக்குப் போதித்து வந்தார் என்பர். பாளி மொழிக்கு மாகதி என்றும் வேறு பெயர் உண்டு. மகத நாட்டில் வழங்கப்பட்டதாகலின், இப்பெயர் பெற்றது போலும்.

 

வைதீக மதத்தாருக்குச் சம்ஸ்கிருதம் ‘தெய்வ பாஷை’யாகவும் ஆருகதருக்குச் சூரசேனி என்னும் அர்த்த மாகதி ‘தெய்வ பாஷை’யாகவும் இருப்பதுபோல, பௌத்தர்களுக்கு மாகதி என்னும் பாளிமொழி ‘தெய்வபாஷை’யாக இருந்துவருகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட பௌத்த நூல்கள் எல்லாம் பாளிமொழியிலே எழுதப்பட்டுவந்தன. பிற்காலத்தில், மகாயான பௌத்தர்கள், பாளி மொழியைத் தள்ளி, சம்ஸ்கிருத மொழியில் தமது சமய நூல்களை இயற்றத் தொடங்கினார்கள். ஆனாலும், தென் இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களில் உள்ள பௌத்தர்கள் தொன்று தொட்டு இன்று வரையில் பாளிமொழியையே தங்கள் ‘தெய்வ மொழி’யாகப் போற்றிவருகின்றார்கள்.

 

பௌத்த மதம், தமிழ் நாட்டில் பரவி நிலைபெற்றிருந்த காலத்தில், அந்த மதத்தின் தெய்வ பாஷையான பாளி மொழியும் தமிழ் நாட்டில் இடம் பெற்றது. பாளிமொழி தமிழ் நாட்டில் இடம் பெற்றிருந்தது என்றால், தமிழ் நாட்டுப் பௌத்தர்கள் அந்த மொழியைப் பேசிவந்தார்கள் என்று கருதக்கூடாது. பாளிமொழி ஒரு போதும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால், பௌத்தக் குருமாரான தேரர்கள் பாளிமொழியில் இயற்றப்பட்ட தமது மதநூல்களைப் படித்துவந்தார்கள். பிராமணர்கள், தமது மதவிஷயங்களை அறியத் தமது ‘தெய்வமொழி’யான சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல்களைப் படிப்பதும், உலக நடவடிக்கையில் தமிழ், தெலுங்கு முதலான தாய்மொழிகளைக் கையாளுவதும் போல, பௌத்தப் பிக்ஷக்களும் தமது மதநூல்களை மட்டும் பாளிமொழியில் கற்றும், உலக வழக்கில், தமிழ் நாட்டினைப் பொறுத்தமட்டில், தமிழ் மொழியைக் கையாண்டும்வந்தார்கள். இந்தப் பிக்ஷக்கள் பொது மக்களுக்குப் பாளிமொழி நூலிலிருந்து மத உண்மைகளைப் போதித்த போது, சில பாளிமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன. இவ்வாறே, அர்த்த மாகதி என்னும் வேறு பாகத மொழிச் சொற்களும், சம்ஸ்கிருதமொழிச் சொற்களும் ஆருகத மதத்தவராகிய ஜைனர்களாலே தமிழில் கலந்துவிட்டன. ஆருகதரும் பௌத்தரும் தமிழை நன்கு கற்றவர். அதனோடு பாகத, சம்ஸ்கிருத மொழிகளையும் பயின்றவர்.

 

இதனைஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கதமாப்  பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் . . . . . . . . . . . . ‘   

என்று சமணரைப்பற்றித் திருஞான சம்பந்தர் திருவாலவாய்ப் பதிகத்தில் கூறியிருப்பதனாலும் அறியலாம். மாகதி என்னும் பாளிமொழிச் சொற்கள் சில தமிழில் கலந்துள்ளன என்பதைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியதிலிருந்தும் உணரலாம். 410-ஆம் தாழிசை உரையில், ‘ஐயை – ஆரியை. இதன் பொருள் உயர்ந்தோளென்பது. ஆரியையாவது சங்கிருதம்; அஃது ஐயையென்று பிராகிருதமாய்த் திரிந்தவாறு; மாகதமென்னலுமாம்’ என்று எழுதியிருப்பதைக் காண்க. அன்றியும், 485-ஆம் தாழிசையுரையில் ‘தளம்=எழு; இது பஞ்சமா ரூடபத்திர தளம்; இது மாகதம்’ என எழுதியிருப்பதையுங் காண்க. தமிழ்நாட்டிலே, காஞ்சீபுரம், காவிரிப்பூம்பட்டினம் (புகார்), நாகைப்பட்டினம், உறையூர், பூதமங்கலம், மதுரை, பாண்டி நாட்டுத் தஞ்சை, மானாவூர், துடிதபுரம், பாடலீபுரம், சாத்தமங்கை, போதிமங்கை, சங்கமங்கை, அரிட்டாபட்டி, பௌத்தபுரம் முதலான ஊர்களில் பாளிமொழியை நன்கறிந்திருந்த பௌத்த ஆசிரியர் பண்டைக்காலத்திருந்தனர் என்பது பௌத்த நூல்களாலும் பிற நூல்களாலும் தெரிய வருகின்றது. பாளிமொழியை நன்கு கற்றுத் தேர்ந்து, அந்த மொழியில் நூல்களை இயற்றிய தமிழ்நாட்டுப் பௌத்த ஆசிரியர்களின் வரலாற்றினைத் ‘தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்’ என்னும் தலைப்பெயரையுடைய அதிகாரத்தில் காண்க. இது நிற்க. தமிழில் கலந்து வழங்கும் பாளிமொழிச் சொற்கள் அனைத்தினையும் எடுத்துக்காட்ட இயலவில்லை. அவ்வாறு செய்வது தமிழ், பாளி என்னும் இருமொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்களால்மட்டுமே இயலும். ஆயினும், பாளிமொழிச் சொற்கள் தமிழில் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை. யாம் அறிந்தமட்டில், தமிழில் வழங்கும் பாளிச்சொற்கள் சிலவற்றைக் கீழே தருகின்றோம் :

  • ஆராமம்  : பூந்தோட்டம் என்பது பொருள். பௌத்தரின் பள்ளி, விகாரை, தூபி முதலியவை இருக்கும் இடத்தைச் சேர்ந்த பூஞ்சோலைகளுக்கு இப்பெயர் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. இச்சொல் மணிமேகலையில் வந்துள்ளது.
  • சமணர் :  இப்பெயர் ஜைன, பௌத்தத் துறவிகளுக்குப் பொதுப்பெயர். ஆயினும், இப்போது தமிழ்நாட்டில் ஜைன மதத்தினரைமட்டும் குறிக்கத் தவறாக வழங்கப்படுகின்றது. வடமொழியில் இது ‘ஸ்ரமணர்’ என்று வழங்கப்படுகிறது. இச்சொல் தேவாரம், மணிமேகலை முதலிய நூல்களில் காணப்படுகின்றது.
  • சைத்தியம்; சேதியம்; தூபம்; தூபி  : இச்சொற்கள் பௌத்தர் வணங்குதற்குரிய கட்டிடங்கள், ஆலயங்கள், முதலியவற்றைக் குறிக்கின்றன. ‘தூபம்’, ‘தூபி’ என்பனவற்றை ‘ஸ்தூபம்’, ‘ஸ்தூபி’ என்னும் வடமொழிச் சொற்களின் தமிழ்த் திரிபாகவும் கொள்ளலாம். ஆயினும், பாளிமொழியிலிருந்து தமிழில் வந்ததாகக் கொள்வதுதான் பொருத்த முடையது. இச்சொற்களை மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் காணலாம்.
  • தேரன், தேரி   இவை பௌத்தத் துறவிகளில் மூத்தவர்களுக்கு வழங்கும் ஆண்பாற் பெண்பாற் பெயர்கள். இச்சொற்கள் மணிமேகலை, நீலகேசி, தேவாரம் முதலிய நூல்களில் வந்துள்ளன.
  • பிக்ஷ, பிக்ஷணி   (பிக்கு, பிக்குணி) முறையே பௌத்த ஆண், பெண் துறவிகளைக் குறிக்கின்றன. மணிமேகலை, நீலகேசி முதலிய நூல்களில் இச்சொற்கள் காணப்படுகின்றன.
  • விகாரை, விகாரம் :  பௌத்தக் கோயிலுக்கும், பிக்ஷக்கள் வாழும் இடத்துக்கும் பெயர்.
  • வேதி, வேதிகை  : திண்ணை என்பது பொருள். அரசு முதலான மரங்களின்கீழ் மக்கள் தங்குவதற்காகக் கட்டப்படும் மேடைக்குப் பெயர்.

(தொடரும்)

 

http://fourladiesforum.com/2014/01/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D/

Link to comment
Share on other sites

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

 

76585587oe2.jpg

 

ஆசீவக மதம்

பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் ‘கோசால’ என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.
‘மக்கலி’ என்பது வடநாட்டில் பண்டைக் காலத்திலிருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தாருக்குப் பெயரென்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். ‘மக்கலி’ என்பது இவருடைய தந்தையின் பெயர், ஆகையால் இவருக்கு ‘மக்கலிபுத்திரர்’ என்னும் பெயர் வழங்கியதென்று வேறுசிலர் உரைப்பர்.

மக்கலி, அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தை யுண்டாக்கிய மகா வீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதம புத்தரும் உயிர் வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்துவந்த காலத்தில், அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரது உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் ‘ஆசீவகமதம்’, அல்லது ‘ஆஜீவகமதம்’ என்பது. ஆருகதமதக் கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது.

சற்றேறத்தாழ கி. மு. 500-இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடு பெற்றார் என்பர். மகாவீரர் வீடு பெற்ற சில ஆண்டுக்குப் பின்னர், கௌதம புத்தர் நிர்வாணம் அடைந்தார்.

ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய இந்த மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

ஆசீவக மதக் கொள்கைகளைக் கூறும் நூலுக்கு ‘நவ கதிர்’ என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப்பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூய வெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும் தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர் நிலைப்பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர்தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு லட்சம் மகா கல்பகாலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும் இந்த நியதி மாறி உயிர்கள் வீடுபேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடுபெறான்; அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருக்கும் ஒருவன் கால நியதியைக் கடந்து, தீய கருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல விரும்பினாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும், அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாகவேண்டும் என்பதும் இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

நவகதிரையன்றி, ‘ஆதித்தியம்’ என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, ‘ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப்பற்றியிருக்கும்; அது சோதி சாத்திரமெனவுணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வான மண்டல வரவுடையாரெனப் படுவர்’ என்று கூறும் தக்கயாகப் பரணி (183-ஆம் தாழிசை) உரைப் பகுதியினால் அறியப்படும்.

மற்கலிக்குப் ‘பூரணர்’ என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க் கண்டவாறு ‘நீல கேசி’ என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

’ உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
திரையா னரையான் றெரிவில் லுருவம்
வரையா வகை வானிடுவில் லனையன்
புரையா வறிவிற் புகழ் பூரணனே ‘
(ஆஜீவக வாதச் சருக்கம் 15-ஆம் செய்யுள்.)

‘வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவு முடையனல்லானாகி ஆகாச தலத்து இந்திர தனுசுப்போலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றம்படாத வறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு’ (மேற்படி உரை.)

ஆசீவக மதத் துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப் பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

‘ தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
பாழியிற் பிணங்குளுந் துளப்பெழப் படுத்தியே ‘

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர், ‘தாழி – முதுமக்கட் சாடி * * * தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம் செய்வராதலின், அவரைச் சுட்டி நின்றது’ என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

மேலே காட்டிய உரைப் பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகின்றது. அதாவது, ஆசீவகமதம் ஆருகத மதமாகிய ஜைன மதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘மணிமேகலை’, ‘நீலகேசி’ என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவகமதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இந்தத் தவறுதலைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப் பரணியுரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம் ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

‘சாவகர் அருகர் சமணர் ஆகும் ;
ஆசீ வகரும் அத்தவத் தோரே ‘ – சேந்தன் திவாகரம்.
’சாவகர் அருகர் சமணர் அமணர் ;
ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே ‘ – பிங்கல நிகண்டு.

‘சிவஞான சித்தியார்’ என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றான திகம்பர ஜைன மதம் என்று தவறாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். ‘திகம்பரமொப்பினும் அநேகாந்த வாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க’ என்று எழுதியிருக்கிறார். அதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப்போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். ‘மணிமேகலை’, ‘நீல கேசி’ என்னும் இரண்டு நூல்களைத் தவிர, பிற்காலத்து நூல்களாகிய ‘சிவஞான சித்தியார்’, ‘தக்கயாகப் பரணி’, ‘திவாகரம்’, ‘பிங்கல நிகண்டு’ முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம் என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவக மதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டுவந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி இருத்தலும், குளியாமல் அழுக்குடம்போடு இருத்தலும், இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப் பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும், இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவக மதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிற்காலத்தில் தவறாகக் கருதப்பட்டது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.

இந்த மதத்தைப்பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. ‘மணிமேகலை’ என்னும் பௌத்த நூலிலும் (சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை), ‘நீலகேசி’ என்னும் ஜைன நூலிலும் (ஆசீவக வாதச் சருக்கம்), ‘சிவஞானசித்தியார்’ என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவகமதம்) இந்த மதக்கொள்ளைகளை எடுத்துக்கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப்பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும், Encylopaedia of Religion and Ethics by James Hastings என்னும் ஆங்கில நூலும் உதவிபுரியும்.

இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது, தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக ‘நீலகேசி’ என்னும் நூல் கூறுகின்றது. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும் கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு, உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

’கண்ணகி தாதை கடவுளர் கோலத்
தண்ணலம் பெருந்தவத் தாசீவகர் முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் ‘ – (நீர்ப்படைகாதை.)
எனவரும் அடிகளால் இதனை அறியலாம்.

இராச இராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலா சாசனங்களில் ‘ஆசுவ கடமை’ என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள ‘ஆசுவ கடமை’ என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட ஒருவரியைக் குறியாது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள ‘நீலகேசி’யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே, ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.

(தொடரும்)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.