Jump to content

புலம்பெயர் ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளிடம் ஒரு கோரிக்கை


Recommended Posts

     புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின்  கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது.

 

      ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும், மட்டுமில்லாமல் இயங்கு நிலை மறுக்கப்பட்ட போதிலும் அதனை உடைத்து தமக்கான இலக்கிய தளத்தினை கட்டமைத்த ஒரு தரப்பினரும், என தம்பண்புசார் நிலைகளில் இயங்குகின்ற ஒரு தளப்பின்னணியூடாகவே இன்று புலம்பெயர் இலக்கிய தளத்தினை நோக்கவேண்டி உள்ளது.

 

        உண்மையில் ஒரு படைப்பாளிக்கு அவன் இயங்குகின்ற பண்பு நிலையானது மறுக்கப்படல் மிக பெரும் அவல நிலை என்பதனை எந்த சந்தர்ப்பத்திலும் மறுக்க முடியாது. அப்படி மறுக்கப்பட்டதனை நியாயப்படுத்தும் நோக்கமும் இப்பத்திக்கு கிடையாது.

 

     புலம்பெயர் படைப்பாளியின் படைப்பினை  வெளிக்கொண்டு வருவதில் அல்லது வெளிச்சமிடுவதில் அந்த படைப்பாளியின் இயங்குகின்ற பண்புசார் நிலை முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு சிறந்த படைப்பினை உருவாக்கும் படைப்பாளி அவன் இயங்குகின்ற பண்பு நிலையினைக் கொண்டு தரம்பிரிக்கப்பட்டு, அந்த படைப்பினை உள்வாங்குவதானது அல்லது ஒருவகை காழ்ப்புணர்வோடு விமர்சிப்பதானது புலம்பெயர் இலக்கியத்தளத்தில் பெரும் சாபக்கேடாகவே உள்ளது. இத்தகைய செயற்பாடானது இன்றைய இயங்கு நிலையில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு முதிர்வு நிலையினை அடைந்துள்ளது. இதனூடாக பல படைப்புக்கள் சராசரி வாசிப்பு மனநிலை கொண்ட மக்களிடம் சென்றடையாமல் கூட இருக்கிறது.

 

   ஒரு சமூதாய கட்டமைப்பில் மக்களை வழிநடத்துகின்ற பெரும் பொறுப்பானது அந்த சமூதாயத்தில் இயங்குகின்ற படைப்பாளிகளையே சாரும். புலம்பெயர்ந்து இன்னொரு சமூகத்தளத்தில் வாழ்வினை கட்டியமைக்கும் ஒரு மக்கள் கூட்டமானது,  அந்த சமூதாயத்தின் பண்பியலை சடுதியாக உள்வாங்கி விடவே முனையும். பண்பியல் மாற்றங்களை உள்வாங்கி அதனுள் அமிழ்ந்து  போகும்  சமூகமானது தம் சுய அடையாளங்களை இழந்துவிடும். இன் நிலையில் இருந்து சமூகத்தினை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த சமூகத்தின் படைப்பாளிகளையே முழுவதுமாக சார்ந்துள்ளது.

 

     அந்தவகையில்  புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகள் உன்னதமான சேவையினை ஆற்றிவருகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஈழத் தமிழ் மக்களுக்கென்று ஒரு குறியீட்டு படிமம் உலக அரங்கில் உருவாக்கி உள்ளது என்றால் அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக படைப்பாளிகளே உள்ளார்கள் என்பது நிதர்சனமானது.

 

     இருந்தபோதிலும், இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புகளை வெளிக் கொணர்வதில் அல்லது ஏற்றுக்கொள்வதில் புலம்பெயர்ஈழத்தமிழ் படைப்பாளிகளிடையே பாரியதொரு இடைவெளி உருவாக்கப்பட்டு உள்ளது. தம் பண்புசார் தளத்திற்கு மட்டுமே உரித்தான படைப்பாளனை அல்லது படைப்பினை கொண்டாடும் அதே வேளை மாற்றுத்தள படைப்பாளியை அல்லது படைப்பினை புறந்தள்ளுவதாகவும் அது அமைகிறது. புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் அமைப்பு ரீதியான பிரிவுகளுக்கு இன்னும் வழிகோலும் நிலையாகவே இதனை கருதவேண்டும்.

 

   நோக்கு ரீதியில் முன்னைய காலங்களைவிட அதிகளவான புலம்பெயர் படைப்பாளர்கள் உருவாகி இருந்தாலும்,  படைப்புகளின் தன்மையானது பண மற்றும் தனிப்பட்ட செல்வாக்குகளாலும் நிர்வகிக்கப்படுகின்ற அல்லது வெளிக் கொணரப்படுகின்ற ஒரு நிலையினையும் காணமுடிகிறது. இது காத்திரமான ஒரு வளர்வு நிலையல்ல.

 

    இதேயிடத்தில் இன்னொரு அவலநிலையினையும் குறிப்பிட்டேயாக வேண்டும். புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளர் தளத்தில் ஒரு புதிய படைப்பாளன் உருவாகும்போது அவனுக்கான வழிநடத்தல்களும் அங்கீகாரங்களும் கூட பக்கசார்பான ஒரு நிலையூடாக  அவனை வளர்த்துவிடுவதாகவே அமைகிறது. இது ஒருவகை கொம்பு சீவுதல்தான்.

 

   காத்திரமான ஒரு படைப்பாளி தனக்கென ஒரு சுயசிந்தனையோடு இயங்கினாலும், அவனுக்கான அடையாளமொன்றை வழங்கிவிடுவதில் பண்புசார் தளம் மிக நெருக்கமாக செயற்படுகிறது. அதிலும் மிக நெருக்கமான அண்மைக்காலத்தில் தாய்நிலச்சூழல் காரணமாக  புலம்பெயர்ந்துவந்த படைப்பாளர்கள் தங்களுக்கான ஒரு அடையாளத்தினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிக்களுக்கு முகம் கொடுக்கிறார்கள்.

 

   ஒரு இனத்தின் நிலையான இருப்பில் அந்த இனத்தின் வேர்களான படைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. வேர்கள் எப்போதும் மரத்தினை தாங்கிப் பிடிப்பதாக இருக்கவேண்டும். புதிய முளைய வேர்களை காப்பவையாகவும், வழி காட்டிகளாககவும் இருக்கவேண்டும். மாறாக ஒரு பக்க கிளைகள் மேல் கொண்ட காழ்ப்பினால் தமது பணியினை நிறுத்திவிடவோ அல்லது பக்க சார்புடனோ நிகழ்த்த விரும்பும் பட்சத்தில் அது அந்த முழு மரத்தினையும் பாதிப்பதாகவே அமையும்.

 

    தமிழ் தேசிய இனத்தின் ஒற்றுமையையும் வளர்வையும் கருத்தில் கொண்டு புலம்பெயர்ந்த படைப்பாளிகள் ஒரு தளநிலையில் நின்று இயங்கவேண்டிய கடப்பாடு முன்னெப்போதையும் விட தற்காலத்தில் அதிகமாகவே இருக்கிறது. பல்வேறு முகங்களை கொண்ட படைப்பாளிகள் தான் சமூகத்தின் வெளிப்பாடு என்றாலும் காலத்தின் தேவையையும், இனத்தின் இருப்பையும் கருத்திற்கொண்டு ஒரு பொதுநிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றுபட்டும், புதிய படைப்பாளிகளை உள்வாங்கியும் செயற்படவேண்டும். புலத்தில் இயங்கும்  பன்முகத்தன்மை வாய்ந்த மூத்த படைப்பாளிகள் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். முன் வருவார்களா ?

நன்றி 

http://inioru.com/?p=38353

Link to comment
Share on other sites

அன்பான சகோதரா 
 
முக்கியமான ஒரு விடயத்தை தொட்டு உங்கள் ஆதங்கத்தை நறுக்கென்று சொல்லி உள்ளீர்கள் ..........முகம் இழந்து ,முகவரி தொலைத்து ,விடிவு ஏதும் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் விடிவை தேடி அலைந்து ,புலம் பெயர்ந்து அன்றாட சோத்துக்காய்  கூட எம்மை தயார் படுத்த முடியாத சூழலில் வாழும் நாங்கள் ..............பயணிக்கிறோம் .எம் உணர்வுகளை ,ஏக்கங்களை  தேடி பயணிக்கிறோம் .........உண்மையில் புலம் பெயர்ந்த படைப்பளிகளுக்கு மட்டும் அல்ல இந்து தாயகத்தில் வாழும் எம் இன அனைத்து படைப்பாளிகளுக்கும் உங்கள் ஆதங்ககம் ,அதனால் உருவாகிய கேள்வி ,அதன் நிமித்தம் உருவான சவால் பொருந்தும் .
 
குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் படைப்பாளிகளிடம் மட்டுமே என்னால் பேச முடியும் .ஏனனில் நானும் புலம் பெயர்ந்த ஒருவன் ,எனற வகையில் ..............இன்றைய கால கட்டத்தில் படைப்புக்கள் எம் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அனைத்தும் தங்கியுள்ளது ..............எம் மக்கள் புலம் பெயர்ந்த மக்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்ந்தாலும் அவர்களால் வாழ முடியவில்லை என்பதே யதார்த்தம் .ஏனனில் அவர்களின் தேடல் வேறு ...............அவர்களால் இந்த நாடுகளில் உணர்வோடு ,உணர்ச்சியோடு ,தன்மானத்தோடு ,சுதந்திரத்தோடு வாழ முடியாது ...அந்த உணர்வுகளோடு சங்கமிப்பவையாக எம் படைப்புக்கள் இருக்கும் பட்சத்தில் அவை அந்த மக்களை சென்றடையும் என்பது என் கருத்து ...............
 
இங்கே நீங்கள் குறிப்பிட்டது போல படைப்பாளிகள் புறம் தள்ளப்படுகிறார்கள் என்பது இன்னொரு வகையை சாரும் ...............அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் ,அதை மறுக்க முடியாது ..................ஏனனில் தன்னை காட்ட ,தனது தற்பெருமையை காட்ட கேவலமான முறையில் திறமையற்ற படைப்புக்களை ,தமது செல்வாக்கின் மூலம் ,ப்ரோப்பெர்கான்ட் மூலம் வெளியே கொண்டு வந்து அருவருக்கும் செயலை காட்டி நிற்போரே அதிகம் .பொறாமை ,ஈகோ ,இவையும் கூட ஒரு காரணம் .....ஆனால் இவை எல்லாவற்றிற்கும் காரணம் செல்வாக்கு ,பணம் ,,,,,,,,,,,இவை அனைத்தும் மாறனும் என்றால் எமக்கு ஒரு விடுவு தேவை .................
 
 
ஆனால் இன்று இன்றைய ஈழத்  தமிழர்களின் வாழ்வில் ஒரு படைப்பாளி எப்பிடி இருக்கணுமோ ,எப்பிடி படைப்புக்களை வழங்கனுமோ வாழவேணுமோ அப்பிடி அவன் வாழ முயற்சிக்கும் போது ,சிந்திக்கும் போது அவனிடம் திறமை இருக்கும் போது அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது ..........அதற்கான அங்கீகாரம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும் ..............
 
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அனைத்து படைப்புக்களும் நீதி நியாய பூர்வமாய் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் .நாம் விடுதலை பெற வேண்டும்  தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் அமைப்பினர் எம்மை ஆழ வேண்டும் .நன்றிகள் சகோ ....
Link to comment
Share on other sites

நெற்கொழுதாசன் நீங்கள் குறித்த ஆதங்கம் இன்று மட்டுமில்லை என்றும் எமக்குள் உள்ள ஒரு குணமே. கொஞ்சம் பண வசதியும் ஊடக அறிமுகமும் இருந்தால் போதும் அங்கே புகுந்து நின்று தங்களது உயர்வை மட்டுமே கவனத்தில் வைத்து உண்மையான படைப்புகளை படைப்பாளிகளை ஓரங்கட்டி ஒதுக்கி கீரோவாகும் கீரோக்கள் கீரோயினிகளைத் தாண்டியே எமது எழுத்துக்கள் பயணிக்க வேண்டியுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய நாளின் எனது அனுபவங்கள்........ நெற்கொழு நின்று எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் உன்வழியில் செல் அப்பனே. வழி கேட்டுக் கொண்டிருந்தால் உன் பயணம் தளர்வடையும். பயணித்துச் செல். புதிய பாதையை உருவாக்கி வழிகாட்டியாகும் தகுதி இருக்கிறது. இங்கு எத்தனை படைப்பாளிகள் இருக்கிறோம் எங்களுக்கான தளத்தை நாங்களே சமைத்துக் கொள்ளலாம். அதன் ஆரம்பம் உங்கள் படையலாக இருக்கட்டும்.

 

இந்த யாழ்க்கருத்துக்களமும் அதன் படைப்பாளிகளும் நினைத்தால் எல்லைகள் கடந்து வியாபிக்கலாம். விரிகின்ற எங்கள் எல்லைகளுக்குள் அனைவரையும் இணைக்கலாம்....

 

யார் தயாராக இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று  தான் பார்த்தேன்.

3  பேர் கருத்து வைத்திருக்கிறார்

மூன்றும் மூன்று கோணத்தில்...............

 

எனது அனுபவப்படி......

பல  முயற்சிகளை  எடுத்து துண்டைப்போட்டுக்கொண்டவன் என்ற ரீதியில்

இவர்களுடன் பழகிய  மற்றும் தொடர்புகளை  வைத்திருப்பதால்....

ரொம்ப  ரொம்ப ரொம்ப  கடினம் தம்பி........

ஒரே  கொள்கையில் நிற்போரே

மற்றவரை ஏற்கார்

ஒவ்வொன்றும்

ஒவ்வொருத்தருக்கும் பெரும் தலைகள்................

 

ஆனால் ஒன்று செய்யலாம்

சகாரா சொன்னது போல்

நீங்கள் செய்யுங்கள்

இளையதலைமுறை  செய்யுங்கள்

(இந்த இளையதலைமுறையையும் செய்து பார்த்து தோற்றவன் யான்)

இதற்கு மேல் இங்கு வேண்டாம்.  நமது  பல்லைக்குற்றி...... :(

முடிந்தால் நேரே வாங்கோ.  சொல்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.