Jump to content

ரொறன்ரோவில் உறைநிலை பனியால் இயல்புநிலை பாதிப்பு - பல பகுதிகள் மின்சாரம் இன்றி தவிப்பு!

Recommended Posts

இது மிக பாதிப்பான நிலையாகலாம். உறை பனி விழுந்தால் உடனே தேவையானது 0 மேல் வெப்பநிலை போவது. இன்னும் 10 நாட்களுக்கு வெப்பநிலை 0 பாகைக்கு மேல் போகாது போலிருக்கு.  இருக்கும் பனிக்கட்டிகு மேல் மேலும் பனி பொழிய வான் நிலை எதிர்வுகள் இருக்கின்றன. இது ரோட்டில் இருக்கும் பனிக்கட்டிகளை மறைக்கப்போவதால் பல நாட்களுக்கு வாகன போக்குவரத்து கடினமானதாக இருக்கப் போகிறது. 

Link to comment
Share on other sites

  • Replies 73
  • Created
  • Last Reply

புங்கை ,

பார்க்க  அழகாக இருந்தாலும் தாக்கம் மிக அதிகம் .உறைபனி பெய்ததால் அது அப்படியே மரங்கள் ,கட்டிடங்கள் ,வீதிகள் பவர் லைன்கள் என்று அவற்றின் படிந்து பல இடங்களில் மின்சாரம்  செயலிழந்து விட்டது .வைத்தியசாலைகள் எல்லாம் ஜெனரேட்டர்கள் மூலம் தான் இயங்குகின்றது .300,000 பேர் மின்சாரவசதியிலாமல் இருக்கின்றார்கள் .சில உறவினர்களை இன்று வீட்டிற்கு வந்து குளித்து சாப்பிட அழைத்திருக்கின்றேன் .பாடசாலைகள் விடுமுறை என்பதால் கொஞ்சம் ஆறுதல் .

இன்று காலை வேலைக்கு டவுன்ரவுனுக்கு காரில் வரும் போது மரங்களை பார்க்க மிக அழகாக இருந்தது ,

மரங்கள் இலை அற்று இருந்தாலும் காம்புகளில் பனி படிந்து கட்டியாகி வழிந்து அதன் பாரத்தில் அவை வளைந்து ஏதோ கிறிஸ்மஸ் சோடனை செய்தது போல இருந்தது .

இன்னமும் பனி பொழிவு தொடரும் என்கின்றார்கள் .எதற்கும் காஸ்சிலிண்டர் ஒன்று வாங்கிக்கொண்டு போகவேண்டும் .(அடுப்பு வைத்திருக்கின்றேன்  ).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

honda-ec2000-2000w-4-stroke-petrol-gener

கனடிய மக்கள் கண்டிப்பாக இப்படி ஒன்றை வாங்கி வைக்கவேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா வாழ் கள உறவுகள் எல்லோரும் ஒருக்கா கனடா கந்த ஸ்வாமி கோவில் பக்கம் போய் (மனமுருகி???) படிக்கும் கந்த புராண படிப்பும் உரையும் கேட்டால் சூரிய பகவான் மனமிரங்கி சூடாக காலையில் காட்சி தருவார்.  உங்கள் கவலைகள் எல்லாம் அதி காலைக்  கதிரவன் வரவு கண்டு அன்று அலர்ந்த கமல மலர் அதாவது தாமரை மொட்டின் மீது கவிந்து இருக்கும் பனி விலகியது போல பறந்து ஓடி விடும்.

:D  :D  :D

இணையிலி (இணுவில்) பருத்தி அடைப்பு பிள்ளயார் கோவிலில் மார்கழி திருவெம்பாவை பாடி பரவிடும்  கார் கால வேளை அல்லவா.

காலம் செய்யும் கோலம் இது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.  எம் மண்ணும் எம் மனமும் ஒருங்கே குளிரும் எம் பிறந்த மண்ணின் பெருமை, பொங்கிடும் கடல் கரை ஓரத்திலே, மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே, மங்களம் தங்கிடும் இந்த நேரத்திலே தான் நாம் எல்லோரும்  நன்றாக உணர முடியும். உணர்வு அநாதியானது. தெய்வத்தின் பால் பட்டது.  ஆனால் அறிவு அழிவைத் தர வல்லது.  அதனால்தான் அணுக் குண்டு கண்டு பிடித்தது.  உணர்வுக்கு முன் அணு குண்டும் தூசு தான்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே.

2001 Census

Sri Lanka Ethnicity/ race

Sinahalese 73.8%

Sri Lankan Moors 7.2%

Indian Tamil 4.6%

Sri Lankan Tamil 3.9%

Other 0.5%

Unspecified 10%

Source: Tourist Map of Sri Lanka, ABC Publication.

இப்போ இந்த பரந்த உலகு எங்கும் அலையும் கௌரவ நாடோடியான எமக்கு 30 days Visa எம் தாய் திரு நாடு திரும்ப.

என்னே விதியின் கொடுமை.  :(  :(  :(  :( :(  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எச்சரிக்கை : இன்று நீங்கள் பார்த்தது ஒரு சாம்பிள் – இனிமேல் தான் வருகிறது டொராண்டோவை புரட்டிப் போடும் பனிப்புயல் !!

wea-eastern_canada_storm_20131221.jpg

நகர் முழுவதும் மின்சாரமில்லை, உணவில்லை , மக்களின் வாழ்க்கையையே பனிப்புயல் புரட்டிப் போட்டிருப்பதாய் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இன்று  டொரோண்டோ மக்கள் பார்த்ததெல்லாம்  ஒரு சாம்பிள் மிக மோசமான வானிலை
இனி மேல்தான் வருகிறது என்கின்றனர் காலநிலை அவதானிகள்.

அதிக ஆற்றல் மிக்க காற்றழுத்த தாழ்வு நிலையொன்று அமெரிக்காவிலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து வருவதால், ஒரு ” பெரிய பனிப்புயல் ” இந்த வார இறுதிக்குப் பின்னர் தெற்கு ஒன்டாரியோவின் பல பகுதிகளைத் தாக்கும் என்கிறது சுற்றுச்சூழல் கனடா.

மொன்றியலில் நேற்று ஒரு நாளில் மட்டும் 15 முதல் 30 செ.மீ வரை பனி கொட்டியுள்ளது. தெற்கு செயின்ட் லாரன்ஸ் நதிப் பகுதிகள் முழுவதும் பரவலாக 15 முதல் 40 மிமீ வரை உறை பனி மழை எதிர்பார்க்கப்படுவதால், அந்தப் பகுதிகளில் மக்களின் சாதாரண நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

நியூ புருன்ஸ்விக் மற்றும் PEI பகுதிகளிலும் உறை பனி மழை ஞாயிறு இரவு வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளில் சுமார் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவும் இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதைப் போல் நோவா ஸ்காட்டியா மற்றும் சுற்றியிருக்கும் பகுதிகளில் 40 மில்லி மீட்டர் வரை உறை பனி மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

http://ekuruvi.com/freezing-rain-warning-continues-potential-for-major-ice-storm-this-weekend/

markham-ice-storm.jpg

மார்க்கம் 
Link to comment
Share on other sites

இன்று பகல் கூரை மேல் இருந்த உறைந்த நீர்ப் படிவங்கள் அப்படியே ஒரு தட்டு மாதிரி சறுக்கி கீழே வந்து விழுந்தது.. யாராவது கீழே நின்றிருந்தால் ஒன்றில் ஆஸ்பத்திரி.. இல்லாட்டில் சங்குதான் .. :unsure:

Link to comment
Share on other sites

எனது காரின் மேல் பக்கத்துவீட்டு காரரின் மரம் முறிந்து விழுந்து இரண்டு நாள் கோடாலி, வாள் என்று கனரக ஆயுதங்களும் பாவித்து மீட்டேன்.

பின் சின்ன கொப்புகள் எல்லாம் காருடன் ஒட்டி

எதோ குகைக்குள் இருந்து வந்தது போல் இருந்தது.

பின் சுடுதண்ணி ஊற்றி குளிப்பாட்டினேன்.

Link to comment
Share on other sites

விக்.. ஏதாவது படம் எடுத்தனீங்களா? முடிந்தால் போடுங்கோ..

சுடுதண்ணி ஊற்றினால் பூட்டு இருக்கும் பக்கம் ஊற்றவேண்டாம் என்கிறார்கள்.. நீர் உள்ளே போய் உறைந்துவிடலாம்..

Link to comment
Share on other sites

விக்.. ஏதாவது படம் எடுத்தனீங்களா? முடிந்தால் போடுங்கோ..

சுடுதண்ணி ஊற்றினால் பூட்டு இருக்கும் பக்கம் ஊற்றவேண்டாம் என்கிறார்கள்.. நீர் உள்ளே போய் உறைந்துவிடலாம்..

சில படங்கள் எடுத்தேன் . கை விறைத்திருந்தபடியால் பெரிதாக பிளாக்பெரியை வெளியே எடுக்கவில்லை.:)

Link to comment
Share on other sites

எனது காரின் மேல் பக்கத்துவீட்டு காரரின் மரம் முறிந்து விழுந்து இரண்டு நாள் கோடாலி, வாள் என்று கனரக ஆயுதங்களும் பாவித்து மீட்டேன்.

பின் சின்ன கொப்புகள் எல்லாம் காருடன் ஒட்டி

எதோ குகைக்குள் இருந்து வந்தது போல் இருந்தது.

பின் சுடுதண்ணி ஊற்றி குளிப்பாட்டினேன்.

தெரு மரமாயின் நகரசபை காசு தராதென நினக்கிறேன். வீட்டுக்காரரின் மரமாயின் அவர்கள் காப்புறூதி வைத்திருந்தால் அதை செல்வீனத்தபதி பெறுவது உங்களுக்கு இலகு. உங்கள் காப்புறுதிக்கம்பனி கழிவு தொகையை அவர்களிடம் பெற்றுத்தர சில நாட்களாகும். 

Link to comment
Share on other sites

கனடா வாழ் கள உறவுகள் எல்லோரும் ஒருக்கா கனடா கந்த ஸ்வாமி கோவில் பக்கம் போய் (மனமுருகி???) படிக்கும் கந்த புராண படிப்பும் உரையும் கேட்டால் சூரிய பகவான் மனமிரங்கி சூடாக காலையில் காட்சி தருவார். உங்கள் கவலைகள் எல்லாம் அதி காலைக் கதிரவன் வரவு கண்டு அன்று அலர்ந்த கமல மலர் அதாவது தாமரை மொட்டின் மீது கவிந்து இருக்கும் பனி விலகியது போல பறந்து ஓடி விடும்.

:D:D:D

இணையிலி (இணுவில்) பருத்தி அடைப்பு பிள்ளயார் கோவிலில் மார்கழி திருவெம்பாவை பாடி பரவிடும் கார் கால வேளை அல்லவா.

காலம் செய்யும் கோலம் இது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும். எம் மண்ணும் எம் மனமும் ஒருங்கே குளிரும் எம் பிறந்த மண்ணின் பெருமை, பொங்கிடும் கடல் கரை ஓரத்திலே, மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே, மங்களம் தங்கிடும் இந்த நேரத்திலே தான் நாம் எல்லோரும் நன்றாக உணர முடியும். உணர்வு அநாதியானது. தெய்வத்தின் பால் பட்டது. ஆனால் அறிவு அழிவைத் தர வல்லது. அதனால்தான் அணுக் குண்டு கண்டு பிடித்தது. உணர்வுக்கு முன் அணு குண்டும் தூசு தான்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே.

2001 Census

Sri Lanka Ethnicity/ race

Sinahalese 73.8%

Sri Lankan Moors 7.2%

Indian Tamil 4.6%

Sri Lankan Tamil 3.9%

Other 0.5%

Unspecified 10%

Source: Tourist Map of Sri Lanka, ABC Publication.

இப்போ இந்த பரந்த உலகு எங்கும் அலையும் கௌரவ நாடோடியான எமக்கு 30 days Visa எம் தாய் திரு நாடு திரும்ப.

என்னே விதியின் கொடுமை. :(:(:(:( :(

அண்ணா,

முருகன் கோவணத்தோடு காலந்தள்ள முடியாது என்று மயிலேறி புளோரிடா போயிட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,

முருகன் கோவணத்தோடு காலந்தள்ள முடியாது என்று மயிலேறி புளோரிடா போயிட்டார்.

உள்க்குத்து

ஒன்றும் இல்லைத்தானே  ராசா.. :lol:  :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது காரின் மேல் பக்கத்துவீட்டு காரரின் மரம் முறிந்து விழுந்து இரண்டு நாள் கோடாலி, வாள் என்று கனரக ஆயுதங்களும் பாவித்து மீட்டேன்.

பின் சின்ன கொப்புகள் எல்லாம் காருடன் ஒட்டி

எதோ குகைக்குள் இருந்து வந்தது போல் இருந்தது.

பின் சுடுதண்ணி ஊற்றி குளிப்பாட்டினேன்.

பூட்டுப் பக்கம் மட்டுமல்ல, உறை பனி மேல சுடு தண்ணி ஊற்றினால் சில சமயம் கண்ணாடி கூட வெடித்து விடக் கூடும்.

honda-ec2000-2000w-4-stroke-petrol-gener

கனடிய மக்கள் கண்டிப்பாக இப்படி ஒன்றை வாங்கி வைக்கவேண்டும் 

கவனமாகப் பாவிக்க வேணும்! மூடிய வீட்டுக்குள் அல்லது கடாஜுக்குள் வைத்துப் பாவித்தால் காபன் மொனொக்சைட் நச்சினால் உங்களுக்கு எதுவும் தெரியாமலே பரலோகம் போக வாய்ப்புண்டு.

Link to comment
Share on other sites

கவனமாகப் பாவிக்க வேணும்! மூடிய வீட்டுக்குள் அல்லது கடாஜுக்குள் வைத்துப் பாவித்தால் காபன் மொனொக்சைட் நச்சினால் உங்களுக்கு எதுவும் தெரியாமலே பரலோகம் போக வாய்ப்புண்டு.

பிறகு கதவைத் திறக்காமலே காருக்குள் ஏறலாம்.. கராஜ் க்குளேயே வாழலாம்.. :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு கதவைத் திறக்காமலே காருக்குள் ஏறலாம்.. கராஜ் க்குளேயே வாழலாம்.. :rolleyes::D

அப்புறம் என்ன மோட்சம்தான்  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனிப்புயலால் ஏற்பட்ட மின்வெட்டு கிறிஸ்துமஸ் தாண்டியும் தொடரும் – டொராண்டோ ஹைட்ரோ அறிவிப்பு !!

at-dark.jpg

கடந்த ஞாயிறு முதல் டொரோண்டோ நகரவாசிகளை புரட்டிப்போட்ட மிக மோசமான பனிப் புயலால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இன்னமும்  மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலை தொடரும் என்றும் நகரின் சில பகுதிகளில் இந்த வாரம் இறுதி வரை மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் டொராண்டோ ஹைட்ரோ
தெரிவித்துள்ளது.

தெற்கு ஒன்ரோறியோ பிராந்தியம் முழுவதும் பல பகுதிகளில் கார்கள், வீடுகள் மற்றும் மரங்களை பனி மூடியுள்ளது. இதனால் மரக் கிளைகள் கீழே விழுந்து நொறுங்கியதில் சிலர் காயமடைந்துள்ளனர். சுமார் 228.000 வாடிக்கையாளர்கள் டொராண்டோவில் இன்னும் மின்சாரம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், விடுமுறைக் காலத்தில் டொராண்டோ
ஹைட்ரோ விடுத்துள்ள  இந்த அறிவிப்பு மக்களை  கவலையடையச் செய்துள்ளது.

தனது வாழ்க்கையில், இது போன்ற மோசமான பனிப் புயலைப் பார்த்ததில்லை என்று டொராண்டோ ஹைட்ரோவின் தலைமை அதிகாரி ஹைனேஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  மீட்புக் குழுக்கள் நெரிசலிலும் விரைவாக இயங்கி வருவதாக ஹைனேஸ் கூறினார்.

இதற்கிடையில் நகர சபை உறுப்பினர்கள் டொராண்டோ நகர மேயர் றொப்  போர்டுவிடம் அவசர நிலை பிரகடனப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதை அவர் அலட்சியம் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றிய குருவியாரின் சிறப்புச் செய்தி இன்னும் சில நிமிடங்களில்…..!!

http://ekuruvi.com/toronto-ice-storm-could-leave-thousands-in-the-dark-past-christmas/

Link to comment
Share on other sites

ஏம்ப்பா இந்த காபன் மொனோகசைட்டு என்பது எந்த பிறாண்டு? நாளைலை நாம்ப அந்த நாளிலை மோல்சன் கூர் அடிச்சிட்டு   நிலவிலை நடக்கப் போய் தடக்கி விழுந்ததே ஒரு பெரிய கதை. ஆனா பாருங்க இவங்க இந்த காபன் மொனோக்சைட்டை அடிச்சிட்டு கராசுக்குள்ளையே தடக்கு பட்டாம போயிடுறாங்களே. நல்ல ஸ்றோங்கு போலத்தான் இருக்கு.  ஒரு டெஸ்ச் போட்டு பாக்கத்தான் இருக்கு.  :D

எனது பிள்ளைகள் இன்றுதான் மார்க்கம் போனார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Wednesday evening madum power varum nampavendam endu eletry city bord ku call panee kedapothoo sonar gal. :(

எங்கள்  யாயினியிடம் கரண்டைப்பறித்ததை  மன்னிக்கலாம்

ஆனால் தமிழைப்பறித்ததை............. :(  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

depositphotos_5937770-Antique-Hurricane-8-Kerosene-Hurricane-Camp-Lantern-Light-

கனடாவில் குளிர் காலத்தில் மின்சாரம் தடைப்படுவதால்....

இப்பிடியான பொருட்களை முன் கூட்டியே... வாங்கி வைத்திருப்பது நல்லது. :D

சிறி

குளிர் -20 இல் இருக்கும் போது 

இவற்றை  வைத்து என்ன  செய்வது......??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் கனடாக்காரர் எல்லாரும் ஊருக்கு அகதியாப் போங்கோ. அங்க போய் அசைலம் அடிச்சாலாவது.. நிம்மதியா இருக்கலாம். என்ன செய்யுறது. குளிர்நாடுகள் ஊசி இலைக்காடுகளை... எங்களை வைச்சு அபிவிருத்தி செய்து.. அதில.. வெள்ளைக்காரன் சொகுசா வாழ்ந்திட்டு இருக்கிறான். இப்படி குளிர்.. புயல் என்று வந்தால் தான் நம்மவருக்கும் உண்மை உறைக்குது. அவலத்திலும் ஒரு சில நன்மைகள் இருக்கவே செய்யும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

நெடுக்ஸ்.. நம்மளை மாதிரி ஆட்களுக்கு வேலையே ஒரு போராட்டம்தான்.. -30சி இல் வெளியில் நின்று வேலை பார்ப்பது சுகமான அனுபவம்.. :blink: ஆனால் வெள்ளைக்காரன் அப்படியல்ல.. வட துருவத்தில் வேலை பார்ப்பது பெருமளவில் அவர்கள்தான் (கண்வில்லைக் கண்ணாடி போட்டிருந்தால் கண்ணோடு ஒட்டவைக்கும் குளிர்..)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.