Jump to content

கலக்கிய கனவு கன்னிகள்


Recommended Posts

கலக்கிய முன்னாள் கனவு கன்னிகள்!

அந்தக் கால கனவுக்கன்னிகளான பத்மினி, சரோஜாதேவி, மஞ்சுளா, ராஜ சுலோச்சனா, சச்சு உள்ளிட்டோர் நாடோடி மன்னன் படத்தின் 49வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பழைய நினைவுகளை அசைபோட்டு ரசிகர்களின் காதுகளுக்கு விருந்து கொடுத்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் வெளியாகி நேற்றுடன் 48 ஆண்டுகள் முடிவடைந்தது. இதையொட்டி சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நாடோடி மன்னனின் 49வது ஆண்டு விழா நடந்தது.

இந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும், எம்.ஜி.ஆர். படங்களிலும் நடித்த பழைய நடிகைகள் பலர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நாடோடி மன்னன் நாயகி சரோஜாதேவி, பத்மினி, ராஜ சுலோச்சனா, மஞ்சுளா, சச்சு,

actress0824f2si7.jpg

எம்.என்.ராஜம், ராஜஸ்ரீ ,வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரும் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். முன்னாள் கனவுக் கன்னிகளை, குறிப்பாக சரோஜாதேவியை (இன்னும் அப்படியே இருக்காருப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்ததை கேட்க முடிந்தது!) காண ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்தனர்.

ரசிகர்களின் அன்பான வரவேற்பை ஏற்றபடி நடிகைகள் உள்ளே அழைத்துச் செல்லப்படட்னர். நிகழ்ச்சியில் சரோஜாதேவி பேசுகையில், எம்.ஜி.ஆரைப் போல இன்னொரு நடிகர் வரமுடியாது.

அவரால் தான் இந்தப் படம் மூலம் நான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனேன். எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தமிழக மக்களையும், எம்.ஜி.ஆரையும் மறக்க மாட்டேன் என்றார்.

பத்மினி பேசுகையில், நான் இப்போது அதிகமாக படங்கள் பார்ப்பது இல்லை. சமீபத்தில் அந்நியன் படம் பார்த்தேன். விக்ரம் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிவாஜி, எம்.ஜி.ஆருடன் நடித்து விட்டேன். இனி பிரபுவுடன் நடிக்க மட்டுமே ஆசை உள்ளது என்றார்.

padminisripriya0824f4du7.jpg

டி.எம்.எஸ். பேசுகையில், நாடோடி மன்னில் இடம் பெற்றுள்ள தூங்காதே தம்பி தூங்காதே பாடலை ரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப பாடிஅசத்தினார். பாராட்டு விழா¬முடிந்த பின்னர் நாடோடிமன்னன் படத்தை நடிகைகள் அனைவரும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்து ரசித்தனர்.

வாத்தியார், வாத்தியார் தான்

http://thatstamil.oneindia.in/specials/cin...ials/mgr_2.html

Link to comment
Share on other sites

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்பும் என் பேச்சிருக்கும்..!!

உய்க்க்க்க்.....!! (என்னுடைய விசில் ஒலிங்க..!) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது சிறிப்ரியா இப்படி கிழவியாகிட்டா :roll:

வயசாயிடிச்சில்ல. நீங்களும் ஒரு காலத்தில் கிழவியாகத்தான் வேண்டும்.. :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயசாயிடிச்சில்ல. நீங்களும் ஒரு காலத்தில் கிழவியாகத்தான் வேண்டும்.. :P :wink:

இப்பவே கிழவி இனியெப்படி, கிழவியாகிறதாம் குடுகுடு கிழவியாகலாம்! :P :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.