Jump to content

பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்


Recommended Posts

பிள்ளையார் கதையும் குளறி சின்னத்தம்பியரும்

 

1525497_10151790140251496_1212999122_n.j

 

கிட்டடியிலை ஒரு படம் ஒண்டு முகனூலிலை பாத்தன் . எனக்கு பழைய நினைவுகள் மண்டைக்குள்ளை சாம்பிராணி புகை மாதிரி சுழண்டு ஊரிலை போய் றொக்கி எடுத்துது . எங்கடை ஊரிலை பிள்ளையார் கதை படிக்கிற காலங்களிலை பிள்ளையார் கோயிலடி முழுக்க ஒரே பக்தி பழமாய் இருக்கும் ஊரிலை நிண்ட ஆடு கோழியெல்லாம் தாங்கள் தப்பீட்டம் எண்டு சந்தோசமாய் திரிவினம் . பிள்ளையார் கோயிலடியிலை காலமை பூசை தொடங்கி ஒரு மத்தியான நேரம் மட்டிலை ஒரு பழசு பிள்ளையார் கதை படிக்க தொண்டைய செருமும் . இந்தக் கதை படிச்சு முடிய கிட்டமுட்ட ஒரு அரை மணித்தியாலம் எண்டாலும் எடுக்கும் .  இப்பிடி 21 நாளைக்கு ஒவ்வருநாளும் இந்த றொட்டீனிலை நடக்கும் .

அந்த நேரம் எங்கடை பிரச்சனையள் வேறை . எங்கடை கோயில்லை குளறி சின்னத்
தம்பியர் எண்டு ஒரு நாட்டாண்மை இருந்தவர் . அவற்றை வேலை எங்களை கொண்றோல் பண்ணுறது . பொம்பிளையளுக்கு முன்னாலை தான் ஒரு பயில்வான் எண்டு காட்டிறது . அவரை ஏன் குளறி சின்னத்தம்பி எண்டு சொல்லிறனாங்கள் எண்டால் அந்தாள் ஒருக்காலும் மெல்லிசாய் கதைக்கிற மனுசன் இல்லை . பக்கத்திலை நிண்டால் காது கன்னம் எல்லாம் வெடிக்கும் . அவருக்கு தண்ணி வென்னியோ சுருட்டு அடிக்கிற பழக்கமோ இல்லை . அனாலும் வஞ்சகம் சூதுவாது இல்லாத மனுசன் . குளறி சின்னத்தம்பியாருக்கு சொந்தமாய் ஒரு பொயிலை தோட்டமும் ஏழெட்டு மாடுகளும் நிண்டது . அவற்றை பிரச்னை எல்லாம் நாங்கள் கோயிலடியிலை அடக்க ஒடுக்கமாய் இருக்கவேணும் அதுக்காக எதுவும் செய்வார் . எங்களுக்கு உந்த அடக்க ஒடுக்கமெல்லாத்துக்கும் எழிலை சனி .

பிள்ளையார் கதை படிக்கிற நாளுகளிலை எங்கடை சோலியள் எக்கச்சக்கம் . வாற பெட்டையளுக்கு பொக்ஸ் அடிக்கிறது . அவையளுக்கு  வாற வெளி ஆக்களின்ரை பிரைச்சனையளுக்கு நாங்கள் செண்றி   குடுக்கிறது . கதை வாசிச்சு முடியிற நேரத்திலை ஐயர் ஆலாத்தி காட்டினால் பிறகு படைச்ச பிரசாதம் குளறி சின்த்தம்பியர் தான் மெயின் ஆளாய் நிண்டு குடுப்பர் . நாங்கள் லையினிலை நிண்டால்தான் ஒழுங்காய் கிடைக்கும் . அதுவும் அண்டைக்கு எவன் நல்லவனாய் இருந்தானோ அவனுக்குதான் கூட . எனக்கு ஒரு சின்ன கிள்ளல் தான்  கிடைக்கும் . அதோடை குளறியர் பஞ்சமிர்தம் குடுக்கிற ஸ்ரைலைப் பத்தி இந்த இடத்திலை நான் உங்களுக்கு கட்டாயம் சொல்லவேணும் . குளறியர் எந்த நேரமும் கொடுக்கு கட்டிக் கொண்டுதான் நிப்பார் . ஆளுக்கு வேர்வை உடம்பு வேறை , பஞ்சாமிர்தம் குடுக்கிற நேரம் குளறியருக்கு வேர்வை எண்டால் அப்பிடி ஒரு வேர்வை . அதோடை ஆளுக்கு சொறி வேறை . ஆள் ஒரு கையாலை வேர்வையையும் துடைச்சு கொண்டு டிக்கியிலையும் சொறிஞ்சு கொண்டு பஞ்சாமிர்தம் குடுப்பார் பாருங்கோ சொல்லி வேலையில்லை .  அந்த நேரம் சிவ சத்தியமாய் அது எங்களுக்கு ஒரு வித்தியாசமான ரேஸ்ராய் இருக்கும் . இப்ப நினைச்சால் வயித்தை பிரட்டும் .

பிள்ளையார் கதை நேரதில்லை குளறியரின்ரை அலப்பரையள் ஒரு கட்டத்துக்கு மேலை எங்களுக்கு கொலைவெறியை கொண்டு வந்துட்டுது . என்ரை கூட்டிலை இருந்த தோப்பிளாண்டி ,

" மச்சான் குளறியருக்கு மறக்கேலாத ஒரு சொட் குடுக்கவேணுமடாப்பா "

எண்டு தன்ரை வெப்பிராயத்தை சொன்னான் . ஒருநாள் பின்னேரம் கேணியடியிலை நான் , தோப்பிளாண்டி , வைத்தி , உதயன் எல்லாரும் காலை கேணித் தண்ணிக்குள்ளை விட்டுக்கொண்டு யோசிச்சம் . உதயன் தோப்பிளாண்டியிட்டை சொன்னான் குளறியர் என்னென்ன டெயிலி செய்யிறார் எண்டு பாக்கச் சொல்லி , அதுக்குப் பிறகு ஏதாவது செய்வம் எண்டு ஐடியா தந்தான் . நாங்களும் தோப்பிளாண்டியிட்டை பொறுப்பை குடுத்துப் போட்டு ரெண்டு நாளைக்குப் பிறகு சந்திப்பதாய் இடத்தை விட்டு கலைஞ்சம் .

 

1483147_171074146436186_1795996_n.jpg

 

ஒரு நாள் பின்னேரம் நாங்கள் எல்லாரும் வைத்தியின்ரை ஆள் வாறதுக்காக கேணியடியிலை இருந்தம் . அந்த நேரம் தோப்பிளாண்டி குளறியரின்ரை றொக்கியளை எடுத்து விட்டான் . குளறியர் முக்கியமாய் இரவு 9 மணிக்குப் பிறகு அவரின்ரை பொயிலை தோட்டத்துக்குப் போய் ஒரு அரை மணித்தியாலம் அங்கை மினைக்கெடுறதாய் சொன்னான் . இடையிலை உதயன் குறுக்காலை விழுந்து,

" இதுதான் மச்சான் சரியான நேரம் . குளறியருக்கு பட்டுச் சாத்தலாம் "

எண்டு சொன்னான் . எனக்கு குளறியர் அந்த நேரத்திலை அங்கை என்ன செய்யிறார் எண்டு பாக்கவேணும் போலை கிடந்திது . அடுத்த நாள் இரவு நாங்கள் கைகாவலாய் ஒரு சாக்கு , ரெண்டு மூண்டு பூவரசங்கொட்டன் எண்டு எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போனம் . அண்டைக்கு எண்டு நல்ல அம்மாவாசை இருட்டு . வானம் வழிச்சு துடைச்சு நட்சத்திரங்கள் மட்டும் இருந்து எங்களுக்கு வழிகாட்டீச்து .

வைத்தி குளறியற்றை தோட்டத்து படலையை மெதுவாய் திறந்து போக , நாங்கள் அவனுக்குப் பின்னாலை போனம் . எங்கடை மூக்கிலை சுறுட்டு வாசம் வந்து அடிச்சுது . சுறுட்டு வாசத்துக்குப் பயந்த வைத்தி சொன்னான் ,

" மச்சான் நான் வரேலை . உது நாச்சிமார் தான் . அம்மாச்சி சொல்லுறவா நீங்கள் போங்கோ எண்டு " ,

உதயன் வைத்தியின்ரை நாரியிலை ஒரு சொட் குடுத்து சத்தம் போடாமல் வா எண்டு அவனை இழுத்துக்கொண்டு வந்தான் . அங்கை நாங்கள் போனால் , போயிலை கண்டுகளுக்கு நடுவிலை குளறியர் எங்களுக்கு முதுகை காட்டிக்கொண்டு குந்தி இருந்து கொண்டு கள்ளும் , சுறுட்டும் அடிச்சுக் கொண்டு ஒரு பாட்டு பாடிக்கொண்டு தனக்குள்ளை சிரிச்சுக் கொண்டு இருந்தார் . நாங்கள் மெதுவாய் போய் , வைத்தி ஒரு உதை முதுகுக்கு குடுக்க , உதயன் கொண்டு வந்த சாக்காலை படக்கெண்டு குளறியற்ரை மூஞ்சையை மூட , மின்னி முழிக்க முதல் தோப்பிளாண்டி கொண்டு வந்த பூவரசங்கொட்டனாலை கை கால் எல்லாம் டான்ஸ் ஆடத் தொடங்கினான் . ஒரு கட்டத்திலை நாங்கள் விட்டு போட்டு ஓடீட்டம் . அடுத்த நாள் பின்னேரம் நாங்கள் கேணியடியிலை பம்பல் அடிசுக் கொண்டு இருந்தம் . குளறியர் மாடுகளை ஓட்டிக்கொண்டு எங்கடை பக்கம் நொண்டி நொண்டி வந்தார் . அவர் கிட்ட வர நான் அப்பாவியாய் முகத்தை வைச்சுக்கொண்டு ,

" என்ன சின்னத்தம்பியண்ணை கை காலெல்லாம் காயமாய் கிடக்கு . என்ன நடந்தது ? "எண்டு கேட்டன் . அதுக்கு குளறியர் சொன்னார் ,

" அதையேன்ராப்பா கேக்கிறாய் என்ரை பட்டியிலை நிண்ட உவள் வெள்ளைச்சியை மாறிக் கட்டேக்கை இழுத்த இழுவையிலை கை காலெல்லாம் சிராய்ச்சுப் போட்டுதடாப்பா " எண்டு சொல்ல வைத்தி ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிச்சான் .

இப்பிடியெல்லாம் பிள்ளையர் கதையோடையும் குளறியரோடையும் மல்லுக்கட்டி கடைசி நாள் திருவிழா அண்டு சனத்துக்கு பக்தி முத்தி சுத்த பத்தமாய் இருக்குங்கள் . நாங்கள் மெதுவாய் கைதடிப்பக்கமாய் போய் பதநீரும் கள்ளும் குடிச்சுப்போட்டு நல்லபிள்ளையளாய் பீடாவும் போட்டுக்கொண்டு பின்னேரம் போலை பிள்ளையார் வெளி வீதி சுத்திற நேரத்துக்கு கோயிலடியிலை நிப்பம் . குளறியரோடை சேர்ந்து நாங்களும் சவுண்ட் விட குளறியர் ஹப்பியாயிடுவர் . பிள்ளையார் இருப்புக்கு வந்தால் பிறகு நாங்கள் குளறியருக்கு எண்டு கொண்டு வந்த கள்ளுபோத்திலை நாங்கள் அப்பாவியாய் குடுக்க , குளறியற்ரை முகத்தைப் பாக்கவேணும் அப்பிடி ஒரு சந்தோசம் . இப்ப அந்த குளறியரும் ஊரிலை இல்லை . அப்பிடி ஒரு பிள்ளையார் கதையையும் பாக்கேலாமல் கிடக்கு . நான் மேலை போட்டிருக்கிற படம் இப்பத்தையான் பிள்ளையார் கதை நாகரிகம் . இந்த சனங்களுக்கு உண்மையிலை மண்டை கழண்டு போச்சுதோ ?? இல்லை எனக்குதான் கழண்டு போச்சுதோ ??

நேசமுடன் கோமகன்

28 மார்கழி 2013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு அனுபவப் பகிர்வு. பழைய நாட்களை நினைவுபடுத்தியுள்ளது கதை. எழுத்துப்பிழைகளை சரிபாருங்கள்.

Link to comment
Share on other sites

அப்ப நீங்க அப்பவே கள்ளு குடிப்பியல் ஆக்கும் :D

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவப் பகிர்வு. பழைய நாட்களை நினைவுபடுத்தியுள்ளது கதை. எழுத்துப்பிழைகளை சரிபாருங்கள்.

 

உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . எழுத்துப் பிழைகள் திருத்தியுள்ளேன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவம்தான். இடையிடையே இங்கிலீசில பேசினாத்தான் மரியாதை என்ற மாதிரி சில சொற்கள் உள்ளன. உங்கட ஊரில அதுதான் ஃபாசனோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா ஊரிலையும் 'குளறியர்' மாதிரி ஆக்கள் கட்டாயம் இருப்பினம் எண்டு தான் நினைக்கிறன்!

 

எங்களுக்கும் இப்பிடியான அனுபவங்கள் உண்டு!  சுவாமி வேட்டைத் திருவிழாவுக்கு ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்குக் போகும்போது, வழி நெடுக உள்ள பெரிய வீடுகளில், அவல், சுண்டல் வைத்திருப்பார்கள்! அதனை, உங்கட 'குளறியர்' மாதிரி ஒருவர் ஒவ்வொருவருக்கும், பகிர்ந்து கொடுப்பார்! அவருக்கு, இன்னொருவரை எவ்வளவுக்குப் பிடித்திருக்கின்றது,அவர் கொடுக்கும் சுண்டலின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடலாம்!

 

எனக்குப் பொதுவாக ஒரு ஆறு சுண்டலாவது கட்டாயம் கிடைக்கும்! 

 

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

அப்ப நீங்க அப்பவே கள்ளு குடிப்பியல் ஆக்கும் :D

 

அட ஒரு பம்பலுக்கு எழுதினதப்பா . இந்த கதையிலை ஒரு கேள்வி கேட்டிருக்கிறன் அதை பத்தி என்ன நினைக்கிறியள் அஞ்சரா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இருட்டடி நடந்து   இருக்கிறது. ஊருக்கு ஒரு சிலர்  குளறி யாரைபோல இருபினம். தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

நல்ல அனுபவம்தான். இடையிடையே இங்கிலீசில பேசினாத்தான் மரியாதை என்ற மாதிரி சில சொற்கள் உள்ளன. உங்கட ஊரில அதுதான் ஃபாசனோ?

 

ஃபாசனுக்கு அளவு கோல்கள் இல்லை , அது மாற்றத்துக்கு உட்பட்டது . உங்கள் கருத்தை வருங்காலங்களில் கவனத்தில் கொள்கின்றேன் . உங்கள் கருத்துக்கும் விமர்சனத்துக்கும் மிக்க நன்றி கிருபன்ஜி :) :) .

Link to comment
Share on other sites

எப்பவுமே உங்கள் கதைகளில் வீசும் மண்வாசம் இதிலும் நறுமணம்போல் வீசுகின்றது.

பழைய நினைவுகளைக் கிளறிவிடுவதில் உங்கள் கதைகள் எப்பொழுதும் முன்னிற்கும். இதுவும் அப்பிடியே!

பாராட்டுக்கள் கோ! :)

Link to comment
Share on other sites

எல்லா ஊரிலையும் 'குளறியர்' மாதிரி ஆக்கள் கட்டாயம் இருப்பினம் எண்டு தான் நினைக்கிறன்!

 

எங்களுக்கும் இப்பிடியான அனுபவங்கள் உண்டு!  சுவாமி வேட்டைத் திருவிழாவுக்கு ஒரு கோவிலிலிருந்து இன்னொரு கோவிலுக்குக் போகும்போது, வழி நெடுக உள்ள பெரிய வீடுகளில், அவல், சுண்டல் வைத்திருப்பார்கள்! அதனை, உங்கட 'குளறியர்' மாதிரி ஒருவர் ஒவ்வொருவருக்கும், பகிர்ந்து கொடுப்பார்! அவருக்கு, இன்னொருவரை எவ்வளவுக்குப் பிடித்திருக்கின்றது,அவர் கொடுக்கும் சுண்டலின் எண்ணிக்கையைக் கொண்டு அளவிடலாம்!

 

எனக்குப் பொதுவாக ஒரு ஆறு சுண்டலாவது கட்டாயம் கிடைக்கும்! 

 

தொடர்ந்து எழுதுங்கள்!

 

எல்லா இடத்திலையும் கட்டாயம் இப்படியான ஆக்கள் இருப்பினம் . அவையளின்ரை ஒரே பிரச்னை தங்களை முன்னுக்கு கொண்டுவரவேணும் எண்டதுதான் :D :D . ஆனால் மனதில் வஞ்சகம் இல்லாத அற்புதமான மனிதர்கள் . அவர்களில் ஒருவரே குளறி சின்னத்தம்பியர் . உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி புங்கையூரான்  :) .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.