Jump to content

என் கதை சொல்லும் நேரமிது..! (இசையும் கதையும்) சின்னத் தொடர்.


Recommended Posts

  • Replies 62
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் பெண் வித்தியாசமான ஆளாய் இருக்கு! தொடருங்கள் வாசிக்க ஆவல்!!

வித்தியாசம் தான். வித்தியாசமான ஆளுக்கு கிட்ட மாட்டிக்கிட்ட.. வித்தியாசமானவள்.. என்பதை இன்னும் சொற்ப நேரத்தில் தெரிந்து கொள்வீர்கள் அக்கா. அப்புறம்.. "கதாசிரியர்" இன்றைக்கு ரெம்ப பிசி.. அதனால கதை கொஞ்சம் லேட்டா தான் வரும்.  :lol:  :D

இந்தக் கதையை தொடர ஊக்கமும் கருத்தும் அளிக்கும் எம் யாழ் உறவுகளுக்கு இதனை சமர்ப்பணம் செய்கிறோம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளிடம் இருந்து.. தொடர்ந்தும்.. கோபம் தீப்பொறியாகி வார்த்தைகளாய் வீழ்ந்து கொண்டிருந்தது. நானோ.. மெளனமாக அவள் அருகிலேயே இருந்தேன். ஆனாலும்.. அவள் கோபம் அடங்கவில்லை. என் முகம் பார்த்துப் பேசாமல்.. எங்கோ பார்த்துப் பேசியவள்.. என் தொடர் மெளனத்தின் பின் தானும் மெளனமாகிக் கொண்டாள்.

அந்த நேரத்தில்.. ஏற வேண்டிய தொடரூந்தும் வந்து சேர்ந்தது. எதுவுமே பேசாமல்.. பக் என்று ஓடிப் போய் ஏறிக் கொண்டாள். நான்.. இவாவின்ர.. இந்தக் கோபத் தீப்பொறியை எனியும் அனுமதித்தால்.. விளைவுகள் மோசமாகும் என்று கருதியதால்... கொஞ்ச நேரம் பெஞ்சில் இருந்துவிட்டு.. தொடரூந்து புறப்படத் தயாராக இருந்த நேரத்தில் ஓடிப் போய் அதில் ஏறிக் கொண்டேன். இங்கு.. தொடரூந்து மற்றும் பேரூந்தில் பயணிக்க ஒரே பயண அட்டையை பாவிக்க முடியும் என்பதால்.. பிற யோசனைக்கு இடமளிக்காமல்.. அவளின் கோபத் தீயை அணைக்கும் வழிமுறையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்து கொண்டேன்.

http://youtu.be/v_CTFxmpMk0

தொடரூந்தில் ஏறிய நான்.. அவள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன். நான் அருகில் அமர்ந்திருப்பது தெரிந்தும்.. மெளனத்தை முழுங்கியவள் போல.. வாய் மூடி.. முகத்தைத் திருப்பி வெளியில் பார்த்துக் கொண்டே வந்தாள். நான்.. அந்த மெளனத்தை.. கலைக்க.. "சொறீங்க" என்றேன். "எதுக்கு சொறி சொல்லுறீங்க... சரி.. விடுங்க. எனி மேல் இப்படிச் செய்யாதீங்க. செய்தீங்க.. உங்க கூட எல்லாத் தொடர்பையும் கட்பண்ணிட்டு இருந்திடுவன்..! சொல்லிட்டன். என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது" என்றாள்.. காட்டமாக ஆனால்..கொஞ்சம் கோபம் தணிந்தவளாய்.

அந்தச் சந்தர்ப்பத்தில்.. அவளின் கையை மணிக்கட்டில் பிடித்தேன். மிக மிருதுவாக இருந்த அவள் கையை என் கரம்.. மிகவும் பக்குவமாகவே பற்றிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் பேசாமல் இருந்தால். அதன் பின் விடுங்க.. கையை என்றாள். நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கிறன்.... உங்களுக்கு என்ன என்றேன். "ஆமா.. அவற்ற மனிசி. அதுதான் பேரூந்தில ஏற விட்டிட்டு வெளில நிண்டவர்".. என்றாள்.. மீண்டும் அதே பிரச்சனைக்குரிய.. அம்சத்தை தலைக்குள் அமுக்கி வைச்சிருந்தவளாய். நான் தானோ சொன்னனே.. அதில.. போக வேணான்னு.. நீங்க கேட்கல்ல என்றேன். மீண்டும்.. கோபத்தோடு என்னை திரும்பிப் பார்த்தாள். "என்ன பார்க்கிறீங்க.. இதுக்கெல்லாமாங்க கோவிக்கிறது. நான் நினைச்சன் நீங்க நிற்பீங்க... யுனி முடிற நேரம் பேரூந்து அடிக்கடி வரும்..அடுத்த பேரூந்தில.. போவம் என்று தான் நினைச்சுச் சொன்னன். அந்தச் சன நெருசலுக்க.. என்னால பேரூந்தில பயணிக்க முடியாது.. அதுதான் சொன்னேன். அது தப்பாங்க என்று என்னிலை விளக்கம் அளிக்க.. பேசாமல் மெளனமானாள்.

சரி அதை விடுங்க. இப்ப கையை எடுங்க என்றாள் என் தன்னிலை விளக்கத்தில் சமாதானமானவளாய். "இல்லை எடுக்க மாட்டன்.. நான் என் மனிசிட கையைப் பிடிச்சிருக்கின்றன். அதை எடுக்கச் சொல்ல நீங்க யாரு" என்றேன். சிரிச்சுக் கொண்டே.. தொடரூந்தில் பூட்டப்பட்டிருந்த கமராவைக் காட்டி.. "அதில கமரா பூட்டி இருக்குது... இவனை முன்னப் பின்ன.. எனக்கு தெரியாது.. என்ர கையைப் பிடிச்சு இழுக்கிறான்.. என்று உதில இருக்கிற சனங்களட்டச் சொன்னன்.. உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கள்" என்றாள். "முதலில.. அதைச் செய்யுங்க.. நான்.. அதுக்கு எப்படி விளக்கம் கொடுக்கிறேன்னு அப்ப பாருங்க" என்றேன்.. பதிலுக்கு போட்டியாக. சரி சொல்லேல்ல.. இப்ப விடுங்க கையை..என்றாள். விடுவிக்க வேண்டும் என்றாள் அவளே என் கையை தட்டி விட்டிருக்கலாம்.. அல்லது உதறி இருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை. இருந்தாலும்.. அவளின் தொடர் வேண்டுகோளிற்கு இணங்கி கையை விட்டேன். போய் என் முன்னாடி உள்ள சீட்டில.. இருங்க என்றாள். எதுக்கு என்றேன். உங்க கண்களைப் பார்த்துக்கிட்டு இருக்கனும் போல இருக்கு என்றாள். என் கண்ணைத் தானே.. இப்படி திரும்பி இருந்து பாருங்க.. என்றேன்... அவளின் அருகில் இருந்தபடியே. "நீங்க திருந்தவே மாட்டீங்க.. போங்க..." என்றாள் செல்லமாக.

அதுசரி.. "இப்ப எங்கேங்க வாறீங்க. நீங்க இறங்க வேண்டிய ஸ்ரேசனும் போட்டுது" என்றாள். அப்போதுதான் எனக்கே அந்த விசயம் தெரிந்திருந்தது. இருந்தாலும்.. பதட்டப்படவில்லை. உங்க கூட கடைசி ஸ்ரேசன் வரை வந்திட்டு.. அங்க இருந்து திரும்பி வருவன் என்றேன். நான் இடையில் இறங்கி.. பேரூந்தில போகப் போறன் என்றாள். அப்ப நானும் அங்க இறங்கி திரும்பி வருவன் என்றேன். சிரிச்சுக் கொண்டே.. என் தலையில் குட்டினாள்.

http://youtu.be/y_40EdvtU-o

சரி.. எனக்கு இப்ப கால் உளையுதுங்க.. அமுக்கி விடுவீங்களா என்றாள். "என் மனிசிக்குத் தானே.. கால் அமுக்கி விடுறது பிரச்சனையே இல்லை.. ஆனால்.. அதை..தொடரூந்துக்க செய்ய முடியாது.." என்றேன். ஆமா ஆசையப் பாரு என்றாள். "நீங்க தானே கேட்டீங்க.. அப்புறம் என்னங்க ஆசையப்பாருன்னுறீங்க" என்றேன். நிசமாத்தாங்க கால் உளையுது.. என்று தன் கால் பாதங்களைக் காட்டினாள். அவளின் ஒரு பாதத்தில் சிறிய வீக்கம் இருந்தது. அதனைப் பார்த்ததுமே என் மனசு.. பரிவால் துடித்தது.என்னாச்சுங்க.. என்று கேட்டுக் கொண்டே.. என்னை அறியமாமலே.. பாதத்தை மெல்லத் தொட்டுத் தடவி விட்டேன். என் யுனி பாக்கில் இருந்த.. ஒரு ஸ்ரிக்கரையும் எடுத்து.. அவளின் காலில் ஒட்டியும் விட்டேன். அழகான அந்த வண்ணத்துப்பூச்சி ஸ்ரிக்கர் அவளின் செந்நிறமான பாதங்களுக்கு அழகாக இருந்தது. மலரில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சி போல அது அங்கு காட்சி அளித்தது. அது அவளுக்கு ஆறுதல் அளித்திருக்க வேண்டும். மெல்ல என் மீது சாய்ந்து கொண்டு காலைல இருந்து ஒரே நடையுங்க.. அதுதான் கால் வீங்கி இருக்குது.. உளையுது என்றாள்.. செல்லமாக. என்னில் சாய்ந்திருந்தவளை நான் என் தோளோடு தாங்கிக் கொண்டேன்.. இருவரின் ஆறுதலுக்காகவும்.

http://youtu.be/CEHZAZ_3CGo

மிகுதி அப்புறம்...

(பகுதி கற்பனை) :) :lol:

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் நெடுக்ஸ்..... நல்லாத்தான் போகுது. :)

காதல் கதை.... வாசிக்கிறதுக்கும் கேக்கிறதுக்கும் ரொம்ப நல்லாருக்கும்! :wub::D

ஆனால் அதை உண்மையிலயே அனுபவிக்கிறவன்தான் பாவம்! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாகக் கதை எழுதுகிறீர்கள் நெடுக்ஸ். ஆனால் நிச்சயமாய் கற்பனை அல்லது நீண்ட கனவேதும் கண்டிருப்பியள். உண்மையில் இப்பிடி நெடுக்ஸ் காதல்வசப்பட்டிருக்கவே முடியாது :lol:

Link to comment
Share on other sites

தொடர் அருமையா போகுது ஆனாலும் நீங்கள் தெரிவு செய்யும் பாட்டு  அம்புட்டும் சூப்பர் அண்ணா தொடருங்கோ எங்க கொண்டுபோய் கவிழ்க்க போறியள் என்று பார்ப்பம் :icon_idea::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடு திரும்பியதும்... பேரூந்து களேபரத்தில்.. எதிர்வரும் வாரங்களில் யுனி ஈஸ்டர் விடுமுறைக்காக மூடப்படுவதை மறந்துவிட்டிருந்த நான்.. அப்ப எனி இரண்டு வாரங்களுக்கு அவளைச் சந்திக்க முடியாதே.. நேரில் ஈஸ்டர் வாழ்த்தும் சொல்ல முடியாதே என்ற தவிப்பில்.. எனது கணணிக்குள் நுழைந்து.. இணையத் தூதை திறந்தேன்.

அவளும் வீடு போய் சேர்ந்து இணையத் தூதில் நின்றிருந்தாள். நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு.. இணையத் தூதை அதிர வைத்து.. அவளை அழைத்தேன். அவளிடம் இருந்து பதில் இல்லை. ஆனால் அவள் ஆன் லைனில் நிற்கிறாள் என்று காட்டியது. மீண்டும் இணையத் தூதை.. அதிர வைத்தேன். பதில் இல்லை. சற்று நேரத்தில்.. ஆன் லைன் என்பது.. "பிசி".. என்று மாறி நின்றது. அப்ப கணணியில் இருக்கிறாள்.. ஆனால் கதைக்கிறாள் இல்லை என்ற முடிவோடு.. "அவசரம்" என்று ஒரு ஈமெயில் செய்தி போட்டேன். ஈமெயிலுக்கும் பதில் இல்லை.

ஆள் நிஜமாவே பிசி போல.. சரி என்று சற்று நேரம் செல்ல வருவோம் என்றுவிட்டு.. சமையலறை சென்று.. ரீ போட்டுக் கொண்டு வந்தேன். வந்ததும் வராததுமாக மீண்டும் இணையத் தூதை திறந்தேன். பதில் இல்லை. ஈமெயிலுக்கும் பதில் இல்லை. மொபைலை எடுத்து ஒரு ரெக்ஸ்ட் போட்டேன்.. இணையத்தூதிற்கு வரும் படி. ஆனால் அதற்கும் பதில் இல்லை. சரி.. ஆள்.. இன்னும்... பிசி போல என்றிட்டு.. சுமார் 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் இணையத் தூதை அதிர வைத்தேன்.

"வாட்" என்ற கேள்வியோடு வந்தாள். "என்ன.. பிசியோ" என்றேன். "ஆமா பிசி தான். அதுக்கு இப்ப என்ன" என்றாள். இல்ல ஈமெயில் போட்டன்... பதில் இல்லை. மெசேஜ் போட்டன் பதில் இல்லை. அவ்வளவு பிசியாங்க என்றேன். ஆமா அவ்வளவு பிசிதான். தெரிஞ்ச.. ஒருவரோடு சாட் பண்ணிக்கிட்டு இருந்தன். அதுதான் பதில் போட முடியல்ல என்றாள். ஏங்க.. சாட் பண்ணிட்டு இருக்கிற நீங்க.. இணையத்தூதில் அதைச் சொல்ல அதிக நேரமா எடுக்கும் என்றேன். உடனே கோபத்தின் உச்சிக்குப் போனவளாய்.. "நான் எதுக்கு உங்களுக்கு பதில் போடனும். அப்படி என்ன அவசரம். இப்பதானே யுனில பார்த்துப் பேசிட்டு வந்தன். அப்புறம் என்ன" என்றாள். பார்த்துப் பேசினது நிஜந்தாங்க.. ஆனால்.. ஈஸ்டர் விடுமுறை வரப் போகுதெல்லோ.. எனி இரண்டு கிழமைக்கு பார்க்க முடியாதே என்று சொல்லத்தான் அழைத்தேன். அந்தக் காலத்தில் முடிந்தால்.. இணையத் தூதுக்கு வாங்க என்றேன்.

அதுக்கு அவள்.. "ஏன் நான்.. வரனும். நீங்க கூப்பிடுற நேரம் எல்லாம் வர எனக்கு வேற வேலை இல்லையா" என்றாள். நான் அதிர்ச்சியோடு.. மெளனமானேன். மீண்டும் அவளே தொடர்ந்தாள். "இஞ்ச பாருங்க.. என்னை யாரும் டிமாண்ட் பண்ண ஏலாது. நான் நினைச்சது தான் செய்வன். நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை. அதுக்காக சதா பக்கத்தில இருக்கனும்.. கொஞ்சிக் குலாவிட்டு இருக்கனும்.. ஐ லவ் யு சொல்லிட்டு இருக்கனும்.. என்று நினைக்காதேங்க. அதுக்கு வேற ஆளைப் பாருங்க. மீண்டும் சொல்லுறன்.. எனக்குப் பிடிக்காட்டி உங்களை தூக்கி எறிஞ்சிட்டுப் போக எனக்கு அதிக நேரம் எடுக்காது. அதை மனசில வைச்சிருங்க" என்றாள். அதோடு நிறுத்தாமல்.. மேலும்.. தொடர்ந்தாள்.. "அதுவும் இல்லாமல்.. நீங்க தான் எனக்கு வாழ்க்கையில தேவை என்றும் இல்லை. நீங்க இல்லாட்டி இன்னொருத்தனை கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா வாழுவன். ஏதோ உங்களை நம்பி நான் இருக்கிறன் என்று மட்டும் நினைக்காதேங்க. உங்களைக் காதலிக்கிறதுக்காக நான் உங்க அடிமை இல்லை. ஓ.கே.." என்றாள்.. தனது பொழிப்புரையை கோபத்தோடு..!

நான்.. அதற்கு எந்தப் பதிலும் போடாமல்.. இருந்துவிட.. மீண்டும்.. "என்ன பதிலைக் காணம்" என்று எழுதினாள். அதற்கு நான்.. உங்ககிட்ட.. ஈஸ்டர் கொலிடே வரப்போகுது.. நேரில.. சந்திக்க முடியாத தருணங்கள் வரும்.. அதுதான்.. முடிஞ்சா.. இணையத்தூதுக்கு வாங்க என்று சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க என்னடான்னா.. ஏதேதோ எழுதுறீங்க.. ஏங்க கோவப்படுறீங்க என்றேன்.. அமைதியாக. அதற்கு அவள்.. "ஹலோ.. நான் ஒன்றும் கோவப்படல்ல. நிஜத்தை தான் எழுதிறன். நான் சாட்டில ஆயிரம் பேரோடும் கதைப்பன். அது என் இஸ்டம். எனக்கு நேரம் இருந்தால் தான்.. உங்க கூட கதைப்பன். இல்ல பேசாமல் இருப்பன். என்னை அங்க வா.. இங்க வா.. அதைச் செய்.. இதைச் செய்.. அங்க கதை.. இங்க கதை என்று டிமாண்ட் பண்ண ஏலாது. சொல்லிட்டேன். நான் இப்படித்தான். பிடிச்சா கூட இருங்க.. இல்லாட்டி விட்டிட்டுப் போங்க. எனக்கு ஒரு தலையிடி குறைஞ்ச மாதிரி" என்றாள்.. எடுத்தெறிபவளாய்.

http://youtu.be/JDu_NrQHKy0

நான்.. நம்பிக்கையும் அன்பும் வைச்சிருந்தவள்.. இப்படி பேசுறாளே.. என்ற மனவேதனையோடு.. "சரிங்க " என்று கூறிவிட்டு.. இணையத் தூதை லாக் அவுட் பண்ணிவிட்டு வந்துவிட்டேன்.

அன்று.. pause ஆன அவளுடனான தொடர்புகள்.. மீண்டும் தொடரவே வாய்ப்பில்லாத வகைக்கு.. அவள் நடவடிக்கைகள் இருந்தன. அது எனக்குள் அந்த நேரத்தில் வேதனையாகவும்.... நானா அவளிடம் போகாத போதும்.. அவளா தேடி வந்திட்டு இப்போ என்னை சொற்களால் நடத்தைகளால் வேதனைப்படுத்துகிறாளே என்ற எண்ணமும்.. மனதில் வேதனையை தொடர்ச்சியாக பிரசவித்தது. எனி.. அவளாக தேடி வந்தால் தான் கதைக்கிறது. இல்லாது போனால் அவள் விருப்பப்படியே நடந்து கொள்ளட்டும். எனியும் அவளுக்காக நான் இறங்கிப் போகப் போறதில்லை என்ற முடிவோடு... நானும்.. அவளுடனான எல்லா தொடர்புகளையும் துண்டிக்க திடசங்கற்பம் பூண்டேன். அந்த முடிவு.. மனதில்.. தாளாத வேதனையையும்.. நித்திரை இல்லாத இரவுகளையுமே எனக்குப் பரிசாகத் தந்திருந்தது. அதுமட்டுமல்ல.. அவளுக்காக நான்.. என் பெற்றோர் விருப்பங்களை எல்லாம் உதாசீனம் செய்தது.. என் வாழ்க்கையில்.. பெண் என்ற அத்தியாயத்திற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதி விட்டிருந்தது.

மீண்டும்.. அவளைச் சந்தித்தாலும் கூட அவளாக வந்து பேசாத வரை நானாகப் பேசப் போவதில்லை என்ற முடிவோடு.. நாட்கள் கழிந்தன. அது வாரங்கள் ஆகின. அது மாதங்கள் ஆகின. ஏன் வருடங்களும் ஆகின. அவளோ.. விண்ணோடு ஒளிர் விட்டு மறையும் எரிநட்சத்திரமாக என் வாழ்க்கை எனும் வானில் தோன்றி மறைந்திருந்தாள். நான்.. விடியற் சூரியன் என்று நினைத்தது.. எரிகல்லாகி.. சாம்பலாகி நின்றது என் வாழ்க்கையில் வேதனையாகவே அமைந்திருந்தது. இருந்தாலும்.. நானே தேடிக் கொண்டதில் இருந்து நானே வெளியே வரவும் கற்றுக் கொள்ள அவள் தந்த அனுபவம் எனக்குப் பாடமானது ஆறுதல். அதற்காக நான் அவளுக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

+++++++++++++++++++++++++

என்னடா... காட் ரைவ் (Hard drive) வில இருந்து.. பைல்களை கொப்பி பண்ண முடிஞ்சு தா.. என்று கேட்டான் நண்பன். ஆமாம்.. ஆனால் உனது கிரக்டான (Crack) காட் ரைவில் இருந்த ஒரு பைல் என்னை மிகவும் பாதிச்சிட்டுதடா என்றேன். அதற்கு அவன் "எந்த பைல்".. அந்த "என் கதை சொல்லும் நேரமிது" என்ற பைல் தான்... அதை யாழ் இணையத்தோட பகிர்ந்து கொள்ளப் போறன். சம்மதிப்பியா என்றேன். அதற்கு நண்பன் சொன்னான்.. "அவள் தான் என்னை வைச்சு வேடிக்கை காட்டிட்டுப் போய்ட்டாள் என்றாள்.. நீயும் என்னை வைச்சு.. வேடிக்கை காட்டப் போறன் என்ரா.... சரி ஏதோ செய்" என்றான்.

நான் சொன்னேன்.. இது வேடிக்கை இல்லை மச்சான்.. இது ஒரு பாடம்..! உது நீதிமன்றம் போய்க் கூட.. நீதி தேட முடியாத சங்கதி. அதனால் இதனை.. ஒரு பாடமாக்கி.. அதைப் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று. "சரி ஏதோ..செய்"... என்று அனுமதி தந்தான்.. மனதில் உள்ள வேதனைகளைத் தாண்டி புன்னகைத்தபடி.

நன்றி. முற்றும். (பகுதி கற்பனை)  :) :lol: :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி எண்டாலும் இப்பிடி சப்பென்ன்று முடித்துவிடீர்களே. நான் இன்னும் எதோ எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

முடிவு சோகமாக உள்ளது.  :rolleyes: நெடுக்ஸ் அண்ணா வேணும்னே நண்பனது என்று இறுதியில் மாற்றி விட்டிருக்கிறார். :icon_idea: முன்னர் நீங்கள் ஒரு பெண்ணை காதலித்திருந்தீர்கள் என வாசித்திருந்தேன். அந்த பெண் தான் இவராக இருக்குமோ என சந்தேகம். :)

 

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

Link to comment
Share on other sites

அதானே பார்த்தன்.. நெடுக்காவது ஏமாறுவதாவது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணுக்கு ஒருத்தரை பிடித்திருந்தால் சிறு சிறு பிழைகளை மன்னித்து விட்டுக்கொடுப்பாள் அல்லது சண்டை பிடித்து விட்டும் பின்னர் கதைப்பாள். :) ஆனால் விலக நினைத்து விட்டாலோ சிறு சிறு பிழைகளையும் பெரிதாக்கி சண்டை பிடிப்பாள், கதைக்காமல் இருப்பாள், பதிலளிக்காமல் விடுவாள். :rolleyes:

 

ஆனால் உங்களை விட்டு விலத்துமளவுக்கு பெரிய பிரச்சினை ஏதும் இடம்பெறவில்லை. எனவே ஒன்றில் அந்த supermarket இல் நிற்பவர் திருமணமாகாமல் இருந்திருந்தால் அவர்களுக்குள்ளான மோதல் பின்னர் காதலாகியிருக்கலாம். அவருடனேயே chat பண்ணியுமிருக்கலாம். அல்லது ஆண்கள் என்றால் இப்படி தான் என நினைத்து பயந்து பழகுவதை நிறுத்தியிருக்கலாம். அல்லது வீட்டில் பிரச்சினையாக இருக்கலாம்... etc. :rolleyes:

ஒவ்வொன்றிற்கும் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கலாம்.. காட்டலாம். அவள் எவனையும் காதலிக்கட்டும்.. எவனோடும் வாழட்டும். அது அவளின்ர பிரச்சனை. ஆனால்.. குறைந்தது உதட்டளவில் உச்சரிக்கும்.. " நான் உங்களைக் காதலிக்கிறது உண்மை" என்ற அந்த வார்த்தைக்காவது உண்மையாக இருக்கலாம் அல்லவா. அது கூடவா.. ஒரு பெண்ணால் செய்ய முடியாது. அதைச் செய்ய முடியாதவளுடன்.. எப்படி ஒரு மகிழ்ச்சியான நிம்மதியான.. நல்ல வாழ்வை எதிர்பார்க்கலாம்.  இவன் மட்டுமல்ல.. எவனும்..???!  இது இந்தக் கதையின் நாயகனுக்குரிய பிரச்சனை மட்டுமல்ல.. பல பேருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒரு வடிவம்.  :)   :icon_idea:

சமீபத்தில் கருத்துக்களும் ஊக்கமும் தந்த.. சுமே அக்கா.. அலை அக்கா.. கவிதை.. யாழ்வாலி.. அஞ்சரன்.. இசைக்கலைஞன் மற்றும் துளசி போன்ற உறவுகளுக்கும் நன்றி. மீண்டும் இன்னொரு தொடர்கதை போடுற ஐடியா இல்லை. ரெம்ப ரயேட் ஆயிடுச்சு..! எப்படித்தான் உந்த நாவல்களை பக்கம் பக்கமாக.. எழுதித் தள்ளுறாய்ங்களோ..??! :D   :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.