-
Tell a friend
-
Topics
-
Posts
-
By வல்வை சகாறா · Posted
பா. உதயகுமார் அருமை மிகச் சிறப்பாக இருக்கிறது. இலகுவான வார்த்தைப்பிரயோகம் கேட்பவரை ஒரு நிலைக்குள் கட்டிப்போடுகிறது. ஒலிப்பதிவும் பிசிறின்றி அமைதியாக நகர்கிறது. இசையும் கவிதையின் ஓட்டமும் நிகழ்காலத்தை மனக்கண்முன் காட்சியாக விரிக்கிறது. உணர்வுகளுக்குள் கலக்கின்ற வரிகள் வடிவங்களை பின்னி அசைத்திருக்கிறது. சிறப்பு வாழ்த்துகள். -
By பெருமாள் · பதியப்பட்டது
சீன மொழி பெயர்ப் பலகையை அகற்ற முடியாது – அரசாங by Anu இலங்கையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சீன நாட்டு அபிவிருத்தி திட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீன மொழிப் பெயர் பலகைகளை அகற்றுவதற்கான எந்த சட்ட ஏற்பாடுகளும் உள்நாட்டில் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரச கரும மொழிகள் திணைக்களத்தின் தலைவரான தர்மசேன கலன்சூரிய இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டங்களுக்கு அமைவாக அரச கரும மொழிகளை மீறினால் மாத்திரமே அதற்கெதிராக நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய சீன அல்லது வேறு நாடுகளின் தனிப்பட்ட பெயர் பலகைகள் காட்சிப்படுத்துகையில் அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியாத நிலைமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு போர்ட் சிற்றி என்கிற துறைமுக நகரம் ஆகிய பிரதேசங்களில் சீன மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பதாதைகள் மற்றும் விளம்பரங்கள் என்பவற்றை அந்தந்த நிறுவனங்களின் தீர்மானங்களின்படி காட்சிப்படுத்த இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வேறுநாட்டு மொழிகளை இந்த நாட்டிற்குள் பயன்படுத்துவதாயின், இலங்கை அரசியலமைப்பிற்கு அது முரணான செயற்பாடாக அமையும் என்பது அரசியலமைப்பின் 4ஆவது பிரிவில் காணப்படுகின்றது. இருந்த போதிலும் இந்த சட்டமானது, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் மீது மேற்கொள்ள முடியாது என்றும் அரச கரும மொழிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பிற்கு அமைவான ஏதாவதொரு அறிவிப்பு பலகையை காட்சிப்படுத்துவதாயின் அது சிங்களம், தமிழ் ஆகிய அரச கரும மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழி கூட்டு சேர்க்கப்பட்ட மொழியாக இணைத்துக் கொள்ளவும் முடியும் என்று தெரிவித்துள்ள அந்த திணைக்களம், அந்த சட்டமானது அரச மற்றும் அங்கீகாரம்பெற்ற நிறுவனங்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. கொழும்பில் கொள்ளுபிட்டி,கொழும்பு 07,பம்பலப்பிட்டி,வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களில் சீன அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெறும் இடங்களிலும் சீன உணவகங்களிலும் சீன மொழி பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாட்டின் இதரபகுதிகளில் சீன நிறுவனங்களின் ஒப்பந்தம் நடைபெறும் இடங்களிலும் சீன பெயர்ப்பலகைகள் பெருமளவில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.pearlonenews.com/சீன-மொழி-பெயர்ப்-பலகையை-அ/?fbclid=IwAR2sWkeADuOrpmfgWseJL285L8mRu_ID8E4X3q4ZLP7J_wIiBbu22MEH_ks -
அம்மையும் நீயே அப்பனும் நீயே! ஆறு படை வீடுகளின் அழகோவியம்
-
By வல்வை சகாறா · Posted
இம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது.... -
ஞானம் நிறை கன்னிகையே மாதா இயேசுவே... உயிராய் வா... உணவாய் வா.... உணர்வாய் வா..... உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன் -2 மார்பினில் சாய்ந்து உன் உணர்வுகளை மன்னவன் நேசத் துடிப்புகளை அனுதினம் நானும் உணர்ந்திட செய்திடும் இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா - 2 உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 1) இரவும் பகலும் பேசிடும் என் தெய்வமே இணையில்லா அருளை என்றென்றும் நான் சொல்வேன் -2 பாறையில் வழிந்தோடும் நீர் ஊற்றாய் உன் பரிவினால் என்னை முழுமையாய் நிரப்பிட இயேசுவே உயிராய் வா உணவாய் வா என் உணர்வாய் வா உணர்கின்றேன் உணர்கின்றேன் இயேசுவே உன் அன்பை உணருகின்றேன். 2) வாழ்வென்றால் எனக்கு எல்லாமே நீர்தானையா வானத்துப் பறவை போல் மகிழ்வோடு வாழ்ந்திடுவேன் -2 உன்னோடு வாழ்ந்திடும் தருணங்களை நான் பிறரோடு பகிர்ந்திட உன்னருள் தந்திட இயேசுவே உயிராய் வா உறவாய் வா என் உணர்வாய் வா.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.