கரணவாய் கரணவாய் என்பது யாழ் வடமராட்சிப் பகுதியில் உள்ள ஒரு பெரிய கிராமம். இது கரணவாய் தெற்கு, வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு என்று பல பிரிவுகளாக உள்ளது. தெற்கு எல்லையாக உப்புவெளியும், கப்பூதூக் கிராமமும், கிழக்கே கரவெட்டியும், மேற்கே வல்லை வெளி, இமையாணன், உடுப்பிட்டி போன்ற பகுதிகளும், வடக்கே கொற்றாவத்தை, பொலிகண்டி போன்ற இடங்களும் உள்ளன. தெற்கே போகும் வீதி வல்லை வெளியில் இருந்து துன்னாலை நோக்கிப் போகின்றது. இந்த வீதியில்தான் பிரபல்யமான சுருட்டு தயாரிக்கும் மண்டான் என்ற இடமும், உப்பங்களியும் உள்