• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஊரும் உலகும்

Recommended Posts

வல்வெட்டித்துறை அம்மன் கோயில் திருவிழா ஒரு colourful திருவிழா...எனது யாழ் நகர நண்பர்கள் அதை கிலாகிப்பார்கள்...

விடிய விடிய ஊரெல்லாம் பாட்டு கச்சேரி நடக்கும்....இனி அப்படி நடக்குமா என்று தெரியாது.....

Share this post


Link to post
Share on other sites

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

 

இசை ! பட்டம் விட்டது போதும் என்று கிருபன் சொல்லிப் போட்டார், நீங்கள் என்னடான்றால் மீன்டும் விண்ணோடு அலையுறீங்கள் ,  பிறகு கிருபன் விஜய்யின் படத்துக்கு ஒரு டிக்கட் எடுத்து அனுப்பிப் போடுவார்  கவனம் ...! :)

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

முன்பு ஒருமுறை இந்தப் பதிவில் நான் புகுந்த ஊரைப்பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன் . நான் அங்கு நின்ற நாட்களில் கண்டு கேட்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இதில் சிலவேளை பிழைகள் இருக்கலாம். யாராவது பருத்தித்துறை வாசிகள் திருத்தினால் நன்றியுடையவனாய் இருப்பேன்.

 

நான் புகுந்த இடம் பருத்தித்துறை , அதில் குறிப்பாக சொல்வதானால் தம்பசிட்டி என்ற சிறிய கிராமம் . பருத்தித்துறை அடிப்படையில் ஓர் துறைமுகப் பட்டினமாகும். ஆரம்பகாலங்களில் இங்கு பருத்தி அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செயப்பட்டதால் பருத்தித்துறை என்ற பெயர் வந்ததது . இந்த நகரத்தை ஆங்கிலத்தில் "பொயின்ற் பிட்ரோ"  என்றும் அதையே தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து " பீத்துறு முனை " என்றும் சொன்னார்கள்  ஆனால் , ஒல்லாந்து கடலோடியான பெட்ரோ இந்த நகரை கண்டுபிடித்தால் பொயின்ற் பெட்ரோ என்று பெயரிட்டதாக வரலாறு சொல்கின்றது .

 

பருத்தித்துறையும் அதனோடு சேர்ந்த தம்பசிட்டியும் ( குறிப்பாக ஓடக்கரை என்ற பகுதி ) தோசை , வடை , அப்பம் , எள்ளுப்பா போன்ற உணவுகளுக்குப் பெயர் பெற்றது . தோசை என்றால் அதற்கு இடி சம்பல் , பொரி சம்பல் , பச்சைமிளகாய் சம்பல் , சிவப்பு மிளகாய் சம்பல் , தோசைக்கறி (இது பருத்தித்துறைக்கே உரித்தான ஒன்றென்று கூறலாம்) போன்றவற்றுடன் பரிமாறுவார்கள் . அதுவும் தோசைக்கறி பருத்தித்துறைக்கே சொந்தமானது ஒன்றாகும்.  அதே போல் அப்பதட்டிகளை இங்கே தான் காணலாம். பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து அம்மன் கோவிலடியால் செல்லும் பொழுது கல்லூரி வீதி வரை (ஓடைக்கரை) இந்த அப்பதட்டிகள் இருக்கும் . இவை பார்பதற்கு விநோதமானவை. வீட்டு மதில்களில் சிறியளவில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள். மதிலுக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. காசுப் பரிமாற்றமும் , பொருளும் இந்த ஓட்டையினாலேயே நடைபெறும். இந்த அப்பத்தட்டிகள் பருத்தித்துறை பெண்களது அன்றாட பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செயக்கூடியதாக இருந்தது. இப்பொழுது புலத்திலே காணப்படுகின்ற " ட்றைவ் இன் " கள் வர முன்பே பருத்தித்துறையில் அப்பத்தட்டிகள் வந்துவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது ஒன்றாகும் .

பருத்திதுறை பல கல்விமான்களை உருவாக்கிய நகரமாகும் . அதில் முக்கியமானவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆவார் . மேலும் இங்கு நான்கு பாடசாலைகள் பிரபல்யமானவை. அவையாவன ஹாட்லி கல்லூரி , வேலாயுதம் மகாவித்தியாலயம் ,  மெதடிஸ் பெண்கள் கல்லூரி , வட இந்து மகளிர் கல்லூரி போன்றவை ஆகும் . பிரசித்தி பெற்ற கோவில்களாக ,  பண்டாரி அம்மன் கோவில் , ஆத்தியடி பிள்ளையார் கோவில் , ஆவோலைப் பிள்ளையார் கோவில் , சிவன் கோவில் , கோட்டுவாசல் அம்மன் கோவில் , பத்திரகாளி கோவில் , வல்லிபுர ஆழ்வார் கோவில் , தொப்பிலாவத்தை வைரவர் கோவில்,நெல்லண்டை அம்மன் கோயில், பெரிய பிள்ளையார் கோயில், சின்னப்பிள்ளையார் கோயில், பன்னையம்பதி பிள்ளையார் கோயில், புனித லூர்து மாதா யாத்திரிகர்  தேவாலயம்   போன்றவை இருக்கின்றன .

 

9yo3.jpg

 

பருத்தித்துறையில் கடற்கரையோரமாக முனையும் துறை முகமும் உள்ளது . முனை சரியாக ஆண் கடலையும் பெண்கடலையும் இரண்டாகப் பிரிக்கின்றது. இங்கு இருக்கும் வெளிச்சவீட்டு கோபுரமும் பிரசித்தி பெற்றது. இந்த வெளிச்சவீட்டிலிருந்து இலங்கையின் தென்பகுதியான காலியிலுள்ள வெளிச்சவீட்டுக் கோபுரம் வரைக்குமான தூரத்தையே இலங்கையின் மொத்த நீளமாக கணிக்கின்றார்கள்.  கோடைகாலத்தில்   கச்சான்  காத்து (வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று ~ பருவமழைக்காலம்) காலத்தில் இங்கு பட்டம் விடுதல் முக்கிய நிகழ்வு . அதே போல் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவும் பிரபல்யமானது . வல்லிபுரக் கோவில் கடற்கரையில் இருக்கும் மண் புட்டிகளைக் கடந்து பெருமாளை கொண்டுவந்து கடற்கரையில் தீர்த்தமாட விடுவார்கள். இது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இங்குள்ள வீடுகள் சிலவற்றுக்கு கடற்கரையில் இருந்தே நேரடியாக படகுகள் , சிறிய ரக கப்பல்கள் வருவதற்குப் பாதைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன் .

 

இது பெண் கடல்

 

zut2.jpg

 

இறுதியாக குடிமகன்களுக்கு பிரபல்யமானது கூவில் தவறணையாகும்  :wub:  :D  . கூவில் கள்ளு அடிக்கவே ( ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதங்களில்) வெளியூர் குடிமகன்கள் இங்கு படையெடுப்பார்கள் :lol:  :D  .

 

கோ.... சில திருத்தங்கள் செய்துள்ளேன். ( வேறு நிறங்களால் வேறுபடுத்தி எழுதியிருக்கின்றேன்)

பருத்தித்துறையைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பருத்தியனாக நான் அதை எழுத வேண்டும் என ஆசைப்படுகின்றேன். :rolleyes::)

பதிவுக்கு மிக்க நன்றி ..... பருத்தித்துறை மருமகனே! :wub::lol:

 

Edited by கவிதை

Share this post


Link to post
Share on other sites

கோ.... சில திருத்தங்கள் செய்துள்ளேன். ( வேறு நிறங்களால் வேறுபடுத்தி எழுதியிருக்கின்றேன்)

பருத்தித்துறையைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒரு பருத்தியனாக நான் அதை எழுத வேண்டும் என ஆசைப்படுகின்றேன். :rolleyes::)

பதிவுக்கு மிக்க நன்றி ..... பருத்தித்துறை மருமகனே! :wub::lol:

 

 

நன்றி......... நன்றி.......... இவனை பிறத்தியானாய் பாக்காமல் கை கோத்த தும்பர் , டங்கு , கவிதை ஆகியோருக்கு மீண்டும் நன்றி :) . நான் இதை நேற்று எழுதிப்போட்டு மைத்திரேயிட்டை நான் எழுதினது சரியோ எண்டு மை போட்டுப் பாத்தன் :lol: , என்னம் கொஞ்சம் கூடக் கிடைச்சுது .

கூவில் தவறணை வந்து தம்பசிட்டி பள்ளிக்கூடதுக்கு அங்காலை கிடக்கு . தும்பரின்ரை கதையைப் பாத்தால் டங்குவின்ரை ஏரியா கிட்டமுட்ட தம்பசிட்டி  பள்ளிக்கூடதுக்கு கிட்டவாய் சுழருது எண்டு நினைக்கிறன்  :wub:  . பழைய பருத்தித்துறை பஸ் ஸ்ரண்ட்டை சுத்தி இருக்கிற கடையள் எல்லாம் வீர்வாகுவுக்கு சொந்தமானது . பருத்திதுறையிலை வீரவாகுவை தெரியாதவை இருக்கமாட்டினம் . இவரை பத்தி கனக்க கதையள் இருக்கு . ஆனால் இங்கை போடேலாது . பேந்து என்னை பொழி போட்டிடுவங்கள்  :D  . இங்கை ராஜன் சைக்கிள் வேர்க்ஸ் பிரபல்யமானது  . அதைப் போலை குகன் ஸ்ரூடியோவும் பிரபல்யமானது  . பழைய பஸ்ராண்ட் 85 இலை இருந்து கனகாலமாய் பொதுசனம் பாவிக்க தடை செய்யப்பட்டிருந்தது .

இந்த ஹாட்லி கல்லூரியைப் பத்தி கொஞ்சம் சொல்லவேணும் . பேந்து இங்கை இருக்கிற ஹாட்லி மைந்தருகளை என்னாலை தாக்காட்டேலாது :lol: . இந்த கல்லூரியிலை கண்டவை நிண்டவை எல்லாம் படிக்கேலாது . சனம் இங்கை படிக்க தவம் கிடக்குங்கள் . " ஏ ல்  க்கு "   பெடியள் குறைஞ்சது பத்து பேராவது 4 ஏ எடுப்பாங்கள்.  இந்த பள்ளிக்கூடத்தின்ரை கியாதி தென் இலங்கை வரை இருக்கு . எக்கச்சக்கம் சிங்கள சனங்கள் இங்கை படிசிருக்கினம் . அதிலை முக்கியமானவர் கொஞ்ச நாள் பிரதம மந்திரியாய் இருந்த டீ பி விஜயதுங்கா . இன்னும் பெருங்காயள் எல்லாம் படிசிருக்கினம் .ஆரும் தெரிஞ்சால் சொல்லுங்கோ  . சுருக்கமாய் சொன்னால் ஹாட்லி கல்லூரி " புத்திமான்களின் புத்து " எண்டு சொல்லாலாம் .

பருத்தித்துறையிலை  படத் தியேட்டரும் இருந்தது . அதின்ரை பேர் "சென்ரல் தியேட்டர் " மீன் மார்க்கற்ருக்கு கிட்ட இருந்தது . மற்றது " புலோலி சினிமா "  கிராமக்கோட்டடியிலை இருந்தது . குத்துவிளக்கு படம் படப்பிடிப்பு வீ எம் றோட்டிலை இருந்த " பிறேமா இல்லத்திலை " நடந்தது . இவ்வளவுதானப்பா எனக்கு தெரிஞ்சது  :D  .

 

Share this post


Link to post
Share on other sites

.// எக்கச்சக்கம் சிங்கள சனங்கள் இங்கை படிசிருக்கினம் . அதிலை முக்கியமானவர் கொஞ்ச நாள் பிரதம மந்திரியாய் இருந்த டீ பி விஜயதுங்கா . இன்னும் பெருங்காயள் எல்லாம் படிசிருக்கினம் .ஆரும் தெரிஞ்சால் சொல்லுங்கோ  //

 

 

கோமகன் சார் ...கே.பி ரத்னநாயாக்கா என்று கேள்வி பட்டிருப்பியள் ..விளையாட்டு அமைச்சராக இருந்தவர் ..போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ,கொஞ்ச காலம் சபாநாயகாரகவும் இருந்தவர் என்று நினைக்கிறன் ...அவரும் ஹாட்லியில் தான் படித்தவர்...ஹாட்லி விடுதியில் இருந்து தங்கி இருந்து படித்தவர் என்ற படியால் யாழ்ப்பாணம் வந்த பொழுது  தான் படுத்த கட்டில் நம்பர் பார்க்கோணும் என்று பார்த்து விட்டு போனவர் ...யாழ்.வடமராட்சி வட்டார வழக்கு தமிழில் அந்த மாதிரி வெழுத்து வாங்குவார்...பாராளுமன்றத்து பழைய கசட் பார்த்தால் தெரியும் அமிர்தலிக்கத்தாரோடை  அந்த மாதிரி தமிழில் பழமொழி விடுகதை சொல்லி பச்சை தமிழன் போலவே வாதிடுவார் 

 

இவ்வளவு இருந்தும் என்ன ...அநுராதபுரத்திலை 1977 கலவரத்திலை சாரத்தை  மடித்து கட்டி அநுராதபுரத்திலை கலவரத்தை திறம்பட நடத்தினது உந்த ஆள் தான் ..அநுராதபுரத்திலை நீண்ட காலம் இருந்த கரவெட்டி துன்னாலை பகுதியை சேர்ந்தவுருடைய தியேட்டர் முற்றாக அப்பொழுது எரிக்கப்பட்டது ..

 

அதே நேரம் நெல்லியடி சென்றலில் படித்த ஒருவர்  அதிகாரி என்ற பெயருடைய சிங்களவர் நீர்ப்பாசனதுறை  பிரதி அமைச்சராக இருந்தவர் . இவரை நெல்லியடி நவிண்டிலுள்ள குடும்பம் ஒன்றுக்கு உதவியாளராக இருந்து கொண்டு படித்தவர் என்பது குறிப்பட தக்கது

Share this post


Link to post
Share on other sites

மாசிமாதம் அதிகாலை வேளை ஒரு கிராமத்தின் அழகிய காட்சி இந்த பதிவில் உள்ளது. இது ஒரு சமய நிகழ்வு என்றாலும் ஊர் எல்லாம் ஒன்று கூடி அந்த கடக்கரையில் அதிகாலை வேளையில் நாதஸ்வர மேளம் முழங்க பக்தர்கள் எல்லாம் அரோகரா சொல்லி பாக்கு நீரிணை கடலில் கால் நனைப்பது எவ்வளவு மனதுக்கு குளிர்மையானது. இந்த பதிவின் இறுதியில் எம் மண்ணுக்கே உரித்தான உடுக்கை தாள ஒலியுடன் வடமராச்சியில் புகழ் பெற்ற சிவலிங்கம் குழுவினர் கச்சேரி பிரமாதம். நான் சிறு பிள்ளையில் இருந்து கேட்டு வளர்ந்த குரல் தான் அண்ணன் சிவலிங்கம் அவர்களின் கரக கூத்து பாடல்கள் ஆகும்

பொலிகண்டி பருத்தித்துறையில் இருந்து பொன்னாலை கடக்கரை வீதியில் வல்வெட்டித்துறைக்கு முன்பு வரும் ஒரு அழகிய கிராமம் ஆகும்

Share this post


Link to post
Share on other sites

ஊருக்கு போனேன் உன்னை

அங்கு காணவில்லை

பேருக்கு மட்டும் எங்கள்

ஊர்ப் பலகை என்னை வா என்றது

நீ மட்டுமா வந்தாய் என்று

என்னை கேட்டது

நீயாவது வந்தாயே என்று

சொல்கையில் எனக்கு கண்ணீர் வந்தது ......

பழைய ஞாபகத்தில் யாழ் செல்லும்

பேரூந்தில் ஏறினேன்

யாரும் என்னை வரவேற்கவில்லை

வேற்றூரில் நான் இருப்பது

பிறருக்கு தெரிந்தளவில்

என் ஊரில் நான் மீண்டும்

வந்தது யாருக்கும் தெரியவில்லை .....

அன்று இந்த. வண்டியில் சிரிப்பொலிகள் கேட்காத நாளில்லை ..

நான் வரவில்லை என்றலும்

எனக்காக இங்கு நடப்பதை

மறுநாள் சொல்லும் இந்த பயணம்

இன்று ஏதும் பேசாமல்

என்னோடு கோபமாக இருந்தது ..

வான் அதிர கேட்கும் சத்தம்

நடத்துனர் தலைக்கு ஏறும் பித்தம் ..

நெல்லியடியில் வண்டி நிற்காது என்று அவன் சொல்ல

அதை நிற்க்க வைத்து நன்பர்களை நாங்கள் ஏற்ற ..

குரங்குகள் எல்லாம்

கூடி வந்ததுபோல

இராவணணாய் அவன் இருப்பன் ...

கண்ணில் அழகாய் படும் அவர்கள் எங்கே

நகைசுவை பேச்சுக்கள் எங்கே

என் மனதின் ஓசை ஏங்குது இங்கே

இன்று சிறு ஊசி. விழுந்தாலும் கேட்கும் அமைதி சூழ

சுற்று முற்றும் பார்த்து. சிரித்த சிநேகிதர்கள்

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

சேரன் பட பாட்டு சேர்ந்துகொண்டது என்னோடு ....

வீதி எலாம் நல்ல இருக்கு

நான் மட்டும் நடந்து போனேன்

எங்காவது. ஒரு புன்னகை

எனக்கு கிடைக்காதா

என்று ஏங்கி பார்த்தேன்

ஏய் நீ எப்ப வந்த

எத்தனை நாளாச்சு

நல்ல இருக்கியாடி என்று

ஓடி வந்து ஒருத்தி சொல்ல மட்டாள என்று தவிக்க

அக்கா என்று யாராவது ஒரு வார்த்தை

என் காதில் கேட்காத என்று

ஏக்கமுடன் என் ஊரில் நான் நின்றேன் ....

வேப்ப மர காற்று மட்டும்

என்னை மறக்கவில்லை

மெல்ல வந்து என்னை தழுவி

என் வேதனைய. குறச்சுது

கடல் அழைக்கும் கண்ணீர் வந்தது .

எங்க ஊரு. மீன்கறியும்

என்னை ருசிக்க. வச்சுது

வல்லிபுர கோயில் படியில காலடிகள்

பட்டதுமே துள்ளி வரும் கடல் அலைபோல்

பள்ளி தோழிகளுடன் வந்த காலங்கள்

கண்முன்னே. வந்து போனது .....

எங்க ஊரு என்னதான் இப்போ அமைதியா இருந்தாலும்

இன்னும் அந்த பழைய அழகு வரவில்லை

மந்திரிச்சு விட்டது போல மக்கள்

புன்சிரிப்பு இலாத முகங்களை

வெள்ளை உடை அணிந்த வேற்று மனிதர்கள்

வீதியில நடக்கும் பொது மனதுக்குள்ள

என் சுதந்திரம் என்னை அழாதே என்று

அடிக்கடி சொல்லி சொல்லி அமைதி படுத்தியது ......

என் ஊர் சொந்தங்கள் இல்லாமல்

சோகமாக இந்த செய்தியை என்னிடம் சொல்லி அனுப்பியது .....

face book இல் வாசித்தது பருத்தித்துறையை பற்றியது இந்த பகுதிக்கு பொருத்தம் என்று நினைகின்றேன்

Share this post


Link to post
Share on other sites

 

நான் பிறந்த வடமாரட்சி பிரதேசத்தில் உள்ள பிரதான நகரமான பருத்தித்துறையை பற்றி எழுதிய குறிப்புகள் மற்றும் தகவலுக்கு நன்றி.
ஆனால் இந்த தகவல்களும் குறிப்புகளும் குறிப்புகளும் முழுமையானவை அல்ல என்பதால் எனக்கு தெரிந்த தகவல்களை இங்கு எழுதுகிறேன்.
பருத்தித்துறை என்பது வடமாராட்சி பிரதேசத்திலுள்ள பிரதான நகரம்.ஆரம்பத்தில் இது வடமாராட்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் நிர்வாக தலைகநகராகவும் இருந்து.அதே போல வடமாரட்சி பிரதேசம் முழுவதையும் உள்ளடக்கிய பருத்தித்துறை தேர்தல் தொகுதியின் குறியீட்டு நகரமாகவும் அது இருந்தது. 1956 ல் என்று நினைக்கிறேன் அது இரண்டாக பிரிக்கப்பட்டு உடுப்பிட்டி தேர்தல் தொகுதி என்று இன்னொன்று உருவாக்கப்பட்டது.
அதேபோல 80களின் பிற்பகுதியில் வடமராட்சி உப அரசாங்க அதிபர் பிரிவும் வடமாராட்சி வடக்கு கிழக்கு,வடமராட்சி தெற்கு மேற்கு என்று இரண்டாக பிரிக்ப்பட்டது.வடமராட்சி வடக்கு வடக்கு கிழக்கின் நிர்வாக தலைநகரமாக பருத்தித்துறை விளங்குகிறது.
பருத்தித்துறையின் வரலாறு மிகவும் நீண்டது.அதாவது இரண்டாயிரம் ஆண்டுகாலத்துக்கு முற்பட்டது.கி.பி 13ம் நூற்றாண்டு வரை பருத்தித்துறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வல்லிபுரம் முக்கியமான மிகப் பெரிய நகரமாக இருந்தது.தமிழ் பௌத்தமான மகாயான பௌத்தம் கடைப்பிடிக்கப்பட்ட அந்த நகரத்தின் பெயரை 'படகர அதன'  என்று பாளி மொழியில் கிபி 3 மூன்றாம் நூற்றாண்டில் எழுதி வைக்கப்பட்ட பொற்சாசனம் குறிப்பிடுகிறது.(இதன் தமிழ் பெயரை ஒளி நகரம் என்றுசிலர் குறிப்பிடுகின்றனர்)அந்த காலகட்டத்தில் சிங்கள இனமும் சிங்கள மொழியும் ஒரு தனி இனமாகவும் மொழியாகவும் உருவாகவில்லை என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.
யாழ்ப்பாணக் குடாநாட்டை கதிரமலை(கந்தரோடை)யில் இருந்து ஆட்சி செய்த உக்கிர சிங்கன் என்ற தமிழ் பௌத்த மன்னன் சோழ இளவரசியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை கட்டியவளுமான மாருதப்புரவல்லியை திருமணம் செய்து அவளுக்காக அவளது பெயரில் உருவாக்கிய நகரமே வல்லிபுரமாகும்.கி.பி.6ம் நூற்றாண்டில் இருந்து யாழ்ப்பாண ஆரிய சக்கரவர்த்திகள் ஆட்சி உருவாகும் வரை வல்லிபுரமே யாழ்ப்பாணக் குடாநாட்டின் தலை நகரமாக இருந்தது.
இந்த வல்லிபுர ஆட்சியின் துறைமுக நகரங்களில் ஒன்றாக பருத்தித்துறை விளங்கியது.நாகபட்டணத்தில் இருந்த மாகாயான தமிழ் பௌத்த மையத்துக்கும் வல்லிபுரத்துக்கு முந்திய குடாநாட்டு தமிழ் பௌத்த மையத்துயக்குமான போக்குவரத்து பாதையாக பருத்தித்துறை துறைமுக பாதை இருந்து.
வல்லிபுர ஆட்சியில் இருந்த புலோலி கற்கோவளம் துன்னாலை கரணவாய் முதலான துணை நகரங்களின் விளை பொருட்களை தமிழகத்துக்கு ஏற்றுதி செய்யும் பிரதான துறைமுகமாகவும் இது விளங்கியது.
ஆனால் நாம் ஐரோப்பியர்கள் சூட்டிய Point pedro  என்பதில் இருந்து தான் அந்த நகரத்தின் வரலாற்றை அறிய முற்படுகிறோம்.தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் தமிழர்களால் தான் சிங்களவர்களுக்கு பௌத்த மதம் சென்றது என்பதை தங்களது நலன்களுக்காக கடந்த நூற்றாண்டில் சிலர் திட்டமிட்டு மறைத்தன் விளைவே நாங்கள் எங்கள் சொந்த வரலாற்றை தொலைத்துவிட்டு நிற்பதாகும்.
Edited by navam
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

கொழும்பை தவிர வேறூ பகுதிக்கு செல்லாத என் போன்றோருக்கு பல விடயங்லை அறீந்து கொள்ளா கூடியதாக இருந்தது

Share this post


Link to post
Share on other sites

பருத்தித்துறை தெருமூடி மடம்

 

1606413_599258020151973_899756804_o.jpg

 

பருத்தித்துறை பட்டினத்தின் பிரதான வீதியிலிருந்து கிழக்குப்புறமாக தும்பளை வீதியில் அமைந்துள்ள பழைமையான ஒரு பாரம்பரியமே தெரு மூடி மடமாகும். இது இடது வலது ஆகிய இரு பக்கமும் தரையிலிருந்து 2 அடி உயர்த்தப்பட்டு, நீளம் வரை திண்ணையாக்கப்பட்டு, 20 அடி உயர்வாகக் கூரையமைக்கப்பட்டு இரு மருங்கையும் மூடி வெயில்படாத வகையில் அவ்வீதியால் பயணிப்போர் இளைத்துக்களைத்து வருகையில் அவ்விடத்தில் இருந்து இளைப்பாற்றிக் கொள்வதற்காக இன்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதே இந்தத் தெருமூடி மடம்.
பருத்தித்துறை நகரில் தெருமூடி மடங்கள் மந்திகை, மாலுசந்தி ஆகிய இடங்களில் இருந்த போதும் தற்போது பருத்தித்துறை தெருமூடி மடம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஏனைய இரண்டு இடங்களில் இருந்த தெருமூடி மடங்கள் இடிக்கப்பட்டு உரிய பராமரிப்புமின்றி கைவிடப்பட்ட நிலையில் “ இது தான் அது” என்று சொல்லும் மோசமான நிலைக்கு அவை இரண்டும் தள்ளப்பட்டு விட்டன.

முன்னைய காலங்களி;ல் வாகன வசதிகள் குறைவாக இருந்தது. இதனால் மக்கள் எங்கும் எதனைப் பெறுவதாக இருந்தாலும் நடைப்பயணம் மூலமாகவே அவற்றினைப் பெற்றுக்கொண்டார்கள். பருத்தித்துறையிலிருந்து செல்வோரும் ஏனைய இடங்களிலிருந்து வருவோரும் சுமை தாங்கிகளுடன் வருகின்ற போது இவ்விடத்திலிருந்து இளைப்பாறி, உட்கார்ந்து விட்டு அயல் ஊர்களுக்கும் அதிலும் குறிப்பாக தும்பளை, மாதனை, நெல்லண்டை, கற்கோவளம், வராத்துப்பளை, வல்லிபுரம் ஆகிய ஊர்களுக்கும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்வார்கள்.

இன்னும் பலர் அதிக தூரத்திலிருந்து வருவோர் தங்குவதற்கு உறவினர்கள் இல்லாத நிலையில் தெருமூடி மடத்திலே தங்கி விட்டே செல்வார்கள். இன்னும் கூடப்பார்த்தால் 60,70 வயது நிரம்பிய பெரியோர்கள் இளைப்பாறுவதற்கும் கூடிக்கதைப்பதற்கும் ஒரு நாளைக்கு ஒரு தடவை யென்றாலும் சிறிது நேரம் இதில் இருக்காமல் செல்லமாட்டார்கள். இதனால் தான் இன்னும் இவ்மடம் பல்வேறு வீதி அபிவிருத்திகள் என்று வந்து இதை உடைக்க முற்பட்ட போதும் அக்காரியம் தோல்வியில் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு நோயினால் துன்பப்படுகின்ற பலருக்கும் இவ்விடம் அடைக்கலம் கொடுப்பதோடு, பொழுது போக்குகின்ற இடமாகவும் காணப்படுகின்றது.

யாழ்ப்பாணப்பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக் குறிகாட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தெருமூடி மடமாகும். யாழ்ப்பாணத்தில் பண்டார மடம், உப்பு மடம், முத்தட்டு மடம், மருதனார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், நாவலர் மடம், செட்டியர் மடம், சுப்பர் மடம், ஒட்டு மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம், சங்கத்தானை மடம், பனைமுனை மடம், நெல்லியடி மடம், திருநெல்வேலி மடம், மடத்துவாசல் ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமிடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் ஆனால் பருத்தித்துறை தெரு மூடி மடம் போல தெருவை மூடி இருமருக்கிலும் இருந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மையே.
மனித நேயத்தைக் கருத்திற் கொண்டு மக்களின் நீர் தாகம், தண்ணீர் தேவைகளை நிறைவு செய்யும் முயற்சியில் பாதையின் இடையிடையே கிணறுகள் தோண்டி அக்கிணறுகளுக்கு அருகி லே தண்ணீர் தொட்டிகளை அமைத்து கிணற்றிலிருந்து பெறப்படும் நீரை மனிதனுக்கு மட்டுமன்றி ஆடு, மாடு போன்ற கால் நடைகளும் விலங்குகளும் தாகம் தீர்க்கத் தொட்டிகளை கட்டினர். இவற்றினை கட்டிய பிற்பாடு ஏதோ ஒரு குறைபாட்டை கண்டு உணர்ந்தனர். அதன் பயனாக ஆவு ரோச்சிக்கல்லை தண்ணிர் தொட்டிக்கு அருகில் அமைந்தனர். ஆடு,மாடுகள் நீர் அருந்திய பின் உடம்பில் ஏற்பட் டிருக்கும் நனமச்சலைப் அக்கல்லிலே உரோஞ்சி போக்கிடும் இந்தக் கல்லு மூன்று அடி தொடக்கம் நான்கு அடி உயரமும் ஒன்றரையடி அகலமாகவும் இருந்தது.
வாகனங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தவதற்கு முன்னர் மாட்டு வண்டியே மக்களுக்கு பெரிதும் உதவி வந்தன. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கையும் குறைந்திருந்தன. இதனால் மாட்டு வண்டில்களின் பொதிகளை ஏற்றிச் செல்ல முடியாதவர்கள் கால் நடையாகவே நீண்ட தூரங்களுக்கு பொதிகளைச் சுமந்து செல்லும் போது இடை இடையே இறக்கி இளைப்பாறுவதற்கு மக்கள் பெரிதும் சிரமப்பட்டார்கள். இதனை அவதானித்த நல்மனம் படைத்த மக்கள் ஏற்றதான பாதை ஒரங்களில் ஐந்து அடி அகலமும் 4 தொடக்கம் ஐந்து அடி உயரமான ஒரு மேடை போன்ற சுமை தாங்கியை அமைந்தார்கள். இதனால் தத்தமது பொதிகளை தாங்களாகவே இறக்கிக்கொள்ள சுமைதாங்கிக் கல் கை கொடுத்தது. இவற்றினை அமைத்து விட்ட ஒரு திருப்தியில் மக்கள் வாழ்ந்தனர்.

நூறு வருடங்களுக்கு முன்நோக்கி பார்த்தால் பருத்தித்துறையில் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் ஒர் துறை முகமாகவும் விளங்கியிருந்தது. இதனால் பல்வேறு பட்ட மக்களும் இங்கு வந்து குவியும் ஒர் இடமாக இது திகழ்ந்தது. வடை,அப்பம், தோசை ஆகிய தீன்பண்டங்களை வாங்குவதற்கு இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் வருகை தந்தனர். இன்று போல் மருதங்கேணி பிரதேச செயலகம், கரவெட்டிப் பிரதேச செயலகம் என முன்னர் பிரிக்கப்பட்டு இருக்க வில்லை. இதனால் இப்பிரதேச மக்கள் தமது தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள பருத்தித்துறை மத்திய பகுதிக்கு வருகை தந்தனர். இம் மக்கள் இளைப்பாறுவதற்கென்று ஒர் தனியான இடம் இருக்கவில்லை.
இந்நிலையையும் கால் நடைப்பயணங்கள், வண்டிப்பாரங்கள், இராப்பயணங்கள், சிற்றூண்டி விடுதி, திருடர் தொல்லை, குறித்த நேர பிரயாணத்தடங்கல், பேய் பிசாசு மூடக் கொள்கைகள், திருத்தல யாத்திரைகள் என்பனவற்றின் தேவையை உணர்த்த மக்கள் பருத்தித்துறை தெரு மூடி மடத்தை உருப்பெறச் செய்தார்கள்.

இந்தத் தெரு மூடி மடம் 150 வருடங்கள் பழைமை வாய்ந்தவையாகும். இதன் கட்டடக்கலை திராவிடக்கலைப்பாணியில் அமைந்த்துள்ளது. வெண் வைரச் சுண்ணக்கல்லினால் உருவாக்கப்பட்ட தூண்கள் அதன் கபோதங்கள் மற்றும் தளம் ஆகிய சிறந்த கொத்து வேலைப்பாடுகளை கொண்டிருக்கின்றன. இங்கு 16 தூண்கள் காணப்படுகின்றன. இவற்றுள் ஆறு தூண்களில் தமிழ் வரிவடிவில் சாசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
இத்தெரு மூடி மடத்தினது மேற் கூரையானது தூண்களின் கபோதத்திலிருந்து இருபக்கங்களிலும் சமாந்தரமாக மேலெழுப்பட்டுள்ள ஒர் அரைச்சுவரின் மீது அமைக்கப்பட்ட விட்டத்துடன் கூடிய ஒரு சட்டகக் கோப்பினால் தாங்கப்பட்டுள்ளது. இத்தெரு மூடி மடத்தினூடான போக்குவரத்து நடைமுறைகளுக்கு கூரை எந்த வித தடையாக அமையவில்லை. 150 வருடங்களுக்கு முன்னர் இது கட்டப்பட்டாலும் எதிர்கால நிகழ்வுகளின் சிந்தனையிலிருந்தும் எமது முன்னோர்கள் தவறவில்லை என்பதை உண்மையாகவே உணர முடிகின்றது.
பல்வேறு பட்டோருக்கு பல பாதுகாப்புக்களையும் மன ஆறுதலையும் வழங்கிய தெரு மூடி மடம் காலப்போக்கில் என்ன கதியாகும் என்பது கேள்விக்குறியே? இத்தெரு மூடி மடத்தோடு இணைந்திருந்த சுமைத்தாங்கிக்கல், ஆவுரோஞ்சிக்கல், துலாக்கிணறு மற்றும் நீர் தொட்டி ஆகியன முற்றாகச் செயலிழந்து இருந்த இடம் விட்டு நகர்த்து விட்டன. தெரு மூடி மடம் என்ற பெருமையுடன் இதுவொன்றுதான் மிஞ்சியிருக்கின்றது. இதன் பழைமை உணராத பலர் இதனைப் பகடையாய் பயன்படுத்த முயலலாம். இந்தப் பாரப்பரிய தெருமூடி மடத்திற்கு ஒரு காவலாளியை நியமித்தால் இந்தப் பழைமையை இன்னும் எத்தனையோ சந்ததியினருக்கு கையளிக்க முடியும் என்பது புத்தி ஜீவிகளின் எதிர்பார்ப்பாகும்.
இந்தத் தெரு மூடி மடம் யாவரிற்கும் புனிதமானது. இதனைச் துஸ்பிரயோகம் செய்யவோ அல்லது சேதப்படுத்தவோ யாருமே முனையாத வகையில் பாதுகாப்பது எம் சந்ததிக்கான தேடலைச் செய்வதற்குச் சமன்.

விஞ்ஞானம் வளர்ந்து விட்டது என்பதற்காக பழைமையை விட்டுவிட்டு போக முடியாது. தெருவை மூடித்தெருவோரமாக கிடந்தாலும் எத்தனை ஆயிரம் ஆயிரம் மக்களுக்கு அடைக்கலப் பொக்கிஷமாக விளங்கும் இந்த தெரு மூடி மடம் 150 வருடங்களாக எம் முன்னை யோர்களால் பாதுகாக்கப்பட்டது போல நாமும் இன்னும் பல நூற்றூண்டுகள் கட்டிக்காத்து “ தெருவோரம் கிடந்ததையில்லை” என்ற நட்பாசை, நம்பிக்கையுடனும் வாழும் இந்த மடத்திற்கு துரோகம் பண்ணாது பழைமையே எங்கள் வழமை என்று பாதுகாப்போம் !!

 

பருத்தித்துறை வெளிச்சவீட்டிலிருந்து பார்க்கும் போது

 

1606366_603404513070657_545208702_o.jpg

 

வல்லைப் பகுதி பருத்தித்துறைக்கு செல்லும் பிரதான வீதி ( 750 பஸ் பாதை )

 

1800052_598127156931726_14436285_o.jpg

 

யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை பிரதேசத்தின் அழகிய வெங்காய பயிர்ச்செய்கை

400627_591571180920657_2073728822_n.jpg

 

1487246_583260425085066_1235348914_n.jpg

 

 

 

https://www.facebook.com/myjaffna

 

Edited by Athavan CH

Share this post


Link to post
Share on other sites

நவம், ஆதவன் தகவலிற்கு நன்றி

Share this post


Link to post
Share on other sites

நல்ல தகவல்கள்தான். ஆயினும் வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதுவதை ஊக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தலைப்பை ஆரம்பித்ததாக ஞாபகம். பலர் தமது ஊர்களைப் பற்றி எழுதப் பின்னடிக்கின்றார்கள் போலத் தெரிகின்றது!

Share this post


Link to post
Share on other sites

நல்ல தகவல்கள்தான். ஆயினும் வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதுவதை ஊக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தலைப்பை ஆரம்பித்ததாக ஞாபகம். பலர் தமது ஊர்களைப் பற்றி எழுதப் பின்னடிக்கின்றார்கள் போலத் தெரிகின்றது!

 

 

மறக்கவில்லை  கிருபன்

எழுதுவேன்...

Share this post


Link to post
Share on other sites

நல்ல தகவல்கள்தான். ஆயினும் வெட்டி ஒட்டுதலைத் தவிர்த்து சொந்தமாக எழுதுவதை ஊக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தத் தலைப்பை ஆரம்பித்ததாக ஞாபகம். பலர் தமது ஊர்களைப் பற்றி எழுதப் பின்னடிக்கின்றார்கள் போலத் தெரிகின்றது!

 

நத்தைகளும் ஆமைகளும் ஊரிகளும் சிப்பிகளும் சங்குகளும் நிறைந்த இந்தக் கருத்துக்களம் என்ற கடலில் கட்டுமரத்தையும் பாய்க்கப்பலையும் கிருபன் எதிர்பார்ப்பது கல்லில் நார் உரிப்பது போன்றது  :lol:  :D  :D .

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவெனும் போதினிலே.....c3j2.jpg

 

நாற்புறமும் கடலலைகள்

நாலு வகை கொண்டதென

நலமாக சப்தமிடும்

நல்லதொரு இயற்கைவளம் கொண்ட கிராமம் அது.

கிழக்கே ஆழம் குறைந்த கண்டமேடை கொண்ட - பாதுகாப்பற்ற பரவக்கடல்

தெற்கே கப்பல்கள் கூட கனதியாகப்பயணிக்கும் கனகாத்திரமான பாதுபாப்பற்ற ஆழமான சமுத்திரக்கடல்

மேற்கே அதே வகையான பாதுகாப்புக்கள் நிறைந்த சமுத்திரக்கடல்

வடக்கே ஆழம் குறைந்த பாதுகாப்புக்கள் நிறைந்த அழகான இயற்கை வனப்புமிக்க கடல் என்னும் வகையில் நான்கு வகையான கடற்பிரதேசங்களைத்தன் எல்லைகளாகக்கொண்ட திருப்பூங்குடி என்றும்புங்கையூர் என்றும் வரலாற்றுப்பதிவுகளைத்தன்னகத்தே கொண்டது எங்கள் இனிய கிராமம்.

 

tpq8.jpg

 

குருகுமணல்செம்பாட்டுமண்களிமண்இருவாட்டிமண்வண்டல்மண்உவர்மண் எனும் வகையில் ஆறுவைகயான மண்ணை அகத்தே கொண்டு கன்னலும்செந்நெலும் கதித்தோங்கி வளர்ந்துநவதானியங்களும் உற்பத்தியாக்கப்பட்டு உணவுக்களஞ்சியத்தின் ஒப்பற்ற கிராமமென வானம் பொய்க்காத காலத்தின் வனப்புமிக்க வளமான எம் கிராமத்தின் வாழ்வியல்இன்றும் வரலாறு சொல்லி நிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.  சைவமும் தமிழும் சரித்திரம் கண்டகாலம் தொட்டு வாழ்வியலாக அங்கு

வாழ்ந்த மக்களோடு பின்னிப்பிணைந்து நிற்பதோடு,   வந்தாரை வரவேற்று வாழ்வளித்துஅவர்கள் தங்கள் சொந்த மதத்தையும்

தாங்கள் வந்த மண்ணில் பரப்புவதற்கு வகைசெய்துசொந்த மக்களே அதனைப்பின்பற்றத்தடையும் விதிக்காத தன்னலமற்ற

தனித்துவம் கொண்ட பெருமக்களைத்தன்னகத்தே கொண்ட தாளாண்மை கொண்ட கிராமம் எங்கள் கிராமம்

அதனால் தான் சைவத்தின் மத்தியிலே கிறிஸ்தவமும் சமரசமாய் வளர்ந்து,  தேசஸ்தானங்களோடு தேவாலயங்களும் எமது கிராமத்தில் என்றும் புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.

 

அன்னைத்தமிழின் கல்விகலைகலாச்சாரப்பண்பாட்டு விழுமியங்களைத்தன்னகத்தே கொண்ட தயாளகுணம் கொண்ட மக்களை முழுமையாகக்கொண்ட மக்கள் நிறைந்தபூமி.  வர்த்தகத்தின் வளமும்அறிவியலும்,ஆன்மீகமும்ஆளமாக வேரூன்றி விழுதெறிந்த வாழ்வியல் தன்மையோடு,  அனைத்துத்தொழில் வளத்தையும் அழுத்தமாகப்பின்பற்றி,  அதற்கான தொழில்களில் மேம்பட்டு நின்ற தனித்துவத்தைத்தன்னகத்தே கொண்டிருந்தது.   அதனால் வேற்றுக்கிராமத்தின் வியர்வைக்காற்றுக்கூட அங்கு வீசும் வாடைக்கே இடமில்லாதநிலையில் உயர்ந்து நின்றதுமுற்காலத்திலே மன்னராட்சியே மக்களாட்சி என்றும் கூறும்வகையில்,  ஆட்சிமுறையானது மங்களாமாய் விளங்கியதற்கான சாட்சியாய்,  மன்னன்ஓடை என்னும் கால்வாயும் அங்கு உண்டு

5esm.jpg

 

 சோழமன்னன் புதல்வியை அந்நாட்டுக்குடியானவனின் மகனொருவன் காதலித்துக்கடத்தி வந்து காப்பாற்றும்படி வேண்டியதால்,  அந்தக்காதல் ஜோடிகளுக்காக கிராமத்தின் நடுப்பகுதியில் ஒரு காட்டுப்பிரதேசத்தை உருவாக்கிஅதன் நடுவில் கோட்டை கட்டி,  அதற்கு வீரமல்லர்களைக்காவல்வைத்து  பாதுகாப்பளித்ததால்,  கோட்டைக்காடு என்னும் பெயர் கொண்ட பிரதேசமும்,  எதிர்த்து வந்த சோழப்படையே அதன் இயலாமையால்,  சமாதானம் பேசிச்சமரசம் செய்து கொண்டு,  ஊருக்குப்புறத்தே ஒதுங்கி இருந்துவிட்டு,  விருந்துண்டு புறம் போன வரலாற்றுப்பதிவுக்கென ஊரவர்தீவெனும் ஊரதீவும் -  சோழன்ஓடை எனும் பெயர் கொண்ட குடாக்கடலும் கொண்ட கிராமம்.

 

 

56rt.jpg

படையெடுத்து வந்த பல்லவன் கூட குடை விரித்துக்குந்தியிருந்துவிட்டு,  நட்புறவுடன் தன் நாட்டிற்குத்திரும்பிய நல்லதோர் இடம்தான் பல்லவர்தீவு  எனும் பாங்கான பகுதி.  ஆழம் குறைந்த வடகடலின் பகுதியில் ஆளமாய் அழகாய்பாய்க்கப்பல்கள் வந்து போன அடையாளமாய் அங்கு அழியாத பதிவுகள் இன்னமும் புதையுண்டு போயுள்ளன.  வர்த்தகத்தின் செழிப்பு அன்று வளமாக இருந்ததன் அடையாளமாய்,  கடலுக்கு அகழிவெட்டி அதனைக்கால்வாயை வழிசமைத்து,  பாய்க்கப்பல்கள் மட்டுமன்றி பண்டமாற்று வர்த்தகம் முதல் பணமாற்ற வர்த்தகம்வரை வளரும் வகையில் கடலதனையும் ஊருக்குள் கொண்டு வந்து வாணிபத்தை வளம் பெறச்செய்யும் வகையில் களியாறு எனும் ஓடைக்கடலை உள்ளே உற்பத்தியாக்கிய உயர்ந்த தனித்துவம் உள்வாங்கப்பட்ட கிராமம்.  இறந்தவர்களை எரிப்பதற்கென தனித்துவமாக ஊருக்கு ஒதுக்குப்புறத்தே அழகிய சிறுவனம் ஒன்று அமைத்து,   அதற்கு இறந்து போன உடல்களின் பெயரால் (கேரம் என்றால் பிணம் என்று பொருள்கேரதீவு எனும் பெயர் சூட்டி செத்தவர்களுக்கும் சிறப்புச்செய்யும் செம்மை நிறைந்த கிராமம் அது.

 

அண்ணன் இருக்கத்தம்பி முடிசூடினான் என்னும் அவப்பெயர் தனக்கு வந்து விடக்கூடாது என்னும் அழுத்தமான பிடிப்பால்,  இளவயதிவேயே துறவு கொண்டு,   தமிழுக்கு அழியாத பெருஞ்செல்வமான சிலப்பதிகாரம் என்னும் செம்மைமிகு காப்பியத்தின் கதாநாயகியாம் கண்ணகியின் சிலையானது கடலிலே மிதந்து வர,  அதனைக்கருணையோடும்,  மிகுந்த கவனத்தோடும்,  ஆன்மீக ஆளுமையோடும்,  அருள்மிகு ஆலயம் அமைத்து அதனைப்பிரதிஸ்டா செய்து,  வானளாவும்  இராஜகோபுரமும்,  வனப்பு மிக்க சித்திரத்தேரும் செய்து  சிறப்புடன் விழாவெடுத்து விடிய விடியத்தேரிழுத்துத்திருவிழாக்கொண்டாடிக்கொண்டிருக்கும்  

வீர மறவர்களின் விண்ணுயர் செயற்பாடுகள் நிறைந்த புகழ் மிக்கபூமி தான் புங்குடுதீவு கிராமம்.

 

மன்னராட்சியின் மறையத்தொடங்கிய காலத்தில் மக்களாட்சி மலர்ந்த நேரத்தில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் வாழ்ந்த நாட்கள்.  தங்கள் தங்கைக்கும்,  அவளது வாரிசுகளுக்குமென கிராமத்தின் பாதியைப்பகிர்ந்து கொடுத்துவிட்டு பெரியமருது,  சின்னமருது,  சகோதரர்கள் மிகுதியை தாங்கள் பாதி,  பாதியாகப்பகிர்ந்து கொண்டு தங்கள் வாரிசுகளுடன் சந்தோசமாக வாழ்ந்த கிராமத்தில் பெரியமருது வாழ்ந்த பகுதி பெரியவர்பிட்டி  (நிலம் என்ற கருத்துப்பட)  என்றும் சின்னமருது வாழ்ந்த பகுதி சின்னவர்பிட்டி  எனவும் வழங்கலாயிற்று.   அதுவே காலப்போக்கில்,  பெரியஇரு(று)பிட்டி,  சின்னஇரு(று)பிட்டி என மருவலாயிற்று.  பெரியமருது வாணிபத்தில் வல்லவனாய் பாய்க்கப்பலில் கடலோடி வாணிபத்தில் கை கண்டவனாய் முன்னிலை கண்டான்.   சின்னமருது பாரதத்தின் கேரள மாநிலத்திற்குச்சென்றுஅங்கு சித்த - ஆயுர் வேதவைத்தியத்தில்  கை கண்டவனாய்த்தேறி தாயகம் திரும்பி வந்து மக்களுக்குத்தான் கற்றதைப்போதித்ததுடன் பெரும் சேவையும் ஆற்றியதாக வரலாறு கூறி நிற்கின்றது.   சின்னமருது  கேரளாவில் இருந்து வரும் போது,  ஓர்ஆஞ்சநேயலிங்கத்தையும்,  அதனோடு கூடிய பிரதிஸ்டை செய்யும் பொருட்களையும் கொண்டு வந்தான்.  அதன்படி  19ம் நூற்றாண்டில் பிரதிஸ்டை செய்து உருவான ஆஞ்சநேயர ஆலயமே இலங்கையின் முதன் முதலில் தோன்றிய ஆஞ்ச நேயர் ஆலயம் என்னும் பெருமை பெற்றது.

 

ஆலயங்கள் என்று கூறும் பொழுது கிராமத்தின் நாற்புறங்களிலும் காவல் தெய்வங்களின் ஆலயமும்,  நடுவே ஒவ்வொரு பகுதிகளிலும் இராஜகோபுரங்களுடன் கூடிய பெரும் தேவஸ்தானங்களும் கலையழகுடன் மிளிர்வதைக்காணக்கூடியதாக உள்ளது.  அதுமட்டுமல்லாது,  அன்று முதல் இன்றுவரை கல்விக்கு கோயில்களைப்போல்   பாடசாலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து,  ஆங்காங்கே பாடசாலைகள் அமைப்பதில் கிராமத்துப்பெருமக்கள் தனித்துவம் கொண்டவர்களாக விளங்கியமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  அந்தவகையில் அந்நியராட்சிக்காலத்தில்சமயம் பரப்பும் நோக்கில் கிறிஸ்தவப்பாடசாலைகளை நிறுவிய  

ஆட்சியாளர்கள் தமது சமயத்தையும் உள் நாட்டில் அழுத்தமாகப்பரப்பத்தொடங்கியவேளையில்,  கண் மூடித்தனமான மதமாற்றத்தைத்தடுக்கும்  வகையில்,  சொந்தக்கிராமத்தில் மாத்திரமன்றி அனைத்துக்கிராமங்களிலும் சைவப்பாடசாலைகளை நிறுவுவதில் தனித்துவமாக முன்னின்று உழைத்த பெருமக்களில்,  முதலில் அதிபர் சிவகுரு இலங்கையர்,  பின்னாளில் விதானை பசுபதிப்பிள்ளைதிருவாளர் வைத்திலிங்கம்,  ஆசிரியர்  குமரேசு,  வைத்தியர் சின்னத்தம்பு ஆகியோருடன்,  அவர்களின் வழி வந்த பல பெருமக்களைப்பெற்ற கிராமம் புங்குடுதீவு என்னும் பெருமையுடைத்தது.

 

வர்த்தக்திலும்,  கல்வியிலும்,  ஏனைய தொழில் வளங்களிலும் தனித்துவம் பெற்ற மக்களைக்கொண்ட கிராமத்தினின்றும் தொழில் வாய்ப்பினைத்தேடி இலங்கையின் பலபாகங்களிலும் எமது மக்கள் சென்றது போல அயல் நாடுகளுக்கும் சென்று  பணியாற்றி பொருளீட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.  அந்த வகையில் ஆரம்பகாலத்தில் சிங்கப்பூருக்குச்சென்ற பொறியியலாளர்களான வாணர் சகோதரர்கள்  (பெரியவாணர்,  சின்னவாணர்)  தாயத்திற்குத்திரும்பியதும்,  வேலணையையும்,   புங்குடுதீவு கிராமத்தையும்

இணைக்கும்  அழகியதும்,  அதி நீளமானதுமான பாலத்தைக்கட்டி போக்குவரத்தின் பாங்கில் பெரும் மறு மலர்ச்சியை உண்டு பண்ணினர்.   இன்றும் இது வாணர்தாம்போதி என்னும் நாமத்துடன் அவர்கள் பெயர் சொல்லிப்புகழ் சமைத்து நிற்கின்றது.

2hww.jpg               1m1c.jpg
 

 

வர்த்தகப்பெருமக்கள் மட்டுமல்லாது,  கல்விமான்கள்,  பொறியியலார்கள்,  வைத்திய கலாநிதிகள்,  கவிஞர்கள்,  எழுத்தாளர்கள்அறிஞர் பெருமக்கள்,  ஆன்மீகப்பெரியார்கள்,   தத்துவமேதைகள் எனக்கிராமத்தின் புகழை உயர வைத்துப்பெருமைப்படுத்திய பெருமக்கள் நிறைந்த கிராமத்தில் அன்று முதல் இன்றுவரை அழுத்தமான தமிழ் பற்றுக்கொண்ட மக்கள் நிறைந்துள்ளனர். அன்னியராட்சிக்காலத்திலும் சரி,  1948ம் ஆண்டிற்குப்பின்னரான தமிழர்களின் சுதந்திரத்திற்கான போராட்ட காலத்திலும் சரி தனக்கென ஒரு தனித்துவமான ஈடுபாடும்பங்களிப்பும் கொண்ட உணர்வு பூர்வமான மக்கள் புங்குடுதீவு மக்கள் என்பதில் முத்திரை பதித்து நிற்பதைக்காணக்கூடியதாக உள்ளது.

 

இன்றும் கூட இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாகப்பூமிப்பந்தின் பல பாகங்களிலும் ஈழத்தமிழ் மக்கள் சிதறிப்போய் வாழும் நிலையில் உலகத்தின்அனைத்துப்பகுதிகளிலும்,  புங்குடுதீவு கிராமத்தின் பெயரால்புலம் பெயர்ந்து வாழும் அந்தக்கிராமத்தின் மக்கள் சங்கங்களை அமைத்து,  தமது கிராம முன்னேற்றத்திற்காகவும்அங்கு வாழும் மக்களினது உயர்விற்காகவும்,  கஸ்ரப்படும் ஏனைய கிராமத்து மக்களுக்காகவும் தம்மாலான பங்களிப்புக்களை நல்கி வருவதை அனைவரும் காணக்கூடியதாக உள்ளது.

rx4g.jpg           diu9.jpghttp://www.pungudutivu.org/

 

   t7y.gif  http://www.pungudutivu.fr/

 

http://lankafocus.free.fr/pungudutivu/pungudutivu.ca.htm

 

http://www.pungudutivu.info/

 

 

https://www.google.fr/search?q=pungudutivu+france&oq=pungud&aqs=chrome.2.69i57j0l5.13252j0j7&sourceid=chrome&espv=2&es_sm=93&ie=UTF-8#q=pungudutivu+swiss

 

இது இயன்றவரை சுருக்கமாக எமது கிராமத்தைப்பற்றி நாம் தரும் தகவல்.

-தொடரும்....

Edited by விசுகு
 • Like 8

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவை அழகாய் உணர்வுபூர்வமாய் எழுதியுள்ளீர்கள்  விசுகு , வாழ்த்துக்கள்...! :)

Share this post


Link to post
Share on other sites

உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு முந்தி புங்குடுதீவு மக்களைப் பிடிப்பதில்லை. முன்னர் இஸ்லாமியருக்கு நிகராக அவர்களை நினைப்பதுண்டு. கொழும்பு வாழ்க்கை என் எண்ணத்தினை அடியோடு மாற்றிவிட்டிருந்தது. பல அரிய தகவல்களை விசுகு அண்ணா சுவைபடத் தந்திருக்கின்றார். இதனைவிட சிறப்பாக எவராலும் எழுதமுடியாது. :)

Share this post


Link to post
Share on other sites

தெரியாத பல விடயங்கள் அறியமுடிந்தது....நன்றாக எழுதியுள்ளீர்கள் விசுகு அண்ணா. மேலும் உங்கள் ஊர் பற்றி அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

புங்குடு தீவு பற்றி நன்றாக தந்துளீர்கள் விசுகு. நன்றி

Share this post


Link to post
Share on other sites

நன்றி விசுக்கு, அரை நூற்றான்டுக்கு முன்புவரைக்கும் என்

மூதாதையரின் தீவான நெடுந்தீவுக்கும் புங்குடுதீவுக்குமிடையில் பரவலான திருமணத்தொடர்பிருந்தது. உங்கள் மூதாதையரைரை விசாரித்துப் பாருங்க. உங்க குடும்பத்திலும் நெடுந்தீவு தொடர்பு இருக்கும். தமிழகத்தில் மகாஜான பெள்த்தம் அழிந்தபோது (சிங்கலவர் தேரவாத பெள்த்தம்) அதுசார்ந்த கண்ணகி வழிபாட்டுடன் எங்க தீவுகளில் அது பலமாக இருந்தது.

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவில் வாழ்ந்த கல்விமான்கள்,  பொறியியலார்கள்,  வைத்திய கலாநிதிகள்,    எழுத்தாளர்கள், அறிஞர் பெருமக்கள்,  ஆன்மீகப்பெரியார்கள்,   தத்துவமேதைகள், எனக் கிராமத்தின் புகழை உயர வைத்துப்பெருமைப்படுத்தியவர்களது, பெயர்களோடு கூடிய ஒரு பகுதியும் யாழுக்குள் இருக்க கண்டேன்..அதனையும் இத்தோடு இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவில் வாழ்ந்த கல்விமான்கள்,  பொறியியலார்கள்,  வைத்திய கலாநிதிகள்,    எழுத்தாளர்கள், அறிஞர் பெருமக்கள்,  ஆன்மீகப்பெரியார்கள்,   தத்துவமேதைகள், எனக் கிராமத்தின் புகழை உயர வைத்துப்பெருமைப்படுத்தியவர்களது, பெயர்களோடு கூடிய ஒரு பகுதியும் யாழுக்குள் இருக்க கண்டேன்..அதனையும் இத்தோடு இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்.

 

 

முடிந்தால் இணையுங்கள் யாயினி

உங்களுக்கு இல்லாத  உரிமையா.....? :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவு பற்றி மிகவும் அழகாக விபரித்த விசுகுவுக்கு நன்றி.

இந்த தீவு மக்களின் சிறப்பு பற்றி அறிந்திருந்தும் இவ்வளவு விபரமாக அறியவில்லை. இது போல எமது மக்களின் ஏனைய பகுதிகள் பற்றிய தகவல்களும் பதியப் பட வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவைச் சார்ந்த பல நண்பர்களுடன் நான் படித்திருக்கிறேன்.சீர்காழி கோவிந்தராஜனின் இசைக் கச்சேரியைக்கேட்க சைக்கிளில் வந்ததும் அந்த மேடையில் மண்ணின் மைந்தன் பொன் சுந்தரலிங்கம் இசை மழை பொழிந்ததும் இன்றும் பசுமையாக இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

புங்குடுதீவெனும் போதினிலே...

 

"புங்குடுதீவெனும் போதினிலே...  இன்பக் கண் கொண்டு காணலாம் காணொளியை" என வந்தால் ஒரு போட்டோவாவது காட்டினீர்களா விசு பண்ணை? :wub::)

 

 

 

DSCN0300_130.jpeg

 

DSCN0343_170.jpeg

 

DSCN0342_169.jpeg

 

pungudutivu-photos-general_0126-580x435.

 

pungudutivu-photos-general_0130-580x435.

 

pungudutivu-photos-general_0116-580x435.

 

pungudutivu-photos-general_0144-580x435.

 

pungudutivu-photos-general_0115-580x435.

 

pungudutivu-photos-general_0070-580x435.

 

pungudutivu-photos-general_0026-580x435.

 

pungudutivu-photos-general_0009-580x435.

 

pungudutivu-photos-general_0030-580x435.

 

pungudutivu-photos-general_0032-580x435.

 

pungudutivu-photos-general_0077-580x435.

 

pungudutivu-photos-general_0169-580x435.

 

pungudutivu-photos-general_00461-580x435

 

pungudutivu-photos-general_0171-580x435.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை  சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன்  கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய  நச்சு நீரை, வெளியேற்றி, உடல்நலத்தைக் காக்கவல்லது, நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 200 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம் முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அணுக்கள் குறைபாடு ஆண் குறி விறைப்பின்மை விரைவில்  விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்.   வயிற்றுப்போக்கு பாதிக்கப்பட்டவர்கள் அரை டீஸ்பூன் இதன் விதைப் பொடியை 200 மி.லி மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் குடித்து  வந்தால் நோய் குணமாகும். நீர் முள்ளி விதையுடன் சம அளவு மாதுளம் விதைப் பொடி சேர்த்து ஒரு ஸ்பூன்; வெண்ணெய் கலந்து  சாப்பிட்டால் ஆண்மை பெருகி தாம்பத்யம் சிறக்க உதவும். நீர் முள்ளி உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். நீர்க் கோர்வை,  மகோதரம், நீரடைப்பு குணமாகும். https://m-tamil.webdunia.com/article/naturopathy-remedies/neermulli-seeds-amazing-medicinal-herbs-for-health-119121200069_1.html
  • கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார். முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலை நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது. https://www.polimernews.com/dnews/92739/கடல்களற்ற-பூமி-படத்தைதயாரித்த-நாசா-விஞ்ஞானிகள்
  • ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த  இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71023  
  • சரவணபவனைத் தெரிந்திருந்தால் இது ஒரு பெரிய விடயமாகத்தெரிந்திருக்காது சப்ரா இப்படிச் செய்யாமல் இருத்தால்தான் நாங்கள் அதிர்ச்சி அடைய வேண்டும். ஒரே ஊரான் என்றவகையில் இவனையிட்டு வெக்கப்படுகிறேன்