Jump to content

ஆட்டுத்துவசமும் கனவும்..........

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை.

ஆனால் இந்தக்கனவு மட்டும்...........

புதுவருடப்பிறப்பன்று 01.01.2014  எமது பெற்றோரின் முக்கிய உறவு ஒன்றுக்கு முதலாவது துவசம்.

அழைப்பு வந்தது.

போறதாகவே இல்லை.

31.12.2013 அன்று இரவு

அண்ணரின் பேத்திக்கு பிறந்தநாள்.

போய் சாப்பிட்டு விட்டு கதைத்துக்கொண்டிருந்த போது

இந்த துவசவீட்டுக்கதையும் வந்தது

அதில் பலர் அதற்கு நாளை  போவதாக சொன்னார்கள்

சும்மா இருங்கோ

நாளைக்கு  புது வருடப்பிறப்பு.

அந்த மாதிரி  சாப்பிடும் நாள்

மரக்கறி  சாப்பாடு எனக்கு வேண்டாம்

நான் வரமாட்டன்.....

சொல்லிவிட்டு

இரவு 12 மணிக்கு எல்லோரும் முதல் வீட்டுக்கு வந்து சாமிக்கு விளக்கு வைத்து

புது வருடம் கொண்டாடி  எல்லோருக்கும் வாழ்த்துச்சொல்லி  நித்திரைக்குப்போகும் போது

நேரம் அதிகாலை 1மணி.

துவசம்

அதை மறந்தே விட்டிருந்தேன்

நாளை  அம்மாவிடம் போகணும்

ஆசி வேண்டி  கை விசேசம் வாங்கணும்

அதன்பின் எனது மனைவியின் அம்மாவிடம் போகணும்

எனது பெரியக்காவிடம் போகணும்

இது தான் புதுவருட திட்டம்.

அதிகாலையில் ஒரு கனவு

அந்த துவச வீட்டுக்கு போகின்றேன்

அந்த வீட்டுக்காறி  என்னை வரவேற்று அழைத்துச்செல்கிறார்

வரமாடடன் என்று சொன்னதாக கேள்விப்பட்டம் என்கிறார் சிரித்தபடி.

உள்ளே  போனதும்

கடவுள் சிலைகள் இருக்கின்றன

அதற்குள் எனது தகப்பனார் இருக்கிறார் சிலையாக.

பட்டு வேட்டி சால்வை அவரை சுத்தி கட்டப்பட்டிருக்கிறது

ஆனால்  முகம் மட்டும் என்னைக்கண்டதும் சிரிக்கிறது

மிகவும் அழகாக இருக்கிறார்

எனது தகப்பனார் இறந்து 10 வருடங்கள் (2004)

இது வரை அவரை நான் கனவிலும் கண்டதில்லை.

அப்படியே  உள்ளே போகின்றேன்

இந்த வருடம் அகால மரணமான எனது சின்னத்தார் வந்து என்னை  அழைத்துப்போகின்றார்

பட்டு வேட்டி கட்டியிருக்கிறார்

உடம்பில் வேறு எந்த உடுப்புமில்லை

பட்டு வேட்டியும் மடித்து தூக்கி  கட்டி இருக்கிறார்.

இவரும்  இறந்து 6 மாதமாகிறது

இதுவரை கண்டதில்லை.

ஆனால் இவர் இறந்தபோது

இந்த  துவச வீட்டைச்சேர்ந்த அனைவரும் அவருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்கள்

அவர் இறந்தபோது இவர்கள் தான் தூக்கினார்கள்

அத்தாரின் சொந்த மருமகன் தான்  இந்த வீட்டுக்காறன்.

உருவ அமைப்பு அப்படியே  அத்தாரைப்போல........

காலையில் மனைவியை எழுப்பி

முதல் வெலையாக துவச வீட்டுக்கு   போறோம் என்கின்றேன்.

மனைவிக்கு ஆச்சரியம்

2 பேர் அங்கை எனக்காக நிற்கினம் என்று கனவைச்சொல்கின்றேன்..

அதன்படி அன்றைய நாள் துவச வீட்டிலேயே  தொடங்கியது......

இதில  இன்னொரு விடயமும் இருக்கு

அத்தாருக்கு அடுத்து

அந்த இடத்தில் இன்னும் 3 பேரை நான் கண்டேன்

ஒருத்தர் எனது மச்சாள் முறையானவர்

வயசு 60 க்கு மேலிருக்கும்

அடுத்தவர்

எனது ஒன்று விட் சகோதரர்

இவருக்கும் 60 வயசாகலாம்

அடுத்தவர்

மிகவும் அளமையானவர்

எனது சொந்த மச்சானின் மகன்

வயசு 30 இருக்கலாம்.....

என் மனதைக்குடைவது 

இவர்களை  ஏன் நான் அங்கு கண்டேன்...............???

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் அவை நினைவில் நிற்பதில்லை.

ஆனால் இந்தக்கனவு மட்டும்...........

யாராவது

மெஞ்ஞான

விஞ்ஞான விளக்கம் தந்தால்

மனம் அமைதியடையலாம்..........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
யாராவது மெஞ்ஞான விஞ்ஞான விளக்கம் தந்தால் மனம் அமைதியடையலாம்..........
வாழ்க்கை விளக்கம் :---இளம் வயதில் எமக்கு இப்படியான கனவுகள் வருவதில்லை நாம் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதும் இல்லை...வரும் கனவுகள் யாவும் இனிப்பாக இருக்கும்..சினிமா பெண்நட்சத்திரங்களும் அழகிய ஊர் பெண்களும் தான் வருவார்கள்....ஆனால் இப்ப வாழ்க்கையை அதிகம் நாம் சிந்திக்கிறோம் அதுதான் இந்த கனவு என நினைக்கிறேன்....
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை விளக்கம் :---இளம் வயதில் எமக்கு இப்படியான கனவுகள் வருவதில்லை நாம் வாழ்க்கையை பற்றி சிந்திப்பதும் இல்லை...வரும் கனவுகள் யாவும் இனிப்பாக இருக்கும்..சினிமா பெண்நட்சத்திரங்களும் அழகிய ஊர் பெண்களும் தான் வருவார்கள்....ஆனால் இப்ப வாழ்க்கையை அதிகம் நாம் சிந்திக்கிறோம் அதுதான் இந்த கனவு என நினைக்கிறேன்....

வணக்கம் புத்தர்

உங்களது கருத்து மூலம் பல விடயங்களை  உணரக்கூடியதாக உள்ளது

வயசு

அனுபவம்

வாழ்வில் முதிர்ச்சி

அடுத்த கட்டம்.............

இப்படி பலவகையாக என்னை  சிந்திக்க  வைத்தது தங்கள் பதில்.

ஒருவகையில்

நாத்திகத்துக்கும்

ஆத்திகத்துக்குமிடையில் ஊசலாடிய  நான்..

சற்று ஆத்திகத்தின் பால் சாய்வது தெரிகிறது

இதற்கு உங்களது பதிலும் துணைவருகிறது

நன்றி  பத்தர்

நேரத்திற்கும் கருத்துக்கும்........

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

------

உள்ளே  போனதும்

கடவுள் சிலைகள் இருக்கின்றன

அதற்குள் எனது தகப்பனார் இருக்கிறார் சிலையாக.

பட்டு வேட்டி சால்வை அவரை சுத்தி கட்டப்பட்டிருக்கிறது

ஆனால்  முகம் மட்டும் என்னைக்கண்டதும் சிரிக்கிறது

மிகவும் அழகாக இருக்கிறார்

எனது தகப்பனார் இறந்து 10 வருடங்கள் (2004)

இது வரை அவரை நான் கனவிலும் கண்டதில்லை.

அப்படியே  உள்ளே போகின்றேன்

இந்த வருடம் அகால மரணமான எனது சின்னத்தார் வந்து என்னை  அழைத்துப்போகின்றார்

பட்டு வேட்டி கட்டியிருக்கிறார்

------

பத்து வருடத்தின் பின்பு... உங்களது அப்பாவை கண்டிருக்கின்றீர்கள் விசுகு. சந்தோசம்.

அவருடன் உங்களது, சின்னத்தாரும் நின்றிருக்கின்றார்.

இறப்பின் பின்பும்... உறவுகள் விட்டுப் போவதில்லை என்பதற்கு, உங்கள் கனவே சாட்சி.

நானும்... புது வருடப் பிறப்பன்று, இறந்த பல நெருங்கிய உறவினர் ஒன்று கூடியிருப்பது போல் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவைப் பற்றி, இரண்டு நாட்களாக... அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு இனிமையாக இருந்தது.

Link to post
Share on other sites

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

இறந்தவர்களை... கனவில் கண்டால், வீட்டில் மங்கள நிகழ்ச்சி நடக்கும் என்றும்...

திருமண வீட்டை கனவில் கண்டால்.... வீட்டில் துக்க நிகழ்ச்சி நடக்கும், என்றும் அப்பம்மா சொல்வார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னில ஒரு நரிக்குணம் உண்டு, விசுகர்!

ஒரு நல்ல காரியமும், துக்கமான காரியமும் ஒரே நாளில் வந்தால், துக்கமான காரியத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பது!

இதற்கான உளவியல் காரணம், உங்கள் 'ஆழ்மனது' என்றே நினைக்கிறேன்! உங்கள் ஆழ்மனதானது நீங்கள் செய்வது சரியல்ல என்று உங்களுக்கு அடித்துச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்த வழிதான் இந்த கனவாகும்! அதற்காகவே, ஆழ்மனது உங்கள் அப்பாவைத் தெரிந்தெடுத்தது!

உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்குமான புரிந்துணர்வு, நிச்சயமாக ஒரு கண்டிப்பின் அடிப்படையிலேயே ஆரம்பித்திருக்கும்! சில நல்ல பழக்க வழக்கங்களை, சுமுதாய நடைமுறைகளை, ஊட்டி வளர்த்ததில் உங்கள் அப்பாவே முன்னிலை வகித்திருக்கக் கூடும்!

முன்னர் வராமல், இப்போது மட்டும் இந்தக் கனவு வரவேண்டிய காரணம், நீங்கள் இப்படியான ' முரண்பாட்டு மனநிலை' வந்த சந்தர்ப்பங்களில் 'துக்க கரமான' நிகழ்வுகளுக்கு, 'முன்னுரிமை' கொடுத்திருக்கலாம்! அதனால் கனவுகளுக்குத் தேவை இருக்கவில்லை!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் மிகவும் ' இரக்க சிந்தனை' உள்ளவர் என்பது!

அது நல்லது தானே! கனவைப் பற்றிக்கனக்க யோசிக்காதீர்கள்! :D

பச்சையும் முடிஞ்சு போச்சுது! பிறகு வாறன்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கல் எடுக்காதீர்கள் விசுகு எதற்கும் சிக்மண்ட் ப்ரொயிட்டின் கனவு தத்துவத்தை படியுங்களேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பத்து வருடத்தின் பின்பு... உங்களது அப்பாவை கண்டிருக்கின்றீர்கள் விசுகு. சந்தோசம்.

அவருடன் உங்களது, சின்னத்தாரும் நின்றிருக்கின்றார்.

இறப்பின் பின்பும்... உறவுகள் விட்டுப் போவதில்லை என்பதற்கு, உங்கள் கனவே சாட்சி.

நானும்... புது வருடப் பிறப்பன்று, இறந்த பல நெருங்கிய உறவினர் ஒன்று கூடியிருப்பது போல் ஒரு கனவு கண்டேன்.

அந்தக் கனவைப் பற்றி, இரண்டு நாட்களாக... அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

அவ்வளவு இனிமையாக இருந்தது.

நன்றி  சிறி

உண்மைதான்

வருடம் பிறந்த அந்த கணத்தில் அவர்களைக்கண்டதால்

மனசு ரொம்ப சந்தோசமாகவும்

தெளிவாகவும் இருந்தது

புதுவருத்தன்று என்பதால் மேலும் சந்தோசம்

அது தான் இங்கு அதைப்பதியத்தூண்டியது

சில வேலைகளில் எனக்கும் கனவில் எனது சில இறந்த நெருங்கிய உறவினர்கள் வந்து போறவை. சில வேலைகளில் அவர்களைக் கண்டால் பிறகு யாராவது அவர்களுக்கு நெருங்கியவர்கள் முதல் நாள் இறந்ததாகத் தகவல் வரும். அதுக்குத் தான் அவர்கள் வந்திருக்கினம் என்று பல முறை நினைத்ததுண்டு!

நன்றி  அலை

தங்களது அனுபவத்தையும் பதிந்ததற்கு...

எனக்கு கனவுகள் வருவதில்லை

வந்தாலும் நிலைப்பதில்லை

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்னில ஒரு நரிக்குணம் உண்டு, விசுகர்!

ஒரு நல்ல காரியமும், துக்கமான காரியமும் ஒரே நாளில் வந்தால், துக்கமான காரியத்துக்குத் தான் முதலிடம் கொடுப்பது!

இதற்கான உளவியல் காரணம், உங்கள் 'ஆழ்மனது' என்றே நினைக்கிறேன்! உங்கள் ஆழ்மனதானது நீங்கள் செய்வது சரியல்ல என்று உங்களுக்கு அடித்துச் சொல்வதற்குத் தெரிந்தெடுத்த வழிதான் இந்த கனவாகும்! அதற்காகவே, ஆழ்மனது உங்கள் அப்பாவைத் தெரிந்தெடுத்தது!

உங்கள் அப்பாவுக்கும், உங்களுக்குமான புரிந்துணர்வு, நிச்சயமாக ஒரு கண்டிப்பின் அடிப்படையிலேயே ஆரம்பித்திருக்கும்! சில நல்ல பழக்க வழக்கங்களை, சுமுதாய நடைமுறைகளை, ஊட்டி வளர்த்ததில் உங்கள் அப்பாவே முன்னிலை வகித்திருக்கக் கூடும்!

முன்னர் வராமல், இப்போது மட்டும் இந்தக் கனவு வரவேண்டிய காரணம், நீங்கள் இப்படியான ' முரண்பாட்டு மனநிலை' வந்த சந்தர்ப்பங்களில் 'துக்க கரமான' நிகழ்வுகளுக்கு, 'முன்னுரிமை' கொடுத்திருக்கலாம்! அதனால் கனவுகளுக்குத் தேவை இருக்கவில்லை!

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், நீங்கள் மிகவும் ' இரக்க சிந்தனை' உள்ளவர் என்பது!

அது நல்லது தானே! கனவைப் பற்றிக்கனக்க யோசிக்காதீர்கள்! :D

பச்சையும் முடிஞ்சு போச்சுது! பிறகு வாறன்!

நன்றியண்ணா

நீங்கள் சொல்வதை வைத்து பார்க்கையில் சரியாகத்தெரிகிறது

எனது அப்பருக்கும் எனக்குமான நிலை என்பது மிகவும் அன்பு சார்ந்தது

(5 பெண்களுக்கு  பின் நான் பிறந்ததால்)

இதுவரை  அவருடைய  சொல்லை  நானும்

வளர்ந்த பின் எனது சொல்லை அவரும் தட்டியதேயில்லை.

அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால்

அவர் கடவுளுக்கு போடப்பட்டது போல்

அவரது உருவத்துக்கு பட்டு வேட்டி சால்வை அணியப்பட்டு 

அவர் கடவுள்களுக்கு நடுவில் இருந்தது

சாகும்வரை எங்கு சென்றாலும்

தேவாரத்தை மட்டுமே பாடிய  அவருக்கு கிடைத்த கொடை என்று நினைக்கின்றேன்.

நன்றியண்ணா

உங்களிடம் கருத்து வாங்குவதும் அவரை எனக்கு ஞாபகப்படுத்தும்.. :)

தயவு செய்து கல் எடுக்காதீர்கள் விசுகு எதற்கும் சிக்மண்ட் ப்ரொயிட்டின் கனவு தத்துவத்தை படியுங்களேன்.

உங்களுக்கு திருப்பி  ஒரு விடயத்தைப்போடுகின்றேன்

எதைப்படிக்கணும் என்று சொல்லுங்கள்.......... :lol:

இந்த கனவில்

இறந்த எனது தகப்பனார்

மற்றும் எனது அத்தார்  தவிர

இன்னும் மூன்று பேரைக்கண்டேன்  அல்லவா??

அவர்களை  ஏன் அங்கு கண்டேன்???

போகப்போகிறார்களோ???? :lol:  :lol:  :lol:

இதை மனைவியிடம் சொன்ன போது 

அவர் சொன்ன  பதில்

நீங்களும் அங்கு தானே இருந்தீர்கள்??

அடிப்பாவி............... :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Posts

  • எங்கள் வங்குரோத்துத்தனம் முற்றுமுழுதாக வெளிவந்துவிட்டது  அது இலங்கைக்கும் தெரிந்து எங்கள்  மூஞ்சியிலேயே உச்சாவும் போய்விட்டார்கள் , இனி இங்கு வேலை மின்னட்டு குந்திக்கொண்டிருக்கும் லூசுகள் எல்லாம் உங்கடை,உங்கடை  நாடுகளுக்கு போய் உங்கடை அரிப்புக்களை தீர்த்துக்கொள்ளுங்கள். நாட்டிலிருக்கும் கூத்தாடிகளின் வால்கள் அடிக்கடி போராட்டம் நடை பவனி வைத்து (ஆதாரங்களை சேர்த்து) நீங்களும் இருப்பதாக காட்டிக்கொள்ளுங்கள், (காணாமல் போனோர் போராட்ட பேனரில் மூலையில் இருக்கும்  அந்த ஐ நா கொடி ரொம்ப முக்கியம்-அதற்கு சேதாரம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கோ  )  அடுத்த முறை fund ஒதுக்கினால் இதே வேலையை பார்த்து எங்களது Peycheck இற்கு எந்த சேதாரமும் வராமல் பார்க்க வசதியாகஇருக்கும் . அம்புட்டுதே நம்ம மிச்சலின் உள்ளடக்கம் 
  • சிறு வயதில் சொல்லி தந்தார்கள்.
  • மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது- ஐ.நா    71 Views கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது எனத் தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட், ஐ.நா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை இலங்கை அரசாங்கம் மூடிவிட்டது என்றும் கூறியுள்ளது. மேலும் சிறீலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “சிறீலங்காவுடனான பேரவையின் ஈடுபாட்டிற்கான ஒரு முக்கிய சந்தர்ப்பமாகும். எனது முன்னைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போல ஆயுத மோதல் முடிவடைந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான உள்நாட்டு முயற்சிகள் பலமுறை தவறிவிட்டன. 2015 ஆம் ஆண்டில் பேரவையில் சிறீலங்கா சார்பில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டபோதிலும், தற்போதைய அரசாங்கம் உண்மையைக் கண்டறிதல் அல்லது பொறுப்புக்கூறல் செயல்முறைகளைத் தொடரத் தவறிவிட்டது. சிறீலங்காவில் அனைத்து சமூகங்களிலும் போரில் பேரழிவுகளைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடுமையான விதி மீறல்களுக்கு வழிவகுத்த அமைப்புகள், கட்டமைப்புகள், கொள்கைகள் அவ்வாறே இன்னமும் உள்ளன. போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டவர்கள் அப்படியே இருக்கிறார்கள். சமீப காலங்களில் அவர்களில் இருப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். சிறீலங்காவில் சிவில் சமூகத்தினர் மற்றும் சுயாதீன ஊடகங்களுக்கான செயற்பாட்டு சுதந்திரம் கடந்த காலத்தில் ஓரளவுக்கு இருந்தபோதும் இப்போது அந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் சிறீலங்காவில் நிறைவேற்றப்பட்ட 20-ஆவது திருத்தச் சட்டம் மூலம் நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறீலங்காவின் மனித உரிமைகள் ஆணையம், தேசிய காவல் ஆணையம் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் சுயாதீனத் தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாடுகள் வேகமாக இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவது ஜனநாயகத்தைக் கேள்விகுறியாக்கியுள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் அரச உயர் மட்டத்தினரால் பாகுபாட்டுடன் கையாளப்படுகின்றனர். கோவிட்19 தொற்று நோயால் உயிரிழப்பவர்களை கட்டாயமாகத் தகனம் செய்யும் அரசின் கொள்கை சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களிடையே வேதனையையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் நீண்டகால, கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான பிரச்சினைகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்நிலையில் அங்கு கடந்தகாலங்களில் இடம்பெற்றதைப் போன்ற விதி மீறல்கள் முறைகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. அரசினால் அடுத்தடுத்து நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உண்மையைக் கண்டறிந்து அதன் நம்பகத்தன்மையையும் பொறுப்புணர்வையும் உறுதி செய்வதற்கும் தவறிவிட்டன. கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற சிறீலங்கா பலமுறை தவறிவிட்டது. அத்துடன் இந்தப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியதன் மூலம் முன்னேற்றத்துக்கான சாத்தியக் கூறுகளுக்கான வழிகளை சிறீலங்கா அரசாங்கம் மூடிவிட்டது. இந்நிலையில் சிறீலங்காவில் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்வதற்கான புதிய வழிகளை ஆராயுமாறு சர்வதேச மட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிகளைக் கண்டறியுமாறும் கோருகிறேன். மேலும் எதிர்கால பொறுப்புக்கூறலுக்கான ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரித்துப் பாதுகாப்பதற்கான பொறுப்பை வலியுறுத்துகிறேன். அத்துடன், பேரவை உறுப்பு நாடுகள் தங்கள் நாடுகளில் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நான் கோருகிறேன். சிறீலங்காவில், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க எனது அலுவலகம் தயாராக உள்ளது”.   https://www.ilakku.org/?p=43144
  • எனக்கு என் அண்ணர் 80களில்  சொன்ன வசனம் இது. ஆனால் அதைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்பது காலத்தின் கொடுமை. பயணம் தொடரட்டும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.