Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்


ஐந்தாம் வகுப்புப் படிக்கும் வரை நான் கல்வி பயின்றது கலவன் பள்ளியில். ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே படித்தோம். விளையாட்டில் நான்தான் முதல் எனது பள்ளியில். ஓட்டப் போட்டியில் என்னை வெல்ல யாரும் இல்லை என்று அப்போது எனக்கு கொஞ்சம் தலைக்கனமும்தான்.

மாவட்ட ரீதியான போட்டி இரு வாரங்களில் நடைபெற இருந்தது. அதற்காக ஆண்களில் மூன்று பெண்களில் மூன்று பேராகத் தெரிவு செய்து ஆசிரியர்கள் எமக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தனர்.

பெண்களில் நான் என்றால் ஆண்களில் கண்ணன் என்னும் ஒருவன் நன்றாக ஓடுவான். சாதாரணமாகவே எனக்கும் அவனுக்கும் சரிவருவதில்லை. எப்போது பார்த்தாலும் எலியும் பூனையும் தோற்றுப்போகுமளவு சண்டை போட்டபடி இருப்போம்.

அவன் போய் வாத்தியாரிடம் கோள் சொன்னாலும் அடி அவனுக்குத்தான். அதனால் என்மேல் கடுப்போ கடுப்பு.

விளையாட்டுப் போட்டி நெருங்குவதால் சனிக்கிழமைகளிலும் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. நான் எப்போதுமே நேரம் தவறாததால் வெள்ளனவே சென்றுவிட்டேன். அவனும் எனக்கு முன்னரே வந்துவிட்டான். எமக்குப் பொறுப்பான ஆசிரியைகளில் ஒருவர் கூட வந்துவிட்டார். மற்றவர்களுக்காக சிறுது நேரம் காத்திருந்ததில் ஆசிரியைக்கு கடுப்பு வந்திருக்கவேண்டும். சரி நீங்கள் இரண்டு பேரும் தொடங்குங்கோ மற்றவை வரட்டும் என்று சொன்னவுடன் நாம் இருவரும் ஆசிரியை கீறிய கோட்டில் போய் நின்றோம்.

என்ன இருந்தாலும் நான் தானடா முதலாவதா வரப்போறன் என்று நான் மனதுள் எண்ணியபடி இண்டைக்கு இவனை விடக்குடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். அவனும் அப்படி எண்ணியிருப்பான் என்று பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.

ஆசிரியர் விசில் ஊதியதுதான் தாமதம் இருவரும் ஓடத் தொடங்கினோம். அது ஒரு சற்சதுரமான மைதானம். அதனால் வளைந்துதான் ஓடவேண்டும். நான் வெளிவட்டத்தில்  நின்றதனால் எனக்கு சிறிது முன்னே அவன் சென்றுவிட்டிருந்தான். ஆனாலும் எனக்கு நம்பிக்கை நான் அவனை வென்றுவிடுவேன் என்று. மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடி அவனை முந்திவிட்டேன். இன்னும் சிறிது தூரம்தான் ஆசிரியை கண்ணில் பட்டுவிட்டார். எனக்கோ அவனை முந்திவிட்ட சந்தோசம்.

திடீரென எதுவோ என்னை இடித்துத் தள்ள முகம் குப்புற விழுந்தது கொஞ்ச நேரத்தில் ஆசிரியை என் அருகில் வந்தபோதுதான் தெரிந்தது. எருமை மாடு என்னத்துக்கு அவளை இடிச்சனி. எவ்வளவு இடம் கிடக்குது இங்க என்று ஆசிரியை அவனைத் திட்டித் தீர்த்தபோதுதான் அவன் என்னை இடித்து வீழ்த்தியது புரிந்தது. அவனில் கோபம் ஏற்பட்டாலும் ஆசிரியரின் அர்ச்சனை அவன்மீது தொடர்ந்துகொண்டு இருந்ததால் எனக்கு சந்தோசத்தில் ஒன்றும் தெரியவில்லை.

எழும்பு நீ என ஆசிரியை கூறவும் எழும்ப எத்தனித்த என்னால் எழும்ப முடியவில்லை. இரு கைகளும், முழங்கால்களும் தேய்ந்து இரத்தம் வடிந்துகொண்டு இருந்தது. அதன் பின் தான் எனக்கு நோவே தெரிய ஆரம்பித்தது. இன்னும் மூண்டு நாள் இருக்கு போட்டிக்கு. என்னண்டு ஓடுறது எண்டு ஆசிரியை தனக்குத்தான கதைத்தபடி எனக்கு முதலுதவி செய்ய மலங்க மலங்க விழித்தபடி கண்ணன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் திட்டம் போடாமலேயே என்னைத் தள்ளி வீழ்த்தியது கட்டிடம் கட்ட வைத்திருந்த சல்லிக் கற்களின்மேல்.........

அதன்பின் இருபத்தைந்து ஆண்டுகளின் பின் சிங்கப்பூரில் கோயில் ஒன்றில் வணக்கிவிட்டு கணவர் பிள்ளைகளுடன் வெளியே வருகிறேன். என்பின்னால் என் பெயரைச் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்கிறது. இங்கே யார் என்னை என எண்ணியபடி திரும்பினால் கண்ணன்.

உருவத்தில் கொஞ்சம் மாற்றம். ஆனால் அவனின் சிரிப்பு மட்டும் மாறவில்லை. எப்பிடி என்னை அடையாளம் கண்டனீர் என்றவுடன் உம்மை மறக்க ஏலுமே என்றானே பார்க்கலாம். என் கணவரின் முகம் போன போக்கை நினைத்தால் இப்போதும் சிரிப்பு வருகிறது. நிலைமையை சமாளிக்க என்னுடம் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவர் என்று கூறியதும் கணவர் சமாதானமாகி அவனுடன் கதைக்கத் தொடங்கிவிட்டார். இப்போது திருமணமாகி இரு பிள்ளைகளுடன் அவுஸ்றேலியாவில் வசிப்பதாகக் கூறி, அங்கு வந்தால் தன் வீட்டுக்குக் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் கேட்டு விடைபெற்றான்.

இப்போதும் எங்காவது விளையாட்டுப் போட்டி பற்றி தொலைக்காட்சியில் பார்த்தாலும் அந்தநாள் நினைவும் கூடவே வரும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எங்க பதியிறது ?????

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ! ஒரு கண்டத்தில் இருந்து தப்பீட்டான்.  " சிங்கப்பூரை  சிட்னி என்டு வாசிச்சுப் போட்டன்" ...! :lol:

Link to post
Share on other sites

சிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. :unsure: உங்கட கணவர் பாடுவாராம்.. "வசந்தகால நதிகளிலே.." :o

நினைவுமீட்டல் நல்லாயிருக்கு.. :D

Link to post
Share on other sites

எங்க பதியிறது ?????

 

இதென்ன கேள்வியப்பா :o  :o  ?? உங்கடை இந்த பதிவை வாசிக்கிற நேரம் நான் நினைச்சன் , சுமேயுக்கு கழண்டு போச்சுது எண்டு :lol: :lol: . நீங்கள் கடைசியிலை குடுத்த அடியிலை தூக்குறியள்  :D . இதிலை ஒரு கதைக்கு இருக்கிற இலட்சணங்கள் இருக்கிறதால கதை கதையாம் பகுதியிலை போடலாம் என்பது எனது கருத்தாகும் :) :) .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அது சரி.. உது எந்த ஸ்கூல். ஆண்களோட பெண்களைக் கலந்து ஓட விடுறது..???! பொதுவா ஆண்கள் தனிய.. பெண்கள் தனிய என்று தானே போட்டிகள் நடத்திறவை. நீங்கள் பாலர் வகுப்பில ஓடினதைச் சொல்லேல்லையே.

 

ஆனாலும் ஆக்கம் வாசிக்க.. சுவாரசியமா இருக்குது. :):lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. :unsure: உங்கட கணவர் பாடுவாராம்.. "வசந்தகால நதிகளிலே.." :o

நினைவுமீட்டல் நல்லாயிருக்கு.. :D

 

தேவை இல்லாமல் குடும்பத்தைக் குழப்பாதைங்கோ சொலீட்டன். :D

 

அது சரி.. உது எந்த ஸ்கூல். ஆண்களோட பெண்களைக் கலந்து ஓட விடுறது..???! பொதுவா ஆண்கள் தனிய.. பெண்கள் தனிய என்று தானே போட்டிகள் நடத்திறவை. நீங்கள் பாலர் வகுப்பில ஓடினதைச் சொல்லேல்லையே.

 

ஆனாலும் ஆக்கம் வாசிக்க.. சுவாரசியமா இருக்குது. :):lol:

 

மற்றாக்கள் வெள்ளன வராததால வந்த வினை.மற்றப்படி ஓட்டம் பெடியள் வேற பெட்டையள் வேறையாத்தான் :D

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. :unsure: உங்கட கணவர் பாடுவாராம்.. "வசந்தகால நதிகளிலே.." :o

நினைவுமீட்டல் நல்லாயிருக்கு.. :D

 

அப்படியே சிற்றுவேஷன் சாங்கையும் போட்டுவிட்டிருக்கலாமே பாஸ்..! :):lol:

 

http://youtu.be/oQVqfLIOis0

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.

Link to post
Share on other sites

கனகாலத்துக்கு பிறகு கதையைக் கண்டது மகிழ்ச்சி! தொடர்ந்து எழுதுங்கள் சுமே!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் படகு சவாரி போவிங்களாம்.. உங்களையும் உங்கள் கணவரையும் வைத்து கண்ணன் படகு வலிப்பாராம்.. :unsure: உங்கட கணவர் பாடுவாராம்.. "வசந்தகால நதிகளிலே.." :o

நினைவுமீட்டல் நல்லாயிருக்கு.. :D

இந்தப்பாடலைப் பல தடவைகள், அந்தக்காலத்தில் கேட்டிருக்கிறேன்!

 

அப்போதெல்லாம் 'ரஜனி' மீது ஒரு விதமான அனுதாபம் வரும்!

 

இப்போதெல்லாம் 'ரஜனி' மீது கோபம் வருகின்றது!

 

உங்கள் அனுபவப் பகிர்வுகள் தொடருட்டும், சுமே! :D

 

இப்போது, இந்தப்பாடல் தான் மிகவும் பிடிக்கின்றது!

 

http://youtu.be/-9q4djEQ978

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இங்கே யார் என்னை என எண்ணியபடி திரும்பினால் கண்ணன்.இப்போது திருமணமாகி இரு பிள்ளைகளுடன் அவுஸ்றேலியாவில் வசிப்பதாகக் கூறி
பெயரும்....தற்பொழுதைய வாழ்விடமும் எனக்கு பொருந்துகின்றது.....ஆனால் சத்தியமாக நான் அவனில்லை...:D ..அனுபவ பகிர்வுக்கு நன்றிகள் சுமே...
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுமேயக்காவின் விளையாட்டு கடைசீல கண்ணனின் லீலைகளில் ஒன்றாய் போயிற்றுது. எண்டாலும்

அனுபவம் புதுமையாகவே இருக்கிறது. 

 

ஏதோ நினைவுகள் கனவுகள் http://youtu.be/dhulDJkzNso

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உண்மைதான். அதற்கான காரணங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும். தத்துவார்த்த சிந்தனையாளர்கள் தலைமைத்துவம் உள்ளவர்களாகவும் அமைவது அபூர்வம். மறைந்த அரசியல் தத்துவவியளாளர் அன்ரன் பாலசிங்கம் சிறந்த தத்துவவியளாளரும் இராஜதந்திரியுமாவார், ஆனால் ஆனால் அவர் விடுதலைப் புலிகளின் தலைவராக இருக்கவில்லை. அவரிலும் பார்க்க சிறப்பான தலைமைத்துவ ஆற்றல் கொண்ட ஒருவரே அந்த தலைமைத்துவத்தை வழங்கினார்.  இன்றைய தலைவர்கள் அஹிம்சை அல்லது  ஆயுதப்போர்  தவிர்ந்த மாற்று வழிமுறைகளில் ஆர்வமற்றவர்களாகவே இருக்கிறார்கள். இந்த முறைகள் மீண்டும் மீண்டும் தோற்றுப்போய் இருந்தாலும் தலைவர்களுக்கு இந்த முறைகளிலேயே நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் நம்பிக்கைகள் மாறும்வரை மற்ற முறைகளில் முயற்சி இடம்பெறும் சாத்தியம் குறைவாகவே இருக்கும்.
  • யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து படையினர் குவிப்பு! யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து  மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த பகுதி சிறப்பு அதிரடிப்படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து, குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-செம்மணி-இந்து-மயானத/
  • காதல்.......ஆனந்த கண்ணீரில்...ஆரம்பித்து.......ஆறுதல் கண்ணீரில்.....முடிகிறது..........!!!முகில்களுக்கிடையே....காதல் விரிசல்.......வானத்தின் கண்ணீர்......மழை..........................!!!நான்வெங்காயம் இல்லை....என்றாலும் உன்னை.....பார்த்தவுடன் கண்ணீர்....வருகிறது................!!!&கவிப்புயல் இனியவன்இறந்தும் துடிக்கும் இதயம்காதல் கஸல் (பதிவு 01)
  • மாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி    4 Views உலகெங்கும் இன்றும் ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்கள் தம்மை ஒடுக்குவோருக்கு எதிராகப்  பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதே போல் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் கூட போராட்டத்திலே தான்  தொடங்கியது. தமக்கு ஒதுக்கப்பட்ட வேலை நேரத்தை குறைக்கவும், தமக்குத் தரப்படும் வேதனத்தை உயர்த்துமாறு வலியுறுத்தியும் அதேவேளை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைக் கோரியும் 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1908ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி ஒரு  பேரணியை நடத்தினர். அடுத்த ஆண்டு இதே நாளைத் தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க குடியரசுக் கட்சி அறிவித்தது. இதையடுத்து 1975ஆம் ஆண்டுதான் இந்த நாளைச் சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது. உலகம் முழுவதும் பெண்கள் நாள் கொண்டாடப்பட்டு வருகின்ற போதிலும், இன்றும் உலகளவில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நாளுக்குநாள் போராட வேண்டிய நிலையில் தான் உள்ளனர்.  இலங்கையில்  2009 இல் முடிவுற்ற போருக்குப் பின்னர் பெண்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.  போரில் அவயங்களை இழந்தவர்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு போரில் அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக வாழ்ந்து வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் முன்னாள் போராளியும் எழுத்தாளருமான வெற்றிச்செல்வி அவர்கள்.  இந்நிலையில், உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு வெற்றிச்செல்வியுடன்  இலக்கு ஊடகம் ஒரு நேர்காணலை மேற்கொண்டது. அந்த நேர்காணலை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம். கேள்வி – சர்வதேச மகளிர் நாள் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற போதும், இன்னும் மகளிர் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்? பதில் – சர்வதேச நாட்களை உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிப்பவர்கள் துறைசார் ஆர்வலர்கள் மட்டுமே. அவ்வாறே மார்ச் 8 பெண்கள் நாளும். இந்த ஆர்வலர்களாலும், தன்னார்வத் தொண்டர்களாலும் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வுகளால் சிலர் மட்டும்தான் புரிதலுக்கு உட்படுகிறார்கள். அதிகார மனோநிலையில் இருப்பவர்கள் இந்த நாட்களை எல்லாம் பத்தோடு பதினொன்றாய் கடந்து விடுகிறார்கள். தத்தமக்கென்று பிடிவாதங்களையும், அதிகாரங்களையும் வைத்திருக்கின்ற அல்லது வளர்த்துக் கொண்டிருக்கின்றவர்களை ஆண்டாண்டுக்கு வந்துபோகும் இந்தக் கலண்டர் நாட்களால் மாற்றிவிட முடியாது. மார்ச் 8 ஐ ஒரு நிகழ்வாகவோ வெறும் விழாவாகவோ நடத்தி முடித்துவிட்டுப் போகின்ற பல அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களை பார்க்கிறேன். உண்மையான மன மாற்றத்திற்கான அல்லது ஆழமான புரிதலுக்கான நிகழ்வுகளாக அவை நடக்கின்றனவா என்றால் இல்லை என்றுதான் சொல்ல முடிகிறது. அநேகமான மகளிருக்கு மட்டுமல்ல மகனாருக்கும் தமது உரிமைகள் எவை, கடமைகள் எவை என்று தெரிந்திருக்கவில்லை. மனிதர்களை மனிதர்கள் அணுகுவதில், நடத்துவதில் நிகழும் மனிதாபிமான வறுமைதான் உரிமைகள் மறுக்கப்படுவதற்குக் காரணமாகின்றது. பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் அடக்குமுறைச் சிந்தனைகளையும் கொண்டவர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் முரணானவர்கள். மேலும் மனிதர்கள் தொடர்பாக நாம் ஒவ்வொருவரும் வைத்திருக்கின்ற பொதுப் புத்தியின்பால் சரிந்து விழுகிறோம். அதனைச் சமூகத்தின் மீது பொதுவாகத் தூக்கிவைத்துப் பேசிவிட்டுக் கடந்து போய்விடுகிறோம். பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் கூட சுதந்திரமாக தமது குரலை உயர்த்துவதில் தடைகள் இருக்கின்றன. ஏதோ ஒரு விதத்தில் அவர்களும் ஓரங்கட்டப் படுகிறார்கள். சாதாரண சமூக வாழ்வுக்கு எதிரானவர்களைப் போலவும் அல்லது அதீத திறமையுள்ளவர்களைப் போலவும் கருதப்படுகிறார்கள். எப்போது மக்கள் தமது சுதந்திரமான வாழ்க்கை முறைக்கான விழிப்புணர்வாக மனித உரிமைகளை புரிந்து கொள்கிறார்களோ அப்போது பெண்களுக்கான உரிமைகளும் மதிக்கப்படும். ஆனால் ஒரு சமூகத்தில் அனைத்தும் நூறு வீதம் சாத்தியமாவதில்லை என்பதே யதார்த்தமும் எனது கவலையும். கேள்வி – பெண் சமத்துவத்தை எட்டுவதில் எமது சமூகத்தில் ஆண், பெண் இரு பாலாரினதும் பங்கு எந்தளவு உள்ளதென கருதுகிறீர்கள்? பதில் – மனித எண்ணங்களில் பாகுபடுத்தி வைத்திருக்கும் ஆண், பெண் மன நிலையை முதலில் நாம் விட்டொழிக்க வேண்டும். சாதி, சமய, இன, மத, நிற, அரச உத்தியோக, பொருளாதார அனைத்து நிலைகளிலும் மனிதாபிமானத்தைக் கடைப்பிடிக்கும் மனங்கள்தான் வேண்டும். மனிதர்களைத்தான் மதிக்க வேண்டும். மனிதர்களுக்குள் யாவரும் அடங்குவர். கேள்வி – இவ்வாண்டு ‘பெண் தலைமைத்துவமும் கோவிட் – 19 இன் பின்னான காலத்தில் பெண் சமத்துவத்தை எட்டுதல்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகிறது. இவ்விலக்கை எட்ட மகளீர் அமைப்புக்கள் எவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்? பதில் – ‘பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள்’ என்ற சொல்லின் வலிமையைப் புரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் அநேகமாக வாழும் நாட்டில் வசிக்கிறவர் என்ற வகையில் சொல்கிறேன்; யாரோ எழுதும் இலக்கை யாரோ நிறைவேற்ற முடியாது. நமக்கு எது தேவை என்று நாம் தீர்மானிக்கிறோமோ அதனை எட்டுவதற்காக மட்டுமே நாம் முயற்சிக்கலாம். சிறப்பு நாட்களுக்காக இலக்குகளை வரையறுப்பதெல்லாம் ஒரு தூண்டலுக்கானது மட்டுமே. பெண்கள் தமது அறிவாலும், ஆற்றலாலும் தமக்கான சுயத்தை நிலைநாட்டி வாழ வேண்டும். சமத்துவம் கேட்டுப் பெறக்கூடியதல்ல. அது சுயத்தின்பாற்பட்டது. அந்தச் சுயத்தை பிடிவாதம், வரட்டு கௌரவம், சண்டை, அதிகாரம் என்பவற்றில் இருந்து வேறுபடுத்த மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். கேள்வி – மகளீர் மேம்பாட்டில் மாற்றம் கொண்டு வர ஆண்கள் என்ன செய்ய வேண்டும்? பதில் – ஆண்கள் தனியாக என்ன செய்ய முடியும்? ஆண்களோ பெண்களோ முதலில் மனித மனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். ஆயிரத்தெட்டுச் சட்டங்களை எழுதியும் எழுதாமலும் வைத்துக்கொண்டு வாழ்வைச் சிக்கல்களுக்குள் முடக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளை பாரபட்சங்களோடு வளர்க்காதீர்கள். ஆண் என்பது அதிகாரமல்ல. அது பால். நேரும் மறையும் இல்லாமல் மின்சாரமில்லை. நேரும் மறையும் நூலளவு சறுக்கினாலும் இருட்டுக்குள்தான் கிடக்க வேண்டும். சறுக்காமல் வாழ உதவுவது சுதந்திமான வாழ்க்கையைக் கொண்டாடுவதே ஆகும். சுதந்திர உணர்வு என்பது உயிரின் உணர்வாகும். இதில் ஆண்-பெண் பிரிப்பு தேவையே இல்லை. வாழ்வை இலகுவாகவும் சுதந்திரமாகும் அறிவோடும் வாழப்பழகுதலே வாழ்வின் கலை. வாழ்வின் கலையை மக்கள் மதிக்க வேண்டும் கொண்டாட வேண்டும். பெண்களை வீட்டோடு வீட்டுச் சாதனங்களில் ஒன்றைப்போல பாவித்து வந்த பெரும்பான்மை மனோநிலை மாறி வருவதைக் காணமுடிகிறது. அதற்கு மனிதாபிமானத்தை வளர்க்கவும் மனித மாண்பைப் பெருக்கவுமான நுணுக்கங்கள்தான் தேவை. அவற்றைத்தான் சமூகம் கண்டடைய வேண்டும். (‘ஆணாதிக்கம்’ என்ற சொல் பொருத்தமானதா என்று தெரியவில்லை. ஆண் என்பதோடு ஆதிக்கம் சேர்வதால் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவதில் எனக்குத் தயக்கம் இருக்கிறது. பேராண்மை, முகவராண்மை போன்ற சொற்கள் ஆண் என்பதன் கலப்பல்ல. ஆனால் ஆணாதிக்கம் என்பதில் ஆண் நேரடியாக உள்ளது. அதனால் அச் சொல்லை இங்கே மேலாதிக்கம் என்று பயன்படுத்துகிறேன்.) மேலாதிக்கச் சிந்தனையுடைய அரசுகள் இதனை கவனத்தில் எடுப்பதும் அவசியமாகிறது. உதாரணமாக மக்களின் வாழ்வை ஒன்றோடொன்று இறுக்கமாக முடிச்சுப்போட்டு வைத்திருக்கும் குடும்பக் கட்டமைப்பு சார்ந்த அரச பதிவேடுகள் பெண்களை இரண்டாம் பிரஜைகளாகவே ஆக்கி இருப்பதை நாம் அறிவோம். இணையராக நடத்தும் அரச ஆவணங்கள் ஏதுமில்லை. எப்போது பதிந்தாலும் தந்தையின் பெயருடனோ துணையின் பெயருடனோ இரண்டாம் நிலைதான் பெண்ணின் பெயருக்குண்டு. தந்தையின் பெயரைக்கூட முழுப்பெயராக ஏற்கலாம். இணையரின் பெயரை ஒரு பெண்ணின் முழுப்பெயராகப் பதிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுவதெல்லாம் ஆதிக்கச் சிந்தனையின்பாற்பட்டது. அவளை அவளின் பெயரால் அழைப்பதில் யாதொரு குறையும் இல்லை. ஒரு பெண் ஆசிரியையின் வரவுப் பதிவேட்டில், ஒரு பெண் உத்தியோகத்தரின் தகுதிச் சன்றிதழில் ஒரு பெண் அதிகாரியின் அலுவலக மேசையில் இருக்கும் பெயர்ப் பலகையில் அவளது பெயர் இருப்பதுதானே நியாயமாகும். பெண்ணே தன் இணையின் பெயரைத் தனக்கான இடத்தில் வைத்துக் கொள்ள முன்வந்தால் இங்கே அவளால் அவள் காணாமல்போகச் செய்யப்படுகிறாள். இதன் விழிப்புநிலை பெண்களுக்கும் வேண்டும். உன் அலுவலக மேசையில் என் பெயர் எதற்கு? உன் பெயரை வைத்துக்கொள்ளேன் என்று தம் திருமதிகளுக்குச் சொல்லக்கூடிய திருவாளர்களும் வேண்டும்.   https://www.ilakku.org/?p=44006
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.