யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நியானி

கருத்துகளில் மாற்றங்கள் [2014]

Recommended Posts

சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் சில கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது.

ஆக்கபூர்வமான விமர்சனங்களை விடுத்து சீண்டல் கருத்துக்களை தொடர்ச்சியாக வைப்பவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

இந்திய துணைத்தூதர் தேவயானி பற்றிய நம்பகத்தன்மை இல்லாத காணொளி இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. பரபரப்புக்காக நம்பகத்தன்மையற்ற பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவும்.

Share this post


Link to post
Share on other sites

மீண்டும் இணைக்கப்பட்ட இந்திய துணைத்தூதர் தேவயானி பற்றிய நம்பகத்தன்மை இல்லாத காணொளி நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

ஊர்ப்புதினத்தில் UN finds cluster bombs in Sri Lanka எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது. இச்செய்தி 2012 இல் வெளிவந்த பழைய செய்தி.

 

மேலும் ஆங்கிலத்தில் உள்ள பதிவுகள் யாழ் திரைகடலோடி பகுதியில் இணைக்கப்படவேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

நான் என்ன செய்ய எனும் திரியில் ரதியால் எழுதப்பட்ட கருத்து ஒன்று அங்கிருந்து நகர்த்தப்பட்டு புதுத் திரியாக நாற்சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பிஞ்சிலை பழுத்தது எனும் திரியில் இருந்து பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் தலைப்புக்கு சம்பந்தமான ஆரோக்கியமான கருத்தாடலைத் தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

இரு மகள்மாரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை: யாழில் சம்பவம் எனும் திரியில் தலைப்பின் திசையைத் திருப்பும் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் தலைப்பை ஒட்டிக் கருத்தாடலைத் தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

கள உறவின் மின்னஞ்சலை திருடியது யார் ? எனும் திரி பல தவறான ஊகங்களை உருவாக்குவதால் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பிரேம்கோபால் மற்றும் அவர் மனைவி ஆடிய நடனம் எனும் திரியில் இருந்து பல கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

பிரபாகரனுக்கும் எனக்கும் இடையில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை – 'தி இந்து'வுக்கு இரா.சம்பந்தன் செவ்வி எனும் திரியில் பண்பற்ற சொல்லாடலைக் கொண்ட சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

வணக்கம்,

 

தனிப்பட்ட நபர்களின் Facebook இல் பதியப்பட்ட கருத்துகளை யாழில் அவர்களது சம்மதம் இல்லாமல் பதிவதை தவிர்க்கவும். அவ்வாறு பதிந்த ஒரு கருத்து நீக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

தனிப்பட்ட நபர்களின் Facebook இல் உள்ள விடயங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தலைப்பு ஒன்று நீக்கப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

'யாழில் நேபாள இராணுவத் தளபதி...' என்ற தலைப்பிலிருந்து சில அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

புலிகளின் முன்னாள் போராளிகளை கிளிநொச்சியில் இரகசியமாகச் சந்தித்த ஸ்டீபன் ராப்! – ஏற்பாடு செய்த ஐஓஎம் மீது பாய்கிறது அரசாங்கம் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

'இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்' என்ற தலைப்பில் ஒருமையில் விளித்து எழுதப்பட்ட கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Share this post


Link to post
Share on other sites

சைவமதத்தவரும் கிறிஸ்த்தவரும் திருமணம் செய்யும் போது எனும் திரி அகற்றப்படுகின்றது,

 

நன்றி

Share this post


Link to post
Share on other sites

தமிழ் பாடசாலையில் மதுபான அனுமதி திரியில் பார்வை இழந்தவர்களை அவமதிக்கும் விதமாக உவமானங்களுடன் எழுதப்பட்ட கருத்துகள் நீக்கப்பட்டன.

 

மாற்றுத் திறனாளிகளை அவமதிக்கும் எந்தக் கருத்துகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

போதியளவுக்கு விவாதித்தமையாலும், எமக்கிடையே மேலும் பிளவுகளை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் நீண்டு செல்கின்றமையாலும் இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம் எனும் திரி பூட்டப்படுகின்றது.

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

முற்றிலும் சீண்டும் விதமாகவும்,  குறிப்பிட்ட மதத்தினை அவதூறு செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட திரி ஒன்று அகற்றப்படுகின்றது.

 

உலகில் விமர்சனங்களுக்கு அப்பால்பட்டு எதுவும் இல்லை. எந்த மதத்தினையும் விமர்சிப்பதற்கு யாழில் அனுமதி உண்டு. அது இந்து சமயம் மீதான விமர்சனமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் மீதான விமர்சனமாக இருந்தாலும் சரி. ஆனால் அந்த விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதாகவும், ஆரோக்கியமானதாகவும்,  வெவ்வேறு மதங்களை பின்பற்றுவர்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தா வண்ணமும் இருத்தல் வேண்டும் என்பதை அனைவரும் புரிந்து கொள்க.

 

நன்றி.

  • Like 4

Share this post


Link to post
Share on other sites

குடும்பத்தோடு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய டி ராஜேந்தர் எனும் திரியில் வெவ்வேறு மதங்களை பின்பற்றுபவர்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்த முனையும் வகையில் கருத்தாடல் நகர்வதால் திரி பூட்டப்படுகின்றது.
 

Edited by நியானி
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

'நெடுந்தீவில் நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. அனாவசியமாக சக உறுப்பினரை ஒரு திரிக்குள் இழுத்துக் கருத்து எழுதுவதைத் தவிர்க்கவும்.

Share this post


Link to post
Share on other sites

முதலிரவில் 21 முறை உறவு வைத்த மணமகன் – மனைவி தப்பி ஓட்டம்! எனும் திரியில் ஆபாசமான கருத்து ஒன்றும் பதில் கருத்துக்களும் நீக்கப்பட்டுள்ளன.

 

யாழ் களம் அப்பட்டமாகப் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் கருத்துக்களுக்கான இடம் அல்ல என்பதை கள உறவுகளுக்கு நினைவூட்டுகின்றோம்.

Share this post


Link to post
Share on other sites

'வேண்டும் என்றால் கூறுங்கள்' என்ற தலைப்பு வீணான பிரச்சனையை உருவாக்குவதால் நீக்கப்பட்டுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

தீபச்செல்வன் மீது எறியப்படும் துரோகக்கற்கள் எனும் திரியில் தனிப்பட்ட முகப்புத்தக உரையாடல்கள் இணைக்கப்படுவதாலும் ஆக்கபூர்வமற்ற வெறும் குற்றச்சாட்டான கருத்துக்கள் நீள்வதாலும் திரி பூட்டப்படுகின்றது.

Share this post


Link to post
Share on other sites

கள விதி:

 

4. நிரந்தரத் தடை தவிர்ந்த ஏனைய நடவடிக்கையை ஒருவர் மீது எடுக்கப்படும் போது அவருக்கு ஆதரவாக திரி திறக்கப்படுவது அனுமதிக்கப்பட மாட்டாது. இதே போன்று ஒருவர் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கோபம் கொண்டு நிரந்தரமாக விலகுகின்றேன் என விலகினால், அவரை மீண்டும் கருத்துக்களத்துக்கு வரச் சொல்லி திறக்கப்படும் திரிகளும் அனுமதிக்கப்பட மாட்டாது.
 
 
இந்த விதிக்கு அமைய தற்காலிக தடை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவளிக்கும் முகமாக திறக்கப்பட்ட திரி பூட்டப்பட்டு நீக்கப்படுகின்றது.
 
--------------
 
தனிநபர் தாக்குதல், 'நாயே' என்பதைப் போன்ற மோசமான சொற்களால் சக உறுப்பினரை விமர்சித்தல், யாழ் கள உறுப்பினர்களை ஒட்டு மொத்தமாக கீழ்த்தரமாக விமர்சித்தல்,  தகாத சொற்களை பிரயோகித்தல் போன்றவை எக்காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ள முடியாதவை. இவற்றை எவர் செய்யினும் அவரது அரசியல், கொள்கை, அவரது பங்களிப்பு என்பன பற்றிக் கருத்தில் கொள்ளாது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
 
 
 
 
 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு