Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கருத்துகளில் மாற்றங்கள் [2014]


Recommended Posts

'இனியும் முட்செடிகள் முளைக்கலாம்' என்ற சிறுகதை ஏற்கனவே பதியப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • Replies 92
 • Created
 • Last Reply

என்ன வித்தியாசம்? என்ற திரி அநாவசியமாக திறக்கப்பட்டுள்ளமையாலும் குழுவாதத்தினை ஊக்கப்படுத்துகின்றமையாலும் நீக்கப்படுகின்றது.

 

Link to post
Share on other sites

'கவிஞர் புதுவை இரத்தினதுரைக்காக யாழ்.இலக்கியவாதிகளால் குரல் கொடுக்க முடியவில்லை! – அமைச்சர் ஐங்கரநேசன் ஆதங்கம்.' என்ற தலைப்பிலிருந்து உறுப்பினர்களுக்கிடையிலான அநாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

தமிழ்வின் தளத்தில் இருந்து நகைச்சுவைப் பகுதியில் ஒட்டப்பட்ட ஒரு பதிவு நீக்கப்பட்டது,

Link to post
Share on other sites

1. நன்றீங்கற அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன் எனும் திரியில் இணைக்கப்பட்ட காணொளி பழைய காணொளி என்பதாலும் இது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளது என்பதாலும் நீக்கப்படுகின்றது.


2. ஒரு அநாமதேய இணையத்தளத்தில் இருந்து ஒட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவர் மீதான காழ்புணர்வுடன் கூடிய ஒரு திரி அகற்றப்படுகின்றது,

Link to post
Share on other sites

மெய்யெனப்படுவது பகுதியில் இணைக்கப்பட்ட பிற்போக்குத் தனமான ஒரு திரி நீக்கப்படுகின்றது.

 

மெய்யெனப்படுவது பகுதி இறை நம்பிக்கையும், மெய்ஞானமும் தொடர்பான விடயங்களுக்கான பகுதி. அதில் சாத்திரம், கைரேகை, சாமியார்கள் வழிபாடு போன்ற மக்களை ஏமாற்றும் விடயங்களை இணைப்பதை முற்றாகத் தவிர்க்கவும்.

Link to post
Share on other sites

'யாழ் இந்துக்கல்லூரி& லியோனி' என்ற தலைப்பில் இறுதியாகப் பதியப்பட்ட அனாவசிய உரையாடல்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

வாளோடு திரிந்தார் எழிலன்; யாழில் சுவரொட்டிகள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற பல சீண்டல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites
 • 2 weeks later...

"மிருகங்களுக்கான சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாதா?" எனும் திரியில் எழுதப்பட்ட இனக்குரோத கருத்துகள் நீக்கப்பட்டன.

Link to post
Share on other sites
 • 3 weeks later...

‘தலைமைச் செயலகம்’ உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் இருந்தார் – மற்றுமொரு மர்ம முடிச்சு அவிழ்ந்தது! எனும் திரியில் இருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும்வகையான கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

'முஸ்லீம் மக்களின் உரிமைப்போரில் அனைவரும் இணைந்து கொள்வோம்: புதிய திசைகள்' என்ற தலைப்பிலிருந்து கள விதிகளை மீறிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

"ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அதிகாலையில் வெட்டிக்கொலை!-அச்சுவேலியில் பயங்கரம்" என்ற திரியில் சம்பந்தபட்டவர்களின் புகைப்படங்கள் என்று இடப்பட்ட பதிவு நீக்கப்படுகின்றது.   மூன்றாம் தரமான இணையத்தளங்களில் இருந்து  மட்டமான தலைப்புகளுடன் படங்களை இணைக்க வேண்டாம்.

 

அத்துடன் இது தொடர்பாக இணைக்கப்பட்ட மிகவும் தரமற்ற, ஒருமையில் அமைந்த, மட்டமான விதத்தில் எழுதப்பட்டிருந்த செய்தி ஒன்றும் மட்டுறுத்தப்பட்டு நீக்கப்பட்டு உள்ளது.

 

பின்வரும் இணையத் தளங்கள் கருப்புப் பட்டியலில் இணைக்கப்படுவது பற்றி ஆலோசித்து வருவதால் இவற்றை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது.

 

1. தினக்கதிர்

2. JVPNews

 

நன்றி

Link to post
Share on other sites

24 ஆண்டுகளுக்குப் பின்னர் அடுத்த மாதம் யாழ்.நகர் வருகிறது யாழ்தேவி! எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் ஆரோக்கியமான முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to post
Share on other sites

ஜூன் முற்பகுதியில் புளொட்டின் பொதுக் கூட்டம் எனும் திரியில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் தலைப்பை ஒட்டிக் கருத்தாடலைத் தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Link to post
Share on other sites

தமிழ்செல்வனின் மனைவியும் குழந்தைகளும் பிரான்சுக்கு வந்ததில் வெளிநாட்டு புலிகள் வட்டாரங்கள் மகிழ்ச்சி!! – டி.பி.எஸ். ஜெயராஜ் எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அநாமேதயமான இணையத் தளங்களை மூலமாகக் கொண்ட செய்திகள், அரசியல் கட்டுரைகள் யாழ் இணையத்தின் கறுப்புப்பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து பிரதிசெய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவை களவிதிகளின்படி யாழ் களத்தில் அனுமதிக்கப்படமாட்டா என்பதை கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Link to post
Share on other sites
சாத்திரியாரால் இணைக்கப்பட்ட திருமதி செல்வி எனும் கதை பின்வரும் காரணங்களால் நீக்கப்படுகின்றன.
 
தமிழீழ விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களை விமர்சிப்பதும், ஏளனப்படுத்துவதும், அவர்களின் தியாகங்களை மலினப்படுத்தி அவதூறு செய்வதும் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும் .
 
 
 
Link to post
Share on other sites
 • 3 weeks later...

இன்றைய... நட்சத்திரம். எனும் திரியில் இருந்து சீண்டல் கருத்து ஒன்றும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளன. நாற்சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட திரி ஒன்றும் நீக்கப்பட்டுள்ளது.

கள உறவுகள் சீண்டல், தனிநபர் தாக்குதல்களை தவிர்த்து தமக்கிடையே பண்பாகவும் ஆரோக்கியமாகவும் கருத்தாடல்களை மேற்கொள்ளவேண்டும்.

Link to post
Share on other sites

" யாழில் பெண்கள் செய்யும் காதல் திருவிளையாடல்கள்!" எனும் திரி அகற்றப்படுகின்றது. இத்தகைய நாலம் தர வார்த்தைப் பிரயோகங்கள் மிக்க, Gossip வகையைச் சார்ந்த பிற்போக்கான செய்திகளை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

 

செய்திகளை தகவல்களை ஓரளவுக்கேனும் நம்பிக்கை தரக்கூடிய, தரமான இணையத்தளங்களில் இருந்து யாழில் பிரசுரிக்கவும்.

Link to post
Share on other sites

 ஊப்புதினத்தில் செய்தியின் மூலம் இல்லாததால் அச்செய்தி மறைக்கப்படுகிறது.

Link to post
Share on other sites

ஒன்றுக்கு மேற்பட்ட திரிகளில் தலைப்புக்குச் சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன. கள உறவுகள் ஆரோக்கியமான முறையில் கருத்தாடலைத் தொடருங்கள்.

Link to post
Share on other sites

எரியும் தீயில் எண்ணெய் விடும் அரசியல் கொண்டதும், தவிர்க்கப்பட வேண்டிய சொற்களைக் கொண்டதுமான ஒரு கவிதை நீக்கப்படுகின்றது.

 

யாழில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை பற்றிய ஆரோக்கியமான விவாதம் வரவேற்கப்படும் அதே வேளை இன்னொரு இனத்தினை கேவலப்படுத்தும் எந்த ஒரு ஆக்கமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

 

நன்றி

Link to post
Share on other sites

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு! எனும் தலைப்பில் இருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

கள உறவுகள் தனிப்பட்ட நபர்களின் Facebook இல் பதியப்பட்ட கருத்துகளை யாழில் அவர்களது சம்மதம் இல்லாமல் பதிவதை தவிர்க்கவும்.

Link to post
Share on other sites

கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமும் திரியும் நீக்கப்படுகின்றது.

Link to post
Share on other sites

'மதுரையில் இசைபிரியா உள்ளிட்ட தமிழர்களுக்கு நீதீ கேட்டு போராட்டம் ஆரம்பம்' என்ற தலைப்பிலிருந்த்து அதனுடன் தொடர்பற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites

முழுமையாக இணைக்கப்படாத, பிற்போக்குத்தனமான ஒரு திரி நீக்கப்படுகின்றது.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • "Let China sleep, for when she wakes, she will shake the world."  -Napoleon Bonaparte 200 வருடத்துக்கு முதல் நெப்போலியன் சொன்னான் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கும் சீனாவை அப்படியே தூங்க விடுங்கள். அது எப்பொழுது முழித்து எழும்புகிறதோ அப்போது உலகம் தாங்காது என்றான்.சீனாவின் ரகன் இப்போது முழித்துக் கொண்டது.ஏனைய அதிகார பலம் மிக்க நாடுகளாய் இருந்தவர்கள் தூங்கிக் கொண்டார்கள்.மீண்டும் ஒரு பனிப் போர் ஆரம்பமாக இருக்கிறது. இந்து சமுத்திரத்தின் வாசலில் இருந்து இலங்கையோடு சேர்த்து இந்து சமுத்திரத்தின் குரல் வளையை இறுக்கப் பிடித்து விட்டது சீன கம்யூனிச பூதம். இனி இதிலிருந்து விடுபடுவதென்பது இலகுவல்ல.பண இராயதந்திரத்தின்(money diplomacy)மூலம் பல ஆசிய நாடுகளை வளைத்து விட்டது சீனத்து ரகன்.இந்தியா இப்போதாவது இலங்கையுடனான வெளி உறவுக்கு கொள்கைகளில் மாற்றதை கொண்டு வருமா கற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இந்திய வெளி உறவுக்கு கொள்கை  அயல் நாடுகளுடன் வலுவான வெளி உறவுகளை வளர்க்கவில்லை.மாறாக எதிரிகளையே சம்பாதித்தது மாத்திரம் இன்றி இந்து சமுத்திரத்தில் தனக்கு சாதகமாக ஈழத்து தமிழர்களின் தனி நாட்டுக்கு கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இந்தியாவுக்கு இது கூடவோர் பாதுகாப்பாக  நட்பு நாடக அமையும் என இந்தியா நினைக்காதது துர்பாக்கியமே.இந்தியா இப்போதாவது இலங்கையுடனான வெளி உறவுக்கு கொள்கைகளில் மாற்றதை கொண்டு வருமா கற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.ஆசியாவின் மிகப் பெரிய பொருளாதாரத்தையும் இராணுவக் கட் டமைப்பையும் கொண்ட கம்யூனிஸ்ட் சீனாவை இந்தியாவும் அமெரிக்காவும் இலகுவில் கையாள முடியுமா என்பது கேள்விக்கு குறியே. அனைத்து வல்லரசுகளும் தங்கள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்கின்றன.ஒருவரை ஒருவர் பார்த்து நீ கருப்பு  "The pot calling the kettle black" என்பது போல் தான் இவர்கள் செயல் பாடுகள் அமைக்கின்றன. அமெரிக்கா சீனாவை ஒரு வேட்டைக்காரன் காரன் என்கிறது(China is a predator) சீனா அமெரிக்காவை பார்த்து இரட்டை வேஷம் போடுகிறார்கள் என்கிறது.சீன இராயதந்திரம் இன்று ஓர் புதிய உலக ஒழுங்கை இந்து சமுத்திரத்தில் இருந்து கொரோனா அரசியல் பொருளாதாரம் வரை ஓர் புதிய உலக ஒழுங்கை திறந்து விட்டிருக்கிறது.இதை தான் பல அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். கடல் சார்ந்த அதிகாரத்தை யார் கட்டுப்பாடில் வைத்திருக்கிறார்களோ அவர்களே புவிசார் அரசியல் இராயதந்திரத்தில் வெற்றியடைகிறான் என அரசியல் சாணக்கியர் சுட்டிக் காட்டுவர். இப்படி எல்லாம் இருந்த போதிலும் சீனா அமெரிக்காவை மிஞ்ச முடியுமா என்ற கண்ணோட்டத்தில் அமெரிக்க ஹவர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அரசியல் விஞ்ஞானியுமாகிய Joseph Samuel Nye தனது பழைய உலகமும் புதிய கோட்ப்பாடுகளும்(The Old World’s New Roles) என்ற நூலிலே இந்த உதாரணத்தை சுட்டிக் காட்டுகிறார்.கிரேக்க பெரும் யுத்ததமான பெலோபொனேசியப் போர் என்பது கிரேக்க நகர அரசு அமைப்பு இரண்டரை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தன்னைத் தானே  அழித்துக் கொண்ட பெரும் மோதலாகும்.  அதற்கு என்ன காரணம்?  பெலோபொன்னேசியப் போரின் சிறந்த வரலாற்றாசிரியரான துசிடிடிஸ், ஏதென்ஸின் சக்தியின் எழுச்சி மற்றும் ஸ்பார்டாவில் அது உருவாக்கிய அச்சம் என்று கூறினார். ஆகவே அமெரிக்காவின் பொருளாதார இராணுவ பலத்தை இப்போதைக்கு சீனாவால் கடக்க முடியாதெனவும் சீனாவின் எழுச்சியானது பல ஏனைய சக்தி மிக்க நாடுகளுக்கு ஒர் வகைப் பயத்தை உண்டாக்கி இருக்கிறது என்று கூறினார்.இதேபோல் பத்தொன்பதாம் நூற்ராண்டில் பெரிய பிரித்தானியாயும் ஜெர்மனியும் தங்கள் வளர்ச்சியில் மாறி மாறியோர் அச்ச உணர்வோடு இருந்தனர். இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டிருக்கும் தனி நலன் சார்ந்த நாடுகளின் இந்த அதிகாரப் போட்டியானது ஈழத் தமிழர் அரசியலும் ஒரு மாற்றத்தை ஒரு பாதையும் திறந்து விட்டிருக்கிறது.இதை தமிழர் தலைமை எவ்வாறு புதிய உலக ஒழுங்குகளுக்கு ஏற்ப கையாளப் போகின்றது என்பதில் இருந்தே இதன் நகர்வும் முடிவும் தங்கி இருக்கிறது.இறுதியாக நெப்போலியன் சொன்னது போல் முழித்துக் கொண்ட சீனாவால் உலகம் ஆடிப் போய் தான் இருக்கிறது அந்தக் கொரோனாவோடு சேர்த்தே. பா.உதயன் ✍️  
  • பா.உ கோ.கருணாகரம் அவர்களின் முயற்சியில் கரடியனாறு கரடியன்குளம் மக்களின் காணி விடயத்திற்குத் தீர்வு! Dicksith   மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பிரதேச மக்களின் வேண்டுகோளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் நேரடி களவிஜயத்தின் மூலம் அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு மக்களுடனான கலந்துரையாலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் (29) கரடியனாறு கரடியன்குளம் பொதுக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் வில்வரெட்ணம், விவசாயப் பண்ணை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.மேற்படி பிரதேசத்தில் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற மக்களிடம் உள்ள அக்காணிகளுக்கான உறுதிப்பத்திரம், சுவர்ணபூமி திட்டத்தினால் வழங்கப்பட்ட பத்திரங்கள் போன்ற ஆவணங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. பின்னர் மேற்படி பிரதேசத்திலுள்ள காணிகள் விவசாயப் பண்ணைக்குரியனவே என்றும் இருப்பினும், மனிதாபிமான அடிப்படையில் தற்போது அவ்விடங்களில் உரிய பத்திரங்களுடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுபவர்களுக்கு அவர்களிடமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் அவர்களுக்கான உரிய காணிகள் சட்டமுறையில் வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. அனைத்திற்கும் மேலாக அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் பற்றிப் பிரதேச செயலாளரால் வலியுறுத்திக் கூறப்பட்டமையினையும் மக்கள் ஏற்றுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது உரிய காணிகளையுடையவர்கள் அவ்விடத்தில் பிரசன்னமாயிருந்து அளவீட்டு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு, அவர்களுக்கான காணிகளை உறுதிப்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது.இறுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இவ்விடயத்தினை உரிய நடவடிக்கைகள் மூலம் தீர்வு பெற்றுத் தந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பிரதேச மக்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.                 http://www.battinews.com/2020/10/blog-post_253.html
  • வட மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று! 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் உடுவிலில் தாய் மற்றும் 10 வயதுடைய மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நேற்று பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் அவை பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு இன்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, வெள்ளவத்தையில் இயங்கும் யாழ்.ஹோட்டல் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/93315  
  • இலங்கையில் கொரோனா பரவல் அதிகமாகும்போது அது ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டு அல்லாடும் மக்களை இன்னும் அதிகம் பாதிக்கும்.  உதவி தேவையானவர்களுக்கு காலத்துக்கேற்ற சேவையை உடனே செய்வதற்கு நன்றிகள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.