Jump to content

ஷோபாசக்தி பதில்கள்


Recommended Posts

ஷோபாசக்தி பதில்கள்

 

shoba-big.jpg

 

 

 

ஈஸ், துபாய்

கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை?

பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ். 

கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா?

பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன். 

1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் சிந்திப் போராடிக்கொண்டிருக்கும் போது தப்பியோடும் கோழைகளே" என்பது மாதிரியிருக்கும் அந்தக் கவிதைகள். கவிஞர் செழியன் எழுதிய 'பெர்லினுக்கு ஒரு கடிதம்' என்ற கவிதை அப்போது மிகவும் புகழ் பெற்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ். போராளியான செழியனின் கவிதை 'எம்மவர் குருதியின் சுவடுகள் / உறைந்துபோகும் முன்னரே /எங்கள் தேசத்து இளைஞர்களின் / சடலங்களின் மேல் நடந்து / பெர்லின் விமான நிலையத்தில் / வந்து இறங்கும் /அகதிகள் கூட்டத்தில் / என்னைத் தேடி நீ அலையாதே" என்பதாக முடியும். அந்தக் கவிதை அப்போது எனக்குக் கொள்கை விளக்கக் கையேடு. இப்போது நான் பாரிஸில், செழியன் கனடாவில். 

1986 பிற்பகுதியில் நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னும் புலம்பெயருவது என்ற சிந்தனையே என்னிடமிருக்கவில்லை. அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இராணுவத்தால் அபாயம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தால் ஒரு சில பிரச்சினைகள் எனக்கு இருந்தன. நான் என்னுடைய இயக்க வாழ்வின் கடைசி எட்டு மாதங்கள் ஞானம் அம்மானின் அணியில் இருந்தேன். ஞானம் அம்மான் இயக்கத்திலிருந்து வெளியேறிய சில நாட்களிலேயே நானும் வெளியேறினேன். ஞானம் அம்மானைக் கிட்டு பிடித்துக் கொண்டு போக முயன்ற போது ஞானம் அம்மான் சயனைட் அருந்தி மரணமானார். அப்போது ஞானம் அம்மானுக்கு 23 வயது. எனக்குப் பத்தொன்பது வயது. ஞானம் அம்மானின் இயற் பெயர் காண்டீபன். 'முறிந்த பனை' நூலில் அவரின் மரணம் குறித்த பதிவுகளுள்ளன. எனக்கும் புலிகளால் பிரச்சினையிருந்தது. அவர்களது சிறையில் கொஞ்ச நாட்கள் அடைபட்டுக் கிடந்தேன். புலிகளின் அப்போதைய ஆயுதப் பொறுப்பாளர் ஜொனியின் பரிந்துரையால் விடுதலையானேன். அப்போதும் என்ன இடர் நேர்ந்தாலும் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடுதான் இருந்தேன். எனது முன்னைநாள் தோழர்களால் தொந்தரவு இருப்பினும் அது கொலை அளவிற்கு போகாது என்பது எனது கணிப்பு. 

சில மாதங்களிலேயே இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் யுத்தம் தொடங்கிச் சில நாட்களிலேயே புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கினார்கள். நாட்டுக்குள் அமைதிப்படை அட்டகாசம் செய்தது. நான் இயக்கத்திலிருந்து விலகியிருந்தது அமைதிப் படைக்கு செய்தியல்ல. நான் இயக்கத்தில் இருந்தேன் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். இரண்டு அதிகாலைகளில் என் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் தப்பிவிட்டேன். இந்திய அமைதிப்படையுடன் தேடுதல் வேட்டையில் 'திறீ ஸ்டார்' என அழைக்கப்பட்ட தமிழ்ப் போராளிக் குழுக்களும் இணைந்துவிட்டார்கள். இந்தியனை ஏமாற்றினாலும் நம்முடைய பொடியளிடம் தப்பிக்க முடியாது என்று நான் அஞ்சினேன். புலம் பெயர்ந்து அகதியாகச் செல்லும் முடிவை எடுத்தேன். என் அச்சம் துயரமான முறையில் நிரூபணமானது. நான் எனது கிராமத்திலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு வந்து சேர்ந்த சில நாட்களில் எனது அயல்வீட்டவனும் என்னுடன் புலிகள் இயக்கத்தில் இருந்தவனும் எனது உற்ற நண்பனுமான கொடி என்ற ரவிக்குமார் இந்திய அமைதிப்படையோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் உயிருடன் வாகனத்தில் கட்டியிழுக்கப்பட்டு கொல்லப்பட்டான் என்ற சேதி என்னை வந்தடைந்தது. கவிஞர் செழியன் புலிகளால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். நான் இந்திய அமைதிகாக்கும் படையால் துரத்தப்பட்டேன். 

அகதி அடையாளத்தை விரும்புகிறீர்களா எனக் கேட்டீர்கள். வேறு எந்த வழியும் அப்போது என் முன்னால் இருக்கவில்லை, இப்போதுமில்லை.

முத்துகிருஷ்ணன் தனூஷ்கோடி

கேள்வி : திரு ஷோபா சக்தி அவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்கு விடுதலைப்புலிகளை பற்றியே குற்றம் சாற்றிக்கொண்டிருப்பது? இந்த நேரத்தில் பழைய கதைகள் தேவையா? ராஜபக்ஷேவை பற்றி எப்போது அதிகமாக பேச போகிறீர்கள். 

பதில் : அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் சமூகத்தில் கட்டமைத்து வைத்திருந்த ஒரு பாஸிச அரசியல் போக்கு. அந்தப் போக்கு நமது சமூகத்தை ஆழ ஊடுருவிச் சிதைத்துள்ளது. பிரபாகரனின் மறைவுடனோ புலிகளின் இன்மையுடனோ இந்த அரசியல் போக்கு மறைந்துவிடவில்லை. அந்தப் போக்கு குறிப்பாகப் புலம் பெயர் தேசங்களில் அவிழ்த்துப்போட்டு ஆடுகிறது. அந்தப் பாஸிசக் கலாசாரத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறையும்வரை நாம் அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. எனது பங்கிற்கு நான் ஒரு ஆணியை அளிக்க விரும்புகிறேன். 

'ராஜபக்சவைப் பற்றி எப்போது அதிகமாகப் பேசப் போகிறீர்கள்?' எனக் கேட்டிருக்கிறீர்கள். அன்பான தோழா! இலங்கை அரசின் இனவாதத்தையும் மனித உரிமைகள் மீறல்களையும் குறித்து இலக்கியத்தில் என்னைவிட அதிகம் எழுதிய இன்னொருவரைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச்சித்திரங்களாகவும் நாடகமாகவும் திரைப்படமாகவும் நான் கடந்த பதினைந்து வருடங்களாக அவற்றை விடாமல் எழுதிவருகிறேன். எனக்கு அடுத்ததாக அதிகம் எழுதியவரை நீங்கள் காட்டினாலும் அவர் நான் எழுதியவற்றில் பாதியளவுதான் எழுதியிருப்பார் அல்லவா? 

இலங்கை அரசின் பேரினவாதம் குறித்து பிறமொழி ஊடகங்களிலும் என்னளவிற்கு பேசிய இலக்கிய எழுத்தாளர் எவரும் இல்லை என்பதும் உண்மையல்லவா. நேரமிருந்தால் எனது வலைப்பக்கத்தில் 'நேர்காணல்கள்' பகுதிக்குச் சென்று படித்துப்பாருங்கள். அனைத்தும் அங்கே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. சிங்கள இதழியலாளர்களால் வெளியிடப்படும் 'லக்பீம' பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலின் தலைப்பு: Can Sinhalese live in peace when minorities suffer? 

இலங்கை அரசு குறித்தும் ராஜபக்ச குறித்தும் நான் சொல்பவற்றைவிட நான் ஒரு வார்த்தை புலிகள் குறித்துப் பேசினால் அதுதான் புலியாதரவாளர்களை எரிச்சல்படுத்துகிறது. என்னுடைய பிரபலமான "நான் புலிகளை நூறு சதவீதம் எதிர்க்கிறேன், இலங்கை அரசை இருநூறு சதவீதம் எதிர்க்கிறேன்" என்ற பிரகடனம் இணையங்களில் வாழைப்பழ காமெடி ரேஞ்சுக்குப் படாதபாடு படுகிறது. குற்றம் என்னிடமில்லைத் தோழா. நீ இலங்கை அரசை விமர்சிக்கிறாயோ இல்லையோ புலிகளைப் பற்றிப் பேசாதே என்ற மன அவசம் தான் இவ்வாறு சாரமற்ற கேள்விகளை உங்களைக் கேட்க வைக்கிறது. 

சென்ற மாதம் இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நான் நிகழ்த்திய உரை கீழேயுள்ள தொடுப்பிலுள்ளது. பேஸ்புக்கிலும் டிவிட்டிரிலும் பிரச்சினையைப் பேசுவதைவிட அதைச் சம்மந்தப்பட்டவர்கள் முன்னிலையில் பேசுவது முக்கியமானதல்லவா? நிதானமாக இந்த உரையைப் படியுங்கள். ஏதாவது கேள்வியிருந்தால் வல்லினத்திற்கு அனுப்பிவையுங்கள். அடுத்த இதழில் பதிலளிக்கிறேன். எனது உரை: http://www.shobasakthi.com/shobasakthi/?p=881

வேலாயுதம் (பாஸ்கி), தமிழ்நாடு

கேள்வி : சகோதரரே, நான் உங்கள் வாசகன். அதாவது சிறுகதைக்கு. உங்கள் 'ம்' நாவலை வாசித்து உங்களை வாசிப்பது வீண் என்று நினைத்தேன். எவ்வளவு கொடூரமான மனம் உங்களுக்கு. பெண்ணியம் பேசும் நீங்கள் உங்கள் நாவலில் ஒரு சிறுமி தன் தகப்பனால் கற்பிணியாக்கப்படுவதை நியாயப்படுத்துகிறீர்கள். இதில் உங்கள் அரசியல் என்ன? 

பதில் : வணக்கம் சகோதரா, நான் த. ஜெயகாந்தனின் இரண்டு பழக்கங்களைக் கடுமையாகப் பின்பற்றி வந்தேன். தன்னுடைய புனைகதைகள் குறித்து வரும் விமர்சனங்களிற்கு ஆசான் பதிலளிப்பதில்லை. "என்னுடைய கதை சொல்லாத எதை நான் கதைக்கு வெளியில் சொல்லிவிட முடியும்" என்பார் ஆசான். நானும் ஆசானைப் பின்பற்றி வருகிறேன். ஒரேயொருமுறை மட்டும் யமுனா ராஜேந்திரன் கொடுத்த ஆய்க்கினையால் 'ம்' நாவல் குறித்துச் சிலவற்றை அவருக்குச் சொல்ல நேரிட்டது. யமுனாவுடைய விமர்சனமும் உங்களது கேள்வியும் தற்செயலாக ஒரேமாதிரியாக அமைந்துவிட்டதால் அவருக்குச் சொன்ன பதிலையே உங்களுக்குமான பதிலாக இங்கே பதிவு செய்கிறேன். 

"ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற குழந்தையை கர்ப்பமாக்கியதனை, அப்பெண் குழந்தையின் கண்களில் காதல் தெரிவதை எழுதுகின்ற ஷோவின் 'ம்' நாவலது சித்திரிப்பும் குழந்தைகள் மீதான காதல் எனும் அளவில் சமூக விரோதமானதுதான். அதைச் சித்தரிக்கும் ஷோபாசக்தியும் சமூகவிரோதிதான்" எனத் தீர்ப்பிடுகிறார் யமுனா. 

யமுனாவோடு இலக்கியம் பேசிப் புண்ணியமில்லை. யமுனாவுக்குப் புரிந்த மொழியிலேயே இதை விளக்க முயற்சிக்கிறேன். பிரதாப் போத்தனும் ஷோபாவும் நடித்த 'மூடுபனி' என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். அத்திரைப்படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாகக் கொலை செய்வான். அப்படிக் கொலை செய்வதை அவன் நியாயம் என்றும் நம்புவான். அவன் கொலைகாரனாவதற்குரிய புறச் சூழல்களையும் அவனின் ஆழ்மனச் சிக்கல்களையும் இயக்குநர் திரைப்படத்தின் அடிநாதமாகச் சித்திரித்தும் காட்டியிருப்பார். அதற்காகப் படத்தை உருவாக்கிய பாலு மகேந்திரா பாலியல் தொழிலாளர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்துகிறார் என்றோ பாலு மகேந்திரா ஒரு சமூகவிரோதியென்றோ எந்த முட்டாளாவது சொல்வானா. 

நல்லவன் X கெட்டவன், நன்மை X தீமை, தியாகம் X துரோகம் போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைத்துத் தட்டையாக இலக்கியப் பிரதிகளை உருவாக்கும் இலக்கியமுறைமை விக்டர் ஹியுகோ, பால்சாக் காலத்தைச் சேர்ந்தவை. இன்றைய இலக்கியம் பல்வேறு அடுக்குகளையும் சிடுக்குகளையும் கலைத்துப்போட்டு இந்த இருமை எதிர்வுகளைக் கடந்து வாசகர்களோடு பேச முயல்வது. எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் திரைப்பட அரங்கினுள் நம்பியாரைத் தும்பு பறக்கத் திட்டுவதுண்டு. அந்த இரசிக மனோநிலையில் நவீன இலக்கியப் பிரதிகளை அணுகினால் இப்படியான பாரதூரமான விமர்சன விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. (எதிர்ப்பதும் எமது மரபு/ சத்தியக்கடதாசி.com/ 2008)

பி.கு: ஆசானிடமிருந்து பின்பற்றிய இரண்டாவது பழக்கத்தை நிறுத்திப் பத்து வருடங்களாகின்றன. 

கிருஷ்ணன், சென்னை

கேள்வி : ஷோபா, கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்த நான் இவ்வருடம் தமிழகம் வந்தேன். அதுவரை எனக்கு இணைய வாசிப்பு மட்டும்தான். உங்களின் அகப்பக்கம் பார்ப்பதுண்டு. இங்குத் தமிழக நண்பர்கள் தமிழில் முக்கியமான எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என சொல்கிறார். ஒவ்வொருவரையும் வாசித்தேன். எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில் : அன்பான கிருஷ்ணன், சாரு நிவேதிதா என்கிற புதுமையான கதைசொல்லி இல்லாமற்போய் 10 வருடங்களாகின்றன. வெறும் இலக்கிய வம்புகளையும் பாலியல் அறியாமைகளையும் அவர் இப்போது 'கோணல்' பக்கங்களாக எழுதி அதையே தொகுத்து நாவல் என்கிறார். அவரது கடைசி நாவலான 'தேகம்' அதனது பின்னட்டையில் சொல்லப்படுவதுபோல வாதைகளின் நாவலல்ல. அந்த நாவலே வாதைதான். தமிழ் இலக்கிய உலகம் சரியான எதிர்வினையை தொடர்ந்து அவருக்கு ஆற்றிவருக்கிறது... மௌனம்! சாரு இந்த இருள்வெளியிலிருந்து மீளவேண்டும். தல மலைக்கு மாலை போட்டிருக்குதாம். அய்யப்பனாவது நல்ல புத்தியை வழங்கட்டும். சாரு முதலில் அவரைச் சூழவுள்ள அரைகுறை அல்லக்கைககளை விரட்டிவிட்டாலே பாதி தேறிவிடுவார். 

என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகன் எழுதும் இலக்கியம் குறித்த கட்டுரைகள் அவரது புனைகதைகளைவிட முக்கியமானவை என்பேன். அவரளவிற்கு நுணுகி ஆராய்ந்து இலக்கியத்தின் அழகியல் கூறுகளையும் இலக்கிய நுட்பங்களையும் இலக்கியங்களின் செல்நெறியையும் எழுதிய இன்னொரு ஆளுமை தமிழில் கிடையாது. மனிதர்களை அவதானிப்பதில் அவர் 'எந்திரன்' போலயிருக்கிறார். கிடைக்கும் ஓர் இடைவெளியில் வித்தியாசம் வித்தியாசமான மனிதர்கள் குறித்துப் பலவற்றைக் கிரகித்துவிடுகிறார். "பொதுவாக ஊர்ச் சண்டியர்களிடம் ஒரு சிறிய உடல் ஊனம் இருக்கும்" என்று ஒருமுறை எழுதியிருப்பார்... அது கல்வெட்டு. இந்த நுட்பமான பார்வைதான் இலக்கிய அழகியலின் அடிப்படை.

எஸ்.ராவின் எழுத்துகளைப் படிக்கும்போது ஆஸ்பத்திரியில் யாரோ நோயாளியைப் பார்க்கச் சென்றது போலவே எனக்கொரு பீலிங். என்னுடைய வாசிப்பு அலைவரிசையில் எஸ்.ரா பொருந்துவதாகயில்லை. ஆனால் இன்று மிக அதிக இளைய வாசகர்களைப் பெற்றிருப்பவர் எஸ்.ரா தான். 'பாரிஸ் அறிவாலயம்' புத்தகக் கடையில் ஒரு நாளைக்குப் பத்துப் பேராவது எஸ்.ராவின் நூல்களைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இயக்குனர் சசி எனக்கு எஸ்.ராவின் 'கதாவிலாசம்' நூலைப் பரிசளித்துவிட்டு அந்தப் புத்தகம் குறித்து இரண்டு மணிநேரங்கள் பரவசத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுதிவிட முடியாதல்லவா. டால்ஸ்டாயின் எழுத்துகளைப் பிடிக்காதவர்களைக் கூட நான் சந்தித்திருக்கிறேன். பிடிக்கவில்லையானால் வேறு எழுத்தாளர்களைத் தேடிப் படியுங்கள். புனைகதையாளர்களில் என்னுடைய வாசிப்பு அடிப்படையிலான எளிய பரிந்துரை: கு.அழகிரிசாமி, இலங்கையர்கோன், ப.சிங்காரம், பூமணி, கே.டானியல், பிரேம் - ரமேஷ், எஸ்.பொ, சு.வெங்கடேசன் (காவல் கோட்டம்), ஜெயகாந்தன், ஆதவன் தீட்சண்யா, தோப்பில் முகமது மீரான், ச. தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன், குமார செல்வா. 

இவர்களும் பிடிக்கவில்லையெனில் சொல்லுங்கள் இன்னொரு பட்டியல் தருகிறேன். தமிழ் இலக்கியம் பாலையல்ல, அது நெய்தல். முத்துகள், வலம்புரிச் சங்குகள், தங்க மீன்கள், சுறாக்கள், திமிங்கலங்கள் இவ்விடம் கிடைக்கும்.

நோர் ரஷிடா, மலேசியா

கேள்வி : உலகில் எத்தனை நாடுகளுக்குப் பயணித்துள்ளீர்கள் ஷோபா, உங்களை கவர்ந்த நாடு எது? ஏன்? மலேசியா வந்துள்ளீர்களா? ஷோபா, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூற முடியுமா? உறவுகள்... விருப்பங்கள்...

பதில் : ஸ்கண்டிநேவியா தவிர்த்து முழு மேற்கு அய்ரோப்பிய நாடுகளுக்கும் கிழக்கு அய்ரோப்பாவில் சேர்பியா, செக் ஆகிய நாடுகளிற்கும் கியூபா, கம்போடியா, லாவோஸ், சிங்கப்பூர், ஹொங்கொங், ஆகிய நாடுகளிற்கும் பயணித்திருக்கிறேன். தாய்லாந்தில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். மலேசியாவிற்கு மூன்று தடவைகள் வந்துள்ளேன். கடைசித் தடவை 'வல்லினம்' நவீனின் அழைப்பில் வந்தேன். அந்தப் பயணத்தில் நானும் சிங்கை இளங்கோவனும் மஹாத்மனும் செய்த நடுநிசி அமர்க்களத்தில் ஜலான் மஸ்ஜிட் இந்தியா ஏரியாவே சும்மா அதிர்ந்துதில்ல!

ஒருமுறை விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகள் மாநாடு ஒன்றிற்கு சென்னையிலிருந்து நானும் நண்பர்களும் ரயிலில் பயணப்பட்டோம். மதியவேளை, கடுமையான வெப்பம். ரயில் பெட்டிக்குள் காலோடு கால் சேர்த்து வைக்க முடியாதளவிற்கு கடும் நெரிசல். நரகத்தை நோக்கிய பயணம்போல அந்தப் பயணம் இருந்தது. ஓடும் ரயிலுக்குள் ஒரு குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. பயணிகளில் ஒருவர் குழந்தையின் தாயாரிடம் ஆதுரத்துடன் விசாரிக்க, இன்னொருவர் குழந்தைக்கு விசிறிவிட, இன்னொரு பயணி தனது பையிலிருந்து வேட்டியை எடுத்து ரயிலுக்குள்ளேயே குழந்தைக்கு ஒரு தூளி கட்ட அந்த ரயில் பெட்டியே அந்தக் குழந்தையைத் தாலாட்டியது. இத்தகையவொரு காட்சியை வேறெந்த நிலத்தில் காண முடியும்! விழுப்புரத்திற்கு ரயில் வந்தபோது மழை கொட்டிக்கொண்டிருந்தது. தமிழகம் அளவிற்கு என்னைக் கவர்ந்த இன்னொரு நாடு இல்லை. தமிழக மக்களின் சகிப்புத்தன்மையையும் விட்டுக் கொடுத்துப் போகும் இயல்பையும் பார்த்து நான் வியந்து நிற்பது தெளிவதற்குள் எனக்கு விசா முடிந்துவிடுகிறது. ஏதோவொருவகையில் காந்தியாரையும் பெரியாரையும் தமிழகத்தின் கூட்டு நனவிலி மனது தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. 

தனிப்பட்ட வாழ்க்கை என்று குறிப்பாக ஏதுமில்லை. 'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பார்களே அதுபோல வாழ்க்கை கழிகிறது. தனிப்பட்ட கவலைகள், ஏமாற்றங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. எப்போதும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து உள்ளத்தில் நிறுத்தி உற்சாகமான மனநிலையிலேயே என்னை வைத்திருப்பேன். சலிப்பு, விரக்தி என்றெல்லாம் நூல்களில் படித்துள்ளேனே தவிர ஒருபோதும் உணர்ந்ததில்லை. எனது எழுத்தாற்றல் என்னைக் கைவிடாதவரை என்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நல்லாசிரியர்களையும், உலகம் முழுவதும் அருமையான நண்பர்களையும், எளிதில் வெற்றிகொள்ளக் கூடிய நோஞ்சானான எதிரிகளையும் பெற்றிருக்கிறேன். வேறென்ன வேண்டும்!

 

http://www.vallinam.com.my/issue32/shobabathilgal.html

Link to comment
Share on other sites

ஷோபாசக்தி பதில்கள்

 

shoba-big.jpg

 

 

 

 அந்தப் பாஸிசக் கலாசாரத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறையும்வரை நாம் அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. எனது பங்கிற்கு நான் ஒரு ஆணியை அளிக்க விரும்புகிறேன். 

 

சோபா சக்தி அவர்களே உங்கள் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கும் போது , தனமானத்தமிழர்களாகிய எங்களது போராட்டம் எந்த விதமான இடையூறுகளும் இன்றி ,எமக்கு தேவையான சுதந்திரம் என்னும் மகுடத்தை நாம் பெற வாய்ப்புகள் கிட்டும் .............. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இராணுவத்தால் அபாயம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தால் ஒரு சில பிரச்சினைகள் எனக்கு இருந்தன. 

அந்த ஒரு சில பிரச்சினைகள் என்ன?? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அதுசரி ஷோபாசக்திக்கு இப்ப என்ன பிரச்சனை?
இவர் கதை ஆசிரியரா?
அல்லது....சமூகசீர்திருத்தவாதியா? அல்லது மாற்றுக்கருத்தாளரா? மாற்றுக்கருத்தாளராயின் இன்றைய காலகட்டம் இவருக்கு உகந்தது.
 
இதைவிடுத்து.......அவங்களும் சரியில்லை(சிங்களவர்) இவங்களும் சரியில்லை(புலியள்) எண்டு நெடுக மாரடிக்கிறதும் சரியில்லை... :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எதோ ஆணி கடை  முதலாளி மாதிரி ... ஆணி அடிக்கிறது சாணி அடிக்கிறது ??
பிழைப்பே சொந்த இனத்தை விற்று நடக்குது.
ஆங்கிலத்தில் அவன் யாரோ எழுதுவதையும் ..... தமிழில் எண்டகனவெ இருந்ததையும் குளைச்சு 2-3 புத்தகம் எழுதினால் ? இதல்லாம் இருக்குதா இலையா என்பதே ஊருக்கு தெரியாது.
நாங்கள் புத்தகம் வாசிப்பவர்கள் ...
என்று தமக்கு தாமே விளம்பரம் செய்யும் ஒன்றிரண்டு .... சுய விளம்பரதாரிகளை தவிர இவரை யாரும் கணக்கிலேயே எடுப்பதில்லை.
 
நீங்கள் ஆணி அடிக்கிறது ..............
 
கை சும்மா இருக்க கேட்காவிட்டால் .... போய்.....
வாற போற பெண்களை கையிலே பிடித்து இழுக்கும் காவலி இன விடுதலை போரை பற்றி பேசுது....
 
முதலில் உங்களை திருத்துங்கள் முடிந்தால்.
 
30 வருடம் இந்த இழி பிடிச்ச இனத்தை வைத்து நடத்திய போரை திருத்தும் வேலையை. உங்கள் படுக்கை அறைக்குள்ளேயே வைத்துகொள்ளுங்கள்.
 
முயல் பிடிக்கிற நாய்க்கு .............. ஒரு முகம் இருக்கோணும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவற்ற வேடம் கலைஞ்சு ரெம்பக் காலமாச்சு. இப்ப இப்படி.. இடைவெளிவிட்டு விட்டுத்தான் வாறார் போறார். என்ன அவருக்கு சில இலவச அன்னக்காவடிகள். அதுகள் தங்களின் பெயரை.. அதுக்கால வெளில கொணந்திடுவம்.. என்று தான். உதுகள் திருந்தப் போறதே இல்லை. இப்ப இவரோட.. கூட்டு.. முகநூல் தூசணப் புகழ்.. லீனா மணிமேகலை. கொஞ்ச நாள் தமிழச்சியை உசுப்பேத்தி.. பெரியார் புரட்சி என்று..ஒரு பெண்ணைக் கொண்டே.. பெண்களின் நிர்வாணப்படத்தை இணையத்தில் ஏற்றி புரட்சி செய்து களித்தவர்கள் இவர்கள். பேசாம.. ஒரு போர்ன் சைட்டை திறந்து நடத்தி இருந்தாலும் இந்தளவுக்கு நல்ல.. வரமானத்துக்கு வருமானம்.. பெரியாருக்கு பெரியார் புகழ்... என்று ஆகி இருக்கும். பாவம் பெரியார். :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தி பதில்கள்

 

எனது எழுத்தாற்றல் என்னைக் கைவிடாதவரை என்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை.

 

 

புலிகள் இருந்தவரை தான் உங்களுக்கு சோறு.......

இனி................???

புசத்தல் மட்டும் தான் :(  :(  :(

Link to comment
Share on other sites

சோபாவை வாசிக்காதவர்களும் விளங்காதவர்களும் இங்கு அதிகம் .புலிகளை அவர் விமர்சிப்பதால் எதையும் வாசிக்காமலே வாந்தி எடுக்கின்றார்கள்

உந்த விமர்சனங்களை எல்லாம் அவர் தாண்டி  பலவருடங்கள் ஆகிவிட்டது .சோபாவின் எழுத்தின் உயரம்  நீங்கள் எட்டமுடியாத இடத்திற்கு போய்விட்டது .

Link to comment
Share on other sites

சோபா சக்தி: இலக்கிய ஆளுமையும் சிறந்த மொழியாளுமையும் கொண்ட மிகச் சிறந்த எழுத்தாளர். புலம் பெயர் தமிழ் இலக்கிய சூழலில் மிகவும் கவனிக்கத்தக்கவர். வாசகர்களை பல நுண்ணிய அனுபவங்களினூடாக பயணம் செய்ய வைத்து பல புரிதல்களை ஏற்படுத்த வல்லவர். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அநேகமாக இவரது அனைத்து ஆக்கங்களையும், நாவல்களையும் வாசித்துள்ளேன். இன்றுவரைக்கும்  எனக்குதமிழில் பிடித்த நாவல்களில் முதல் இடங்களில் 'ம்' இருக்கின்றது.

 

அதே நேரத்தில், இலக்கியம் கொடுத்த ஒளிவட்டம் ஒன்றே போதும் தன் தனி மனித அயோக்கியத்தனங்களையும், மன வக்கிரங்களையும் நியாயப்படுத்தி விட முடியும் என்று கனவு காண்கின்றவர். மிகவும் அயோக்கியத்தனமான அரசியலையும், மக்கள் விடுதலை தொடர்பான மிகவும் குளறுபடியான கொள்கைகளையும் கொண்ட ஒரு மனிதர்.  இவரது 'மாற்று அரசியலின்' கோர முகம் கருணாவின் பிரிவைக் கொண்டாடிய காலகட்டத்தில் தெள்ளத் தெளிவாக புலனாகியது. படுகொலை அரசியலை வெறுத்து, அதற்கு பாசிச வடிவ பொருள் கொடுத்து  எதிர்த்து வந்த இவரே கருணா புலிகளில் இருந்து பிரிந்து வந்த பின் அவருக்கு புனிதராக பட்டம் சூட்டி (அது வரைக்கும் அவரையும் பாசிசவாதியாக இனம் கண்டவர்) தூக்கிப் பிடித்து கருணா தன் மக்கள் மீது செய்த அனைத்து அநியாயங்களையும் நியாயப்படுத்தியவர். இதில், கருணா தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பெண் தொண்டர்களை கிழக்கு மாகாணத்தில் கடத்தி பாலியல் வல்லுறவுப் படுத்தி கொலை செய்த செயலையும் நியாயப்படுத்த முனைந்தமையும் அடங்கும்.

 

 

புலி எதிர்ப்பு என்ற ஒன்றுக்குள் தமிழ் மக்களின் அனைத்து போராட்டங்களையும் பயங்கரவாத முத்திரை குத்துவதில் சிங்கள பேரினவாதத்தினை விட முனைப்பாக இருந்து அதன் மூலம் தன் அரசியலை தக்க வைக்கும் ஒரு அயோக்கியராகத்தான் ஷோபா சக்தி யின் இன்னொரு முகம் இருக்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

மாலதியின் எதிர்வினை குறித்துச் சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. ஈழப்போராட்ட வரலாறு குறித்த அவரது அறியாமையை அவரது கட்டுரை நிரூபணம் மட்டுமே செய்துள்ளது. அறியாமையுடன் இருக்க அவருக்கு உரிமையுள்ளது.

புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்களை நான் கண்டிப்பதில்லை என்று மாலதி சொல்வதெல்லாம் அவர் எனது எழுத்துகளைப் படிக்காமல் எழுத்துத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதால் வந்த வினை. மற்றைய இயக்கங்களைக் கண்டித்து எத்தனை நூறு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், எத்தனை அரங்குகளில் விவாதங்களை நடத்தியிருக்கிறேன் என்றெல்லாம் பட்டியல் நான் தரப்போவதில்லை. ‘கூகுள்உங்களோடிருக்கட்டும்.

புலிக் கருத்தியலை அழிக்கவேண்டும் என நான் கூறுவதை புலிகளை உடல்ரீதியாக அழிக்கவேண்டும் என நான் கூறுவதாக மாலதி கருதிக்கொள்கிறார். இந்துத்துவக் கருத்தியலை அழிக்க வேண்டுமெனச் சொன்னால் ஆர்.எஸ். எஸ். உறுப்பினர்களையெல்லாம் கொல்லவேண்டுமென்று பொருளாகாது. தலிபானியத்தை எதிர்ப்பது அமெரிக்க ஆதரவு என்றும் ஆகிவிடாது.

இலங்கை அரசின் மீது சர்வதேச சமூகம் சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டுமென்று ஷோபா சக்தி போன்றவர்கள் பேசியதில்லைஎன்று மாலதி சொல்வதும் சரியற்றது. அதுகுறித்தெல்லாம் நிறையப் பேசிவிட்டேன். ராஜபக்ச அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசு என்ற எனது உறுதியான கருத்தை பலமுறைகள் எழுதிவிட்டேன். இதில் என்ன பிரச்சினையென்றால் சர்வதேச சமூகம் ஒருபோதுமே சுதந்திரமான விசாரணையை நடத்தப்போவதில்லை என்பதுதான். வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஏதாவது அற்புதங்கள் நிகழ்ந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்புக் குழுவின்முன் நடத்தப்பட வேண்டுமென்று இதுவரை ஷோபாசக்தி போன்றவர்கள் பேசியதில்லை‘. என்று மாலதி சொல்வது மட்டுமே கொஞ்சம் பொருட்படுத்தி பதிலளிக்கக்கூடியது. இந்த பொதுவாக்கெடுப்பு , நாடுகடந்த அரசாங்கம் போன்ற கோமாளிக் கூத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. சிறுபான்மையினங்களுக்கான அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அதற்கான முதற்படி 13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வருவதே என்பதே எனது நிலைப்பாடு. முப்பது வருட அனுபவத்தில் வந்தடைந்த நிலைப்பாடு. இல்லை தமிழீழம்தான் முடிந்த முடிவென்று மாலதி நின்றால் அதையும் புரிந்துகொள்கிறேன். தமிழீழம் கிடைத்தால் நான் என்ன வேண்டாமென்றா சொல்லப்போகிறேன். ஆனால் அது சாத்தியமில்லை என்பதுதான் எதார்த்தம். அதற்கான அரசியல் - படைத்துறை - புவியியல் தர்க்கங்கள் என்னிடமுள்ளன.

அரசியல்ரீதியாகச் சிந்திக்காமல், மனித உரிமை விழுமியங்களைப் பற்றிச் சிறிதும் அக்கறைகொள்ளாமல் வெறும் தற்காலிக உணர்வெளிச்சிகளையே ஓர் அரசியல் நிலைப்பாடாகக் கற்பிதம் செய்துகொண்டு ஓவராக வேசம் போடுபவர்களையே கண்ணீர்ப் போராளிகள் என்றேன். ‘நீங்க செய்வது சரியாயில்லையேஎன்றால்என்னை அழவிடுங்கள்அல்லதுஅப்போது நான் சிறுபையனாக இருந்ததால் அதெல்லாம் எனக்குத் தெரியாதுஎனக்கூறி இவர்கள் தப்பித்துக்கொள்வார்கள். இவர்களைக் குறிக்க இதைவிடக் கடுமையான வார்த்தைகள் கூட என்வசமுண்டு.

ஆணாதிக்க வன்கொடுமை கொண்ட வார்த்தைகளையும் பேச்சுக்களையும் நான் இணையத்தில் வைத்தேன் என மாலதி சொல்வதை முழுமையாக நிராகரிக்கின்றேன். இந்த விசயத்தில் நானாக எப்போதுமே எதுவும் சொன்னதில்லை. என்மீது வைக்கப்படும் அவதூறுகளிற்கு மட்டுமே பதிலளிக்கிறேன். அவதூறுகளை ஆதாரபூர்வமாக மறுக்கிறேன். அல்லது விமர்சனங்களிற்கு விளக்கமளிக்கிறேன். இதை வன்கொடுமை என்றால் எப்படி! இம்முறை இவ்வாறு என்னை விளக்கமளிக்க வைத்தது மாலதி.

அவதூறுகளை மறுப்பேயில்லாமல் தோளில் சிலுவையாகச் சுமக்க நான் இயேசுக் கிறிஸ்து அல்ல, சுயமரியாதைக்காரன் நான்!

 

சோபா சக்தியின் பதில் இது .

 

Link to comment
Share on other sites

 

அதுசரி ஷோபாசக்திக்கு இப்ப என்ன பிரச்சனை?
இவர் கதை ஆசிரியரா?
அல்லது....சமூகசீர்திருத்தவாதியா? அல்லது மாற்றுக்கருத்தாளரா? மாற்றுக்கருத்தாளராயின் இன்றைய காலகட்டம் இவருக்கு உகந்தது.
 
இதைவிடுத்து.......அவங்களும் சரியில்லை(சிங்களவர்) இவங்களும் சரியில்லை(புலியள்) எண்டு நெடுக மாரடிக்கிறதும் சரியில்லை... :(

 

அவரை இப்ப தீர்க்கதரிசியாக ஏற்று அவருடைய வாந்திகளை காவிக்கொண்டு திரியும் விசுவாசத்தை என்ன செய்யலாம் ?

Link to comment
Share on other sites

.சோபாவின் எழுத்தின் உயரம்  நீங்கள் எட்டமுடியாத இடத்திற்கு போய்விட்டது .

நீங்க சொன்னச் சரியாத்தானிருக்கும். வாழ்க.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பம்பூ சர்க்கரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி: இலக்கிய ஆளுமையும் சிறந்த மொழியாளுமையும் கொண்ட மிகச் சிறந்த எழுத்தாளர். புலம் பெயர் தமிழ் இலக்கிய சூழலில் மிகவும் கவனிக்கத்தக்கவர். வாசகர்களை பல நுண்ணிய அனுபவங்களினூடாக பயணம் செய்ய வைத்து பல புரிதல்களை ஏற்படுத்த வல்லவர். எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அநேகமாக இவரது அனைத்து ஆக்கங்களையும், நாவல்களையும் வாசித்துள்ளேன். இன்றுவரைக்கும்  எனக்குதமிழில் பிடித்த நாவல்களில் முதல் இடங்களில் 'ம்' இருக்கின்றது.

 

அதே நேரத்தில், இலக்கியம் கொடுத்த ஒளிவட்டம் ஒன்றே போதும் தன் தனி மனித அயோக்கியத்தனங்களையும், மன வக்கிரங்களையும் நியாயப்படுத்தி விட முடியும் என்று கனவு காண்கின்றவர். மிகவும் அயோக்கியத்தனமான அரசியலையும், மக்கள் விடுதலை தொடர்பான மிகவும் குளறுபடியான கொள்கைகளையும் கொண்ட ஒரு மனிதர்.  இவரது 'மாற்று அரசியலின்' கோர முகம் கருணாவின் பிரிவைக் கொண்டாடிய காலகட்டத்தில் தெள்ளத் தெளிவாக புலனாகியது. படுகொலை அரசியலை வெறுத்து, அதற்கு பாசிச வடிவ பொருள் கொடுத்து  எதிர்த்து வந்த இவரே கருணா புலிகளில் இருந்து பிரிந்து வந்த பின் அவருக்கு புனிதராக பட்டம் சூட்டி (அது வரைக்கும் அவரையும் பாசிசவாதியாக இனம் கண்டவர்) தூக்கிப் பிடித்து கருணா தன் மக்கள் மீது செய்த அனைத்து அநியாயங்களையும் நியாயப்படுத்தியவர். இதில், கருணா தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பெண் தொண்டர்களை கிழக்கு மாகாணத்தில் கடத்தி பாலியல் வல்லுறவுப் படுத்தி கொலை செய்த செயலையும் நியாயப்படுத்த முனைந்தமையும் அடங்கும்.

 

 

புலி எதிர்ப்பு என்ற ஒன்றுக்குள் தமிழ் மக்களின் அனைத்து போராட்டங்களையும் பயங்கரவாத முத்திரை குத்துவதில் சிங்கள பேரினவாதத்தினை விட முனைப்பாக இருந்து அதன் மூலம் தன் அரசியலை தக்க வைக்கும் ஒரு அயோக்கியராகத்தான் ஷோபா சக்தி யின் இன்னொரு முகம் இருக்கின்றது.

 

நன்றி  நிழலி..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோபாவை வாசிக்காதவர்களும் விளங்காதவர்களும் இங்கு அதிகம் .புலிகளை அவர் விமர்சிப்பதால் எதையும் வாசிக்காமலே வாந்தி எடுக்கின்றார்கள்

உந்த விமர்சனங்களை எல்லாம் அவர் தாண்டி  பலவருடங்கள் ஆகிவிட்டது .சோபாவின் எழுத்தின் உயரம்  நீங்கள் எட்டமுடியாத இடத்திற்கு போய்விட்டது .

 
எட்டமுடியாத இடத்துக்கு போனவரெண்டால்!!!!!! பிறகென்னத்துக்கு கீழை இறங்கிவந்து பதில் சொன்னவர்??? 
 
சக்தியை கோடம்பாக்கம் போகச்சொல்லுங்கோ......அங்கைதான் கதைப்பஞ்சம் எக்கச்சக்கம். :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் சமூகத்தில் கட்டமைத்து வைத்திருந்த ஒரு பாஸிச அரசியல் போக்கு. அந்தப் போக்கு நமது சமூகத்தை ஆழ ஊடுருவிச் சிதைத்துள்ளது.

அப்ப இவர் ஒரு இடதுசாரி பாசிட்

Link to comment
Share on other sites

கருத்துமுதல்வாதியின் ‘பொருள்’முதல்வாதம் - சோதாசக்தியெனும் கைக்கூலியின் அழுகாச்சி

emailButton.png
பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 15 

 

 

பில்டிங்கும் வீக்கு, பேஸ் மட்டமும் வீக்கு

கட்டுரையை வாசிக்கும் முன்னர் இந்த முன்குறிப்பை மனதில் ஏற்றிக்கொண்டு வாசகர்கள் கட்டுரையைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். எதற்காக இந்த முன்குறிப்பு என்றால் நாம கஷ்டப்பட்டு கண்டதையும் வாசிச்சு கட்டுரை எழுதினால் பிரசுரிக்கும் ஒரே காரணத்திற்காக கீற்று நந்தனுக்கு அத்தனை பெருமையும் போய்ச்சேருகிறது என்பதாலும், சோதாசக்தியின் தயவால் அவர் நோகாமல் நொங்கு தின்ன அனுமதிக்கக்கூடாது என்பதாலும்.

 முன்குறிப்பு்: இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து கருத்துக்களும் எனக்கு மட்டுமே சொந்தமானவை, இதன் ஒட்டுமொத்த உரிமையாளரும் நானே நானே. இந்தக் கட்டுரைக்கு தோழர் கீற்று நந்தன் அல்லது ரமேசு சொந்தம் கொண்டாடினாலோ அல்லது மற்ற சிலர் இது தோழர் கீற்று நந்தன் அல்லது ரமேசு கட்டுரை என்றாலோ அல்லது அவருக்கும் இந்தக் கட்டுரை மீது அனுபவப்பாத்தியதை உண்டு என்றாலோ மக்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பேன் என்று இதன்மூலம் அறிவிக்கிறேன்.

இந்திய மாணவர் சங்கத்தோழர் ஒருவர் மதுரை மாநகர மாவட்டக்குழுவில் இருந்தார். இவர் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர். ஒருமுறை அவருக்கும் இன்னொரு தோழருக்கும் (மாநில அளவில் பொறுப்பில் இருந்த தோழர்) இடையே விவாதம் எழுந்தபோது (அந்த முக்கிய பொறுப்பிலிருக்கும் தோழர் ஒரு பெண்ணை பற்றி பாலியல் ரீதியாக கொச்சையாகப் பேசியதையடுத்து எழுந்த விவாதம் அது) அந்த மாநிலக்குழுத் தோழர் இந்த மருத்துவக் கல்லூரித் தோழருக்கு சப்பைக்கட்டு விளக்கமளிக்க முயற்சித்தபோது, அவர் “தோழர் நான் சொல்வது என்னவென்றால்" என்று சொல்லி ஆரம்பித்தார். அதற்கு இந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சொன்ன பதில் இன்னும் என் மனதில் நிழலாடுகிறது. இவர் சொன்னார். “அய்யா இனிமேல் நீங்கள் என்னை தோழர் என்று அழைக்கவேண்டாம். அதற்குப் பதிலாக என் பெயரை சொல்லி அழையுங்கள், இல்லை, வாடா போடா ஏன் தேவடியாப்பயலே என்றுகூட அழைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். இப்போது வாசகர்களுக்கு தோழர் என்பதின் முக்கியத்துவம் புரியும். ஏனென்றால் இடதுசாரிப் பார்வை என்பதும், தோழர் என்பதும் புரட்சி என்பதும் நம் வாழ்வின் மகத்துவமான வார்த்தைகள். அதுவும் இடதுசாரிகளுக்கு வெறும் வார்த்தைகளைத் தாண்டியும் விரியும் அதன் உள்ளார்ந்த பரிமாணம் நன்றாகவே புரிபடும். அதன் அருமை நம்மைவிட நமது எதிரிகளுக்கு புரிபட்டதால்தான் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, புரட்சிப்புயல், புரட்சிக்கலைஞர் மற்றும் இன்னபிற புரட்சிகர சொல்லாடல்களும் மற்றும் வந்தவன் போனவன் எல்லாம் தம்மை இடதுசாரி என்று சொல்லிக்கொள்வதும் நடைமுறையில் இன்று நாம் காண்பது. நிற்க.

சோதாசக்தி (ஏன் சோதாசக்தி என்பதற்கான விளக்கம் பின்னால் கொடுக்கப்பட்டுள்ளது) இணையதள வாசகர்களுக்கு மிகவும் பரிச்சையமான பெயர். இவர் சமீபத்தில் தனது இணையதளத்தில் தூற்று.கொம் என்னும் தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருந்தார். அதில் அவர் கீற்று.கொம் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதாகவும் அது பொய்யென்றும் நிரூபிக்க முயற்சித்திருந்தார். அதுபோக தனது இறுதிக்கட்டுரையில் தோழர் சந்திரசேகர ஆசாத்தின் மீதும் தோழர் கீற்று ரமேசின் மீதும் ஒரு முக்கியமான குற்றச்சாற்றொன்றை வைத்துள்ளார். தோழர் ஆசாத் “அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு… அரசியலை ஆணையில் வைப்போம்” என்னும் தலைப்பில் கீற்றுவில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் என்பது வாசகர்கள் அறிந்த ஒன்றே. சோதாசக்தி தனது கட்டுரையான “அவதூறுகளிலிருந்து வன்முறையை நோக்கி” என்பதில் தோழர் ஆசாத்தும் கீற்று நந்தனும் வன்முறை அரசியலைத் தமக்கெதிராக தூண்டுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தார். ரொம்ப சிம்பிளா சொன்னா சோதாசக்தியை கொலை செய்யத் தூண்டுகிறார்கள்.

அதுபோக இந்தக் குற்றச்சாட்டை சிறிது நாட்களுக்கு முன்பாக தனது முகப்புத்தகத்தில் கீற்றுவில் வெளியான ஒரு வாசகரின் பின்னூட்டத்தை வெளியிட்டதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பின்னூட்டம் என்னவென்றால் “சோபாசக்தி இந்தியா வரட்டும். இவரை உப்புக்கண்டம் போட்டு விடலாம்” என்று ஒரு வாசகர் எழுதியதுதான். (உப்புக்கண்டம் போடுமளவிற்கு இவர் மாமிசம் மட்டுமல்ல, மனித மாமிசமே உபயோகமானதல்ல என்றாலும்…). சரி என்னதான் இந்த பஞ்சாயத்து இந்த பச்சைப்புள்ளைய யார்ருடா மிரட்டினார்கள் என்று சொல்லி நானும் அந்த கட்டுரையைப் படித்தேன். வாசகர்களும் சோதாசக்தியின் அந்தக் கட்டுரையைப் படித்திருக்கலாம் என்றே எண்ணுகிறேன். ஆயினும் மீண்டும் வாசிக்கவும் (மறுபடியும் முதல்லயிருந்தா என்று நினைக்கவேண்டாம். அருள்கூர்ந்து கீழ்க்கண்ட பத்தியையாவது வாசிக்கவேண்டும். அட முணுமுணுனு முணங்காம வாசிங்கப்பா, அவரு படைப்பிலக்கியம் பக்கம் போயிட்டாரு, இனிமே கட்டுரை மாதிரி ரம்பக் கத்தியெல்லாம் இல்ல, படைப்பிலக்கியம் என்னும் வெட்டருவாளால் ஒரே போடுதான்).

“வன்முறை அரசியல் எப்போதும் வானத்திலிருந்து குதிப்பதில்லை. வெறுமனே தனிநபர்களின் அல்லது ஒரு குழுவின் முரட்டுத்தனத்தால் அவை தான்தோன்றித்தனமாக உருவாக்கப்படுவதுமில்லை. அரசியலில் வன்முறைக்கான விதைகளை சொற்களே முதலில் விதைக்கின்றன. வன்முறை மட்டுமல்லாமல் எல்லாவித முற்போக்கு பிற்போக்கு அரசியல் செயற்பாடுகளும் செயல்களில் ஆரம்பிக்காமல் சொற்களிலேயே ஆரம்பிக்கின்றன. சொற்கள் செயற்பாடுகளுக்கான களங்களைத் தோற்றுவிப்பதோடு செயற்பாடுகளுக்கான நியாயங்களையும் ஓயாமல் கட்டியெழுப்புகின்றன.”

மேலே கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள் இன்னும் விளக்கமாக விரிந்து செல்கிறது. அதையும் முடிந்தால் வாசகர்கள் வாசிக்கவும் (முறைக்க வேண்டாம்). சரி இப்போது மேட்டருக்கு வருவோம். வெறும் இணையத்தளத்தில் வரும் வாசகங்கள் எப்படி இவரை குத்தி கிழித்து விடும் என்பதற்கு இவர் உதாரணம் வேறு தருகிறார். அந்த உதாரணம் மேயர் துரையப்பா அழித்தொழித்தல்தான். அதாவது தமிழரசுக் கட்சியினரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் பிரபாகரன் உள்ளடங்கிய இளைஞர்கள் குழாமை துரையப்பாவை அழித்தொழிக்கச் செய்தததாம். சரி வாசித்து முடித்த வாசகர்களுக்கு இன்னொன்றையும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். சோதா சக்தி சேனனோடு நடந்த விவாதத்தில் 'தமது பார்வை இடதுசாரிப் பார்வை' என்று இடதுசாரி விளக்கமளிக்கிறார். மேலும் சமீபத்தில் அவரின் முகப்புத்தகத்தில் பேராசான் லெனினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து வேறு. அதுபோக தான் ஒரு டிராட்சிகியவாதி என்ற தம்பட்டம் வேறு. சரி இவரின் இடதுசாரித்தனம் என்னமாய் இவரின் கட்டுரையில் முக்கியமாக மேலே நாம் கூறியுள்ள பத்தியில் வெளிப்படுகிறது என்பதை நாம் இப்போது பார்த்துவிடலாம்.

shoba_sakthi_cartoon_600.jpg

நாம் இவரின் கட்டுரையின் இடதுசாரித்தனத்தின் கோமணத்தை அவிழ்த்தோமென்றால் (எம்மாம் தடவதான் சும்மா கட்டவிழ்க்கிறது?) வரும் அர்த்தம் ரொம்ப எளிது. சொல்லிலிருந்து செயல் பிறக்கும். இந்த கேடுகெட்ட கருத்துமுதல்வாதத்திற்கு உதாரணம் தமிழரசுக்கட்சியும் தோழர் பிரபாகரனுமாம். வாசிக்கும் தோழர்கள் உடனடியாக வாசிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி நின்று கொண்டு ‘அதால’ சிரிக்கவும். வாசகர்களே இதுதான் நமது சோதாசக்தியின் 'இடதுசாரி'த்தனம். இதுதான் இவரின் பொருள்முதல்வாதம். ஆனால் உண்மையான இடதுசாரித்தனம் என்ன சொல்கிறது என்பதை நாம் மார்க்சின் மேற்கோளிருந்து பார்ப்போம். பேராசான் மார்க்சு சொல்கிறார்.

“என்னுடைய இயக்கவியல் அணுகுமுறை ஹெகலின் இயக்கவியல் அணுகுமுறையிலிருந்து மாறுபட்டது மட்டுமல்ல, அதற்கு நேர் எதிரானதாகும். ஹெகல், கருத்து என்றதன் பெயரில் சிந்தனையின் இயக்கப்போக்கையே ஒரு சுயேச்சையான பொருளாக மாற்றி விடுகின்றார். மேலும், இந்த சிந்தனையின் இயக்கமே யதார்த்த உலகைப் படைத்து விடுகிறது என்றும், யதார்த்த உலகம் என்பதே ‘கருத்தின்’ வெளித்தோற்றம் என்றும் கூறுகின்றார், ஆனால் உலகு பற்றிய என் பார்வை இதற்கு நேர்மாறானதாகும். பொருளியல் உலகத்தை மனித மூளை பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது. மனதிலிருக்கும் எண்ணம் என்பது, பொருளியல் உலகத்தின் பிரதிபலிப்பைத்தவிர, வேறு எதுவுமில்லை.” (மூலதனம்- முதற்தொகுதி)

மார்க்சு சொல்கிறார் “செயலிருந்து சொல் பிறக்கும்” என்று. நம்ம சோதாசக்தி சொல்கிறார் “சொல்லிலிருந்து செயல் பிறக்குமென்று”. அட அறிவுக்கொழுந்தே, இதுதானா உன் இடதுசாரித்தனம். இதுதானா நீ முன்னாள் மாலெக்காரர் அ.மார்க்சிடம் கற்றுக்கொண்ட பாடம். தோழர்களே எனக்கு முன்னாலேயே அந்த சந்தேகம் இருந்தது. அந்த நல்லாயிருந்த மனுசன் உளறிக்கொட்ட ஆரம்பிக்கும்போதே, சரி இவரு இந்த சோதா சக்திக்கு பாடம் சொல்லித்தரல. இந்த சோதா சக்திதான் அ.மார்க்சுக்கு ஊத்திவிட்டு பாடஞ்சொல்லித்தர்ராருன்னு. யாரோட யாரு சேர்ந்து கெட்டாலும் பரவாயில்ல. ஆனா எங்கேயோ போற மாரியத்தா என்மேல வந்து பாயத்தாங்கிற கதையா இவரும் இடதுசாரினு கதைவிட்டு இடதுசாரித்தனத்துக்கு விளக்குமாத்தடி வேறு. இதுல லெனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து வேற. அந்த மனுசன் உயிரோட இருந்தா இந்த நேரம் தூக்கிலேயே தொங்கியிருப்பாரு.

சொல்லிலிருந்து என்னைக்கு செயல் பிறக்கும்? எப்ப பிறந்துச்சு? இந்த பாடத்தை அ.மார்க்சிடம் கற்றிருக்கவே முடியாது. ஏனென்றால் அவரு இப்போது ஒரு வெத்து பெருங்காய டப்பாவாகயிருந்தாலும், மணமாவது மிஞ்சியிருக்கும். இது செத்துப்போன சாய்பாபா வேண்டுமானால் சாகப்போகும்போது சோதாவிடம் சொல்லிவிட்டு போயிருக்கலாம். சோதா தம்பி இப்போ புரியுதா? ஏன் கட்டுரைக்கு தலைப்பு பில்டிங்கும் வீக்கும் பேஸ் மட்டமும் வீக்குன்னு. நீ இன்னும் படிக்கணும் தம்பி. இதுக்குப்பேரு கருத்துமுதல்வாதம். நீ டிராட்சிகிவாதி (டிராட்சிகியின் இறுதி எழுத்துக்களில் கருத்து முதல்வாதக்கருத்துக்கள் மட்டுமன்றி இறுதியில் அவர் அப்பட்டமான வலதுசாரியாக மாறிப்போனது பற்றி பின்னால் பேசுவோம்) என்றும், இடதுசாரி என்றும் தம்பட்டம் அடிக்கிறாயே அதற்கு எதிரானது தம்பி நீ சொன்ன வன்முறைக்கருத்து.

உண்மையைச் சொல்வதென்றால் சோதாவிற்கு அரசியல் புரிதல் ரொம்ப கம்மி. ஆனால் அதை இலங்கை மற்றும் ஈழம் பற்றிய சம்பவங்களைப் பற்றி சும்மா சராமாரியாக அளந்து விடுவதன் மூலமாகவும் நிறைய பேசுவதன் வாயிலாகவும் தனக்கு அரசியல் புரிதல் நிரம்ப இருப்பதாக காட்டிக்கொள்வார் (இவர் அளந்து விடும் சம்பவங்களின் உண்மைகளைப் பற்றியும் பின்வரும் கட்டுரைகளில் காண்போம்). அவ்வளவுதான். ஆனால் ஒரு விடயத்தைப்பற்றி பேசுவதற்கு முன்னால் அந்த விடயத்தை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கப்போகிறோம் என்பது அவசியம். இயக்கவியல் பொருள்முதல்வாத மற்றும் வரலாற்றுப்பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தின் படிதான் ஒருவர் எந்த வரலாற்றையும் பார்க்கவேண்டும். அப்படித்தான் எந்த நிகழ்வையும் பார்க்க முடியும். அப்படி பார்த்தால்தான் அது இடதுசாரிக்கண்ணோட்டம். இல்லாவிட்டால் கோயில்நுழைவு போராட்டத்தின்போது இடதுசாரிகள் மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டை ஒடுக்கும் சாதியினர் வைப்பார்கள். அதாவது நல்லாயிருந்த ஊருக்குள்ளே வந்து சண்டை இழுத்துவிட்டு போயிட்டான் இந்த கம்யூனிஸ்டு. அந்தக் கதையாய் ஆகிப்போய் விடும். அதுபோன்ற கதையாகத்தான் நமது சோதாசக்தியின் இடதுசாரித்தனமும்.

இடதுசாரித்தனத்திற்கு அடிப்படையான இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டங்களும் சிறிதளவும் இன்றி ஒரு கட்டுரை. பின்பு தான் இடதுசாரி என்ற ஜம்பம் வேறு. சொற்கள், கருத்துக்கள் தான் செயல்களை உருவாக்குகின்றன என்பது கருத்துமுதல்வாதம் என்பதை தோழர் ஸ்டாலினும் நிரூபிக்கிறார். சொற்களின், கருத்துக்களின், கொள்கைகளின், அரசியல் கண்ணோட்டங்களின் முக்கியத்துவத்தை தோழர் ஸ்டாலின் என்றுமே மறுப்பதில்லை. ஆனால் அவர் அக்கருத்துக்கள் செயல்களை உருவாக்குகின்றன என்பதோடு முரண்படுகிறார். சொல்லிலிருந்து செயல் வரும் என்பது கருத்துமுதல்வாதமே என்று தனது புத்தகத்தில் (இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்) விளக்கமாக நிரூபிக்கிறார்.

அதுபோக அரசியலில் வன்முறைக்கான, செயலுக்கான விதைகளை சொற்கள் என்றும் விதைக்காது. உதாரணமாக இருஞ்சியூர் கோபாலகிருஷ்ணனை போட்டுத்தள்ளினார்களே மாலெ தோழர்கள். எந்த சொல்லிலிருந்து பிறந்தது அந்த பாட்டாளிவர்க்க வன்முறைக்கான செயல்? கோபாலகிருஷ்ணனின் ஆதிக்கசாதி கொழுப்பிலிருந்து, அவனின் மக்கள்விரோத செயலிலிருந்து எழுந்தது அந்த பாட்டாளிவர்க்க வன்முறை. மக்கள் எதிர்ப்பு செயலிலிருந்து பாட்டாளி வர்க்க வன்முறைக்கான விதை தோன்றியது அல்லது மக்கள் ஆதரவு செயலிலிருந்து ஆளும் வர்க்க வன்முறைக்கான விதை தோன்றும். இப்போது மேயர் துரையப்பாவின் அழித்தொழிப்பு சம்பவத்தை எடுத்தோமென்று சொன்னால் மார்க்சு சொல்வதைப்போல “பொருளியல் உலகத்தை மனித மூளை பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது.” இலங்கை அரசுப் பிரதிநிதியான‌ மேயர் துரையப்பாவின் செயல்கள் (புறநிலை யதார்த்தம்) இந்த எண்ணத்தை தமிழரசுக்கட்சியினர் மூளையில் பிரதிபலித்து எண்ணங்களாக மாற்றுகிறது. அந்த எண்ணங்கள் சொற்களாக வெளிப்பட்டன.

நடந்த சம்பவத்தை சோதாசக்தி பார்க்கும் கருத்துமுதல்வாதப் பார்வைக்கும் நாம் பார்க்கும் பார்வைக்கும் ஒரு கோடி வித்தியாசங்கள் இருந்தாலும், உதாரணமாக அவர் மேயர் துரையப்பா அழித்தொழிப்பைப் பற்றிப் பேசும்போது ஏதோ தமிழரசுக்கட்சியும் பிரபாகரன் உள்ளடங்கிய குழுவும் மட்டுமே அவரைக்கொல்ல விரும்பியது போலவும் மற்ற ஈழத்து மக்கள் அனைவரும் மேயர் துரையப்பாவை “எங்க முதலாளி தங்க முதலாளி தங்கமனம் சிங்ககுணம் கொண்ட முதலாளி” என்று தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடிப்பாடியதாகவும் சொல்வது, அவரின் கருத்துக்கள் அதாவது சொல்லிலிருந்து செயல் பிறக்கிறது என்று சொல்வது இடதுசாரித்தனமல்ல மற்றும் அவரின் பார்வையே கருத்துமுதல்வாதக் கருத்துத்தளத்தால் ஆனது என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். ஒன்று இந்தக் கருத்தை, பார்வையை அவர் மாற்றிக் கொள்ளட்டும். அப்படி இல்லையென்றால் அவர் தன்னை இடதுசாரி என்று சொல்லிக்கொள்வதை தனது கருத்துக்கள் இடதுசாரிப் பார்வையால் ஆனது என்று சொல்வதை மாற்றிக்கொள்ளட்டும். இரண்டையும் ஒருசேர கைக்கொள்வது மலத்துவாரத்தான் வழியாக உணவு உண்பது என்பதை நாம் மிகுந்த பணிவன்போடு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.

அதுபோக முதலில் சோதாசக்திக்கு இடதுசாரி அறிவு (இயக்கவியல் பொருள்முதவாத மற்றும் வரலாற்றுப்பொருள்முதல்வாதம் பற்றிய) வேண்டும். அதுதான் பேஸ்மட்டம்; அப்புறம் தான் அவரின் கட்டுரை இடதுசாரிப்பார்வையோடு கூடிய அரசியல் கட்டுரையாக முடியும். பேஸ்மட்டம் ஸ்டிராங்கா இல்லாம பில்டிங்கும் ஸ்டிராங்கா இருக்கமுடியாது. பில்டிங் ஸ்டிராங்கு; பேஸ்மட்டம் வீக்கு என்பது வடிவேலு காமெடிக்கு வேணும்னா சரியாக இருக்கலாம். ஆனால் இயங்கியல் விதிப்படி அது தவறு. அதனாலதான் சோதாசக்திக்கு பேஸ்மட்டமும் வீக்கு பில்டிங்கும் வீக்கு. இப்போது தெரியுதா ஏன் சோபா சக்தி சோதாசக்தி ஆனாருன்னு.

அவர் தன்னை தனது சீடகோடிகளைவிட்டு சிறந்த திரைப்பட நடிகர் என்று சொல்லிக்கொள்ளட்டும், நமக்கு கவலையில்லை. சிறந்த புனைவு எழுத்தாளன் என்றும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்றும் கலகக்காரர் என்றும் இன்னும் பிற சொல்லாடல்கள் தன்னைத்தானே அல்லது தனது சீடகோடிகளை விட்டோ வாழ்த்திக்கொள்ளட்டும். அதுபற்றி நமக்கு எந்தக் கவலையுமில்லை, பிரச்சனையுமில்லை. ஆனால், இடதுசாரித்தனம் என்பது வரலாற்று வழிவந்த ஒரு எதிர்ப்புக்கதையாடல். ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களின் விடுதலைக்கான வழி அது. இருண்ட ஆதிக்கவானத்தில் கிழித்துக்கிளம்பிய விடிவெள்ளி அது. இந்த ஆதிக்கமலைகளை அள்ளி வீச வந்த கீழைக்காற்றது. மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும், மாவோவும் எமக்கு கையளித்துச்சென்ற தீப்பந்தம் அது. அதில் மட்டும் அவர் விளையாடவேண்டாம்.

தான் சொல்வதை எவனும் கேட்கமாட்டேன்கிறார்கள் என்ற கவலையும், அ.மார்க்சை முன்பு தமிழ்ச்சமூகம் ஒரு மார்க்சிய அறிவுஜீவி என ஏற்றுக்கொண்டதுபோல தம்மையும் ஏற்றுக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கமும், ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவாவும் அவருக்கும் இருப்பது நம்மால் புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அதற்காக அவர் செய்யவேண்டியது ரொம்ப சாதாரணமான விடயம்தான். அது மக்களிடையே களமாற்றுவதும், வர்க்கநெருப்பில் தன்னை புடம்போட்டுக்கொள்வதும், மக்களிடமிருந்து பாட்டாளிவர்க்க பண்பாட்டையும், பாட்டாளிவர்க்க கருத்தியலையும் உள்வாங்கிக்கொள்வதும்தான்; தொடர்ச்சியாக வர்க்கப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்வது மட்டும்தான். இப்படிச் செய்வதன் மூலமாக அவர் தனது பேஸ்மட்டத்தை ஸ்டிராங்கிக் கொள்ளலாம். அதன்மூலம் அவரின் பில்டிங்கும் ஸ்டிராங்காகும். அதைவிடுத்து சும்மா பரந்துபட்ட மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் கொண்டு, மக்களின் எதிரிகளோடு கூட்டணி சேர்ந்துகொண்டு தமது பார்வையை இடதுசாரிப்பார்வை எனும்போதுதான் நமக்கு பிரச்சனை வருகிறது. இதை விவரமாக பின்வரும் கட்டுரையில் காண்போம்.

அவர் முடிந்தால் தோழர் ஸ்டாலின் எழுதிய அந்த நூலை வாசிக்கட்டும். விலை ரூ.20தான். காண்டம் வாங்கற காசுல இதுக்கும் கொஞ்சம் செலவளிங்கப்பு. கீழைக்காற்றுப் பதிப்பகம் வெளியீடு. நம்ம மகஇக பதிப்பகம்தான். உங்கள் அன்புக்குரிய புரட்சி எழுத்தாளர் லீனா மணிமேகலையைக்கூட வாங்கித்தரச் சொல்லலாம்.

இறுதியாக இந்த சொல்லிலிருந்து செயல் பிறக்கும் என்னும் தத்துபித்துவத்திற்கும் நம்மாளு விளக்கம் வச்சிப்பாரு. 'கருத்துமுதல்வாதம்தான் இலங்கை நிலவரப்படி பொருள்முதல்வாதம். அது புரிந்து கொள்ளாததுதான் ஈழத்தோல்விக்கு காரணம். இடதுசாரித்தனத்தை கருத்துமுதல்வாத அடிப்படையில் நான் புரிந்து கொண்டேன். இடதுசாரித்தனத்தை இப்படியும் சொல்லலாம்' என்று சொன்னாலும் சொல்வார். பூவை பூவும் சொல்லலாம், புஷ்பம்னு சொல்லலாம். நீங்க சொன்னமாதிரியும் சொல்லலாம் கதைதான் அது.

சனநாயகவழிப்பட்ட எதிர்ப்பரசியலின் குத்தகைதாரரும் வன்முறை அரசியலும்

எனக்கு தோழர் சந்திரசேகர ஆசாத் மீது கொஞ்சம் கோபம்தான். பச்சைப்புள்ளைய இப்படியா மிரட்டுறது. புள்ள ரொம்ப பயந்துடுச்சு. அதிலும் சவரக்கத்தி, அழுக்குச்செருப்பு என்று ஏகத்திற்கும் புலம்ப ஆரம்பித்து விட்டார் நமது சோதா சக்தி. சரி அப்படி என்னதான் இருக்கிறது அந்த கட்டுரையில் சோபாசக்தி தொடுத்துள்ள 307 வழக்கில் என்பதைத்தான் பார்த்துவிடுவோமோ.

shobasakthi_351.jpgபெரிய சூரப்புலி வேடம் கட்டியவர்கள் எல்லாம் மக்களுக்கெதிரான அரசியலுக்குப் போகும்போது மக்கள் சக்தியைப் பார்த்தவுடன் பயம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிடும். உதாரணம் கோயம்புத்தூர் கூட்டத்தில் 'நடந்தது என்ன' என்று விஜய் தொலைக்காட்சி பாணியில் விசாரித்தால் கால்சட்டையில் நனைத்துக்கொண்டவர் கதை வெளியே வரும். அதுபோல சோதாசக்தி பயப்படுகிறார் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் பேராசான் மாவோ சொல்கிறார். ஆளும் வர்க்கங்களும் அவர்களின் ஊதுகுழல்களும் வெறும் காகிதப்புலிகளே என்று. ஆனால் காகிதப்புலிகள் அனைத்தும் ஆளும் வர்க்கங்களின் ஊதுகுழல்களா என்று என்னைக் கேட்கக்கூடாது.

இந்த காகிதப்புலி சோதாசக்தி பயத்தில் ஏதேதோ உளறுகிறார். அதில் ஒன்றுதான் இந்த கடைசிக்கட்டுரை. அதை அவர் ஆரம்பிப்பதே மிகவும் வேடிக்கையானது. வடிவேலு சொல்ற மாதிரிகூட இல்ல நம்மாளுக்கு. தம்பி உங்களுக்கு ஆரம்பமும் நல்லாயில்ல, பினிஷிங்கும் நல்லாயில்ல. ஆரம்பமே டிராட்சிகியின் மேற்கோளுடன்தான். அப்படி என்னதான் சொல்லிவிட்டார் நம்ம முன்னாள் தோழர் டிராட்சிகி என்று பார்த்துவிடலாம். அதற்கு முன்பாக முதலில் சோதாசக்தி எதையும் முழுமையாக படிக்காமல் சும்மா கூகுளில் மேற்கோள் எடுக்கும் பழக்கத்தை நிறுத்தவேண்டும். ஒரு மேற்கோளை பயன்படுத்துகிறோம் என்றால் அது எந்த சூழலில் பயன்படுத்தப்பட்டது என்பதை புரிந்துகொள்ள அந்த புத்தகம் முழுமையும் வாசிக்கவேண்டும். சரி பரவாயில்லை அந்தக் கட்டுரையாவது முழுமையாக வாசிக்கவேண்டும். எதிலும் அவசரம், அரைவேக்காட்டுத்தனம். இப்படியெல்லாம் மேற்கோள்கள் பயன்படுத்தினால் நம்மையும் இடதுசாரியாக இந்த அப்பாவித் தமிழினம் ஏற்றுக்கொண்டுவிடும் என்ற அசட்டுத்தனம்.

முதலில் அந்த மேற்கோள் எடுக்கப்பட்ட கட்டுரையே ஒரு அவதூறுக் கட்டுரை. தோழர்கள் லெனினையும் ஸ்டாலினையும் இன்னபிற மத்தியக்குழு உறுப்பினர்களையும் அவதூறாக பேசுவதற்கென்றே எழுதப்பட்ட சுயசரிதைக் குறிப்பது. கம்யூனிஸ்டுகள் பிரச்சனைகளை மேசைமேல் வைப்பார்கள் என்பார் எம் பேராசான் மாவோ. ஆனால் பிரச்சனைகளை மேசைமேல் வைக்காமல், முரண்பாடுகளின் மூலத்தை செயல்வழியை தெளிவுற புரிந்துகொள்ளாமல் வெறும் கிசுகிசு அரசியலாக்கி அவதூறு கிளப்புவதில் டிராட்சிகி பேர் போனவர் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கும் கட்டுரை அது. முடிந்தால் அந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். ரசிய கம்யூனிஸ்டுகள் தன்னை போட்டுத் தள்ளிவிட்டால் என்ன செய்வது, அய்யய்யயோ அம்மம்மா என்று தான் செத்துப்போனால் உலகப்புரட்சியே படுத்துவிடும் என்று அலட்டிக்கொண்டு டிராட்சிகி உளறிக்கொட்டும் கட்டுரை அது. மத்தியக்குழு உறுப்பினராக இருந்துகொண்டு மத்தியக்குழுக் கூட்டத்தில் இருக்கும் முரண்பாடுகளை அவ்விடத்திலேயே போட்டு உடைத்து அதற்கான நீண்டதொரு போராட்டத்தை தொடங்காமல் சும்மா மூடி மூடி வைத்து முகத்தில் புன்னகையையும், மனதில் குறுங்குழுவாதத்தையும் தேக்கி வைக்கும் டிராட்சிகியிசத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போடும் கட்டுரை அது.

முரண்பாடுகளை மூடிவைத்து மூடிவைத்து புரையோடிப் போகச்செய்யும் இந்த சோ கால்டு குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவி முகத்திற்கு நேராக முரண்பாடுகளை உடைந்தெறிந்து அதற்கான தீர்வு நோக்கி போவதுதான் மார்க்சியத்தின் திருபுவாதத்திற்கு எதிரான பாலபாடமே. அதுபோக அந்த மேற்கோள் தொடைநடுங்கி சோதாசக்திக்கு உபயோகமானதுதான். ஏனென்றால் அவரும் அவர்சார்ந்த கும்பலும் சுயநலவாதிகள், தன்னிச்சைவாதிகள். தாம் இல்லையென்றால் ஏதோ உலகே மூழ்கி விடும் என்று பேசுபவர்கள். டிராட்சிகி அளவிற்கு ஒரு வீரஞ்செறிந்த வரலாற்றை வாழ்ந்து விட்டு அப்புறம் துரோகியாக திரிந்தாலும் பரவாயில்லை. ஆனால் எந்த வீரஞ்செறிந்த வரலாறும் இல்லாமல் பிஞ்சிலேயே இவர் மொள்ளமாரித்தனம் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த உதிரி குட்டிச்சாத்தானுக்கு அந்த பெரிய சாத்தானின் மேற்கோள் துணை. அதுபோக இன்னொன்று இருக்கிறது. அதாவது அ.மார்க்சு அடிக்கடி சொல்வார். மார்க்சிய பேராசான்கள் அந்த காலகட்டங்களில் அந்த சூழலுக்கேற்ப எழுதிய மேற்கோள்களை அப்படியே வைத்துக்கொண்டு பிரச்சனைகளை பார்க்கக்கூடாதென்று. அதில் ஓரளவிற்கு உண்மையிருக்கிறது. 1920களில் எழுதப்பட்ட இந்த மேற்கோளை கொண்டுபோய் இப்போது ஜார்ஜ் புஷ்ஷிடம் சொன்னால் என்ன சொல்வார். அழுக்கடைந்த செருப்பின் வீரம் என்னவென்று அவருக்கும் நம்ம சிதம்பரத்திற்கும்தான் தெரியும். சவரக்கத்தியை விட செருப்புதான் அவர்களை மிகவும் பயமுறுத்தியது என்பது உலகறிந்த உண்மை. இது ஒரு மேற்கோளு, இதுக்கு ஒரு பில்டப் வேற.

சரி இப்போது கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு வருவோம். தோழர் ஆசாத் இவரிடம் கணக்கு கேட்கிறார். அந்தக் கணக்கை மக்கள் மன்றத்தில் வைக்கவேண்டும் என்கிறார். அதற்கு சோபாசக்தியின் பதில் என்னவென்றால் மக்கள் மன்றத்தை கூட்ட வேண்டுமாம். அதன்பின்னால் வருவாராம். வந்து கணக்கு ஒப்படைப்பாராம். எதுக்கு இந்த பஞ்சாயத்து? தோழர் ஆசாத் மக்கள் மன்றத்தை கூட்டுவதாக சொன்னதும் அல்லது அவர் கூட்டுவதும் இருக்கட்டும். சோதாசக்தி உங்களிடம் காண்டம் வாங்கியது வரை கணக்கிருக்கிறது. அதனால என்ன பண்ணுங்க. அத்தனை கணக்கையும் உங்க இணையத்தளத்தில போட்டுருங்க. ஒரு கட்டுரையில எக்கச்சக்க புத்தகம் வைத்திருப்பதாகச் சொன்னீர்கள். அந்தக் கணக்கையும் மறந்து விடவேண்டாம். அப்படியே கடவுச்சீட்டு (அது இல்லையென்றால் அதுக்குண்டான டாக்குமெண்டு) உங்களுக்கு இருந்தால் அதை ஸ்கேன் செய்து போட்டுவிடவும், எந்தெந்த நாட்டுக்கு போனீர்கள் என்பது மக்களுக்கு தெரிய வேண்டுமல்லவா.

வரவு என்ன, செலவு என்ன, கடன் எவ்வளவு, கடன் கொடுத்த வங்கி எது, வேலையில்லாத ஒருவருக்கு எவ்வளவு வங்கிக் கடன் கிடைத்தது, கடனுக்கு வெளிநாட்டுப் பயணச்சீட்டு கொடுத்த நிறுவனம் எது, அங்கு எவ்வளவு கடன் உள்ளது, காண்டம் கணக்கு எவ்வளவு எல்லாத்தையும் இணையத்தளத்தில் போட்டுவிடலாமே? எதுக்கு தோழர் ஆசாத், தோழர் நந்தன்? சட்டுப்புட்டுன்னு செய்யுங்கப்பு... வழக்கு, விசாரணை, மக்கள் மன்றம் எல்லாம் அப்பால பாத்துக்கலாம். நம்ம கருணாநிதியே கணக்கை செய்தித்தாளில் வெளியிடும்போது, சோதா சக்தி வெளியிடுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும்? ஆனால் ஒண்ணு, எல்லாத்தையும் தெளிவாக ஸ்கேன் செய்து கொடுத்துப்புடணும். வெறுமனே வங்கிப் பெயர் தரக்கூடாது. எந்தக் கிளை, கிளை முகவரி, வங்கிக் கணக்கு விவரம், டிராவல்ஸ் ஏஜென்சியின் முகவரி எல்லாம் சாப்ஜாடா கொடுத்துவிட வேண்டும். அவதூறுகளுக்கு உடனடியா பதில் போடும் நம் சோதாசக்தி இதையும் வேகமா செய்தால் நலம்.

இங்கு யாரும் சோதாசக்தியை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரியவில்லை. அவர்மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருக்கிறது. இல்லை நான் சத்தியவான் என்று நிரூபித்துவிட்டால், எல்லோரும் ஜோரா கைதட்டி 'ஜே' போடப்போகிறார்கள். நான் வேண்டுமானால், சோதாவை தோளில் ஏற்றி சென்னையை ஒரு ரவுண்ட் வருகிறேன்.

சரி அடுத்து அந்தக் கட்டுரையின் விறுவிறுப்பான மேட்டர்கள் சிலவற்றை பார்த்துவிடுவோம். தோழர் ஆசாத் அழைக்கும் விசாரணைக்கு தோழர்கள் மருதய்யனும், வீராச்சாமியும் அழைக்கப்படுவார்கள் என்பதே அது. அன்பு நண்பர் சோதாசக்தி அவர்களே தோழர்கள் மருதய்யன், வீராச்சாமி வரவேண்டும் என்பது தோழர் ஆசாத்தின் வேண்டுகோள் அல்ல. அது எங்காளாயிருந்து உங்காளா மாறிப்போன அ.மார்க்சின் வேண்டுகோள். அவர்தான் சொன்னாரு. அடிதடி கூட்டமென்றால் கீழ்மட்ட தோழர்களையும், அறிவுசார்ந்த கூட்டமென்றால் மேல்மட்டத்தோழர்களையும் அனுப்புவது மக்கள் கலை இலக்கியத்தின் வழமையென்று. அதனால்தான் தோழர் ஆசாத் மருதய்யனையும், வீராச்சாமியையும் அழைத்திருக்கிறார். ஒரு பேச்சுக்கு உங்களுக்குத் தண்டனை வழங்குவது என்று மக்கள் மன்றம் வைத்துக்கொண்டால் (பயப்படக்கூடாது, சும்மா பேச்சுக்குத்தான், நெருப்புன்னா சுட்டுறவா போகுது, அதுபோக நீங்க காந்தியார் புத்தகங்களை இப்போ படிச்சுட்டுக்கிறீங்க. அது முக்கியம்) முதல் கல்லை அவர்களேயே எறியச்சொல்லி தண்டனையை ஆரம்பித்து வைக்கலாம் என்று ஆசாத் நினைத்திருக்கலாம். எனவே நீங்கள் இந்த மேட்டரில் தோழர் ஆசாத்தை காய்வது நல்லதல்ல. அழைத்தது அண்ணன் அ.மார்க்சே. எனவே அக்கட சருகண்டி சருகண்டி. அதுபோக ஈடுசெய்யவேண்டிய அல்லது ஈடு செய்யமுடியாத என்பதெல்லாம் உங்க அ.மார்க்சு ஸ்டைல்தான்ப்பு.

அடுத்து சோதா எழுதுவதுதான் உண்மையிலேயே அவரின் பயத்தை வெளிக்காட்டுவது. செம்படை இத்தாலியின் உள்ளே நுழைந்தபோது முசோலினி ஒரு ராணுவ லாரியில் ஏறி தப்பி ஓடுகிறான். செம்படை லோக்கல் படையோடு அந்த வாகனத்தை சுற்றிவளைக்கிறது. முசோலினி இருக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்கிறான். இழுத்து வருகிறது மக்கள் படை. பயத்தில காற்சட்டையிலேயே மூத்திரம் அடிக்கிறான் அந்த மாபெரும் வீரன். இதுதான் இந்த காகிதப்புலிகளின் வீரம். கொள்கையில் புடம்போடப்பட்ட மக்கள் தலைவர்கள், பிரதிநிதிகள் பதறுவதில்லை. உதாரணமாக வெறும் பதின்ம வயதில் ஆங்கிலேயரால் துன்புறுத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட குதிராம் போசின் வீரம் நாம் அறிந்த ஒன்று. ஆனால் நம்ம சோதாசக்தி பதறிச் சாகிறார். அந்தப் பயம் நம்ம வடிவேலு மாதிரி 'நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான்' என்பதுபோல் 'நான் பயப்படல நான் பயப்படல' என்று அவரை சொல்ல வைக்கிறது. பயம் அல்லய பிடித்தாலும் முகத்தில பயத்தக்காட்டாதபடி தனது சிஷ்ய கோடிகளிடம் “என்ன நடந்தாலும் க்குரௌட அண்ணன் பக்கத்துல அண்ட விடக்கூடாது” என்று கெஞ்சுகிறார். “சிரிக்காதீங்கப்பு, சீரியசு, இது தூய்மையற்ற சவர அலகு” என்கிறார்.

மக்களுக்காக நிற்பது என்று ஆகிவிட்டது. இதில் இருந்தால் என்ன, செத்தால் என்ன? ஏனிந்த பயம்? இந்த பயம் இவர் பற்றியிருக்கும் கருத்தால் வருவது. அது கருத்துமுதல்வாதத்தால் வரும் பயம். அதுதான் நாம் கண்ட சோதாசக்தியின் கருத்துமுதல்வாத வாந்தி. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அரண்ட சோபாசக்திக்கு இருண்டதெல்லாம் விடுதலைப்புலிதான். கவலையே படாதீங்க, நான் சொல்றேன். அப்படியெல்லாம் நீங்க சட்டுபுட்டுனு சாகமாட்டீங்க. நெடுநாள் வாழ்வீங்க. எங்க ஊருப்பக்கம் ஒரு பழமொழி உண்டு, நீ செஞ்ச பாவத்திற்கு உனக்கு நல்ல சாவு வராதுடி, புழுத்துதாண்டி சாவேனு. எனக்கு பாவம் புண்ணியத்திலெல்லாம் நம்பிக்கையில்லை, உங்களுக்கு?

சரி இப்போது வன்முறை அரசியலின் தேவை பற்றிப் பேசுவோம். வன்முறை அரசியல் என்பது ஒன்றும் மக்களே வலிந்து மேற்கொள்வதல்ல. அந்த .303 துப்பாக்கியோடும், இதர சுமைகளோடும் மனைவி மக்களைவிட்டு விட்டு காடுகளிலும், மேடுகளிலும் அலைய வேண்டும் என்பது ஒன்றும் நம் ஊர் நக்சல்கள் அல்லது விடுதலைப்புலிகளின் விருப்பமுமில்லை, அதற்காகவே அவர்கள் ஒன்றும் பிறப்பெடுக்கவுமில்லை. ஆனால் எதிரியே அதை நாம் செய்யுமாறு தூண்டுகிறான். அந்த நிலைக்கு நம்மை உள்ளாக்குகிறான். அமைதியான வாழ்க்கையையே நாமும் விரும்புகிறோம். ஆனால் பேராசான் மாவோ சொல்வதுபோல் நாம் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரியே தீர்மானிக்கிறான். அதுபோக நாம் ஆயுதங்தாங்கிய படையாகவேண்டியதன் அவசியத்தையும் பேராசான் மாவோ விளக்குகிறார். மக்கள் படையின்றி மக்களுக்கு எதுவுமேயில்லை என்கிறார் தோழர் மாவோ. சரி அதுவெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். சோபாசக்தி தெய்வமாக வழிபடும் டிராட்சிகியின் கருத்துக்களில் எப்போது சீரிய இடத்தைப் பெறும் நகர்ப்புற பாட்டாளிவர்க்கம் காவாத்துக்கு துப்பாக்கியோடு சென்றது பற்றி தேவைப்படுபவர்கள் நூல்களில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இப்போது சோதாசக்தி சொல்லும் வன்முறைக்கெதிரான அமைதிப்பயணத்தை பார்க்கலாம். அவரின் கட்டுரையின் இறுதிப்பகுதியில் அவர் சொல்லும் அந்த வேதாந்தங்கள் அவரின் நண்பர்களுக்கு மட்டும் பொருந்தாது போலிருக்கிறது. மக்கள் கலை இலக்கியத் தோழர்கள் அமைதியான முறையில் கேள்விகளைக் கேட்டபோது அடிக்கப் பாய்ந்தாரே லீனா மணிமேகலை, அந்த வன்முறைப் பண்பாட்டை எதிர்த்து எத்தனை இடங்களில் தனது எதிர்ப்பை பதிவுசெய்தார் இவர்? அது வன்முறையாகாதா? மலந்துடைந்து ஒரு பெண் பத்திரிக்கையாளருக்கு அனுப்பினாரே அ.மார்க்சு அது வன்முறைக் கலாச்சாரமாவாதா? அப்பாவி தொழிலாளியை சோதாசக்தி அடித்தாரே அது வன்முறைப் பண்பாடாகாதா? இராணுவம், காவல்துறை தவிர மற்ற எல்லோரையும் (பெண்கள் உட்பட) திருப்பி அடிப்பேன் என்று சோதாசக்தி சொல்வது வன்முறையாகாதா? லீனா அடித்தால், நீங்கள் அடித்தால் அந்த இடத்தில் அது சனநாயகவழிப்பட்ட எதிர்ப்பரசியலின் பரிணாம வடிவம், அ.மார்க்சு மலந்துடைத்து அனுப்பினால் அது சனநாயக எதிர்ப்பரசியலின் நவீன வடிவம். ஆகா... உங்களுக்கு சனநாயக வழிப்பட்ட எதிர்ப்பரசியலை வடிவமைக்கும் பொறுப்பை குத்தகைக்கு விட்டவன் எவன்? நீங்களும் உங்கள் கூட்டமும் செய்தால் அதற்குப் பெயர் வன்முறைப் பண்பாடல்ல, அவதூறுக் கலாச்சாரமல்ல, மாறாக மற்றவர்கள் செய்தால் அது அப்படித்தான். என்னங்கடா ஞாயம் இது.

தோழர்களே கூர்ந்து கவனியுங்கள்.

இலங்கையின் முன்னாள் பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் ராபர்ட் பெரைராவிற்கும் நம்ம ஊரு ஜித்து கிருஷ்ணமூர்த்திக்கும் இடையிலான உரையாடலை முன்பு ஒருமுறை மையம் என்ற குறுபத்திரிக்கையில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடல் சோசலிசக்கட்டுமானம் பற்றியது. அதில் கிருஷ்ணமூர்த்தி சோசலிசக்கட்டுமானம் மற்றும் தனிமனித சுதந்திரம் பற்றிப் பேசுகிறார். அப்போது அவர் 'சோசலிசக் கட்டுமானத்தின்போது நான் தனிமனித சுதந்திரத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தினால் என்ன செய்வீர்கள்?' என்று பெரைராவிடம் வினவுகிறார். அதற்கு பெரைரா 'உம்மை நாம் மறுசீரமைப்பு முகாமிற்கு அனுப்புவோம்' என்கிறார். மீண்டும் 'அந்த தனிமனித சுதந்திரத்தை விட மறுத்தால்' என்று கேட்கிறார் கிருஷ்ணமூர்த்தி. 'மீண்டும் மறுசீரமைப்பு முகாமிற்கு அனுப்பப்படுவீர்கள்' என்கிறார் பெரைரா. 'மீண்டும் மீண்டும் நான் என் தனிமனித சுதந்திரத்தை விட மறுத்தால்' என்று அழுத்துகிறார் கிருஷ்ணமூர்த்தி. 'நீங்கள் கொல்லப்படுவீர்கள்' என்கிறார் பெரைரா. 'நீங்கள் என்னை தியாகியாக்குகிறீர்கள்' என்று முடிக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

உதாரணமாக சோசலிச கட்டுமானத்தின்போது - பண்பாட்டு ரீதியிலான புரட்சியின்போது - ஆதிக்கசாதியம் என்னும் நோயை விடாமல், தனிமனித சுதந்திரம் என்னும் பெயரால் தூக்கிப்பிடித்தால் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு அழகாக பதிலளிக்கிறார் தோழர் பெரைரா. இது தான் நடைமுறைக்கு சரியான பதில். அந்த அதிசனநாயகவாதி அந்தக் குறிப்பிட்ட சாதியக்கும்பலால் தியாகியாக மதிக்கப்படுவான் என்று தெரிந்தாலும் வேறு வழியில்லை, போட்டுத் தள்ளுவதைத்தவிர. அதீத சனநாயகவாதிகளுக்கே இந்தக்கதி என்றால் துரோகிகளுக்கு?

மேற்கண்ட பத்தியை முன்னோட்டமாக வைத்துக்கொண்டு பின்வருவனவற்றை வாசிக்குமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

'கீற்றை முடக்க அ.மார்க்சு குழு சதி' என்ற தலைப்பில் கீற்று நந்தன் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதற்கு பதிலளிக்கையில் சோதாசக்தி தெளிவாகச் சொல்கிறார். “ஓர் ஊடகம் அவதூறுகளையே பரப்பும்போது அதனடிப்படையில் தவறான அரசியலையும் குழுக்களையும் கட்டமைக்க முற்படும்போது அந்த ஊடகத்தை நிராகரிக்குமாறு சக படைப்பாளியிடமும் அல்லது சக களச்செயற்பாட்டாளரிடமும் ஒருவரோ அல்லது ஒரு குழுவினரோ கோருவது மிக அடிப்படையான சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு. இதில் சதியுமில்லை. ஒரு மயிருமில்லை…. எனவே இதுவெல்லாம் ஒன்றும் கீற்றுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய எதிர்ப்பு வடிவமோ, கருத்துரிமை மறுப்போ, சதியோ கிடையாது.” இப்போது நமக்கு இரு கேள்விகள் இருக்கின்றன. இப்படிக்கோருவது மிக அடிப்படையான சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு என்கிறாரே சோதா, எந்த சனநாயகம், முதலாளித்துவ சனநாயகமா? முன்பு ஒரு கட்டுரையில் அ.மார்க்சு சொல்வார். முதலாளித்துவ சனநாயகம் ‘சனநாயகம்' என்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ‘சர்வாதிகாரம்’ என்றும் கொச்சையாக வாசிக்கப்பட்டுவிட்டது என்பார் அவர்.

அந்த சனநாயகத்திற்கான சட்டதிட்டங்களை வகுத்தவன் எவன்? உங்கள் கட்டுடைப்புக்கணக்கில் இந்த சனநாயக கட்டை அவிழ்க்கக்கூடாதா? அதுபோக இந்த சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பு என்றால் என்ன? அதன் விளக்கங்கள் என்ன? அப்படித்தான் எதிர்ப்பை காட்டவேண்டும் என்று யார் வரையறுத்தது? அது யாருக்கான சனநாயகம்? எங்களுக்கு நீங்கள் சொல்லும் சனநாயகமும் தெரியாது; அது வழிப்பட்ட எதிர்ப்பும் தெரியாது.பேராசான் லெனின் சொல்வார், பசித்தவனுக்கு குடியரசும் ஒன்றும் தான் முடியரசும் ஒன்றுதான் என்று. அதுபோக, நீங்கள் எப்போது இந்த சனநாயக வழிப்பட்ட எதிர்ப்பரசியலின ஜவாப்தாரி ஆனீர்கள்? யார் உம்மை ஆக்கியது? அதுபோல் வழி வழியாக வந்த சனநாயக வழிசார்ந்த எதிர்ப்பைப் பின்பற்றுவது சோதாவின் பாசையில் சரியென்றால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் வழி வழியாக வந்த போட்டுத்தள்ளுவதையும் பின்பற்றுவதில் இவருக்கென்ன பயம், தயக்கம்? இவருக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

அதுவும் தோழர் ஆசாத் கேட்டது என்ன? சோதா கேட்டதுபோல் கீற்று நந்தன் நடுவராக இருக்கட்டும் என்று சொல்லவில்லையே; மாறாக மக்களை நீதிபதியாகக் கொண்ட மக்கள் மன்றத்தில் வைத்து விசாரிப்போம் என்றுதானே சொன்னார். அதன் பின்பாக குற்றச்சாட்டு நிரூபணமானால் அதற்கான தண்டனை வழங்குவதை அ.மார்க்சே முடிவு செய்யட்டும் என்றுதானே சொன்னார். அவர் ஒன்றும் சோதாவை கொலை செய்யவேண்டும் என்று சொல்லவில்லையே. இவரின் (முதலாளித்துவ)சனநாயகப்படி வழி வழியாக வந்த எதிர்ப்பை பின்பற்றுவது சரியாம், ஆனால் அதே சனநாயகப்படியோ அல்லது பாட்டாளி வர்க்கச்சர்வாதிகாரத்தின்படி போட்டுத்தள்ளுவது என்ற முடிவை மக்கள் மன்றம் எடுத்தால் இவர் அய்யோ அம்மா என்று கதறுவாராம். தம்பி மடியில கனமிருந்தால்தானே வழியில பயம். அதுபோக நீங்க இடதுசாரி, இவ்வளவுதானா உங்க இடதுசாரித்தனம்.

ஒரு இணையத்தை முடக்க முயற்சிப்பது கருத்து சுதந்திர மறுப்பு கிடையாதாம். அது வழி வழிப்பட்டதாம். ஆனால் வன்முறைக்கலாச்சாரம் வழிவழிப்பட்டதில்லையாம் மாறாக தோழர் ஆசாத்தும் கீற்றும் சேர்ந்து ஆய்வுக்கூடத்தில் வைத்து கண்டுபிடித்து கொண்டு வந்ததாம். என்னா லாஜிக்குங்கண்ணா? இந்தக்கருத்து சட்டைக்காலரில் அழுக்குப்படாமல் அரசியல் செய்ய நினைக்கும் குட்டிமுதலாளித்துவ அரசியல். ஆனால் இந்த இடதுசாரி வேடம் போட்ட உதிரிக்கு எப்படி குட்டி முதலாளித்துவ அரசியல் என்று நினைத்து வாசகர்கள் குழம்ப வேண்டாம். கைக்கூலிகள் எந்த வேடமும் புனைவார்கள்.

இப்போது இடைவெளி. மயக்கந்தெளிய விட்டு அடிப்போம்.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14355&Itemid=139

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் அரண்ட சோபாசக்திக்கு இருண்டதெல்லாம் விடுதலைப்புலிதான்.
.......அது.....:D
Link to comment
Share on other sites

நீ கையை புடிச்சு இழுத்தியா பதிவை இத்தோடு நிறுத்துகிறேன்

 
tamilazhi-.JPG

என்னை கையை பிடிச்சு இழுத்துட்டான் 

ஷோபாசக்தியின் மீது விமர்சனம் வைத்ததும் நான் அவரிடம் சில விளங்கங்கள் கேட்டு இருந்தேன் அவரோ ஒரு மடலை அனுப்பி இருந்தார் . 

அதில் மூணாவது முறையாக சந்திப்பு நிகழும் போது  அது நிகழ்ந்தது என்கிறார் தமிழச்சியோ நான் முதலில் இரயில்வே நிலையத்தில் கன்னத்தில் அறைந்தேன் மூன்றாவது ஓட்டல் அறைக்கு மட்டும் போனேன் ஆனால் ஓடி வந்துட்டேன் 

யார் யாருக்கு பழியானாங்கன்னு தெரியலை ஆனால் பெரியார் தத்துவம் பேசி , மார்க்சியதத்துவம் பேசி பெண்களை மடக்கினார் என்றால் அது ஆகபெரிய  அயோக்கியத்தனம் என இப்பவும் நான் ஷோபா சக்திக்கு சொல்லிக்கிறேன்.(அப்போ வேறுமாதிரி மடக்கலாமான்னு  கேட்கபடாது மடக்குவதற்கு பெண்கள் என்ன நுகர்வு 

பொருளா) 

சரி இந்தம்மா தமிழச்சியை பற்றி பார்ப்போம் http:">இங்கே 

இந்த சுட்டியில் இருப்பது தமிழச்சி எழுதியதுதான் என்ன எழுதுகிறார்னா

//சோபா சக்தி அவர்களுக்கு, 

என்ன ரொம்ப நல்லா என்ஜாய் பண்றீங்க போல… உங்களை போல் அதிர்ஷ்டம் வேறு எந்த ஆண்களுக்கும் கிடைக்காது. கல்யாணம் கட்டினா ஒன்னு கட்டாட்டி கணக்குல கிடையாது இல்லையா? நீங்ககூட இந்த வருடம் தொடக்கத்தில் 1 - மாதம் கொரியா சென்றிருந்தீர்கள். நாவல் எழுதப் போவதாக என்னிடம் சொன்னீர்கள். எழுத்துப்பணி முடிந்துவிட்டதா? சரி! உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நீங்கள் என்ன லவ் பண்றீங்களா? மற்றவை உங்கள் பதில் கண்டு!// 

அதாவது பலபெண்களை அனுபவிக்கும் ஷோபா உனது காட்டில் மழைடான்னு சொல்கிறார் என்னை கொஞ்சம் 

ஏறெடுத்து பாரேன் என்கிறார் (வேறுவிதமாக எப்படி பொருள்கொள்வதென தமிழச்சிதான் விளக்கனும்) 

பெண்களை தேடி அலையும் ஒரு லோலாயி என இவரால் கண்டிக்கப்பட்ட ஷோபாவிடம் ஏன் காதாலாகி கசிந்துருகவேண்டும் பிறகு வந்து நான் இரண்டு பிள்ளைக்கு அம்மாங்க என்னை கையை பிடிச்சு இழுத்துட்டான்னு சொல்லனும் ஒன்றும் விளங்கல்லை என சொல்பவர்களுக்கு 

இதோ தமிழச்சியின் பதிவு 

தமிழச்சியின் எதிர்விணை - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087&Itemid=263 

இதில் எழுதுகிறார் 

//கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக இணையத்தில் என்மீது சோபா சக்தி தொடுத்த பாலியல் தாக்குதல் குறித்து பேசியிருக்கிறேன். பேச்சு என்பதை விட சற்று ஆவேசமாகவே நியாயம் கோரினேன். பாதிக்கப்பட்டவள் என்ற முறையில் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து திட்டியிருந்தேன். 

ஆணாதிக்கத் திமிரோடு சோபா சக்தி எம் மீது நிகழ்த்த முயன்ற அத்துமீறிய செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பல கட்டுரைகள் எழுதினேன். அதற்கு மறுவினையாக சோபாவிடம் சிறு விளக்கமும் இல்லை.// 

அட ஷோபா சக்தி உங்கள் மீது பாலியல் தாக்குதல் தொடுத்திட்டார் என நீங்கள் சொல்கிறீர்கள் 

ஆனால் நீங்கள்தானே என்னை லவ் பண்றீங்களான்னு கேட்கிறீங்க 

இப்ப தாக்குதல் தொடுத்தது அவரல்ல நீங்கள்தான் என சொல்லலாமா 

ஷோபா சொல்கிறார் உங்களிடையே உறவே இருந்ததுன்னு 

//தமிழச்சிக்கும் எனக்கும் நடந்த இரண்டாவது சந்திப்பிலிருந்தே நாங்கள் இருவரும் ஒருவர்பால் ஒருவர் வெகுவாக ஈர்க்கப்பட்டோம். அது  மனம் சார்ந்த ஈடுபாட்டிலிருந்து பரஸ்பரம் உடல்சார்ந்த உறவாக எங்களது  மூன்றாவது சந்திப்பிலேயே மாறிற்று. 2008 நடுப்பகுதியில் நாங்கள் பிரியும்வரை அது தொடர்ந்தது. நமக்கிடையே இருந்த உறவு யாருக்கும் தெரியாதவொரு இரகசியச் செயற்பாடாகவும் இருக்கவில்லை. இந்த உறவு அய்ரோப்பியத் தமிழ் இலக்கிய வட்டத்தில் ஒருசிலராலாவது அறியப்பட்டேயிருந்தது. எனது குடும்ப உறுப்பினர்களும் அறிவார்கள். எனவே நான் பாலியல் அத்துமீறல் செய்தேன் அதனால் தமிழச்சி என்னைத் தாக்கினார் என்ற பேச்சுக்கே இடமில்லை. // 

அதாவது 2008ல் உறவு பிரிந்தவுடன் நீங்கள் கேட்கிறீர்கள் 

"என்னை லவ் பண்றியான்னு// 

ஆனால் உங்கள் கட்டுரைகள் சொல்கிறது  அவர் பாலியல் அத்துமீறல் புரிந்தார்னு எண்ட குருவாயூரப்பா 

பாலியல் உறவு முறிந்தவுடன் அதற்கு பெண்ணே பொறுப்பு என்பது எப்படி ஆணாதிக்கமோ பாலியல் உறவு முறிந்தவுடன் அதை பாலியல் சுரண்டல் என்பதும் ஆணாதிக்க மனோபாவம்தான் .இரயாகரன் சொல்வதுபோல ஆண்போல பேசும் பெண் இவர் 

சரி வர்க்கம் வர்க்கம் என குதித்து லீணா மேட்டுகுடி வர்க்கம் அதனால் யோனி முலை என எழுதி அதில் மார்க்சிய ஆசான்களையும் உபரி மதிப்பையும் எழுதி கேவலபடுத்தினார் 

என சொல்லும் வர்க்கம் பேசிய முற்போக்கு வாதிகள் இந்த தமிழச்சி என்ன வர்க்கம் என்பதை அறிந்துதான் பேசுகிறார்களா யாமறியேன் 

பெண்மீதான பாலியல் அத்துமீறல் அல்ல பெண்ணை சுரண்ட வும் தனது எழுத்து மற்றும்  பெரியாயரிய கருத்துக்களை பயன்படுத்தினார் என்கிற தமிழச்சியின் குற்றச்சாட்டை 

ஏற்றுகொண்டும் அதே வேளையில் இதற்கு உடன்போனவர்தான் இந்த தமிழச்சி என்பதையும் சேர்த்து அம்பல படுத்துவதே சிறந்த செயல் . 

அடுத்து ஒரு அரசியல் கூட்டனி ஷோபாவை பழிதீர்க்கவும் அதன் மூலம் அ. மார்க்ஸ் மற்றும் சுகுணாவை பழிதீர்க்கவும் கிளம்பி விட்டார்கள் அவர்கள் இதோ பாருங்கள் இப்படி பட்ட கயவனே இந்த ஷோபா எனவே இவர்களுக்கு எதிராக நாங்கள் பேசியது போய் கேள்வி கேட்டதும் நியாயமானதே என்கிறார்கள் 

இதன் மூலம் தாங்கள் செய்த அராஜகத்தை மூடி மறைக்கப்பார்கிறார்கள் . 

அராஜகவாதம் எந்த உருவில் வந்தாலும் அது கொண்டையை வெளிக்காட்டுகிறது 

பெரியாரின் எழுத்துக்களை காப்பி பேஸ்டு செய்தால் அவர் பெரியாரே என நம்பும் தம்பிகள் இருக்கும்வரை இவர்கள் உழவு ஓட்ட இந்த இணையம் திறந்தே கிடக்கிறது 

இதை படித்து தலை சுற்றுபவர்கள் முதலில் கீழ்கண்ட சுட்டிகளை படிக்கவும் 

1.இரயாகரன் குமுறியது 

2.தமிழச்சி கொட்டியது 

3.ஒரு மக இக தோழன் குமுறியது 

4.கீற்றுவில் வந்தது 

5.தமிழச்சி எழுதிய கவிஜை 

-- 

தியாகு 

"" 

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் 

மெய்பொருள் காண்பதறிவு 

-வள்ளுவர் 

வலைப்பூ:www.thiagu1973.blogspot.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரை நேரிலோ சந்தித்தோ அல்லது இவரின் எழுதுக்களையோ அறிந்ததில்லை. அதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்ததில்லை. இவர் மேல் உள்ள விமர்சனங்களே இப்படி ஒருவர் இருக்கின்றார் என தெரிய வைத்தது. 

 

இவரின் இந்த கேள்வி பதில் திரியை இங்கே காண முடிந்தது. சரி என்ன தான் இருக்கின்றது பார்ப்போம் என்று இங்கே எட்டிப்பார்த்தேன். முகநூல் தொடங்கி, யாழ் இணையம் வரை இவர் மேல் கடுப்பாக இருப்பதற்கு இவர் என்ன செய்துவிட்டார் என்று அறியும் ஆவலுடன் தான் கேள்வி பதில்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு சில கேள்விகளுடன் நிறுத்திக்கொண்டேன். 

 

"நாம் (விடுதலைப்புலிகள்) தமிழ் மக்களின் இலட்சியத்தின் அடையாளங்கள் மட்டுமே. நாம் உயிருள்ள வரை போராடுவோம். நான் இறந்தால் வேறொருவர் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வார்" இது தலைவர் வழங்கிய ஒரு உரையின் சில வசனங்கள்.
 

 

 இலங்கை அரசின் இனவாதத்தையும் மனித உரிமைகள் மீறல்களையும் குறித்து இலக்கியத்தில் என்னைவிட அதிகம் எழுதிய இன்னொருவரைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம்.

 

 

 

இந்த வசனத்துடன் வாசிப்பதை நான் நிறுத்திவிட்டேன். இவர்கள் போன்றவர்கள் தெரிந்து செய்கிறார்களா இல்லை அறியாமையால் செய்கிறார்களா என்பது தெரியவில்லை. இத்தனைக்கு பின்பும் நாம் மனிதஉரிமை மீறல் பற்றி பேசுவோமாக இருந்தால். அதை விட ஒரு துரோகத்தை அனைத்து போராளிக்குழுக்களுக்கும் நாம் செய்துவிட முடியாது. தமிழர்களிற்கான நீதி என்பது இனஅழிப்பு என்பதை ஒட்டியே இருக்க முடியும். மனித உரிமையோ போர்குற்றமோ அந்த நீதியை வாங்கித்தரப்போவதில்லை.

 

தீர்ப்பாயங்கள் முதல் பேராசிரியர்கள் வரை (தமிழர் அல்லாதவர்கள்) இன்று இனஅழிப்பு என்ற ஒற்றைக்கோரிக்கைக்கு  வந்து சேர்திருக்கும் இவ் வேளையில் இவர்களை போன்றவர்கள் இன்னமும் மனித உரிமை பற்றி பேசுவதன் மர்மம் என்னவோ?

 

தமிழீழம் என்பது புலிகளுடன் தொடங்கி புலிகளுடன் முடிந்துவிட்டது என்பது தான் இவர்களின் கருத்து. புலிகளிற்கு முன்னரும் பின்னரும் அது இருந்துகொண்டு தான் இருந்தது, இருக்கின்றது. இதில் ஆயுதப்போராட்டம் ஒரு பகுதியே தவிர அதுவே தமிழீழத்திற்கான முடிவு அல்ல. 

 

கெட்டது பேசி/செய்து பிரபல்யம் ஆவது தற்பொழுது தலையெடுக்க தொடங்கியிருக்கும் ஒரு விளம்பர தந்திரம்.

 

 

Link to comment
Share on other sites

 
ஷோபாசக்தி - புலி படுத்தது.. நாய் நரியானது !
 

shoba+sakthi+cartoon.jpg


யாருக்கும் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் எனக்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது தேசம் நெட், ரயாகரன் என்னைப் பற்றி எழுதத் துவங்கிய போதே நான் இதை எழுதியிருப்பேன். தனிநபர் தூற்றல்கள், வசவுகள், இது பற்றி நான் கவலைப்பட்டிருந்தால் ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் நான் பத்து பதில் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். சோபா சக்தி எழுதியிருக்கும் சமீபத்திய பதிவுகளும் சரி, ஏற்கனவே எழுதியவர்களும் சரி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் பல பொய்களுமாக கலந்து கட்டி எழுதுகிறார்கள். சோபா சக்தியைப் பொறுத்தவரை சில விஷயங்களில் நான் பேசாததை பேசியதாகச் சொல்கிறார். அவர் நிறுவ நினைக்கும் விம்பத்தைக் கட்டமைக்க நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில வரிகளை வெட்டி ஒட்டி தன் கருத்துக்கு வலுச் சேர்த்து என்னை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட்டதாக நினைக்கிறார். லண்டனின் நான் பேசிய விஷயத்தில் சோபா நான் இப்படிப் பேசியதாகச் ‘’“வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கக் கோரியது அநீதி” சொல்கிறார் சோபாசக்தி. எதற்கு வம்பு நான் பேசியதை நண்பர் கோபி அவர் இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார் அதை நீங்களே கேளுங்கள் . http://www.gopi.net/iataj/conference/2010/speeches. புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்கள் என்ற சொல்லில் உள்ள இலங்கை அரசு ஆதரவு தொனியை கவனியுங்கள். அத்தோடு நான் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டும் பொய்யையும் பாருங்கள்.
............................................

ஷோபா சக்தி என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள் போட்ட காமெண்டுகள் சாரம் இது.
யாரோ கொடுத்த காசில் லண்டன் வருகிறாய், தெருப்பொறுக்கியும், தெருப்பெருக்கியும் சம்பாதிக்கும் பணத்தில் இந்தியா வந்து அரசியல் பேசுகிறேன்.

2. 
வைட் காலர் ஜாப், கருணாநிதியின் குடும்ப பத்திரிகை 
குங்குமத்தில் கூலிக்கு மாரடிப்பு. 

3
முத்துக்குமாரின் ஆன்மா இவரை மன்னிக்குமா? 

கமெண்ட்-4 
புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.
மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது " என வாந்தியெடுப்பதை எப்படிப் புரிந்துகொள்வது! Maybe லண்டன் ஞானோதயம்?என்பதாக சில கட்டுரைகளையும் கமெண்டுகளையும் எழுதிய்யிருந்தார் ஷோபா.

நண்பர்கள் எக்காரணம் கொண்டும் இதற்கு பதிலளிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்ட போதும். சில உண்மைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்று எழுதுகிறேன். நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள். 

1. என்னை லண்டனுக்கு அழைத்தவர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினர். ஈழம் தொடர்பான விஷயங்களில் அவர்கள் என்னை நட்பு சக்தியாகக் கருதி அழைத்திருக்கலாம். iataj என்றழைக்கப்படும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் விடுத்த அழைப்பின் பெயரில் வெளிப்படையாகவே நான் சென்று வந்தேன். சரி லண்டன் வந்து போனதோ, இனி வரப்போவதோ இருக்கட்டும், புலம்பெயர் நாட்டில் மூன்று வேலைகள் பார்த்து நாய்படாத பாடு பட்டு காசு சம்பாதித்தாலும் இந்தியா வந்து போக கடன் வாங்கியே வந்து போகும் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கு. ஆனால் காப்பிக் கோப்பை கழுவதாக ஊரை ஏமாற்றி அங்கு அரசு கொடுக்கும் நிதியில் வாழும் சோபாசக்தி மட்டும் எப்படி வருடத்திற்கு மூன்று முறை இந்தியா வந்து போக முடிகிறது. பிரான்சில் அவர் எங்கே எந்த நிறுவனத்தில் எப்போது வேலை பார்த்திருக்கிறார் என்ற உண்மையைச் சொல்வாரா? 
புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் இந்தியா வர வீசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இந்திய தூதரகம் மூன்று வாரகால அவகாசம் கேட்கிறது. அப்ளை பண்ணுகிறவரின் வீசாவை டில்லிக்கு அனுப்பி இந்திய புலனாய்வுத்துறை முடிவு செய்த பிறகே புலத்து மக்களுக்கு இந்தியா வர வீசா கிடைக்கும் போது அதெப்படி உங்களுக்கு மட்டும் இந்தியா கேட்கும் போதெல்லாம் வீசா கொடுத்து விடுகிறது? ஒரு அரங்கக் கூட்டம் நடத்தக் கூட தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கும் தீவீர இடதுசாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்படும் போது எப்படி உங்களுக்கு மட்டும் திருவனந்தபுரத்தில் இலங்கை அரசு ஆதரவு மாநாட்டு நடத்த வசதியும் வாய்ப்பும் வருகிறது. 

2. வொயிட் காலர் ஜாப்பும், கூலிக்கு மாரடிப்பதும், என்று எழுதியிருக்கிறீர்கள். கூலி கேட்டவனை அடிப்பதை விட கூலிக்கு மாரடிப்பது ஒன்றும் தவறில்லைதானே? ஆனால் நீங்கள் கேட்க வருவது நான் கூலிக்கு மாரடிக்கும் இடத்திற்கும் எனது அரசியல் ஓர்மைகளுக்கும் இடையிலான முரண் தொடர்பானது. எப்படி உங்கள் கொள்கைகளுக்குப் புறம்பான இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்? அ.மார்க்ஸ் மாநிலக் கல்லூரியிலும், ஆதவன் தீட்சண்யா மத்திய அரசு நிறுவனமான பி. எஸ். என். நிறுவனத்திலும், மிக உயர்ந்த ஊதியத்தில் சலுகைகளோடு மிக பாதுகாப்பான அரசு வேலை பார்த்தார்கள். பார்க்கிறார்கள். சோபாசக்தியில் அளவுகோல்படி ஆமாம் என் பார்வையில் அல்ல சோபாசக்தியின் பார்வையின் படி பிஎஸ் என் எல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் ஆ. ராசா ஒரு திமுக அமைச்சர் கொள்கை ரீதியாக போயஸ்கார்டனில் கும்மியடிக்கும் போது நியாயமாக ஆதவன் பிஸ். என். எல் நிறுவனத்தில் கூலிக்குமாரடிக்கக் கூடாதில்லையா? கொள்கை கோட்பாடுகளை எல்லாம் பி.எஸ்.என். எல்- ம், மாநிலக் கல்லூரியும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் அங்கு அவர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள் என்ற உண்மை நீங்கள் என்னை கூலிக்கு மாரடிக்கிறவன் என்று எழுதிய பின்புதான் எனக்கே தெரிந்தது. என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் கூலிக்கு மாரடிக்கிறேன். என்னை மாதிரியே வேலை பார்க்கிறார் உங்கள் நண்பர் சுகுணாதிவாகர் ஒரு தூய கடவுள் மறுப்பாளரான அவர் என்ன? வேலை பார்க்கும் நிறுவனத்தோடு போட்டிருப்பது சுயமரியாதை அக்ரிமெண்டா? ஆக நான் கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எனது குரல்களை எப்போதும் அமைதியாக்கிக் கொண்டதில்லை. சமகாலத்தில் நான் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளிலும் நான் என் அறிவுக்குப் பட்ட மாதிரி எதிர்வினையாற்றுகிறேன். //எழிலன் வயிற்றுப் பிழைப்புக்காகவே அங்கேயிருக்கிறார் என்றொரு வாதமும் முகப் புத்தக விவாதத்தில் வந்துபோனது. ஒரு அரசியல் போராளி வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது நிலைப்பாடுகளையும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. // ஆக ஷோபா என் வேலையை குறி வைக்கிறார். எல்லா அயோக்கியர்களும் ஒரு மாத ஊதியக்காரன் மீது வீசும் கடைசிக் கல்லை என் மீதும் வீசுகிறார் சோபாசக்தி. சரி செய்யுங்கள் முடிந்தால் தாக்குப்பிடிக்கிறேன் அல்லது இந்த வேலையை விட்டு விலகுகிறேன். 

3. தியாகி முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்தார் அருள் எழிலன் கருணாநிதியிடம் ஊதியம் பெறுகிறார், ஆகவே முத்துக்குமாரின் ஆவி என்னை மன்னிக்காது என்பது சோபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு. புலி ஆதரவாளர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று தங்களைத் தாங்களே காட்டிக் கொண்ட சந்தர்ப்பாவாதிகள் முத்துக்குமாரை அன்றே புதைக்க நின்ற போது முத்துக்குமாரை புதைக்க விடாமல் போராடியவர்கள் நாங்கள் நான் மட்டுமல்ல எங்களோடு உங்கள் நண்பர் சுகுணாவும் வேறு வழியில்லாமல் நின்றிருந்தார். //ஒரு கட்டுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை நிர்வாகியும் நண்பருமான வன்னி அரசு கூட முத்துக்குமாரின் உடலை வைத்துக் கொண்டு அருள் எழிலன் தான் மறியல் செய்து கொண்டிருந்தார் அவர் எந்தக் கல்லூரியில் படிக்கிறார்// என்று யாரையோ திட்டுவதாக நினைத்து என்னை வசவிக் கொண்டிருந்தார். ஆக நான் அப்போது என் வேலையைப் பற்றிக் கவலைப்பட வில்லை. உங்களின் ஆத்ம நண்பர்கள் எல்லாம் வெளிப்படையாக இயங்க பயந்து வெவ்வேறு பெயர்களில் மறைந்திருந்து தனி நபர் சண்டைகளில் ஈடுபட்ட போது நான் டி.அருள் எழிலன், அல்லது பொன்னிலா இந்த இரண்டு பெயர்களிலுமே எழுதினேன். முத்துக்குமாரை புதைத்த சந்தர்ப்பவாதிகளை முதன் முதலாக அம்பலப்படுத்தியது நான் தான். அப்போது உங்கள் நண்பர் ஆதவன் உள்ளிட்ட இலங்கை ஆதரவாளர்கள் முத்துக்குமாரை இழிவு செய்தார்கள். ஒரு பக்கம் நீங்கள், இன்னொரு பக்கம் முத்துக்குமாருக்கே துரோகம் செய்த தமிழக சந்தர்ப்பவாதிகள். இவர்களை எல்லாம் எதிர்த்து நாங்கள் சிலரும் நின்றோம். அதில் உங்கள் நண்பரும் உண்டு. இப்போது முத்துக்குமாரின் கடிதத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள் முத்துக்குமாரின் ஆவி யாரை மன்னிக்கு யாரை மன்னிக்காது என்று? கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் அருள் எழிலன் தான் எழுதிய கடிதத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறான் என்று முத்துக்குமாரின் ஆவி என்னை வாழ்த்தும் என்றுதான் நினைகிறேன். 
மக்களை விடுவிக்கக் கோருவது பேரினவாதிகளின் கோரிக்கையே.
.........................................
முதலில் என்னை தனிப்பட்ட ரீதியில் தாக்கிக் கொண்டிருந்த ஷோபா திடீரென என்னை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துகிறாராம். அந்த யோக்கியதையை நீங்களும் வாசியுங்கள். 
//பு லிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை. 
மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது "// 
முதலில் லண்டனில் நான் என்ன பேசினேன் என்பதைச் சொல்லி விடுகிறேன் // புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி நீங்கள் ஏன் கோரவில்லை என்று சிலர் எம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். மக்களை விடுவிக்கக் கோரி நான் ஏன் புலிகளைக் கேட்க வேண்டும். 30 ஆண்டுகளாக வன்னி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாக அலகு ஒன்று புலிகளால் அங்கு நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதிக்குள் சென்று மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவமே வெளியேறு என்பது எனது அப்போதைய கோரிக்கையாகவும், வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு என்று கேட்பது இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது. இதுதான் நேர்மையான அரசியலே தவிற புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி கேட்க மாட்டேன். வரிக்கு வரி இப்படி இல்லா விட்டாலும் நான் பேசியதன் பொருள் இதுதான்// 

எங்குமே நான் மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரவும் இல்லை எழுதவும் இல்லை. உண்மையில் புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டே பயங்கரவாத இலங்கை அரசின் குற்றச்சாட்டு. புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் வன்னி மக்கள் மீது கிளஸ்டர், பாஸ்பரஸ், உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாய் பச்சைப் படுகொலைகளை இந்தியாவின் துணையோடு நடத்தியது இலங்கை. ஆக புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கோரிக்கை இலங்கை அரசின் கோரிக்கை மட்டுமல்ல இந்திய அரசின் கோரிக்கையும்தான். இந்த இரண்டு கொலைகார கிரிமினல்களின் கோரிக்கையை நான் ஏன் புலிகளை நோக்கி வீச வேண்டும் என்பதே இன்றுவரை என்னிடம் உள்ள கேள்வி. நான் சொன்ன கருத்தை இன்றுவரை நான் மறுக்கவே இல்லை. நான் பேசியது முழுக்க முழுக்க சரியாது. இலங்கை அரசின் அந்த படுபாதக கோரிக்கையைத்தான் சோபாசக்தி அவர்களே நீங்களும் ரயாகரனும் அப்போதும் இப்போதும் முன்வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.வன்னி மக்களோ கடந்த முப்பதாண்டுகளாக புலிகளின் நிர்வாக ஒரு சிறிய அளவிலான சிவில் நிர்வாக அலகிற்குள் வாழ்ந்தார்கள். அதில் ஏராளமான சாதக, பாதங்களும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் நோக்கினாலும் அந்த வாழ்வு சிங்கள பேரினவாத இராணுவத்தின் ஆட்சியை விட சிறந்தது என்பது என் கருத்து. அதை இன்று காலம் நிரூபித்திருக்கிறது. 

புலிகள் மீதான எனது விமர்சனம்
...........................................................
சரி அப்படி என்றால் கீற்றில் நீங்கள் வேறு மாதிரி எழுதியிருப்பதாக ஷோபா சொல்கிறாரே? என்று கேட்கலாம். மே மாதம் 13- வரை புதுமாத்தளன் மருத்துவமனை வரை எனக்கு நேரடியான தொடர்புகள் இருந்தது. மார்ச் மாத இறுதியில் கூட நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தெஹல்காவுக்கு ஒரு ஆங்கிலப் பேட்டியை கடுஞ்சமருக்கு மத்தியில் எடுத்துக் கொடுத்தேன்.( எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தனிக்கதை) இன்று மாற்றிப் பேசுகிற மருத்துவர் சத்தியமூர்த்தி கூட அப்போது புலிகள் மக்களை பிடித்து வைக்கவில்லை என்றார் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர் அப்படிப் பேசினார். இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்கிறார். இராணுவம் மக்களைக் கொல்லவில்லை என்கிறார். வன்னிக்குள் இருந்தவரை புலிகளே கடவுள் என்றவர்கள் யாழ்பாணம் சென்ற பிறகு மாற்றிப் பேசினார்களே அவர்கள் சொன்ன தகவல்கள்தான் புலிகள் மக்களைப் பிடித்தார்கள் என்று. (இந்தத் தகவல்களை மே மாதம் இறுதியில் முகாம்களில் இருந்தபடியே கைத் தொலைபேசியில் என்னிடம் பரிமாறிக் கொண்டார் அந்த நண்பர்) எனக்கு அவர்கள் மீதும் வருத்தம் இல்லை இலங்கையோடு ஒப்பிடும் போது நெருக்கடி குறைவான தமிழகத்திலேயே ஈழ விடுதலைக்கு உண்மையாக இல்லாத சந்தர்ப்பவாதிகள் தங்களின் சுய லாப ஓட்டு வேட்டைக்கு ஈழத்தைப் பயன்படுத்தும் போது உயிர்வாழ்தலே நெருக்கடிக்குள்ளாகி பேரினவாத இராணுவத்திடம் சிக்கியிருக்கும் மக்களும், பிரமுகர்களும் இலங்கை அரசோடு இணைவதை புரிந்து கொள்ள முடிகிறது. போர் பற்றிய குழப்பம் இப்போது அரசோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் என்று அவர்கள் கொடுத்த தகவல்கள் எனக்குள் ஏற்படுத்திய அயர்ச்சி காரணமாகவே எழுதினேன். இன்னொன்றையும் இங்கே சொல்கிறேன். உங்கள் நண்பர் ஒரு நாள் இரவு தொலைபேசினார். நான் போனை எடுத்தவுடம் ஓ வென கதறியழுதார். என்ன இப்படியழுகிறார் என்று எதுவும் பிரச்சனை இருக்கும் போலிருக்கு என்று கேட்டால் ‘’புலிகள் மக்களை இப்படிக் கொல்லலாமா? என்று கேட்டார். ஒருவர் அழுதபடியே கேட்கிறாரே இவரிடம் போய் என்ன விவாதிப்பது என்று சரி சரி விடு.... அப்படியும் சொல்றாங்க என்று மழுப்பலாக பேசினேன். மூன்று நாட்கள் கழித்து அந்த நபர் ஒரு இணையதளத்தில் இப்படி எழுதியிருந்தார் “புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்களை நெருக்கிப் பிடித்துக் கேட்டாலே புலிகள் மக்களைக் கொன்றதை ஒத்துக் கொள்கிறார்கள்” என்று எழுதினார் அந்த அழுகை மனிதர். இப்போது ”என்று தகவல்கள் வருகின்றன" என்று உறுதியில்லாமல் நான் எச்சரிக்கையாக எழுதியதை இந்த தந்திரக்கார நரி புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளதாக சித்தரிக்கின்றது. எனக்குத் தகவலைச் சொன்ன யாழ்பாணத்து மாமனிதர்களோ பேஸ்புக்கில் ஷோபா என்னைச் சித்தரித்து எழுதியதில் லைக் போடுகிறார்கள்.
ஆனால் போர் முடிந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் பிறபகுதி ஒன்றில் ஒரு மனிதரைச் சந்தித்தேன் அவர் போரின் தன் இரண்டு குழந்தைகளையும் தவற விட்டவர் என்பதோடு மனைவியையும் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு பலி கொடுத்து சித்திரவதையான ஒரு வாழ்வை வாழ்ந்தார். (இவரைப் பற்றி இதற்கு மேல் என்னால் இங்கே எழுத முடியாது) அவர் சொன்னார் புலிகள் யாரையும் விதிவிலக்காக கருதவில்லை. பிரபாகரன் தன்னுடைய எல்லா குழந்தைகளையுமே கள முனையில் வைத்திருந்தார். அவர் உண்மையில் தப்பிச் செல்ல நினைக்க வில்லை. தப்பிச் சென்ற மக்களை தடுக்கவும் இல்லை. குடும்பத்தோடு பத்திரமாக யாழ்பாணத்திற்குத் தப்பிச் சென்றவர்களும் உண்டு என்றார். அப்படித் தப்பிச் சென்றவர்களை புலிகள் சுடவில்லை என்றும் சொன்னார். பிறகு ஒரு ஒரு இளம் பெண்ணைக் கேட்ட போது சிறுமிகளைப் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தது உண்மைதான் என்றார். அவர் கூட புலிகள் பொதுமக்கள் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்றார். நான் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் அப்படித்தான் சொன்னார். இது தொடர்பாக சில வாக்குமூலங்கள் என்னிடம் உள்ளன ஆனால் அவைகளை என்னால் வெளியிட இயலாது நண்பர்களே.
போருக்குப் பின்னர் பௌத்த பேரினவாத பாசிச இலங்கை அரசுக்கு எதிராகவும் போரை நடத்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்தியாவுக்கு எதிராகவும் எவளவோ எழுதியிருக்கிறேன். அதில் எல்லாம் புலிகள் மீதான் இந்த விமர்சன ஊடாட்டத்தையும் நீங்கள் கவனிக்க முடியும். புலிகள் மீது ஒரு மென்மையான விமர்சனமும் இலங்கை அரசு மீது கடுமையான விமர்சனமும் இருக்கும். முன்பு புலிகளை கடவுள் என்றவர்கள் இன்று இலங்கை அரசை நக்கிப் பிழைக்கும் போது நான் எப்போதுமே புலிகளை கடவுள் என்று சொன்னதில்லை. அவர்கள் இருந்த போது நான் இன்னும் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும். இருக்கும் போது விமர்சிக்காமல் விட்டு விட்டு இல்லாது போன இப்போது விமர்சிப்பது தொடர்பான குற்ற உணர்வு என்னிடம் இப்போது இருக்கிறது.

2002 -ல் ஜெயலலிதா ஆட்சியில் வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். மோசமான அந்தக் காட்டாட்சியில் (கருணாநிதியின் இன்றைய ஆட்சியை அந்த ஆட்சியைக் கொண்டு சமன் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஜெ, கருணா இருவருமே காட்டாட்சி நடத்துவதில் சளத்தவர்கள் அல்ல) புலிகளைப் பற்றி பேசினாலே பாவம் என்ற எண்ணம் ஊடக உலகில் விரவிக் கிடந்த போது நான் சுப. தமிழ்செல்வனை நேர்காணல் செய்து அந்த மாயையை உடைத்தேன். அன்றிலிருந்து இறுதிவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நேர்காணல்களை புலித் தலைவர்களிடம் பெற்று வெளியிட்டிருக்கிறேன். இதற்காக பத்து காசையோ அல்லது வேறெந்த சலுகைகளையோ நான் யாரிடமும் பெற்றுக் கொண்டதில்லை. ஆனால் தமிழார்வலர், தமிழ் தேசியவாதி என்ற முத்திரை வந்து விழுந்ததுதான் மிச்சம். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத படிப்பறிவற்ற ஒருவனுக்கு தமிழார்வலன் என்கிற முத்திரை விழுந்த கதை இதுதான். நான் தமிழ் தேசியவாதி அல்ல தனித் தமிழ்நாட்டை நான் ஆதரிக்க மாட்டேன் என்று ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்தும் இந்த என் மீது குத்தப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர் அழிய மறுக்கிறது நான் என்ன செய்ய? 
நான் செய்த தவறு

சமகாலத்தில் தண்டகாரண்யா மக்கள் மீது இந்தியா ஒரு போரைத் தொடுத்திருக்கிறது. மெல்லக் கொல்லும் இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களையும், மாவோயிஸ்டுகளையும் அவர்களிடம் நிலங்களையும் வேட்டையாடி வருகிறது. காஷ்மீர் மக்கள் முழு அளவிலான ஒரு மக்கள் வன்முறையில் இந்தியாவுக்கு எதிராக கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். கல்லெறியும் சிறுவனின் நகங்களை இந்தியாவால் பிடுங்க முடிகிறதே தவிற காஷ்மீரிகள் தேசிய இன விடுதலை உணர்வை இன்று வரை பிடுங்க முடியவில்லை. காஷ்மீர், தண்டகாரண்யா மக்கள் மீதான இந்தியாவின் போருக்கு எதிராக இந்தியா முழுக்க அறிவுவீகள், இடதுசாரிகள், ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் எதிப்பைத் தாண்டி ஈழப் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் என்னும் வட்டத்தைத் தாண்டி நடக்கவில்லை என்பது ஒரு உண்மை. புலிகள் ஈழ விடுதலைப் போரை கையெடுத்துக் கொண்டதோடு இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை கண்கொண்டும் கண்டதில்லை என்பதோடு. சிங்ளனுக்கு எதிராக போராடும் ஏகாபோக உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை தடுத்தும் வந்திருக்கிறார்கள். பின்னர் பேரினவாத அரசுகள் இணைந்து நடத்திய யுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போன போது அனைத்து சக்திகளும் தங்களுக்காக போராட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது கடைசி வரை முழுமையாக நடக்க வில்லை. புலிகளின் அரசியல் நடைமுறைகள் அவர்கள் நம்பிய சக்திகள், மேற்குலகத் தொடர்புகள் அரசுகளை நம்பியிருந்தமை, இந்தியாவின் நிர்ப்பந்தத்தில் சரணடைந்தமை, அரசியல் அற்ற வெற்று இராணுவக் கண்ணோட்டம் என என்று புலிகள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு இதை நான் எந்த இடங்களிலும் மறைத்ததில்லை. இதில் நான் ஏதோ எழுதி விட்டு மறுத்தது போலவும் பேசி விட்டு பம்முவது போலவும் ஏன் பாவ்லா காட்டுகிறீர்கள் சோபாசக்தி. 
சுமார் ஐம்பதாயிரம் மக்கள் வரை இனக்கொலை செய்யப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் இந்தியாதான் எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்று நம்புகிற ஈழ மக்களும் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல சீனாவோ, மேற்குலக நாடுகளோ அமெரிக்காவோ எந்த ஒரு நாடும் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அக்கறையில் ஈழ மக்களுக்கு ஒரு போதும் உதவப் போவதும் இல்லை. விடுதலை பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை. (இதை லண்டனிலும் சொன்னேன்) இனியும் இவர்களை நீங்கள் நம்பினால் மிச்சம் மீதியிருக்கும் மக்களையும் இவர்கள் அழித்து விடுவார்கள் இதுதான் உண்மை. இதற்கு மேல் உங்கள் பாடு. அடுத்து காஷ்மீரில் கூட அடிப்படைவாதக் குழுக்கள், பாகிஸ்தான், இந்திய ஆதரவுக் குழுக்கள், தனி காஷ்மீர் கேட்டு போராடுகின்றன. இந்த எல்லா பிழையான போலிக் குழுக்களைக் கடந்து இந்தியா, பாகிஸ்தானில் இரும்புக்கரங்களில் இருந்து விடுதலை காஷ்மீர் கோரும் அமைப்புகளும் உண்டு. குழுக்கள் அவர்களின் அரசியல் பிழைகள், கொலைகள், காட்டிக் கொடுத்தல், என எல்லாம் போராளிக் குழுக்களிடம் இருந்தாலும் காஷ்மீர் மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய விடுதலை உரிமை உண்டா இல்லையா? அது போல ஈழத்திலும் புலிகள் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும் படுகொலைகளும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டம் இருந்தாலும் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை உண்டா இல்லையா? 
இலங்கையின் இனி தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடியாது என்பது என் கருத்து. ஆனால் இன்று ஈழத் தமிழர்களிடமே இந்தக் கருத்து இருக்கிறதா? ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் பல மாதங்களாக நிலவுகிறது. ஆக ஈழம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஈழ மக்களும் அவர்களை வழிநடத்தப் போகிற ஈழ இயக்கங்களும்தானே தவிற நான் தமிழகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருப்பதில் இனி அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அளவில் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு. அதை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஈழத்துக்காக இயக்கம் கட்டுவதா? வேண்டமா? என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.என்னுடைய புலி ஆதரவு நிலைப்பாடுகளில் அரசியல் பிழைகள் இருப்பதையும் ஏதோ ஒரு வகையில் நானும் புலிகளின் அழிவில் ஊடக ரீதியாக விமர்சனப்பார்வையற்று துணை போய் இருக்கிறேன் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக வலிமையான முறையில் அவர்களிடம் சில விமர்சனங்களை வைத்திருக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ வைத்திருக்கலாம். மற்றபடி மக்கள் விடுதலை தொடர்பான விஷயங்களில் நான் பேசிய விஷயங்கள் உள்ளிட்டு நான் பேசியதை சரியென நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக சோபாசக்தி, ரயாகரன், அ.மார்க்ஸ், ஆதவன், அல்லது இங்குள்ள புலி ஆதரவாளர்கள் விடும் வீரவசனங்கள் இதை எதையும் நான் எப்போதும் பொருட்படுத்தியதில்லை. 
இனியொரு
.....................
மற்றபடி உங்களையோ ஆதவன் தீட்சண்யாவையோ, அ,மார்க்ஸை, சுகன் குறித்தோ எழுதியதில் அவதூறுகள் எதுவும் இல்லை.மார்க்ஸ், ஆதவனின் இலங்கைப் பயணங்கள் குறித்து நான் எதுவும் எழுதியதும் இல்லை. மார்க்ஸ், ஆதவன் இருவருமே டக்ளஸை சந்தித்து விட்டு வந்து ஆதவன் வக்கிரமான தன் எழுத்தை எழுதியபோதும் நான் அதற்காக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் நான் உட்பட நண்பர்கள் எழுதிய எந்தக் கட்டுரைக்காவது நீங்கள் பதில் சொன்னதுண்டா? இக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் சோபா சக்தி. நான் உட்பட நண்பர்கள் எழுதிய கட்டுரைகளில் சில தகவல் பிழைகள் இருக்கும் அந்த தகவல் பிழைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த கட்டுரையையும் நிராகரித்து இதெல்லாம் அவதூறு என்று திசை திருப்பும் வேலையை கச்சிதமாக கன காலமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது லும்பினியிலும் அப்படியான ஒரு தகவல் பிழையை எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறீர்கள் தவிறவும் இலங்கை அரசை ஆதரிக்கிற எவரும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டா ஆதரிக்கிறார். லும்பினி கட்டுரையில் என்னை இனியொரு இணைய தள ஆசிரியர் என்று குறிப்பிடிருக்கிறீர்கள். இது தேசம் நெட், ரயாகரன் இவர்கள்தான் முதல் முதலாக இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியது. அதையே நீங்களும் அருள் எழிலன் இன்யொரு, குங்குமம் இதழ்களில் ஆசிரியர் குழுவில் இருப்பதாக எழுதி ஆள்காட்டி வேலை செய்திருக்கிறீர்கள். குகநாதனிடம் அருள் செழியன் இழந்த பணத்தை மீட்டது தொடர்பாக பிரச்சனை வந்த போது இனியொருவையும் புதிய திசைகளையும் சேர்த்தே அடித்தார்கள். நானே தோழர் நாவலனிடம் நான் இனியொருவில் எழுதுவதால்தான் உங்களுக்கு தர்மசங்கடங்கள் எழுகின்றன. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கடந்த ஒன்றரை மாதங்களாக நான் இனியொரு பக்கமே செல்வதில்லை. இந்த உண்மை உங்களால் தீபக்கிற்கு முன்னால் பிரான்சில் வைத்து தாக்கப்பட்ட நண்பர் அசோக் யோகனுக்கும் தெரியும். தவிறவும் புதிய திசைகள் தோழர்களின் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இனியொரு இருக்கிறது. கருணாநிதியிடம் கூலிக்கு மாரடிக்கும் என்னை மாதிரி தனி நபர்களால் தோழர்களுக்கும் கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு ஒதுங்கினேன் இதுதான் உண்மை. இப்போது நான் இனியொருவிலும் இல்லை வேறெந்த இணையதளங்களிலும் இல்லை. 
நீங்கள் எழுதும் லும்பினி இணையதளத்தை வசுமித்ர, மீனா இவர்களை ஆசிரியர்களாக் கொண்டு வெளிவருவதாகச் சொல்லப்படும் லும்பினியை இயக்குவது யார்? அசாதி என்ற பெயரில் தொழில் முதலாளிகள் மீதான் விமர்சனம், பிலால்முகம்மது என்னும் பெயரில் கீற்று மீதான் விமர்சனம், அங்குலிமாலா என்ற பெயரில் சீமானை அடித்து நொறுக்குவது என்று வெவ்வேறு பெயரிகளில் எழுதிய அந்த நபரை உங்களைப் போல நானும் ஆள் காட்டவா? ஆக மறைந்திருந்து கூலிக்கு மாரடிக்கிறவன் எல்லாம் யோக்கியவான் அருள் எழிலன் என்ற பெயரிலேயே எழுதும் நான் கூலிக்கு மாரடிக்கிறவனா? இதுதான் உங்கள் தலித், பின் நவீனத்துவ நீதியா? 
நீங்கள் ஒரு அரசு ஆதரவாளர்
.........................................................
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை எழுத்தாளரான நீங்கள் எப்போதாவது இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதுண்டா? எப்போதுமே உங்கள் கட்டுரை இலங்கை அரசை விமர்சனம் செய்வது போலத் துவங்கும் கடைசியில் இங்குள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களையும், புலிகளையும் டிரவுசரைக் கழட்டி விட்டு அமைதியாகிவிடும். ஒரு கட்டுரையில் ஒரு பகுதியை மட்டும் கணக்குக் காட்டாதீர்கள். எப்போதும் உங்களின் எழுத்து எதிர்ப்பியக்கங்களை பல வீனப்படுத்தவும் இயக்கம் கட்டுகிறவர்களை ஏளனம் செய்யவுமே பயன்பட்டிருக்கிறது. இலங்கை அரசை எதிகொள்ளும் எங்களை மாதிரி ஆட்களை அம்பலப்படுத்துகிறேன் ஆயாசப்படுத்துகிறேன் என்று இலங்கை அரசை மறைமுகமாக அதன் கொலை முகத்தில் இருந்து பாதுகாக்கின்றீர்கள். அதற்கு உறுதுணையாக கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பிடித்துத் தொங்குவீர்கள். நான் எங்குமே இலங்கை அரசை ஆதரித்ததும் இல்லை நான் புலிகளின் ஆதரவாளன் இல்லை என்று மாற்றிப் பேசியதும் இல்லை. நான் இப்போதும் இலங்கைக்கு எதிரான விவாகரங்களில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் பௌத்தம், தம்மம், என்று இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அறிவு பயங்கரவாதத்தை எமக்கு எதிராக வீசுகிறீர்கள். 
இலங்கை அரசு இன்று உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களோடும் எதிர்ப்பியக்கங்கள் மீதும் ஒரு உளவியல் போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய ஊடக அமைப்புகள், புரட்சி அமைப்புகள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பலான இந்த அமைப்புகள் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற தன்னார்வக்குழுக்களாக உள்ளனர் சமீபத்தில் சென்னை வந்து மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்ற ராகவன் கூட sldf அமைப்பில்தான் வேலை செய்கிறார். ஆனால் இவர்களுக்கும் அரசுக்குமான் தொடர்பு அது தொடர்பான ஆதரங்களை எடுப்பது எதுவும் சிரமமான காரியங்கள். என்கிற நிலையில் பல்வேறு தகவல்பிழைகளுடனே பல கட்டுரைகளை எழுத முடிகிறது இது ஏதோ எனக்கு மட்டும் என்று நினைத்து வீடாதீர்கள். எல்லோருக்கும் நேரும் தர்மசங்கடம்தான் இது. ஆனால் அந்தத் தகவல் பிழையை எடுத்து ஒரு கட்டுரையையே நிராகரிக்கிற போக்கை என்னவென்று சொல்வது? 
கலகத்தின் பெயரால் பேரினவாதத்தை ஆதரிக்கிறவர் நீங்கள்.
.............................................

பெருந்தொகையான சிறுபான்மை தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள பேரினவாதம் அதன் மத அடையாளமான பௌத்தத்தை இன்று ஈழம் எங்கும் நிரவி வருகிறது. இந்துக் கோவில்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டு பௌத்த விஹாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக செய்து வரும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வாழ்வுரிமையை மறுத்து நிற்கிற இலங்கைச் சூழலை பாசிசம் என்று நான் சொல்கிறேன். இல்லை நீங்கள் சொல்வது தவறு அங்கு நிலவுவது பாசிசம் அல்ல என்றால் அதை நிரூபியுங்கள். இதுவரை நீங்கள் நம்பியதாகவும் பேசியதாகவும் சொல்லப்பட்ட அரசியலைப் பேச தடையாக இருந்த புலிகள் இப்போது இல்லை. ஆனால் அதற்கப்பாலும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகள் இப்போது இலங்கைக்கு வெளியே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்தக் சக்திகளோடு இணைந்து நீங்கள் பயங்கரவாத இலங்கை அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்றுதான் போருக்குப் பின்னர் உங்களை எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்களோ இலங்கைக்கு எதிராக வெளியில் உருவாகும் எதிர்ப்புச் சக்திகளை தந்திரமாகத் தாக்கத் துவங்கி விட்டீர்கள். 

இக்கட்டுரையில் சுயவிமர்சனமாக என்னை நான் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டதும். அதை உணர்வதும் உங்களுக்காகவோ என்னைத் தாக்குகிறவர்களுக்காகவோ அல்ல மாறாக நான் எப்போதும் துணையாக நிற்கும் ஈழ மக்களுக்காக ஆமாம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக போராடுகிறார்கள் என்றே புலிகளை ஆதரித்தேன். எதிர்காலத்தில் அந்த மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவேன். ஆனால் நீங்கள் உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது அரசியல் நோங்கங்கள் உள்ளனவா? அ.மார்க்ஸ் எதைச் சார்ந்து இயங்குவாரோ அதற்கு தூபம் போடுகிற சீடப்பிள்ளைகள் நீங்கள் ஆனால் நான் யாருக்கும் எப்போதும் சீடனாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடவை ஒட்டி மார்க்ஸ்சிஸ்டுகள் மீது தலித் அரசியலை ஆயுதமாக்கி உங்கள் ஆசான் அடிக்காத அடியா? அதைத்தானே நீங்கள் ஈழத்தில் செய்தீர்கள். இப்போது காலாவதியாகிப் போன பின்நவீனத்துவத்தை விட்டு விட்டு காந்தியிசம், நபிகள் நாயகம் என்று மாறி மாறி இப்போது அவர் சி,பி.எம் கட்சியில் செட்டிலாகியிருக்கிறார். நீங்களோ உங்களை டிராஸ்கியிஸ்ட் என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள். தண்டகாரண்யாவிலும், ஈழத்திலும் இந்தியா நடத்திய போரை ஆதரிக்கிற அல்லது மௌனமாக இருக்கிற ஒரு கட்சியை எப்படி பின் நவீனத்துவாதிகள் ஆதரிக்க முடியும் என்ற கேள்வியையாவது உங்கள் ஆசானிடம் கேளுங்கள். 
அதே சீனப் பழமொழியை உங்களுக்கு இப்படிச் சொல்கிறேன்.

" தயவு சென்ற வழியே அப்படியே சென்று விடுங்கள் ஒரு போதும் நீங்கள் திரும்பி வர வேண்டாம் நீங்கள் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரி.........எதிரிகள்".

 
Posted by டி.அருள் எழிலன் at
 
 
27 comments: Anonymous said...

அய்யா அருள் எழிலன் அவர்களே இவர்கள் எப்போதுமே மக்கள் எதிர்கள். இதை நீர் எமக்கு அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எல்லோருக்கும் புலிகள் மீது விமர்சனம் இருக்கு. ஆனால் அதை எந்த இடத்தில் நின்று கொண்டு வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் உண்மையாகத்தான் நீங்கள் உள்ளீர்கள். இவர்கள் லும்பன்கள். சீரழிவு சக்திகள் . எதுக்கு இத்தனை பெரிய விளக்கம்.

  Anonymous said...

ஆதவன் தீட்சண்யாவின் தலித் அரசியலை இவர்கள் துவக்கத்திலேயே அடையாளம் காண முடியவில்லை. மார்க்ஸ் சி.பி,எம்- ல் செட்டிலாகிற வரை சோப்பு டப்பாவுக்கு ஆதவனைத் தெரியவில்லை. அப்புறம்தான் லண்டனுக்கு அழைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி அனுப்பி வைத்தார்கள்.

  Anonymous said...

புலிகள் போனபோதே நீங்களெல்லாம் கூடப்போய் தொலைந்திருக்கலாம்

  பைத்தியக்காரன் said...

வார்த்தைகளை அள்ளிவிடாமல், போகிற போக்கில் அவதூறுகளை தெளிக்காமல், நிதானமாக இடுகையை எழுதியிருக்கிறீர்கள். 

இதில் நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை... 

அவதூறுகளையே இலக்கியமாக எழுதுபவர்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்?

தொடர்ந்து எழுதுங்கள்... உங்களை அறிந்தவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும். அறியாதவர்கள், இந்த இடுகையின் வழியே உங்களை அறிந்துக் கொள்வார்கள்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

  Anonymous said...

/ புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியாக கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்.// இது உங்களது FBல் நீங்களே எழுதியதுதானே. இதுதானே உங்களது கருத்து. பின்னே நீங்கள் பேசாத ஒன்றை நான் பேசியதாக நீங்கள் சொல்வதில் என்ன தர்க்கமிருக்கிறது.

புலிகளின் ஆதரவாளர்களுக்கு நான் பதில் சொல்வதில்லையா? அடப் போங்கப்பா தோழர் தியாகுவுடன் விவாதித்து 100 பக்கங்களில் புத்தகமே வந்துள்ளது. யமுனா ராசேந்திரன், முதற்கொண்டு சபேசன், சாத்திரிவரை எத்தனை விவாதங்கள் - எத்தனை மறுப்புகள்...'அவதூறு மட்டுமே சொல்பவர்களுக்கு ஷோபா பதில் சொல்வதில்லை' என உங்கள் கருத்தைத் திருத்திக்கொள்ளுங்கள்.

அப்புறம் டக்ளஸின் ஆதாரவானன் நான் என மறுபடியும் உங்கள் அவதூறை ஆரம்பித்துவிட்டீர்கள். இது குறித்து ம.க.இ.க. மருதையனுக்கு போட்ட மனுவே இன்னும் பெண்டிங்கில் இருக்கிறது. இப்ப நீங்க வேறயா! நான் கூட அருள் எழிலன் இந்திய உளவுத்துறையின் உளவாளி என ஒரு பொய்யை எழுத முடியும். என்னிடமும் தானே கீபோர்ட் இருக்கிறது. எனக்குக் கேலிச் சித்திரம் வரையவும் வரும். ஆனா; அது உண்மையாகிவிடாது.

அப்புறம் வேலை விசா என்று ரொம்பத்தான் ஆடுறீங்க. கடந்த மாதம்வரை ஒரு கல்லூரியில் அடிமட்டப் பணியாளாராக வேலை செய்தேன். எனக்குக் கங்காணியாய் இருந்தவர் 'ஈரோஸ்' அழகிரி. சம்பளப் பட்டியலை உங்களுக்கு இப்போதே அனுப்பிவைக்கவா? அல்லது இந்தியா வரும்போது கையோடு கொண்டு வரவா? நல்லாக் கேங்கறாங்கய்யா டீடெயிலு!

வேலையற்றவர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதிக் கொடுப்பனவை பெற்றால் தவறா? அது நமக்குச் சும்மா வழங்கப்படுவதில்லை. நமது ஊதியத்தில் பிடித்துவைக்கப்பட்ட தொகையையே வேலையில்லாத நாட்களில் பெற்றுக்கொள்கிறோம். பிரஞ்சுத் தொழிலாளர் வர்க்கம் ரொம்பப் போராடிப் பெற்ற உரிமையுங்க இது. இதில கை வையாதீங்க!!

அப்புறம் விசாப் பிரச்சினை...மூன்று வாரமல்ல மூன்று மாதமே தூதுவரக வாசலில் காத்துக்கிடந்த அனுபவம் எனக்கு உண்டு. ஏங்க வருடம் ஓர்முறை இந்தியாவுக்கு புத்தக சந்தைக்காகவும் எனது பெற்றோர்களைப் பார்க்கவும் நான் வருவது உங்களுக்குப் பிடிக்கலையா?

இலங்கை அரசை எதிர்த்து நான் பேசினதேயில்லையா? ரொம்பத் தவறு தோழர். சும்மா கேட்கிறேன்.. 'ம்' நாவல் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன? அது அரச ஆதரவு நாவலா? வேண்டுமானால் நான் புலியை ஆதரித்து எழுதியது இல்லை எனத் திட்டுங்கள். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு தகவலுக்காகக் கேட்கிறேன் அருள் எழிலன் உங்களது Face Book - Infoல் உங்களுக்குப் பிடித்த புத்தகம் Mmm என நீங்கள் எனக் குறிப்பிட்டிருப்பது 'ம்' நாவலையா

நீங்கள் மறுபடியும் மறுபடியும் உளவாளி கைக்கூலி என்று அவதூறு சொல்வதிலேயே கருத்தாக இருக்கிறீர்கள். பதில் சொல்லியே என் காலம் கழியட்டும்..பரவாயில்லை.

வேறு கேள்விகள் ஏதாவது உண்டா அருள் எழிலன்?

-ஷோபாசக்தி

  Anonymous said...

//இதில் நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை...//

நான் அளித்திருக்கும் பதில்கள் போதாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் கேள்விகளைத் தொகுத்துத் தாருங்கள் பைத்தியகாரன். நான் உடனடியாகவே பதில் அளிப்பேன். இதுவொரு இருபத்துநான்கு மணிநேர சேவை.

தங்கள் பணியில்
ஷோபா

  Anonymous said...

ஷோபா உங்களுக்கான பதில் இதோ, உங்களையும் உங்கள் குழுவினரையும் வளர்மதி மிகச் சரியாக கணித்து எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறை ஈழ ஆதரவாளார்கள் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் நீங்களும் சரி உங்கள் ஆதரவாளர்களும் சரி பதில் சொன்னதில்லை. ஆனால் பதில் சொன்னது போன்ற சலிப்பை இங்கே கொட்டுகிறீர்கள். தோழர் தமிழச்சியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நண்பரே எல்லா காலத்திலும் எல்லோரும் கேணக்..... இருந்து விடுவதில்லை. உங்களுக்கான என் பதில் இதோ,,,, 
நான் லண்டனில் பேசியதைத்தான் f,b, யிலும் எழுதினேன். இந்தக் கட்டுரையிலும் எழுதினேன். இன்னொரு முறை வேண்டுமென்றாலும் சொல்கிறேன். மக்களை விடுவிக்க புலிகளை நோக்கி கோரிக்கை வைப்பது பேரினவாத இலங்கை அரசின் கோரிக்கையே.... புரிந்ததா? இதுதான் நான் சொன்னது ஆனால் நீங்கள்........ நான் புலிகள் மக்களை பிடித்து வைத்திருப்பதாக எழுதுவதாகச் சொல்கிறீர்கள்.......இது பற்றி விரிவாக கட்டுரையில் உள்ளதே??????? 
# இந்தக் கட்டுரை தொடர்பாக எழுதும் போதே எனக்குத் தெரியும் தியாகு நூலையும் ஒரு கணக்கில் கொண்டு வருவீர்கள். 

# நீங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளன் என்பதோடு இலங்கை அரசின் ஆதரவாளன் என்று சொல்கிறேன். இது அவதூறு அல்ல. நீங்கள் sldf அமைப்பில் உறுப்பினராகவோ, தொடர்புடையவராகவோ இருக்கின்றீர்களா? அந்த அமைப்பை இலங்கையில் இருந்து நடத்துகிற ராகவன், ரங்கன் ஆகியோர் இப்போது இலங்கை செல்வதற்கு முன்னால் சென்னைக்கு வந்து அ.மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்றார்களா? sldf அமைப்பிற்கும் ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் தொடர்புண்டா? யாழ்பாணத்தில் சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு ஆதரவாக sldf செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? நேற்று உங்கள் இணையதளத்தில் ராகவன் தொடர்பாக ஒரு கட்டுரை போட்டு விட்டி அதை ஏன் உடனடியாக நீக்கினீர்கள். அல்லது நான் பொய் சொல்கிறேனா? 
#உங்களை உளவாளி என்று நான் எந்த இடத்திலும் சொல்ல வில்லை உங்களை ஒரு இலங்கை அரசின் ஆதரவாளர் என்று மட்டுமே சொல்கிறேன். 

# வேலையில்லாதவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவது தவறு என்று நான் எங்குமே சொல்லவில்லை. அதை பெற்றுக் கொள்கிற நீங்கள் எங்குமே வேலைக்குச் சென்றதில்லை என்கிறேன். இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு ( எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது) சென்று வர கடும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது நீங்கள் மட்டும் எப்படி நினைக்கும் பொழுது இந்தியா வர முடிகிறது என்று கேட்டேனே தவிற எங்குமே நீங்கள் இந்தியா வரக்கூடாது என்று சொல்லவில்லையே? 

டி.அருள் எழிலன்.

  Anonymous said...

//இலங்கை அரசின் ஆதரவாளன் என்று சொல்கிறேன்//அருள் எழிலன். 

நான் இலஙகை அரசின் 'உளவாளி' என்பதிலிருந்து இலங்கை அரசின் 'ஆதரவாளன்' மட்டுமே என்ற டீ பிரமோஷன் கிடைத்தது ஒரு வகையில் மகிழ்ச்சியே. இனி அருள்எழிலனோடு விவாத்தைத் தொடர்வதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உண்டு. எனது 15 வருடகால எழுத்துகளிலிருந்து இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு பத்திகூட வேண்டாம், ஒரேயொரு சொல்லை அருள்எழிலனோ அல்லது இலங்கை அரசின் ஆதரவாளன் என என்னைக் குற்றம் சுமத்துபவர்களோ எடுத்து வைக்கட்டும். இப்படியே அரசியலை விட்டே ஓடிப் போய்விடுகிறேன்.

- ஷோபாசக்தி

  Anonymous said...

//ஷோபாவின் இணையதளத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எதுவுமே எழுதியதில்லை. //

அப்டீங்களா அருள் எழிலன். நான் 'அப்படி எழுதினேன்' 'இப்படி எழுதினேன்' என நானே சொல்வது சற்றுக் கூச்சத்தைக் கொடுத்தாலும் நீங்கள் கேட்பதால் பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது சும்மா ஒரு சாம்பிள்தான். படித்துப்பாருங்கள். இந்தக் கட்டுரையில் கண்டிக்கப்படுவது இலங்கை அரசா அல்லது கஸகஸ்தான் அரசா என இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=503

- -ஷோபாசக்தி

  Anonymous said...

ஷோபாவுக்காக -அவசியமான திருத்தங்கள்
http://ethir.org/?p=819

  Anonymous said...

சேனனுக்காக - சொல்லிச் சொல்லி அலுத்துப் போன விளக்கங்கள்:

சேனன்!

அருள் எழிலன் லண்டன் மாநாட்டில் அவ்வாறு பேசவில்லை என எழுதியிருக்கிறீர்கள். (எனது கட்டுரை FB விவாதங்களைத் தொகுத்து எழுதியது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தொடர்ந்து படியுங்கள்). நான் தேசம் நெட் செய்தியை ஆதாரமாக வைத்தே அருள் எழிலன் அவ்வாறு பேசினார் என எழுதியிருந்தேன். FBல் அருள் எழிலன் தான் அவ்வாறு பேசியதில் தவறில்லை என வாதிட்டார். தேசம் நெட்டின் செய்தி தவறானது என அவர் அப்போது சொல்லவில்லை. மாறாக "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியான கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்" என அவர் உறுதிபட FBல் எழுதினார். இதற்கு மேல் என்ன ஆதாரம் வேண்டிக்கிடக்கிறது. FBல் எழுதும் கருத்துகள் ஆதாரமாகாதா? மாநாட்டில் அவர் அவ்வாறு பேசவில்லை எனில் அதைச் சொல்லியல்லவா அவர் விவாதத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். நானும் 'அவதூறு செய்யும் தேசம்' என இன்னொரு கட்டுரை எழுதியிருப்பேனல்லவா.

நான்கு நாட்களாக FBல் விவாதம் செய்த எழிலன் இன்று திடீரென நான் அப்படிச் சொல்லவேயில்லை என்பதை எவ்வாறு புரிந்தகொள்வீர்கள்? நீங்கள் இணைத்திருக்கும் ஒலிநாடா வெளியிட்டவர்களாலேயே 'எடிட்' செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லையா சேனன்? புலி ஊடகங்களின் யோக்கியதை நீங்கள் அறிந்ததுதானே.

அருள் எழிலன் 'இனியொரு' ஆசிரியர் குழுவில் இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்புவரை 'இனியொரு'வில் ஆசிரியர்கள் என்ற பகுதியில் நாவலன், அசோக் ஆகியோருடன் எழிலனின் பெயரும் இருந்தது. இப்போது யாருடைய பெயரும் இல்லை. ஆவிகளால் நடத்தப்படும் இணையமாகிவிட்டது அது. இப்போது எழிலன் தான் இனியொருவிலிருந்து ஒதுங்கிவிட்டதாகச் சொல்கிறார். நல்லது! வாழ்த்துகள்!! ஆனால் நான் குறிப்பிட்ட அ.மா, ஆதவன் குறித்த அவதூறுகள் வெளியான காலப்பகுதியில் (மார்ச் 2010) எழிலன் இனியொருவின் ஆசிரியர்களில் ஒருவரே.

அந்த நான்கு கோரிக்கைகளும் போராளிகளின் சார்பில் முன்வைக்கப்படவையே என்பதை சி. புஸ்பராஜாவும் உறுதி செய்கிறார் (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் 'பக்: 400). அந்தக் கோரிக்கைகளை வரதராஜப்பெருமாளே எழுதினார் என்பதை அவரின் பிரான்ஸ். EPRLF மாநாட்டு உரையிலிருந்து நான் பெற்றுக்கொண்டேன். சார்ள்ஸ் வேறுவிதமாச் சொல்கிறார் என்கிறீர்கள். அவர் எங்காவது அவ்வாறு இதுவரை எழுதியதில்லையே. உங்களிடம் தொலைபேசியில் அவர் சொன்னது உங்களுக்கு ஆதாரம். வரதராஜப்பெருமாள் பகிரங்கமாக மாநாட்டிலும் TBC வானொலியிலும் பேசியது எனக்கான ஆதாரம். எந்த ஆதாரம் பொருட்படுத்தக் கூடியது என்பது உங்களது முடிவு. வரதராஜப் பெருமாளுக்கு வக்காலத்து வாங்குவதல்ல என்னுடைய நோக்கம். அவரின் அரசியல் வரலாறைக் குறிப்பிட்டு அவர் ஒன்றும் உருவாக்கப்பட்ட பொம்மையல்ல எனச் சொல்வதே எனது நோக்கம்.

INSDக்கும் எனக்கும் இரு தடவைகள் பார்வையாளனாக அவர்களது கருத்தரங்கில் கலந்துகொண்டேன் என்பதைத் தவிர வேறு எந்த உறவுமில்லை. (சென்ற மாதம் பாரிஸில் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் நடத்திய குறும்பட விழாவுக்குக் கூடப் பார்வையாளனாகப் போயிருந்தேன்) SLDFவோடு அதுகூட இல்லை. அவர்களது கருத்தரங்குகளுக்கு பார்வையாளனாகக் கூட இதுவரை சென்றதில்லை. INSDயின் NGO உறவுகளும் அவர்களது அரசியலும் விமர்சனத்துக்குரியவையே. ஆனால் அவர்கள் ஒருபோதும் ராஜபக்ச அரசின் ஆதரவாளர்கள் அல்லவென்பதை அவர்களின் கருத்தரங்குளை வைத்து என்னால் சொல்ல முடியும். அது உங்களுக்கு ஏற்பில்லை எனில் நீங்கள் அவர்கள் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். எனது கட்டுரையில் நான் குறிப்பிட்ட பிரச்சினை INSD இலங்கை அரசிடம் நிதி பெறுகிறது என்று எழிலன் சொல்லிய கருத்து தவறு என்பதுதானே ஒழிய INSDயை நியாயப்படுத்துவது எனது நோக்கமில்லை. 

'சனல் 4' வீடியோ INSD உறுப்பினர்களால் அனுப்பப்பட்டதுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள். இலங்கை நாடாளுமன்றிலேயே INSD மீது குற்றம் சாட்டப்பட்டது. INSD தலைமைச் செயற்பாட்டாளர் ரஞ்சித்தின் முகவரியிலிருந்தே அது அனுப்பப்பட்டது. அதை அனுப்பிய சிங்களத் தோழர் அப்போது ரஞ்சித்துடனேயே தங்கியிருந்தார். அப்போது அந்தத் தோழர் INSDயின் உறுப்பினரே. இப்போது அவர் அதன் உறுப்பினரா என எனக்குத் தெரியாது.

சேனன் உங்களிடம் ஒரு கேள்வி. கிளிநொச்சியிலிருந்து மக்கள் இயல்பாகவே புலிகளுடன் முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்ந்தார்கள் எனவும், முள்ளிவாய்க்காலில் புலிகள் தப்பியோடிய மக்களைச் சுடவில்லை எனவும்அருள் எழிலன் சொல்பவை குறித்து உங்களது கருத்தென்ன? நேரமிருக்கும் போது பதில் எழுதுங்கள்.

ஏனெனில் இதுதான் எனது கட்டுரையின் மையப்பொருள்.

நான் டக்ளஸ் தேவானந்தாவினதும் அரசினதும் ஆதரவாளன் என்பது குறித்தும் உங்களது கருத்துகளைத் தெரிந்துகொள்ள விரும்பம். ஏனெனில் இதுதான் அருள் எழிலனின் விவாத்தின் மையப்பொருள்.

-Shobasakthi

  Anonymous said...

ஷோபாசக்தி உங்களை ஒரு இலங்கை அரசின் ஆதரவாளர் என்கிறேன்., இதில் நான் நான் எந்த அவதூறுகளையும் செய்ய வில்லை. என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. உங்களின் எழுத்துக்களும் நடவடிக்கைகளுமே அப்படியான் எண்ணத்தை உருவாக்குகின்றன. sldf பற்றியும் நீங்கள் உங்கள் இணையத்தில் போட்டு விட்டு எடுத்த கட்டுரையும் பற்றியும் பதிலும் சொல்லவே இல்லை. மற்றப் படி ஒரு சமூகப் போராளியின் எழுத்து என்பது தார்மீர்க ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகளை பிரதானபடுத்த வேண்டுமே தவிற ஒடுக்குமுறைக்குள்ளாகும் சக்திகளை பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது? உங்களின் எழுத்துக்கள் ஈழ மக்களின் எதிர்ப்பரசியலை பலவீனமாகியது. புலிகளை விமர்சிப்பது மட்டுமல்ல புலிகள் விமர்சிக்கும் போது நான் உங்களின் நண்பனாக இருந்தேன். இப்போது புலிகள் இல்லை இப்போதும் நீங்கள் எந்தப் பக்கம் எனப்துதான் என் கேள்வியே?

//SLDFவோடு அதுகூட இல்லை. அவர்களது கருத்தரங்குகளுக்கு பார்வையாளனாகக் கூட இதுவரை சென்றதில்லை. INSDயின் NGO உறவுகளும் அவர்களது அரசியலும் விமர்சனத்துக்குரியவையே.// 
பொய் சொல்லுகிறீர்கள் ஷோபா. sldf பற்றி நீங்கள் உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள் நான் என்னை சுயவிமர்சனம் செய்கிறேன். நீங்களோ அதை சுயவிமர்சனம் எனப்தை தமிழ் தேசியவாதிகள் மீது வீசுகிறீர்களே தவிற நான் உங்களை அரசின் ஆதரவாளன் என்று வழக்கம் போல அவதூறு செய்வதாகச் சொல்லுகிறீர்கள். 

டி.அருள் எழிலன்.

நவம்பர் 4, 2010 at 11:06 Anonymous said...

ஜார்ஜ் ஆர்வெலின் தீவிர கம்யூனிச எதிர்ப்பு தன்மையிலான எழுத்துக்களை மேற்குலக அறிவுலகம் சோசலிச நாடுகளுக்கு எதிரான பிரச்சாரங்களில் அதிக அளவில் பயன்படுத்தியது. ஆனால் அவர் பிரிட்டிஷ் உளவு துறையினருக்காக வேலை செய்தார் என்ற குட்டச்சாட்டு பொதுவாக உண்டு. சில வருடங்களுக்கு முன்னால் ஜார்ஜ் ஆர்வெல் உண்மையில் பிரிடிஷ் உளவுத்துறைக்கு வேலை செய்தார் என்ற செய்தியை லண்டன் டெலிகிராஃப் வெளியிட, அது தி இந்து விலும் வெளியாகியிருந்தது. ஜார்ஜ் ஆர்வெல் ஒரு இடதுசாரி என்ற பிம்பம் தங்களுடைய நோக்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று உளவுத்துறை நம்பியது என்றும் அந்த செய்தி கூறியது. தன்னுடைய விலங்கு பண்ணைக்கான முன்னுரையில் ஐரோப்பாவில் நிலவும் பத்திரிகை சுதந்திரத்துக்கு இருந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்வெல் எழுதியிருந்தார். அது அரசால் தணிகை செய்யப்பட்டு நீக்கப்பட்டது. ஆக உளவுத்துறையினருக்காக செயல்படுவோர் வெளிப்படையாக அரசு ஆதரவாளராக இயங்குவர் என்று எதிர்பார்ப்பது தவறு. ஏனென்றால் அதனால் அவர்களின் நோக்கமே அடிபட்டுவிடக் கூடும். எனவே ’வெளிப்படையாக’ ஷோபா சக்தி இலங்கை, இந்திய அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறாரா என்ற தளத்திலிருந்து மட்டும் அல்லாமல் அவருடைய பிரச்சாரங்கள் எந்த அளவில் ஈழ பிரச்சினை பற்றிய நிலைபாடுகளில் இலங்கை, இந்திய அரசின் பிரச்சாரங்களுடன் ஒத்திருக்கிறது என்பதையும், அவர் தொடர்புகொண்டிருக்கும் அமைப்புகளின் நிலைபாடுகள் என்ன என்பதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே அவர் யாருக்காக இயங்குகிறார் என்ற முடிவுக்கு வரவேண்டும். விவாதங்களும் மேற்கண்ட எல்லா விவரங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டே எடுத்து செல்ல வேண்டும்.

பிரிட்டிஷ் அரசையே விமர்சித்த ஆர்வெல் பிரிட்டிஷ் உளவு துறைக்கு தான் கம்யூனிஸ்ட் என்று சந்தேகிக்கும் நபர்களின் பட்டியலை கொடுத்தார் என்பதும் அவர்களில் சார்லி சாப்ளின், பால் ராப்சன், ஜே.பி. பிரீஸ்ட்லி ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிட தக்கது."
Jose Antoin
thanks.
face book

நவம்பர் 4, 2010 at 11:25 Anonymous said...

இலங்கைக்கு எதிராக எதிர்ப்பியக்கம் கட்ட இலங்கைக்கு வெளியே நல்ல சூழல் நிலவும் காலமது. ஆனால் அந்த முயர்ச்சிகள் எதுவும் ஈழத் தமிழர்கள் எவரிடமும் இல்லை. ஷோபாசக்தியிடமும் இல்லை. இலங்கைக்கு எதிராக உருவாகியிருக்கும் மிகப்பெரிய அதிருப்தியை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு இலங்கையை எதிர்க்கும் சக்திகளை பலவீனப்படுத்தும் அறிவுத் தந்திரத்தைத்தான் ஷோபா, அ,மார்க்ஸ் போன்றோர் செய்கிறார்கள். இதுதான் எனது குற்றச்சாட்டு. ஆதாரம் எங்கே என்று கேட்கிறீர்கள் இலங்கையை நான் ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டா ஆதரிக்கிறீர்கள். இதை எல்லாம் கடந்து இன அழிப்பு போரின் போது வெளிவந்த புதுவிசை இதழே சாட்சி என்றாலும் எல்லாவற்றையும் அவதூறு என்று நிராகரிக்கிறார் ஷோபா.

நவம்பர் 4, 2010 at 11:46 Anonymous said...

ஷோபாசக்தி நான் லண்டனில் பேசியதை எங்கே எப்போது மறுத்தேன் என்பதை நீங்கள் சொல்ல முடியுமா? தோழர் சேனன் அவர்களுக்கும் நான் இதைத்தான் சொல்கிறேன். ஆனால் நான் லண்டனில் பேசியதாக ஷோபா இப்படிச் சொல்கிறார். "மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே" உண்மையில் நான் பேசியது இதுதான் "புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியான கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்" என்று எழுதியதை ’’மக்களைப் புலிகள் விடுவிக்காமலிருந்தது நீதியே" என்று தந்திரமாக திரிக்கும் எழுத்துச் சித்தர் ஷோபா. மறைமுகமாக மக்களை புலிகள் பிடித்து வைத்திருந்ததை ஒத்துக் கொண்ட தோற்றத்தை என் மீது உருவாக்குகிறார். புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதே சிக்கலான விஷயம். இது தொடர்பாக பலரையும் சந்தித்த போது ஷோபா சொல்வது போன்றோ, அல்லது புலி ஆதரவாளர்கள் சொல்வது போன்றோ அல்ல இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன. உடனே ஒலிநாடாவை எடிட் செய்திருக்க வாய்பில்லையா? என்கிறீர்களே இது கேவலமாக இல்லையா? ஷோபா. 
அடுத்து,
//இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் மக்கள் புலிகளிடம் பட்ட கற்பனைக்கும் எட்டாத துயரங்களையும் புலிகளின் மிருகத்தனமான கொடூரங்களையும் குறித்து நிறையப் பேர்கள் சாட்சியமளித்துவிட்டார்கள். ஆனால் அவற்றையெல்லாம் எழிலன் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. களத்திலிருந்து கருணாகரனும், நிலாந்தனும், யோ. கர்ணனும் சொன்னார்கள். தமிழகத்திலிருந்து த. அகிலன் சொன்னார். புலம் பெயர் நாடுகளிலிருந்து நாங்கள் சொன்னோம். எதையும் எழிலன் நம்ப மறுக்கிறார். தனது வழக்கப்படி இவ்வாறு சொல்பவர்களை 'அம்சாவின் அடிவருடிகள்' என்று அழைக்கவும் அவர் தயங்கமாட்டார்.// 
உண்மைதான் நீங்கள் பட்டியலிட்ட நபர்கள் எல்லோரும் புலிகளுக்கு எதிராக மட்டுமே என் காதில் ஓதினார்கள் அதுதான் பிரச்சனையோ ஆனால் இனியொரு தோழர் நாவலனோ, புலிகளுக்கு எதிராக இருந்து போரின் பின்னர் இலங்கைக்கு அரசுக்கு எதிராக நிற்கும் தோழர்களோ புலிகள் செய்த தவறுகளையும் சொன்னார்கள். அதை விட இலங்கை அரசு செய்த பச்சைப் படுகொலைகளையும் செய்தார்கள். அதுதான் அரசியல் ரீதியாக சரி என நினைக்கிறேன். சரி நீங்கள் குறிப்பிடும் இவர்கள் இப்போது என்ன அரசியல் நிலைப்பாடுகளோடு இலங்கைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஷோபா எனக்கு நீங்கள் சொல்ல முடியுமா? 

டி.அருள் எழிலன்.

நவம்பர் 4, 2010 at 12:10 PM Anonymous said...

எதிரியின் எதிரி நண்பன்"

http://srisagajan.blogspot.com/2010/11/blog-post.html


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

நவம்பர் 4, 2010 at 12:36 PM YOGA.S.Fr said...

இந்த விவாத அரங்கில் கூறப்பட்ட இறுதிக் கட்ட இன அழிப்பின் பின்னர் சிலரிடமிருந்து அனுபவங்கள் அல்லது சாட்சியங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக குறிக்கப்பட்டிருந்தது!வெளியிட முடியாது என்றும் கூறியிருந்தீர்கள்!எங்களுக்குக் கூற வேண்டாம் ஐ.நா செயலாளர் தனக்கு ஆலோசனை வழங்கும் நோக் கில் அமைத்த குழுவினர் இப்போது சாட்சியங்களைக் கோருகிறார்கள்!அளிக்கலாமில்லையா?

நவம்பர் 4, 2010 at 1:27 PM Anonymous said...

YOGA.S.Fr நிச்சயமாக தமிழகத்தில் வாக்குமூலங்கள் கணிசமான அளவுக்கு சேகரிக்கப்பட்டிருக்கின்றன. ஐநாவிடம் ஒப்படைக்கப்பட்டும் இருக்கிறது. நானும் இதை உரியவர்களிடம் வழங்குகிறேன். ஆனால் இதில் நகைச்சுவை என்ன வென்றால் ஏகாதிபத்திய கொடூரங்களை என்னவென்றே தட்டிக் கேட்காத ஐநாவும், மனித உரிமை அமைப்புகளும் எங்கள் மக்களைக் கொன்றொழித்தவர்களை தண்டிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் அல்லவா? அதுதான் நாம் சம்காலத்தில் சந்திக்கும் முரண். என்ன செய்ய ஆனாலும் கொடுப்போம்.

டி.அருள் எழிலன்.

நவம்பர் 4, 2010 at 1:46 PM Anonymous said...

//சமீபத்திய போரிலும் கூட ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் “சுமார் ஒரு லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்கிற ரீதியில்தான் அவர்கள் அறிவார்களே தவிர, விடுதலைப் புலிகளால் 3 லட்சம் தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை.// இதுதான் ஷோபாசக்தியின் இலங்கை அரசுக்கு எதிரான எழுத்து. இவர் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறார் என்பதை நாம் நம்புவோம்.

நவம்பர் 4, 2010 at 2:05 PM Anonymous said...

இலங்கை அரசுக்கு எதிராக ஷோபா சக்தி எழுதியதாகச் சொல்லப்படும் கட்டுரைகள் இதுதான். நம்புவோம் இவரை இலங்கை அரசுக்கு எதிரானவர் என்று.
..................................
1. இம்மாத ‘காலச்சுவடு’ இதழில் ‘ஈழப்போரின் இறுதி நாட்கள்’ என்ற மனம் பதைக்க வைக்கும் நீள்கட்டுரை வெளியாகியிருக்கிறது. புலி ஆதரவாளர்கள், அரச ஆதரவாளர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் முன்முடிவுகளையும் சாய்வுகளையும் சற்றே தள்ளிவைத்து விட்டு நிதானமாகப் படிக்க வேண்டிய கட்டுரையிது.
இந்தக் கட்டுரை ராஜபக்ஷவின் கைக்கூலிகளால் எழுதப்பட்டது என்றோ, ஒட்டுக்குழுக்களின் சித்துவேலை என்றோ பழிக்கப்படலாம் அல்லது இதைக் கண்டுகொள்ளாமலே விடும் தந்திரமும் நடக்கலாம். ஒருவர் உண்மையை எதிர்கொள்ள மறுப்பதால் உண்மைக்கு இழப்பு ஏதுமில்லை என்பதைத்தான் இப்போதைக்குச் சொல்லிவைக்க முடிகிறது.
கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும். ( புலிகளே கடவுள் என்று எல்லாம் மண்ணாகிப் போன பின்பு அரசு சார்பாளாராக மாறிய நண்பர் எழுதிய கட்டுரை இது) 

2. ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் 

3. நாடு கடந்த தமிழீழ அரசு .

4. தன்னைத் தானே தகனம் செய்யுமாறு கட்டளையிடுவது அநீதி - லெ.முருகபூபதி .

5.புலி ஆதரவாளர்கள் தம்மை சுய பரிசோதனை செய்ய வேண்டும் .

அருள் எழிலன்.

நவம்பர் 4, 2010 at 2:23 PM Anonymous said...

இதில் தான் எழுதிய அரிய பல கட்டுரைகளோடு வேறு சிலர் எழுதியதையும் தனது இலங்கை அரசு ஆதரவு பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறார். 

டி.அருள் எழிலன்.

நவம்பர் 4, 2010 at 2:29 PM Anonymous said...

//விமர்சனமற்ற முறையில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது, அல்லது விடுதலைப்
புலிகளை எதிர்ப்பது என்கிற வகையில் இலங்கை அரசையும்கூட ஆதரிக்கும் நிலையை
எடுப்பது என்கிற இரு எதிரெதிர் நிலைப்பாடுகளுக்கிடையே ஈழப் பிரச்சினையில்
நடுநிலையான ஒரு பார்வையைத் தொடர்ந்து பேணி வருபவர் எழுத்தாளர் ஷோபாசக்தி.
சென்ற மாதத்தில் நான் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஈழப் போராட்டம் இன்றொரு
தேக்கநிலையை எட்டியிருப்பது குறித்து அவரிடம் நானெடுத்த பேட்டி இது.
இன்றைய தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகிய ஷோபாசக்தியின்
இக்கருத்துக்களை வேறும் நேர்காணலாகவன்றி உடன்பாட்டுடன் முன்வைக்கிறேன்.
பாரிசிலிருந்து சுமார் 800 கி.மி. தொலைவிலுள்ள Pau என்னும் நகரில் சென்ற
ஆகஸ்ட் 3 அன்று பதிவு செய்யப்பட்டது இது.
-அ. மார்க்ஸ்// மார்க்ஸ் இந்த அரசு ஆதரவாளருக்கு சான்றிதழ் கொடுக்கிறார்.
நடுநிலை என்ற பதத்தை பின் நவீனத்துவ பீடாதிபதி பயன்படுத்துகிறார்.
உலகின் எந்த ஒரு வரலாற்றிலும் அப்படியான ஒரு நடுநிலை பகுதியே இல்லை
என்னும் போது இலங்கை அரசு ஆதரவாளரான ஷோபா சக்தியை நடுநிலையாளராக
சித்தரிக்கிறார் இந்த நடுநிலையாளர்.

நவம்பர் 4, 2010 at 3:30 PM -/சுடலை மாடன்/- said...

//இதுவரை நீங்கள் நம்பியதாகவும் பேசியதாகவும் சொல்லப்பட்ட அரசியலைப் பேச தடையாக இருந்த புலிகள் இப்போது இல்லை. ஆனால் அதற்கப்பாலும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகள் இப்போது இலங்கைக்கு வெளியே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்தக் சக்திகளோடு இணைந்து நீங்கள் பயங்கரவாத இலங்கை அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்றுதான் போருக்குப் பின்னர் உங்களை எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்களோ இலங்கைக்கு எதிராக வெளியில் உருவாகும் எதிர்ப்புச் சக்திகளை தந்திரமாகத் தாக்கத் துவங்கி விட்டீர்கள். //

இந்திய மார்ச்கிஸ்டுக் கட்சிப் போலிகள், சோபாசக்தி, அ.மார்க்ஸ் மற்றும் அவர்களின் அடிப்பொடிகள், இவர்களது ஈழம் குறித்த பேத்தல் புரட்சிக் கருத்துகளை மறைமுகமாக அன்றும் இன்றும் விசிலடித்துப் பயன்படுத்திவரும் இந்தியதேசியப் பார்ப்பனியக் குஞ்சுகள் அனைவருக்கும் இக்கேள்வி பொருந்தும். புலிகள் அழிக்கப் பட்டபிறகு இலங்கை - இந்தியாவின் இனவெறி-இரத்தவெறி பிடித்த அரசுகளின் தமிழர்க்கெதிரான ஒடுக்குமுறையை எதிர்த்து என்ன மயிரை இதுவரை புடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள விரும்புகிறோம். பேப்ப்ரையும், பேனாவையும் கிழித்தது போதும். ஏதாவது ஒரு சிறுபோராட்டத்தை இதுவரை நடத்தியிருக்கிறார்களா என்று அறிய விருப்பம். 

நன்றி அருள் எழிலன். நல்ல வேளையாக இச்சுட்டியை நண்பரொருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

நவம்பர் 5, 2010 at 9:02 Anonymous said...

இன்னொரு முறை ஈழம் தொடர்பான எதிர்ப்பியக்கம் தேவை என்றால் நிச்சயமாக இதுவரை நடந்த போராட்டத்தை விமர்சனம் செய்தே ஆக வேண்டும். அதில் எனக்கு எந்த மற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை போஸ்ட்மார்டம் செய்கிறவர்கள் யார் என்பதுதான் கேள்வியே? இவர்கள் எப்போதுமே ஈழ மக்களுக்கு எதிரானவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படி இருந்து விட்டு நடுநிலையானவர் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள். காலக்கொடுமை.

டி.அருள் எழிலன்.

நவம்பர் 5, 2010 at 9:48 Anonymous said...

நான் ஷோபாசக்தி ஆவது எப்படி? 

புலிகளை துரோகி என்றேன்.
அவர்கள் என்னை அரவணைத்துக் கொண்டார்கள்.
ஈழத் தேசியம் ஒரு கற்பிதம் என்றேன். 
பௌத்த மரபு உனக்கு வசதியாய் இருக்கும் என்றார்கள்.
பெருந்தொகையான மக்கள் கொல்லப்பட்ட போது,
நான் புலிகள் மக்களை கலைத்துப் பிடித்துச் சுட்டார்கள் என்றேன். 
எனது நூலை ஆங்கிலத்தில் கொண்டு வர உதவினார்கள். 
போருக்கு உதவிய எல்லா நாடுகள் குறித்தும் மௌனம் காத்தேன். 
சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து போருக்கு எதிராக நிறுத்தினேன். 
என்னை நடுநிலையாளர் என்று சான்றிதழ் கொடுத்தார்கள்.
வெளிப்படையாக வரவா என்றேன்.
இல்லை இல்லை நீ இந்த முகத்தோடு இருப்பதுதான் 
எங்களுக்கு வசதி என்றார்கள்.
இதற்கு மேல் விற்க எதுவும் இல்லை என்றேன்.
அவர்களோ முட்கம்பி வேலிகளிலும் வானாந்தரங்களிலும் 
வீசப்பட்ட மக்களைக் காட்டினார்கள்; 
கூடவே எலும்புக் கூடுகளையும்.
இப்போது நான் சொன்னேன் 
அவர்களே அவர்களை அழித்துக் கொண்டார்கள் என்று. 
இனி எனது நூல்கள் 
ஜெர்மன், டேனிஷ், பிரெஞ்ச், மொழிகளிலும் வரும்....
நானும் மாற்றுக்கருத்துப் பாரம்பரியத்தில் வந்த ஒருவனாவேன்.

- யாழினி

நவம்பர் 6, 2010 at 12:28 Anonymous said...

'அருள்எழிலன் கூலிக்கு மாரடிக்கிறார்' என நான் சாடி எழுதியபோது ஒரு தோழர் 'கூலிக்கு மாரடிப்பது' என்ற சொல்லாடல் சாதியச் சொல்லாடல் என்றும் மரணவீடுகளில் கூலிக்காக மாரடிக்க அழைத்து வரப்படும் அடித்தளச் சாதியினரை குறித்தது அந்தச் சொல் என்றும் சுட்டிக்காட்டினார். அவரது அந்த விமர்சனத்திற்குப் பின்பே நமது சமூகத்தில் அரசியலாளர்கள் - எழுத்தாளர்கள் என அனைத்துத் தரப்பினராலும் சர்வசாதாரணமாக சொல்லப்படும் அந்தச் சொல்லாடலுக்குப் பின்னால் இவ்வாறான ஒரு சாதியக் கறை இருப்பது எனக்கு உறைத்தது. உடனேயே நான் அந்தச் சொல்லாடலை உபயோகித்ததற்கு வருத்தம் தெரிவித்து இனி அவ்வாறு ஒரு தவறு நிகழாது என உறுதியளித்தேன்.

ஆனால் பிரச்சினை அத்தோடு முடியவில்லை. 'இது கூடத் தெரியாமல் 15 வருடமாக என்ன தலித் அரசியல் பேசுகிறாய்?' என்றும் 'திமிர்' என்றும் 'அறிந்தே அந்தச் சொல்லாடலை உபயோகித்தேன்' என்றும் அருள்எழிலனின் முகப்புத்தகத்தில் கண்டனங்கள் குவிந்தன. இது என்னை மிகவும் வருத்தியது. சீழ்த்தலைச் சாத்தனார் போல எனது தலையில் நான் கீ - போர்டைத் தூக்கி அடிக்காததுதான் பாக்கி.

இந்தச் சொல்லாடலை சாதிய ஒழிப்பை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அரசியலாளர்கள் - எழுத்தாளர்கள் வேறுயாராவது உபயோகித்திருக்கிறார்களா என இணையத்தில் தேடினேன்

தந்தை பெரியார் அந்தச் சொல்லாடலை ஒன்றுக்கு மேற்பட்ட தருணங்களில் உபயோகித்துள்ளார். 'வினவு' இணையத்தளம், ஆதவன் தீட்சண்யா, ரயாகரன், க. நவம், ஸ்ரீரங்கன், என ஒரு நீண்ட பட்டியல் கிடைத்தது. 'இனியொரு' இணையத்தில் வெளியாகிய செம்மொழி மாநாடு எதிர்ப்புக் கவிதையிலும் அந்தச் சொல்லாடல் கையாளப்பட்டிருந்தது.

இவர்களெல்லோரும் இந்தச் சொல்லாடலைச் சாதித் திமிரோடு பேசினார்கள், இவர்களுக்குத் தலித் அரசியல் பேசத் யோக்கியதையில்லை என்றா கருதுகிறீர்கள்? நமது மொழியில் உறைந்துருக்கும் சாதியத்தை இந்த விடயத்தில் இவர்கள் பகுத்தறிந்து பார்க்கத் தவறிவிட்டார்கள் என்றே சொல்ல முடியும். இந்தச் சொல்லாடலில் பொதிந்திருந்த சாதியம் முதன் முதலாக எழுத்துத் தளத்தில் இந்த விவாதத்தின் மூலம் இப்போது கவனம் பெற்றுள்ளது. அருள்எழிலன் குறித்த விவாதங்கள் மூலம் ஏற்பட்டிருக்கும் நன்மைகளில் இதுவுமொன்று. தவறைச் சுட்டிக்காட்டிய பிரகாஷ் வெங்கடேசனுக்கு நன்றி.

இந்த நீண்ட பட்டியல் என்னை நியாயப்படுத்தும் முயற்சி எனத் தயவு செய்து கருத வேண்டாம். ஆனால் நான் எனது அறியாமைக்கு வருத்தம் தெரிவித்த பின்பும் என்னை 'கோர்னர்' செய்ய இதை ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுத்துவது நியாயமில்லை என நினைக்கிறேன். அவ்வளவே. இங்கே அறியாமை என நான் குறிப்பிடுவது இவ்வாறு கூலிக்கு மாரடிக்கும் சாதியச் சடங்கு நமது சமூகத்தில் இருந்ததை நான் அறியாமலிருந்தேன் என்ற பொருளிலல்ல. மொழியில் பொதிந்திருந்த சாதியக்கறையை இந்த விடயத்தில் உணராமலிருந்தேன் என்ற பொருளிலேயே அவ்வாறு குறிப்பிடுகிறேன்.

'நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி' எனத் தந்தை பெரியார் சொன்னது மாபெரும் உண்மை!!

பெரியார்:
http://64.50.168.170/index.php?option=com_content&view=article&id=2995%3A2010-02-01-06-41-02&catid=42%3Aperiyar&Itemid=127

http://periyardk.org/PHP/Details.php?key1=Kudiyarasu&key2=1932&fileName=Jan&cCount=1

வினவு:
http://www.vinavu.com/2009/05/21/eelam4/

ரயாகரன்:
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3420%3A2008-08-30-14-48-06&catid=72%3A0406&Itemid=76

ஆதவன் தீட்சண்யா:
http://keetru.com/literature/essays/aadhavan_1.php

க.நவம்:
http://www.kalachuvadu.com/issue-105/page56.asp

ஸ்ரீரங்கன்:
http://www.uyirnizhal.com/e-book/Thotruthaan%20povoma/srirangan.html

இனியொரு:
http://inioru.com/?p=14269

-ஷோபா

நவம்பர் 7, 2010 at 5:53 PM Anonymous said...

ஷோபாசக்திக்கு நானொன்றைச் சொல்ல விரும்புகிறேன். ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சாடியே பிழைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் போற்றிப் பிழைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதில் முதல் ரகமாய் இருக்கும் நீங்கள், ஒரு காலத்தில் இரண்டாவது ரகமாகவும் இருந்து வந்தவர் என்பது எல்லோரும் தெரிந்திருக்கும்.

புலிகள் என்ன காடு வெட்டி, கழனி வெட்டிச் சம்பாதித்த பணமா….வடக்கிலிருந்து இஸ்லாமியர்களை விரட்டிக் கொள்ளையடித்த பணம், வெளிநாட்டிலிருந்து செல்பவர்களை ‘நந்தவனத்தில்’ வைத்து மிரட்டிப் பெற்ற பணம், வெளிநாடுகளில் உள்ளவர்களை மிரட்டிப் பெற்ற பணம்…என்றெல்லாம் வலும் சுவாரஸ்யமாக வெழுத்துக்கட்டியிருக்கிறீர்கள்?
இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ்ப்பாணத்திலிருந்து நகர்த்தப்பட்ட இஸ்லாமியர்களுக்காக அழுது வடியும் ஷோபா மாதிரியான பல சர்வதேச எழுத்தாளர்கள், ஏனோ இலங்கை அரசினால் ஆயிரமாயிரமாய் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும் இந்திய இராணுவத்தால் ஆயிரமாயிரமாய் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களுக்காகவும் , இவர்களால் அழிக்கப்பட்ட தமிழர் உடமைகளுக்காகவும், இவர்களால் மனநோய்க்கு ஆளாக்கப்பட்டிருக்கும் இலட்சக் கணக்காண அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும், இவர்களால் ஏதிலிகளாக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களுக்காகவும் கவலைப்படாமல் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திலிருந்து இன்னுமொரு பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு குழு மக்களுக்காக மட்டுமே தொடர்ந்து நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பது தான்!!!
நந்தவனப் பக்கமே தலைகாட்டும் தைரியமற்று பிரான்ஸில் ஒளிந்து கிடந்து மார்தட்டிக் கொண்டிருக்கும் ஷோபாசக்தியிடம் கேட்க வேண்டிய இன்னுமொரு கேள்வி - வெளிநாட்டிலிருந்து ‘நந்தவனத்திற்கு’ செல்லும் வெளிநாட்டு மக்களிடம் புலிகள் மிரட்டிப் பெற்ற பணம் என்கிறீர்கள். நந்தவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து செல்லும் எல்லோரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது முதல் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்க விரும்புகிறேன். அங்கு செல்வதற்கும் மனம் சார்பாக, குணம் சார்பாக, உணர்வு சார்பாக சில தகமைகள் தேவை. அவற்றில் குறைபாடு உள்ளவர்கள் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி அனுமதிக்கப்படுபவர்கள் தமிழின விடுதலைக்காக தம் உயிரையும் அர்பணிக்கத் தயாராக உள்ள மனஉறுதி கொண்டவர்கள். அப்படியானவர்களிடம் புலிகள் பணத்தை மிரட்டிப் பறிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை – விரும்பினால் அவர்களாகவே கொடுத்து விடுவார்களே தவிர, புலிகள் அவர்களை மிரட்டிப் பறிக்க வேண்டிய எந்தத் தேவையுமில்லை என்பதை முதலில் ஷோபாசக்தி புரிந்து கொள்ளட்டும்.

அது மட்டுமில்லை, வெளிநாட்டிலுள்ள எந்த நபரையும் புலிகள் மிரட்டிக் காசு பறிக்க வேண்டிய எந்தத் தேவையும் புலிகளுக்கில்லை என்பது வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும் என் போன்ற தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும். வெளிநாட்டில் வாழும் நிறையத் தமிழர்கள் எப்பவும் தமிழின விடுதலைக்காக என்ன விலையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களேயன்றி அவர்களிடம் அதற்காக யாரும் மிரட்டிப் பணம் பறிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அல்ல. ஷோபா சக்தி போன்றோரும் அவருடன் உறவாடும் பலரும் மிரட்டுவது, பணம் பறிப்பது என்பவற்றோடு அதிகம் தொடர்புள்ளவர்கள் என்பதால் இவருக்கும் அந்தப்பதங்கள் வெகு சுலபமாக வந்து விடுகிறது என்பது என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. இவருக்காக இப்போதைக்குப் பரிதாப்பட மட்டுமே முடிகிறது.

http://athirai.blogspot.ca/2010/11/blog-post.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.