Jump to content

தமிழர்களே சட்டத்தை கையில் எடுக்கலாமா .......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2009 க்கு முன்னர் வந்தால் என்ன, பின்னர் வந்தால் என்ன, இல்லை இங்கு பிறந்தவர்களாக இருந்தால் என்ன. சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை ஊக்கிவிக்கக்கூடாது. பிரித்தானியாவில், கனடாவில் காட்டுமிராண்டிகள் போன்று குழுச்சண்டைகளில் ஈடுபடுபவர்கள் 2009க்குப் பின்னர் வந்தவர்கள் அல்ல. அநேகமாக இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது சிறுவயதில் வந்தவர்கள். எனவே இது ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும், தீர்வைத் தேடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 138
  • Created
  • Last Reply

ம்ம் 35 வருடம் கவட்டுடன் இருந்தது இப்பதான் கொஞ்சம் மேல வருது உங்க சிந்தனை குட் .

 

 

35 வருடத்தில் கண்ட பலன் என்பதைப் பார்த்து அதில் மாற்றம் அவசியம் என்ற முடிவுக்கு வருவதில் தவறென்ன உண்டு?

 

பாலியலை பூதாகரமாக கடும்போக்குடன் அணுகி அதன் விழைவு அங்கால ஒரு செய்தி போகின்றது அளவெட்டியில் பிள்ளைகளை தஷ்பிரயோகம் செய்த தந்தை என்று அப்படித்தான் இருக்கும். இது ஒன்று வெளியில் தெரிந்தது ஆனால் தெரியாதது 99 வீதம். எமது போலிக் காலாச்சாரம் போலிப் பண்பாடு இவைகள் வெளியில் தெரய விடுவதில்லை. எப்படி இதை அமசடக்காக அடக்குவது என்றுதான் பார்க்கும். அதில் ஒன்றுதான் இந்த இருட்டடி.

 

பாலியல் இறுக்கம் எமது சமூகத்தை எப்பவோ மறைமுக நரகமாக்கிவிட்டது. இது அடி உதைகளாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது. இது அனுபவ உண்மை.  உண்மை எதுவென்ற பிறகும் மாற மாட்டம் என்றால் என்ன செய்ய முடியும்!!

Link to comment
Share on other sites

2009 க்கு முன்னர் வந்தால் என்ன, பின்னர் வந்தால் என்ன, இல்லை இங்கு பிறந்தவர்களாக இருந்தால் என்ன. சட்டத்திற்குப் புறம்பாக நடப்பவர்களை ஊக்கிவிக்கக்கூடாது. பிரித்தானியாவில், கனடாவில் காட்டுமிராண்டிகள் போன்று குழுச்சண்டைகளில் ஈடுபடுபவர்கள் 2009க்குப் பின்னர் வந்தவர்கள் அல்ல. அநேகமாக இங்கு பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது சிறுவயதில் வந்தவர்கள். எனவே இது ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும், தீர்வைத் தேடவேண்டும்.

 

இதை தான் சொல்கிறோம் அண்ணே நாங்கள் ஒரு தனி இனம் எங்களுக்கு என்று ஒரு கலாச்சாரம் பண்பாடு இருக்கு அதை பிள்ளைக்கு காட்டி ஊட்டி வளர்த்தால் உறவுகள் என்றால் என்ன மாமன் மச்சான் யாரு என்று அறிந்து தெரிந்து பழகும் அதை விடுத்து நாங்கள் ஐரோப்பா ஊரு கதை வேணாம் நீ எப்படியும் வளரலாம் என்று விட்டு விட்டு இப்ப இங்கு பிறந்த பிள்ளைகள் குழப்படி என்று சொல்வது ஏற்புடையது அல்ல .

 

எங்கள் சமூகம் பற்றி அவர்களுக்கு சொல்லி வளர்த்தாலே போதும் என்று நினைக்கிறேன்  தவறான காதல் அணுகுமுறை எல்லாம் இங்கு பார்த்து இருக்கிறோம்  உறவுகளை முறைகளை சொல்லி கொடுக்காமல் விட்டதன் விளைவு  இவைகள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-------------

 
இதில குற்றம்சாட்டப்பட்டவர் மீது.. சட்ட நடவடிக்கை எடுக்கிறது தான் நல்லம். இது.. அரபாத் மாதிரியோ.. பருதி அண்ணா மாதிரியோ.. பிரான்ஸின் ரகசிய தலையீட்டோடு நடந்த விடயங்கள் அல்லத் தானே. அந்த வகையில்.. இதனை சட்ட ரீதியாக அணுகி பிரச்சனைக்கு தீர்வை எட்டுவதுதான்.. எதிர்காலத்திற்கு நல்லம்.
 
தமிழர்கள் மட்டுமல்ல... தமிழ் இளைஞர்களால்.. பிற இனத்தவரும் பாதிக்கப்படுவதில் இருந்து தற்காக்கும்.
 
அண்மையில்.. ஒரு சம்பவம். ஒரு காப்பிலி.. ஒரு வெள்ளை பெண் பிள்ளையின் பின்புறத்தில் கையால் தட்டி விட்டுப் போக.. அவள் அருகில் போய்க் கொண்டிருந்த போய் பிரண்டட்டச் சொல்ல.. அவன் கலைச்சுப் பிடிச்சு காப்பிலிக்கு செம சாத்து. றோட்டால போற சனம் விடுப்புப் பார்த்திட்டு.. சம்பவம் நடந்து முடிய கலைஞ்சு போட்டுது. தட்டினவனும் போட்டான். தட்டு வாங்கினவளும் போட்டாள்..! அடிச்சவனும் போட்டான். அதோடு அவர்கள் 3 வரும் திருப்திப்பட்டுக் கொண்டு விட்டார்கள். ஆனால் அந்தக் காப்பிலி திருந்தி இருப்பான்.. இன்னும் பெண்களை தட்டமாட்டான் என்று சொல்ல முடியாது. இது ஒரு நிஜ உதாரணம்.
 
இது அப்படியல்ல. இது நீங்கள் சொல்லுறது போல.. திட்டமிட்ட செயல் என்றால்.. நாங்களே சட்டத்தைக் கையில் எடுத்து.. அடிச்சு சரிக்கட்ட முடியாது. நாளைக்கு அவனும் நாலு பேரைக் கூட்டிக் கொண்டு வந்து அடிச்சால்... உது பிரான்ஸில்.. தமிழர் வன்முறை என்றே பிரச்சாரமாகும். அதிலும்.. இதில.. பாதிக்கப்பட்ட பெண்கள்.. தமது குற்றத்தையும் ஒப்புக்கொண்டு.. தமது பாதிப்புக்கு சட்ட நடவடிக்கை எடுத்து பரிகாரம் கண்டால் அன்றி.. இதற்கு.. வேறு எந்த வகையிலும் நிரந்தரத் தீர்வு எட்ட முடியாது. இது ஒன்றும் பிரான்ஸ் அரசின் ரகசிய அரசியல் கொலை இல்லைத் தானே..! அப்படி என்றால் தான் நீதியை எதிர்பார்க்க முடியாது. :icon_idea:


நியானி: திரிக்கு சம்பந்தமற்ற விடயம் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

நீதிக்கு முன் நிறுந்தினால் எந்த பெண்ணும் சாட்சியம் தர வராது அதுவே அவனை பாதுகாத்து வெளியில் விடும் வழக்கு செல்லாமல் போயிடும் அண்ணே சட்டம் அப்படி விருப்பம் என்னும் மொழியில் முடிந்து விடும் அதனால் சிலதுக்கு குறி வைக்க வேண்டி இருக்கு எல்லா மாடுக்கும் அல்ல .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறி வைக்கிறது சட்டத்துக்கு புறம்பானது என்றால் அது தப்புக்கு மேல தப்பாகிடும். அப்புறம் குறி வைச்ச மாடு.. பிற.. நாலு மாட்டைக் கூட்டி வந்து குறி வைச்சவையை.. உதைஞ்சு தள்ளினா.. பூமி.. பிரளயமாகிடும்.  அதனையும் கவனத்தில எடுக்கனும்.

 

உப்புத் தின்றவன்.. தண்ணி குடிச்சாகனும். தப்புச் செய்த பொண்ணுங்க.. வலியை சுமந்து தான் ஆகனும். கூடச் சேர்ந்து.. தப்புச் செய்தவையை ரகசியமா காப்பாற்றிறதும் புனிதமானவையா காட்டிறதும் தப்பு. அதுவே அவர்களுக்கு இன்னும் இன்னும் தப்புச் செய்ய தூண்டுகோளாகவும் மாறிடலாம். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே நல்லது. அப்ப தான் சட்டமும் இவர்களை காக்க முடியாது.. தாங்களே தங்களை காக்கனுன்ன பட்டறிவு வரும்.  :icon_idea:

Link to comment
Share on other sites

ருல்பான் நீங்கள் கொஞ்சம் சீரியசாக எழுதியதால் அதற்கான பதில் .

நீங்கள் இரண்டு வேறுபட்ட விடயங்களை போட்டு குழப்பிவிட்டீர்கள் .குடும்ப வன்முறையோ கௌரவ கொலைகளோ மேற்குறிப்பபிட்ட சம்பவதிற்குள் அடங்காது .

நாட்டில் இயக்கங்கள் வந்த பின்னர்தான் தாங்கள் சட்டத்தை கையில் எடுத்து வீதியில் கட்டி வைத்து தண்டனை கொடுத்தார்கள் ,இவ்வாறு கொலை செய்யப்படவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது (கோழி களவேடுத்தவன் தொடங்கி சாராயம் காச்சினவன் வரை ).

எனது வீட்டிற்கு அருகில் இருந்த கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரியின் உப அதிபர் இந்தியன் ஆமி இருந்த காலத்தில் அவரின் ஆங்கில புலமைக்காக மீடிஎற்றராக இருந்தார் ,அவரை காட்டி கொடுக்கின்றார் என்று போட்டார்கள் .நீங்களும் துரோகி என்று துப்பி விட்டு போயிருப்பீர்கள் .இவற்றின் விளைவுகள் தான் இன்று தமிழ் இனம் அனுபவிப்பது .

 

நான் எனது பிள்ளையை தண்டிப்பதற்கும் இவர் பிழையானவர் என்று வேறு ஒருவர் தண்டிப்பதற்கும் வித்தியாசம் இருக்கு

புலம் பெயர்ந்த தேசங்களில் 1985 களுக்கு முதல் இருந்த வன்முறை ,குற்றசெயல்களுக்கும் அதற்கு பின்னர் நடந்தவற்றிற்கும்

இடையில் இருக்கும் புள்ளிவிபரங்களை பார்த்தால் தெரியும் .

பாதிக்கபட்ட அந்த பெண்களின் உறவினர்கள் யாராவது அந்த பெடியனுக்கு அடித்திருந்தால் இந்த விடயம் இப்படி விவாதத்திற்கே வந்திராது .

 

அர்ஜீன் சமூக பிரச்சனைகள் எல்லாவற்றையும் அரசியல் மயபடுத்தி இயக்க விவாதமாக மாற்றுவது தவறானது என்பதையே நான் குறிப்பிட்டிருந்தேன். விவாதம் திசை மாறி போகும்போது உண்மையான பிரச்சனையின் அடிப்படையை பற்றி ஆராயாது பழியை எங்கோ போட்டுவிட்டு தப்பி விட முயற்சிக்கும் மனப்பாங்கே அது.  நீங்கள் கூறியது போல் ஈழப்போரின் ஆரம்பத்தில் இப்படியான செயல்களில் எல்லா ஆயுதப்போராட்ட இயங்கங்களும் மேற்கொண்டிருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. சிவில் நிர்வாகம் செயலற்று போயிந்த நிலையில் சமூக குற்றங்களை குறைக்க  போராட்ட இயங்கங்களால் மேற்கொள்ளபட்ட இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் சிறிது  வரவேற்பை பெற்ற போதிலும் அது சில சமயங்களில் எல்லை மீறி சென்றதும் எல்லோரும் அறிந்ததே. அவைகள்  தவறான செயல்கள் என்பது பொதுவாகவே  எல்லோராலும் உணரப்பட்டது. நீங்கள் கூறியது போல் ஒருவரை, துரோகி அவர் கொல்லபடவேண்டியவர் என்ற கருத்துருவாக்கம் உருவாக்கபட்டு அது தூண்டிவிடப்பட்டது  ஆயுத போருக்கு முற்பட்ட அகிம்ஸ்சாவாதிகளான சட்டம் படித்த தமிழ் அரசியல்வாதிகளால் ஆகும். 1948 ல் இருந்து 1977 வரையான தேர்தல் பேச்சு புள்ளிவிவரங்களையும் கவனியுங்கள். தன்னலம் அற்று போராடி தங்களை அர்பணித்த போராளி இளைஞர்களின் மீது மட்டும் தமிழர்களின் காலாகாலமாக இருந்துவரும்  சமூக பிரச்சனை முதற்கொண்டு  எல்லா பழியையும் போட்டு தப்ப நினைப்பது தவறானது. 

 

 மற்றது அடுத்தவர்களின் தனிப்பட குடும்ப விடயங்களின்  தலையிடும் சட்டாம்பிள்ளை தனம் எமது சமூகத்தில் குறிப்பாக கிராமப் புறங்களின்  காலாகாலமாக இருக்கும் இருந்துவரும் விரும்பதாக நடைமுறை. அதிலும் கலாச்சாரம், பெண்கள் தொடர்பான விடயங்கள் என்றால் சொல்ல தேவையில்லை.இவ்வாறான செயல்கள் சிலவற்றை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.  இவ்வாறான பழமை நடைமுறையே இயக்க இளைஞர்களிலும் தொற்றி கொண்டதே ஒழிய இளைஞர்கள் புதிதாக இவற்றை  அறிமுகபடுத்தவில்லை. அதே சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்களே இந்த இயக்க இளைஞர்கள் என்பது நீங்கள் அறியாததல்ல. ஆகவே தான் இதில் இயக்க இளைஞர்கள் மீது நீங்கள்  முழுபழியையும்   போட்டது  தவறு என்பதை சுட்டிகாட்டியிருந்தேன்.

 

தனியே புத்தக கல்வியுடனான  எமது கல்வி முறையும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு காரணம். எமது கல்விமுறையில் சமூக, உளவியல் கல்வியின் பங்கு இல்லையேன்றே கூறலாம் என்பது எனது அபிப்பிராயம். இது தொடர்பாக தொடர்ந்து  விவாதிப்பதென்றால் இந்த திரியின் தலைப்பை மீறி சென்று விடும் என்பதால் தவிர்க்கிறேன்.  நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே யாராவது இது எழுதியிருந்தார்களா என்று தெரியவில்லை. இந்தக் காணோளியிலும், செய்தியும் உள்ள முக்கியத்துவம் என்னவெனில் அந்த நபர், தான் பாலியல் உறவு கொண்ட பெண்ணை மிரட்டி காசு பறித்தது தான். ஆனால் இங்கே விவாதிப்பவர்கள் அதைப் பற்றிக் கதைப்பதாகத் தெரியவில்லை. 2 பெண்ணோ, ஆணோ தப்பாக இருப்பது ஒரு புறம் குற்றமாக இரு தரப்பு மீதும் இருக்கட்டும். ஆனால் அதன் பிற்பாடு அந்தப் பெண்களிடம் அதைக் காட்டி அந்த நபர் பணம் பறிப்பது சரியான விடயமா? அவனுக்கு கொடுக்கப்பட்ட அதிலும் அடித்தவர்களை அடையாளம் கண்டு விடுவார்கள் என்ற மாதிரி சபேசன் எழுதிக் கொண்டிருப்பது பொருத்தமாக இல்லை. தாயகத்தில் நாம் நடத்திய போராட்டமும் ஒரு நாட்டின் சட்டத்துக்கு எதிரானது என எடுத்துக் கொள்ளலாமா? சட்டம் பற்றிக் கதைப்பது என்றால்? சட்டத்தை என்பது எல்லாவற்றயும் கட்டுப்படுத்தும் என்றல்ல. இந்தக் காணோளி வெளியிடப்பட்டது, படங்களின் வெளியிடப்பட்டது எனிமேல் யாராவது இப்படியான செயற்கைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

ருல்பான் ,சமூக பிரச்சனை அனைத்து சமூகத்திலும் இருப்பது அதற்கான தண்டனை கொடுக்க சட்டமும் ஒழுங்கும் இருக்கு .

டொராண்டோவில் அண்மையில் நடந்தது .ஸ்பைடனா இல் சீன கடையொன்றில் அடிக்கடி ஒரு கறுப்பு இனத்தவர் சீனன் கடைக்கு வெளியில் வைக்கும் பூச்செடிகளை மிக நிதானமாக களவு எடுத்து தனது சைக்கிளில் வைத்து கட்டிக்கொண்டு போய்விடுவார் .பொறுத்து பொறுத்து பார்த்த சீனன் ஆளை ஒருநாள் பிடித்து கட்டிவைத்து போலிசை கூப்பிட்டார்.போலிஸ் வந்து டிக்கெட் கொடுத்து சார்ச் பண்ணியது சீனரைத்தான் .களவெடுத்தால் போலீசில் தான் முறையிடவேண்டும் போலிஸ் வராதவிடத்து தகுந்த ஆதாரங்களுடன் இன்சுரன்ஸ்இல் அதற்கான பணத்தை எடுக்கலாம் ஆனால் சட்டத்தை கையில் எவரும் எடுக்க கூடாது .

நான் நாட்டில் இருக்குவரை கேள்விப்பட்டது -கோகிலாம்பாள் கொலை வழக்கு .

நாட்டில் இருக்கும் போது நடந்தது -கமலம் கொலை வழாக்கு .

லண்டன் வந்தபின் -ஆனையறவு கொலை வழக்கு ஒன்று .(கொலை செய்தது அத்தானின் உறவினர் சிவகுமார் என நினைக்கின்றேன் அடிக்கடி அவர் அதை கதைத்தால் நினைவு இருக்கு )

இயக்கங்கள் வந்த பின் முள்ளிவாய்கால் வரை நடந்தது உங்களுக்கு தெரியும் .சமூக பிரச்சனைக்கான தண்டனைகள் எந்த உருவில் வடிவெடுத்தன என்பதை எமது சமூகம் கண்டுகொள்ள தவறிவிட்டது .உயிரின் மதிப்பு எங்கே போய் தொலைந்தது என்று கேட்க நாதியில்லாமல் போய்விட்டது .அதற்காக குரல் கொடுத்தவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டு ஆமாம் போட்டவர்கள் பத்தர்கள் ஆனார்கள் .இன்று கூட அதை நியாயபடுத்த தான் ஒரு கூட்டம் இருக்கின்றது .

அனைத்து இயக்கங்களில் இருந்தவர்களும் இன்று ஒன்றாக இருந்து பழைய சம்பவங்களை பகிர்ந்துகொள்வோம் .சில சம்பவங்கள் கேட்க "எமது பெடியங்களா இப்படி " என்று காதால் போகும் .

மன்னாரில் அடுத்த நாள் காலை தாக்குதல் ஒன்றுக்கு போவதற்கு முன் ஒன்று கூடியிருக்கினார்கள் .முதன் நாள் பிடித்த கள்ள சாராயம் காச்சுபவன் அடியின் வலியில் அனிங்கிகொண்டு இருக்கின்றான் .இது விடிய தாக்குதலுக்கு போகும் போராளிகளின் நித்திரையை குழப்புகின்றது ஆனால் சிறிது நேரத்தின் பின் அந்த சத்தம் இல்லை எல்லோரும் நித்திரையாகிவிட்டார்கள் .அடுத்தநாள் தாக்குதல் முடிய வந்து அனுங்கினவர் எங்கே என்று ஒரு போராளி கேட்க இன்னுமொருவர் சொன்னாராம் "நித்திரை கொள்ள முடியவில்லை இரவே திருகி ஆளை முடித்து விட்டேன் " என்று .

இப்படி பல கதைகள் கேட்டு காதே புழிச்சு போச்சு .

நாங்கள் போராட போன நோக்கம் இதுவல்ல .(மனத்தால் கூட இன்னொருவனை நோகடிக்க கூடாது என்பவன் தான் விடுதலைப்போராளி )

Link to comment
Share on other sites

அர்ஜன் சமூக பிரச்சனை எல்லா இனங்களிலும் இருக்கிறது என்பதும் சட்டம்ஒழுங்கு என்பதுவும் புதிய விடயங்கள் அல்ல. அனைவருக்கும் தெரிந்தவைதான். நான் குறிப்பிட்டது ஆயுத போராட்ட ஆரம்பத்தில் ஏற்பட்ட சிவில் நிர்வாக சீர்கேடு பற்றியது. சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக விளங்கும் கனடாவை அதற்கு உதாரணம் காட்டுகின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை அவனைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவது மிக அவசியமானது. கிருபன் கூறியதுபோல் நீண்ட காலத் தண்டனையை அவனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். பெண்கள் மேலும் முழுக்க முழுக்கத் தவறுதான். ஆனால் அவனுக்கு இப்படி அடித்ததுகூட சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை அவனைச் சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவது மிக அவசியமானது. கிருபன் கூறியதுபோல் நீண்ட காலத் தண்டனையை அவனுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். பெண்கள் மேலும் முழுக்க முழுக்கத் தவறுதான். ஆனால் அவனுக்கு இப்படி அடித்ததுகூட சரிதான்.

 

அதாவது

3 தீர்ப்பும் சரி....

Link to comment
Share on other sites

விசுகருக்கு தெரிந்திருக்கலாம் என்ற நினைப்பில் எழுதுகிறேன். 

 

ரைகர் சிவா... இவரது பெயரில் ஒரு குழு... பரிசில்தான்... குறிப்பிட்ட காலத்திற்கு முன் ஒரு  இளைஞரை கொன்றுவிட்டு அவரை தாழ்ப்பதற்காக சில நாட்கள் காரிலேயே கொண்டு திரிந்தார்கள்.. அதை பொலிசும் பின்தொடர்ந்து வீடியோ எடுத்து.. அந்தப் பிரேதத்தை புதைக்கும்போது அவர்களை கைது செய்தது. 

இவர்களில் ரைகர் சிவா என்பவர் லா சப்பல் கடை உரிமையாளரை தாக்கும் வீடியோகூட சில காலத்திற்கு முன் பரிஸ் தமிழ் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியிருந்தது.

இத்தனைக்கும் உள்ளுக்கிருப்பது என்னவோ ஒரு சில மாதங்கள்தான்.

இன்றும் புதுப் புதுக் கார்களில் வெளியில்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ரைகர் சிவா என்று பெயர் வைத்துள்ளார் என்றால்... தவறு செய்பவன் ரைகர் ஆள் என்று சனம் நினைக்க வேணுமாம்.

ஆக.. பிரான்சில் பொதுவாக வெளிநாட்டவர்களைப் பொறுத்தளவில் சட்டங்கள் சட்டங்களாக இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே!!

 

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு முடிவிற்கு வரலியா .................. :D  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.